அவள் 1

Advertisement

யாரேனும் என் துன்பத்தை அனுபவித்திருப்பார்களா?

தன் உடல் முழுக்க வெள்ளை துணி சுற்றப்பட்டு முகம் வீங்கி சவப்பெட்டியில் உறக்கம் கொண்டிருப்பதை தானே பார்த்திருப்பார்களா.??

காலையில் ஜன்னல் வழியே காலை கதிரவனை பார்த்தபடியே யோசித்துக் கொண்டிருந்தாள் மித்ரா.

வழக்கம் போல் பள்ளிக்கு கிளம்ப தயாரானாள். குளித்துவிட்டு பள்ளிக்கு எடுத்துச் செல்லும் பையில் தேவையானவற்றை அடுக்கியவள் கண்ணாடி முன் நின்றாள். கண்ணாடியில் தெரியும் பிம்பத்தினை வருடியவள் கண்ணில் துளிர்த்த நீரை துடைத்துவிட்டு தட தட வென படிகளில் இறங்கினாள்.

அந்த வயதான மூதாட்டி தந்த சிற்றுண்டியை கடைமக்கென்று விழுங்கியவள் தட்டிலே கை கழுவிவிட்டு மௌனமாக வீட்டை விட்டு வெளியேறினாள்.

அந்த மூதாட்டி அவள் சென்ற திசையை வெறித்துக் கொணடிருந்தார். முடி முழுதும் நரைத்து கன்னங்கள் சுருங்கியிருந்த அந்த வயதானவளில் உதட்டில் ஒரு மர்ம புன்னகை.

சைக்கிளில் பத்து நிமிட பயணத்தில் பள்ளி சென்றிறங்கியவள் நேரே வகுப்பறைக்க்குள் நுழைந்தாள்.

அதே நேரம்

பெங்களூரில் இருந்த அந்த வீட்டில்

என்ன நெனச்சிட்டு இருக்க நீ நித்யா எத்தன நாளைக்கு இப்படியே இருக்கப் போற ?

எதிரே அமர்ந்திருந்த பெண்மணி எதுவும் கேட்காதது போல் சுவரில் மாட்டியிருந்த அந்தப் புகைப்படத்தில் புகைப்படத்தை வெறித்துக்கொண்டிருந்தாள்.

நீ என்ன செஞ்சாலும் இறந்தவங்க திரும்பி வரப் போறதில்லை.

உன்ன மாதிரியே சாப்பிடாமல் தூங்காமல் இந்த போட்டோவை பார்த்துட்டு இருந்தா அவள் உயிரோட திரும்பி வருவான்னா சொல்லு நானும் உனக்கு பக்கத்துல ஒக்காந்து இதையே செய்யறேன் எனக்கு மட்டும் அவ மேல பாசம் இல்லைன்னா நினைக்கிறே. இத்தனை நேரம் அமைதியாக இருந்தவள் இந்த ஒரு வார்த்தையை கேட்டு சீறி எழுந்தாள்.

என்ன பாசம் இருந்து உனக்கு? அவளுக்கு என்ன பிடிக்கும்னு சொல்லு பார்க்கலாம் சொல்லு

அமைதியாகி போனான் பிரகாஷ்

இந்த வீட்டுக்கு நீ எத்தனை தடவ வந்திருக்கன்னு பஸ்ட் சொல்லு. அட்லீஸ்ட் எத்தன தடவ எனக்கு கால் பண்ணி இருப்ப சொல்லு எப்பவுமே உனக்கு உன் வேலை தான முக்கியம். பொண்ணா இருந்தாலும் பொண்டாட்டியா இருந்தாலும் உன் வேலைக்கு அடுத்து தானே நாங்க.

இங்கிருந்து போ என்ன கொஞ்சம் தனியா இருக்க விடு ப்ளீஸ்

பிரகாஷ் ஒன்றும் கோபப்படவில்லை.மகள் இறந்ததிலிருந்து ஒருவாரத்தை கூட பேசியிராதவள் இன்று இவ்வளவு பேசியது அவனுக்கு மகிழ்ச்சியே. அவள் பேசிய அனைத்தும் உண்மையும் கூட. கொஞ்ச நாளில் மாறிவிடுவாள் என்று அவளை விட்டு நகர்ந்தான்.

மறுபடியும் நித்தியா அந்த மாலையிடப்பட்டிருந்த புகைப்படத்தை
வெறித்தாள்.

அதில் மித்ரா பிங்க் நிற உடையில் போனி டெயிலில் முகத்தில் குறும்பு பொங்க சிரித்துக் கொண்டிருந்தாள்.
 

Attachments

  • received_319050272112902.jpeg
    received_319050272112902.jpeg
    10.1 KB · Views: 4

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய ''அவள்''-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி சிறுகதைக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள், பாரதி kb டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top