அன்பின் இனியா 8

achuma

Well-Known Member
#1
நட்புக்களே,
உங்களை போன பதிவுல , நான் என் பேஜ்ல தேடுனே ,:(
உங்க கமெண்ட்ஸ் தான் எனக்கு எனர்ஜி .:)
ஆகையால் படித்து விட்டு, கருத்து பதிவிடுங்கள் ப்ளீஸ் .
பதிவினை படித்து விட்டு, இதில் உள்ள நிறை, குறைகள் தெரியப்படுத்துங்கள் .
எழுத்து பிழை இருந்தால் மன்னிக்கவும் .

All be safe
keep on supporting:love:

"காக்கா , என்ன யோசனை? இல்ல இளங்கோ , அந்த வீட்டுல, நான் அதிகமா சந்திக்க போற பெர்சன்னு , பார்த்தா, மாப்பிளைக்கு பிறகு அவங்க அம்மா தானே, அவங்க எதுவும் சரியா பேசல, நம்ம வீட்டுல அவங்க அட்ஜஸ்ட் ஆகல, எது கொடுத்தும், வேண்டாம்னு சொல்லிட்டாங்க,அவரும் வரல," என்று தயங்கி தயங்கி அவள் மனதில் உள்ள பயத்தை வெளிப்படுத்தினாள்

"எவரு," என்று இளங்கோவும் புருவம் உயர்த்தி கேட்டதில்,
"அதான் டா, வம்பு அன்பு, இது எல்லாரும் எதிர்பார்க்கிறது தானே, புதுசா கேட்க வந்துட்டான், மற்ற ஆளுங்க எல்லாம் நல்லா தான் பேசிட்டு போனாங்க , அந்த மாப்பிள்ளையும் வரலை, அவங்க அம்மாவும் எதுலயும் பட்டுக்காம இருந்தா, நான் என்னனு நினைக்கிறது," என்று கடுப்படித்து அறைக்குள் சென்று விட்டாள் .
அங்கு வண்டியில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த அன்பு குடும்பத்தினர், "பொண்ணு நல்லா அழகா இருக்கா, வீட்ட நல்லா பராமரிக்கறாங்க, செடி எல்லாம் எவ்வளவு அழகா, ஒரு இடத்தையும் வேஸ்ட் செய்யாம உபயோகமா வெச்சி இருக்காங்க இல்ல , சந்திரா," என்று தேவகி , இனியாவை பற்றியும் அவ்வீட்டை பற்றியும் சிலாகித்து வந்து கொண்டிருந்தனர் ..

சுமதிக்கு, இனியாவை பிடித்து தான் இருக்கிறது, ஆனால் , தான் தேர்ந்தேடுத்த மருமகள் இல்லையே, என்று வருத்தமடைந்தார் .
ஏதோ தேவகி கிட்ட பேசிட்டு இருந்தாளே , பட படனு பேசுறா , வீட்டுக்கு வந்ததும் அதிகம் பேச வைக்க கூடாது ஆரம்பத்திலேயே அடக்கும் , என்று சுமதியின் மன ஓட்டம்.
அவர் கைக்குள்ள அடக்க நினைத்தால், இனி அவர் கண்களுக்கு, இனியாவிடம், ஏதேனும் குறை கண்டுபிடிக்க தான் பார்ப்பார்
முதலில் மாமியார்கள், அவர்களிடம், ஏதேனும் குறை இருக்கிறதா என்று பார்த்து அதில் இருந்து தான் அவர்கள் அதிகாரத்தை ஆரம்பிப்பர் .

"பொண்ணு கொஞ்சம் மாநிறமா, இருக்கா , என்று சுமதி .
மாநிறம் இல்லை கருவாச்சி ," கோவத்தில் விஷாகா .
"உடம்பும் கொஞ்சம் பூசினா போல இருக்கு , கொஞ்சன் இல்ல ரொம்பவே" என்று, விஷாகா வண்டியில் பேசிக்கொண்டு வந்தனர்

"விஷாகா" என்று வினோத் ஒரு அதட்டல் போட்டதும்,
அமைதியானாள் .
"முதல வீட்டுல போய் பேசிக்கலாம்" .
தேவகியும் , "அண்ணி , வரத்துக்கு முன்னையே, ஒரு வெறுப்பு உருவாக வேண்டாமே, அது காலத்துக்கும் நம்மையே நிம்மதியா இருக்க விடாது" .

"அவனே தேர்ந்தெடுத்தானு, அப்படிங்கற ஒரு விஷயத்தை , ஒதுக்கி வெச்சிட்டு பார்த்தீங்கன்னா , அந்த குடும்பத்து மேல எந்த குறையும் சொல்றதுக்கு இல்லை" .
"பொண்ணு தங்க சிலையாட்டம் அழகா இருக்கா" .

"முதல் ஆளா, வந்துட்டா பஞ்சாயத்து பேச, நல்லது சொல்றன்னு ,"என்று மனதில் நொடித்து கொண்டு அமைதியானார் சுமதி .

பிறகு மருமகன் முன்பும் எதுவும் கூற முடியாது .
சந்திரா , இவர்கள் இருவரையும் ஒரு பார்வை பார்த்து, அந்த பொண்ணு வரும்போதே, இவங்களுக்கு பிடிக்கலைனு ஒரு காரணத்துக்காக, அன்பு வாழ்க்கையில விளையாட ஆரம்பிச்சிட்டாங்க ..

"கடவுளே, அந்த பையன் நல்லவன், அவன் மனசுக்கு நீ நல்லதே கொடு பா," என்று கடவுளிடம் மானசீகமாக வேண்டி அமைதியாக வந்தார் .
சந்திராவுக்கு அதற்க்கு மேல் விஷாகா, சுமதியுடன் வர விருப்பமில்லாமல் , தன்னையும் மீறி ஏதேனும் பேசிவிடுவோமோ என்று வண்டியில் இருந்து இறங்க நினைத்தார் .

"வினோத் , இங்க நிறுத்து பா , என்ன சித்தி இங்கயே இறங்கிட்டீங்க?"

"எனக்கு கொஞ்சம் ஷாப்பிங் பண்ணனும் , அதான்," என்றதும் தேவகியும் சந்திராவை தலையசைப்புடன் , தங்கைக்கு விடை கொடுத்தாள் .

சுமதி, விஷாகாவை, சந்திரா , கண்டுகொள்ளாமல் இருந்தது , அவர்கள் இருவருக்கும் பெரும் அவமானமாக இருந்தது .
சந்திராவும் "நீ என்னை மதிக்கவில்லை, என்றால், தானும் உன்னிடம் பேசுவதற்கு ஒன்றுமில்லை," என்பது போன்று சந்திராவும் அவ்விருவரையும் வந்ததில் இருந்து ஒரு பொருட்டாக மதிக்காமல் இருந்தது , சுமதி, விஷாகா இருவருக்கும் அவள் மீது கோவம் .

"புது பணக்காரி அதான் கண்ணு மேல பார்க்குது , வந்ததுல இருந்து நம்மள கண்டுக்கிட்டாளா பார்த்தியா மா".
"அவ கிடக்குறா , உன் மாமியார்காரிய மட்டும் பார்த்தியா , அவங்க வீட்டுல அப்படியே எல்லார்கிட்டயும் கெக்க பிக்கன்னு வேண்டியது ," என்று இருவரும் வண்டியில் யாரும் கேட்காதவாறு பொருமி கொண்டிருந்தனர் .
தேவகியை வண்டியிலேயே, இருக்க செய்து, வினோத், இறங்கி, "நான் ஆட்டோ ஏதாவது பிடிச்சி கொடுக்குறேன் சித்தி ," என்றான் .
"வேண்டாம் வினோத் , இங்க வாக்கபில் தான்" .

"வினோத் , அன்பு எதுவும் விரும்பி இது வரை கேட்டது இல்லை பா" .
"படிப்பு கூட, அண்ணன் , விருப்பம், தான், இந்த விஷயத்துல அவனுக்கு நீ துணையா இரு பா" .

"எனக்கு புரியுது சித்தி, இவங்க இரண்டு பேரையும் , அவன் கல்யாண விஷயத்துல எந்த குட்டையையும் குழப்பமா நான் பார்த்துகிறேன்" .
"நீங்க கவலை படாதீங்க" .

"இனியாவது, அடிக்கடி சந்திக்கலாம்" .
"அம்மாவும் உங்கள ரொம்ப மிஸ் பன்றாங்க" .
சந்திரா புன்னகைத்து , அதற்கு ஒன்றும் சொல்லமால், விடை பெற்றார் .

அன்புவின் வீட்டில், சுமதியையும், அதிதியையும் இறக்கி விட்டு , விஷாகா அன்னை வீட்டில் இறங்குகிறேன் என்றதற்கு, அவளை தடுத்து , இவர்கள் மூவரும் வினோத் வீட்டுக்கு சென்றனர் .

மாலையில் இருந்து இப்பொழுது, கணவன் தன்னை, அன்னை வீட்டிற்கு செல்ல அனுமதிக்காதது , என்று கடுப்பில் எல்லாம் ஒன்றே சேர்ந்து , அவள் நேராக மாடியில் அவள் அறைக்குள் நுழைந்து கொண்டாள் .

அங்கு நாதன் அமர்ந்திருந்ததை கூட அவள் கவனிக்கும் நிலையில் இல்லை .
அவரோ, தேவகியின் மலர்ந்த முகம் கண்டு மனைவியை , சைட் அடித்து கொண்டிருந்தார் .

ஆனால் , வெளியில் அவரை விட்டு சென்ற கடுப்பில் , விறைப்பாக இருப்பது போன்று காட்டி கொண்டார் கெத்து மனிதர் .
"ஹ்ம்ம் தங்கச்சிய பார்த்த உடனே, அப்படியே, ரோஜா பூ மாறி இருக்கா , வீட்டுல இப்படி இருக்காளா பாரு .
இவளுக்கு என்ன இல்லை , இங்க (சுதந்திரம் இல்லை ).

பாட்டி என்று, தேவகியின் வரவை தெரிந்து கொண்ட பிள்ளைகள், ஆர்பாட்டதுடன் , வந்து, இரு பக்கமும் வினோத்தின் மகளும் மகனும் கட்டி கொண்டனர் .

மனைவி, பேர பிள்ளைகளை கொஞ்சும் அழகை ஆசை தீர பார்த்து மகிழ்ந்தார் .
தேவகியிடம் , எப்பொழுதும் போல், யார் அவளிடம், என்ன என்று இது வரை கேட்டதில்லை ,
அவரே வீட்டில் நடக்கும் அனைத்தும் , கணவரிடம் கூறுவார்.

அதில் நாதன் , அதற்க்கு எதுவும் பதில் பேச மாட்டார் .
அதில் தேவகி வருந்தினாலும், இவர் இப்படி தானே, என்று தன்னையே தேற்றி கொள்வார் .

இன்றும் அதே போல் , இனியா வீட்டில், நடந்தது முதல், இனியாவை அனைவருக்கும் பிடித்தது வரை கூறி முடித்தார் .

குழந்தைகள், பாட்டியிடம் செல்லம் கொஞ்சுவதை பார்த்து, இதுங்க நான் வந்து இவ்வளவு நேரம் ஆகுது, உன் கேட்டதும், எப்படி ஓடி வருதுங்க பாரு , என்று பெருமாய் பட்டாரா, பொறாமையா என்று தெரியாதா ஒரு வகையில் கூறினார் .

"நீ இருந்தா தான் வீடே ஒரு உயிர்ப்பு," என்பதை மட்டும் மனதில் நினைத்து மனைவியையே பார்த்துக்கொண்டிருந்தார் .
கணவனிடம் இருந்து வரும் , இது போன்ற சிறு பாராட்டுக்கள் , தான் இல்லத்தரசிகளுக்கு , ஒரு மன நிம்மதி .
ஆனால், மனைவியை பாராட்ட தான் இங்கு கணவன்மார்களுக்கு மனம் வராது .

இதை எல்லாம் பார்த்து, கொண்டிருந்த வினோத் ,தோட்டத்துக்கு சென்று, அன்புவை அழைத்து, நடந்து அனைத்தும் கூறினான் .

"மாமா, அக்கா இப்போ ,ஓகே தானே," என்று அன்பு .
"அன்பு ஒன்னும் பிரச்சனை இல்லை, நாளைக்கு, நீயும் நானும், இனியா அப்பா வேலை பார்க்கும் ஆபிஸ் போய் பேசலாம்" .

"நீ இன்னும் நேருல பார்க்கல தானே"
"நான் அவர்கிட்ட உன்னை தனியா வேணும்னா, வந்து பார்க்க சொன்னதுக்கு, பக்கத்துலயே நிறைய சொந்தகாரங்க இருக்காங்களாம் ,"
"அது மாப்பிளை, தனியா வரது சரி வராதுன்னு சொல்லிட்டாரு ".
"இன்னொரு நாள் எல்லாரோடும் போகலாம்னா , யாரும் ஒத்துழைக்க மாட்டாங்க டா," அந்த பக்கம் அன்புவிடம் அமைதி , அவன் சொந்தங்களை நினைத்து .
"டேய் என்ன அமைதி, உனக்கு நாங்க எல்லாரும் இருக்கோம் டா , அம்மா , சித்தி எல்லாருக்கும் ஓகே" .
"அத்தை கூட ஓகே தான்" .
"சும்மா வீம்புக்கு சுத்திகிட்டு இருக்காங்க" .
"நீ நேருல ஒரு நாள் பார்த்தா தான் நம்ம வீட்டுக்கும் அவங்களை வர வைக்க முடியும்" .
"பொண்ணு கொடுக்குற அவங்களுக்கும் மாப்பிளை மேல திருப்தி , வரணும் டா" .

"சரி மாமா , நான் அவருக்கு போன் செய்து நாளைக்கே போறேன் , நீங்களும் கூட வாங்க" .

"சரி டா, டைம் சொல்லு நம்ம போகலாம் .
இருவரும் பேசி விட்டு , அடுத்த நாள், மோகன் அலுவலகத்துக்கு அவரை நேரில் பார்க்க சென்றனர் .

முதலில், அன்புவை நேரில் பார்த்ததும்,அவருக்கு, மாப்பிள்ளையின் தோற்றத்தில் பரம திருப்தி .

அன்பு ,முதல் நாள், வராததற்கு, மன்னிப்பு வேண்டி,அவன் காரணத்தை கூறினான் .
"இருக்கட்டும்ங்க , பிசினெஸ் , செய்றவங்களுக்கு, நேரம் காலம் பார்க்க முடியாது" .

அவருக்கு இருந்த தயக்கம், அன்புவுக்கு இல்லை .
"அப்பறம், மாமா, எனக்கு இனியாவை ரொம்ப பிடிச்சி இருக்கு, செழியன் அண்ணா, கிட்ட உங்க வீட்டுல பேச சொன்னது நான் தான்" .

"அம்மா அவங்க பார்க்காம, நானே செலக்ட் செய்துகிட்டேனு, ஒரு வருத்தம்".
வேறு எங்கும் அவன் அன்னையையும் அக்காவையும் விட்டு கொடுக்காமல், அவர்கள் ஏதேனும் தவறாக பேசி இருந்தால் , மன்னிப்பு கேட்டு வருந்தினான் .

மேலும், அவனின் வேலை, குடும்பம் என்ற தகவலையும் நேரிலும் கூறினான் .
ஏற்கனவே ஒரு மகளுக்கு, திருமணம் செய்து இருப்பவருக்கு தெரியாதா, சம்மந்தி வீட்டவர்களின், பெண் வீட்டார் மீதான ஏளன பேச்சுக்கள் .

குடும்பத்தில் யாரேனும் சிலர் இப்படி தான் இருப்பார்கள், அவர்களை மாற்ற நினைத்தால் , காலம் தான் முடியும்.

இவர்களை கடந்து தான் பழக வேண்டும்.
அவருக்கு, அன்பு பேசும், விதம், அவனின் நேரடியான விளக்கங்கள், அனைத்தும் பிடித்து அவரும் அடுத்த இரண்டு நாட்களில், தங்கள் வீட்டிற்கு வந்து பேசுவதாக சம்மதித்தார் .

விஷகாவும் சுமதியும், ஒன்றும் அங்கு பேச முடியாத அளவுக்கு , தேவகியும், வினோதுமே, முன் நின்று இனியா வீட்டினரின் வருகைக்காக வீட்டில் ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்தனர் .
சந்திராவை அழைத்தும், அவர் திருமணத்தில் சந்திப்பதாக கூறி விட்டார் .

அவர், இவ்வீட்டிற்கு வர மாட்டார், என தெரியும், இருந்தும் ஒரு ஆசை .
மோகன், இந்திரா , இளங்கோ மற்றும் செழியன் இதோ அன்பு இல்லத்தில் .
இளங்கோவின் மொழியில், கசாப்பு கடையில்

 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes