அன்பின் இனியா 19 3

Advertisement

achuma

Well-Known Member
ஹாய் பிரெண்ட்ஸ், இனி எந்த முன்னறிவுப்பும் கொடுக்கமா, நான் பதிவு கொடுக்கிறேன், ஏனெனில் உங்களிடம் கூறிய நாட்களில், என்னால் பதிவு கொடுக்க முடியா நிலை.
என்னிடம் எப்பொழுது லேப்டாப் கிடைக்குமோ, அந்நேரம் உங்களுக்கு epi கொடுக்குறேன் பிரெண்ட்ஸ்.
தாமதத்திற்கு மன்னிக்கவும்.
வாரத்தில் இரண்டு அல்லது மூன்று, epi கொடுக்க முயற்சி செய்கிறேன் சென்ற பதிவிற்கு, உங்களின் விருப்பங்கள் மற்றும் கருத்துக்களை தெரிவித்த அனைவருக்கும் எனது நன்றிகள்.
அடுத்த பதிவு இதோ , படிச்சிட்டு, கமெண்ட் கொடுங்க பிரெண்ட்ஸ்.

All take care:):love:(y)
"எனக்கு ரொம்ப பிடிச்சவங்க என்னை ஏதாவது சொல்லிட்டா , என்னலா தாங்க முடியாது," என்று வருத்தமாக கூறினாள்.
"ஒஹ், கல்யாணத்துக்கு அப்பறம் இப்போ தான், என்னை பிடிச்சி இருக்குனு, முதல் முறை சொல்றே, இதுக்கு, இன்னைக்கு செமையா என்ஜோய் பண்ணனும், என்று அவன் கைகள், எல்லை மீறும் லீலைகளில், ஆமா தினம் பிடிச்சி இருக்குன்னா சொல்லுவாங்க, பிடிக்காம தான் நம்ம இப்படி," என்று பாதியில் நிறுத்தி, அவன் முகம் பார்த்தாள் .
"எப்படி" என்று அவன் புருவம் உயர்த்தி கேட்டதில், "சரியான போக்கிரி, போங்க, அன்புவோட, அன்பு மட்டும் எனக்கு எப்பவும் இருந்தா போதும், இந்த இனியா எல்லாம் சுனாமி வந்தாலே, அசால்ட்டா, இருப்பா", என்று அவனிடம் வீரமாக பேசி விட்டு, அவனிடம் இருந்து நழுவினாள் .
உண்மையில் நடந்த பிரெச்சனையில் யார் யாருக்கு ஆறுதல் கூறினர் , என்று தெரியாது, ஆனால் இருவரின் மனதும் ஒருவரின் அருகாமையில் மற்றவர் ஆறுதல் அடைந்தனர் .

அதற்குள், சரணிடம் இருந்து அழைப்பு, அன்புவின் திருமணத்திற்கு பிறகு, தேவகி மற்றும், சந்திராவின் தொலை பேசி உறவு, வளர்ந்து இருந்தது, அதுவும் கூட, தேவகியே , சரணிடம், நேரடியாக, "டேய் நீங்க எப்படின்னா இருங்க, டா, எங்கள் காலம் இன்னும் கொஞ்சம் தான், அடுத்த ஜென்மத்தில் நாங்க என்ன ஒரே வயிற்றிலா பிறக்க போகிறோம், நான் உன் அம்மாவோடு, பேச தான் செய்வேன்," என்று உரிமையாக அவனுடன் சண்டைக்கு நின்றதில், அவன் அன்னையின் சாயாலில் இருக்கும் பெரியன்னை மீது அதற்கு மேல் கோவம் இழுத்து பிடிக்க முடியாமல், அவனும் அவர்களுடன் பேச ஆரம்பித்தான் .
அப்படி, தேவகி, சந்திராவிற்கு அழைத்து, விஷயத்தை, தெரிய படுத்தியதில் தான், அவனுக்கும் அன்று விஷாகா செய்து வைத்த செயல் தெரிய வந்தது.
அவன் நண்பன் என்ன படு பட்டு இருப்பான், என்று அவனுக்கும் உணர முடிந்தது.
அதன் பொருட்டே, நண்பனையும் அவன் மனைவியையும் வீட்டிற்கு அழைத்தான் .
அன்புவிற்கும் அந்த நாள், இப்படியே, முடிய விருப்பம் இல்லாமல், சரணின் இல்லத்தில் மாறுதல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், மனைவியுடன், அங்கு சென்று வந்தான்.


உண்மையில், அங்கு,சென்றதும், இனியாவிற்கு சந்திராவிடம் , பேசியதில் அவள் மனதில் இருக்கும் குழப்பம் எல்லாம் தெளிவு கிடைத்த ஒரு உணர்வு, கணவனை இழந்து, நன் முறையில் மகனை இவ்வுலகில் நிலைக்க வைத்திருக்கும் பெண்ணின், ஆளுமை, தைரியம் என்று, சந்திராவின் வளர்ச்சி இனியாவை வியக்க செய்தது.

பிறகு, வீட்டிற்கு வந்து சென்றிருந்தனர் .
சுமதிக்கு மகன் அங்கு சென்ற வந்தது பிடிக்கவில்லை, என்றாலும் இன்று அவனின் இன்னொரு முகம் கொஞ்சம் பின்வாங்க செய்தது.


அதில், இனியாவை மட்டும் அவன் எதிரில் இல்லா நேரம், அவளை திட்டி கொண்டே இருந்தார்.
அவளும் எப்பொழுதும் போல், மனதில் வேதனை சுமந்தாலும் வெளியே, நிமிர்வாகவே, அவர் கண்களுக்கு காட்சி அளித்தாள் .


அதில் இன்னும் அவர் கோவம் கொண்டார் என்றே கூறலாம்.
மகளுக்கு அழைத்தாள், அழைப்பு எடுக்காமல், போனதில் அது வேறு ஒரு பக்கம், அவருக்கு தலை வலி .


அங்கு நாதன் மனைவியிடம் ஆடி தீர்த்தார், என்றே கூறலாம், இது உண்மையில் அவருக்கு இப்பொழுது தான் மருமகளின் குணம் தெரிய வந்து, அதிலும், அவளே, இனியா வீட்டினில் நடந்த அவமானத்திற்கு, ஈடாக, தான் செய்தேன் என்று மகனிடமே, நேரடியாக, கூறியதில்
இவள் குடும்பத்திற்கு ஏற்ற மருமகள் அல்ல,இது என்ன குடும்பத்தினரிடமே பழி வாங்கும் புத்தி, என்று மனதில் ஆழமாக பதிந்து போயிற்று .


வினோத்தின் முகம், களையிழந்து கண்டதில் அவர் கோவம் கொஞ்சம் மட்டு பற்று, மகனுக்காக வருந்த செய்தார்.

இத்தனை நாள், குடும்பத்தை, திறன் பட நிர்வாக செய்தாக நினைத்த இருந்த அவருக்கு, மனைவியின் பொறுமையே, குடும்பத்தை வழி நடத்தி இருக்கிறது, என்ற உண்மை புரிந்தது.

இனி பேர பிள்ளைகளுக்காக, அவர்களின் எதிர்காலம் செழிக்க, குடும்பத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்று திட்மிடலானார்.

அடுத்த இரு வாரங்களில் ரேஷ்மி, அங்கு வருவதாக கூறினாள் .
மகளின் வருகை நாதனுக்கு ஒரு பக்கம், திடம் தந்தது, என்றே கூறலாம்.
அவள் படிப்பு, இங்கேயே வந்து, தொடர்வதை பற்றி எல்லாம் ஏதும் கூறவில்லை.
இப்போது வரை, மகள் தேர்வு முடிந்து, வருவதாக நினைத்து இருந்தார்.

அன்று இரவு, இனியா புரண்டு புரண்டு படுத்து கொண்டிராந்தாள் , அவளுக்கு உறக்கம் தான் வரவில்லை, கணவனிடம் அனைத்தும் உளறிய பின்பு, மனதில் சுமை இறங்கிய நிம்மதி என்றால்,அடுத்து என்ன என்ற ஒரு கேள்வி அவளிடம் .


குளியலறையில் இருந்து வெளியே வந்த, அன்பு, மனைவி தூக்கம் இன்றி, கட்டிலில், புரண்டு கொண்டிருப்பது கண்டு, அவன் அவளுக்கு அருகில் படுத்து, அவளை தன்

புறம் இழுத்து, அணைத்து படுத்து கொண்டான்.
அவளும் அவன் மார்பில் முகம் புதைத்து, தூங்க முயற்சி செய்தாள் .


"இனியா இனி, எந்த விஷயமும், என்கிட்ட இருந்து மறைக்க கூடாது, சரியா? செய்யாத தவறுக்கு, யார்கிட்டயும் திட்டு வாங்கணும்னு அவசியம் இல்லை, என்கிட்டே பேச சண்டை போட, உனக்கு எல்லா உரிமையும் இருக்கு, நீ இவ்வளவு நாள், அம்மா உன்கிட்ட நடந்த முறையை ஏன் என்கிட்டே மறைச்சே, என் மேல, நம்பிக்கை இருக்கு தானே, " என்று தவிப்புடன் கேட்டதும்,

"ம்ச்ச், வீட்டில எந்த சண்டையும் வேண்டாம்னு தான்," என்று மிகவும் அமைதியாக சிறிய குரலில் கூறியதில், "சண்டை இல்லாம, எப்படி பார்த்துக்கணும்னு எனக்கு தெரியும், இனி எதுவும் என்கிட்டே மறைக்க முயற்சிக்காத, அது நம்ம எதிர்காலத்திர்ற்கு தான் நல்லது, இனி, என் அனுமதி இல்லாம, நீ எப்பவும் தேவகி அத்தை வீட்டுக்கு போக கூடாது," என்று அவளிடம் எடுத்து கூறி, சிறிது நேரத்தில் இருவரும் உறங்கி விட்டனர்.

அடுத்த நாள், அன்பு அன்னையிடம் என்ன கூறினானோ, சுமதி இனியாவிடம் சற்று அடக்கி வாசித்தார்.
ஆனால் அவரின் கோவம் மட்டும் அடங்கிய வழியில்லை, மகனிடம் போட்டு கொடுத்த மருமகளை, மனதில் கருவி கொண்டே இருந்தார்.


அவளின், எண்ணம் நிறைவடைந்த மகிழ்ச்சியில் இனி விஷாகாவிடம் ஏதும் தடை இல்லை , உரிமையாக அன்னை வீட்டிற்கு வந்து, அவளின் தர்பாரை அரங்கேற்ற ஆரம்பித்தாள் .

மகள் மீண்டும் வர ஆரம்பித்ததில், சுமதியும் தன்னால் முடியாத, செயலை மகளை கொண்டு நிறைவேற்றி கொண்டார்.

அவர் எப்பொழுதும் திருந்த போறதில்லை, அவரின் உலகம் விஷாகா மட்டுமே.
ஆனால் இனியாவிடம் நேரடியாக, அவளால், எந்த பிரெச்சனையும் செய்ய முடியாத அளவிற்கு, அவளின் நிலை, தம்பியின் கோவம், அவளை, அடக்க செய்தது.
பிள்ளைகளுக்கு தேர்வுகள் முடிந்து, தாரிணி, அவளின் அன்னை வீட்டிற்கு வந்து சேர்ந்தாள் .


அங்கு இலக்கியாவை ஒரு வழி செய்து கொண்டிருந்தாள் என்றே கூறலாம்,
அவளின் ஆட்டம் அந்த விடுமுறையின் முடிவிற்க்குள், முடிவு பெரும் .


இளங்கோ, தேர்வு முடிவுகளுக்காக, எதிர்பார்த்து கொண்டிருந்தான் .

அடுத்து, படிப்பிற்கான, நுழைவு தேர்வு, அதில் தன்னை பிஸியாக வைத்திருந்தான்.
வீட்டினில் இருக்கும் நேரம், ஆழாக்குடன் வம்பு வளர்ப்பதே அவனின் பொழுது போக்கு, என்று இருந்தது.
அதிதி, எப்பொழுதும் போல், விடுமுறைக்கு அவளின் கிராமத்திற்கு செல்ல ஆசை பட்டு, இந்த முறை, அண்ணன் மற்றும் அண்ணியையும் அழைத்தாள் .


அன்புவுக்கு புது டிராவெல்ஸ், வாட நாட்டில் ஆரம்பிக்கும் வேலைகள் அவனை பிடித்து கொண்டது .
அதில் அதிதியை மட்டும் பத்து நாட்கள் மட்டும் இருந்து வருமாறு, கூறி, அனுப்பி வைத்தான்.


அவனுக்கு, மஹாராஷ்ட்ரா செல்லும் வேலை இருக்கும் காரணத்தால், தங்கை, வந்த பிறகு, செல்லலாம் என்ற முடிவு எடுத்து, இங்கிருக்கும் வேளைகளில் தன்னை மூழ்கடித்து கொண்டான் .

நாட்கள் இப்படியே கடந்து, ரேஷ்மியின் வருகை, தேவகி இல்லத்தில், மற்றும் தாரணியின் வருகை, இலக்கியா இல்லத்தில், ஒருவரின் வருகை, அடுத்தவரை எப்படி மாற்றும் என்று பொறுத்திருந்து பாப்போம் .

 

Saroja

Well-Known Member
அன்பு இன்னும் வீட்டில்
இவங்க ராஜ்யத்தை
உடைக்காமா
இருக்கான்
அருமையா போகுது பதிவு
 

achuma

Well-Known Member
அன்பு இன்னும் வீட்டில்
இவங்க ராஜ்யத்தை
உடைக்காமா
இருக்கான்
அருமையா போகுது பதிவு
Thanks
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top