இதயம் இடம் மாறியதே - 7

Advertisement

Indira75

Active Member
வாசலில் கார் வந்த சப்தம் கேட்டு தமிழரசியும், சித்ராவும் வெளியே வந்தனர். ராஜலிங்கத்தை, உலகநாதனும், விஸ்வநாதனும் கை தாங்கலாக கூட்டிக் கொண்டு உள்ளே வந்தனர். வடிவாம்பாள் மருந்து, மாத்திரை அடங்கிய பையை எடுத்துக் கொண்டு பின்னால் வந்தார். தமிழரசி வந்து அவர் கையில் இருந்த பையை வாங்கி கொண்டு அவரை பார்த்தார். அவர் முகம் சோர்ந்திருந்தது. ராஜலிங்கத்தை அவரது அறை கட்டிலில் தலையணையை சாய்ந்த வாக்கில் வைத்து அவரை படுக்க வைத்தனர். மூச்சு விட சிரமப்பட்டார் ராஜலிங்கம்.
அதற்குள் சித்ரா உள்ளே சென்று அனைவருக்கும் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள்.
அத்தை, மாமா வுக்கு சாப்பிட என்ன குடுக்க சொன்னாங்க. என்றாள் தமிழரசி
அவருக்கு கஞ்சி, இட்லி குடுக்க சொன்னங்க தமிழு
என்றார்.
சரிங்க அத்தை, நான் கஞ்சிரெடி பண்ணி எடுத்துட்டு வரேன் என்று சமையல் அறைக்கு சென்றார்.
விஸ்வநாதன், அப்பா கஞ்சி குடிச்சுட்டு மாத்திரை எல்லாம் சரியா சாப்பிடணும் பா. சீக்கிரம் சரியாயிடும். என்றார்.
ஆமாம் பா, என்றார் உலகநாதன்.
மகன்கள் இருவரையும் அமைதியாக பார்த்த ராஜலிங்கம் சரிப்பா என்றார்.
இருவரும் வெளியே வந்தனர். உலகநாதன், தன் தம்பியை பார்த்து கோமதி எப்ப ஊர்ல இருந்து வருது? என்றார்.
இப்பவே நான் போயி கூட்டிட்டு வர்றேன் அண்ணா என்றார்.
விஸ்வநாதன் தன் அத்தை மகளையே திருமணம் செய்திருந்ததாலும், கோமதி அவர் பெற்றோருக்கு ஒரே மகள் என்பதால் அங்கேயும், இங்கேயும் மாறி மாறி இருப்பார்.மகன்கள் இருவரும் ஹாஸ்டலில் இருந்தனர். விஸ்வநாதனும் இரண்டு பக்கமும் இருந்து கொள்வார்.யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள்.
உலகநாதன் பின்னால் கிணற்றடிக்கு சென்று கை, கால் முகம் கழுவிக்கொண்டு அவர் அறைக்கு வந்தார்.
மாமா இந்தாங்க காபி என்றாள் சித்ரா.
குடும்மா, என்று வாங்கியவர் நீ சாப்டியாம்மா?
என்றார்.
இல்லங்க மாமா , அவுங்க இன்னும் வரல, வந்ததும் சாப்பிடுறேன் என்றாள்.
மணி எட்டாச்சு, புள்ளதாச்சி புள்ள இன்னும் சாப்பிடாமல் இருக்கியா? நேரா நேரத்துக்கு சாப்பிடணும் ல
போய் நீ சாப்பிடு கண்ணு என்றார்.
அவுங்க மில்லு ல இருந்து வந்துட்டு இருக்காங்க மாமா, இன்னும் அஞ்சு நிமிஷத்துல வந்திடுவாக. வந்ததும் சாப்பிடுறேன் மாமா என்றாள்.
சரி கந்தவேல் வந்ததும், சாப்பிட்டுட்டு இங்க வர சொல்லு என்றவர்
உங்க அத்தை ய நான் கூப்பிட்டேன்னு சொல்லுமா என்றார்.
சரிங்க மாமா என்றவாறு சென்றாள் சித்ரா.
தமிழரசி, கஞ்சியை ஒரு கிண்ணத்தில் விட்டு ஸ்பூன் போட்டு எடுத்துக்கொண்டு வடிவாம்பாளின் அறை க்கு சென்றார்.
அத்தை கஞ்சியை மாமா வுக்கு குடுங்க என்றாள்.
வடிவாம்பாள் அதை வாங்கி ராஜாலிங்கத்திற்க்கு புகட்டலானார்.
பாதி குடித்தவுடன் போதும் வடிவு என்றவரை வற்புறுத்தி குடிக்க வைத்தார்.
வடிவாம்பாள் தன் தாய் மாமனையே திருமணம் செய்திருந்ததால் இருவருக்கும் சற்று வயது வித்தியாசம் அதிகமாக இருந்த போதிலும், மன மொத்த தம்பதியராக நிறைவாக வாழ்ந்தனர். வடிவாம்பாள் சொல்வதே அவருக்கு வேத வாக்கு.
தமிழரசி டாக்டர் குடுத்த மருந்து சீட்டை பார்த்து அவருக்கு தர வேண்டிய மாத்திரைகளை எடுத்துக் கொடுத்தார்.
தமிழு அஞ்சு நிமிஷத்துக்கு அப்புறம் மாத்திரை கொடுக்கிறேன். நீ போயி உலகநாதனை கவனி என்றார்.
இல்ல அத்தை, நான் இருக்கேன். மாமாவுக்கு மாத்திரை குடுத்து படுக்க வச்சுட்டு நீங்களும் வாங்க, வந்து சாப்பிட்டுவிட்டு வருவீங்களாம். என்றார்
இனி சொன்னாலும் கேட்க மாட்டாள் என்று நினைத்த வடிவாம்பாள்
தேனு போன் பண்ணுனாளா? என்றார்.
ஆமாங்க அத்தை, நீங்க ஆஸ்பத்திரியில் இருந்து வந்ததும் போன் பண்ண சொன்னாள். என்றார்.
சரி காலைல பேசிக்கலாம், என்றார்.
பேத்தி யை பற்றிய பேச்சில் முகம் கனிந்த ராஜலிங்கம், தேனு எப்போ வர்றா? என்றார்
மாமா இன்னும் பதினஞ்சு நாள் ல செமஸ்டர் வருது. முடிஞ்சதும் வருவா. என்றார்.
அவருக்கு மாத்திரையை கொடுத்து படுக்க வைத்துவிட்டு fan ஐ அளவாக ஓட விட்டு அறை கதவை லேசாக சாத்தி விட்டு சென்றனர்.
உணவு அறையில் டைனிங் டேபிள் ல் கந்தவேலும், சித்ராவும் உணவு அருந்திக் கொண்டிருந்தனர்.
வடிவாம்பாள் ஐ கண்டதும் கந்தவேல், ஆத்தா, அய்யா உறங்கிட்டாங்களா? நான் சாப்பிட்டுட்டு வரலாம்னு பார்த்தேன் என்றான்.
ஆமய்யா, நீ காலையில அய்யா கிட்ட பேசு என்றார்.
சித்ரா , தமிழரசி ஐ பார்த்து அத்தை, மாமா உங்களை வர சொன்னாங்க, என்றாள்.
சரி, நீங்க ரெண்டு பேரும் சாப்பிட்டு, அடுப்பு திட்டுல பால் காய்ச்சி வச்சிருக்கேன். குடிச்சுட்டு படுங்க, என்றவர்
அத்தை நீங்களும் சாப்பிடுங்க, நான் வந்திடுறேன் என்று உள்ளே செல்ல சென்றவரை பார்த்து ,
இரு தமிழு, நானும் வரேன் என்றவரை ஆச்சரியமாக பார்த்தாள்.
ஏனெனில் வடிவாம்பாள் அவ்வளவு சீக்கிரம் அவர்களின் அறைக்கு வர மாட்டார். இத்தனை வருடங்களில் ஐந்து அல்லது ஆறு முறை மட்டுமே அங்கு வந்திருப்பார்.
அங்கே அறையில் வருத்தமான முகத்துடன் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து கண்களை மூடிக் கொண்டிருந்த உலகநாதன், காலடி சப்தம் கேட்டு கண்விழித்தார்.
தன் மனைவியை பின் தொடர்ந்து வந்த தன் தாயை பார்த்தவர், எழுந்து உக்காருங்க அம்மா என்றார்
வடிவாம்பாள் கட்டிலில் அமர்ந்தார். அவர் பக்கத்தில் அமர்ந்த உலகநாதன், அவர் கையை பிடித்து, அம்மா நாளைக்கு அப்பாவை சென்னை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போகலாம். நீங்க கவலை படாதீங்க என்று கூறியவரை வாஞ்சையுடன் பார்த்தார் வடிவாம்பாள்.
என்னங்க? மாமா க்கு என்ன ஆச்சு? டாக்டர் என்ன சொன்னாங்க? என்று பதை பதைத்தவளை பார்த்து உலகநாதன்,
தமிழு, அப்பாவுக்கு இதயத்துல ஏதோ ஒரு வால்வு பழுது ஆயிடுச்சாம். அப்பாவுக்கு வயதாகிட்டதால ஆப்பரேஷன் ஐ தாங்கிக்கிற அளவுக்கு உடம்புல சக்தி இல்லையாம். அதனால மருந்து மாத்திரை குடுத்திருக்கங்க. வீட்லயே வச்சு பார்த்துக்க சொல்லிட்டாங்க. என்று துயரத்துடன் கூறினார்.
தமிழரசிக்கு அதை கேட்டதும் கண்களில் கண்ணீர் வழிந்தது.
இல்லைங்க, மாமா க்கு ஒன்னும் ஆகாது. நல்லா சத்தான ஆகாரமா சாப்பிட வச்சு, மாத்திரை மருந்து குடுத்து நான் மாமா வ நல்லா பார்த்துக்கறேன். சீக்கிரம் நல்லாயிடுவாரு என்று சிறு விம்மலுடன் கூறியவரை கண்களில் நீர் மல்க பார்த்தார். வடிவாம்பாள்
பாசமான உறவுகள் கிடைப்பது வரம். அந்த வகையில் அந்த வரத்தை பெற்றிருந்தார் வடிவாம்பாள்.
அப்பாவ நீங்க எல்லாரும் நல்லா தான் பார்த்துகிறீங்க. இனிமேலும் பார்த்துக்குவீங்க, அவரும் மகன், மகள், மருமகன், மருமகள், பேரன், பேத்தி னு ஒரு நிறைவான வாழ்க்கை தான் வாழ்ந்துட்டு இருக்காங்க.
அவருக்கு எந்த குறையும் இல்லய்யா, பூமிக்கு வந்தவங்க எல்லாரும் ஒரு நாளைக்கு திரும்பி போய்த்தான் ஆகணும்.
வந்தவங்க எல்லாரும் இங்கேயே தங்கிட்டா பூமித்தாய் பாரம் தாங்குவாளா? அதனால நீ கலங்காதய்யா, அவுக இருக்கிற வரைக்கும் அவுகளை நானும் தமிழும் நல்லா பார்த்துக்குவம்.
அவரை அங்க இங்க அலையவச்சு கஷ்டப்படுத்த வேண்டாம். இங்கே சொன்னததான் அங்கயும் சொல்லுவாங்க. அதனால நீ அவுகளை நினச்சு கவலை படாம உன் வேலையை பாரு என்று உலக நியதியை வெகு சுலபமாக சொன்ன தன் தாயின் மடியில் தலை வைத்து கண்ணீர் விட்டார் உலகநாதன்.
சித்ராவை படுக்க அனுப்பி விட்டு உள்ளே வந்த கந்தவேலும் இதை பார்த்து கண் கலங்கி நின்றான்.அவனுக்கு அவன் சித்தப்பா அனைத்தையும் கைபேசியில் தெரிவித்திருந்தார். ஒரு கனத்த மௌனம் அங்கு நிலவியது.
நீ நாளைக்கு நம்ம வக்கீலை வரச்சொல்லு என்றவரை பார்த்து, இப்ப எதுக்கும்மா வக்கீல்? என்றார் உலகநாதன்.
உலகு நீயும் உன் தம்பியும் ரொம்ப ஒத்துமையா சந்தோசமாத்தான் இருக்கீங்க.இந்த சந்தோஷம் எப்பவும் நிலைக்கணும் னா, நாங்க ரெண்டு பேரும் இருக்கும்போதே எல்லாத்தையும் சீர் பண்ணி கொடுக்கனும் பா. நாளை பின்ன எந்த விஷயத்திலயும், ஒரு சிறு சங்கடம் கூட வந்துட கூடாது.அப்பா இருக்கும் போதே எல்லாத்தையும் சரி பண்ணிடலாம்யா. அப்பா ஆறு மாசத்துக்கு முன்னாடியே சொன்னாங்க,
நான் தான் இப்ப என்ன அவசியம், அப்புறம் பார்த்துக்கலாம் னு சொன்னேன். ஆனால் இவ்வளவு சீக்கிரம் அவசியம் வரும் னு நான் நெனச்சு கூட பார்க்கலய்யா, என்று மனம் உடைந்தார் வடிவாம்பாள்.






 

banumathi jayaraman

Well-Known Member
அச்சோ ராஜலிங்கத்துக்கு இதயத்தில் கோளாறா?
உயில் எழுதி சொத்து பிரிக்கப் போறாங்களா?
மெயின் பாயிண்ட்டுக்கு வந்தாச்சு
அப்போ தேனுவுக்கு 50 ஏக்கர் நிலம் வந்துடும்
உன்னோட ஆட்டம் ஆரம்பமாகட்டும், கௌதம்
ஸ்டார்ட் the மியூசிக்கு
ஸ்டோரி நல்லாயிருக்கு
But அப்டேட் ரொம்பவே சின்னதா
இருப்பதால் டெய்லியும் ஒரு
அப்டேட் தரலாமே, இந்திரா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top