ஆகாயத்தின் அகதி

Advertisement

ஆகாயத்தின் அகதி

ஆகாயத்தின் அகதியென வந்த அவன்,
காடு மலை ஆறென கடலிலே தஞ்சமாய்;
கார்மேகக் குழலியாம் தோழியென,
அவள் துணைக் கொண்டு சங்கமித்தானோ;


அரிதிலும் அரிதான இவனின் காதல்,
நல் அரிதாரம் பூசச் சென்றதோ;
வீழ்வதும் வாழவென நற்செய்தி சொல்ல,
நிதம் அகதியாய் மாண்டு மீண்டானோ;


வாழும் நமக்கு வீழும் அவனே மூச்சென,
ஜீவிக்கிறான் மாரி அவன் மண்ணிலே;
பெறுநர் யாம் உயர உபயம் அகதி நீ அன்றோ,
தலை தாழ்த்துகிறேன் நன்றியால் , வரவேண்டும் என்றும் அகதியாய்!!


-சாந்தி கவிதா
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top