அன்பின் இனியா 23 2

Advertisement

achuma

Well-Known Member
All take care
be safe friends

சரண் அதிதி தம்பதி, அவர்களின் திருமணத்திற்கு பிறகு, தனி உலகில் வாழ்ந்தனர் என்றே கூறலாம்.
இருவரும் காதல் பறவைகளாக அவர்கள் வானில் பறந்தனர்.
சந்திராவுக்கு, அதிதி மருமகளாக வந்ததில் அப்படி ஒரு மகிழ்ச்சி .
மகனின், வாழ்க்கையை சிறந்த இடத்தில ஒப்படைத்த மகிழ்ச்சி அவருக்கு.
ஒரே மகன் அவனின் வாழ்க்கை எப்படி இருக்குமோ என்ற பயம் இப்பொழுது இல்லை.


அன்புவின் வளர்ப்பு பொய்யாகாது என்னும் அளவிற்கு, அவள் சந்திராவிடம் நல்ல மருமகளாக, சிறந்த குடும்ப தலைவியாக இருந்தாள் .
நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவள் அன்னை வீட்டிற்கு சென்று வந்தாள் உடன் சந்திராவுடன்.
சரண், இங்கு சென்னையிலே நல்ல வேலையில் சேர்ந்து விட்டான் .
இப்பொழுது எல்லாம், சுமதிக்கு அவரின் பேரன் மற்றும் தோட்டத்துடனே, நேரம் சரியாக இருந்தது.
விஷாகாவின் கோவம் அறிந்து, சுமதி ஏதோ அவளிடம் சமாதானமாக பேசுவார் என்று எதிர்பார்த்து ஏமாந்த விஷாகா, அவளாகவே இறங்கி வந்து, அடிக்கடி அன்னையை பார்த்து சிறிது நேரம் இருந்து விட்டு செல்வாள் .


ஆனால், முன் போல், அதிகாரமோ, அதட்டலுடனோ யாரிடமும் பேசுவதில்லை.
அவள் பேச்சு எல்லாம் அவள் அன்னையிடம் மட்டுமே இருக்கும்.
அங்கு இனியா, அவளை வரவேற்று, உபசரித்தாலும், இது அவளின் கடமை என்று இருந்து விடுவாள்.
மறந்தும் இனியாவின் வரவேற்புக்கு, எந்த மதிப்பும் கொடுக்க மாட்டாள் .
நாட்கள் இப்படியே சென்று, குழந்தை ஆதவும் இப்பொழுது ஒன்பது மாத தொடக்கத்தில் இருந்தான்.
இப்பொழுது தான், சரியாய் நிற்க ஆரம்பித்து இருக்கும் நேரம்.


அன்று அன்பு அவன் வேலைக்கு கிளம்பும் நேரம் அவனின் கால் சட்டையை பிடித்து கொண்டு, எழுந்து நின்று ஒரு அடி அவனுடனே நடந்தான்.

அதனை கவனித்து மகிழ்ந்து போன அன்பு மகனை தூக்கி முகம் எங்கும் முத்திரை பதித்து, "தங்க குட்டி நடக்குமா உங்களுக்கு, சூப்பரா என்னோடயே நடக்குறீங்களே," என்று கொஞ்சி விட்டு, அன்னையிடமும் மனைவியிடமும் மகன் அவன் ட்ரெஸ்ஸை பிடித்து கொண்டு ஒரு அடி நடந்து விட்ட மகிழ்ச்சியை தெரிவித்தான்.
இன்னும் கூடுதல் கவனமாக குழந்தையை கவனித்துக்கொள்ளுமாறு இருவரிடமும் கூறிவிட்டு, வேலைக்கு சென்றான்.


நாதன் வீட்டினில், ரேஷ்மிக்கும் அவர் தொழிலில் ஒரு பங்கு கொடுப்பது பற்றி, அன்று உணவு வேலையில் நாதன் தெரியப்படுத்தினார்.
அதற்கு தேவகி, "முதல்ல பொண்ணுக்கு கல்யாணம் செய்ங்க, அதை விட்டுட்டு, வேலை, கம்பெனி இதை பற்றியே பேசிகிட்டு, வேணும்ன்னா, ரேஷ்மிக்கு கல்யாணம் செய்துட்டு, வர மாப்பிள்ளைக்கு, அந்த பங்கை கொடுங்க."


பலநாள், மகளுக்கு திருமணம் சீக்கிரத்தில் நிகழ்த்த வேண்டும் என்னும் அவரின் ஆசையை இந்த நேரத்தில் அவர் கூறி விட்டார்.
ஏற்கனவே மகளுக்கும் ஒரு பங்கு கொடுப்பது பற்றி நாதன் பேசியதில் கோவத்தில் இருந்த விஷாகா, இப்பொழுது தேவகி சும்மாயில்லாமல் வரும் மாப்பிளைக்கு கொடுக்குமாறு கூறியதில் வெகுண்டு விட்டாள் .


"மாமா, இது என்ன, பொண்ணுக்கும் பரம்பரை தொழில்ல பங்கு கொடுக்குறதுன்னு," என்று தயக்கமாகவே ஆரம்பித்தாலும் கேட்டு விட்டாள் .
வினோத் ஒரு மகன் தான் , மகளுக்கு திருமணம் சீர் செய்து அனுப்புவது மட்டும் தான், சொத்து அனைத்தும் வினோத்திற்கு, என்று இருந்த அவள் கனவு கோட்டை களைவதில் அவளுக்கு பெரும் ஏமாற்றம்.
வினோத்திற்கு இந்த கேள்வியில் மனைவி மீது கோவம் வந்து "ஹே உனக்கு என்ன பிரச்னை இப்போ, எங்க அப்பா அவர் சம்பாத்தியம், அவர் யாருக்கு கொடுக்கணும்ன்னு நினைக்கிறாரோ, கொடுப்பாரு."
" உனக்கு எதுக்கு இந்த தேவையில்லாத விஷயம் எல்லாம்."
"என்னவோ உன் பணத்தை எடுத்து கொடுக்குறது போல, பேசுறே, உன் வீட்டுல அதிகாரம் செய்றது போல, இங்க வேண்டாம், " என்று மனைவியை எச்சரித்தான்.
அதில் முகம் கருத்து நின்றாள் விஷாகா என்றால், நாதனும் தேவகியும் அவளிடம் இப்படி ஒரு மறுப்பு வரும் என்று எதிர்பார்க்காமல் அதிர்ச்சியில் இருந்தனர் .
ரேஷ்மி மட்டும், இதை எதிர்பார்த்தேன் என்பது போல், வீட்டினரை பார்த்து கொண்டிருந்தாள் .


அவள் இப்படி பேசுவாள் என்று வினோத்தும் எதிர்பார்க்கவில்லை.
இவளோடு சேர்ந்து தந்தை தன்னையும் தவறாகவே நினைப்பாரோ, என்ற தவிப்பு அவனிடம்.

மகனின் வேதனை முகம் கண்டு, நாதன் அவன் தவிப்பு உணர்ந்தாரோ, என்னவோ, வினோத் "அப்பா" என்றதும், பொறு வினோத், என்கிட்டே தானே மருமக கேள்வி கேட்டா, நீ ஏன் பதட்ட படுற, நானே ஹாண்டில் பண்றேன், "அவர் அழுத்தமாக கூறியதில் வினோத் புரிந்து கொண்டான், அவரின் கோவத்தை.
"எதுக்கு மா நான் பரம்பரை தொழில்ல ரேஷ்மிக்கு பங்கு கொடுக்க வேண்டாம்ன்னு சொல்றே?"


விஷாகா எப்பொழுதும் பேச நினைப்பதற்கு தயங்கியது இல்லை.
அவளுக்கு ஒன்று தேவை என்றால், எந்த எல்லைக்கும் பேசுவாள் .
அந்த தைரியத்தில், இன்று யாரிடம் பேசுகின்றோம், என்ற மரியாதை இன்றி, மாமனாரிடம் மறுப்பு தெரிவித்தாள் .
இப்பொழுது ஏன் தான் கேட்டோம் என்று வருந்தும் அளவிற்கு அவள் நிலை வரும் என்றால், கேட்டே இருக்க மாட்டாள் .


"நான் கேட்டதுல தப்பா மாமா, இவர் எதிர்காலத்துக்கு தானே நான் சொல்றேன்," என்று மாமனார் ஊக்குவித்த தைரியத்தில் கணவன் திட்டியதையும் சேர்ந்து மீண்டும் கேள்வி கேட்டாள் .
"நான் தப்புன்னு சொல்லல மா, இவன் எதிர்காலத்துக்கும், நான் ரேஷ்மிக்கு ஷேர் கொடுக்குறதுக்கும், என்ன சம்மந்தம் இருக்குன்னு, நீ என்ன நினைக்கிறேன்னு எனக்கு சொல்லு மா."


ரேஷ்மியும், தந்தையின் கோவம் புரிந்து, "அப்பா, இப்போ எதுக்கு இது எல்லாம் விடுங்க பா, நமக்கு டைம் ஆச்சு, கிளம்பலாம், அண்ணா, வா," என்று அண்ணனையும் துணைக்கு அழைத்தாள், அப்பா விஷாகாவிடம் ஏதேனும் கோவத்தில் பேசிவிடுவாரோ என்று.
உடனே, தேவகி, "ரேஷ்மி நீ சும்மா இரு, அப்பா பேசும் போது அது என்ன குறுக்க பேசுறது, பெரியவங்கன்னு உன் அண்ணிக்கு மரியாதை தெரிய வேண்டாம், விடு அப்பா என்ன பேசனுமோ பேசட்டும் ," அவருக்கும் கணவனின் முகத்தில் கோவம் இல்லை என்றாலும், இத்தனை வருடம் வாழ்ந்த அனுபவம், அவருக்கு தெரியாதா கணவனின வார்த்தையின் அழுத்தத்தில், அவரின் கோவத்தினை உணர்ந்தார்.


அவருக்கும் விஷாகா மீது கோவம், தன் மகளுக்கு கொடுப்பதற்கு, இவள் என்ன சொல்லுவது என்ற ஆதங்கம்
விஷாகாவிற்கு, மாமியார் இப்படி பேசியதில் அவளுக்கும் அதிர்ச்சி.
இதுவரை தேவகி மருமகளை, திட்டியது இல்லை.
இன்று பிள்ளை பூச்சி என்று நினைத்திருந்த தேவகியிடம் இருந்து இப்படி ஒரு கோவத்தை அவள் எதிர்பார்க்கவில்லை.


அவரை கண்டுகொள்ளாமல், "பொண்ணுக்கு கல்யாணம் செய்து கொடுக்கு போறோம், அப்பறம், வருஷா வருஷம் எல்லா சீரும் நம்ம தானே மாமா செய்யணும், உங்களுக்கு பிறகு வினோத் தான் அந்த கடமையை செய்யணும், அதுக்கு எல்லாம் இவருக்கு செலவாகும் தானே."
"நம்ம தனியா, எதுக்கு மாமா ரேஷ்மிக்கு ஷேர் தரணும், அது தான் கேட்டேன், அப்பறம் எங்களுக்கும் இரண்டு பசங்க இருக்காங்க, என்ன தான் இவர் பேருல தனியா கம்பெனி இருந்தாலும், பரம்பரை தொழில் முழுக்க, பையனுக்கு வந்தா தானே, எங்களுக்கும் மதிப்பு,"
"அதுல, ரேஷ்மிக்கு பங்கு கொடுத்தா, நாளைக்கு அவ கல்யாணத்துக்கு பிறகு, இதுனால, ஏதாவது, பிரச்னை வந்தா "


"இவளுக்கு வர போற லைப் பாட்னர் எப்படியோ," விஷாகா மனதில் என்ன இருந்ததோ, ஏதோ மகளுக்கு சாபம் இடுவது போல், தேவகி உணர்ந்தார், விஷாகாவின் வார்த்தையில் .
"அவ லைப்க்கு என்ன, என் பொண்ணு தேவதை, அவளுக்கு நாங்க நல்ல லைப் அமைச்சு தருவோம், அதே போல கம்பெனில பங்கும் தருவோம்," இவ்வளவு நேரம், பங்கு தருவது பற்றி வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது, ஆனால் இம்முறை ஸ்திரமாக, மருமகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தேவகி, கண்டிப்பாக மகளுக்கு பங்கு கொடுத்தே ஆக வேண்டும் என்று உறுதியாக அவளிடம் கூறினார்.
இதில் விஷாகா இன்னும் கோவம் அடைந்து, "அத்தை , இது என்ன, வீட்டுல புதுசா, பெரிய விஷயத்தை எல்லாம் நீங்க முடிவு பண்றீங்க, கம்பெனி பற்றி உங்களுக்கு என்ன தெரியும்" என்றதும், அவ்வளவு தான், தன் முன்னே, மனைவியை மதிப்பில்லாமல் பேசியதும், நாதனனுக்கு கோவம் வந்து விட்டது.


"உனக்கு என்ன தெரியும், நீ பேசுறே, எது, பையனுக்கு தான் பரம்பரை சொத்து போகணுமா, அப்போ, உங்க அப்பா, ஏன் மா அவர் பரம்பரை தொழில், அப்படியே, அன்புவுக்கு கொடுக்காம, உனக்கு தந்தாரு."
"எங்க காலத்திற்கு பிறகு, நீ என் பொண்ணுக்கு செய்வேன்னு எங்களுக்கு நம்பிக்கையே இல்லைம்மா, இப்போ உன்னோட குணத்தை நாங்க நல்லா தெரிஞ்சிக்கிட்டோம்."


"உன் கடை விஷயத்திலோ, உங்க வீட்டு விஷயத்திலோ, நாங்க தலையிடுறோமா, இல்லை தான, அதே போல, நல்லா கேட்டுக்கோ, என் சம்பாத்தியம், என் முடிவுகள்ல நீ தலையிடாத."
உன் புருஷன் கம்பெனில, பங்கு கொடுக்குறேன்னு, சொன்னா நீ கேட்கலாம்."
"எப்படி எப்படி, உங்க அப்பா மாதிரி ஒரு பிள்ளைக்கு மட்டும், எல்லா செய்துட்டு மற்ற பிள்ளையை அம்போன்னு விட சொல்றியா, " நக்கலாக சிரித்து கொண்டே கேட்டார் மனிதர்.
தன்னை ஒப்பிட்டு, தன்னையே தாக்கும் அவரின் அதிரடியில் விஷாகா மிரண்டாள் .


"என் பையனுக்கு திறமை இருக்கு, அவன் தொழில்ல எப்படி நிலைக்கணும்ன்னு அவனுக்கு தெரியும், அதுனால் பசங்க எதிர்காலத்துக்கு நீ பயப்பட தேவையில்லை."
"என் பொண்ணுக்கு, அப்பா, அண்ணனு, நாங்க இரண்டு பேரும் இருக்கோம், உனக்கு உங்க அப்பா பெஸ்ட்டா செய்த மாதிரி, நாங்களும் எங்க பொண்ணுக்கு, பெஸ்ட் லைப் கொடுப்போம் .
"என் மனைவி, எதுவும் தெரியாம, இல்லை."
" குடும்பம் ஒழுங்கா நடக்கணும்ன்னு அவ, கம்பெனி நிர்வாகம் செய்யாம வீட்டை நிர்வாகம் பண்றா."
"அந்த தைரியத்தில் தான் நீயும் உன் பசங்கள விட்டுட்டு கடையை பார்க்க முடியுது."


"அவ இந்த வீட்டுல பேசக்கூடாதுன்னா, வேற யாருமே இந்த வீட்டுல பேசறதுக்கு உரிமை இல்லை."
"நீ இவ்வளவு தூரம் பேசுறதுனால இப்போ சொல்றேன், பரம்பரை தொழில், மகனுக்கு தான் கிடைக்கனும், அதுனால, உங்க அப்பா கொடுத்த கடையை அன்புவுக்கு கொடுத்துட்டு, நீ வீட்டுல இரு."


"என் மனவினுக்கும் ஓய்வு தேவை, வீட்டுல இருந்து குடும்பத்தை பார்த்துக்கோ, முதல்ல, இந்த வீட்டு மருமகளா எங்க தேவைகள் செய், பிறகு உனக்கான அங்கீகாரம் தானா கிடைக்கும்," என்று பாதி உணவிலேயே எழுந்து விட்டார்.

"சொன்னது கேட்டதுல்ல, என் கம்பெனில கூட என் தங்கச்சிக்கு உரிமை இருக்கு, அதுல கூட நீ தலையிட முடியாது டீ ."
"இனியாவது, உன் மரியாதையை காப்பாத்திக்கோ," என்று கூறி விட்டு, வினோத், ரேஷ்மியுடன் எழுந்து, அலுவலகத்துக்கு சென்று விட்டான்.


இந்த அசிங்கத்தை ஏற்க முடியாமல், பெரும் கோவத்தில் விஷாகா இருந்ததாள்.
அவளுக்கு தேவகியின் பார்வை வேறு தன்னை துளைப்பது போலவே இருப்பதில், அங்கு இருக்க பிடிக்காமல், அவள் நேராக சென்றது சுமதி இல்லத்திற்கு தான் .


அங்கு சென்றால், தோட்டத்தில், சுமதி குழந்தியுடன் ஏதோ சிரித்து பேசி கொண்டிருந்தார் .
சுமதியின் உயரத்திற்கு வளர்ந்திருந்த மராத்தை பார்த்து, குழந்தையிடம் காட்டி "இந்த மரம் எப்ப வளரும்ன்னு கேளு டா பட்டு, என் தங்க குட்டி அதுல ஊஞ்சல் கட்டி விளையாடனும் ," என்று பேரனை கொஞ்சி கொண்டிருந்தார் .


மகள் வந்ததை கவனிக்காமல், பேரனுடன் ஐக்கியமாகி இருந்த அன்னயை கண்டு மேலும் கடுப்பாகினாள் .
சுமதி எந்நேரமும், இந்த தோட்டத்திலே குழந்தையை வைத்து சுற்றி கொண்டிருப்பது வேறு அவளுக்கு கோவத்தை கொடுத்தது .
எப்பொழுதும் "விஷா மா" என்னும் அன்னை, இப்பொழுது எல்லாம் தன்னை கவனிக்காதது போல் ஒரு உணர்வு.


அதற்கு காரணம் இந்த குழந்தையும், அவரின் கனவு தோட்டமும் என்று நினைத்து கொண்டாள் .
ஏன் அன்பு மட்டும்,ரேஷ்மியை, தான் கட்டளை படி திருமணம் செய்திருந்தால், ரேஷ்மி அவளுக்கு கட்டுப்பட்டு இருந்திருப்பாள் .
இப்பொழுது இந்த நிலையும் வந்திருக்காது, என்று இப்பொழுதும், இப்படியே யோசித்தாள் .
தன்னை திருத்திக்கொள்ளும் எண்ணம் அவளுக்கு என்றும் இல்லை.
அடுத்தவர் மீதே குற்றம் சுமத்தும் எண்ணம், அவளை என்றும் நிம்மதியாக இருக்க விடாது .


"ஹம்ம நல்லா இருக்கு, காட்டுல வீடு கட்டி கோட்டான காவலுக்கு வெச்ச கதையா இந்த வீட்டை சுற்றியே வந்துட்டு இருக்கே ,"
சத்தமாக விஷாகா பேசியதில், சுமதியும் மகளின்,பக்கம் திரும்பினார் .
அன்று விஷாகாவிற்கு நேரம் சரியில்லையோ, அல்லது, சுமதிக்கு புத்தி தெளிந்ததோ.


"யாரை மா, கோட்டான்னு சொன்னே," என்றதும்
விஷாகா என்று அவள் அன்னையை மதிப்புடன் நடத்தி இருக்கிறாள், அதிலும் இப்பொழுது உள்ள கோவத்தில் மேலும், அன்னையிடம் தன் கோவத்தை காட்டினாள் .
"பின்ன உன்னை தான், வேற யாரை சொல்ல போறேன், ஏதோ அதிசயமா, நீ தான் இந்த வீட்டையும் , தோட்டத்தையும் ஆளுறா மாதிரி, இடுப்புல இவனை வெச்சிக்கிட்டு சுத்தி வர ,"என்று சீறினாள்.
விஷாகாவை தவிர, அனைவரும் சுமதியிடம் மரியாதையுடன் பழகுவதில், அவருக்கு தனி ஒரு கம்பீரம் வந்து இருந்தது .
முன்பு போல் அனைத்துக்கும் தயங்குவதில்லை.
அவரின் நியாயமான விருப்பத்திற்கு, எப்பொழுதும் தயங்க கூடாது, என்று அன்பு மற்றும் இனியா அவருக்கு எடுத்து சொல்லி, அவரை சிறிது சிறிதாக அவரின் கூட்டில் இருந்து வெளி கொண்டு வருகின்றனர்.
ஆனால் உலகமே தன் மகள் தான் என்று இருந்தவருக்கு, விஷாகாவிடம் இருந்து எப்பொழுதும் ஒரு .
மதிப்பில்லை .
அதில் அவருக்கு இப்பொழுது எல்லாம் ஒரு வருத்தம் .


"நீ சொல்றது சரி தான், மா, நீயே உலகம்ன்னு, உனக்கு பிடிச்சவங்கள, எனக்கும் பிடிக்கும்ன்னு வாழ்ந்து வந்தேன்."
"உனக்கு ஒருத்தர் பிடிக்காதுன்னா, நானும் அவங்க கிட்ட இருந்து ஒதுங்கி இருந்தேன், உன்னையே வாழ்க்கையா நினைச்சு, நான், வாழ்ந்து வந்தா, நீ என்ன இப்படி தான் மரியாதை இல்லாம பேசுவ ," விரக்தி புன்னகை அவர் முகத்தில் .


"அம்மா, என்ன நான், உன்கிட்ட இப்படி தானே பேசுவேன், இப்போ என்ன, விஷாகவும் கோவமடைந்தாள் .
"நான் செய்த தப்பு அது தான் விஷா மா, உன்னை கண்டிச்சி வளர்த்து இருக்கனும்.
"இப்போ தான் தேவகி, போன் பன்னா, நீ பேசுனது எல்லாம், சொன்னா, "
"நீ மரியாதை இல்லாம, பேசும் போதே உன்னை கண்டிச்சி வளர்த்து இருந்தா, இப்போ, வாழ போன வீட்டுல, போய் அவங்களையும் ஒழுங்கா நடத்தி இருப்ப."
"எனக்கும் இந்த கெட்ட பேரு இருந்து இருக்காது."


"அதிதி பாரு, சந்திரா அப்படியே, புகழுறா.அதி குட்டி அவ்வளவு நல்லா அங்க குடும்பம் நடத்துறா ."
" அது தான், அன்பு வளர்தத்துக்கும், நான் வளர்த்த வளர்ப்புக்கு வித்தியாசம் ."

"தேவகி என்னை இது வரைக்கும் இப்படி பேசுனது இல்லை ."
"உன்னோடு சேர்ந்து நானும் அந்த ரேஷ்மி பொண்ணுக்கு ஒரு வகையில் அநியாயம் செய்து இருக்கேன்."
"இப்போ, நம்ம எதுவும் அவளுக்கு நல்லது செய்யனாலும் பரவாயில்லை."
"அவங்க அப்பா ஏதோ அவளுக்கு செய்யறதுல நீ எதுக்கு குறுக்கால வர ."
"செய்த பாவத்துக்கு, எனக்கு மனசு வேதனையா இருக்கு, உனக்கு நல்ல குடும்பம், வீடு வாசல், உன் பேருல ஒரு தொழில்ன்னு நீ நல்லா தானே இருக்கே."
"அப்பறம் ஏன் மா, உனக்கு இப்படி புத்தி, நீயும் இனி மாறு" என்று கூறி குழந்தையை வீட்டினுள் இனியாவிடம் விட்டார்.


"இனியா, பக்கத்துக்கு வீட்டு, ரேவதியோட, நான் கொஞ்சம் உர கடை வரைக்கும் போயிட்டு வரேன், ஆதவ் குட்டி, இன்னைக்கு நடக்க ஆரம்பிச்சதும், அங்க இருக்க செடியை கூட விடல ."
"அதை பிடிச்சிட்டு நடக்குறேன்னு இரண்டு முறை விழுந்துட்டான்."
"நீ தூக்கியே வெச்சிக்கோ, விஷா வெளியே இருக்கா, பார்த்துக்கோ" என்று கூறி விட்டு, மகளிடம் வெளியே வேலை இருக்கிறது என்று கூறி விட்டு, விஷாகாவை தாண்டி கண்டுகொள்ளாமல் சென்று விட்டார்.


இனி விஷாகாவிடம் இப்படி பேசினால் தான் உண்டு, அவள் வாழ்க்கையாவது, அவளுக்கு காப்பாற்றி கொள்ள தெரிய வேண்டும் .
இந்த கண்டிப்பும் இல்லை என்றால், அவள் செய்வது அனைத்தும், சரி என்றே சுற்றி கொண்டிருப்பாள், என்று காலம் கடந்து நினைத்து கொண்டார்.


மாமியார் கூறியதை கேட்டு, இனியா வெளியே வந்து,"வாங்க அண்ணி," என்று கூறி விட்டு, குழந்தையை தூக்கி வைத்திருந்தாள்.
அவளுக்கு, சுமதி, விஷாகாவிடம் பேசியது எதுவும் தெரியாது.


விஷாகா, அமைதியாக வீட்டிற்குள் நுழைந்து, அங்கு நாற்காலியில் அமர்ந்தாள் .
"இருங்க, காபி எடுத்துட்டு வரேன்," என்று குழந்தையை, கீழே அமர வைத்து விட்டு, அவள் சமயலறை சென்று விட்டாள் .


இனியா சென்றதும், குழந்தையையே பார்த்து கொண்டிருந்த விஷாகாவின் மனதில், பல எண்ணங்கள்.
அவள் தேவதையாக வளம் வந்த காலத்தில் இருந்து, இப்பொழுது, அனைவரும் அவளை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல் இருப்பது வரை நினைத்து கொண்டிருந்தாள்
பார்வை குழந்தை மீது இருந்தாலும், எண்ணம் அனைத்தும், அன்பு, இனியா, அதிதி, ரேஷ்மி என்று வலம் வந்தது.


குழந்தை இவளை நோக்கி பொக்கை வாய், சிரிப்பில்,
அங்கு சுவற்றை பிடித்து கொண்டு தத்தி தத்தி நான்கு அடி எடுத்து வைத்திருக்கும்.
அங்கு இருக்கும் வாசற்கால் கதவு கிட்ட வந்து, கைகளை அங்கு கெட்டியாக பிடித்து கொன்டு, இவளை பார்த்து சிரித்து கொண்டிருந்தான் .


அவ்வ்ளவு தான், எந்த பேய் அவள் மனதில் நுழைந்ததோ.
குழந்தையின் விரல் கதவின் இடுக்கில் நசுங்கட்டும், அதனால் அவன் வலியில் துடிக்கட்டும், அவனின் வலியில், அவன் பெற்றோர் துடிப்பர், என்று நினைத்தது அவளின் குரூர புத்தி.


கதவிடுக்கில் கை வைத்திருந்த குழந்தையின் விரல் நசுங்கும் அளவிற்கு கதவை லேசாக சாற்றினாள் .
தளிர் விரல் அல்லவா, இவள் சாற்றிய வேகத்தில், ஆள்காட்டி விரலின் நகம் சார்ந்த மேல் பகுதி நசுங்கி, அப்படியே நூலிழை அளவில் விரலோடு தொங்கி கொண்டிருந்தது .
குழந்தையின் அழுகை சத்தத்தில், இத்தனை நேரம் கவலையில் அலை பாய்ந்த அவள் மனது, சிறிது மட்டு பட்டது.


பெருங் குரலெடுத்து அழும் குழந்தையின் சத்தத்தில் பதறி அடித்து கொண்டு இனியா வந்து சேர்ந்தாள் .
அங்கு அவள் கண்டது, வலியில் துடிக்கும் குழந்தை, அதனை கண்களில் அப்படி ஒரு கோபத்துடன், இதழ் புன்னகையில் நிலைக்க, சிரித்து கொண்டே பார்த்து நின்று இருந்த விஷாகாவை தான் .


ஹாய் நட்புக்களே,எதுவும் மிகை படுத்தி எழுதவில்லை.
இது உண்மை சம்பவம்.
நான் ஏற்கனவே கூறி இருக்கிறேன் தானே, விஷாகா என்று உண்மை கதாபாத்திரம்.
இனி அடுத்து வரும் இரண்டு பதிவுகளும் உண்மை.
சென்ற பதிவிற்கு உங்களின் ஆதரவுக்கு மிகவும் நன்றி பிரெண்ட்ஸ் .
இந்த பதிவையும் படித்து விட்டு உங்களின் கருத்துக்களை கூறுங்கள்

















 

sumee

Well-Known Member
Acho, appove Vishakavikku counselling kuduthiruntha konjamavathu thirunthiyiruppalo. Chinna kuzhandhiyinnu parkkama ippadi pannittale.
 

Nagaspriya

Well-Known Member
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை அச்சுமா. நானும் என் வாழ்வில் இதுபோன்ற பெண்களை கடந்து வந்து இருக்கிறேன். அவர்கள் வக்கிர புத்தியும், சுயநல மும் இது போன்ற கொடுமைகள் செய்ய வைத்து விடும்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top