அன்பின் இனியா 20 1

Advertisement

achuma

Well-Known Member
இலக்கியா, அவள் நாத்தனார் தாரணியின் வருகைக்கு பிறகு, மிகவும் மனதளவில், பலகீனமாக உணர்ந்தாள் .
அவளின் மாமியார், ஏதேனும் கூறினாலும், அதனை கடந்து பழகிய இலக்கியாவிற்கு, தாரணியின் குத்தல் பேச்சுக்கள் மட்டும், அப்படி விட்டு செல்ல முடியாமல், தவிர்த்தாள் .
இதோ, தாரணி அவளின், பிள்ளைகளுக்கு, விடுமுறை விட்ட உடனே, வந்தாகிற்று.


பள்ளி திறப்பதற்கு முதல் நாள் தான் மீண்டும் அவளின் புகுந்த வீட்டிற்கு செல்வாள்.
எல்லா வருடம் போல், இந்த விடுமுறைக்கும், மோகன், அவரின் சம்மந்தியிடம், மகளையும் பிள்ளைகளையும், விடுமுறைக்கு அனுப்பி விடுமாறு, அழைப்பு விடுத்தார்.
வழக்கம் போல், இலக்கியாவின் மாமியார், அதற்கு மறுப்பு தெரிவித்து, அப்பொழுதே அப்பேச்சிற்கும் முற்று புள்ளி வைத்தார்.


ஆனால் , இந்த வருடம், இலக்கியாவிற்கு, இவ்விஷயத்தை, அப்படியே விட்டு விட முடியாமல், தவித்தாள் .
அவள் மனதில் தான் மட்டும் ஏன், அன்னை வீட்டிற்கு செல்ல கூடாது, என்று ஒரு கேள்வி.
ஏன் தாரணியோடு கூட தன்னை, ஒப்பிட்டு பார்த்து கொண்டாள் .


"அவள் மட்டும், அன்னை வீட்டில் சீராடலாம் , தான் மட்டும் பிறந்த வீட்டிற்கு செல்லும் பாக்கியம் இல்லையா" என்று மனதில் ஒரு ஆதங்கம் .
ஆகையால், இரு முறை அவளும், அவள் மாமியாரிடம் அனுமதி கேட்டு விட்டாள் .


எப்பொழுதும் இல்லாமல், அவரின் மறுப்பிற்கு பிறகும், இலக்கியா இரண்டு முறை கேட்டது வேறு, அவருக்கு அவள் மீது அப்படி ஒரு கோவம்.

அதிலும் ஏற்றி விட மகள் வேறு அருகினில் இருப்பதால், இலக்கியாவின் நிலை தான் மோசமாகியது.
அவள் செய்யும் அனைத்து வேலைகளிலும் குத்தம் குறை, என்று நாள் முழுதும் அவளிற்கு, ஓய்வே இன்றி, உடல் அலுப்பு, மன உலைச்சல் என்று போராடினாள் .


எப்பொழுது தான் தாரணி, செல்வாள், என்று நாட்களை நகர்த்தி கொண்டிருந்தாள் .
இதற்கு முன்பு எல்லாம் இலக்கியா, அப்படி நினைத்ததில்லை, அவளின் கடமை என்று பிறந்த வீட்டிற்கு வரும் தாராணிக்கு தன்னால் முடிந்தது என்று செய்வாள் .


இந்த முறை ஒரு சலிப்பு, தந்தையே, அவளிடம் நேரினில் கேட்டும் பிள்ளைகளை, அனுப்ப முடியா தன் நிலையை எண்ணி, அவள் மீதே அவளுக்கு ஒரு எரிச்சல் உண்டானது.
இனியா கூறியது போல், பொறுமையாக இருந்து எண்ணத்தை சாதித்தோம் என்ற எண்ணம் அவளுக்கு உருவானது .
அதிலும், தாரணியின் பிள்ளைகள், இருவரும் பதின் வயதில் இருப்பதால், அவர்களுக்கு, அடிக்கடி, ஏதேனும் திண் பண்டம் செய்வது, அவர்கள் கேட்ட உணவு வகைகள், வேறு, என்று வேலைகள் கூடியது.


பிள்ளைகளுக்கு செய்வதில் அவள் ஒன்றும், சலிக்க வில்லை, ஆனாலும், மனதில், அவளும் அவள் குழந்தைகளுடன், அன்னை வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று ஒரு குரல், அவள் மனதில் ஏக்கமாக ஒலித்து கொண்டே இருப்பதில், அவளால், வீட்டினில் சாதாரணமாக இருக்க முடியவில்லை.

செழியனிடம் கேட்டால், அவன் யாரையும் கேட்காமல், மனைவியை, அனுப்பி விடுவான் தான் .
ஆனால் அதன் பிறகு, வீட்டினில் நடக்கும் யுத்தத்திற்க்கு, யார் பதில் கூறுவது. அதே நேரத்தில் அவளின் நியாயமான ஆசைக்கு இத்தனை தடையா, வாக்கு வாதம் இன்றி, தன்னால், பிறந்த வீட்டிற்கு செல்ல முடியாதா, என்று ஏக்கம், கோவம், என்று அவள் மனம் முழுதும், இதை பற்றி சிந்தனையே.
அன்றும் அப்படி தான், அவள் தோட்டத்தில் காய் கறிகள் பறித்து கொண்டிருந்தாள் .


மனதில் ஏதேதோ எண்ணங்கள், தாரணியின் பிள்ளைகளும் ஆவளுடன் உதவிக்கு நின்றிருந்தனர்.
மகன், மகள் என்று இரு பிள்ளைகள் தாராணிக்கு .
"அத்தை, இன்னைக்கு என்ன ஸ்பெஷல்," என்று தாரணியின் மகள் கேட்டதற்கு, தன்னிலை அடைந்த இலக்கியா , "தேவி குட்டிக்கு என்ன வேணும்," என்று வெண்டைக்காய் பறித்து கொண்டே கேள்வி எழுப்பினாள்


"நீங்க எது செய்தாலும் ஸ்பெஷல் தான், ஆனா எனக்கு ஏதாவது ஸ்வீட் வேணும் இன்னைக்கு," என்றாள் .
"தேவி கேட்டா செய்துட்டா போச்சு" என்று பதிலளித்து, பறித்த காய்களுடன், வீட்டிற்குள் சென்றாள் .


"பார்த்தியா மா, நான் வந்து, ஒரு வாரத்துக்கு மேல ஆகுது,
என் பசங்களுக்கு, இரண்டு நாள் தொடர்ந்தா போலன்னு கூட என் மாமியார்காரி, காய் சோறு போட மாட்டா , இங்க தினம், என் பசங்களுக்கு வெறும் காய் சோறு போடுறா, ஏன் கறி எடுத்தா, அவ வீட்டு சொத்து அழிஞ்சி போய்டுமா, என் தம்பி காசுல, ஒரு ஆட்டு கறி என் பசங்க சாப்பிட கூடாதா," என்று வந்ததில் இருந்து, அவளின் ஆட்டு கறி ஆசையை, பிள்ளைகள் மீது திணித்து இலக்கியாவையும் குறை கூறினாள் .


"அவன் போய் , எடுத்து வந்தா தான் தாரிணி உண்டு, இங்க கடை எதுவும் பக்கத்தில் இல்லை, நானும் உங்க அப்பாவும், அதிகமா இப்போ, கறி எல்லாம் சாப்பிடுறது இல்லை, அதுனால், செழியனும் எப்போவாவது தான், வாங்குறான் ,இவ்வளவு செய்யறவ, அவன் வாங்கி கொடுத்தா, இதையும் செய்வா," என்று அன்னையே மருமகளுக்கு பரிந்து கொண்டு பேசியதில், தாரணியின் மனதில் கனல் மூண்டியது .
அதற்குள், வாசலில், அழைப்பு குரல் கேட்டதில் அன்னை மகள் இருவரும் வெளியே எட்டி பார்த்தனர்.


இலக்கியாவும், வாசல் சென்றாள் .
அங்கு அந்த தெருவில் குடி இருப்போரில் ஒருவரிடம், ஏற்கனவே, அவர் வெளியே செல்லும் நேரம் பார்த்து, வீட்டிற்கு என்று ஆட்டு கறி எடுத்து வர கூறி இருந்தாள் .
அங்கு இருப்போர், அனைவரும் ஒருவருக்கு ஒருவர், நல்ல நட்புடன் இருப்பதில் இலக்கியா கேட்டதும் அவரும் வாங்கி வந்தார்.


"இந்தா மா தங்கச்சி," என்று அவர் பையை கொடுத்ததும், "ரொம்ப தேங்க்ஸ் அண்ணா, வெளிய போயிட்டு இருந்தீங்க, உங்களுக்கு வேலை வெச்சிட்டேன், என்று வருந்தியதில்

"இதுல என்ன மா இருக்கு, சவாரிக்கு போயிட்டு வீட்டுக்கு வர நேரத்தில தானே வாங்கிட்டு வந்தேன், செழியனுக்கு இருக்குற வேலைல , அவனால இவ்வளவு தூரம் வந்து கொடுத்துட்டு போக முடியுமா, இருக்கட்டும் மா," என்று அவர் கூறிய தொகையை அவரிடம் கொடுத்து நன்றியுரைத்தாள் .
வீட்டிற்கு வந்ததும், "இன்னைக்கு, மட்டன் பிரியாணியும், தேவி குட்டிக்கு, ஸ்பெஷல், கேரட் அல்வாவும் செய்துடலாமா," என்று பிள்ளைகளிடம் புன்னகையுடன் கூறி, அவள் வேலையில் மூழ்கினாள் .


"ஹ்ம்ம், நல்ல கலரா வேற இருக்கா, எண்ணத்தை சொல்ல, இவ வேலை சொன்னா செய்யறதுக்கு, வரிஞ்சிக்கிட்டு வராங்க," என்று, தாரணியின் பேச்சு, அவரின் அன்னைக்கே பிடிக்காமல் போனது.

"தாரணி வார்த்தையை பார்த்து பேசு மா, ஊருல இருந்து ரொம்ப தூரத்தில நாங்க இருக்கோம், இங்க இருக்குற ஒருத்தருக்கு ஒருத்தர் தான், உதவி, இவங்களை நம்பி தான் செழியன், நாள் பூரா, எங்களை, விட்டுட்டு அவனால் வேலைல, கவனம் செலுத்த முடியுது.

"இதோ உனக்காக தானே வாங்கி வர சொல்லி இருக்கா, நமக்கு பிடிக்கலன்னு, எது வேணும்னா பேசிட கூடாது மா" என்று தாரணிக்கு, அறிவுரை வழங்கினார் .
"ஏற்கனவே செழியன் உன்னோடு பேசறது இல்லை, நீ இப்படி பேசியது அவன் காதுல விழுந்துச்சு, அப்பறம், ஒரேடியா, உன்னை ஒதுக்கிடுவான் பார்த்துக்க," என்று எச்சரிக்கை செய்தார்.


இலக்கியா இருக்குற இடம் கூட தெரியாது, அவளை, நீ இந்த மாதிரி எல்லாம் பேசாதா மா, என்று ஏற்கனவே மருமகள், ஏதோ பறி கொடுத்தது போல் வீட்டினில் வளைய வருவது, மனதை அறுக்கவே, இன்று தாராணியும் தரம் தாழ்த்தி பேசியதில் மகளை கண்டித்தார்.
அதில் முகம் கன்றி தாரணி, ஒன்றும் பேச முடியாமல், அங்கிருந்து சென்று விட்டாள்.


அன்று, விஷாகாவின் மகளுக்கு காலையில் எழுந்ததில் இருந்தே வயிறு வலி என்று, ஒரு வித அவஸ்தையில் இருந்தாள், அக்ஷிதா .

ரேஷ்மி வந்த பிறகு, பிள்ளைகள் இருவரும் அவளுடன் தான்.
காலை உணவிற்கு பிறகு, அக்ஷிதாவிற்கு, வலியின் காரணாமாக , அவள் அத்தையிடம், வலியை பற்றி கூறியதும், ரேஷ்மியும் வலிக்கான காரணம் அறிந்து, உடனே அக்ஷிதாவை தேற்றி, அவளின் தேவையை பூர்த்தி செய்து, அவளை ஓய்வு எடுக்க செய்து, அன்னையிடம், சென்றாள் .


தேவகி சமயலறையில் மதிய உணவிற்கான ஏற்பாட்டில் இருக்கும் நேரம், "அம்மா, நம்ம அக்ஷி, பெரிய பொண்ணு ஆகிட்டா மா, ரொம்ப வயிறு வலின்னு சொல்றா, இப்போ தான், அவள, ரெஸ்ட் எடுக்க சொல்லிட்டு வந்தேன்".
"கொஞ்சம் ஜூஸ் கொடுங்க" என்று பணியாளர்களிடம் கேட்டு, அக்ஷியை கவனிக்க சென்றாள் .


தேவகி, மகள் கூறிய செய்தியில், முதலில் ஒன்றும் புரியாமல், பிறகு, மகிழ்ந்து, பேத்தியை காண மாடிக்கு சென்றார்.
பெருகிய ஆனத கண்ணீரை அடக்கி, பேத்திக்கு முத்தம் வைத்து, "ராசாத்தி, ஒன்னும் இல்லை, டா, பயப்படாத, இது எல்லாம் பொண்ணுங்களுக்கும், சாதாரணம் வராது தான், உன் பிரெண்ட்ஸ்க்கும் தானே " என்று அக்ஷியை தேற்றி, உடனே நாதன், வினோத், விஷாகா என்று அனைவருக்கும் தகவல் பறந்தது .


அடுத்த அரைமணி நேரத்தில் மூவரும் தேவகி இல்லத்தில் .
இங்கு இனியாவின் வீட்டினில், இனியா வீட்டினை சுத்தம் செய்து கொண்டிருந்தாள் .


"அண்ணி, ஏதாவது ஒன்னு செய்துட்டே இருக்கீங்க, கொடுங்க நான் க்ளீன் பண்றேன்," என்றதும்
"அதி மா, தூசியோட தூசியா நீ எங்கேயாவது பறந்துட்ட, அப்பறம் உங்க அண்ணா வந்து, என் தங்கச்சிய காணும்னு தேட போறாரு".
"நீ ஒழுங்கா உன் ரூம்ல இரு போ," என்று கிண்டலடித்தாள் .


"ஹ்ம்ம் அண்ணி, போங்க உங்களுக்கு ஹெல்ப்புக்கு வந்தேன்ல என்னை சொல்லணும்" என்ற அதிதியின் சிணுங்களில், இருவரும் சிரித்து கொண்டனர்.
அதற்குள், சுமதிக்கு தேவகியிடம் இருந்து அழைப்பு வந்ததும், என்ன செய்தி என்றும் அதிதி, மற்றும் இனியாவிடம் கூறாமல், இருவரையும் அழைத்து சென்றார் .


அன்று வீடு சுத்தம் செய்வதற்கு என்று, சாதாரண பருத்தி உடையில், கொளுத்தும் வெயிலில், வேர்வை வேறு ஒரு பக்கம் என்று, இனியா இருந்தாள் .
அதற்குள், இருவரையும் அழைத்து கொண்டு, வீட்டினையும்
பூட்டி கொண்டு, வாசல் வெளி வரை சுமதி சென்று விட்டார்.


"அம்மா என்ன மா, அப்படி எங்கே போறோம், டிரஸ் எதுவம் நல்லாவும் இல்லை, வெயில் வேற கடுப்பாக்குது," என்று அதிதி கேள்வி கேட்டு கொண்டே வந்ததில், அப்பொழுதே பேத்தியை காணும் ஆவலில் , சுமதிக்கு அதிதியின் பேச்சு எதுவும் செவியில் சேரவில்லை .

"அத்தை, எங்கே போறோம், இருங்க ஏற்கனவே கால் வலின்னு சொல்றீங்க, ஆட்டோ பார்க்கலாம், நம்ம எங்கே போறோம்," என்று இனியா சத்தமாக சுமதியை அழைத்து கேள்வி கேட்கவே, முகமெல்லாம் புன்னகையாக, "நம்ம அக்ஷி பெரியவ ஆகிட்டாளாம், இப்போ தான் தேவகி சொன்னா, எனக்கு உடனே என் பேத்தியை பார்க்கணும், என் மக முகத்தில் இருக்கும் சந்தோஷத்தை பார்க்கணும்," என்று கூறி விட்டு, விறு விறு என்று நடந்தார்.

"அத்தை, அவர் வந்த பிறகு, ஒரு வார்த்தை சொல்லிட்டு போகலாமே, அவரை கேட்காம அங்க போறது, யோசனையா இருக்கு, என்னை அங்க போக வேண்டாம்னு சொல்லி இருக்காரு, இருங்க அத்தை, நீங்க இப்போ, கிளம்புங்க, நான் அவருக்கு பேசிட்டு வரேன்" என்று இனியா தன்மையாக தான் கூறினாள் .
கணவனின் அனுமதி இன்றி, அவன் மறுப்பு கூறிய இடத்திற்கு செல்ல அவளுக்கு விருப்பம் இல்லை.


"அவன் சொன்னான்னு, என் பொண்ணு வீட்டுக்கு வரமாட்டியா, அவன் எப்போ ஊருக்கு வருவானோ, நல்லா இருக்கே, உன் கதை ."

"தாய் மாமனா, அவனும் நீயும் தானே சீர் செய்யணும், இப்படியே ஒதுங்கிட்டு, எல்லாம் நீங்களே அனுபவிக்கலாம்னு இருக்கீங்களா," என்று புத்தி இன்றி, மகன் மருமகள் குணம் தெரிந்தும் அவர்களை, இறக்கி பேசினார்.

"அம்மா, அப்படியே, அண்ணா செய்யாம விட்டுருவாரு, இல்லை நீயும் உன் பொன்னும் தான் அப்படியே விடுவீங்க பாருங்க," என்று அதிதி, ரோட்டிலேயே அன்னையை கத்தியதும், தான் கூறிய வார்த்தையின் அர்த்தம் உணர்ந்து, சுமதி அமைதி காத்தார்.

"பின்ன, அவன் ஏதோ கோவத்தில் பேசிட்டான், அதுக்காக இப்போ அங்க போகாம இருக்க முடியுமா," என்று தவறு என்றாலும் அதற்கு வருந்தாமல், அவரின் பக்கமே சுமதி பேசி கொண்டிருந்தார் .

"எப்போ, அண்ணி, அப்படி சொன்னாங்க, அண்ணா கிட்ட பேசிட்டு சொல்றேன்னு தானே சொன்னாங்க," என்று அண்ணிக்காக அதிதி தான் சுமதியிடம் வாக்கு வாதத்தில் இருந்தாள் .

இனியா அதன் பிறகு மாமியாரிடம் பேசவே இல்லை.
அவளுக்கு அன்புவை பற்றி, அதிலும் அவன் கடமையில் இருந்து தவறுபவனாக எடுத்துரைத்த வார்த்தை, அவளை வருந்த செய்தது.


"அவன் எப்போ வருவானோ, அங்க வேலை எப்படியோ, அது வரைக்கும் விஷா வீட்டுக்கு இவ வராம இருப்பாளா" என்றார் சுமதி .

அன்பு அன்றே ஊருக்கு புறப்பட்டு விட்டான், எடுத்த வேலைக்கு ஒரேடியாக முழுக்கு போட்டு, அங்கு தொழில் தொடங்கும் ஆசைக்கும் ஒரு கும்மிடு போட்டு, இனி அந்த ஊரு பக்கமே, செல்ல கூடாது என்ற முடிவில், பாரம் சுமந்த மனதுடன் சென்னைக்கு வந்து கொண்டிருந்தான் .
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top