அன்பின் இனியா 2

Advertisement

achuma

Well-Known Member
hai friends
i update next

thanks for previous likes and comments
:)
take care all(y)




அன்பின் இனியா 2

"என்னை மட்டும் லவ் யு பண்ணு புஜ்ஜி
என்னை மட்டும் டார்லிங் சொல்லு புஜ்ஜி
என்னை மட்டும் கிள்ளி வை புஜ்ஜி
என்னை மட்டும் பாலோ பண்ணு புஜ்ஜி"


என்று ஹை டெசிபலில் பாடலை ஒலிக்க விட்டு அவனின் போக்குக்கு கைகளையும் கால்களையும் , ஆட்டி கொண்டிருந்தான், இலக்கியா இனியாவின் தம்பி இளங்கோ.

அறைக்குள் நுழைந்து அவனை கண்டு சிரிப்பு வந்தாலும், படிக்காம பாட்டு கேட்டு கொண்டிருக்கும் தம்பியின் தலையில் நங்கென்று ஒரு கொட்டு வைத்தாள் இலக்கியா ..

எவ அவ, என்று தலையை தேய்த்து கொண்டே திரும்பிய தம்பி, "அக்கா" என்று கத்தி , வெகு நாட்கள் கழித்து வீட்டிற்கு வந்து இருக்கும் அக்காவை கண்டதும், கூச்சலுடன் ஆர்ப்பரித்து,அவள் கைகளை பற்றி கொண்டான்..


அவளும் வாஞ்சையாக தம்பியின் தலை முடியை களைத்து , "பப்ளிக் எக்ஸாம் இருக்குனு பயம் இருக்கா, ப்ளீஸ் டூ எக்ஸாம் எப்படி செய்வியோனு எங்களுக்கு பயமா இருக்கு, நீ பாட்டு டான்சனு கலாட்டா பன்னிட்டு இருக்க..

"ம்பச் , அத விடு, நீ எப்போ வந்தா, மாமா பசங்க எப்படி இருக்காங்கா ?"
"எல்லாரும் நல்ல இருக்கோம், குட்டி மா , பார்க்க ஆபிஸ் ,போய் இருந்தோம்.சரி இவ்வளவு தூரம் வந்தாச்சு, அவளை தனியா விட வேண்டாம்னு தான் கூடவே வந்தோம்" ..

"எனக்கும் அந்த ஏரியால இருந்து வெளியே வந்தாச்சு , அப்படியே உங்க எல்லாரையும் பார்த்துட்டு போலாம்னு இங்க வந்தேன்" ..

"ஏன் காக்க அக்காக்கு என்ன? " என்று கேட்டபடியே அறையினுள் இருந்து கூடத்திற்கு வந்தான் பதற்றத்துடன் ..

பிறகு வேளைக்கு சென்று நேரத்திற்கு வீட்டிற்கு வந்து விடும் சகோதரி , இன்று என்றும் இல்லாது 7 மணிக்கு மேல் அதுவும் துணைக்கு பெரிய அக்காவுடன் வந்து இருக்கிறாள் என்றால் , பெண்கள் உள்ள வீட்டில் வரும் அதே பயம் அந்த வீட்டின் ஆன் மகனுக்கும் வந்தது ..

எதுவும் முழுசா கேட்காமயே எப்படி ஓடுறான் பாரு, என்று இலக்கியாவும் சலித்து கொண்டே, அவன் பின் வந்தாள் ..
(இவனும்,இலக்கியாவும், இவர்கள் அன்னை இந்திரா போன்று நல்ல வெள்ளையாக இருப்பார்கள், இனியா மாநிறம் என்றால் , இவர்கள் தந்தை மோகன் நல்ல திராவிட நிறம், ஆகையால், எப்பொழுதும் இனியாவை காக்க என்றும், அவன் தந்தையை விடாது கருப்பு என்று கிண்டலடிப்பான் )
இவ்விஷயத்தில் இனியாவிற்கும்,இளங்கோவிற்கும் முட்டி கொள்ளும் ..

மூன்று பிள்ளைகளில், இனியா எப்பொழுதும் மோகனிற்கு செல்லம், அவளை கிண்டலடித்தாலும் கண்டு கொள்ளமாட்டாள் , அவள் தந்தையை

ஒரு சொல்ல தம்பி சொல்லி விட்டாள் அவன் மீது பாய்ந்து விடுவாள் ..
இளங்கோ அவ்வீட்டில் அவ்வளவு குறும்பும், சேட்டையும் செய்பவன் , அதே நேரத்தில் படிப்பிலும் கெட்டி , திறமையானவன் ..

வீட்டினில் அவன் பொழுது போக்கே , அவன் தந்தையின் செயல்களுக்கு, கமெண்ட்ரி கொடுப்பதே ..


எதிரில் முகம் கழுவி துண்டால் துடைத்து கொண்டே அறையை நோக்கி வந்து கொண்டிருந்த அக்காவை கண்டு அவள் சோர்ந்த முகம் அவன் கண்ணிலும் தப்பாமல் விழுந்தது , "என்ன காக்கா , அக்காவோட வந்து இருக்கே ," என்று கேள்வி கேட்டன் ..

அவன் பின்னே வந்த இலக்கியா , "எதுவும் முழுசா கேட்கா மாட்டியா டா, என்று திட்டினாலும் , இவ கல்யாண விஷயம் தான் வேற ஒன்னும் இல்லை , காலையில அம்மா ஏதோ இவளை கடுபடிச்சி இருக்காங்க , அந்த கோவம் இவளுக்கு , சரி அப்படியே சமாதானம் செய்யலாம்னு போனே போதுமா," என்று நீண்ட விளக்கம் கொடுத்தாள் ..

அவன் அன்னையை முறைத்தாலும், அவள் அக்கா தோல் மேல் கை போட்டு, அவளுக்கு ஆறுதல் செய்தான் , பெரிய மனிதனாக ..

அம்மா பட பட என்று பேசுவார்கள் என்று தெரியும், சொந்தங்களுக்கு நடுவில் இருக்கும் ஒரே காரணத்தால் , பிள்ளைகள் வளர்ப்பதில் மிகவும் கவனம் இந்திராவிற்கு ..
காசு பணம் அதிகம் இல்லை என்றாலும், நல்ல ஒழுக்கத்திலும் குடும்ப மரியாதையிலும் , எந்த குறையும் இல்லை ..

மூன்று பிள்ளைகளையும் நல்ல பண்போடு வளர்த்தார் ..
பக்கத்தில் தான் நாத்தனார் வீடு என்றாலும், பிள்ளைகளை அங்கு அனுப்ப மாட்டார் ..
என் வரையே உங்களுக்கான பணிவிடைகள் , என் பிள்ளைகள் இவர்களுக்கு சேவகம் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பது அவரின் எண்ணம் ..

அதே நேரத்தில் இரு பெண் பிள்ளைகள் உள்ளதால் , நாத்தனாரின் வீட்டிலும் ஒரு மகன் இருந்த காரணத்தால் கண்கொத்தி பாம்பாக மகள்களை காத்தார் ..
ஏன் என்றால் நாத்தனாரின் மகன் சரி இல்லை.

வீட்டு வேலை முதல், எந்த சொந்தகளிடம் எப்படி சுமுகமாக செல்ல வேண்டும் என்பது வரை , மூன்று பிள்ளைகளுக்கும் குழந்தையில் இருந்தே கற்று கொடுத்து வளர்த்த பெண்மணி ..
தன் பிள்ளைகளை யாரும், ஒரு குறை சொல்லி விட கூடாது என்னும் எண்ணத்தோடு வளர்த்தார் நன்முறையில் ..

பிள்ளைகளும் அதற்கு ஏற்றது போல் வளர்ந்தனர் ..
அதுவே மோகனின் அக்காக்கள் நால்வருக்கும் பொறாமை ..
அதிலும் வீட்டின் பக்கத்திலே இருக்கும் அக்காவை கேட்கவே வேண்டாம் ..
அவர் பிள்ளைகளை விட தம்பி பிள்ளைகள் முன்னேற கூடாது என்னும் எண்ணம் ..

இன்னும் சொல்ல வேண்டுமானால் காதை இங்கயே ஒட்ட வைத்தது போன்று இருக்கும் அவர் தம்பி குடும்பத்து மீதான கவனம் ..
ஒன்றும் சொல்வதற்கு இல்லை, ஒரு பக்கம் அக்கா என்றால் , இன்னொரு பக்கம் மோகனின் பெரிய அண்ணனின் மகளை தான் அந்த வீட்து பையனுக்கு கட்டி கொடுத்து இருக்கிறது ..
அவளும் ஒரு வகையில் இவர்களுக்கு மகள் முறை தானே ..

அதன் கொண்டே இவர்களின் பொறுமை ..
அத்தை மகள்கள் எல்லாம் இருவது வயதில் திருமணம் முடிந்து இருப்பதால் , குடும்ப சூழலுக்காக , மூன்று வருடம் கண்டிப்பாக வேலைக்கு போயே தீருவேன் என்று அடம் பிடித்து, லோன் எடுத்து, குடும்பத்தை பொருளாதார நிலை உயர்த்தி, தந்தைக்கு தோள் கொடுத்த, இனியா மீது அத்தைகளுக்கு ஒரு துவேஷம் ..

இவ்வாறான பேச்சுகளினால் அவர்கள் கோவத்தை வெளிபடுத்திகிறார்கள், இது போன்ற பேச்சுக்கள் வர கூடாது என்று வளர்த்த இந்திராக்கு , இதனை தாங்க முடியாமல், இனியாவை வருத்தும் படி பேசுமாறு ஆகிற்று ..

அன்னையின் பரிதவிப்பு வார்த்தையாக இனியாவை தாக்கியுள்ளது இளங்கோ , இலக்கியாக்கு புரிந்து இருக்கிறது என்றாலும், இனியாவை அப்படி பேசலாமா என்று அன்னையுடன் மல்லுக்கு நின்றார்கள் இருவரும்.

"அம்மா கண்டவங்க சொல்றாங்கன்னு நம்ம வாழ முடியாது மா , முதலில் நம்ம வீட்டு பொண்ணு மற்றவங்க முன்ன விட்டு கொடுக்கலாமா ," என்று பெரிய மனிதனாக அக்காக்கு பேசினான் அன்னையிடம் ..
தம்பியின் கேள்வியில் அன்னையை மிதப்பாக பார்த்தாள் இனியா ..

"நான் பேசுனதே உங்களுக்கு கோவம் வருதே , வீட்டுலயே இருக்கேன், என் காது படவே இந்த மாதிரி உன் அதை பேசுறாங்க, எனக்கு மனசு தவிக்காதா ," அவரின் ஆதங்கம் ..

"உன் அக்கா கேட்ட மூணு வருஷம் முடியுது, என்ன சொன்னா , நல்ல சந்தர்ப்பம் கிடைச்சி இருக்கு,நல்ல கம்பெனியில வேலை கிடைத்து இருக்கு , மாமியார் வீட்டுக்கு போனா, காச இங்க கொடுக்க முடியமா, இல்லை வேளைக்கு தான் அனுப்புவாங்களோ , அதுவும் கையில் காசு இல்லாம கடனோட , கல்யாணம் செய்துகிட்டு , நம்ம பற்றிய கவலையோடு , மாமியார் வீட்டுல வாழ முடியாது" ..


"அப்பா அம்மா படிக்க வெச்சி அவங்களுக்கு சம்பாரித்து கொடுக்காம, வேற யாருக்கோ போய் சம்பாரித்து கொடுத்தா எனக்கு திருப்தியா இருக்காது , உங்களுக்கு கொஞ்சம் சம்பாரிச்சி கொடுத்தா தான் எனக்கும் நிம்மதியா இருக்கும் ,இருபது இரண்டு வயசு தானே , லோன் எடுத்து, வீடு கொஞ்சம் ஒழுங்கா கட்டிட்டு, இருக்கிற கடன் அடைச்சிட்டு, நகையும் கொஞ்சம் சேர்த்துட்டு அப்பறம் கல்யாண் செய்துகிறேன்னு சொன்னா இல்லையா ."

"இப்போ போன வாரம் கல்யாண பேச்சு எடுத்தா , லோன் முடியுது தான் , ஆனா இன்னும் நீ இன்ஜினியரிங் சேர காசு வேணும், அடுத்த வருஷம்னு சொல்றா , எனக்கும் கோவம் வராது ," என்று அவர் மனதின் ஆதங்கம் அனைத்தும் கொட்டினார் ..

"அக்கா வீட்டுல பணம் பிரச்னை, ஒன்னு இல்லனா இன்னும் ஒன்னு வந்துட்டே இருக்கும் , நம்ம வளர்ந்து குடும்ப கஷ்டம் தெரியும் வரைக்கும் அவர் தானே எல்லாம் சமாளிச்சாரு ,விடாது கருப்புக்கு எனக்கு என்ன செய்யணும்னும் தெரியும்"..

"நீ செய்த வரைக்கும் போதும், இனி உன்னை பாரு, அங்க போய் சந்தோஷம் இருக்கேனு, தெரிஞ்சாலே எங்களுக்கு அது தான் நிம்மதி ," என்றான் அவள் தம்பி தங்க கம்பி ..

இப்பொழுதே தந்தையின் உயரத்திற்கு, வளர்ந்து நிற்கும் தம்பி சகோதரிகளுக்கு இன்னொரு, தந்தையாக தான் தெரிந்தான் ..

"டேய் இந்த கேப்புல, அப்பாவ நீ விடாது கருப்புனு சொல்லிட்டல்ல ", என்று பொங்கினாள் இனியா ,

"சொல்லாம, விடாது கருப்பு , கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ண விடுறாரா மனுஷன் , நீ ஏதோ பாஸ் மார்க் வாங்குனதுக்கே, நீ இவ்வளவு படிச்சதே போதும் குட்டிமா சொல்ல வேண்டியது , அதே நான் தொண்ணூறு பெர்ஸன்ட் எடுக்குறேன், ஹ்ம்ம் மனுஷனுக்கு மனசு வரல பாராட்ட" .

"என்ன எப்பவுமே இம்சை பண்றவர, நான் விடாது கருப்புனு தான் சொல்லுவேன் ," என்று அவளின் ரத்த கொதிப்பை மேலும் மேலும் அதிக படுத்தினான் ..

அதிலும் சும்மா இல்லாமல் , வடிவேலு பாணியில் "எங்க அம்மா இருக்கும் நிறத்துக்கும், எட்டாங் கிளாஸ் படிச்ச படிப்புக்கும் , ஹ்ம்ம் இந்த விடாது கருப்ப பிடிச்சி கட்டி விட்டுட்டாங்களேன்னு, நானே தாத்தா பாட்டி மேல கடுப்புல இருக்கேன்"

வீட்டை சுற்றி துரத்தி கொண்டு சென்றாள் தம்பியை..
இவர்களின் அளப்பறையை விட்டு விட்டு மாப்பிள்ளையையும் மகளையும் மாமியார் கவனிக்க , கேட் வரை துரத்தி கொண்டு சென்ற இனியா , தந்தை தெருவில் வருவதை கண்டு, அமைதியாக , அது தெரியாமல் இளங்கோ தந்தையிடம் வசமாக சிக்கினான் ..

ருத்ர மூர்த்தியாக எதிரே வந்து நிற்கும் தந்தையை கண்டு ஜெர்க்கானவன் பின்னாடி திரும்பி பார்த்தால் , இனியா அங்கு இல்லை ..

"எருமை,எருமை, படிக்காம , ஓடிட்டு இருக்கு பாரு ,மூதேவி , பிள்ளையை பெத்து வைக்க சொன்னா, பக்கி பயல பெத்து வெச்சி இருக்கா ," என்று வஞ்சனையில்லாம் திட்டி விட்டு அவனை கடந்து வீட்டிற்குள் சென்றார் மனிதர் ..

அன்பான கணவர் , கண்டிப்பும் பாசமும் உள்ள தந்தை , சகோதரிகளுக்கு பொறுப்பான தம்பி என்று திகழும் சிறந்த மனிதர் ..

பிள்ளைகளுக்கு அவரே முன்னுதாரணம் ..
அதிலும் இனியாவிற்கு, அவள் தந்தையே ஹீரோ..

அவரை சுத்த படுத்தி கொண்டு ,வீட்டினுள் சென்றால், மாப்பிளை கண்டு நலம் விசாரித்து, மகளை வாஞ்சையாக தலை வருடி, பேரன் பேத்தி , சம்மந்தி பற்றிய நலன் விசாரிப்பு முடிந்து , இனியாவின் கல்யாண் பேச்சில் வந்து நின்றார் ..

"மாமா , பையன் பெயர் அன்பு ...
அன்புச்செல்வன் ஐ பி எஸ் சா ,என்று உடனே இளங்கோ..
மச்சான் அன்புசெல்வனாலே ஐ பி எஸ் தான ," என்ற செழியன் ..

"அவசர குடுக்கை , நாங்க தான் பேசுறோம்ல, நடுவுல வந்துட்டு," என்று அதற்கும் இளங்கோவை திட்டி மாப்பிளை பக்கம் மீண்டும் கவனம் வைத்தார் மாமனார் ..


அதற்கெல்லாம் அசருபவன் இல்லை இளங்கோ, கண்டு கொள்ளாமல் அவர்கள் அருகில் அமர்ந்தான் ..
இனியா எப்பொழுதோ அறைக்குள் சென்று விட்டாள் ஓய்விற்கு ..


அன்பு செல்வன் ,பி இ எம் பி ஏ , முடிச்சி இருக்கான் , டிராவெல்ஸ் ,******* வெச்சி நடுத்துறான், கிண்டில தான் இருக்காங்க..

அம்மா சுமதி , ஒரு அக்கா விஷாகா, ஒரு தங்கை அதிதி , அப்பா (ராஜகோபால்) இல்லை, ஆக்சிடெண்ட்ல இறந்துட்டாரு ..
ராஜ் டெக்ஸ்டைல்ஸ் , கேள்வி பட்டு இருப்பீங்களே, அவங்களுது தான் ..


நிறைய விசேஷத்துல பார்த்து இருக்கேன் , பையனும் நல்ல இருப்பான் ,நல்ல குடும்பம், ரொம்ப வசதி ,
பெரிய பொன்னு விஷாகாவ அவங்க அப்பாவோட முதல் தங்கச்சி பையனுக்கு கட்டி குடுத்து இருக்காங்க ..
தங்கச்சி இப்போ தான் காலேஜ் மூணாவது வருஷம் படிக்கிறா ..
என்று கூறி மாமனார் முகத்தை பார்த்தான் ..

இவ்வளவு பெரிய இடம் அதான் யோசனையா இருக்கு மாப்பிள்ளை , என்றார் ..

தாயும் மகளும் ஒருவருக்கு ஒருவரை பார்த்து கொண்டிருந்தனர் , அதற்குள்," இவள இப்போ தான் தெளிய வெச்சி சம்மதம் வாங்குனா, இந்த அப்பா குழப்புறாரே ," என்று நினைத்த இளங்கோ சும்மா இல்லாமல், "அவ சம்மதம் சொன்னதே பெருசு , நீங்க இப்போ புதுசா ஒன்னு ஆரம்பிக்காதீங்க" ..

"இரண்டு பேருக்கும் பொருத்தமா இருக்காணு பாருங்க , நம்மளால முடிஞ்சதை செய்வோம் , அக்காக்கும் இதுல ஓகே தான்" ..

"அவ கல்யாணத்துக்கு ஒதுக்கட்டதே பெருசு , இப்போவே நம்ம கல்யாண வேலை ஆரம்பிச்சா தான் உண்டு..
நடுவுல இந்த மாதிரி குழப்பத்துல தேங்குனா , அவளை பிடிக்கிறது கஷ்டம்" என்று தந்தைக்கே பாடம் நடத்தினான்..

"இந்தாங்க மாமா அன்பு போட்டோ ," என்று அவன் போன் எடுத்ததும், மாமன் கையில் இருந்த கை பேசியை பிடுங்கி அவசரமாக பார்த்தான் ..
"பக்கி பயலே," என்று திட்டிய தந்தையிடம் இருந்து, அபயம் அளிப்பது போல் வந்து சேர்ந்தாள் இலக்கியா ..

"விடுங்க அப்பா, அவனை எப்பவும் திட்டிட்டு ," அவன் வேகமாக எதற்கு போன் பறித்தான் என்னும் காரணம் தெரிந்தவளோ, சிரித்தவள் கண்களால் தம்பியை என்ன என்று கேட்டாள் ..

இவனும் உதடு பிதுக்கி , தலையை இடவலமாக ஆட்டினான் ..
அதிலே தெரிந்து கொண்டாள் மாப்பிள்ளையின் நிறம் என்னவென்று ..

ஏன்னென்றால், பிறந்ததில் இருந்து பார்த்து கொண்டிருக்கிறான் , அவன் வீட்டு ஜோடி பொருத்தத்தை..
இருவரில் ஒருவர் வெள்ளையாக இருந்தால், மற்றொருவர் கருப்பாக இருப்பர் ..
அவன் அத்தையில் இணை பொருத்தத்தில் இருந்து அவனும் பார்த்து விட்டான் ..
ஒரே நிறத்தில் இது வரை அவன் குடும்பத்தில் யாரும் இருந்ததில்லை ..

"இது என்ன மேஜிக்கா?" என்று கூட வியந்தான் ..

அவன் வீட்டில் ஒரே நிறத்தில் ஒரு ஜோடியாவது இருக்க வேண்டும் என்று எப்பொழுதும் பிதற்றுவான்..

இவர்களின் தந்தை கருப்பு தாய் வெள்ளை நிறம் ..
இலக்கியாவும், வெள்ளை நிறத்திலும் , செழியன் மாமனார் போன்று கருப்பு

இளங்கோ இது என்ன பிளாக் என் வைட் காம்பினேஷன் என்பான் ..

இனியாவிற்கு, அவள் நிறத்திலும், இளங்கோவிற்கு, அவன் நிறத்திலும் ஜோடி அமைய வேண்டும் என்று அவனின் அந்த வயதிற்கான ஒரு கற்பனை உலகில் பிதற்றுவான் ..

ஆனால் இங்கு மாப்பிளை போட்டோ பார்த்ததும்

"உன்னை வெள்ளாவி வெச்சு தான் வெளுத்தங்களா
உன்னை வெயிலுக்கு கட்டாம வளத்தங்களா"



என்று தான் பாட தோன்றியது ..

மாமா இந்த மைதா மாவை எங்க பிடிச்சீங்க என்று அதி முக்கிய சந்தேகத்தை கேட்டான் ..


"டேய் என்று அவன் தந்தை பல்லை கடித்தும், ஹ்ம்ம் எனக்கு வர ஜோடி என் கலர் தான் பா" என்று தந்தையின் ஒரே கண்ணிலே பார்த்து கொண்டே சொல்லி விட்டு சிட்டாக பறந்தான் , அறைக்குள் ..

"காக்க அக்கா," என்று அழைத்து கொண்டே அறைக்குள் செல்ல, அவளும் எழுந்து அமர்ந்தாள் ..

"என்னடா ," என்றதற்கு

மாமா சூப்பர் ஸ்டைலா , இருக்காரு ..

"குட்டி மா," என்ற தந்தையின் குரலுக்கு , கூடத்திற்கு சென்று நின்றாள் ..

மகள் வாயில் இருந்து சம்மதம் என்ற முத்து உதிர்வதற்க்காக தான் அழைத்தார் என்று அனைவருக்கும் தெரிந்தே இருந்தது ..

"அப்பா எனக்கு ஓகே",

"போட்டோ பாரு,"

என்றதற்கு தடுத்து ,

"எல்லாரும் கூட்டு சேர்ந்து துரத்த பார்க்கிறீங்க , அந்த அன்பு வம்பு பக்கி பரதேசிய நான் கல்யாணம் செய்துக்க ஓகே சொல்லிட்டேன், போதுமா " என்று கடுப்பில் சொல்லி விட்டு அறைக்குள் நுழைந்து கொண்டாள் , பாவையவள் ..

"அன்பு ,மெதுவா பா, மெதுவா , கண்ணுல தண்ணி வர அளவு புரை ஏறுது பாரு..


"யாரோ உன்னை திட்டுறாங்க அண்ணா , அதான் இப்படி இருமல் வருது உனக்கு," என்று அண்ணனின் தலையில் தட்டி தண்ணீர் கொடுத்தால் அதிதி..

அம்மாவிடம் உணவு போதும் என்று சொல்லி எழுந்து கொண்டான் அன்பு ..
 

Saroja

Well-Known Member
நல்லா இருக்கு பதிவு
இளங்கோ குறும்பு பொறுப்பு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top