அன்பின் இனியா 22 2

Advertisement

achuma

Well-Known Member
சென்ற பதிவிற்கு உங்களின் ஆதரவுக்கு நன்றி பிரெண்ட்ஸ்.
இன்னும் மூன்று பதிவு தான் பிரெண்ட்ஸ்.
படித்து விட்டு, உங்களின் நிறை குறைகளை என்னிடம் பகிருங்கள்
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.


அன்புவும் அவன் கிராமத்திற்கு சென்று அனைவருடனும் இரு நாட்கள் இருந்து விட்டு, அவன் குடும்பத்தை சென்னைக்கு அழைத்து வந்து விட்டான்.
அடுத்து, இனியா செய்த செயல், வீட்டினில் தோட்டம் உருவாக்குவது.
அவள் சுமதியிடம், இது போன்று, தோட்டம் அமைக்க வேண்டும், என்று கேட்டு, அதற்கு ஏற்றவாறு, செய்யும்மாறு சுமதியிடமே பொறுப்பை கொடுத்தாள் .
"அத்தை , நீங்க படிக்கணும்ன்னு ஆசை பட்டதா சொன்னீங்க, அந்த காலத்துல உங்களால படிக்க முடியாம போச்சு .உங்க அப்பாவோடு சேர்ந்து விவசாயம் செய்யணும்ன்னு விரும்புனதா சொன்னீங்க".
"இப்போவும் உங்களுக்கு அதில விருப்பம் இருக்கா, இதோ, உங்க பையன், வீடு சுற்றி இடம் விட்டு அதுக்கான சந்தர்ப்பத்தை அமைச்சு கொடுத்து இருக்காரு, உங்க விருப்பம் போல, என்ன செய்யணுமோ, செய்ங்க அத்தை".
"இனியா, ரொம்ப நல்ல யோசனை, என் மனசு அப்போ, ஒரு நிலையில இல்லாம, நிறைய, ஏதேதோ யோசிச்சேன், அப்போ, என் சிந்தனையை தோட்டம் உருவாக்கி அதுல திசை திருப்பலாம்ன்னு யோசிச்சேன், வீட்டுல நான் ஆசை பட்டு, சின்ன பூ செடி வெச்சா கூட, உன்னை கல்யாணம் செய்துக்கிட்டதால, இந்த வீட்டுல நாட்டாமை செய்ய வந்துடுவியான்னு, என்னை அதுக்கும் கட்டு படுத்துவாரு."
"அப்படியே, நானும் இருந்துட்டேன், இப்போ, நீ சொல்றது எனக்கு மனசுக்கு இதமா இருக்கு, வீட்டுக்கு, பின் பக்கம் மரங்கள் வைக்கலாம், முன்னாடி, பூச்செடி வைக்கலாம், மாடில, காய்கறி செடி வைக்கலாம், ஆனா மாடில, நிறைய மண் போட்டு வைக்க கூடாது, வீட்டு சீலிங் தாங்காதுன்னு சொல்வாங்க கொஞ்ச நார் இன்னும் சில காய்கறி உரங்கள் கொஞ்சமா மண்ணு போதும்" அவருக்கு விவசாயம் தெரிந்த வகையில், இங்கு அவரின் சொந்த வீட்டினில் அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருந்தது.
அன்னையை பார்க்க வந்தாள் விஷாகா.
இனியா, அவள் வந்ததும் வரவேற்பாக, தலை அசைத்து அழைத்து, வீட்டிற்குள் சென்று விட்டாள் .
"என்ன மா நான் வந்து இருக்கேன், கண்டுக்காம போறா , ரொம்ப இடம் கொடுத்து இருக்கே பார்த்துக்கோ மா," என்று தோட்டத்தில் இருந்த சுமதியிடம் இனியாவை பற்றி தூண்டி விட்டாள் .
அவர் என்று மகளை விட்டு கொடுத்து இருக்கிறார், இனியாவிற்கும் அவள் கூறியது கேட்டது தான்,இருந்தும் அருகில் சென்று அவளிடம் அசிங்க பட விருப்பமில்லை, அதனால் ஒதுங்கியே இருந்து கொண்டாள் .
முன்பு போல் அடிக்கடி இங்கு வர இயலாதது, விஷாகாவின் வீட்டினில் அவளுக்கு வேலைகள் வரிசை கட்டி இருந்தது.
அதே நேரத்தில் ஊரில் இருந்து வந்திருக்கு அன்னயை காண அவளின் கடையில் இருந்து வந்து விட்டாள் .
"அவ உனக்கு, டி போட போய் இருப்பா மா," என்று மகளிடம் கூறினாரே தவிர, முன்பு போல் அவருக்கு இனியாவை, குறை கூற மன விரும்பவில்லை.
மகளின் விருப்பத்திற்காக அவள் கூறியதும், அவரும் கூடவே சேர்ந்து மற்றவர்களை குறையாக பேசியது, எந்த அளவிற்கு தவறு என்றும், அதனால் விஷாகாவின் குணம் எந்த அளவிற்கு இருக்கிறது என்றும் இப்பொழுது, புரிந்து கொண்டிருக்கிறார்.
அதே நேரத்தில் அவரின் பொக்கிஷத்தை கண்டிக்கவும் மனம் விழையவில்லை .
"இங்கே என்ன நடக்குது, எதுக்கு மண்ணு எல்லாம் இப்படி எடுத்து வெச்சி இருக்கே, என்ன உன்னை வேலை வாங்குறாளா," இங்கு நடப்பது எதுவும் தனக்கு தெரியவில்லையே என்ற கோவம் ஒரு பக்கம் .
"அவ எந்த வேலையும் வாங்குல, இதோ, வீட்டுல வேலை செய்யற அந்த பொண்ணோட வீட்டுக்காரர் தான் இந்த இடத்தை தோட்டத்திற்கு ஏற்றது போல், செய்துட்டு இருக்காரு, அவர் வீட்டுக்கு பின் பக்கம் வேலையா இருக்காரு, நான் தோட்டம் வைக்கலாம்ன்னு இருக்கேன் மா " மகளிடம் துள்ளலோடு கூறிய சுமதியை கண்டு விஷாகா முறைத்தாள் .
"ரொம்ப முக்கியம், அப்பாவுக்கு தான் நீ இப்படி எது செய்தாலும் பிடிக்காதே, வேணும்ன்னா ஏதாவது கிரோட்டன்ஸ் வாங்கி வெச்சிக்கோ, உன் குடும்ப புத்தி உன்னை விட்டு போகுதா பாரு, எதுக்கு அவரோட பொண்டாட்டியா இருந்துகிட்டு, நீ அவர் பேரை கெடுக்குற, அவர் போய்ட்டா உனக்கு பயம் போய்டுச்சா, என்ன செய்யல அவர் உனக்கு, இப்பவும் மண்ணு செடின்னு போய்கிட்டு இருக்கே," என்று பொரிந்து தள்ளினாள் அன்னையை.
"ஹ்ம்ம் இன்னும் ஆடு மாடுன்னு அந்த பக்கம் ஒரு குடிசை போட்டு அதையும் வளர்க்க ஆரம்பிச்சிடு ."
இந்த வயசிலாவது அவரின் விருப்பத்தை சுதந்திரமாக செய்ய முடியவில்லையே என்று மனம் வருந்தினார் சுமதி .
விஷாகாவை இப்படி செல்லம் கொடுத்து வளர்த்தது தன் தவறு என்று மிகவும் வருந்தினார் .
அதில் முகம் வாட, சுமதி நின்றிருந்தார், இதனை கேட்டவாறே வந்த, இனியா, விஷாகாவிற்கும் சுமதிக்கும் பருக டீ கொடுத்து விட்டு, அங்கு வேலை செய்வோருக்கும் எடுத்து சென்று கொடுத்து விட்டு வந்தாள் .
"அத்தை , நம்ம வேலையை ஆரம்பிக்கலாமா, ரொம்ப வருஷம் கழிச்சி, உங்க விருப்பத்தை எல்லாம் இதுல காட்டுங்க, பார்க்கலாம் நம்மளும், செடி வளர்க்குறோம், வ்லோக் போடுறோம், சுமதி தோட்டம் எப்படி நிறைய செடி வளர்ந்துதுனா, காய் பழங்கள் எல்லாம், ஆஸ்ரமத்துக்கு கொடுக்குறோம்," என்று அவள் சுமதியை ஊக்குவித்து, விஷாகாவின் கோவத்திற்கு ஆளானாள் .
நான் எது பேசினாலும் பதிலுக்கு, நிக்கிறா பாரு, அன்றைக்கு அவன் கொடுத்தது இவளுக்கு கம்மி போல, என்று நினைத்து, உடனே, வினோத், விஷாகாவை அடித்தது, அவள் கண் முன் காட்சியாக, முகம் ஒரு நொடி கோவமும் வேதனையும் தாங்கி, அதன் பின் அங்கு நிற்க பிடிக்காமல் விஷாகா, அன்னையிடம் இருந்து தலையசைத்து விடை பெற்று சென்று விட்டாள் .
அங்கு அவள் பிள்ளைகளுக்கு அவள் தான் பாடம் கற்று கொடுக்க வேண்டும் என்று வினோத், இட்ட வேலையை செய்வதற்கு கிளம்பி விட்டாள் .
ஆம், விஷாகாவை பொறுத்த வரை, அவள் பெற்ற பிள்ளைகளுக்கு பாடம் கற்று கொடுப்பது ஒரு வேலை தான்.
குழந்தைகளுடன், அவள் நேரம் செலவழிக்க வேண்டும் என்று வினோத் இப்படி செய்ய சொன்னால், விஷாகாவிற்க்கோ தலை வேதனையாக இருந்தது .
அக்ஷிதா வெகுவாக அவள் அன்னையுடன் இருக்கும் நேரத்தை விரும்பினாள் .
அவள் தோழிகள், அவர்களின் அன்னையுடன் எங்கேனும் சென்று வருவது, அவர்கள் வீட்டினில் அன்னையுடன் சேர்ந்து விளையாட்டாக ஏதேனும் சிறு சிறு உணவு வகைகள் செய்வது என்று எல்லாம் அவர்கள் இவளிடம் கூறிய தருணத்தை நினைத்து, தானும் அது போல் விஷாகாவுடன் இருக்கும் பொழுதுற்கு ஏங்கினாள் .
ஆனால் இப்பொழுது தான் அவள் குழந்தைகளிடம் இரண்டு மணி நேரம் இருப்பதே பெரிய விஷயமாக இருக்கிறது.
விஷாகா என்ன தான் முகம் காட்டினாலும் அக்ஷிதா, அதனை கண்டு கொள்ளாமல், அவள் கற்று கொடுப்பதை படிப்பாள் .
ஆனால் அதற்க்கு நேர் மாறாக, அக்ஷித் இருந்தான் .
விஷாகாவை தலை கீழாக தண்ணீர் குடிக்க வைப்பான் .அந்த அளவிற்கு சேட்டை காரன் .
அவனிடம் விஷாகா அவள் கோவத்தை காட்டினால், அதற்கு பலமடங்கு அவளுக்கு தலை வலியை உண்டு செய்வான்.
கூடை கூடையாக அவனை புகழ்ந்து அவனுக்கு ஐஸ் வைத்தால் மட்டுமே, வீட்டு பாடம் செய்வான் .
அது விஷாகாவிற்கு மேலும் கடுப்பை கிளப்பும்.
அதனை ரேஷ்மி கண்டும் காணாமல் ரசிப்பாள்.
ஒரு முறை, "அத்தை இவன எப்படி தான் சமாளிக்கிறீங்களோ," என்று தேவகியிடம் கூட கேட்டு விட்டாள் .
வீட்டினர் அனைவரும் அவனுடன் விஷாகா போராடும் நேரம் அவளுக்கு தெரியாமல் சிரிப்பார்கள்.
"டேய், ஏன்டா இவ்வளவு தப்பா எழுதி இருக்கே, திரும்ப முதல்ல இருந்து எழுது,"என்று அவனிடம் காய்ந்தாள்.
"முதல யா அம்மா முதல ஜூ ல தானே இருக்கும்," என்று அவளிடம் கூறி விஷாகாவிற்கு ரத்த கொதிப்பை ஏற்றினான் .
"டேய் ஒழுங்கா மொக்கை போடாம எழுது சீக்கிரம், இல்லை, என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது," என்று அவனிடம் கத்தி கொண்டிருக்கும் நேரம், வினோத் சிரித்து கொண்டே, "உன் பையன் தானே உன்னை மாதிரி தான் இருப்பான், இப்போ இவனை எங்க அம்மா எந்த அளவுக்கு பார்த்துக்குறாங்கன்னு தெரியுதா, பசங்களோட இருக்குற நேரம் ரசி டி, சும்மா சிடு சிடுன்னு இருக்காதே ."
"டேய் கண்ணா, நீ குட் பாய் தானே, சமத்தா எழுதினா, அப்பா உனக்கு ஒரு கிபிட் தருவேன்," என்று அவனை வினோத் தாஜா செய்து ஒரு வழியாக, அன்று குழந்தையை எழுத வைத்தான் .
பிறகு மனைவியை பார்த்து, "நம்ம குழந்தையை கொஞ்ச கூட உனக்கு மனசு வர மாட்டிங்குது, நீ மட்டும் இன்னும் உனக்கு உங்க அம்மா செல்லம் கொடுக்கணும்ன்னு பார்க்குறே," என்று ஒரு கொட்டு வைத்து விட்டே அங்கிருந்த சென்றான் .
இனியாவின் ஏழாம் மாதம் அவள் வீட்டினில் வளைகாப்பு வைக்க கேட்டால், அன்பு ஒன்பதாம் மாதம் தான் அனுப்ப முடியும் என்று கூறி விட்டான், அவனே மனைவியை கண்ணும் கருத்துமாக பார்த்து கொண்டான் .
அது கூட, இனியா அன்னை வீட்டில் தான் குழந்தை பெற்றுக்கொள்வேன் என்று அவனிடம் கேட்டு கொண்டதால்,அரை மனதாக சம்மதித்தான் .
அடிக்கடி, விஷாகா அங்கு வந்து செல்கின்றாள் .
அவளின் அதிகாரத்தில் என்று இருந்த வீடு, இப்பொழுது முழக்க முழுக்க இனியாவின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது போன்ற பிரம்மை விஷகாவிடம் .
ஆனால் , இனியா ஒன்றும் அப்படி இல்லை, மற்றவர்களை அவரவர் விருப்பம் போல், சுதந்திரமாக வாழ செய்திருக்கிறாள், அவளும் நிம்மதியாக வாழ்கிறாள் , இனியாவை அந்த நிம்மதி தான் விஷாகாவின் கண்களுக்கு பொறுக்கவில்லை .
அதிதி விஷாகாவை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல் இருப்பது மேலும் அவளின் கோவத்திற்கு வலு சேர்த்தது .
அவள் அடிக்கடி ரேஷ்மியை காண தேவகி இல்லத்திற்கு வருவாள் .
அப்படி வரும் நேரம், அங்கிருக்கும் விஷாகாவை கண்டுகொள்ளாமல், தோழியர் இருவரும் ஏதேனும் பேசிக்கொண்டே இருப்பதில் அவளுக்கு அப்படி ஒரு கோவம் வரும் .
இனியா, காலையில் சில நேரங்களின் வேலை முடித்து, அன்புவுடன் அவளும் டிராவெல்ஸ், சென்று வருகிறாள் .
சுமதி இப்பொழுது எல்லாம் காலை மாலை என்று இரண்டு மணி நேரம், அவரின் தோட்டத்துடனே நேரம் செலவிடுகிறார்.
அவருக்கு பிடித்த விஷயம் செய்வதில் இப்பொழுது தான் ஒரு உயிர்ப்புடன் இருப்பதாக உணர்ந்தார்.
இதோ வளைகாப்பு முடிந்து, இனியாவும் அவள் அன்னை வீட்டிற்கு சென்று விட்டாள் .
சில நேரங்களில் சுமதிக்கு இனியா இல்லாதது ஏதோ போல் இருக்கும்.
அப்பொழுது எல்லாம், அதிதியை அழைத்து கொண்டு, அங்கு சென்று வருவார்.
சிறிது நேரம் இருந்து விட்டு, இருவரும் வீடு திரும்புவர் .
அதிதி, சுமதியுடன் இருக்கும் நேரம், அவள் மிகவும் ஏங்கிய தருணம், ஆகையால், விஷாகாவை பற்றி அன்னை கூறும்போது, கடுப்புடனும், மற்ற, பொது விஷயங்கள் இருவரும் பேசும் போது, இனிமையாகவும் அவர்களின் நேரம் சென்றது.
இனியா அவள் அன்னை வீட்டினில் சீரடினாள், அடிக்கடி தாங்கியை காண இலக்கியாவும் வந்து செல்வாள் .
அத்தைகளுடன் சேர்ந்து நேரம் செலவிடுவது, அன்ணயுடன் சேர்ந்து சமையல் செய்வது, கோவிலுக்கு சென்று வருவது, என்று அவளின் நாட்கள் நன்றாக சென்றது.
இனியாவை காண வந்த அன்பு, அன்று இரவு இனியா கேட்டு கொண்டதற்கு அன்று இரவு, அங்கே தங்கி கொண்டான் .
மருத்துவர் கொடுத்த ஒரு வாரத்திற்கு முன்பே இனியாவிற்கு வலி ஏற்பட , உடனே இனியாவை மருத்துவமனையில் அனுமதித்து, குடும்பம் மொத்தமும் அன்று இரவு அங்கு மருத்துவமனை வாசம் .
வெகு நேரம் அன்புவை தவிக்க வைத்து, விடியகாலையில் பிறந்தான், அன்பு இனியாவின் மகன்.
குழந்தையை கையில் வாங்கிய அன்புவிற்கு உலகத்தை வென்ற உணர்வு.

குடும்பத்தினர் அனைவருக்கும் குட்டி அன்பு வரவின் மகிழ்ச்சி.
அங்கு சுமதிக்கு மகனை வளர்க்க முடியா ஏக்கம், இப்பொழுது மகன் வழி பேரனை ஆசை தீர வளர்க்க துடித்தார்.
விஷாகாவை தவிர, அனைவரும் இனியாவின் வீட்டிற்கு குழந்தையின் பெயர்ச்சூட்டு விழாவிற்கு வந்தனர்.
குழந்தைக்கு ஆதவ் என்று பெயரிட்டனர்.
மூன்று மாதம் அன்னை வீட்டினில் இருந்து விட்டு, குழந்தையுடன் இனியா அவள் புகுந்த வீட்டிற்கு சென்று விட்டாள் .
சுமதிக்கு அதன் பிறகு அவரின் பேற குழந்தையுடன் நேரம் சென்றது.
அவனை இடுப்பில் வைத்து கொண்டு தோட்டத்தில் உலா வருவது, பாட்டி பேரனுக்கு மிகவும் பிடித்த ஒன்று.
அன்புவே அவன் அன்னையின் மாற்றம் கண்டு வியந்தான் என்றே கூறலாம்.
அடிக்கடி விஷாகா வந்து சென்றாலும் அவளுக்கு பெரிதாக குழந்தையின் மீது எந்த பாசமும் இல்லை.
சுமதிக்கு, அப்படியே, அன்புவை சிறு வயதில் பார்த்தது போன்றே உரித்து வைத்திருக்கும் அவர் வீட்டு வாரிசின் மேல் அலாதி பிரியம் உண்டானது, என்றே கூறலாம்.
நாட்கள் அதன் போக்கில் சென்றது, அதிதியும் படிப்பு முடிந்து, அண்ணனுடன் டிராவெல்ஸ் சென்று வந்தாள்.
இந்த நேரத்தில் தான் சுமதியின் அக்கா, அதிதிக்கு வரன் வந்திருப்பதாக தகவல் கூறினார்.

 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top