அன்பின் இனியா 21

achuma

Well-Known Member
#1
காலையில், இனியா விழித்ததும், முன்தினம் நடந்த நிகழ்வு மனதில் ஊர்வலம் போக, அதற்குமேல் அங்கிருக்க விருப்பமின்றி, அவள் பிறந்த வீட்டிற்கு செல்ல , அதிதியின் அறையில் இருந்து வெளியே வந்தாள்.
அங்கு வரவேற்பறையில், மனைவியின் வருகைக்காக காத்திருந்த அன்பு, அவள் தங்கையின் அறையில் இருந்த வெளியே வந்ததும், நேராக அவள் முன் சென்று, அவளை இறுக்கி அணைத்துக்கொண்டான் .
இன்னும் சுமதியும் திதியும் உறக்கத்தில் இருந்தனர் .
இனியா, அவனின் அணைப்பை ஏற்கவும் இல்லாமல், அவனை, தள்ளியும் விடாமல், பாவை போல், அவனின் அணைப்புக்குள் நின்றிருந்தாள் .
மனைவியின் உடல் இறுக்கம், அவளின் அவனிடமான விலகலை உணர்த்தியது.
"இனியா, என்னை மன்னிச்சுடு, ப்ளீஸ், நீ அம்மாவை கை நீட்டி பேசியது எனக்கு ரொம்ப வருத்தமா இருந்துச்சு .
உனக்கு நான் முதல் இருந்து சொன்னா தான் சில விஷயம் உனக்கு புரியும் .
இப்பவும் சொல்றேன், அவங்க இதுக்கு முன்ன அப்படி இருந்தது இல்லை . அவங்க ரொம்ப மென்மையானவங்க, சூழ்நிலை அவங்களை இப்படி மாத்திடுச்சு .
அவங்க விஷாகா, பேச்சுக்கு கட்டுப்படுறாங்க, பொண்ணு பாசம் அவங்களை அப்படி மாத்துது.
அவ ஆட்டி வைக்கிற பொம்மையா, அம்மா இருக்காங்க, இந்த நிலையும் மாறும், எனக்கு நம்பிக்கை இருக்கு.
நீ, எவ்வளவு நல்லா பார்த்துக்கிட்டே , அவங்களை, திடீர்னு, நீ இப்படி அவங்களை எடுத்தெரிந்து பேசியதும், எனக்கு கஷ்டமா போச்சு" .
"என்னோட இனியாவா இப்படின்னு, ஒரு ஆதங்கத்துல, நான் அப்படி ரூடா நடந்துக்கிட்டேன்" .
"உனக்கு யாரோட மனசையும் துன்புறுத்த தெரியாது .
நான் அது மட்டும் காரணம் சொல்லல , நம்ம பேசும் பேச்சும், நம்ம நடந்துக்குற முறையும், தான் நம்ம குணத்தை தீர்மானிக்கும்."
"நீ வயசு வித்யாசம் பார்க்காம கை நீட்டி பேசியது, உன்னோட குணத்தை, தவறா பார்க்க வைக்கும்," என்றதும், அதுவரை, அவன் கையில் பொம்மை போல் நின்றிருந்த இனியா, அவனின் நெஞ்சின் மீது கை வைத்து தள்ளி, அவனிடம் வெடிக்க ஆரம்பித்தாள் .
"யாருக்கு நான் நல்ல பேரு வாங்கணும், ஆஹன்,நம்ம சுய மரியாதை இழந்தது, அடக்கமான பொண்ணுன்னு சொல்ற, நல்ல பெயர் எனக்கு வேண்டாம்," மனைவி திடீர் என்று தள்ளியதில் ஒரு அடி பின் சென்று பிறகு அவன் நேராக நின்று அவளின் யாரோ போலான பார்வையை பார்க்கும் துணிவற்று, மனதில் வருத்தம் சூழ, அவள் முன் நின்றான் .
"நான் இப்படியே இருக்குறேன், எனக்கு என் குணம் எப்படின்னும் தெரியும் யாருக்காகவும் இனி நான் பொறுத்து போகணும்ன்னு அவசியம் இல்லை," வெம்பி வந்த வார்த்தைகள் அவை.
அவனுக்காக எவ்வளவோ அவமானங்கள் தாங்கி கொண்டு அமைதியாக இருந்த இனியா, இப்பொழுது, இப்படி பேசியதில் அவனும் எந்த அளவுக்கு தனக்காக அவள் மாறி இருக்கிறாள் என்று வருந்தினான் .
"நானும் காலையில இருந்து அங்க உங்க அக்கா ஆடுற ஆட்டத்துக்கு பொறுத்து தானே போனேன்.
"ஏன் உங்களுக்காக மட்டும் தான். உங்களையும் அந்த பொண்ணு ரேஷ்மியும் இணைச்சி பேசி, சொந்தத்துக்கு நடுவுல பரப்பி விட்டாங்க, அதுக்கு ஏதாவது கேள்வி கேட்டேனா, அந்த பொண்ணுக்கு ஒரு கல்யாணம் நடக்க வேண்டாமா, இப்படியா இருப்பாங்க, உங்க அக்கா," என்று அவனிடம் கேள்வி கேட்டாள் .
இந்த வார்த்தை கேட்டதும் அவனுக்கு அதிர்ச்சி பிறகு, "ஹே நீ நம்புறியா டீ " அவனுக்கும் இப்பொழுது கோவம்.
"நான் தெளிவா சொல்லிட்டேன், நான் அது பற்றி ஏதாவது பேசினேனான்னு, ஆனா, அதையும் கடந்து என் மனசை வேலையில் செலுத்தி நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருந்தா, உங்க அம்மா, பேசிய பேச்சு தான் எனக்கு வருத்தமா இருந்துச்சு".
"கொஞ்சம் யோசிச்சு பாருங்க, எங்க அம்மா கிட்ட , இந்த ரேஷ்மியை தான் எங்க வீட்டுக்கு மருமகளாக்கணும்னு சொன்னா , எனக்கு எவ்வளவு பெரிய அவமானம்,"
இந்த செய்தி அவனுக்கு புதிது.
இப்படியா பேசி வைக்கணும் என்று இருந்தது அவனுக்கு.
"என்ன செய்யலை நான் அவங்களுக்கு, எனக்கு இன்னொரு அம்மாவா தான், நான் அவங்களை பார்த்தேன், என் அம்மா மனசு எப்படி தவிக்கும்ன்னு ஏதாவது யோசிச்சி பார்த்தங்களா , அவங்க," இப்பொழுது அவளின் கண்களிலும் கண்ணீர் .
அவ்வளவு ஆவேசம் அவள் பேச்சில் .
"என்னோட கடமைன்னு நினைக்காம, இந்த வீட்டோட மருமகளா, எல்லாம் பார்த்து செய்தா, என்னோட சேவையெல்லாம் அனுபவிச்சிக்கிட்டு, அவங்க என் எதிர்லையே, வேற ஒரு பொண்ணை மருமகளாக்கணும்னும், ஏதோ விதி வசத்தால , இப்போ என்னால கஷ்ட படுறா மாதிரி பேசி வைக்கிறாங்க."
"அப்போ இவ்வளவு நாள் நான் இங்க யாரு, வேலைக்காரியா, சொல்லுங்க " அவ்வளவு ஆவேசம் அவள் பேச்சில் .
"கல்யாணத்துக்கு அப்புறம் வேலைக்கு போக கூடாதுன்னு, அத்தை சொன்னதா , எங்க வீட்டுல சொன்னாங்க, இப்போ தானே தெரியுது, அவங்க என்னை ஒரு வேலைக்காரியா இந்த வீட்டுல, ஆக்கி வெச்சிருக்காங்கன்னு ."
இந்த வார்த்தையில் அவன் முகம் மிகவும் கன்றி போய் நின்றான்.
"உன்னை இப்படியா டீ , நான், பார்த்துக்கறேன்," உள்ளத்தின் வேதனை எல்லாம் ஒரு சேர அவன் குரலில் வந்து விழுந்தது.
"நான் தெளிவா, மறுபடியும் சொல்றேன், எல்லாம் அத்தை பண்றதா , ஏன் , அவங்க செயல் சரின்னும் மாதிரி தானே, நீங்க நேத்து நடந்துக்கிட்டிங்க, அதான் அவங்க நடந்துக்கிட்டது எல்லாம் சொல்றேன்,"என்று மேலும் சுமதியின், தவறை, அவன் நியாயப்படுத்திய கோவத்தில் எடுத்து கூறினாள் .
"ஒரு நல்லது , கெட்டதுக்கு , சம்மந்தி வீட்டுக்கு சொல்லணும்னு தெரியலையா , இது கேட்டது தப்பா, இது தான் பெரிய மனுஷ தனமா, அதுவும் விடுங்க, மரியாதை இல்லாத இடத்துக்கு வந்த எங்க அம்மாவை சொல்லணும்."
"நான், உங்களுக்காக தான் அங்கே பேசுனேன், நீங்க கஷ்ட பட்டு அக்ஷிக்கு செய்த சீர் வரிசையை குறை சொன்னாங்க, அது பொறுக்காம, உங்க உழைப்புக்கு, மரியாதை தரமா , உங்க அக்கா பேசும் பேச்சிற்கு, அத்தை தாளம் போடுறதை தாங்காம, நான் அங்கே பேசினா, உங்க கண்ணுக்கு, என் குணம் தவறா தெரியுது இல்லை," என்று அவனின் சட்டை, காலரை பிடித்து அவனை உலுக்கினாள் .
அவளின் அழுகை, கோவம் ஆதங்கம் எல்லாம்,ஒரு சேர வெடித்து சிதறியதில், மனைவியின் மனநிலை, எந்த அளவுக்கு தோய்ந்திருக்கிறது என்று வருந்தி, அவளை அணைத்து ஆசுவாச படுத்தினான் .
"தப்பு தான் இனியா, எதுவும் புரிஞ்சிக்காம பேசின, என்னை மன்னிச்சுடு".
"எனக்கு லைப்ல, நீ, அம்மா, அப்பறம் அதிதி மட்டும் தான்".
"நீங்க மூணு பேருமே முக்கியம், உங்களை, பார்த்துக்குறதில இருந்து நான் எப்பவும் தவற மாட்டேன்".
"இது போல் இனி நடக்காது, அப்படின்னு நான் உறுதி கூறுவதை விட, அதை நடைமுறை படுத்த தான் விருப்ப படுறேன்.
"உன்னோட இந்த அந்நியமான பார்வை என்னை கொள்ளுது, என் மேல நம்பிக்கை இருக்கா," இப்பொழுது, அவள் கண்களை தன் பக்கம் பார்க்க வைத்து, கேள்வி எழுப்பினான்.
அவளுக்கு, இப்பொழுது, அழுகை அதிகமாகவே, அவன் நெஞ்சிலே, முகம் புதைத்து அழுதாள், அவனின் சட்டையை நினைக்கும் அவள் கண்ணீருக்கு பதிலளிக்க முடியாமல், அவள் முதுகை நீவி விட்டு, ஆசுவாசப்படுத்த முயற்சி செய்தான் .
அவளின் கேவல், சிறிது அடங்கி, "எனக்கு , அடுத்து என்ன சொல்றதுன்னு தெரியலை, ஆனா, இப்போ எனக்கு இங்கே இருக்க பிடிக்கலை, நான் எங்க வீட்டுக்கு போகணும், அம்மா மடி வேணும், நான் கிளம்புறேன்".
என்றாள் .
"அவளின் எங்க வீடு என்ற வார்த்தையில் அடிபட்டவனாக "தாராளமா, உங்க அம்மா வீட்டுக்கு, கிளம்பு, கொண்டு போய் விடுறேன், ஆனா, சீக்கிரம் உன்னோட வீட்டுக்கு வர பாரு." என்று அவளின் தற்போதைய, புகுந்த வீட்டை, உன்னோட வீடு என்று அழுத்தி கூறி , அவளின் மனதை பதிய வைத்தான் .
அவளுக்கு அது புரிய தான் செய்தது, அதில் அவனை முறைத்து, "இதுல ஒன்னும் குறைச்சல் இல்லை, என்று அவனை பார்த்து முறைத்தாள் .
அதில் லேசாக, இதழ் ஓர புன்னகை, அவன் முகத்தில் தெரியவே, "ஹலோ, நான் இன்னும் உங்களை மன்னிக்கல," என்றதும், " நான் எதுவும் சொல்லலையே, என்ன எவ்வளவு அடி வேணும்னாலும் அடிச்சிக்கோ, ஆனா, என்னை விட்டு தள்ளி போகணும்னு மட்டும் நினைக்காத, என்னோட இருந்தே எனக்கு தண்டனை குடு ,"நீ இல்லாம, எனக்கு வாழ்க்கை இல்லை " என்று அவன் குரல் கரகரப்பாக வந்ததும், எங்கு இதற்கு மேலும் இருந்தால், அவனின் பேச்சில் உருகுவோமோ, என்று பயந்து, "சீக்கிரம் கிளம்பனும்," என்றாள் .
அவனால் அவளின் உணர்வு புரிந்து கொள்ள முடிந்தது. ஆறுதலுக்கு தன்னை தேடி வரமால், அன்னை வீட்டிற்கு செல்லும் அவளின் நிலையை நினைத்து, தன்னை அறவே வெறுத்தான் அன்பு.
பிறகு, மனைவியை அழைத்து கொண்டு, மோகன் இல்லத்திற்கு சென்றான்.
அங்கு காலை, வேலையில் ஒவ்வொவருவர், அவரின் வேலையில் மூழ்கி இருந்த நேரம், இளைய மகள் உடன் மாப்பிள்ளையின் வரவு, யாரும் எதிர்பார்க்காதது.
அதிலும் இனியாவின் முகம் கண்ணாடி போன்றது.
அவளின் அகத்தின் எண்ணம் முகத்தில் அப்படியே காட்சியளிக்கும்.
இத்தனை நாள், அன்புவிற்காக, அவளின் வேதனையை மறைத்தாள் .
அதற்கும் ஒரு எல்லை உண்டு என்பது போல், நேற்று நடந்த நிகழ்வு அவளை, புரட்டி போட்டது .
மகளின் வேதனை சுமந்த முகம், மோகனால், பொறுக்க முடியாமல் "வாங்க மாப்பிளை," என்றதுடன் முடித்து கொண்டு, இனியாவை கை பிடித்து, வீட்டிற்குள், அழைத்து கொண்டார்.
"இந்த மனுஷன, மாப்பிளையை கவனிக்காம, பொண்ணு கவனிக்கிறாரு, கொஞ்சம் கூட இந்த மனுஷனுக்கு ஏதாவது தெரியுதா," என்று பல்லை கடித்து கொண்டு, இந்திரா, அன்புவை வரவேற்று, தண்ணீர் கொடுத்து உபசரித்து, காபி எடுத்து வர சென்றார் .
"குட்டிமா , என்னடா திடீர்ன்னு , இவ்வளவு காலையில, வந்து இருக்கே, உன் முகமே சரியில்லையே," என்று, அன்புவை ஒரு பார்வை பார்த்து கொண்டே, மகளிடம் கேள்வி கேட்டார் .
அத்தனை நேரம், அங்கிருந்து வருவதே சித்தம் ,என்று இருந்த இனியா, இப்படி நேற்று உடுத்திய உடையில், கலைந்த தலையுடன், இவ்வளவு காலையில் வந்து இறங்கினால், வீட்டினர், என்ன நினைப்பர், என்று சிறிதும் சிந்திக்காத தன் அறிவை, நொந்து கொண்டு, முழித்தாள் .
அதற்குள், அன்புவே , "அது மாமா, மன்னிச்சிடுங்க, நேற்று, கொஞ்சம் பிரச்சனை, இனியாவுக்கு என் மேல கோவம், அதான் இங்க வரனும்ன்னு," என்று அவன் உண்மை விளிம்பியாக, எடுத்து கூறியதில், அவளை அடித்ததை பற்றி கூறினால், கண்டிப்பாக, அவள் பிறந்த வீட்டார், அவனை சும்மா விட மாட்டார்கள், அவள் கணவனின், மதிப்பும், கெட கூடாது, என்று உடனே, அவள் கணவனின் கூற்றை தடுத்து, "அது ஒன்னும் இல்லை, அப்பா, நேற்று, அம்மாவை, அத்தை இன்வைட் பண்ணலை, அதுனால,எனக்கும் அவருக்கும் ஒரு சின்ன, ஆர்க்யூமென்ட், எனக்கு அங்க இருக்க, கொஞ்சம் கஷ்டமா இருந்தது, அதான் இங்க வரணும்ன்னு, கொஞ்சம் ஆடம் பிடிச்சி வந்தேன். அதான், இவ்வளவு சீக்கிரம் வந்தோம்," என்று, அவன் பேச்சை, தடுத்து வேகவேகமாக, பேசி முடித்தாள் .
அது வரை, அன்புவை, வெட்டவா, குத்தவா , என்று பார்த்து கொண்டிருந்த, இளங்கோ மற்றும், மோகன், இவ்வளவு தானா என்று ஆசுவாசம் அடைந்தனர் .
அன்புவுக்கும், மனைவி தன்னை யாரிடமும் விட்டுக்கொடுக்காது, ஒரு பக்கம், அவனுக்கு, மகிழ்ச்சியாகவும், மற்றொரு, எண்ணமாக, தான் அவளிற்கு இது போல் நியாயம் செய்யவில்லையே, என்று தன்னையே, நிந்தித்து கொண்டான் .
இனியாவிற்கும் அதே தான், அவன் மற்றவர்கள் முன்பு, அவளை அடித்து, அசிங்க படுத்தியும் இங்கு, அவனுக்காக, பெற்றவர்களிடம், அவனின் மரியாதை கெடாமல் பார்த்து கொண்டிருக்கும் தன் வெட்கம் கெட்ட மனதை, திட்டி கொண்டாள் .
"இந்த மட்டியை , என்ன சொல்றது," என்று நினைத்த இந்திரா,"மாப்பிளை, அவ ஏதோ கோவத்தில் பேசி இருப்பா," என்று மகளின் செயலுக்கு வருத்தம் தெரிவித்தார் .
அன்னை நடந்து கொண்ட முறையும் தவறு தானே,என்று நினைத்த அன்பு "அத்தை, எனக்கு எதுவும் தெரியாது, நான் நேரா, ஊரில் இருந்து வந்ததுல, எனக்கு வேலையும் சரியாயிருந்தது, அம்மா உங்களை அழைக்காததுக்கு மன்னிச்சிடுங்க அத்தை," என்று அன்பு வருத்தம் தெரிவித்தான் .
அதில் மோகன் மற்றும் இந்திரா இருவரும் பதறி, "இருக்கட்டும் மாப்பிளை, பொண்ண கொடுத்த இடத்தில, இது எல்லாம் பழக்கமாகிடுது, குட்டிமாவுக்கு இது எல்லாம் புதுசு, அது தான் சண்டை போட்டு இருப்பா," என்று பெண் கொடுத்த இடத்தில் , மகளை பெற்றவர்களுக்கு, கிடைக்கும் அவமரியாதையை நினைத்து, வருத்தமே ஒலித்தது, மோகனின் குரலில் .
அன்புவும் அதனை புரிந்து கொண்டான் .
அனைத்தும் சரி செய்யும் நிலையில் அவன் இப்பொழுது, என்று புரிந்து கொண்டான் .
அன்புவுக்கு தான் குற்ற உணர்ச்சியாக இருந்தது, தன்னை நம்பி வந்து, தனக்காக அவளின் சுயமரியாதை இழந்து, நேற்று தனக்காக வீட்டினரிடம் பேசி, அங்கு தன்னாலே, அவளிற்கு அவமானமும் நேர்ந்ததை நினைத்து, அவனால், அங்கு நிற்க முடியாமல், கிளம்ப தயாரானான் .
"ஒரு நிமிஷம் இனியா, என்னோட வெளியே வா, " என்று அவளிடம் தனிமையில் பேச அவளை அழைத்தான் .
இனியா அவனை நேராக அவள் முன்பு பயன்படுத்திய அறைக்கு அழைத்து சென்றாள், என்ன என்று கேள்வி கேட்டு நிற்கும் அவள் பார்வையை தாங்கி , "எப்போ, வருவே, ப்ளீஸ் , சீக்கிரம் வா மா, நான் இனி எல்லாம் சரி செய்யறேன், எனக்கும் புரியுது, நம்ம நெருங்கிய உறவு அப்படிங்கற காரணத்துக்காக, அவங்க மேல தவறு இருந்தா, நியாய படுத்தணும்ன்னு இல்லை."
"இனி அம்மா மேல ஏதாவது, உனக்கு மன வருத்தம்னா, நான் அதை கண்டிப்பா சரி பண்றேன், இனி இது போல ஒரு பிரச்சனை வராம நான் பார்த்துக்குறேன் ."
"உனக்கு இப்போ, அங்க அன் ஈஸியா இருக்குன்னு தான் விட்டுட்டு போறேன், சீக்கிரம் வா , எனக்கு போன் பண்ணு நான் வந்து அழைச்சிட்டு போறேன்," என்று அவளை, ஒரு முறை, அணைத்து, அவள் கண்களுக்கு முத்தம் பதித்து, சென்றான் .
அவன் சென்ற பிறகு, மனம் வெறுமை சூழ்ந்தது.
அங்கு அவளின் வீட்டினர் வறுபுறுத்தியும் உணவு ஏற்க மறுத்து, அவன் வீட்டிற்கு புறப்பட்டு விட்டான் .
வீட்டினில் சுமதி, அதற்குள் முழித்து இருந்து, அவரின் அனுமதி இன்றி , இனியா சென்றதற்கு, ஒரு கச்சேரி நடத்தியதற்கு, அன்புவிடம் இருந்து, அவருக்கு சாதகமான பதில் ஏதும் இல்லாமல், அவர் அமைதி ஆனார் .
"எதுக்கு மா, ரேஷ்மி பற்றி, இனியா , முன்னாடியும் அத்தை முன்னையும் சொன்னீங்க," என்றதும், தான் எதை பற்றி கேட்டால், இவன் என்ன கேள்வி நம்மிடம் கேட்கிறான், என்று சுமதிக்கு கோவம் வந்தது.
முதல் நாள், தனக்காக மகன் மனைவியை அடித்ததில், சிறிது தைரியம் வந்து, இனியாவை பற்றி, இன்னும் ஏற்றி விடலாம் என்றால், இவன் தன் மீதே, கேள்வி திருப்புவதா, என்ற கோவம் சுமதிக்கு .
அந்த பொண்ணுக்கு, ஒரு எதிர்காலம், இருக்குன்னு, யோசித்து பார்த்தீங்களா, விஷா அக்கா, இதுக்கு மேலயும் ரேஷ்மி விஷயத்தில தலையிட்டா, அது அக்கா வாழ்க்கைக்கு பிரச்சனை, அது தெரியாம , நீங்க அவ கூட சேர்ந்து அங்க, பேசிட்டு வந்து இருக்கீங்க .
இது நாதன் மாமாக்கு விஷயம் போச்சுன்னா, அதுக்கு பிறகு, உங்களுக்கு என்ன மரியாதை அங்க இருக்கும்ன்னு யோசிச்சீங்களா," என்றதும் தான், அவரும் நேற்று, நடந்த விதம் நினைத்து, ஒரு வித பயம் .
எப்படியோ, உறவினர்கள் மத்தியில் விஷயம் பரவி, சம்மந்தி வீட்டிற்கு சென்றால், என்ற பயமே, அவரின் முகத்தில் அப்படியே காட்சியளித்தது.
"நான் இப்பவும் சொல்றேன் மா, அங்க அவ கை நீட்டி பேசிய கோவம் தான் எனக்கு வருத்தமே, தவிர, நீங்க செய்தது எதுவும் சரின்னு சொல்ல மாட்டேன்."
"எதுக்கு அத்தைக்கு, ஒரு போன் கூட போடல, நீங்க என்ன செய்யறீங்கன்னு, தெரியுமா, இனியா மேல இருக்கும் கோவத்தில், இந்த மாதிரி, ஏதாவது ஒன்னு செய்து, எனக்கு தான் அவமானத்தை ஏற்படுத்துறீங்க."
எனக்கு ஒரு அவமானம்ன்னா உங்களுக்கு எதுவுமே இல்லையா," என்று இப்பொழுது, ஆதங்கத்துடன் அவன் கூறியதில் சுமதி அவரின் தவறை, நினைத்து, வருந்தினார்.
இது மாதிரி, நான் நாதன் மாமாக்கு அழைப்பு கொடுக்கலன்னா , பரவாயில்லையா, என்றதும், அவனை நிமிர்ந்து பார்த்தார்.
என்ன என்று பதில் கூற, அவரின் ஆசை மகள் வாழும் வீட்டிற்கு, மரியாதை கொடுக்காமல் போனால், அங்கு மகள் மனம் வருந்துமே .
"இப்போ சொல்றேன் கேட்டுக்கோங்க, இங்க இனியாவுக்கு, என்ன மரியாதையோ, அதே மரியாதையை , நான் விஷா அக்காக்கு கொடுக்குற , மாதிரி ஆகிடும், அவ வீட்டு மனிதர்களுக்கு தர வேண்டிய மரியாதையை நீங்க தந்து தான் ஆகணும், என்னை நம்பி வந்தவளுக்கு, நான் பதில் சொல்லி தான் ஆகணும்."
இதற்கு மேல், சுமதியால், ஏதேனும் கூற முடியுமா, அவர் அவனிடம் பதிலளிக்கவும், விஷாகாவின் ஆலோசனை தான் தேவை .
தங்கை மற்றும் அன்னைக்கு காலை உணவு , ஒரு உணவகத்தில் இருந்து, வர வைத்து, அவன் முதலில் செய்த வேலை, வீட்டு வேலை செய்வதற்கு, அவனின் டிராவெல்ஸில் வேலை செய்யும் ஒருவரிடம் கேட்டான் .
அவரும் அவருக்கு தெரிந்த இடத்தில ஏற்பாடு செய்து, வீட்டு வேலைக்கு, என்று ஒரு பெண்மணி வந்தார் .
இதற்கு முன்பும் இனியாவிடம் கேட்டான், அப்பொழுது இனியா தான் வேண்டாம் என்று மறுத்தாள் .
ஆனால், இனியாவின் வார்த்தை, அவனை வெகுவாக தாக்கியது.
என்ன இல்லை, என்னிடம், என் மனைவி, அவளின் சொந்த வீட்டிலேயே, வேலைக்காரி, என்று உணர வைத்த நிலை எதற்கு, உருவானது, என்று, நினைத்து, அதற்கு முதல் ஏற்பாடு செய்தான் .
சுமதி அதற்கு மறுப்பு தெரிவிக்காத வாறு, அவரின் முன்பே, "என்னோட வைப் , இப்போ, அவங்க அம்மா வீட்டுக்கு போய் இருக்காங்க, அவங்க வந்ததும், என்ன என்ன செய்யணும்ன்னு, அவங்க கிட்ட கேட்டுக்கோங்க, இப்போ, வீடு கிளீன் செய்து, மத்தியானம், அம்மா கிட்ட கேட்டு, குக் செய்துட்டு, போங்க," என்று வேலை செய்யும் பெண்மணியிடம் கூறினான் .
"ஹ்ம்ம் , அவ வந்து தான் வேலை சொல்லனுமா, இவ்வளவு நாள், நான் சொல்லி, அவ இங்க வேலை செய்துட்டு இருந்தா, இப்போ அவளுக்கு ஒரு வேலைக்காரியா, என்று பெருமூச்சு, எழுந்தது.
காலையில் இருந்து, அவரும் விஷாகாவிற்கு, பல முறை அழைத்து பார்த்தார்.
மகளிடம் இருந்து, எந்த பதிலும் இல்லை, இல்லையெனில், இங்கு நடக்கும், கூத்தினை, மகளுக்கு, ஒப்பித்து இருப்பார்
அங்கு விஷாகா வீட்டினில், எப்பொழுதும் காலையில், சீக்கிரம் கிளம்பும் விஷாகா, இன்று பத்து மணியாகியும் கீழே வராமல் இருக்கவே, தேவகிக்கு பதற்றம் .
எப்பொழுதும், சரியாக, எட்டு மணிக்கு , விஷாகா, காலை, உணவுக்கு, வந்து விடுவாள்.
அவளுக்கு எல்லாம் சரியான நேரத்தில் நடக்க வேண்டும், இல்லையெனில் வேலை செய்வோரை, குதறி எடுப்பாள் .
இன்று மருமகளின் வருகைக்கு தாமதம், அவளுக்கு ஏதேனும் உடல் நலம் சரியில்லையா, என்ற வருத்தம் .
ஆகையால், வினோத்திடம் கேட்டதற்கு, "அம்மா, அவளா வந்தா சாப்பிட போறா, நீங்க எதுவும் வொரி பண்ணிக்காதீங்க, அவ ஒன்னும் குழந்தை இல்லை, முக்கியமா, அவளை கவனிக்குறேன்னு, ரூம் வரை போய் கூப்பிட்டிங்கன்னா, பாருங்க, நேத்து, எவ்வளவு வேலை, பார்த்தீங்க, போய் ரெஸ்ட் எடுங்க," என்று அவனின் மகளை, ஒரு முறை அறைக்குள் சென்று பார்த்து விட்டு, அவன் கம்பெனிக்கு சென்று விட்டான் .
அங்கு விஷாகா , முதல் நாள் வினோத், அவளை அடித்த அதிர்ச்சியில் இருந்து, அதன் பிறகு இருவருக்கும் நடந்த வாக்கும் வாதம் வரை, அதையே மனதில் ஓட விட்டு, ஒரே நாளில், அவளின் நிலையை நினைத்து, வருந்தினாள் .
வினோத்து அடித்தும், தூக்கத்தில் இருந்து தெளிவு பெற சிறிது மணி துளி, கழித்தும் , முதலில் அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.
பிறந்ததில் இருந்து, இது வரை, அவளை யாரும் அடித்தது, இல்லை.
அப்படி செல்ல சீமாட்டியாக வலம் வந்தவள், இன்று காதல் கணவனின் கையால் , அடி வாங்கியதில், அவளுக்கு வாழ்க்கையில் தோற்று போன உணர்வு .
"என்ன, வினோத், என்ன பைத்தியாகார வேலை, இது," என்று கர்ஜித்தாள் .
அழுதாள் அவள், விஷாகா அல்லவே .
"ஆமாம் டீ , சொந்த தம்பிக்கும், அவன் பொண்டாட்டிக்கும், சண்டை மூட்டி விட்டு நிம்மதியா தூங்குவ, நான் அதுக்கு ,உன்னை அடிக்க கூடாதா, " நக்கலாக அவன் கேட்டான் .
அதற்கு தனக்கு இந்த அடியா , அவளால் நம்ப முடியவில்லை , வினோத்திற்கும் அதுவே, மனதில் முழுதும் தங்கைக்கு அவள் ஏற்படுத்திய, அவ நிலை தான் வியாபித்து இருந்தது, அந்த கோவத்தை, இவளிடம் காட்ட வேண்டும் என்று உள்ளம் துடித்தாலும், தங்கை இதில் தலையிட வேண்டாம் என்று கூறிவிட்டாள் .
ஆகையால், அவள் இது வரை,செய்த, அவன் கண்களுக்கு சாதாரண விஷயம் என்று தெரிந்த விஷயமெல்லாம், கண்முன் உலா வர, அவளின் தவறுகள் ஒவ்வொன்றும் சுட்டி காட்டி, அவளின் கன்னங்களுக்கு, அடிகளை பரிசாக தந்தான் .
"நீங்க செய்றது சரியில்லை, அவன் விஷயத்தில நான் எப்படியோ இருக்கேன், உங்களுக்கு என்ன பிரச்னை, அதுக்கு இப்படி ரியாக்ட் பண்ணுவீங்களா, "
"அப்படி தான் டீ பண்ணுவேன், ஏன்னா , நீ பண்ற, லூசு தனமான வேலை எல்லாம் என்னோட வீட்டுல இருந்து தானே செய்றே , இது என்ன உங்க அப்பன் வீடுன்னு நினைச்சியா, எங்க வீட்டுக்கு வந்த, விருந்தாளியை நீ எப்படி அவமான படுத்தலாம் ," என்றான் .
"எங்க அப்பாவை மரியாதையா, பேசுங்க, இந்நேரம் அவர் இருந்து இருந்தா, நீங்க செய்த வேலைக்கு, உங்களுக்கு நல்லா பதிலடி கொடுத்து இருப்பாரு,"
"எது அந்த ஆளு , மட்டும், இருந்து இருந்தா, பொன்னையா வளர்த்து வெச்சிருக்கே, பேயை என் தலையில கட்டி வெச்சிட்டியேன்னு, அவன் சட்டையை பிடிச்சி நல்லா கேள்வி கேட்பேன் ."
இன்று வினோத்திற்கு என்னவானது , என்று தான் பார்த்தாள் .
"சரியில்லை, வினோத், உங்க செயல் எதுவும் சரியில்லை."
"அன்புவிற்க்கு எப்போ இருந்து இவ்வளவு சப்போர்ட், அவனுக்காக பேசி, நமக்குள்ள, சண்டை வரணுமா, எப்படி கை நீட்டி, அடிக்கலாம், நான், இதுக்கு உங்க மேல கம்ப்லேய்ன்ட் கொடுத்தா என்ன ஆகும்ன்னு தெரியுமா ,"
இந்த வார்த்தையில் வினோத் அவளை அடி பட்ட பார்வை பார்த்தான் .
"கொடு டீ, கொடு, ஏன் டிவோர்ஸ் அப்ளை பண்ணு , நான் நிம்மதியா இருப்பேன், என்னை பிடிச்ச, பேய், போச்சுன்னு நிம்மதியா இருப்பேன் "
அவள் பேசும் போது தெரியாத வலி, இப்பொழுது கணவன் கூறியதும், அவள் மனதை சுருக் என்று தைத்தது ,"வினோத், யு ஹர்டிங் மீ , என்ன ஆச்சு, உங்களுக்கு, நம்ம பசங்க, என்கிட்ட , நீங்க நடந்துக்குறதை பார்த்தா , அவங்க எப்படி, என்னை மதிப்பாங்க ."
அவனுக்கு உடனே சிரிப்பு வந்து விட்டது, அந்த இருளில், அவனின் கர்ஜனையான சிரிப்பொலியில், அவள் மேனி நடுங்க, அவனை பார்த்து கொண்டிருந்தாள் .
"பசங்களை பற்றி இப்பவும் கவலை இல்லை, உன்னை நான் அடிக்குறதை பார்த்தா, உனக்கு மரியாதை போய்டும்ன்னு தான் கவலை, அது சரி, காலையில நம்ம பொண்ணு, அவ்வளவு வயிற்று வலிக்கு துடிச்சா, அவ கிட்ட கூட நீ போலையே , நீயா, அவங்களை, பற்றி கவலை பட போற,"
"பசங்களை, சரியா பார்த்துக்காத நீ அவங்களுக்கு வேண்டாம், ஏன் இந்த வீட்டுக்கு, நீ நல்ல, மருமகளாவும் இல்லை, ஏன் தான் உன்னை லவ் செய்தேனோ, இருக்கு ."
"இனி, என் வீட்டுல, இந்த வீட்டு மருமகளா மட்டும் இருக்குறதா இருந்தா இரு, இனி எதுக்கும் நீ அன்பு விஷயத்தில தலையிட்ட, உனக்கு அவ்வளவு தான் மரியாதை."
"உங்க அப்பன், உனக்கு கொடுத்து வீட்டுல போய் இருந்துக்கோ, "
"உன் ஆட்டத்துக்கு, எங்க வீட்டு பேரும் சேர்ந்து கெடுது , என்னை விட்டுடு," என்று அவளின் முகத்தை நிமிர்ந்து பார்க்காமல், கட்டிலில் போய் படுத்து விட்டான் .
அவனுக்கும் வருத்தம் தான், காதல் மனைவியை பேசிய வார்த்தையில், ஆனால் , தங்கைக்கு அவள், ஏற்படுத்திய தவறு, இதற்கு மேலும், இப்படியே விட்டால், சரி வராது, என்று, நினைத்தான் .
காலையில் அவளை ஏறெடுத்தும் பார்க்காமல், அவன் வேலைக்கு சென்று விட்டான் .
அவளின் சிவந்த முகத்தில் கணவனின் கை தடம், தெரிய, வெளியே செல்ல தயங்கி, அறைக்குள்ளே, அடைந்து கிடந்தாள் .
 
achuma

Well-Known Member
#2
மிகவும் தாமதமாகியதற்கு, மன்னிக்கவும் பிரெண்ட்ஸ் ,
இனி தொடர், பதிவு கிடைக்கும்,இந்த மாதத்தில் கதையை முடித்து விடுவேன் .
சென்ற பதிவிற்கு உங்களின் விருப்பங்களுக்கும் , கருத்துக்களுக்கும் எனது நன்றி.
இந்த பதிவிலும் உங்களின் நிறை குறைகளை, என்னிடம் பகிர்ந்துகொள்ளுங்கள் நட்புக்களே.
All be safe
take care friends:)(y)
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement