அன்பின் இனியா 24

Advertisement

achuma

Well-Known Member
சென்ற பதிவிற்கு உங்களின் ஆதரவுக்கு நன்றி நண்பர்களே .
இப்பதிவையும் படித்து உங்களின் கருத்துக்களை தெரியப்படுத்துங்கள்.
All be safe
Take care friends

"என்னோட இந்த பிறவில நான் என்ன டா வாழ்ந்தேன்," என்று சுமதி மகனிடம் கதறி அழுதார் .
"என் வாழ்க்கையில விளையாட அவனுக்கு என்னடா உரிமை, இப்போ, இந்த பொண்ணு அந்த மனுஷன பார்க்கணும்ன்னு துடிக்குறா," என்று விஷாகாவை பார்த்து மகனிடம் புலம்பினார்.
சுமதிக்கு மனம் கேளாமல், மகள் இப்பொழுதும் தந்தையை பார்க்க துடிக்கும் அவளின் கண்மூடி தனமான அன்பு மேல் வந்தது.


"இவ துடிப்பான்னு தெரிஞ்சும், இப்படி ஒரு நாடகம் ஆடி இருக்கான், அது ஏதாவது, இவளுக்கு புரியுதா பாரு."
சுமதி விஷாகாவை திட்டி கொண்டே இருந்தார், அவளின் நல்லதுக்கு தான்.
"அம்மா, என்ன நடக்குதுன்னு தான் பாப்போம், நீ பொறுமையா இரு மா, இப்போ தான் எல்லாருக்கும் விஷயம் தெரியுமே, இப்போ அக்காவுக்கும் தெரிய வந்து, அவளே பார்க்கணும்ன்னு சொல்றா ."


"இதுக்கு மேலையும் நான் சும்மா இருக்க மாட்டேன், அந்த ஆள எப்படி கவனிக்கனுமோ நாங்க கவனிக்குறோம், நீ அமைதியா இரு மா."
வீட்டினர் அனைவரும், விஷாகா அவள் தந்தையை காண நேரில் செல்வதாக உறுதியானதும்,அரை மனதுடன் சம்மதித்தனர் .
அவரவர் வீட்டிற்கு சென்றனர்.


பிறகு, அனைவரும் சென்றதும், அன்பு மற்றும் விஷாகா வெகு நேரம் பேசினர்.
வினோத்திற்கு ஒன்று மட்டும் புரிந்தது, விஷாகா ஏதோ முடிவு எடுத்து விட்டாள், என்றும், அன்பு இனி ராஜா சேகரை சும்மா விட போவதில்லை என்றும்.
அடுத்த இரு தினங்களில், இதோ, ராஜா சேகரை காண அவர் இல்லத்தில், விஷாகா வினோத் மற்றும் அன்பு.
மற்ற யாருக்கும் ராஜா சேகரின் மீதுள்ள கோவத்தில் அவரை காண வரவில்லை.


"டேய் அன்பு, என்ன டா இந்த வீடு இவ்வளவு பெருசா இருக்கு, ஒரு பிசினஸ் மட்டும் தானே,நீ சொன்ன ."
"எங்க நம்ம தாத்தா கிட்ட, பிச்சை எடுத்து இங்கே அவன் குடும்பத்துக்கு சிறப்பா கட்டி இருக்கான் மாமா ."
"ஒரு பிசினஸ் இல்லை மாமா, எல்லாருக்கும் தெரிஞ்சு தீபிகா பைனான்ஸ் செய்றாங்க, கவர்ன்மெண்ட் தெரியாம, இங்க கட்ட பஞ்சாயத்து,பணம் அதிக வட்டிக்கு விடுறதுன்னு, இல்லீகலா பிசினஸ் பன்றாங்க ."


"அப்படி என்னை மிரட்ட வரும் போது தானே, இவன் சந்திப்பு எனக்கு ."
"ஏன் டா இந்த மனுஷன சந்திச்சோம்ன்னு இருந்தது."
"அன்னைக்கே இவன ஏதாவது செய்யலாம்ன்னா, அக்கா பேர் சொல்லி ஏமாத்துனான் மாமா," சலிப்புடன் அன்பு வினோத்திடம் பேசி கொண்டிருந்தான்.


விஷாகாவோ, தந்தையை காணும் ஆவளில் இவர்களை கவனிக்காமல், தந்தையின் வருகைக்கு தவம் கிடந்தாள் .
"இந்த பைத்தியக்காரி, இப்படி அவங்க அப்பா மேல வெறியா இருப்பான்னு, நினைக்கவே இல்லை டா."


"நம்ம வந்த ஒரு மணிநேரத்துக்கும் மேல, இன்னும் இதோ வராங்க போன, சர்வன்ட் கூட காணும் ."
"இங்க பாரு உன் சகோதரிய, ஏதோ, சாமி தரிசனத்துக்கு காத்திருக்கும் பக்தைய போல உட்காந்துட்டு இருக்கா,"
வினோத்திற்கு, அத்தனை கோவம், மனைவி மேல்
எவ்வளவு கூறியும் தந்தையை பார்த்தே தீருவேன் என்று அடம் .
அன்புவும், விஷாகா பக்கம், துணையாக நின்றதும் இனி கேட்கவே வேண்டாம்.
"மாமா, உங்களுக்கு ஏன் இவ்வளவு கோவம் ?" அன்பு வினோத்திடம் கேட்டான்.
"நீ பொறுமையா இருக்குறதுக்கும், அவ இப்படி அழுகாச்சியா இருக்குறதுக்கும், எனக்கு எங்கேயோ இடிக்குது, அதான், இப்படி புலம்புறேன். உங்க கேரக்டர் இது இல்லையே ."
"என்ன பிளான் சொல்லுங்க டா,"
"அட, என்ன பிளான் மாமா, செத்த மனுஷன் இப்போ, இருக்கான்னு தெரிஞ்சதும், அக்கா பாசத்துல பார்க்க வந்து இருக்கா, துணைக்கு நம்ம வந்து இருக்கோம்."


"வேற ஒன்னும் இல்லை." அசால்ட்டாக அன்புவின் பதில் .
பங்களா அமைப்பில் பெரிய வீடு, வீட்டின் வரவேற்பறையில் குடும்ப புகைப்படம்.
அதில், புன்னகையுடன் ராஜா சேகர், அவரின் மனைவி தீபிகா, இரண்டு புதல்வர்கள், அமர் மற்றும் ராகுல் .


இப்படி, புகைப்படம், நம்மிடம் இருந்ததா என்று அன்பு மற்றும் விஷாகா மனதில் எண்ணினர் .
இதை நினைத்து, "இந்த ஆள," என்று அன்பு பல்லை கடித்தான் என்றால், விஷாகா, விரக்தியாக ஒரு புன்னகை.


அவள் ஒன்று தந்தையுடன் தனியாக எடுத்த புகைப்படம், அல்லது அவள் தாயுடன் எடுத்த புகை படம் இருக்கும்.
அதிதி, அன்புவுக்கு அந்த கொடுப்பினை கூட இல்லை.
இதோ மாடியில் இருந்து கம்பீரத்துடன், இறங்கி வந்தார் ராஜா சேகர்.
மராட்டிய மக்கள் அணியும் உடை போல், வெள்ளை குர்தாவும், கால் சட்டையும் அணிந்து, மகளின் முன் வந்து கம்பீரமாக நின்றிருக்கும் மனிதரை, காண காண விஷாகாவிற்கு கண்கள் பணித்தது.
"அப்பா," என்று கட்டி கொண்டு அழுதாள் .
அவரின் தலை, தோள் என்று தடவி பார்த்து, கண்ணீர் சிந்தினாள்.
திரும்ப பார்க்க முடியுமா, என்று ஏங்கிய நாட்கள், மீண்டதாக, அவளுக்கு மகிழ்ச்சி தந்தையை இப்பொழுது உயிரோடு பார்த்ததும்.
அவரும் விஷாவின், சிகை வருடி, மகளே என்று கட்டி கொண்டார்.


"விஷா மா, வா டா செல்லம், இவன் வந்த அப்போவே, உனக்கும் தெரிய வரும்ன்னு நினைச்சேன்," என்று அன்புவை பார்த்து கொண்டே, மகளை கை பிடித்து அழைத்து, அவருக்கு அருகில் மகளை அமர செய்தார்.
மற்ற நபர்கள், அதாவது, தீபிகா, அமர் மற்றும் ராகுல், அவர்களின் மனைவிமார்கள், ராஜா சேகருக்கு எதிர் இருக்கையில் அமர்ந்தனர்.
அனைவரின் கண்ணிலும், அப்படி ஒரு திமிர்.
இரண்டு பிள்ளைகளுக்கும் திருமணம் முடிந்து, மருமகள்கள், பேர பிள்ளைகள், என்று அனைவரும் அங்கு கூடி விட்டனர்.


அன்று அன்பு எதுவும் கவனிக்கும் நிலையில் இல்லை.
இது போல், என்றாவது, தன் அன்னை, ராஜா சேகருக்கு முன் அமர்ந்து இருக்கிறாரா, இல்லை அமர தான் முடியுமா .
இன்று தான், அனைவரயும் பார்த்தான்.
அதில் தீபிகாவின், உடை, நகை, எல்லாம் பார்த்து, அவன் முகம் இறுக்கத்தை தத்தெடுத்தது .
"அன்பு, உன் அப்பன், ஊரோடு சேர்ந்துட்டான், போல, இந்த ஊர் ஆளுங்க போல, டிரஸ், நெற்றில நீட்டா பொட்டு," என்று பேசி கொண்டே,


அன்புவை பார்த்தான் வினோத் .
அவனின் கோவம் கண்டு, "அன்பு" என்று மெல்ல அழைத்ததும் .
"எங்க அம்மாவுக்கு, இந்த சமுதாயத்துல விதவைன்னு பட்டம் கொடுத்துட்டு, இங்க எவ்வளவு சந்தோஷமா இருக்கான் பாருங்க மாமா."


"இவனுக்கு சின்ன குற்ற உணர்ச்சி கூட இல்லையே."
வினோத்தும் அதை கவனித்தான், தீபிகா, நெற்றி வகிட்டில் குங்குமம் அணிந்து, அந்த ஊரு மக்கள் போல் உடை அணிந்து பாந்தமாக இருந்தார்.
ஆனால் அவர் கண்ணில் திமிர் தெரிந்ததோ, என்று நினைக்கும் அளவிற்கு அவர் பார்த்து கொண்டிருந்தார்.
விஷாகாவும் இதனை கவனித்தாள் .


"ஹ்ம்ம் பேசுங்க!" என்று மனைவியின் கட்டளையில், ராஜ சேகர் வாய் திறந்தார்.
"டேய், இங்க இந்த ஆளோட லட்சணம் பார்த்துக்கோ டா," என்று வினோத்து அன்பு காதில் கிசுகிசுத்தான் .
அவனுக்கு வியப்பாக இருந்தது.
ராஜ சேகரின் எதிரில் யாரும் பேசி விட முடியாது, இங்கு, அப்படியே நேர் எதிர் .
"மனையின் அனுமதிக்கு பிறகு, மனம் திறந்தார் மகளிடம்.
"எனக்கு, படிக்கும் போதே, தீபிகாவோட விருப்பம் மா, வீட்டுல அப்பா சம்மதிக்கலை."
"சரின்னு, நான் இங்கேயே கல்யாணம் செய்துட்டு, இருந்துட்டேன்."
"இங்க வேலை பாற்குறதா பொய் சொல்லிட்டு, இங்கேயே இருந்தேன்."
"சுமதிய கல்யாணம் செய்துக்கிட்டா, தொழிலுக்கு பணம் கொடுக்குறேன்னு, சொன்னாரு."
"உன் பெரியம்மா, எனக்கு பிடிக்கலைனாலும், கல்யாணம் செய்துக்க சொன்னா ."
"எனக்கு தீபிகாவ தவிர எதுவும் பெருசா தெரியல, ஆனா உன் பெரியம்மாக்கு பணம் பெருசா தெரிஞ்சுது."
"அவ வற்புறுத்தல்ல எனக்கு விருப்பமே இல்லாம கல்யாணம் நடந்துச்சு, சுமதியோட ."


"நீ பொறந்த பிறகு தான், எல்லா சொத்தும், உங்க தாத்தா எனக்கு எழுதி தந்தாரு ".
"நீ என் அம்மா டா, நீ பொறந்ததும், உனக்காகவே அங்க வர ஆரம்பிச்சேன்."
"அப்பவே எல்லா பணம் என் கைக்கு வந்துடுச்சு, அந்த ஊரு பக்கம் வர தேவை இல்லை தான்."
"ஆனா, நீ குழந்தையா, இருக்கும் பொது உன்னை விட்டு வரவே எனக்கு மனசு இல்லை ."
"உன் முகம், என்னை துரு துருன்னு பார்க்குற உன் கண்ணு, ஏதோ நான் தான் உனக்கு எல்லாம் அப்படிங்குற போல, நீ என்ன கொண்டாடுவ."
"அதுனால், உனக்காவே அடிக்கடி, சென்னை வந்துட்டு போவேன்."
"எல்லாருக்கும், இங்க தான் என் தொழிலுன்னு நம்ப வெச்சேன்."


"உனக்கு ஒரு கல்யாணம் செய்ததும், ஒருத்தர் கையில ஒப்படைச்சதும், இந்த இரட்டை வேஷத்தை கலைக்கணும்ன்னு தோணுச்சு."
"அதே நேரத்தில், அங்க இருக்கும் நம்ம கடையும் நான் உருவாக்குனது தான், எனக்கு அங்க இருக்கும் ஒரே பற்று நீ மட்டும் தான்."
"அதான் எல்லாம் உன் பேருல மாத்திட்டு, இங்க வந்து, ஆக்சிடெண்ட்டுன்னு ஒரு நாடகம்."
"உனக்கு ஒரு நல்லது செய்துட்டு தான் டா, நான் இப்படி பண்ணேன் ," என்ன ஒரு நியாயம், அவரிடம் என்று தான் தோன்றியது, அன்புவிற்கு .
"அந்த சுமதி எல்லாம் எனக்கு தேவையே இல்லாத ஒன்னு, டா, இன்னும் எத்தனை காலத்துக்கு, நான் அங்க வந்து அந்த பட்டிக்காட்ட பார்த்துட்டு போக முடியும் சொல்லு ."


அன்புவுக்கு இருந்த பொறுமை சிறிது சிறிதாக குறைந்து கொண்டே வந்தது .
வினோத், பிரச்னை வேண்டாம் என்று அன்புவுடனே இருந்து கொண்டான் .
"இங்க பாரு மா, உங்க அப்பாவுக்கு உன் மேல ரொம்ப பாசம் , என் பசங்க மேல கூட அவ்வளவு இல்லை, ஏதோ உனக்காக, அங்க ஒரு வீடு, கடைன்னு எல்லாம் கொடுத்து இருக்காரு ."
"நீ ஏதோ பார்க்கணும்ன்னு சொன்ன, பார்த்தாச்சு இல்லை ."
"இதோட விடு மா, எங்க வாழ்க்கையை நாங்களும் பார்க்கணும் ."
"இனியும் அப்பான்னு சொல்லிக்கிட்டு வராதா, இங்கேயும் மருமகிழுங்க இருக்காளுங்க, அப்பறோம் ஒரு பேச்சு வர கூடாது," என்று தீர்மானமாக கூறினார்.


முணுக்கென்று கண்ணீர் விஷாகாவின் கண்களிலிருந்து.
இதுவரை யாரும் அவளிடம் இப்படி பேசியது இல்லை.
தந்தையும் தாயும், அவர்களின் நேசம், பணம், அரவணைப்பு எல்லாம் தனக்கு மட்டுமே என்று நினைத்தவளால், இன்று அவளுக்கு முன்பே ஒரு குடும்பம், மூத்தவர்களாக இரண்டு அண்ணன்கள், முக்கியமாக உயிரினும் மேலாக கருதும், தந்தையோடு உறவு கொண்டதுவது கூடாது, என்று கூறி விட்டனரே என்று அழுதாள் .


"விஷா எதுக்கு அழுற, போதும் இந்த திரோகிய பார்த்தாச்சு தானே வா கிளமபலாம்."
"மாமா" என்று மரியாதையுடன் அழைத்த மருமகனிடம் இருந்து இப்பொழுது கிடைத்த அழைப்பில் முகம் கன்றினார் ராஜ சேகர்.
மகள் அழுவது பொறுக்காது,"விஷா மா, உன் பெரியம்மா பேசியதும் வருந்தாத, நீ மட்டும் எப்போ வேணம்னாலும் என்னை வந்து பார்த்திட்டு போ ."


"ஆனா, இவங்க உறவு எதுவும் வேண்டாம்ன்னு தான் இங்கே இருக்கேன், இவங்க யாரும் வர கூடாது" என்று அன்புவை கை காட்டி கூறினார்.
"ஆமா, இவர் மேல அப்படியே எங்களுக்கு பாசம் பொங்குது, உன்னை பார்க்க வேற வந்துட்டு போறோம், அக்கா பார்த்தல்ல, என்ன சொல்லணுமோ சொல்லிட்டு வா," என்று கண்னசைத்தான் அன்பு.
அதில் அன்புவை ராஜசேகர் முறைத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது என்று புரிந்து, அமைதியானார் ராஜசேகர் .


பிறகு தம்பி கூறியதும், கண் துடைத்து, "வாங்க அப்பா நம்ம வீட்டுக்கு போகலாம் ."
"என்ன, ஏன் மா என்ன சொல்றேன்நான், நீ என்னவோ ," என்று தீபிகா பேச்சை நடுவில் நிறுத்தி விஷாகா,
"பெரியம்மா, எனக்கு எங்க அப்பா இருக்காருன்னு தெரிஞ்சும் அவரை பார்க்காம எல்லாம் இருக்க முடியாது."
அவள் உறவுடன் அழைத்து பேசும் பாங்கு குடும்பத்தாரை கவனிக்க வைத்தது .


"நியாயமா, இந்த ராஜ் குடும்பத்து மருமக நீங்க தானே, அப்பா சேர்த்து வெச்ச, கடை, இப்போ நாளா பெருகி இருக்கு, இதுக்கு எல்லாம் நியாயமான வாரிசு, நீங்க இரண்டு பேரும் தானே ,என்றதும் மகன்கள் கண்களில் மின்னல் .
விஷாகவும் அன்புவும் எதிர்பார்த்து வந்த வேலை இவ்வளவு சீக்கிரம் முடியும் என்று இருவரும் எதிர்பார்க்கவில்லை.


அவர்களின் அமைதியை சாதகமாக்கி கொண்ட விஷாகா, "என்ன யோசிக்கிறீங்க பெரியம்மா, எனக்கு எங்க அப்பா கூட இருந்தா போதும்."
"அந்த வீடு, கடை எல்லாம் இரண்டு அண்ணா, பேர்ல எழுதி தரேன் ."
"எதுக்கு, நீங்க சம்மந்தமே இல்லாதவங்க போல, இங்க ஒளிஞ்சி இருக்கனும் ."
"இப்போ வரை,எங்க ஊர்ல, நீங்க யாருன்னே தெரியாது."


"இப்படியே, ஏதோ தலைமறைவான வாழ்க்கை தான் உங்களுக்கு வேணுமா?"
" இங்க அப்பா, வேற பெயர்ல, வாழ்ந்துகிட்டு இருந்தாலும், அவர் பூர்வீகம் இது இல்ல ," என்று நன்றாக குழப்பினாள் .
தீபிக்கா, குழப்பத்தில் இருந்தார் என்றாலும், மகன்கள் இருவரும் பணத்தாசையில் இருப்பதை கண்டு விஷாகாவிற்கு, மனதில் குதூகலமாக இருந்தது.
தலையும் புரியாமல், வாலும் புரியாமல், குழப்பத்தில் இருந்தது என்னவோ, வினோத் தான்.


"அம்மா, என்ன யோசிக்குற, அவங்க பாசக்கார பொண்ணே இப்போ, நமக்கு எல்லாம் தரும் போது, இன்னும் ஏன் நீங்க யாருன்னு தெரியாம இருக்கனும்."
"டேய், வேண்டாம் டா, நமக்கு எல்லாம் இருக்குதே," என்று ராஜசேகர் .
"நீங்க சும்மா இருங்க பா, என்ன தான், எல்லாம் இருந்தாலும், பரம்பரை, வீடு, தொழில்ன்னு நியாயமா எங்களுக்கு தானே வரணும்."
"எங்க அம்மாவை தானே முதல்ல கல்யாணம் செய்தீங்க."
"ஆனா, ஊருக்கு, ராஜா சேகர் பொண்டாட்டின்னா, சுமதி தான் சொல்றாங்க, இப்போ, நான் தான மூத்தவன், எனக்கும் தம்பிக்கும் சட்ட படி எல்லாம் சேரனும்."
முதன்மை ஆசை, இவனுக்கும் இருக்கிறதா, என்று தான் விஷாகா இரு ஆண்களையும் பார்த்தாள் .


"அம்மா, என்ன யோசிக்கிற, நமக்கு கிடைக்க வேண்டிய அந்தஸ்து, பெயர், புகழ் எல்லாம், இப்போ தான் நம்ம கைக்கு வர காத்திருக்கு ."
"நீ எதுவும் யோசிக்காத, ஜம்முன்னு, அங்க போய் அந்த வீட்டு மருமகளா இருப்பியா," என்று இரண்டாம் மகனும் அன்னைக்கு, மூளை சலவை செய்து கொண்டிருந்தான்.
அதில் தீபிகாவும் சரி என்பது போன்று மகன்களை பார்த்தார்.


"டேய் உங்களுக்கு அறிவு இருக்காடா, இத்தனை வருஷம் கழிச்சி அங்க போனா என் பேரு கேட்டு போகாதா," என்று என்ன பேச்சு போல் மகன்களை அடக்கினார்.
"ஆமா, அவனவனுக்கு எவ்வளவோ பிரச்சனை, உங்களை தான் வந்து எல்லாரும் கேள்வி கேட்க போறாங்க." "ஏன் பா, எங்களுக்குன்னு கிடைக்க வேண்டிய எல்லாம் இத்தனை வருஷம் யாரோ அனுபவிச்சாங்க, இப்போ, தான் அதுக்கான நியாயமான அங்கீகாரம் எங்களுக்கு வருது அது பொறுக்கலையா உங்களுக்கு."


"டேய் ராகுல், இங்க, நம்ம பைனான்ஸ உன் மச்சானை பார்த்துக்க சொல்லு, நீ இரண்டு கடை, நான் இரண்டு கடை பார்த்துக்கலாம், வீடு எங்க அம்மா பேர்ல, எழுது, விஷாகா ."
"இது எல்லாம், உங்க தாத்தா, உயிரோடு இருந்து, எங்க அம்மாவுக்கு கிடைக்க வேண்டிய மரியாதை, என்ன செய்றது,ஹ்ம்ம் " சலிப்புடன் அமர் .
இதில் இன்னும் கொந்தளித்த, அன்பு, நினைத்தது கை கூடி வரும் நேரம், நாம் அமைதியாக இருக்க வேண்டும் என்று அமைதி ஆனான் ."


முதலில் இக்குடும்பத்தை அங்கு சென்னைக்கு வர வைப்பதே முதல் வேலை, என்று பொறுத்தான் .
விஷாகா அனைத்துக்கும் சரி என்று சம்மதம் கூறினாள் .
விஷாகா, வேறு இவர்கள் கேட்பதற்கு எல்லாம், சம்மதம் கூறுவது, வேறு வினோத்திற்கு மண்டை குடைச்சலாக இருந்தது .
"சரி விஷாகா, நீ இவ்வளவு சொல்ற, உனக்காக தான் உங்க அப்பாவ, அங்க முன்னாடியும் அனுப்பனும், இப்போவும் உனக்காக, அங்கே வரோம்."
"டேய் இது அநியாயம் டா, ஏதோ இந்த அம்மா, விஷா கேட்டதால், அங்க சென்னைக்கு வந்து தங்குறதா, என்ன பொய் சொல்லுது," என்று வினோத் .
"பரம்பரை வீட்டு மேல கண்ணு, அதை டிராக்ட்டா கேட்காம, என்ன மனுஷங்க இவங்க எல்லாம் ச்சே," என்று வினோத், இங்கிருக்கும் பொழுதை வெறுத்தான் .
"ஆனா, அந்த சுமதி, வேற யாரும் இவர் கிட்ட உரிமை கொண்டாடிகிட்டு வர கூடாது சொல்லிட்டேன்," என்று தீபிகா, விஷாகாவிடம் எச்சரிக்கை செய்து கொண்டிருந்தாள் .


விஷாகா, அன்பு இருவருக்கும் கோவம் தான்.
அன்பு மட்டும் "எங்க அம்மா, இந்த மாதிரி ஒரு ஜென்மத்தை எல்லாம், மதிச்சதே இல்லை, இதுல இவன் கூட உரிமை வேற எடுத்துப்பாங்க ."
"யாரவது அசிங்கத்தை, உரிமை கொண்டாடிட்டு வருவங்களா," என்றதும் தீபிகாவிற்கும்,அவன் பேச்சிற்கு பதில் கொடுக்க முடியாமல் தலை குனிந்தார்.
"அன்பு நான் பேசுறேன்ல, சும்மா இரு," என்று விஷாகா அமைதி படுத்தினாள் .


"பெரியம்மா, யாரும் அப்பாவை அங்க எதிர்பார்கல, அதுனால், உங்களுக்கு எந்த தொந்தரவும் இருக்காது." "நான் உங்களுக்கு கிடைக்க வேண்டிய சொத்துக்களை, மட்டும் தான் உங்களுக்கு தரேன் சொன்னேன்."
"எனக்கும் இனி அது வேண்டாம், எங்க அப்பாவ, மட்டும், நான் அடிக்கடி வந்து பார்ப்பேன் ."


"நான் சாகும் வரை, என் அப்பா என் கூட இருக்கனும்," என்று கண் கலங்கினாள் .
இனி குடும்பத்தாரும், சம்மதம் கூறிய பின், ராஜசேகருக்கு அங்கு சென்னை செல்வதில் பயம்.
ஆனால் அவர் குடும்பத்தை மீறி, ஒன்றும் செய்ய முடியாது.
மனைவி மகன்கள் ஆசை அறிந்ததே .
அவர்களிடம் விடை பெற்று, மூவரும் வெளியே வந்தனர் .


"இரண்டு பேரும் நில்லுங்க, என்ன தான் நடக்குது, "
"எதுக்கு இப்போ இந்த குடும்பத்தை, சென்னை வர வைக்கணும்ன்னு சொல்றீங்க ," வினோத், விஷாகா மற்றும் அன்புவிடம், கேள்வி எழுப்பினான் .


"அதற்கு விஷாகா சிரித்தாள், என்றால் அன்புவும் சிரிப்புடன், "என்ன மாமா, நம்ம ஊருக்கு, செத்தவன உயிரோடு வர வைக்கிறது என்ன, சாதாரண விஷயமா,"
"இறந்து போனதா நாடகம் போட்டான், அவனுக்கு இறந்த பிறகு, நரகம் எப்படி இருக்கும்ன்னு காட்ட வேண்டாம் " என்று அன்பு கூறியதும் வினோத்துக்கு புரிந்தும் புரியாத நிலை .


 

Lakshmimurugan

Well-Known Member
இரண்டு பேரும் சேர்ந்து ஏதோ ப்ளான் போட்டு இருக்கிறார்கள் நடக்கட்டும் அப்போதாவது சுமதிக்கு நியாயம் கிடைக்கட்டும்.
 

achuma

Well-Known Member
இரண்டு பேரும் சேர்ந்து ஏதோ ப்ளான் போட்டு இருக்கிறார்கள் நடக்கட்டும் அப்போதாவது சுமதிக்கு நியாயம் கிடைக்கட்டும்.
:)Thanks sis
 

Saroja

Well-Known Member
அக்கா தம்பி ஏதோ பெரிய
திட்டம் போட்டு அப்பன அவன்
குடும்பத்த வரவழைக்கறாங்க
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top