அன்பின் இனியா 22 4

Advertisement

achuma

Well-Known Member
உங்களின் ஆதரவுக்கு நன்றி நட்புக்களே
படித்து விட்டு உங்களின் கருத்துக்களை தெரியப்படுத்துங்கள் பிரெண்ட்ஸ்
All take care

Be safe dears
:)(y)

சரண் சென்னை விமான நிலையத்திலிருந்து நேராக அன்பு வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.
அங்கு சரண் இதுவரை வீட்டினுள் எல்லாம் வந்ததில்லை, இப்பொழுது, சரண் வந்திருப்பது அன்புவுக்கு மகிழ்ச்சி . நண்பனை கட்டி கொண்டு," எப்போ டா வந்த, எப்படி இருக்கே ." என்று வரவேற்றான் .
"அன்பு இது உன் வீடுன்னு தான் உள்ள வந்து இருக்கேன்," என்று சுமதியை பார்த்து கொண்டே கூறினான் சரண் .
தன் மகளை சரண் திருமணம் செய்து கொண்டால் போதும், தான் ஒதுங்கியே இருந்து கொள்ளவது,நல்லது என்று சுமதி கருதி, சரணை வாங்க என்ற அழைப்புடன் வரவேற்று நிறுத்தி கொண்டார்.
புதுசா மரியாதை தராங்க , என்று அன்பு நினைத்தாலும், ஒரு வருடம் கழித்து வந்திருக்கும் நண்பன் மீது கவனம் செலுத்தினான் .
"என்ன டா ஏதோ பதற்றமா இருக்கே, ஏதாவது பிரச்னையா சொல்லு, என்று நண்பனின் பதற்றம் சூழுந்த முகம் கண்டு கேள்வி கேட்டான் அன்பு .
"பிரச்சனை தான், அதிதிக்கு மாப்பிளை பார்க்கிறியா, என்னை விட்டு அவ எப்படி இன்னொருத்தனை கல்யாணம் செய்துக்க ஒத்துக்கிட்டா, நான் அதிய பார்க்கணும், மேடம் எங்க இருக்காங்க."
சரண் தங்கையை உரிமையுடன் அழைத்தது, அவனின் கோவம், வார்த்தையில் ஒலித்த ஏமாற்றம், என்று அன்பு சரணை கண்ணிமைக்காமல், பார்த்து கொண்டிருந்தான்
அவனுக்கு வார்த்தைகள் இல்லை.
இனியா தான் சுதாரித்து, "வாங்க அண்ணா, உங்க மேடம், மொட்டை மாடில இருக்கா, போய் பாருங்க," என்று அனுப்பி வைத்தாள் .
"ஹே என்ன நடக்குது இங்க"
சரண் ஒரு தலையசைப்புடன் மாடிக்கு சென்றான் .
"உங்க தங்கச்சியும் சரணும் லவ் பண்ணாங்க"
"இது எப்போ, உனக்கு முன்னாடியே தெரியுமா " என்ற அன்பு நே என முழித்தான் .
"இது வரை டௌட் இருந்துச்சு, இப்போ கன்பார்ம் ஆகிடுச்சு," என்று கூறி இனியா சிரித்தாள் .
இப்பொழுது சுமதி, அவருக்கு தெரிந்த தகவலை கூறினார் மகனிடம் .
எப்படி என்ற குழப்பத்தில் இருந்த அன்புவை கடந்து, சரண் எப்பொழுதோ மாடிக்கு சென்றான்.
இனியா தான்,சந்திராவுக்கு அழைத்து மேலோட்டமாக சரணின் வருகையை எடுத்து கூறி, சுமதியை, சந்திரா வந்ததும் பேச சொன்னாள் .
மாடியில், சரண் கண்டது, அங்கு இலக்கில்லாமல் எங்கோ வெறித்து கொண்டிருந்த அதிதியை தான் .
அதில் அவன் கோவம் சிறிது மட்டுப்பட்டது.
அதே நேரத்தில் அவளின் தோற்றத்தில் உள்ள மாற்றம் கண்டு வியந்தான்.
முன்பு கை கால்கள் எல்லாம் குச்சியாக, சிறு பெண் போல் இருந்த அதிதி, இப்பொழுது, பார்க்க சிறிது எடை கூடி, அவன் கண்ணுக்கு இன்னும் அழகாக காட்சியளித்தாள் .
"கும்முன்னு இருக்கா, எப்படி, ஒரு வருஷத்துல இவ்வளவு மாற்றம், ஐயோ, திட்ட வந்த நான் என்ன செய்துட்டு இருக்கேன்னு எனக்கே தெரியலையே."
"டேய் சரண் கொஞ்சம் வந்த வேலை என்னவோ அதை பார்க்குறியா.
அவள கல்யாணம் செய்துகிட்டு, அப்பறமா ரசிக்கலாம்," என்று மனசாட்சி எடுத்துரைத்ததில், அதனை அடக்கி விட்டு, முதலில் அவளை, தலையிலிருந்து பாதம் வரை ரசித்து பார்த்த பின்பே, அவளை அழைத்தான்.
"அதி "
அவனின் குரல் சட்டென்று கண்டு கொண்ட அதிதி, முதலில் அதிர்ந்தாள் .
அவன் இங்கு வர மாட்டான் என்றே நினைத்தாள் .
அவளுக்கு சாதனமாக இந்த சூழ்நிலையால் கடக்க சிறிது நேரம் தவை பட்டது.
அவளின் உணர்வுகள், அழுகைக்கு தயாராக இருக்கும், கண்கள், என்று அவளின் எல்லா உணர்வும் கட்டுக்குள்ள கொண்டு வந்து, பிறகு முகத்தில் இறுக்கத்தை கொண்டு வந்து "என்ன விஷயம், ரொம்ப வருஷம் கழிச்சி இந்த வீட்டு பக்கம் வந்து இருக்கீங்க."
"அண்ணா கீழே இருப்பாரே, பார்த்துட்டு போங்க. "
"ஹான், இந்த வாரம் என்னை பொண்ணு பார்க்க வராங்க, எப்படியோ கல்யாணம் முடிவாகிடும், நானும் உங்களை அழைக்கும் இல்ல, என் கல்யாணத்துக்கு வாங்க," என்று அவனை வேண்டுமென்றே வெறுப்பேற்றினாள் .
அவளும் அவள் பேச பேச, அவன் முகத்தை பார்த்து கொண்டே தான் இருந்தாள்.
அவனின் ஒவ்வொரு முக மாற்றமும், ஒரு பக்கம் தனக்காக என்ற மகிழ்ச்சியும், இன்னொரு பக்கம், "இந்த வேதனை எல்லாம் இவனே உருவாக்கியது தானே," என்று நினைத்து வருந்தினாள் .
அவள் பேசும் வரை பொறுமையாக அவளை பார்தான் சரண் .
அவளின் வார்த்தையில் என்ன நக்கல்.
"பேசி முடிச்சியா, என்ன என்னை வெறுப்பேதுறதா நினைப்பா, ரொம்ப திமிரு டீ, உனக்கு."
"எப்படி எப்படி, உன்னை இன்னொருத்தன் கல்யாணம் செய்துகிட்டு, நான் அந்த கல்யாணத்துக்கு வரணுமா."
"உங்க அண்ணா சொன்னா கூட, இன்னொருத்தன் உன்ன பொண்ணு பார்க்க வந்த, அவன் முன்னாடி நல்லா டிரஸ் பண்ணிட்டு நீ ன்பொம்மை மாதிரி போஸ் குடுப்பியா , தொலைச்சிடுவேன் ராஸ்க்கல் ." என்று சீறினான் .
அதேகுமேல் அவள் கண்ணீர் அவளின் கட்டுப்பாட்டில் இல்லை, அவள் கன்னம் நினைக்க, அவளும் அழுது கொண்டே, கேட்டாள் .
"இதுக்கு பேர், என்னன்னு, எனக்கு தெரியலை, நான் எங்க அண்ணா சொல்ற பையன், முன்னாடி நின்னா உங்களுக்கு என்ன, பொண்ணு பார்க்க வந்தா, இது தானே காலம் காலமா நம்ம பழக்கம்."
"ஹே ஒன்னும் தெரியாத மாதிரி பேசாத, உங்க அண்ணா கிட்ட நீ என்னை லவ் பண்றன்னு சொல்ல மாட்டியா."
"இது என்ன வம்பா இருக்கு, நான் தானே ஏதோ புத்தி கேட்ட தனமா உங்களை பிடிச்சி இருக்குன்னு எப்பவோ சொன்னது, அப்போ கூட நீங்க என்னை பிடிக்கலைன்னு தானே சொல்லிட்டு போனீங்க."
"என்னை எவ்வளவு கேவலமா பேசுனீங்க, நான் இளமை உணர்வுக்கு மதிப்பு தரவன்னு எல்லாம் என்னை அசிங்க படுத்துனீங்க. என்னோட காதல் ஏதோ வயசுல வர கோளாறுன்னு எல்லாம் பேசிட்டு, போனீங்க" என்று கூறும் போதே கதறி அழுது விட்டாள் .
"உங்களை நம்பி நான் எப்படி சொல்ல முடியும்.என்னை வளர்த்த எங்க அண்ணாக்கு நான் மதிப்பு கொடுக்கணும்ன்னா, நீங்க சொன்னீங்கல்ல, பொம்மைன்னு, பொம்மை இல்ல ஒரு நடை பிணமா நான் நின்னு தான் ஆகணும் ."
அவள் திருப்பி கொடுத்த பதிலடியில் அவனுக்கு தான் வார்த்தை இல்லை.
எந்த அளவிற்கு அவனின் வார்த்தை அவள் மனதை காயப்படுத்தி இருக்கிறது, என்று உணர்ந்து வேதனை அடைந்தான்.
"ப்ளஸ் அதி, இப்படி எல்லாம் பேசாதா, எங்க அம்மாவுக்கு பிறகு என் வாழ்க்கையில் ஒரு பொண்ணுன்னா அது நீ மட்டும் தான், என் நிலைமை, அப்போ சரி இல்லை."
"அவர் என்னை மட்டும் இல்லை, அம்மா, அப்பறம் அன்பு இரண்டு பேரையும் கேவலமா பேசுனாரு, அந்த நேரத்தில், அவர் கூட ரோஷமா, சண்டை போட்டு, உன்னை லவ் பன்றேன்னு சொல்ற தைரியம் எனக்கு இல்லை."
"ஏன்னா, அவர் சொல்ற வசதி அந்தஸ்து, எதுவும் என்கிட்டே இல்லை, எந்த தைரியத்தில நான் அவரோட பேச முடியும்."
"எனக்கு நல்லா தெரியும் அவர் என் வாயாலேயே, உன்னை வேண்டாம்ன்னு சொல்ல வெச்சாருன்னு, ஆனா எனக்குள்ளயும் ஒரு குற்ற உணர்ச்சி, அன்பு என்னை நம்பி, உன்னை ட்ரோப் பண்ற பொறுப்பை கொடுத்திருக்கான், அவனுக்கு துரோகம் பண்றது போல ஒரு வலி ."
"அதுவும் இல்லாம, நீ சின்ன பொண்ணு, உன் மனசுல இப்படி ஆசையை வளர்த்து, அது உன்னோட கேரியர் பாதிக்குமோன்னு ஒரு பயம்."
"இப்படி பல விஷயம் என்னை போட்டு குழப்புனதுல, அன்னைக்கு, நீயும் என்னை வெறுக்கணும்ன்னு தான் நான் அப்படி பேசுனேனே தவிர, என் மனசால, உன்னை ஹர்ட் பண்ணனும்ன்னு நினைக்கலை ."
"ஆனா, எப்பவும் நீ தான் என் மனசுக்கு சொந்தகாரி, அதுல எந்த மாற்றமும் எப்பவும் இல்லை.
இங்கயே இருந்தா அம்மா போர்ஸ் பண்ணுவாங்க, அதுனால் தான், நான் உன்னையும் மறக்க முடியாம, வேற கல்யாணமும் செய்ய விருப்பமில்லாம அங்க போய் ஒளிஞ்சிகிட்டேன்."
"அம்மாவும், உங்க அப்பனால, இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டாங்க ."
"உன்னை ஹர்ட் பண்ணதுக்கு எல்லாம், என் கூட இருந்து எனக்கு தண்டனை குடு, " அவனுக்கு மனதில் இத்தனை நாள் அழுந்தி இருந்த பாரம் கண்ணீராக கரைந்தது.
"அவளே எதிர்பார்க்க நேரம் அவளை கட்டி கொண்டான்.
அதில் அதிர்ச்சியடைந்து, பின்பு அவனை, நன்றாக அடிக்க தொடங்கினாள் அழுகையுடன் அதிதி.
"இப்போ, மட்டும் லவ் சொல்ல தைரியம் வந்துச்சா, போ போ, உனக்கு நேர கல்யாண பத்திரிகை அனுப்பலாம்ன்னு நினைச்சேன் .விடு விடு என்னை, என்ன எப்படி எல்லாம் பேசுன , நீ வேண்டாம் எனக்கு ." என்று கை அணைப்புக்குள் இருந்து கொண்டே , அவனை அடித்தாள்.
ஒரு கட்டத்தில் அவள் கைகளை ஒரு கையால் பிடித்து கொண்டு, "வந்த உடனே யாரோ மாதிரி பேசுன , ஒழுக என்ன மாமான்னு கூப்பிடு டீ,"அவளை வம்பிழுத்தான்.
"முடியாது முடியாது, " என்ற அவளின் சிணுங்களில், இன்னும் அவளை சீண்டினான் .
"எப்படி டீ, சும்மா கும்முன்னு இருக்கே, மேடம் இப்போ தான் கரெக்டா இருக்கீங்க என்று அவனின் பார்வையில் அவளின் முகம் வெட்கத்தில் சிவந்து, அவன் நெஞ்சிலே முகம் புதைத்து, "அத்தைக்கு, அவங்க மருமகளா என்னை பிடிக்குமா, எனக்கு பயமா இருக்கு."
"சோ கோவம் போய்டுச்சா, இப்போ கல்யாணம் பற்றி பேசுறீங்க,"
"கோவம் எல்லாம் வண்டி வண்டியா இருக்கு, உங்களுக்கு எப்படி பனிஷ்மென்ட் கொடுக்குறதுன்னு நான் பார்த்துக்கறேன்" என்று சிலிர்த்து கொண்டாள் .
"முதல்ல, அம்மாவையும் அன்புவையும் பார்த்து பேசலாம் வா, உன் கல்யாண டென்ஷன்ல, நான் நேரா இங்க வந்துட்டேன், நான் வந்து இருக்குறது அம்மாக்கு கூட தெரியாது."
இருவரும் கீழே இறங்கி சென்றனர்.
அங்கு சுமதி சந்திராவிடம் பேசி கொண்டிருந்தார்.
"சந்திரா, மா, என் கையில எதுவும் இல்லை, நான் இந்த வீட்டுல வெறும் ஒப்புக்கு இருந்தவ தான், உங்க அண்ணா பேசிய வார்த்தைக்கு, அதிதியை வெறுக்காத."
"ஏன் விஷாகல்யாணத்து அப்போ, நான் உன்கிட்ட ரொம்ப கடுமையா பேசி இருக்கேன் ."
"அதுக்கு எல்லாம் நான் மன்னிப்பு கேட்டாலும் பத்தாது."
"நீ, என்னோட, அதிதியை ஒப்பிட்டு பார்க்காதா, ஏற்கனவே வினோத் மாப்பிளை, விஷா கிட்ட இருந்து என்ன தள்ளி இருக்க சொல்லி இருக்காரு."
"இப்போ அதிதி கிட்ட இருந்து நான் விலகி இருக்கணும்னாலும் எனக்கு சம்மதம் தான்."
"அதிதியை அன்பு தங்கையா மட்டும் பாரு, அவ ரொம்ப நல்ல பொண்ணு."
"அவளை மருமகள் எதுக்கோ மா, உன் பையனுக்கும் அவளை பிடிக்கும், " என்று பல வருடம் கழித்து சந்திரிவிடம் சுமதி பேசிய நீண்ட வார்த்தைகள், சந்திரா மனதில் ஒரு தாக்கத்தை உருவாக்கியது.
அவர் இனியா அழைத்ததும் முதலில் வர தயங்கினார் தான், ஆனால் சரண் பற்றி, தனக்கு அறியாத உண்மை, என்று அதிர்ச்சி அடைந்து, நேரில் சென்று விசாரித்து கொள்ளலாம் என்றே வந்து இறங்கினார்.
"அதில் சரண் வந்ததில் இருந்து, மாடியில் தற்போது, அதிதியுடன் பேசி கொண்டிருப்பது வரை, அன்பு கூறி முடித்ததும், அவருக்கு தன் மகனை தான் சரியாக புரிந்திருக்க வில்லையோ, என்ற தவிப்பு.
அன்புவுக்கு, அவரின் தவிப்பு புரிந்து இருந்தது தான்.
"அத்தை, நீங்க எதுவும் வருத்த படாதீங்க, அப்படின்னு பார்த்தா, நானும் என் நண்பன், தங்கை பற்றி, ஒண்ணுமே தெரியாம இருந்து இருக்கேன்னு எனக்கும் வருத்தமா இருக்கு."
"கண்டிப்பா, அந்தாளு, சரண் கிட்ட உருப்படியா பேசி இருக்க மாட்டாரு, அவர் வாயை திறந்தாலே, எதிரில் இருக்கவனுக்கு தான் பிரெச்சனை."
"நம்ம சரணையும் ஏதாவது கேவலமா பேசி இருப்பாரு. இருங்க அவன் கீழே வரட்டும், அதி என்ன சொல்றான்னு பாப்போம், உங்க சம்மதம் இதில் முக்கியம்."
அதில் சற்று, அமைதி அடைந்தார் சந்திரா.
இருவரும் சிரித்த முகத்துடன் வருவதை கண்டு, வீட்டினருக்கு புரியா விஷயங்கள் அனைத்தும் புரிந்தது.
சரண் அங்கு அவன் அன்னையை எதிர்பார்க்கவில்லை.
முதலில் அன்புவை சமாளித்து, அதன் பிறகு அன்னையிடம் பக்குவமாக எடுத்து கூறலாம் என்று நினைத்து இருந்தான்.
அன்னையை கண்டதும் அவன் அதிர்ச்சியில் இருந்தான் என்றால், சந்திராவோ, மகனை முறைத்து கொண்டிருந்தார்.
அதில் தானாக அதிதி கையை விட்டு, "அம்மா, சாரி, அது, எனக்கு அதிய ரொம்ப பிடிக்கும், ஆனா, அவ அப்பன், அன்னைக்கு ரொம்ப கேவல படுத்திட்டான்," எதிரில் சுமதி இருப்பதையும் மறந்து, அவர் வயதுக்கும் மரியாதை இன்றி பேசி கொண்டிருந்தான்.
பிறகு அன்று நடந்த அனைத்தும், கூறி முடித்து, அதனால் அவன் அதிதியை விட்டு விலகிய காரணத்தையும் கூறினான்.
"எனக்கு அப்பவே சொல்லி இருக்கலாம் தானே டா, நான் மாட்ரிமோனில போட்ட காசு வேஸ்ட் ஆகி இருக்காதுல, எனக்கு அதி எங்க வீட்டுக்கு வரதுல ரொம்ப சந்தோஷம்."
"ஆனா கேடி டா நீ, " என்று மகனின் காதை திருகினார்.
அவனும் அன்னையை கட்டி அணைத்து அவர் கன்னத்தில் முத்தம் பதித்து அவன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான்.
"டேய் அன்பு நீ ஏன் எதுவும் பேசாம இருக்கே, நான் உனக்கு துரோகம் செஞ்சதா நினைக்குறியா," அவன் வேதனையுடன் கூறியதில்,
அன்பு "டேய் போதும் நிறுத்து, அந்த ஆள் பேசுனதுக்கு எல்லாம், நீ இவ்வளவு ரியாக்ட் பண்ணியா, அவன் ஏதாவது நல்ல விஷயம் பேசி இருந்தா தானே, நமக்கு அதிசயம்."
"உன்னை விட என் தங்கச்சிக்கு வேற யாரை சிறந்த மாப்பிள்ளையா நான் தேர்ந்து எடுக்க முடியும் சொல்லு."
"எனக்கு எந்த கோவமும் இல்லை டா, நீ எதுவம் நினைக்காத, என் அதி குட்டியை நல்லா பார்த்துக்கோ, எனக்கு அவ முதல் குழந்தை ," என்று கண் கலங்கினான்.
அதில் அண்ணன் தோள் சாய்ந்து அதிதியும் கண்ணீர் வடித்தாள் .
"ஐயோ இந்த பாச மலர் படம் திரும்பி ஆரம்பிச்சிட்டாங்க," என்று இனியா கிண்டலடித்த பின்பே அனைவரும் சிரித்து, வீட்டில் மீண்டும் உறவுகளின் வருகை என்று கலகலப்பாக இருந்தது.
அப்பொழுது தான், சுமதியின் மடியில் இருந்த ஆதவை சரண் தூக்க முயன்றான்.
"என் செல்ல குட்டி மாமா கிட்ட வாங்க,என்று குழந்தையை வாங்க கை நீட்டியதும்,"
சந்திரா, சரணின் கையில் ஒரு அடி போட்டு,
"நீ போகாத டா,குட்டி, உன் மாமா, அவன் அத்தையை தானே முதல்ல பார்த்தான், இப்போ தான் அவனுக்கு சுற்றி இருக்குறவங்க கண்ணுக்கு தெரியுது, " என்று மகனை வம்புக்கிழுத்ததில் அவன் அசடு வழிந்து,
"டேய் குட்டி பையா, சாரி டா, எனக்கு நீ எப்பவும் ஸ்பெஷல் டா."
" குட்டி அன்பு மாறியே இருக்கே, உனக்கு சீக்கிரம் ஒரு கேர்ள் பிரென்ட் வரும் சரியா," என்று அதியை பார்த்து கண்ணடித்து, மீண்டும் சந்திரா கையில் ஒரு கொட்டு வாங்கி, என்று வீட்டில் உள்ள அனைவரும் சந்தோஷத்துடன் இருந்தனர்.
அன்பு அதற்குள் கடமை தவறாதவன் என்பதை உணர்த்துவது போன்று, முதலில் அவன் பெரியன்னைக்கு அழைத்து, மாப்பிளை வீட்டில், அதற்குள் அதிதிக்கு வேறு இடத்தில திருமணம் முடிவானது பற்றி எடுத்துரைக்குமாறு கூறி, இங்கு நடந்த நிகழ்வும் அவன் பெரியன்னைக்கு தெரியப்படுத்தினான் .
அதில் அவரும் மகிழ்ந்து, வாழ்த்து கூறினார்.
சந்திரா, திருமண பற்றி பேச்செடுத்ததும், "அம்மா, இப்போ நான் லீவ்ல வந்து இருக்கேன், நான் இன்னும் டூ வீக்ஸ்ல கிளம்பனும், அங்க போய் நான் நோட்டீஸ் போட்டு, என்னோட ப்ரோஜெக்ட் எல்லாம் ஒரு மூணு மாசத்துல முடிச்சிட்டு, ஒரேடியா, இங்க வந்துடறேன் அதுக்கு பிறகு, கல்யாண வேலை ஆரம்பிக்கலாம், நீ என்ன சொல்றே அன்பு,"
மகன் இங்கு வருவதில் சந்திராவுக்கு மகிழ்ச்சி .
அன்புவிற்கும் சரண் கூறுவது, சரியாக தோன்றவே, அவனும் சரி என்று சம்மதம் தெரிவித்தான்.
பிறகு, சரண், மற்றும் சந்திரா இருவரும் விடை பெற்று வீட்டிற்கு கிளம்பினர் .
வீட்டின் முதல் சம்மந்தி என்ற மரியாதைக்கு, அன்பு அதிதி திருமணம் பற்றி, தேவகி மற்றும் நாதனுக்கு தெரியப்படுத்தினார்.
அங்கும் அனைவரும் மகிழ்ந்தனர் என்றால் விஷாகா, அன்புவுடன் சண்டை போட, என்றே சுமதி இல்லத்திற்கு கிளம்பினாள் .
அவளுக்கு, முக்கியமாக அவள் தந்தைக்கு பிடிக்காத குடும்பத்தில் ,தன்னிடம் ஒரு வார்த்தையும் கேட்காமல், அதிதிக்கு அவள் பிறந்த வீட்டினர் திருமண பற்றி, பேசி இருப்பது, அவளுக்கு பெரும் அவமானமாக இருந்தது.
இனி என்ன என்று பாப்போம் .




 

Lakshmimurugan

Well-Known Member
விஷாகா இந்த கல்யாணத்தை கேள்வி பட்டு சந்தோஷப் பட்டிருந்தால் தான் ஆச்சரியமே.
 

Saroja

Well-Known Member
நல்லா இருக்கு பதிவு
அதிதி சரண் கல்யாணம்
விஷாகா வில்லங்க வேலை
செய்ய வந்துட்டாளா
 

achuma

Well-Known Member
நல்லா இருக்கு பதிவு
அதிதி சரண் கல்யாணம்
விஷாகா வில்லங்க வேலை
செய்ய வந்துட்டாளா
Nandri sis
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top