இதயத்தில் பூக்கும் உன் நினைவு-1

Advertisement

PaviSivaram

Writers Team
Tamil Novel Writer
மும்பை தாதர் ரயில்வே நிலையத்தில் நின்றிருந்தான் சாகேத்.ஆறு அடி உயரத்தில் கோதுமை நிறத்தில் இருந்தான் அவன்.கருமை நிறத்தில் இருந்த அவனின் தாடி மீசை அவனிற்கு இன்னும் அழகூட்டியது.அங்கே அவனை தாண்டி சென்ற அனைவரும் மறுமுறை திரும்பி அவனைப் பார்த்துவிட்டே சென்றனர்.அவனின் கம்பீரம் எப்படிப்பட்டவரையும் ஈர்த்து விடும்.

அன்று அந்த ரயில் நிலையத்தில் ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை தன் கைக் கடிகாரத்தை பார்த்தபடி இருந்தான் அவன்.அன்றே அவன் செய்து முடிக்க வேண்டிய கம்பெனி வேலைகள் தலைக்கு மேல் இருந்தன.புதிதாக அவன் ஆரம்பிக்கவிருந்த செயின் ஆஃப் சூப்பர் மார்க்கெட்டுக்காக செய்ய வேண்டிய வேலைகளே குவிந்து கிடந்தது.

அதன் மத்தியில் அவன் தந்தை சீனிவாசனின் நண்பர் மனோகர் தன் மனைவி மகளோடு அன்று ரயிலில் மும்பை வருகிறார்.அவரை அழைத்து வரும் பொறுப்பை தந்தை அவனிடம் ஒப்படைத்திருந்தார்.

தந்தையின் பேச்சிலிருந்து மனோகர் சென்னையில் போன மாதம் வரை புகழ்பெற்ற பிஸினஸ் மேனாக இருந்தார். ஆனால் யார் பேச்சையோ கேட்டு பங்கு சந்தையில் கோடிக்கணக்கான பணத்தை போட்ட அவர் அது அதளபாதாளத்தில் போய்விடவே அதை சரி செய்ய தன் வீடு மற்றும் சில சொத்துக்களை விற்று நிலைமையை சமாளித்தார்.

இனி என்ன செய்வது என அவர் திகைத்து நின்ற போது ஏதேச்சையாக சென்னைக்கு வந்த சீனிவாசன் நண்பனைக் காண வந்தார்.

நண்பனின் நிலையைக் கண்டு வருந்திய அவர் மனோகர் தம் குடும்பத்தோடு மும்பை வருமாறும் அங்கே அவரின் பிஸினஸில் ஒர்க்கிங் பார்ட்னராக சேருமாறும் யோசனைக் கூறினார்.தயங்கிய நண்பனை பேசி பேசி சரி செய்தார்.

அதன்படி அங்கே சென்னையில் எல்லாவற்றையும் சரி செய்த அவர் முன்தினம் ரயிலில் தன் மனைவி மகளோடு மும்பைக்கு புறப்பட்டு விட்டார்.

நண்பனை வரவேற்க சீனிவாசன் தானே வந்திருப்பார்.ஆனால் அன்று ஒரு முக்கியமான மீட்டிங் இருந்ததால் மகனிடம் அந்த பொறுப்பை கொடுத்திருந்தார்.

தந்தைக்காக வந்தாலும் வேலை கெடுகிறதே...ரயில் எப்போது வரும் என அவன் அலுப்பாக யோசிக்கும் போதே ஊய்ய்ய்ய் என தாதர் எக்ஸ்பிரஸ் ஸ்டேஷன் உள்ளே நுழைந்தது.

உட்கார்ந்த இடத்தில் இருந்து வேகமாக எழுந்த சாகேத் அவர் இருக்கும் கோச் அருகில் சென்று நின்றான்.

அங்கே நிதானமாக தன் சூட்கேஸோடு இறங்கினார் நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒருவர்.தந்தை காட்டிய போட்டோவில் முன்பே அவரைப் பார்த்திருந்ததால் அவர்தான் மனோகர் என்பதை கண்டுகொண்ட சாகேத் அவர் எதிரில் சென்று நின்றான்.

"ஹாய் அங்கிள் நான் சாகேத்... உங்க பிரண்ட் சீனிவாசன் அவரோட பையன்."

என்று கை நீட்டினான்.

"ஹோ.....நஸ் டு மீட் யூ சாகேத்.நான் மனோகர்...இது என் மனைவி விமலா."

என்று தன் பின்னாலேயே இறங்கிய மனைவியை அறிமுகப்படுத்தியவர் தன் மகளைக் காணாமல்

"விமலா!மீரா எங்கே"என வினவினார் தன் மனையாளிடம்.தன் பின்னே தன் மகள் இறங்கவில்லை எனக் கண்ட விமலா,

"அவ அங்கேயே இருக்கான்னு நெனைக்கிறேன்..நா போயி அழைச்சிட்டு வரேன்"என அவர் திரும்ப ரயிலில் ஏறும் முன் அவரை தடுத்தான் சாகேத்.

"ஆண்ட்டி நீங்க இருங்க...நா போயி கூட்டிட்டு வரேன்"

என்றபடி கோச்சின் உள்ளே சென்றான்.

அங்கே ஒரு இளம்பெண் ஜன்னலில் மாட்டிக் கொண்டிருந்த தன் துப்பட்டாவை விடுவிக்க போராடிக் கொண்டிருந்தாள்.அவள் எத்தனை இழத்தும் அதை விடுவிக்க முடியவில்லை.பொறுமை இழந்த அவள் அதை கிழித்தாவது எடுக்க முடிவு செய்பவள் போல் தோன்றவே வேகமாக அவளருகில் சென்ற சாகேத்,

"மே ஐ ஹெல்ப் யூ?"

என வினவினான்.

வெகு அருகில் கேட்ட கம்பீர குரலில் தூக்கி வாரி போட்டது போல திரும்பிப் பார்த்தாள் அந்த பெண்.

எதிரில் நின்ற பேரெழிலில் திகைத்து நின்றான் சாகேத்.ஐந்தரை அடி உயரத்தில் செதுக்கப்பட்ட சிற்பம் போல் இருந்தாள் அவள்.படபடவென அடித்துக் கொண்டு அவனைப் பார்த்தன அவளின் மீன் விழிகள்.மாதுளம் மொட்டென சிவந்த உதடுகளின் மத்தியில் முல்லை பல்வரிசை தெரிந்தது.நீண்ட அவளின் கூந்தலை இரட்டை பின்னலாக பின்னியிருந்தாள்.சங்கு கழுத்தில் தொங்கிய மெல்லிய சங்கிலி அவள் மார்போடு உறவாடியது.கொடி உடலை அலங்கரித்த சுடிதாரோ அவள் எழில் மேனியின் வனப்பை எடுத்துக் காட்டியது.

மொத்தத்தில் அவனின் கண்ணில் நுழைந்து கருத்தில் பதிந்து மூச்சு காற்றில் கலந்து இதயத்தை ஊடுருவி பிழிந்தது அந்த ஏந்திழையின் அழகு.

ஊய்ய்ய்ய் என ரயிலொன்றின் சத்தத்தில் தன்னை மீட்டெடுத்த சாகேத் மெதுவாக அவளின் துப்பட்டாவை ஜன்னலில் இருந்து லாவகமாக எடுத்தான்.

ஏதோ ஒரு உணர்வில் சட்டென அவளைப் பார்த்த போது அந்த சித்தினியும் அவனைத் தான் கண்க் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

சாகேத் அவளைப் பார்க்கவும் சட்டென இமை தாழ்த்திய அவளின் பொன் கன்னங்கள் இரண்டும் செவ்வானமென சிவந்தது.அவன் பார்வை இன்னுமும் அவளையே மொய்க்கவும் அதற்கு மேல் தாள முடியாத அவள் தன் பேகோடு வேகமாக அங்கிருந்து அகன்றாள்.

இரண்டு நிமிடத்தில் தன்னை கஷ்டப்பட்டு நிலைப்படுத்திக் கொண்ட அவன் கீழே இறங்கி அவர்கள் மூவரையும் தன் காரில் அவர்களுக்கு இருந்த பிளாட்டுகளில் ஒன்றிற்கு அழைத்துச் சென்றான்.

ரயிலில் நடந்த பார்வை பரிமாற்றத்திற்கு பின் மீரா அவனை நிமிர்ந்து பார்க்கவேயில்லை.முதலிலேயே வேலையாளால் சரி செய்யப்பட்டிருந்த வீடாதலால் அவளுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த அறையில் சென்று மறைந்தாள் அவள்.

மறுபடியும் எப்போது பார்ப்போம் என ஏங்கிய இதயத்தை அடக்கியபடி அவர்களிடம் விடைபெற்று சென்றான் சாகேத்.
-----------------------------

பிறந்ததிலிருந்தே வீட்டின் இளவரசியாக வளர்ந்தவள் மீரா.உடன் பிறந்தவர்கள் யாருமில்லாதலால் பெற்றோரின் அதனை அன்பையும் பெற்று கஷ்டமென்பதே அறியாது வளர்ந்தாள்.

அவள் விரும்பிய எதையும் அவள் வாய்விட்டு கேட்கும் முன்பே அவள் கண்ணிலேயே படித்து அதை நிறைவேற்றும் பெற்றோர் அவளை தங்கள் கண்ணின் கருமணியென வளர்த்தனர்.

சந்தோஷத்தில் திளைத்திருத்த அவர்களின் வாழ்க்கை மீரா கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கும் போது தலைகீழ் ஆனது.

பங்கு சந்தையில் ஏற்பட்ட நஷ்டத்தால் அவளின் தந்தை அவர்களின் வீடு மற்றும் சொத்துக்களை வந்த விலைக்கு விற்று சமாளித்தார்.

கஷ்டமென்பதே அறியாது வளர்த்த தங்கள் அன்பு மகளை இந்த நிலைமை தாக்காமல் காத்தனர் பெற்றோர் இருவரும்.ஆனால் அவர்கள் இருவரும் அவளரியாமல் படும் துயரத்தை உணர்ந்த மீரா தான் இனிமேலும் பறந்து திரியும் பட்டாம்பூச்சியை போல இல்லாமல் தன்னம்பிக்கையும் தைரியமும் கொண்டு அவர்களையும் சோர்வடையாமல் தேற்றினாள்.

அந்த நிலையில் தான் மனோகரின் நண்பர் சீனிவாசன் தன் நண்பனை காண அவரின் வீட்டிற்கு வந்தவர் அவர்களின் நிலைக் கண்டு தன் கம்பெனியிலேயே அவரை ஒர்க்கிங் பார்ட்னராக செய்து அவர்களை மும்பைக்கு அழைத்துக் கொண்டார்.

புது ஊர் புதிய சூழல் என யோசித்த பெற்றோரை சமாதானப்படுத்தி அவர்களை தைரியப்படுத்தி அழைத்து வந்தாள் அவள்.

இரண்டு நாட்கள் ரயிலில் விதவிதமான ஊர்களையும் மக்களையும் ரசித்து பார்த்தபடி வந்தாள்.ஸ்டேஷனில் ரயில் நின்றதும் பெட்டிகளை எடுத்துக் கொண்டு பெற்றோர் இருவரும் நகர்ந்ததும் தானும் தன் பெட்டியோடு இறங்க முற்பாடும் போது அவளின் துப்பட்டா ஜன்னலில் மாட்டிக் கொண்டு விட்டது.

என்ன முயன்றும் அவளால் அதை விடுவிக்க முடியவில்லை.ஒரு கட்டத்தில் கிழிந்தாலும் பரவாயில்லை என அவள் அதை பலங்கொண்ட மட்டும் இழத்த போது,

"மே ஐ ஹெல்ப் யூ"

என்ற கம்பீர குரல் அவள் காதருகே கேட்டதும் திடுக்கிட்டுத் திரும்பி பார்த்தாள்.

அங்கே கம்பீர உருவத்தோடு அணழகனாக நின்றிருந்தான் ஒருவன்.அவனின் கூர் விழிகள் அவளை ஊடுருவவும் அவளின் பொன் மேனி சிலிர்த்து அடங்கியது.கண்கள் படபடக்க அவன் அவளின் துப்பட்டாவை எடுப்பதை பார்த்திருந்த அவள் அவனின் கோட் சூட்டை மீறி தெரிந்த திரண்ட புஜத்தையும் அகன்ற மார்பையும் அலையென சரிந்த கேசத்தையும் கண்கொட்டாமல் பார்த்திருந்தாள்.

செய்துக் கொண்டிருந்ததை நிறுத்தி சடக்கென்று அவன் அவளை நிமிர்ந்து பார்க்கவும் இதுவரை மெய்மறந்து பார்த்ததை அவன் கண்டுவிட்டான் என்று உணர்ந்த மீராவின் முகம் சிவந்து விட்டது.

அவன் இன்னுமும் அவளையே பார்க்கவும் அந்த பார்வையின் தாக்கத்தை தாளாமல் அங்கிருந்து வேகமாக அகன்றாள் அவள்.

வரும் வழி தோறும் அவனின் பார்வை அவளைத் தான் தொடர்கிறது எனத் தெரிந்தும் அவள் அவனை நேருக்கு நேர் பார்ப்பதைத் தவிர்த்தாள்.
வீட்டை அடைந்த பின் அங்கு ஹாலின் ஓரத்தில் இருந்த அறையில் சென்று அடைந்துக் கொண்டாள்.

ஏனோ அன்று அவளுக்கு உணவும் சேரவில்லை உறக்கமும் வரவில்லை.மறுபடியும் மறுபடியும் சாகேத் ரயிலில் வைத்த கண் வாங்காமல் பார்த்ததே அவள் மனக் கண்ணில் தோன்றிக் கொண்டே இருந்தது.

அவள் அறியாத இந்த புது உணர்வை அசைப் போட்டபடி இருந்தவள் வெகு நேரம் சென்று தன்னையறியாமல் உறங்கிப் போனாள்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top