அழகி டீஸர் 1

#1
அழகி டீஸர்

கல்லூரியில் கலர் கலராக புது மலர்களும்,,,,,,,,காளைகளும் வலம் வந்த வண்ணம் இருந்தனர்,,,,,,ஆம் இன்று அவர்களுக்கு கல்லூரியின் முதல் நாள்,,, ராகிங் பயம் இல்லாமல் எல்லோரும் உற்சாகமாகவே அவர் அவர்களின் டிபார்ட்மென்ட் தேடி சென்றனர்.

ஒரு குழு மட்டும் உற்சாகமில்லாமல் சோகமாக உட்கார்ந்து கல்லூரியின் வாயிலை பார்த்து கொண்டு இருந்தனர், அவர்கள் அனைவரும் மூன்றாம் வருடம் கம்ப்யூட்டர் டிபார்ட்மென்ட்

அதில் ஒருத்தி "என்னடி இன்னும் அழகிய காணோம் .....லேட் பண்ண மாட்டாளே......என்ன ஆச்சு" என்று கேட்டுக்கொண்டு இருக்கும் போதே
அழகியின் வெர்னா லாவகமாக உள்ளே நுழைந்தது.

எல்லோரும் முகத்தில் ஒரு சிரிப்பு அப்பாடா வந்துட்டா .....லேட் பண்ணுவாளோன்னு நெனச்சேன்......என்றவள் பெயர் ஷாலினி..

அந்த குழுவில் பெண் மூவர், ஆண்கள் நால்வர்.

பெண்கள் ஷாலினி.....ருக்மணி,,,,,,தேன்விழி என்னும் அழகி
நண்பர்களுக்கு அவள் அழகி,,,,,,,மற்றவர்களுக்கு தேன்விழி ,யாரும் அவள் பெயரை சுருக்கினால் அவளுக்கு பிடிக்காது. வீட்டிலும் அழகி என்று தான் கூப்பிடுவார்கள்.

ஆண்கள் சத்யன், ப்ருத்வி. மாரிமுத்து,அகிலன்.

ஷாலினி பேரில் நவீனம் .....ஆனால் நடை உடையில் பாந்தம்
ருக்மணி அய்யர் வீட்டு பெண்
தேன்விழி பேரில் மட்டும் வித்தியாசமில்லை. நடை உடை பாவனை அனைத்திலும் வித்யாசம். நாகரீக பெண். கல்லூரியில் மட்டும் சுடிதார் மற்றபடி அவள் அணியும் உடை பெரும்பாலும் ஜீன்ஸ் டீ ஷர்ட்

தேன்விழி அவள் கண்ணை பார்த்து பெயர் வைத்தார்களோ அல்லது அவள் நிறத்தை பார்த்து பெயர் வைத்தார்களோ என்று தோன்றும் இல்லை இரண்டுக்கும் பொருத்தம் இருக்க வேண்டும் என்று வைத்தார்களோ என்று எண்ணத்தோன்றும்.பேரிலும் வித்யாசம்…….. அவளும் வித்யாசமானவள்.

ஆம் தேன் நிற கண்ணழகி .......தேன் நிற உடலழகி ...கொஞ்சம் கருப்புக்கும் கோதுமை நிறத்துக்கும் இடைப்பட்ட நிறம்.

கன்னத்தில் வலது பக்கம் மட்டும் சிரித்தால் சின்ன குழி...அந்த தேன் நிற கண்ணிற்கு மேல் அடர்ந்த திருத்தப்பட்ட புருவம் ....அடர்ந்த கண்ணிமைகள் ........எந்த அலங்காரமில்லாமல் அலங்காரமாக இருப்பாள். நீண்ட கூந்தல் பராமரிக்க விருப்பமில்லாமல் முதுகு வரை வெட்டி இருப்பாள்.....கொஞ்சம் மற்ற பெண்களை விட உயரம் அதிகம்.

அகிலன் “என்ன அழகி சீக்கிரம் வரலாம் இல்ல..... பாரு எல்லா பஸ்ட் இயர் ஸ்டூடன்சும் கிளாஸ்சுக்கு போய்ட்டாங்க ...இப்போ நாங்க யாரை சைட் அடிக்கிறது” என்று சலித்து கொண்டான்.
அழகியிடம் இருந்து ஒரு கொட்டு விழுந்தது
 
#3
:D :p :D
உங்களுடைய "வண்ண
விழியழகி"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
ஜெயசித்ராஸ்ரீதரன் டியர்
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement