அன்பின் இனியா 19 1

Advertisement

achuma

Well-Known Member
ஹாய் நட்புக்களே, நான் எவ்வளவோ தினமும் பதிவு கொடுக்க முயற்சி செய்றேன் , ஆனால் மகனின் கிளாஸ், மற்ற வேலைகள் என்று நேரம் சரியாக இருக்கிறது,
கிடைக்கும் நேரத்தில் நான் இனி பதிவிடுகிறேன், மன்னிக்கவும்.
உங்களின் கருத்துக்களை பகிருங்கள்.
சில, காட்சிகள் அதிகம் என்று நினைக்கலாம்.
ஆனால் ,இதில் வரும் விஷாகாவின் செயல்கள் உண்மை சம்பவம் பிரெண்ட்ஸ் .


அடுத்த நாள் ஞாயிறு விடுமுறை, காலை, அன்பு எழும் நேரம் இனியா, அவனுக்கு தேவையான உடைகள் எடுத்து, வைத்து, காலை உணவுக்கு சென்றாள் .
திருமணம் முடிந்து, இரு வாரங்கள் சென்று விட்டதா, என்று நாட்கள் வேகமாக ஓடுவதாக அவளுக்கு தோன்றியது.
ஒரு வாரம் முடிந்த தருவாயில் அவன் அவனின் ஐ டி , வேலைக்கும் இரவில் செல்ல ஆரம்பித்து விட்டான்.
இந்த ஒரு வாரத்தில், குறைந்த பட்சம் நூறு முறையாவது, அவனிடம் வேலையே விடுமாறு கூறி விட்டாள் . அவனிடம் புன்னகையே பதிலாக வரும்.
அவளுக்கு, சுமதி நாளடையவில், "இவர் என்ன டிசைனே, தெரியலையே," என்று குழுப்பி கொள்ளும் அளவிற்கு, அவரின் செயல் இருந்தது.
அந்த மன உளைச்சலில், கணவனின் அருகாமை, எதிர்பார்த்தது பாவையின் உள்ளம்.
அப்பொழுது தான், வீடு முழுக்கும் சுத்தம் செய்து வந்து இருந்தால், அலமாரியில் இருந்து சில பொருட்களை, சிறு பிள்ளைகள் போல் சிதற வைத்து இருப்பார்.
வீடு வெறுமையாக உள்ளதே என்று, தோட்டம் வைக்கலாம் என்று நினைத்தால், அதற்கும் தடை, "நான் சொல்றதை மட்டும் செய்தா போதும்," என்று ஒரே போடாக போட்டார் .

இதை எல்லாம் நினைவில் சுமந்து, காலை வேலையில் அவள் இருக்கும் நேரம், இலக்கியாவிடம் இருந்து போன் .
அக்காவின் அழைப்பில், உள்ளம் துள்ள, அழைப்பை ஏற்று, காதுக்கு கொடுத்து, "சொல்லு அக்கா, ரொம்ப சீக்கிரம் பேசிட்ட," என்று கிண்டலாக கேட்டாள் .
"ஹே குட்டிமா, நீ ரொம்ப பிசியா இருப்பேன்னு தான், இரண்டு வாரம் கழிச்சி போன் பண்றேன்," என்று அக்காவும் ராகத்துடன் கிண்டலடித்ததில், முகத்தில் வெட்கம் கூட, "அக்கா" என்று சிணுங்கினாள் .
அதில் இலக்கியாவும் மனம் விட்டு சிரித்து "நீ எப்பவும் சந்தோஷமா இருக்கணும் டா."
என்று மனதார வாழ்த்தினாள் .
"சரி சொல்லு, என்ன செய்துட்டு இருக்கே, எப்படி டைம் போகுது மாமியார் வீட்டுல", என்றதும், அத்தனை நேரம் இருந்த இனிமை, பறந்து,
"ஹ்ம்ம் நிக்க நேரம் இல்லை, செய்ய வேலை இல்லை, " கடுப்பாக ஒலித்தது, இனியா குரல் .
என்ன டா, என்று இலக்கியாவுக்கு சிரிப்பு .
"சிரிக்காதா அக்கா, எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியலை.
"காலையில வீடு சுத்தம் செய்யறேன், அப்பறம் அவங்க சொல்ற உப்பு சப்பு இல்லாத, ஒரு சமையல் செய்ய சொல்றாங்க, "
"அது முடிச்சிட்டு பொழுது பூராவும், அவங்க முன்னாடியே இருக்கனும் சொல்றாங்க."
"ஏதோ என்னை நோட் பண்ணிட்டே இருக்காங்க, எனக்கு கடுப்ப இருக்கு , வேலை கொடுக்குறாங்களா, அதையாவது சுதந்திரமா செய்ய விடணும், அதுலயும் ஆயிரத்தெட்டு குறை சொல்றாங்க."
"எனக்கு ஒரு இன்வால்வ்மெண்ட்டோட செய்ய முடியல."
"அது ஒரு பக்கம்னா ஏதோ நாள் பூராவும் வேஸ்ட் ஆகுற மாதிரி ஒரு பீல் ".
"இலக்கியாவாள் தங்கையின் மன நிலை உணர முடிந்தது".
ஒரு நொடியும் சும்மா இருக்காமல், ஏதேனும் வேலை செய்து கொண்டிருப்பாள்.
மற்றவர் குறை கூறும் படியும் அவள் தவறாக செய்யாமல், எந்த வேலை செய்தாலும் அதை நேர்த்தியாக செய்வாள்.
அவள் மீது நம்பிக்கை வைத்து ஒரு பொறுப்பை ஒப்படைத்தால், முழு மூச்சாக அதில் செயல் படுவாள்.
ஆனால் மாமியாரின் அவதாரத்தில் சுமதியும் ஒரு வகை, அவரை கையாள தெரியாமல், தங்கை தவிக்கிறாள், என்று உணர்ந்து கொண்டதில், இவளுக்கும் இப்படி கிடைக்குமா என்று தான் தோன்றியது,.
அதிலும் இனியா அவள் அக்காவிடம் "அக்கா நான் எப்படி ருசியா சாப்பிடுவேன் உனக்கே தெரியும் இல்லை," என்று குழந்தை போல் அவள் அக்காவிடம் , அவள் மனதின் குறைகளை கூறி கொண்டிருந்தாள் .
இலக்கியாவும் அறிந்ததே, இனியா அளவாக உண்டாலும் ருசியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பாள் .
அதிதி பொண்ணும் சரி, இவரும் சரி எதுவும் சொல்லாம அமைதியா சாப்பிடறாங்க, அது வேற எனக்கு இவங்க எப்படி இப்படி அட்ஜஸ்ட் பண்ணிட்டு சாப்பிடறாங்கனு தெரியலை.
"சின்ன குழந்தை போல, வீட்டுல எதையாவது, கீழே தரையில போட்டு வைக்கிறாங்க, அடிக்கடி க்ளீன் வைக்கிறாங்க".
"அதிலயும் நேத்து ஒரு காமெடி பண்ணாங்க பாரு, தண்ணி இல்லைன்னு, மோட்டார் போட்டு விட்டேன், உடனே, மாடில போய் டேங்க் பாருன்னு, சொன்னாங்க, நான் தண்ணி நிரம்பும் சத்தம் கேட்கும் அப்போ, நிறுத்திடறேன்னு சொல்றேன்," அதுக்கு, சண்டைக்கு வந்துட்டாங்க அக்கா, கடுப்பா இருக்கு, நான் மாடிலேயே இருந்து பார்த்துட்டு தண்ணி நிரம்பி வழியும் நேரம் கீழே வந்து ஆப் பண்ணனுமாம்.
எனக்கு அவங்க இப்படி பண்ணும் போது , கோவம் போய் , இவங்க ஏதோ சைக்கோவான்னு தோணுது"
" சில்லியா பண்றங்கன்னு தோணுது, அப்ப தான் குக்கிங் முடிச்சிட்டு வந்து உட்காந்தேன், நான் அப்படி பிரீயா இருக்குறது கூட அவங்க கண்ணு உறுத்துது பாரு, அது நினைச்சா எதையாவது எடுத்து மண்டைய பொளக்கலாமான்னு ஆத்திரமா வருது," என்று புலம்பலில் ஆரம்பித்து கோவத்தில் முடித்தாள் .
"குட்டிமா," என்று பயத்தில் ஒலித்தது இலக்கியாவின் குரல், "பெரியவங்கள அப்படி நினைக்கிறது ரொம்ப தப்பு மா," என்று கண்டித்தாள் .
"இதோ உன்னால தான் கா, என்னால் எதுவும் செய்ய முடியலை, நீ ரொம்ப அமைதியா போனதால, அம்மா, ஏன் உன் அக்கா இல்லையா, அவளை போல் பொறுமையா இருக்க கத்துக்கோன்னு, எனக்கு இந்த இரண்டு வாரத்துல ஒரே அட்வைஸ்."
"நீ என் அக்கா இப்படி வளைஞ்சி போய்ட்ட, இன்னும் நம்ம மேல ஏறி மிதிக்க தான் செய்வாங்க, உன்னால இப்போ என்னையும் அது மாதிரியே, பொறுமையா இருக்க சொல்றாங்க,உனக்கு ஒரு பிரீ அட்வைஸ், நம்ம எண்ணத்தையே அப்போவே அந்த நிமிஷமே வெளிய சொல்லிடறது நல்லது".
"நீ, உன் கோவத்தை எல்லாம் அப்படியே, உள்ளுக்குள்ளையே பூட்டி வெச்சி உன்னையே வருத்திகறியோன்னு தோணுது, அது தான் ரொம்ப டேஞ்சர், ஒரு நாள் நீ மத்தவங்க மேல கொந்தளிக்கிற(burst ) மாதிரி ஆகிடும் பார்த்துக்க," என்று அக்காவையும் மாமியாரிடம் மல்லுக்கு நில், என்பது போன்று அறிவுரை வழங்கினாள் .
இலக்கியா விழிகள் விரிய, தங்கையின் கோவம் அவளுக்கும் அமைதியின்றி, குடும்பத்திலும் அமைதி இழக்க செய்யும் அபாயம் உள்ளது என்பது புரிந்து, அவளை அமைதி படுத்தும் முயற்சியில் இறங்கி இறுதியில் ஓரளவு அதில் வெற்றியும் கண்டு, பிறகு, இருவரும் பொதுவாக சிறிது நேரம் பேசி விட்டு, அன்று விஷாகாவின் வீட்டிற்கு விருந்துக்கு செல்வது பற்றியும் கூறி முடித்தாள் .
அதன் பிறகு காலை உணவு முடிந்து, சுமதி மகள் இல்லத்திற்கு, மகன் மற்றும் மருமகள் உடன் புறப்படும், அவசரத்தில் இருந்தார் என்றால் , அன்பு சீக்கிரம் அங்கு செல்ல வேண்டுமா, என்று நேரத்தை கடத்தினான் .
பிறகு தாயின் எதிர்பார்ப்பு அறிந்து, ஒரு வழியாக, மதியம் ஒரு மணி அளவில், நாதன் இல்லத்தில், அதிதி தவிர்த்து, மூவரும் வந்து சேர்ந்தனர்.
இனியா, அவளின் புகுந்த வீட்டை, கண்டுபிரமித்தாள் என்றால், இங்கு விஷாகாவின் இல்லம், அவளுக்கு ஏதோ அந்த வீட்டை கண்டு மிரண்டாள் என்றே கூறலாம்.
பெரிதாகவும் பிரமாண்டமாகவும் காட்சியளித்தது,
அங்குள்ள ஒவ்வொரு பொருளும், அவர்களின் செல்வ நிலையை பறைசாற்றியது .
தானாக, கனவின் கைகளை அழுத்தமாக பிடித்து கொண்டாள் .
அது வரை, அங்கு வினோத்துடன் பேசி கொண்டிருந்த, அன்பு, மனைவியின் கைகளின் அழுத்தம் உணர்ந்து அவள் நிற்கும் பக்கம் பார்த்து, பிறகு என்ன உணர்ந்தானோ .
"ஹே, என்ன டா,தனியா பீல் பன்றியா, சாரி டா, நான் மாமாவோடு பேசுனதுல கவனிக்கலை " என்று அவளை தேற்றி, அவனின் அம்மா எங்கு என்று பார்த்தான்.
தேவகி, அவர்களை வரவேற்று விட்டு, சமயலறையில் வேலையில் இருந்தார்.
ஞாயிறு, அன்று மற்ற வேலையாட்களும், அவர்கள் குடும்பத்துடன் இருக்க வேண்டும், என்ற எண்ணத்தில், தேவகி காலையே அவர்களை எல்லா வேலைகளும் முடித்து விட்டு, அவரவர் இல்லத்திற்கு அனுப்பி விடுவார்.
நாதன், அன்பு , வீட்டிற்கு வரும் நேரம் தானும் வருவதாக கூறி, அவரின் நண்பர் ஒருவருடன், வெளியே சென்று இருந்தார்.
வினோத், அன்புவிடன் இருந்ததில், சுமதி மற்றும் விஷா இனியாவை ஒரு பொருட்டாக, மதிக்காமல், அங்கு அவளின் அறைக்குள் இருந்தனர்.
பிறகு, வினோத்தும் உணர்ந்தான், விஷா இன்னும், தம்பி குடும்பத்தை, நேரில் வந்து அழைக்கவில்லையே என்று.
அதன் பின், அவன் நேராக சென்று, அவன் மனைவியை, "விஷா , இப்போ அவன் சின்ன பையன் இல்லை, நீ அவன் வந்தும் கண்டுக்காம இருக்கே, வந்து கூட இன்வைட் பண்ணலைனா எப்படி," என்று கேட்டு, "நீங்களும் நேரா இங்க வந்து இருந்திடீங்க, உங்க பொண்ணுக்கு, சொல்லி கூட்டிட்டு வரலாம்ல," என்று சுமதியும் கேட்டு விட்டு, கையேடு, மனைவியை கீழே வந்து, இனியாவுடன் இருக்குமாறு கூறி சென்றான் .
"ஏன் மகாராணி, நான் இருக்க இடம் வந்து என் கிட்ட பேசமாட்டாளமா," என்று கணவன் காட்டிய கோவத்தையும் அன்னையிடம், காட்டி விட்டு, "இருக்கு டீ உனக்கு" என்று மனதில் கருவி கொண்டே, அங்கு வெளியே இன்முகத்துடன் வரவேற்றாள் .
"வினோத், அப்பாக்கு போன், பண்ணு, பா, வரேன் சொன்னாரு," என்று வினோத்துடன் பேசியபடியே, ஒவ்வொவொரு உணவு பொருட்களையும் எடுத்து வந்து உணவு மேசையில் அடுக்கினார்.
"என்ன மா, அந்த அதி கழுதை வரல," என்றதும், இனியா அதிர்ச்சியுடன் விஷாகாவை பார்த்தாள்.
அவளால், உணர முடிந்தது, தங்கையை பற்றி மொழிந்த, விஷாகாவின் குரலில், கோவமும் கடுப்புமே நிறைந்து இருந்தது.
இதே வார்த்தையை, உரிமையுடன் கூறி இருந்தால், அவருக்கு தங்கை மீது பாசம் இருக்கும் என்று உணர முடியும், அந்த அளவிற்கு இனியா ஒன்றும் அறியாதவள் அல்லவே.
ஏன் இப்படி, இவங்க எந்த மாதிரின்னு புரியலையே, என்று அப்பொழுது தான், விஷாவையே பார்த்து கொண்டிருப்பது மனதில் உரைத்து, முகத்தை சாதாரணமாக கடத்த முயற்சி செய்தாள் .
அவளுக்கு அந்த வீட்டினில் தோழியாக பழகும் அதிதி மீது அலாதி அன்பு, அதன் பொருட்டு, விஷாகாவிடமும் விட்டு கொடுக்கும் மனமின்றி, "அவளுக்கு இன்னும் இரண்டு எக்ஸாம் இருக்கு அண்ணி, அதான் படிக்கணும் வரல சொல்லிட்டா," என்று அவளுக்காக வக்காலத்து வாங்கியதில் விஷாவின் கொதிநிலை தான் இனியாவிற்கு தெரியாமல் போனது.
"பார்த்தியா மா, நீ வீட்டுல இந்த இரண்டு பேரையும் அரட்டையடிக்க விட்டுட்டு வேடிக்கை பார்க்கிறியா, அவளை பேசுனா, இவ பரிஞ்சிகிட்டு வரா," என்று அன்னைக்கு மட்டும் கேட்கும் குரலில், விஷாகா பேசிக்கொண்டிருக்கும் போதே, வினோத், அவன் தந்தைக்கு அழைத்து விட்டான்.
அவரும் அன்பு வருகை அறிந்து இன்னும் பத்து நிமிடத்தில் வருவதாக கூறினார் .
"இதோ முடிஞ்சிது, எல்லாம் எடுத்து வெச்சிட்டேன், தப்பா எடுத்துக்காத டா, இனியா, வேலை செய்யறவங்க எல்லாரும், வீட்டுக்கு அனுப்பிட்டேன், இது எல்லாம் இங்க டைனிங் எடுத்து வர வேலை மட்டும் தான், அதான், உங்களுக்கு ஜூஸ் கொடுத்துட்டு உள்ளே போய்ட்டேன், இப்போ நான் பிரீ, சாப்பிட்டு முடிஞ்சதும், நம்ம எல்லாம் பேசலாம்," என்று புதிதாக வீட்டிற்கு வந்த பெண்ணை, தனியாக விட்டு சென்றதற்கு மன்னிப்பு கேட்பது போல் இருந்த அவரின் பாங்கு, அங்கு இனியாவுக்கு மிகவும் பிடித்து இருந்தது.
"இருக்கட்டும் ஆண்டி" என்று புன்னகையுடன் பதிலளித்து, அவரிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தாள் .
சுமதியிடம் கடந்த வந்த நாட்களில், ஒரு முறை கூட, அவரிடம் அன்போ, கனிவோ, இனியா கண்டதில்லை, இன்று, தேவகி அவளுடன், கனிவுடன் நடந்து கொண்டதில் அவளுக்கு தேவகியை இன்னும் பிடித்து விட்டது.
"இப்பவே, நேரம் ஆச்சு, சாப்பிட வாங்க," என்று, தேவகி அழைத்ததும், "அத்தை , மாமா வரட்டும், அதான், இன்னும் பத்து நிமிஷத்துல வரேன் கால் பன்னாரே," என்றதும், விஷாகா, ஏளனமாக தம்பியை கண்டாள் .
"அவர் அப்படியே வந்தாலும், இவன மதிச்சிடுவாரு," என்ற முணுமுணுப்பு, சுமதியின் செவியிலும் விழாமல் இல்லை.
ஆனால் , அவர் என்று மகளுக்கு எதிராக பேசி இருக்கிறார், அமைதி தான் அங்கு.
வந்ததில் இருந்து, இனியாவிடமே, தேவகி, வினோத் என்று பழகுவது, அதுவேறு, விஷாகாவுக்கு வயிறு காந்தியது .
சுமதியை கேட்கவே வேண்டாம், மாமியாராகவும், மகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், அவளின் புகுந்த வீட்டில் மற்றவர்களுடன் இனியா பேசுவது, வீட்டிற்கு போய் அவளுக்கு கச்சேரி கொடுக்க காத்திருந்தார்.
ஒருவாறு நாதனும் வந்து சேர்ந்ததும், அவர் எப்பொழுதும் போல் இல்லாமல் இந்த முறை, அன்பு எதிரில் போய் அவனுக்கு கை கொடுத்து, அவன் தோளில் தட்டி, "வாங்க புது மாப்பிளை," என்று வரவேற்றது, ஏதோ தலை சுற்றிய நிலையில் அன்பு என்றால், விஷா கேட்கவே வேண்டாம்.
அங்கு மற்றவர்களும் அப்படியே, ஏதோ அதிசியம் போல் பிரமித்து நின்றனர்.
இனியா மட்டும், யாரையும் எப்படியும் எடை போட முடியாமல், தவித்து நின்றாள் .
பிறகு, அனைவரும் உணவிற்கு அமர்ந்ததும், தேவகி அனைவருக்கு பரிமாறினார்.
அதற்கு இனியா, அவரை தடுத்து, "எல்லாருமே ஒருத்தருக்கு ஒருத்தர் போட்டுக்கலாம் அண்டி , எல்லாரும் ஒன்னாவே சாப்பிடலாம், நீங்க மட்டும் தனியா எல்லாருக்கும் செர்வ் பண்ண வேண்டாம்" என்றதும், இது வரை, விஷாகாவிற்கு தோணாத ஒன்று இந்த சிறு பெண்ணீர்க்கு தோன்றியதே, என்று இனியா மீது, ஒரு மதிப்பு உண்டானது நாதனுக்கு.
வினோத்தும் அப்படியே, அவனும் பல முறை, அன்னைக்கு உதவுமாறு மனைவியிடம் கூறி இருப்பான்.
அவள் காதினுள் போட்டு கொண்டாள் தானே, அவனையும் அவன் பேச்சையும் கடந்து போவாள் .
நாளடைவில் விட்டு விட்டான்.
குடும்பத்தில் அமைதி ஒன்று வேண்டுமெனில், தம்பதியினரில் யாரேனும் ஒருவர் விட்டு கொடுப்பதில் தவறில்லை, என்னும் தேவகியின் கூற்றை கேட்டு வளர்ந்தவன், அவனும் அதையே கடை பிடித்தான் .
தேவகியுடன் இனியாவும் அனைவருக்கும் பரிமாறி விட்டு, பிறகு, அனைத்து பதார்த்தங்களும் இலையில் நிரப்பிய பிறகு, ஒன்றாகவே உணவு உண்டனர்.
சிறிது நேரம் பொதுவான பேச்சுக்கள், அதிலும் நாதன் அன்புவுக்கே அதிர்ச்சி தரும் அளவிற்கு அவரின் பேச்சு அன்புவிடம், சதாரனமாக, நிறைய பேசினார்.
அவனின் தொழில் பற்றி, அனைத்தும் பேசிக்கொண்டிருந்தார்.
பிறகு நேரம் கடப்பதை உணர்ந்து, அதிதி வேறு வீட்டில் தனியாக இருக்கும் காரணத்தை கூறி, கிளம்ப தயாரானாது அன்பு குடும்பம்.

உடனே, தேவகி ஒரு தாம்பாளத்தில் உடை, மற்றும் இத்யாதி இத்யாதி, வைத்து, அன்பு மற்றும் இனியா கையில் கொடுத்தனர்.
அவர்களும், நாதன் தம்பதி மற்றும் வினோத் விஷா காலில் வணங்கி ஆசி பெற்றனர்.
"இனியா, போய், டிரஸ் மாத்திட்டு வாயேன்,எப்படி இருக்குனு பார்போம்," என்று விஷா கூறியதும், "ஆமா , இனியா, விஷாக்கு, துணி வகை பற்றி, எல்லாம் அத்துப்படி, நல்லாவே டிரஸ் செலக்ட் பண்ணுவா, நல்ல துணியோட தரம் பார்த்து தேர்ந்தெடுப்பா, உனக்கும் அவளையே, எடுத்துட்டு வர சொன்னோம், நாங்களும் இன்னும் பார்கலை ."
"நீ உடுத்திட்டு வா, உனக்கு பிடிச்சா பாரு, பிடிக்கலையா வேரையும் மாத்திக்கலாம், என்று தேவகியும் ஆசையாக கேட்டதில், அவளும் மறுப்பு தெரிவிக்காமல், கணவனிடம் கண்களால் அனுமதி பெற்று தேவகி காட்டிய அறைக்குள், சென்றாள் .
ஆனால் அங்கு விஷா வின் வஞ்சம் நிறைந்த கண்கள், அவள் உடுத்தி வரும் சேலைக்காக ஆவலாக எதிர்பார்த்தது.
ஏனெனில், நாதன் இல்லத்தில் வேலை செய்வோருக்கு என்று அனைவருக்கும் ஒரே நிறத்தில், மற்றும் டிசைனில் சீருடை போன்று, உடுப்பு இருக்கும், பெண்களுக்கு சேலையும் ஆண்களுக்கு, பேண்ட் சட்டையும் என்று சீருடையில் இருக்கும் .
அந்த துணிகளும் விஷாகாவின் கடைகளில் இருந்து தான்.
வீட்டில் வேலை செய்வோர், அணியும் சேலையை தான், அவள் கடையில் இருந்து, விஷாகா எடுத்து வந்து அழகாக ஒரு அட்டை பெட்டியில் சுற்றி வைத்து, இனியாவிற்கு என்று எடுத்து வந்தாள் .
இந்திரா மற்றும், அவரின் வீட்டு ஆட்கள், அன்று திருமணத்தில் அவளை அவமான படுத்தியதற்கு பதிலடி கொடுக்கும் பொருட்டு, விஷாகா இவ்வாறு நடந்து கொண்டது.
அதே நேரத்தில், விஷாகா பொருத்தும் மட்டில், இனியா, அவளுக்கு சமம் இல்லை என்றும் , அவளை பொறுத்த வரை, அவள் வீட்டினில் வேலை செய்யும் பணியாளர்களில் இனியாவும் ஒருவள் தான் என்பது போன்று, அன்புவுக்கு காட்டவே இப்படி.
தம்பி எப்படி, தன்னை மீறி அவன் விருப்பத்தில் திருமணம் செய்யலாம், என்னும் கனல் இன்னும் அவளின் மனதில் எரிந்து கொண்டு தான் இருக்கிறது, என்று அவனுக்கும் தெரியப்படுத்தவே இப்படி.
இனியா, "டெய்லி வெர் சாரீ , மாதிரி இருக்கு," என்று அவளுக்குள் பேசி கொண்டே, அவள் எடுத்து உடுத்தினாள் .
அவளுக்கு இதுவரை, எதுவும் தெரியாத பட்சத்தில், அவளுக்கு இது சாதாரண விஷயம் தான்.
விஷாகாவை பற்றி, இனி தெரியும் காலமும் விரைவில் .
அன்பளிப்பாக கொடுக்கும் பொருளின் மதிப்பு, உயர்வா தாழ்வா, என்றெல்லாம் இதுவரை இனியா வித்யாசமாக பார்த்ததில்லை.
அவள் உடை அணிந்து, வெளியே வந்ததும், கண்களில் கனல் கக்க ஏளனமாக, இனியாவை விஷாகா பார்த்தல் என்றால். அன்புவை தவிர மற்ற அனைவர்க்கும் அதிர்சியே.
தேவகி கைகளை எடுத்து வாயை பொத்தி கொண்டு, அய்யோ, வீட்டு வேலை செய்யறவங்க யூனிபோர்ம் துணி எடுத்து கொடுத்திருக்களே , இந்த விஷா ஏன் இப்படி செய்யறா ," என்று அன்புவை பார்த்தார்.
அவன் ஆவேசமாக எழுந்து, "ஒழுங்கா போய் இந்த துனிய கடாசிட்டு, உன் டிரஸ் போட்டுட்டு வா போ," என்று கர்ஜனையாக ஒலித்த, அவன் குரலில், அவளின் கால்கள் இரண்டடி பின்னோக்கி சென்றது.
கணவனின் முதல் முறை அதட்டலில், உடல் தூக்கி போட, என்ன தவறு செய்தேன் என்ற குழப்பத்துடன், கலங்கிய கண்களுடன், அறைக்குள் சென்றாள் இனியா.
இதுவரை, யாரும் அன்புவின் கோவத்தை பார்த்ததில்லை, முதல் முறை, விஷாகவே, தம்பியின் புது அவதாரத்தில் பயந்தாள் என்று தான் சொல்ல வேண்டும்.
நாதன் தலையில் கை வைத்து அமர்ந்து விட்டார்.
வினோத்துக்கு "இப்படி, இவ இப்படி பழி வாங்கும் எண்ணாதோட இருக்காளே, அன்பு மேல என்ன தான் கோவம் , இவள இப்படியே விட்டா சரி வராது," என்று யோசனை.
"அன்பு " என்று வினோத் தயங்கி தயங்கி அழைத்ததும் "மாமா, எதுவும் பேசாதீங்க, அவ ட்ரெஸ் மாத்திட்டு வந்ததும் நான் புறப்படுறேன், எந்த வார்த்தையும் வளர்க்க வேண்டாம், ".
கோவத்தை கட்டு படுத்த முயற்சி செய்கிறான், என்று கைகளை முறுக்கி கொண்டு பேசுவதை வைத்து உணர முடிந்தது அங்கிருப்போருக்கு.



 

Nasreen

Well-Known Member
Vishaka romba keattu pothey sumathiyala thaan
Neraiya thappu kku thoondukolaga irukka sumathi
Anbu ippo vishaka VA vittu thoora poganum
Sumathiyayum serkakoodathu
Vishaka veedu Chumma thaanae irukku anga sumathi kodi vachidunga
So iniyavum free ya irukalam
Seekiram anbu avan amma pathi therijirukkum
 

achuma

Well-Known Member
Vishaka romba keattu pothey sumathiyala thaan
Neraiya thappu kku thoondukolaga irukka sumathi
Anbu ippo vishaka VA vittu thoora poganum
Sumathiyayum serkakoodathu
Vishaka veedu Chumma thaanae irukku anga sumathi kodi vachidunga
So iniyavum free ya irukalam
Seekiram anbu avan amma pathi therijirukkum
Thanks friend (y)
 

Pooja Soundarya

Well-Known Member
Adipaavi visha….. idula onume illa …. Enoda sister in law enaku yentha saree kuduthana…. Avaga amma katama cupboard vachu irukara old saree thanthaga…. In fact na than antha avakita kuduthu uga amma ye intha sareela katama irukaga anni nu kete…. ( aduvum without blouse thanthaga……. Ega appa amma enaku. Semaiya dose vitaga after marriage virundu vachu saree with blouse than vaganum) husband ilathavagaluku than only saree tharuvagalam….. enaku adu theriyadu
 

Pooja Soundarya

Well-Known Member
iga anbu kovapata….. aana ye husband ega akka n amma enna panalum nethan adjust pananum solitaru….. na atha saree yenoda self vachu irunde…. Enoda mother in law enaku venumnu yeduthutu poitaga….
 

achuma

Well-Known Member
Adipaavi visha….. idula onume illa …. Enoda sister in law enaku yentha saree kuduthana…. Avaga amma katama cupboard vachu irukara old saree thanthaga…. In fact na than antha avakita kuduthu uga amma ye intha sareela katama irukaga anni nu kete…. ( aduvum without blouse thanthaga……. Ega appa amma enaku. Semaiya dose vitaga after marriage virundu vachu saree with blouse than vaganum) husband ilathavagaluku than only saree tharuvagalam….. enaku adu theriyadu
Silar ipadi irukaanga sis
Enna seiradhu
Can't to change their characters
Thanks for comment
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top