அழிவை தந்த அறிவியல்

Advertisement

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer


“அறிவியலே

உன் வளர்ச்சியில்

வஞ்சம் கொண்ட

வஞ்சி இவள் அல்ல

உன் அசுர வளர்ச்சியில்

ஆனந்தம் தொலைத்த

அவனியின் ஒரு அற்ப பெண் இவள்”



“உன் அறிய வகை

கண்டுபிடிப்புகளில்

அணுஅணுவாய்

தொலைகிறதே

எங்கள்

அழகிய வாழ்வு”



“பேஸ்புக்காய் நீ வந்தாய்

பரந்த உலகத்தை

பாங்காய் உள்ளடக்கினாய்

பதின்ம வயது

குழந்தைகள்

குணம் மாறின

வாழ்வின் தடம் மாறின

தடுக்கும் வழி

தெரியவில்லை

தவிர்க்கும் வழி

அது

புரியவில்லை”



“வாட்ஸப்பாய் நீ

வந்தாய்

அதில்

வாய் பூட்டு

போட்டுக்கொண்டனர்

என் மக்கள்

ஒரு வீட்டில்லே

மூலைக்கொரு

செய்தி பறந்தது

உன்னால்

முகம் பார்த்து

பேசிடும்

வழக்கம் மறந்தது

உன்னால்”



“ஏவுகணைகளை

ஏவினாய்

கிரகங்களை ஆராய்ந்தாய்

மருந்துகள்

பல உருவாக்கினாய்

வாகனங்கள்

புதிதாய் தந்தாய்

தடையற்ற

உன் வளர்ச்சியில்

தடயம் தொலைத்ததே

கிராமங்கள் பல

அதன்

சோகம் அறிவாயோ நீ”



“கணினிகளில்

வேலை செய்து

கை நிறைய

சம்பாதிக்க

வழி சொன்ன நீ

கைகளில் அள்ளி

உண்ண

கைப்பிடி அரிசியை

விளைவிக்க

மழை நாடிடும்

வழி மட்டும் தான்

உண்டு என சொன்னாயே?

ஏன்

அறிவியலே

அதில்

உன் அறிவை அளவாய்

பயன்படுத்தினாலும்

அழிவு

நிச்சயம் என்பதாலா?”



“உன் வளர்ச்சியில்

எங்கள்

ஆயுள்

குறைத்தாயே

அநியாயமாய்

அர்த்தம் என்ன

நீ

சொல் அறிவியலே?”



“வேதிப்பொருட்கள்

நிறைந்த

வீதியிலே

புகைமண்டலம்

சூழ்ந்திடத்தான்

சுற்றுச்சூழல் மாசடைந்த

மண்ணில்

ஒரு பயணம்

எங்கள் வாழ்வில்”



“பூமித்தாய்

பொறுமை

ஒரு நாள்

மரிக்கும் எனில்

மண்ணில்

மலரட்டும்

ஒரு மலர்ச்சி

ஆக்கும் சக்தி

மட்டுமே

கொண்ட

அறிவியலின்

வளர்ச்சி”







 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top