அழகிய அசுரா 1:

Advertisement

sundarnithu

Writers Team
Tamil Novel Writer
Hi frnds....1st epi potrukka ..thappu iruntha correction sollunga frnds...thanks for ur support...





அழகிய அசுரா 1:


ரொம்ப பசுமையான பண்பான கோவை தாங்க நம்ம ஹீரோ சக்தி ஊர் ..கோவை மாவட்ட கலெக்டர் தான் ஜீவானந்தம் .ரொம்ப நேர்மையான அதிகாரி ...அவரோட மனைவி மீனாட்சி .அன்பான குடும்ப தலைவி .இவங்களுக்கு ரெண்டு பசங்க .மூத்தவன் சக்தி .இளையவன் அர்ஜுன் .சக்திக்கும் அர்ஜூனுக்கும் ரெண்டு வருட வித்தியாசம்.சக்தி காலேஜ் முடிச்சுட்டு சொந்தமா பிசினஸ் பண்ணிட்டு இருக்கான்.அர்ஜுன் அப்பாவைப் போல கலெக்டர் ஆக முயற்சி பண்ணிட்டு இருக்கான் .சக்தி அதிகமா பேசமாட்டான் .பொய் சொன்னால் சுத்தமா பிடிக்காது.சக்திக்கு கோவம் வந்தால் ருத்ரதாண்டவம் தான் ..சக்தி உண்மை ஆஹ் இருக்கணும்னு நினைப்பான்.அவன சுத்தி இருக்கவங்களும் அவனைப் போல இருக்க நினைப்பான் ...நம்ம சக்திக்கு ஆப்போசிட் அர்ஜுன் ..செம ஜாலி கேரக்டர் ..தன்னை சுத்தி இருக்கவங்கள எப்பவும் ஹாப்பி ஆஹ் வச்சுப்பான்..சக்திக்கு அர்ஜுன் ஆஹ் ரொம்ப பிடிக்கும்..என்ன தான் வெளிய விருமாண்டி மாறி இருந்தாலும் அர்ஜுனுக்கு தெரியும் சக்தி மாறி யாரும் பாசமா இருக்கமாட்டாங்கனு ..

"நம்மை போல நெஞ்சம் கொண்ட
அண்ணன் தம்பி யாரும் இல்லை
தன்னைப் போல என்னை என்னும்
நீயும் நானும் ஓர் தாய் பிள்ளை"

இந்த லைன்ஸ் மாறி தாங்க அவங்க .....

நம்ம ஹீரோயின் மித்ரா பொள்ளாச்சி இளவரசி ...ரத்னவேல் பொள்ளாச்சில பெரிய மில் வச்சிருக்காரு..ரொம்ப கோவக்காரர் ..ஒரு முடிவு பண்ணிட்டா அவ்ளோ சீக்கிரமா மாத்திக்கமாட்டார் ..அவரோட மனைவி வேணி ..கணவன் சொல்லே மந்திரம்னு வாழறவங்க ..இவங்களுக்கு ரெண்டு பொண்ணுங்க ..மூத்தவ ரம்யா ரொம்ப பொறுப்பான பொண்ணு ..இளையவ தான் நம்ம மித்ரா சரியான அருந்த வாலு ...ரம்யா BE cse முடிச்சுட்டு கோவையில் ஒர்க் பண்ணிட்டு இருக்கா ..மித்ரா காலேஜ் பைனல் இயர் படிச்சுட்டு இருக்கா ..


அந்த அழகிய காலை நேரத்தில் இன்று தனக்கான வேலைகள் என்ன என்று பார்த்துக்கொண்டே ஜீவானந்தம் உணவருந்த உட்கார்ந்தார் ..
'பசங்கள எங்க கானோம்?' என்று மீனாட்சியிடம் கேட்டார் ...அவர் கேட்கும் போதே மாடியில் இருந்து சக்தியும் அர்ஜுனும் இறங்கி வந்தனர்.

"அம்மா இன்றைக்கு என்ன ஸ்பெஷல்" என்று அர்ஜுன் கேட்டான் ..
"இட்லி தான் டா கண்ணா.."
"எப்போ பாரும் இட்லி தான ஏதாச்சு புதுசா பண்ணுங்க மா ..வளர பையன் மா " என்று அர்ஜுன் கேலி பேசிக் கொண்டிருந்தான் ...
"நேற்று பாக்க போன பிசினஸ் டீல் என்ன ஆச்சுப்பா " என்று அங்கு அமைதியாக உண்டு கொண்டிருந்த சக்தியிடம் ஜீவா கேட்டார்..
"எல்லாம் நமக்கு favor தான் ..அது விஷயமா பொள்ளாச்சி வர போக வேண்டி இருக்குப்பா.."
"சரி எது பண்ணாலும் நேர்மையாய் இருக்கணும்" என்றார் ஜீவானந்தம் ..
அப்போது மீனாட்சி "என்னங்க ...நம்ம சக்திக்கு வயசும் போயிட்டே இருக்கு...அவனுக்கு ஒரு கல்யாணம் பண்ணி பாக்கணும்ங்க ..அவன் தா பிசினஸ் னு ஓடிட்டே இருக்கான்..இந்த வருஷம் அவனுக்கு பண்ணியே ஆகணும்ங்க ..நீங்களாச்சு கேளுங்க அவன் கிட்ட " என்று கூறினார் ..
"என்ன சக்தி அம்மா சொன்னது உனக்கும் கேட்ருக்கும் எப்போ கேட்டாலும் இன்னும் ஒரு வருஷம் போகட்டும் னு சொல்ற ..உன் முடிவை இப்பவே சொல்லு " ..
நீண்ட யோசனைக்கு பிறகு "சரி சம்மதம் பாருங்க.." என்று சக்தி வெளியே சென்று விட்டான் ..
"எல்லாம் நல்லபடியா நடக்கணும் கடவுளே.."என்று மீனாட்சி சந்தோசமாக வேண்டிக் கொண்டார் ..
"ஹே ஜாலி ...அப்போ சீக்கிரமா அண்ணி வர்றப்போறாங்க "....என்று அர்ஜுன் எண்ணிக் கொண்டான் ...
ஆனால் அர்ஜுன் அறியாதது வர போகும் அண்ணியால் தனக்கும் பெரிய ஆப்பு உள்ளது என்பது...
பொள்ளாச்சியில் ,

"காலையிலே மணி 10 ஆயிருச்சு ..இன்னும் என்ன டி தூக்கம் எரும " என்று ரம்யா மித்ராவை எழுப்பிக் கொண்டிருந்தாள் ..

ஆனால் மித்ராவோ அங்கு கனவில் அதர்வா கூட டூயட் பாடிக் கொண்டிருந்தாள் ...

கடுப்பில் ரம்யா ஒரு கப் தண்ணீரை மித்ரா மூஞ்சியில் ஊற்ற.."என்னடா ரூமுக்குள்ள மழை வருதுன்னு ..." மெதுவாக கண்ணை விழித்தாள் ...
எதிரில் ரம்யா காளி போல நின்றிருந்தாள் ...
"ஹேய் ஜிங்கிலி ...எப்போ வந்த?"...என்று கேட்டாள் ..
"போடி ...நான் வர்றன்னு சொன்னதும் ரெண்டு நாள் செமயா இருக்கலாம் ..நான் வந்து உன்ன பிக் பண்றனு சொன்ன ...ஆனால் நீ இப்படி தூங்கற ..."
"சாரி ஜிங்கிலி ..ப்ராஜெக்ட் ஒர்க் அந்த டென்ஷன் ல ஒன் வீக் ஆஹ் நல்லா தூங்க முடில டி...அதான் அசந்து தூங்கிட்ட ..." என்று ரம்யாவிடம் கெஞ்சினாள் ..
"சரி பொழச்சுப் போ டீ ...சீக்கிரமா கிளம்பு ஷாப்பிங் போலாம்" என்று ரம்யா கூறினாள் ...

இதோ வந்தரனு மித்ரா வும் ஓடிட்டா ...

"என் செல்ல பொம்மு ன்னு .." ரம்யா சிரிச்சிட்டே மித்ராவைப் பார்க்கிறாள் ...ரம்யா எப்பவும் மித்ராவை பொம்முனு தான் சொல்லுவா ..அவள அம்மா மாறி பாத்துப்பா ...

ரெண்டு பேரும் ஷாப்பிங் மால் னு போயிடு ஜாலி ஆஹ் இருந்துட்டு வர்ராங்க..இங்க அவங்க அப்பா ரத்னவேல் ஜோலிய முடிக்க waiting னு தெரியாம...
 

Attachments

  • Coimbatore-10109_12.jpg
    Coimbatore-10109_12.jpg
    110.7 KB · Views: 5

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "அழகிய
அசுரா"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
நித்துசக்தி டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஆரம்பமே சூப்பர், நித்து டியர்
அமர்க்களமா எங்கள் அழகிய
கொங்கு மாநகர் கோயம்பத்தூரில் ஆரம்பித்திருக்கீங்க
ஆனால் அப்டேட் ரொம்பவே குட்டியா இருக்கே
இன்னும் கொஞ்சம் தரலாமேப்பா
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top