அன்பின் இனியா 20

Advertisement

achuma

Well-Known Member
அதிதி ஊருக்கு சென்றும் பத்து நாட்களுக்கு மேலும் ஆகியது.
அடுத்த நாள் அவளின் வருகை என்று இருக்கும் நேரத்தில், அன்பு மஹாராஷ்ட்ரா செல்ல இருக்கிறான் .
அதற்கு முன்பே அவன் பனியின் நிமித்தம் அவனின் மேனேஜரை ஊருக்கு அனுப்பி வைத்தான் .
சுற்றுலா பயணிகளுக்கு, பெரிதும் மும்பை பகுதியை சேர்ந்த காரணத்தால் அங்கும் ஒரு ஆபீஸ் திறக்கும் முயற்சியில், ஒரு இடமும் கிடைத்து, அதற்கான, முன் கட்டண தொகையும் முடிந்த தருவாயில், அங்கு புதிதாக முளைத்த புது எதிரியால், அவன் நாளை ஊருக்கு புறப்பட இருக்கிறான்.
அன்பு அவனின் டிராவெல்ஸில் வேலை பார்க்கும் அவனின் மேனேஜரை, அவன் மஹாராஷ்ட்ரா செல்லும் முன்பே அனுப்பி வைத்தான், அங்கு அவன் தேர்வு செய்திருக்கும் இடம் பற்றிய கட்டமைப்பு வேலைக்கு .
அனால் திடீர் என்று, அந்த இடம் வேறு ஒருவருக்கு கை மாறியதாகவும், தன்னை இங்கு இதற்கு மேலும் இருந்தால், உயிர்க்கு ஆபத்து என்று மிரட்டியாதாக, மேனேஜர் கூறியதில், "இது என்ன டா, நமக்கு கண்ணனுக்கு தெரியாத புது எதிரி?" என்று தான் அவனுக்கு தோன்றியது.
அந்த விஷயத்தை, அவன் வீட்டினர்க்கும் தெரியப்படுத்த வில்லை.
ஏதும் தெரியாமல் எதற்கு மற்றவர்களை பயமுறுத்த செய்ய வேண்டும், என்று அவன் புறப்பட தயாரானான் .
சரனிடம் மட்டும், தான் வரும் வரை, டிராவெல்ஸ், கவனிக்குமாறு, கூறினான் .
இனியாவிடம் அவளை வந்து டிராவெல்ஸில் இருக்குமாறு கூறினான் .
ஆனால், சுமதி அவளை பொழுதும் வேலை என்று வாட்டி எடுப்பதில், அவளால் முடியாது என்று மறுத்து விட்டாள் .
அன்று இரவு, இனியா அறைக்குள் வந்ததும், அங்கு கதவு பக்கம் நடை பயின்றிருந்த அன்பு, வேகமாக கதவை சாற்றி , மனைவியை, இடையோடு சேர்த்து அவன் மடி மீது அமர்த்தி கொண்டான் .
ஏதோ சொல்ல முடியா வேதனை, அவன் மனதை வாட்டியது.
திருமணத்திற்கு பிறகு மனைவியை விட்டு, முதல் பிரிவு.
ஆனால், ஏதோ நடக்க இருக்கிறது, என்று அவனின் மனது எச்சரித்து கொண்டே இருக்கிறது.
அது வேறு அவனை ஒரு குழப்பத்தில் தள்ளியது .
"ஹ்ம்ம், என்ன பாஸ் ரொம்ப அமைதியா இருக்கீங்க, ட்ரெஸ் எல்லாம் எடுத்து வைக்கணும், விடுங்க என்னை," என்று, அவனின் அணைப்பில் இருந்துவிலக முயற்சி செய்தாள் .
கணவனின் பயணம் அவளைக்கும் ஒரு பக்கம் வருத்தம் தான் என்றாலும், அதனை மறைத்து சாதாரணாமாக பேச நினைத்தாள் .
எங்கு தன் முகத்தை பார்த்தல் அவளின் கவலை, அவனின் வேலையே தடை செய்யுமோ ,என்று அவனிடம் இருந்து தப்பிக்க, வேலையை காரணம் காட்டினாள் .
அவனுக்கு தெரியாத, மனைவியின் தவிப்பும், குரல், வேற்றுமையும் .
"இனியா இருந்திப்பியா," என்று அவளிடம் உறுதி படுத்தி கொள்ள கேட்டானா, அல்லது, அவனால், மனைவியை விட்டு இருக்க முடியா தவிப்பா என்று பிரித்தறியா ஒரு கேள்வி அவனிடம்.
ஆனால், இனியா, அவனின் தவிப்பு புரிந்து கொண்டாள் .
அவனை பார்த்து நேருக்கு நேராக முறைத்து, "போங்க போங்க, பொண்டாட்டிய விட்டு கிளம்புற நேரம் தான் இந்த கேள்வி எல்லாம் வரும், எனக்கு பெருசா எந்த எதிர்ப்பு பார்ப்பும் இல்லை, இது வேணும், அது வேணும்னு நான் ஒன்னும் உங்களை தொந்தரவு செய்யவும் இல்லை, நீங்க தான், இருக்கிறது பத்தாதுன்னு, இன்னும் மேல மேல சேர்க்க இன்னொரு இடத்துக்கு இப்போ பறக்குறீங்க," என்று அவளின் தவிப்பு அனைத்தும் வார்த்தைகளாக வெளி வந்தது.
மனைவியை இன்னும் இறுக்கமாக அணைத்து அவள் கண்களில் அழுந்த முத்தம் பதித்து, "இன்னும் நிறைய ஏரியால, நம்ம டிராவெல்ஸ் பற்றிய சரியான லிங்க் கிடைக்காம, இருக்கு மா, அங்க ஒரு, ஆபீஸ் இருந்தா நல்லா இருக்கும்னு தான், இந்த ரிஸ்க் எல்லாம்."
"சத்தியமா, ஜஸ்ட் நான் அப்பப்போ, போய் பார்த்துட்டு வருவேனே தவிர, நம்ம மேனேஜர், அப்பறம் அருண் தான் அங்க இருப்பாங்க." என்று அவளிடம் விளக்கமளித்தான்.
"ஹ்ம்ம் பார்க்கலாம் பார்க்கலாம்," கடுப்பில் அவள் .
ஏற்கனவே அவன், இரவு நேரங்களில் அவனின் தூக்கம் தொலைத்து, செய்யும் சாப்ட்வேர் வேலையும், இவள் பல முறை விடு மாறு கேட்டும் அவன் அதில் வேறு வேலை செய்து வருகிறான்.
இப்பொழுது புதிதாக வேறொரு கிளை தொடங்குவது வேறு, எதற்கு இவ்வளவு, உழைப்பு, இரவு பகல் பாராமல், உடல் நலம் பற்றிய அக்கறை இன்றி, உண்மையில் வீட்டினிலும் பெரிதாக செலவுகள் என்று ஒன்றும் இல்லை, அதிதிக்கும், அவள் தெரிந்த வரை, தேவைக்கு ஏற்ப சேர்த்தாகிற்று, இன்னும் எதற்கு, இப்படி பணம் சம்பாதிக்க துடிக்கிறான், என்று தான் அவளுக்கு ஒன்னும் விளங்கா நிலை .
காரணம் கேட்டாள், குடும்பத்திற்கு என்று ஒரு பதில் வேறு.
அந்த கோவம் ஒரு பக்கம் இருந்தாலும், கணவன், வெளியூர் செல்லும் நேரம், எந்த மறுப்பும் கூறாமல், அவனின் பயணத்தில் எந்த தடையும் தன்னால், ஏற்பட கூடாது, என்று அவளின் வருத்தம் மறைத்து, அவள் நடமாடி வந்தால், இப்பொழுது, அவனும் அவளை, பிரிந்து, ஊருக்கு செலவதில், வருத்தம் தெரிய, அவளுக்கு கோவம் வந்து விட்டது, அப்படி என்ன, அவன் அங்கு சென்றே ஆகா வேண்டும் என்று இவளும், வீம்புக்கு அவனிடம் நின்றாள் .
கண்கள் விரிந்து, புசு புசு என்று கோவம் மூச்சுக்கள் விட்டு கொண்டிருக்கும் மனைவியின், மூக்கின் நுனியை சுண்டி விட்டு, " எப்பா, என்ன கோவம் வருது, என் பொண்டாட்டிக்கு," என்று அவள் நெற்றியில் முட்டினான்.
"இது தான், பைனல், இனி எங்கேயும் உன்னை விட்டு போக மாட்டேன், ப்ளீஸ் டீ, புரிஞ்சிக்கோ, என்று அவளை கெஞ்சி கொஞ்சி, ஒரு வழியாக, அடுத்த நாள், ஊருக்கு சென்றான் .
கணவன் மனைவி, இருவருக்கும், கருது வேறுபாடு, ஏற்படும் என்று தெரிந்து இருந்தால், அப்பயணம் அவன் சென்று இருக்கவே மாட்டான் .
ஒவ்வொரு வேலைகளிலும், அவனின் சீண்டல்களும், கொஞ்சல்களும், மனதை நிறைக்க, அவனின் எண்ணத்துடனே, வளைய வந்தாள் இனியா .
அன்பு ஊருக்கு சென்ற அன்று மாலை, அதிதி, அவள் பாட்டி வீட்டில் இருந்து வந்து சேர்ந்தாள் .
அதிதியுடன், அரட்டை அடிப்பது, வீட்டினில் இருக்கும் வேலைகள் செய்து விட்டு, கணவனின் எண்ணங்களை அசை போடுவது, வீட்டிற்கு அழைத்து சிறிது நேரம் பேசுவது, என்று அவளின் நாட்கள் கடந்தது .
உண்மையில் இனியா விஷாகாவை பற்றி ஓரளவரிக்கு தெரிந்து கொண்டாள் .
சுமதியே பரவாயில்லை என்னும் அளவிற்கு விஷாகாவின் செயல்கள் இருந்தது.
தினமும் விஷாகா சுமதியை காணும் சாக்கில் வந்து செல்வது, ஒரு வித எரிச்சலை கொடுத்தது என்றே கூறலாம்.
இனியாவை சீண்டும் விதமாக, அவளின் பேச்சுக்கள் இருந்தது.
முடிந்த அளவிற்கு, பொறுமை காத்து, அமைதியாக அவள் வேலிகளை மாட்டும் செய்து கொண்டிருந்தாள் .
அது மேலும் விஷாகாவிற்கு அவள் மீதான கோவத்தை தூண்டியது, என்றே கூறலாம் .
"என்ன மா, ரொம்ப திண்ணக்கமா, இருக்கா, "என்று விஷாகா சுமத்தியிடம் கேட்டதற்கு, "ஹ்ம்ம் நீயே பார்க்கிறியே, மா, அவ திமிரா இருக்குறது தான், எனக்கும் கடுப்பாகுது, பதிலுக்கு பேசினாலும், அவளோட, சண்டை போட முடியும், ஆனா , நீ என்ன வேணும்னா , கத்திக்கிட்டு இரு அப்படினு, தெனாவட்டா சுத்துறா பாரு, அது தான் மா, எனக்கும் கடுப்பாகுது ,"என்றார் .
"நீ அவள, சரியா அடக்கி வைக்கலன்னு அர்த்தம், அதிதிக்கு முன்ன நான் மூத்தவ, என்னோட அப்படி ஒட்டி பேசுறாளா, பாரு, தினமும் தான், இங்க வந்துட்டு போறேன், எனக்கு முக்கியத்துவம் கொடுக்குமா, அந்த ஒட்டடை குச்சி கூட சுத்திட்டு இருக்கா பாரு," அதற்கும் பொருமி கொண்டிருந்தாள் .
அப்படியே இனியா பேச வந்தாலும், தனக்கு சமம் அல்ல என்று விஷாகா, முதலில் தவிர்த்து வந்தது எல்லாம், வசதியாக மறந்து விட்டாள் .
நாளடைவில், இனியாவிற்கு, விஷாகாவின் வருகை ஒரு வித எரிச்சலை கொடுத்தது.
அதன் பொருட்டு, அதிதியுடன் மாலை கோவில்களுக்கு, சென்று விடுவாள் .
இறைவன், தரிசனம் முடிந்து, கோவில் சுற்றி வந்து, அதன் பிறகு, அங்கிருக்கும் மண்டபத்தில் சிறிது நேரம் இருவரும் அமர்ந்து விடுவர்.
மாலை, ஏழு மணி வரை, விஷாகா, சுமதி இல்லத்தில் இருப்பாள், என்றால், இவர்கள் அவள் புறப்பட்டு சென்ற பின்னரே வீடு வருவார்கள் .
அதுவும் விஷாகாவின் கோவத்தை அதிகமாக்கியது, தன்னை தவிர்க்கவே இப்படி செய்கிறார்கள், என்று, ஒரு முறை நன்றாக இருவரையும் கத்தி விட்டாள் .
வீட்டினில் இருந்தால், எந்த வேலை செய்தாலும், ஒரு குறை குற்றம், கண்டுபிடிப்பது, தகுதிக்கு ஏற்றது போல், பெண் எடுக்க வில்லை, என்று நேரடியாகவே இனியாவை சாடுவது, இப்படி தொடர்ந்து கொண்டே இருந்தால், எங்கு தன்னையும் மீறி வீட்டிற்கு வந்திருக்கும், நாத்தனாரிடம், கோவம் வெளிப்பட்டு விடுமே, என்று பயந்து, அவளையும் அவளின் பேச்சையும் தவிர்த்தாள், இப்பொழுது, கோவில் சென்று வருவதற்கும் தடை விதிக்கிறாளே, என்று இனியாவிற்கும், அவள் மீது எரிச்சல் உண்டானது.
அவளுக்கு பொறுமை என்பதே, கிடையாது .
திருமணத்திற்கு பிறகு, அதிலும், அன்பு கணவனின், மீது கொண்ட அன்பே அவளின் பொறுமைக்கும், சகிப்பு தன்மைக்கும் முக்கிய காரணம் .
ஆனால், விஷாகா அப்பொறுமையை மிகவும் சோதிக்கிறாளே, என்று, அவள் மீது, ஒரு வித வெறுப்பு, இனியாவிற்கு உண்டானது.
ஒரு கட்டத்தில், விஷாகா கத்தியதும், "அண்ணி, துஷ்ட சக்திகளிடம் இருந்து, எங்கள காப்பாத்திக்க, வேண்டியே கோவிலுக்கு போறோம் அண்ணி ," என்று பாவமாக முகத்தை வைத்து கொண்டு, இனியா கூறியது, அதிதிக்கு சிரிப்பு வந்து விட்டது, அவள் உடனே, சத்தமாக சிரித்தும் விட்டாள் .
"ஹே, என்ன திமிரா, யாரை பார்த்து, துஷ்ட சக்தின்னு சொன்னே, என்ன பார்த்தா எப்படி தெரியுது," என்று தன் வாயாலேயே, அவளே, கூறி கொண்டாள் .
"அண்ணி, இப்போ எதுக்கு கத்துறீங்க, கூல், எங்களை காப்பத்து கடவுளேன்னு, தான் நாங்க வேண்டினோம், நான் யாரையும் மீன் பண்ணலையே, நீங்க ஏன் இவ்வளவு, கோவ படுறீங்க, முப்பது வயசுக்கு மேல ஆகுது உங்களுக்கு, இந்த டைம்ல, பொறுமையா இருக்குறது ரொம்ப பெட்டெர், சுகர், பீ பி, இது எல்லாம் வந்துடுமாம், அதுனால் கோவ படாதீங்க, உங்க ஏஜ் தான் எங்க அக்காவுக்கும், அவங்க எவ்வளவு பொறுமை அண்ட் ஸ்வீட் தெரியுமா," என்று அவள் அக்காவுடன் ஒப்பிட்டாள் .
"நீயே, எனக்கு ஈக்வல் இல்லை, நீ உன் அக்காவோட என்னை கம்பேர் பண்றீயா, " என்றதும், சுமதி இதற்கு மேல், மகனும் வீட்டில் இல்லாமல், இனியா ஏதேனும் மகள் மனம் நோகும் படி கூறி விட்டாள், மீண்டும் மகளின் வருகை நின்று விடுமோ, என்ற பயம்.
"இனியா, உனக்கு ரொம்ப வாய் கூடி போச்சு, விஷா மா, அன்பு வரட்டும், எப்படி பேசணுமோ, அப்படி பார்த்துக்கலாம், நீ இப்போவே, ஏழு மணிக்கு மேல ஆச்சு பாரு, மாப்பிளை, உங்க வீட்டுக்கு, வர நேரம் ஆச்சு, கிளம்பு மா," என்று மகளை சமாதானம் செய்து, மருமகளை தீ பார்வை பார்த்தார் .
இனியாவும், சலிக்காமல், பதில் பார்வை பார்த்து, இரவு உணவு வேலை செய்ய சென்றாள் . மருமகளை, அடக்கும் வழி அறியாது, தன்னை அமைதியாக இருக்குமாறு கூறிய அன்னை மீது, அனல் பறக்க, வீட்டிற்கு வந்து சேர்ந்தாள் .
அங்கு வரவேற்பறையில் பிள்ளைகளின், கூச்சல், அவர்களின் உரக்க ஒலித்த, சிரிப்பு சத்தம், இது எல்லாம் சேர்ந்து அவர்களை அடிக்கும் வேகத்தில் வீட்டினுள் நுழைந்தாள் விஷாகா .
அங்கு சோபாவவில், பிள்ளைகளுடன், அரட்டை அடித்து கொண்டிருந்தாள் ரேஷ்மி .
ஒரு நிமிடம் அவளின் வரவை எதிர்பார்க்காமல் ஏற்பட்ட அதிர்ச்சியை மறைத்து, முகத்தை சாதாரணாமாக, மாற்றி கொண்டு, "எப்போ வந்தே ரேஷ்மி, சொல்லவே இல்லை, இன்னைக்கு வருவேன்னு," என்று மனதினில் பயம், ரேஷ்மி மீதான வஞ்சம் இருந்தாலும், முகத்தில் எதையும் காட்டாமல் சிரித்து வைத்தாள் .
"என் வீட்டுக்கு வர நான் யார் கிட்ட அண்ணி, சொல்லணும், வரணும்னு தோணுச்சு வந்தேன், என்று அவளும் பதில் கொடுத்தாள் .
"இவ வீடா, என்ன திமிரா பதில் சொல்றா, இப்படி எல்லாம் பேசுறவ இல்லையே, அந்த அன்பு நிராகரிச்சதால தானே, இந்த பேச்சு எல்லாம் இவ வாயில இருந்து வருது, நல்ல வேலை அவன் என்னை கோர்த்து விடாமா இருந்தானே அது வரைக்கும் இந்த பத்திரகாளி கிட்ட இருந்து தப்பிச்சேன், எல்லாம் அந்த இனியா, இவன் கல்யாணம் செய்யதாதால வந்தது".
.
"ஆனாலும், நான் சொல்றதை செய்துட்டு இருந்த இவ, கேட்டதுக்கு மட்டும், பதில் சொல்றவ,இன்னைக்கு இப்படி பதிலுக்கு பதில் பேசுறது எல்லாம் நல்லதுக்கு இல்லையே."
"ஹ்ம்ம், உங்க அண்ணன், வீடு நீ எப்போ வேணும்னாலும் வரலாம், யார் வேண்டாம்னு சொன்னா, ஒரு போன் கூட பண்ணலையே, அது தான், என்று மேலும், நயமாக பேசி, இது வினோத்தின் இல்லம், அவளின் கணவன் இல்லம் என்று வலியுறுத்தினால் வார்த்தையில் .
ரேஷ்மிக்கு தெரியாமல் போகுமா, என்ன, அதிலும், அன்பு மீதான காதலில், விஷாகாவல் வஞ்சகமாக ஏமாற பட்டு, தோற்று போன, சூடு பட்ட பூனையாக,இருக்கும் தற்போதைய ரேஷ்மி, விஷாகாவை பற்றி அவளின் எண்ணம் தெரிந்து கொண்ட, ரேஷ்மி இனியும் அவளை சும்மா விடுவதாக இல்லை.
"ஹோ அண்ணி, சின்ன திருத்தம், வினோத் அண்ணா வீடு இல்லை, என் அப்பா வீடு, அதுனால, நான் போன் கூட பங்கிட்டு வரணும்னு அவசியம் இல்லை," என்று எங்க அப்பா என்ற வார்த்தையில் அழுத்தமாக ஒலித்தது ரேஷ்மியிடம் இருந்து.
விஷாகா, அவள் முன்பு எப்பொழுதும் அவளின் கோவம் முகத்தை காட்டி பழக்கம் இல்லாததால், கோவத்தை வெளிப்படுத்தும் வழி அறியாது, பிள்ளைகள் மீது காட்டினாள் .
"ஹே, என்ன இரண்டு பேரும் அப்படி கூச்சல் போடுறீங்க, வீடா இல்லை என்னனு நினைக்கீறீங்க , என்று அடிப்பது போல் அவர்களிடம் நெருங்கியதும், பிள்ளைகள் இருவரும், அத்தையின் பின் சென்று மறைந்து கொண்டனர் .
"அண்ணி, சும்மா பசங்கள அடிக்க வர வேலை எல்லாம் வெச்சிக்காதீங்க," என்று கோவம் கொண்டாள் ரேஷ்மி, முதல் முறை, அவளின் கோவம் கண்டு, விஷாகாவுக்கு தான் அச்சம் உண்டானது, அதிலும் இந்த வீட்டிற்கு ரேஷ்மி செல்ல மகள் வேறு. ஏற்கனவே, நாதன், அன்பு இனியாவின், விருந்திற்கு பிறகு, இவளிடம் பேசுவதில்லை.
இதில் ரேஷ்மியை ஏதேனும் கூறி விட்டாள், அது வேறு பிரசச்சனை, என்று விஷாகா தான் பின் வாங்க வேண்டியதானது.
"இல்ல, ரேஷ்மி, இப்படி சத்தம் போடுறாங்க, வெளிய கேட் வரை இவங்க குரல் கேட்டுது, டிசிப்ளின், இல்லாம போய்டும், கண்டிச்சா தான் சரியா வருவாங்க என்று," ரேஷ்மி அணைத்து மறைத்தார் போன்று நின்று இருந்த இரு பிள்ளைகளையும் முறைத்து கொண்டே கூறினாள் .
"நம்ம எண்ணத்திலே தான், ஒழுக்கம் இருக்கே தவிர, சத்தம் போட்டு, விளையாடுறதுல எல்லாம் ஒன்னும் இல்லை," என்று அண்ணியை பார்த்து சூடாவே பதில் தந்தாள் .
"என்ன ரேஷ்மி, வார்த்தை எல்லாம் ஒரு மாதிரி இருக்கு," என்று அமைதியாகவே கேள்வி எழுப்பும் தன் நிலையை நினைத்து, நொந்து கொண்டாள், விஷாகா .
"நான் சாதாரணமா தான் பேசுறேன் அண்ணி, நீங்க எதுக்கு, நான் பேசுற வார்த்தையில், வேறுபாடு பார்க்கறீங்க, உங்களையும் சரி, என்னையும் சரி, நம்ம வீட்டுல அடிச்சி வளர்க்கல, இப்போ நாம, மட்டும் ஏன் அந்த தப்பை, செய்யணும், சொன்னாவே புரிஞ்சிப்பாங்க, நம்ம பசங்கள, அடிச்சி திருத்தணும்னு இல்லை, நீங்க சொல்றது போல, பசங்க ஒன்னும், மோசமாவும் வளரல".
"என்னையும், அண்ணாவையும் எப்படி, எங்க அம்மா, அப்பா நல்ல விதமா , வளர்த்தங்களோ, அப்படி தான் பேரன், பேத்தியையும் வளர்க்கறாங்க"
" நீ ஒன்னும் இப்பிள்ளைகளை வளர்க்க வில்லை, அவர்களை தண்டிக்கும் உரிமையும் உனக்கு இல்லை என்று மறைமுகமாக விஷாகாவை தாக்கியது,அவளால் நன்கு உணர முடிந்தது.
தேவகியும் இரவு உணவிற்கான, ஏற்பாடுகள் முடித்து, வரவேற்பறைக்கு வந்து சேர்ந்தார்.
அதற்குள், வினோத், மற்றும் நாதன் அவர்களும், வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.
தங்கையின் வரவில் மகிழ்ந்த, வினோத், அவளின் தலையை பிடித்து, நன்றாக ஆட்டி விட்டு, "அருந்த வாலு, எப்போ வந்தே, எக்ஸாம் எப்படி போச்சு, என்று கேட்டபடியே, அவளின் அருகில் அமர்ந்தான் .
அவளும் அண்ணனின் தோல் சாய்ந்து, அண்ணியை ஓர கண்ணால் பார்த்து கொண்டே, "ஹ்ம்ம் , இந்த கேள்வியை யாராவது கேட்காம இருக்கீங்களா," என்று சலிப்பு போல் பதிலளித்தாள் .
"ஹ்ம்ம், வேற யார் மேடம் கேட்டாங்க, இவ்வளவு அலுத்துக்குறீங்க, என்று ஆசை மகளையும், சேட்டை மகனையும், மடியில் அமர்த்தி கொண்டான் .
அன்னை மீதான பயம், தந்தையின் மடியில் அமர்ந்ததும், கொஞ்சம் மட்டு பட்டது பிள்ளைகள் இருவருக்கும் .
"அண்ணி, தான் வேற யாரு, உங்க வீட்டுக்கு, சொல்லாமலே வந்துட்டேனா," என்று குறை பட்டு கொண்டாள் .
"இது என்ன, உங்க வீடு, எங்க வீடுன்னு பேச்சு," என்று மனைவியை பார்த்து கொண்டே, தங்கையிடம் கேள்வி கேட்டான். இப்பொழுதுஅவனுக்கும் விஷாகாவின் எண்ணங்கள் சிறிது புரிய ஆரம்பித்தது.
இன்னும் சிறு வயதில் இருக்கும் போட்டி, பொறாமை,தான் தான் முதலில் என்னும் எண்ணம், மனைவியிடம் சிறிதும் மாற்றமின்றி, அவளுடன் சேர்ந்து அவளின் பொறாமை, எண்ணங்களும் வளர்ந்து, குடும்பத்தை சிதைக்கும் ஆயுதமாக உருவாகி இருக்கிறது, என்று புரிந்து கொண்டான் .
ஆகையால், அவளிடம், தவறு என்றால், இப்பொழுது, நேரடியாக தவறை சுட்டி காட்டி, அவளிடம் கோவம் காட்டுகிறான் .
விஷாகாவிற்கு பயம், மாமனார் வேறு, அண்ணன் , தங்கை பேச்சை கேட்டு கொண்டிருக்கிறார்.
இவள் ஏதேனும் கூறுவாளோ, என்ற பயம்.
விஷாகாவின், பயந்த முகம், பார்த்த மகிழ்ச்சியில், ரேஷ்மி, வேறு பேச்சிற்கு மாறினாள் .
குடும்பம் மொத்தமும், ரேஷ்மியின் பேச்சிற்கு, புன்னகை முகத்துடன், செவிசாய்க்க ஆரம்பித்தனர்.
"இது ஊருக்கு போற வரைக்கும் நமக்கு, தலை வலி, இவ பேச்சும் புதுசா இருக்கு, என்ன நடந்து இருக்கும்" என்ற குழப்பத்துடன், அந்த இரவு, விஷாகாவுக்கு சென்றது.
எந்த வீட்டிற்கு, செல்ல கூடாது என்று அன்பு கட்டளை போல் கூறினானோ, அந்த வீட்டிற்கு, அடுத்த நாள், செல்ல நேர்ந்தது, இனியாவிற்கு.
இருவரின் ரேஷ்மி மற்றும் இனியா நேரடி சந்தீப்பு, விஷாகாவால், இனியாவிற்கு ஏற்படும் குழப்பம்.
அன்பு மற்றும் இனியாவிற்கு, ஏற்படும் கருத்து வேறுபாடு.
அடுத்த பதிவில்.









































 

achuma

Well-Known Member
தாமதத்திற்கு மன்னிக்கவும் நட்புக்களே,
அடுத்த பதிவு, வரும் வியாழன் அன்று.
சென்ற பதிவிற்கு உங்களின் கருத்துக்கள் மற்றும் விருப்பங்களுக்கு நன்றி
உங்களின் ஆதரவு தேவை பிரெண்ட்ஸ்
all take care :love:(y)
 

Saroja

Well-Known Member
இன்னும் என்ன கூத்து செய்ய போறா
விஷாகா
அன்பு ஊருக்கு போனது
ஏதாவது பிரச்சினை வருமா
 

achuma

Well-Known Member
இன்னும் என்ன கூத்து செய்ய போறா
விஷாகா
அன்பு ஊருக்கு போனது
ஏதாவது பிரச்சினை வருமா

Thank you(y)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top