அன்பின் இனியா-3

Advertisement

achuma

Well-Known Member
hai friends
next update seidhuten
please read n give comments
thanks for all your support
take care



அன்பின் இனியா

"அம்மா எனக்கு போதும், டைம் ஆச்சு."
"நாலு இட்லி எப்படி பத்தும்," என்று சுமதி ..
"ஹ்ம்ம் , மகன்,என்ன சாப்பிடுவான், எவ்வளவு சாப்பிடுவானு கூட இத்தனை வருஷம் தெரியாமா, இருந்துட்டு இன்னைக்கி திடீர்னு அக்கறை ," என்று சலித்த வாறே அதிதி ..
"நான் இவ்வளவு தான் மா எப்பவும்," என்ற அன்பு, நைட் டூட்டி கிளம்பி கொண்டிருந்தான்..
"வீட்டை பூட்டிக்கிட்டு, உள்ளேயே இருங்க..
புது இடம் செட் ஆக கொஞ்சம் நாட்கள் ஆகும்"..
"ஒன்னும் பயம் இல்லை, ரெண்டு தெரு தள்ளி தான் சின்ன அத்தை வீடு இருக்கு ..
பெரிய அத்தை வீடும் முன்ன விட பக்கம் இல்லைனாலும் நாற்பது நிமிட தூரம் தான்" .
"என் பிரென்ட் கிட்ட, இந்த வீட்டுக்கும் நைட் வாட்ச் மேன் பார்க்க சொல்லி இருக்கேன்"..
"அதிதி ஏதாவது எமெர்ஜென்ஸினா, எனக்குகோ இல்லை என் பிரெண்டுகோ கால் பன்னு சரியா,"
என்று அன்னை தன்னையே கண் கொட்டாமல் பார்ப்பது தெரிந்தும், வேறு பக்கம் பார்வை செலுத்தி அவன் பேசி கொண்டே சென்றான் ..

ஜாதகம் பொருந்தியதும், விஷயத்தை அன்புவிடம் செழியன் தெரியப்படுத்தி விட்டான் முதல் நாள் மாலையே, இனியாவுடன் கலந்து பேசிவிட்டு மேற்கொண்டு தகவலை பற்றி கூறுவதாக சொல்லி இருந்தான் , அன்புவிடம் ..
அச்செய்தியை வீட்டில் சொன்னதும் பிரலயமே வெடிக்கும், என்று நிச்சயமாக, அன்பு, எதிர்பார்க்கவில்லை .
சுற்றி சொந்தங்கள் இருந்தும், அவன் திருமணத்திற்கு, அவனே முன் இருந்து அனைத்தும் செய்வது, அவனிற்கே மன வேதனையாக இருந்தது, சொந்தங்களை நினைத்து ..


சொந்த வீட்டை விட்டு வந்து ஒரு நாள் ஆனது, அதுவும் தனக்கு சொந்தம் இல்லை என்று தெரிந்ததும்.

"அன்பு, அக்கா மேல வருத்தப்படாத பா , இன்னும் கொஞ்சம் யோசிச்சி சொல்லு பா," என்று தயங்கி தயங்கி, அன்புவிடம் கேட்டார் ..


"நீங்க அக்கா எது செய்தாலும், தப்பா எடுத்துக்க மாட்டீங்க விடுங்க மா , எனக்கு என்ன வருத்தம்னா , முன்னையே வீடு நமக்கு சொந்தம் இல்லைனு சொல்லி இருந்தீங்கனா ,நாம அங்கு இருந்து இருக்க வேண்டாம் தானே , நான் ஏதாவது ஏற்பாடு செய்து இருப்பேன் , எனக்கும் இந்த அசிங்கம் இருந்து இருக்காதே "..

"இப்பவும் ஒன்னும் ஆகல பா, ஏதோ கோவத்துல தான் அப்படி பேசி இருப்பா , அவ சொன்னதை கேட்டு இருந்தா நம்ம வாழ்ந்த சொந்த வீட்டுலயே இருக்கலாம்," இப்போவும் மகனின் கவுரவம் தாய்க்கு பெரிதாக தெரிய வில்லை , மகளுக்குகாக பரிந்து பேசுகிறார் ..


"அம்மா, நான் ஏன் எல்லாமே அக்கா முடிவுல விடணும், என் மரியாதை பாதிக்குதுனு , கூட உங்களுக்கு தெரியலையா , பரவாயில்லை , விடுங்க ."


"ஆனா வீடு, அது, நமக்கே சொந்தம் இல்லை அப்படி என்ன அங்க இருக்கணும்னு , உங்க மனசுல இது முதல பதிய வைங்க ."

அதற்குள் மோகனிடம் இருந்து அன்புக்கு அழைப்பு
" வணக்கம் சொல்லுங்க, சார் " அன்பு


"வணக்கமுங்க , நீங்க இந்த நேரம் தான் வீட்டுல இருப்பீங்கனு , செழியன் மாப்பிளை சொன்னாரு, பொண்ணு சம்மதம் சொல்லிட்டா , நீங்க நல்ல நால் பார்த்து வீட்டுல சொல்லிட்டு, பெரியவங்களோட வாங்க , நாம மேற்கொண்டு பேசலாம்," என்று கூறி முடித்தார் ..


சரி என்று போன் வைத்த அன்பு, அன்னையிடம் அனைத்தும் கூறினான் ..
மகன் திருமண முடிவில் உறுதியாக இருப்பது, தெரிந்து, இனி எந்த மாற்றமும் இல்லை என்று கண்டு கொண்டார், அன்னை ..

அதிலும், அந்நேரம் பெண்ணின் தந்தையிடம் இருந்து அழைப்பு, அதில் இனியா குடும்பத்து மீது ஒரு கோவம் உருவானது, ஆரம்பமே ..


இது எதிலும் சம்மதம் இல்லாத, இனியாவின் மேலும் ஒரு கோவம், சுமதிக்கு,
அதன் பலன், மாமியார் அவதாரம் அப்பொழுதே எடுக்க ஆரம்பித்தார் ..

இனி மகனின் உறுதி அறிந்து, பெருமூச்சுடன், "நீ நேர ஒரு எட்டு போய் அக்கா வீட்டுல தகவல் சொல்லிடு".

"நீ நாளைக்கு காலையில வந்து தூங்கிட்டு, பத்து மணி போல டிராவெல்ஸ் போய்டுவே, அதுக்கு அப்பறம் நேரம் உனக்கு சரியா போய்டும்," என்றார் ..


"அம்மா , அக்கா நம்மள ,கழுத்தை பிடித்து தள்ளாத குறையா, காலையில தான் வீட்டை விட்டு துரத்தி இருக்கா."


"அண்ணா , வீடு தேடி அலைஞ்சி , கடைசில பிரென்ட் ஹெல்ப்ல , அவசரத்துக்கு ஒரு வழியா வீடு கிடைச்சு இருக்குது .இப்போ தான் வந்து செட்டிலானோம் "..


"அது பற்றி எல்லாம் உனக்கு கவலை இல்லை.
உனக்கு உன் பொண்ணுக்கு முதல் மரியாதை கிடைச்சிடனும் , அதானே," என்றாள் அதிதி ..


"ஆமாம் டீ , அவ தான் எனக்கு முதல , அஞ்சு வருஷம் குழந்தை இல்லமா ஊர் உலகத்துல ஏச்சு வாங்குன எனக்கு, அம்மானு பதவி கொடுத்த ஏன் பொக்கிஷம்" ..


"எனக்கு அவ தான் முக்கியம் ..
அவர் வயிற்றில் உதிர்ந்த முத்து என்று இவர் ஒரு வகையில் விஷாகாவை தாலாட்டினால் , அன்னை பாசம் கிடைக்காமல் வளர்ந்த இராஜ கோபாலனுக்கு, விஷாகா அவர் அன்னையின் ஜாடையில் உள்ளதால் அவர் ஒரு வகையில் தாலாட்டினார் ..


அதிலும், விஷாகா பிறந்த உடன், அவர் தொழிலில் முன்னேற்றமே , அதுவும் ஒரு காரணம் ..


இவளே போதும் என்று இருந்தனர்.
ஆனால், எதிர்பாரா அன்பு, அதிதி வரவு, அவர்களுக்கு விஷாகா அளவிற்கு மகிழ்ச்சி தர வில்லை..


இருவரையும்,தம்பி தங்கை என்று விஷாகா ஏற்றுக்கொள்ளலாம், தாய் தந்தை பாசம் தனக்கு கிடைக்காது என்று ஏங்க ஆரம்பித்தாள் ..


மகளின் ஏக்கம் பொறுக்காத பெற்றோர் , அதற்கு ஒரு முடிவெடுத்தனர் ..
விஷாகாவிற்கு பிடிக்காத காரணத்தால்,அன்புவும், அதிதியும் சுமதியின் அன்னை வீட்டில் கிராமத்தில் வளர்க்கப்பட்டனர் .

ஆனால் அன்புக்கு பத்து வயதும், அதிதிக்கு இரண்டு வயதும் இருக்கும் நேரம், பாட்டி இறந்ததும், இங்கு அழைத்து வர பட்டனர் ..

அவளின் ஆணை படியே வீட்டில் அனைத்தும்..
அன்பு அதிதி, இருவரும் அதற்கு ஏற்ப பழக்க படுத்த பட்டனர் ..

அவளே முதல் மகள் என்று பூரித்து, பெருமை கொண்டாடி , இறுதியில், விஷகாவுக்கு, அனைத்திலும், தானே முதன்மையாக இருக்க வேண்டும், என்ற எண்ணம் உருவானது ..


படிப்பிலும், முதல் மதிப்பெண் பெறுவாள் , விளையாட்டிலும், திறமை, விரும்பிய அத்தை மகனே, கணவனாக கிடைத்தது, என்று,அனைத்தும் அவள் எண்ணப்படியே ..


மகள் விருப்பம் அறிந்து, இராஜ கோபால், முதல் தங்கையிடம் வினோத்துடனே திருமணம் பற்றி பேசியதற்கு, இராஜகோபால் டெக்ஸ்டைல்ஸ் முழுதும், மகன் பெயருக்கு மாற்றி தருமாறு, கேட்டார், அந்த வியாபாரி ..


அதில் வினோத்திற்கு விருப்பம் இல்லை என்றதும், மகள் பெயரிலே மாற்ற பட்டு, சீரும் சிறப்புமாக திருமணம் செய்து வைத்தார் ..


திருமணம் முடிந்து, மரு வீட்டிற்கு வந்ததும், தம்பியும், தங்கையும், "வாங்க அக்கா" என்றதும், இவ்வளவு நாட்கள், தான் வளம் வந்த வீட்டில் இவர்கள் வரவேற்பதா , என்று அன்றே தந்தையிடம், வீடு தனக்கு வேண்டுமாறு கேட்டு விட்டாள் ..


கிண்டியில் பணகாரர்கள் மட்டுமே வசிக்கும், குடியிருப்பு பகுதியில் தான், வினோத் வீடும், பத்து நிமிட தூரத்தில் இராஜகோபால் வீடும் உள்ளது..
அவருக்கு, இங்கு தந்தை கடை, இந்த வீடு மட்டுமே, மற்றபடி அவரின் தொழில் எல்லாம் வட மாநிலம், நிறைய உள்ளது ..


அதனால், வீட்டையும் விஷாகாவின் பெயரில் எழுதி விட்டார்..
என்று அவர்கள் இரு பிள்ளைகளை மதித்து இருக்கிறார்கள், அதனால் இந்த விசஷயம் இருவருக்கும் தெரியாமயே போனது ..


இறுதியில் அந்த வீட்டில் உள்ளவர்களும், அவள் பேச்சையே கேட்க வேண்டும் எனும், ஒரு எண்ணம் மனதில் உருவானது ..

இவ்வளவு சொத்துடன் வந்து இருக்கும் மருமகளை மாமியார் வீட்டில் தங்குவார்கள் என்று நினைத்தாள் ..


வினோத்தின் தந்தை மருமகளை அவ்வாறே தாங்குறார், ஆனால் அவளின் அத்தை, அண்ணன் மகள் என்று தான் எப்பொழுதும் போல் இருக்கிறார் ..
அவரும் பாசத்துடன் தான் இருக்கிறார் , இவளின் எதிர்பார்ப்பு, இவள் கூற்று படி நடக்க வேண்டும் என்பது,
மாமியாரும் கூஜா தூக்க வேண்டும் என்பது, அது அந்த வீட்டில் இல்லை ..


அதிலும், பிறந்த வீட்டில் இவள எப்படி செல்லமாக இருந்தாளோ , ரேஷ்மி, அவள் நாத்தனார்,அந்த வீட்டில், தந்தை, அண்ணன் , அன்னை என்று அனைவரிடமும், செல்லமாக இருப்பது, அவளுக்கு பிடிக்கவில்லை ..



அடுத்த வீட்டிலும், தானே முதன்மையாக திகழ வேண்டும், என்னும் எண்ணம் , தவறு என்று தெரியாமல், ஒரு பெண்ணின் உணர்வில் விளையாட ஆரம்பித்தாள் ..


அதன் விளைவு, தம்பி மீதான ரேஷ்மியின் ஆர்வ பார்வையில், தன் வீட்டில் தான் வைத்ததே சட்டம் என்பது போல் , தனது பேச்சையே தம்பியும் கேட்பான் என்றும் , இருவருக்கும் தானே முன் நின்று, திருமணத்தை நடத்தி வைப்பதாகவும், அவளின் பதின் வயதில், ஆசையை தூண்டி விட்டாள் ..


தன்னை மீறி பிறந்த வீட்டில், எதுவும் நடக்காது என்று, ஆணவத்தில் இருந்தாள் ..


பிறகு, பிறந்த வீட்டில் செல்லமாக இருக்கும் ரேஷ்மி, தம்பியின் மனைவியாக, அவளுக்கு நாத்தனாரானால், விஷாகா பேச்சை தானே கேட்க வேண்டும், என்னும் கற்பனை வேறு ..


ரேஷ்மியும், அன்பு மீதான காதலில், மூழ்கிவிட்டாள் ..
ஆனால் அன்புவுடன், பேசும் சூழலோ, சந்தர்போமோ, ரேஷ்மிக்கு கிடைக்கவில்லை, இல்லையென்றால், முன்னே ரேஷ்மியை தெளிவு படுத்தி இருப்பான் அன்பு ..


அவனுக்கு அவன் வேலைகளே பெரிதாக இருந்தது ..

டிராவெல்ஸ் வைப்பது, அவனது இலட்சியம், படிப்பு முடிந்ததும், தந்தையிடம், பணம் கேட்டதற்கு , தன் கடமை முடிந்ததுதென்ன கை விரித்தார் ..


அதற்கு தாயும் எதுவும் சொல்லாதது தான் வேதனையே ..
ஆகையால் ஐ டி துறையில் கிடைத்த வேலையில் சேர்ந்து விட்டான் ,

அவனுக்கும் மற்றும் தங்கை செலவுக்கு போக, பணம் சிறுக சிறுக சேர்த்து , அவனின் முதலீடாக, ஒரு தொகை சேர்த்து மீதி பணம் பாங்கிலும், என்று கடன் பெற்று, தொழில் ஆரம்பித்தான் ..


பகலில் டிராவெல்ஸிலும், இரவில் ஐ டி , வேலை என்று எடுத்து கொண்டான் ..
இந்த ஏழு வருடங்களில், தொழிலில் காலூன்றி , நின்று விட்டான் ..


காலை ஐந்து மணிக்கு வீட்டிற்கு வந்ததும், உறங்கி ஒன்பது மணி போல் எழுந்து, டிராவெல்ஸ்க்கு கிளம்பி விடுவான் ..
நான்கு மணி நேரமே இவன் உறக்கம் ..


உடல் ஓய்விற்கு கெஞ்சும், ஆனால், இந்த வயதை இழக்க கூடாது, கிடைத்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி, எப்படி எல்லாம் மேல வர வேண்டும், என்பதில் அவன் உறக்கத்தை புறம் தள்ளினான் ..


தங்கை, தொழில் மட்டும் போதும், இதற்க்கு மேல், கமபெனிக்கு போக வேண்டாம், என்றாலும், அவனிற்கும் இது போத வில்லை ..
இன்னும் இன்னும் என்று பணம் சேர்க்க எண்ணம்..


அவன் தந்தையின் முன், விஷாகா முன், முன்னேற வேண்டும் ..
ஆதிதிக்கு, அவர் தந்தை எதுவும் செய்ய மாட்டார் என்று தெரிந்து கொண்டான் ..


அக்காவிற்கு தந்தை செய்தது போல், தங்கைக்கும் அவன் சேர்க்க ஆரம்பித்தான் ..

ஆனால் , விஷாகா திருமணம் முடிந்ததும் , வட நாட்டிற்கு கிளம்பிய தந்தை விபத்தில் இறந்ததாக தகவல் வந்து சேர்ந்தது.

குடும்ப பொறுப்பு அவனுக்கு மேலும் சேர்ந்தது ..
விஷாகாவின் புகுந்த வீட்டு சீர் செலவுகள், ஒரு பக்கம் கூடி கொண்டது ..
பொறுப்பான மகனாக, நல்ல சகோதரனாக, நிற்க நேரமில்லாமல் குடும்பத்திற்காக ஓடிக் கொண்டிருக்கிறான் ..


இவ்வாறு , பாலைவனமாக, வறண்ட அவன் வாழ்வில், தாகத்திற்கு தண்ணீர் போல் வந்து சேர்ந்தாள் இனியா ..

ஆறு மதத்திற்கு முன்பு, ஒரு வீட்டு விசேஷத்திற்கு சென்று இருந்த இவன் அம்மாவையும் அக்காவையும், இரவானதும், அழைத்து வருவதற்கு சென்று இருந்தான் ..

இலக்கியா மாமியார், வீட்டின் நெருங்கின சொந்தம் என்பதால், சம்மந்தி வீட்டின் அழைப்பிற்கு, மோகன் குடும்பத்துடன் அங்கு சென்று இருந்தார் ..

எதிரே செழியனை கண்டதும், அன்பு அவனிடம் நலம் விசாரிக்க, அப்படியே, இலக்கியாவின் நலமும் கேட்டான் ..

அதோ அங்க தான் இருக்கா , என்று செழியன் கை காட்டிய திசையை நோக்கி, அன்புவின் கண்களும், சென்றது ..

அங்கு இனியா அவள் அக்காவுடன், ஏதோ சிரித்து பேசி கொண்டிருந்தாள் ..
அன்புவுக்கு இனியாவை கண்டதும், அவளின் துரு துரு கண்கள், முகம் முழுதும், வியர்வையில் வழிந்து, அதை புறங்கையால் , துடைத்து, ஏதோ கைகளை ஆட்டி ஆட்டி பேசி கொண்டிருந்தது, என்று அனைத்தும் பிடித்தது ..


அன்பு செழியனை , "அண்ணி யாரோடோ , பேசிட்டு இருக்காங்க, இருக்கட்டும் அண்ணா , டைம் கிடைக்கும் போது, பார்ப்போம்," என்று கை கொடுத்த விடை பெற இருந்தான் ..


"அது, அவ தங்கை தான் , சரி டா பார்க்கலாம்," என்று செழியனும், சென்றான் ..


சுமதி மன மக்களை, வாழ்த்தி, உணவு முடித்து வருமாறு கூறினார் ..
மேடை நோக்கி சென்றான், அடிக்கடி அவன் கண்கள் இனியாவையே வட்டமடித்து ..


இங்க இருந்து கிளம்புவது நல்லது , என்று நினைத்து, மன மக்களை வாழ்த்தி கீழே இறங்கினான் ..


உணவு இடம் சென்று, பார்த்தால் அங்கும்,இனியா.
கைக்கும் வாய்க்கும் சண்டை போடுவது போல் , ஐஸ்கிரீம் , உண்டு கொண்டிருந்தாள் ..


"வாய்க்கு ரெஸ்ட் கொடுக்குறாளா பாரு, ஒன்னு லொட லொடன்னு பேசறது, இல்லை இப்படி சாப்பிடறது," என்ற அவனின் என்ன போக்கை நினைத்து, இது என்ன ஒரு பொண்ணை இப்படி பார்த்துட்டு இருக்கோம், என்று, ஏதோ பெயருக்கு கொறித்து, புறப்பட்டு விட்டான் ..


ஆனால் வீட்டில் வந்ததும் அவள் சிந்தனையே , நாளடைவில் இது காதல் என்று தெரிந்து கொண்டான்..


ஆனால், எப்படி , என்று யோசித்தே காலம் கடத்தினான் ..
அன்னை திருமணம் பற்றி பேசியதும், இதற்கு மேல் முடியாது, என்ற முடிவுடன், செழியனிடம், இனியாவின் மீதான விருப்பத்தை பற்றி கூறிவிட்டான் ..


அவர்கள் வீட்டிலும் சம்மதம் என்றால்,
மேற்கொண்டு பேசலாம், என்று அவன் கேட்ட விதம், செழியனை ஈர்க்கவே , அவனும் வீட்டில் பேசுவதாக சொல்லினான் ..

முதலில் ஜாதகம் பொருந்தட்டும், என்று, மோகன் கூறியதாக செழியன் கூறினான் ..


ஜாதகம் பொருந்தியதும் , இவனிடம் செழியன் கூறி விட்டான் ..
பிறகு இலக்கியா சம்மதம் கிடைத்ததும், பெண் பார்க்கும் படலம் என்று முடிவானது ..

சரி இனி வீட்டில் சொல்லலாம் என்று, அன்னையிடமும், அக்காவிடமும், முதலில் கூறினான் ..

அக்கா தான் வீட்டில் எப்பொழுதும் மூக்கை நுழைப்பாளே ..
விஷகாவால் இதை நம்ப முடியாமல், வானத்துக்கும் பூமிக்கும் குதித்தாள் ..

பிறகு, முதல் முறையாக அவளுக்கு எதிராக, பிறந்த வீட்டில் ஒரு முடிவு, அதுவும், அவள் மதிக்கவே மதிக்காத தம்பி செய்தால் , உடனே அவள் ஒற்று கொள்ளாமல் , ரேஷ்மி பற்றி, கூறி அவளை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும், என்று அதிகாரம் செய்தாள் ..

அந்த பேச்சே அன்புக்கு ரசிக்கவில்லை , அவனுக்கு அதிர்ச்சி, இதுவரை அவன் இப்படி ஒரு கோணத்தில் யோசித்ததே இல்லை ..

ஒரு சின்ன பெண்ணின் உணர்வில் அக்கா இப்படி விளையாடி இருப்பா என்று நினைத்தானில்லை ..


அது வேறு அவனுக்கு ஒரு உறுத்தலாக இருந்தது ..
ஆனாலும், தெளிவாகவும், பொறுமையாகவும், அக்காவிடம், இனியாவுடனான திருமனப் பேச்சை கூறினான் ..


அவளுக்கு புத்தியில் அது எல்லாம் எங்கு ஏறியது , அவள் சொல் படி திருமணம் அன்பு செய்யவில்லை என்றால், அவள் வீட்டில் இடம் இல்லை, இப்பொழுதே இடத்தை காலி செய்ய சொல்லி விட்டாள் ..


"என்ன," அன்புக்கு அதிர்ச்சி , "நான் வைச்சது தான் சட்டம் , இது வரை எல்லாம் கேட்டு நடந்துட்டு, இப்போ என்ன உன் இஷ்டத்துக்கு ஆடுற , சொல்றத செய்றத இருந்தா இரு, இல்ல கிளம்பிட்டே இரு " ..


பிறகு, ரேஷ்மியிடம், அவளுக்கு தலையிறக்கமாக போய் விட்டாள் ..
நல்ல வேலை, இதை யாரிடமும், ரேஷ்மியை சொல்ல வேண்டாம் என்று சொல்லி இருந்தது, நல்லதாக போயிற்று, என்று இவளை பற்றியே நினைத்தாள் ..


இவ்வாறு கூறினால், தம்பி பணிவான் என்று நினைத்தால் , அவன் உடனே, "அதிதி, நான் வரதுக்குள்ள, உன் திங்ஸ் , அம்மா திங்ஸ் மட்டும் பேக் பண்ணு,எனக்கு நான் வந்து பேக் செய்துக்கிறேன் , நான் வீடு பார்த்துட்டு வந்து உங்களை அழைச்சிட்டு போறேன் ," என்று கூறினான் ..


அவனுக்கு அவ்வளவு கோவமும், வேதனையும், அன்னையாவது, இதை முதலில் தன்னிடம் சொல்லி இருந்தால், இந்த அசிங்கம், தேவை இருந்து இருக்காதே என்று ..

"இரு பா, அக்கா கிட்ட நான் பேசுறேன்," என்று அப்பொழுதும் சுமதி, மகளிடம் சமாதானமாக இருக்க சொன்னால் , அவனுக்கு எப்படி இருக்கும்..
அவ்வளவு எரிச்சல் அக்கா மற்றும் அன்னை மீதும் ..

"அக்கா உங்க மேல எனக்கு எப்பவும் அன்பு, மரியாதை இருக்கு, ஆனா , எல்லாமே கேட்டுட்டு இருக்க முடியாது" ..
என்று நிற்காமல், விறு விறு என்று வெளியேறிவிட்டான் ..


தன்மானம் சீண்ட பட்டதால், நண்பனின் உதவியுடன், அந்த பகுதியிலே, ஒரு வீடும் பார்த்து, அன்னையையும், தங்கையையும், அன்றே அழைத்து வந்து விட்டான் ..

முதல் முறையாக, அதுவும் இவ்வளவு பெரிய விஷயத்தில், அவளின் தலையீடில்லாமல், அவள் தம்பி எடுத்து இருக்கும் முடிவு, விஷகாவுக்கு அவ்வளவு உவப்பானதாக படவில்லை ..

அதிலும், அவளின் முன் நின்று, கோவமாக பேசும் தம்பி, இதற்கெல்லாம் காரணம் இனியா , என்று சம்மந்தமே இல்லாதவள் மீது கோவமும் வெறுப்பும் உருவானது ..

அன்பின் பலகீனமே அவன் குடும்பம் தான் , இனியாவின் பலம் அவள் குடும்பமே ..

இருவரும் திருமணம் என்னும் பந்தத்தில் ,இரு வித்யாசமான குணமுள்ள சொந்தங்களுக்கு இடையில் இவர்கள் வாழ்க்கையில் இனி பயணிப்போம் ..
 

Saroja

Well-Known Member
முட்டாள் தனமான அம்மா அப்பா
முரட்டு பிடிவாதம் அக்கா
நல்ல குடும்பம்டா சாமி
இப்பவாது உண்மை
தெரிஞ்சு வெளியே வந்தானே
 

achuma

Well-Known Member
Thanks for comments sis
Universal problem:)
முட்டாள் தனமான அம்மா அப்பா
முரட்டு பிடிவாதம் அக்கா
நல்ல குடும்பம்டா சாமி
இப்பவாது உண்மை
தெரிஞ்சு வெளியே வந்தானே
Nandri
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top