அன்பின் இனியா 18 2

Advertisement

achuma

Well-Known Member
அதை அப்படியே, அவள் இலக்கியா மற்றும் அதிதியிடம் கூறி அன்புவை நினைத்து மூன்று பெண்களும் சிரித்து கொண்டனர்.
அவ்விடம் வந்து சேர்ந்த, அன்பு வீட்டு உறவினர்களுக்கும் விஷயம் பகிரப்பட்டு, அனைவரின் கிண்டலுக்கும் அன்பு கிடைத்து விட்டான்.
"டேய், போக்கிரி பயலே, இந்த காலத்துலையும் புருஷன் காலுல பொண்டாட்டி விழுகணும் நினைச்சியாக்கும் நீ அப்படி எல்லா இருக்க மாட்டேன்னு தானே நான் நெனச்சேன் ," என்று அவன் பெரியன்னை அவன் காதை திருகி கொண்டு கேட்டதில் ,
"நான் எங்க அப்படி நினைச்சேன், அப்படி எல்லாம் என் காலுல விழுக வேண்டாம்னு தானே நினைச்சேன்" என்று மனதில் நினைத்து கொண்டே, திகைத்தான், " இது இவங்களுக்கு எப்படி தெரியும்" என்று அவன் திரு திரு என்று முழித்து கொண்டே மனைவி பக்கம் பார்வை சென்றது.
அவளை முறைத்தான், அவளோ, அவன் முறைப்பை, அசால்டாக எதிர் கொண்டு, கண்ணடித்தாள், அதில் மீண்டும் திகைத்து, மனதிற்குள் சாரல் அடிக்க, "சரியான சேட்டை," என்று மனைவியை மனதிலே நினைத்து கொஞ்சி கொண்டான் .
விஷாகாவை தவிர்த்து, அனைவரும் சந்தோஷமாக இருப்பது போன்ற பிரமை, சுமதி உள்ளத்தில் புயலடித்தது.
தன் மகள், யாரும் இல்லாமல் தவிக்கிறாளா, "நானே நேற்று அவளுடன் சரியாக பேச வில்லையே," என்று உள்ளம் தகித்தது அவருக்கு .
முதல் நாள் மகள் எதிலும் தலையிடாமல் ஒதுங்கி இருந்தது மன வருத்தத்தை தந்தது என்றால், இன்று, மகளின் பக்கம், அவள் எண்ணம் சரியே, என்று மகளுக்காக, வாதம் செய்தது அவரின் மனம்.
விஷாகாவின் எண்ணம் என்ன அவளே எதிலும் முதன்மையாக இருக்க வேண்டும், அவளுக்கே முன்னுரிமை கிடைக்க வேண்டும், இதில் என்ன தவறு, அது எப்படி, அவள், தலையீடு இல்லாமல் நேற்று இனியா வீட்டினர், திருமணத்தையே நடத்தினர் என்று முடிந்த திருமணத்திற்கு, சண்டைக்கு நிற்க துடித்தார்.
இதனால் தானே மகள் தன் மீதும் கோவமாக இருக்கிறார், என்று கற்பனை தறிகெட்டு சென்றதில், இங்கு மற்றவர்கள் கேலி கிண்டலுடன் இருப்பது எதுவும் கருத்தில் பதியவில்லை .
இனியா, இரண்டு நாட்களுக்கு தேவையான அன்புவின் உடை எடுக்க அங்கு அவளின் அறைக்குள் சென்றாள்.
இத்தனை சொந்தங்கள் இருந்தும் மகள் ஒருவள் அவரின் அருகில் இல்லாமல் ஏதோ தனித்து விட பட்ட உணர்வு சுமதிக்கு .
அவரின் வாழ்வே விஷாகா என்று வாழ்ந்தவரால், மகளின் ஒரு நாள் கோவமே அவரால் தாங்க முடியாமல் போனது.
யாரும் எதிர்பாரா நேரம் மற்றவர் கண்களுக்கு அக படாமல், அன்பு இனியாவை சந்திக்க சென்றான்.
அவள் கட்டிலில் ஒரு பெட்டியை வைத்து,அதில் அன்புவுக்கு தேவையான உடைகள் அடுக்கி கொண்டிருப்பதை பார்த்து அவள் எதிர்பாரா நேரம், அவளின் நீண்ட ஜடையை, லேசாக இழுத்து,அவளின் இடையோடு பற்றி, அவளை கட்டி அணைத்தான் .
கணவனின் திடீர், செயலில் அதிர்ந்தாலும், "ஏதாவது, இப்படி சைலெண்டா வம்பு பண்றதே உங்களுக்கு வேலையா," என்று அவளும் அவன் கைகளுக்குள் விரும்பியே அகப்பட்டாள் .
"நான் பேச வந்தா, நீ ஏதாவது என்னை டைவெர்ட் பண்றே".
" ரூமுக்குள்ள நான் வேற விஷயம் பேச வந்தேன், நீ என் கண்ணு முன்னாடி கண்ணா பின்னானு குனிந்து நிமிர்ந்தா நானும் தான் என்ன செய்யறது," என்று வந்த விஷயத்தை மறந்து அவளுடன் இழைந்து கொண்டான் .
"கேடி உன்னை நம்பி ஒன்னு சொல்ல முடியுதா, அங்க நான் எல்லாரும் என்னை கிண்டல் அடிக்கிறாங்க, ஏன், நீ, டித்து மட்டும் சொன்னே, நேத்து நீ சொதப்பி, எத்தனை ரீ எக்ஸாம் அட்டென்ட் பன்னேனும் சொல்ல வேண்டியது தானே," என்று வில்லங்கமாக பேசியதில் அவன் வாயிலேயே இரண்டு அடி போட்டாள் .
"பேச்சை பாரு, நீங்க ரொம்ப அமைதினு, இவங்க எல்லாம் சொல்றாங்க," என்று இனியா கூறினாள் .
"நான் இரண்டு செட் ட்ரெஸ்மட்டும் எடுத்து வெச்சி இருக்கேன், ஏன் எல்லாமே வெறும் வெள்ளை கலர் சட்டையாவே இருக்கு, வேற ஏதாவது வேணுமான்னு பார்த்துக்கங்க," என்று அவள் வரிசையாக பேசியதில் அதுவரை இருந்த இனிமை பறந்து, மனைவியின் எதிர்பார்ப்பினை நிறைவேற்ற முடியுமா என்று அன்பு வருந்தினான்.
"இனியா, நான் ஒன்னு கேட்குறேன், ஜஸ்ட் ஒப்பீனியன் தான், நீ எதுவுனாலும் சொல்லு சரியா," என்று பீடிகை போட்டதில், கணவனின் குரல் மாற்றத்தில் அவனை நிமிர்ந்து பார்த்தாள், என்ன என்று.
"இன்னைக்கு எல்லாரும், இங்க இருக்கும் நம்ம சொந்தகாரங்க ஊருக்கு போறாங்க, அதுனால் வேற ஃபிரி டைம் கிடைக்கும் போது, நம்ம உங்க வீட்டுல போய் தங்கலாம், கூடயே இருந்து என் கல்யாண வேலை, எல்லாமே பார்த்தாங்க".
"இப்போ அவங்க கிளம்போது நம்ம இல்லைனா, எனக்கு ஒரு மாதிரி இருக்கு," என்று அவள் முகம் பார்த்தான்.
அதில் அவளின் ஏமாற்றம் நன்றாக உணர்ந்து கொள்ள முடிந்தது, அவளின் பார்வையில்.
"ஓகே, நீ என்ன சொல்றே, உன் ஒப்பீனியன் என்னனு தான் கேட்டேன், நீ டல் ஆகுற அப்டினா ஒன்னும் பிரெச்சனை இல்லை, என்கிட்டே எது சொல்லனும் என்றாலும் பீல் ஃபிரி."
"சரி கிளம்பலாம்," என்று அவனே அவளின் சோகம் பொறுக்காது, முடிவை மாற்றினான் .
"மச் பரவாயில்லை , நம்ம வீடு இங்கே தானே இருக்கு, அப்பறம் போகலாம்,இவங்க எல்லாரும் ரொம்ப ஸ்வீட்,
அவங்க திரும்பவும் எப்போ வருவார்களோ, அதுனால், அவங்க கிளம்போது நம்ம இங்கே இருக்கலாம், இப்போ போயிட்டு, ஈவினிங் இங்க வரலாம், நானும் நார்மல் தான், என்னோட நினைப்பு என்னனு கேட்டீங்க இல்ல, அதுவே எனக்கு ஹாப்பியா இருக்கு, நீங்களும் ரிலேட்டிவ் மேல ரொம்ப அன்பு வெச்சி இருக்கீங்கன்னு நினைக்கும் போது, பெருமையா இருக்கு, எங்க அப்பாவும் இப்படி தான், " என்று மனதில் சோகம் இருந்தாலும் கணவனுக்காக, அவனின் வெள்ளந்தியாக பழகும் அவனின் கிராம சொந்தங்களுக்காக விட்டு கொடுத்தாள் .
தனக்காக மனைவி, அவளின் ஆசையை, விட்டு கொடுத்ததில் வருத்தம் மகிழிச்சி என்று கலந்தடித்து, ஒரு வழியாக மாமனார் வீட்டிற்கு சென்றனர்.
மோகன் இல்லத்தில் சிறந்த வரவேற்பு கிடைத்தது மணமகனுக்கும், அவ்வீட்டின் இளவரசிக்கும் .
வீட்டினுள் சென்றதும், இனியா ஓடி சென்று அவள் தந்தையை கட்டி கொண்டாள் .
இந்திரா மகளின் முகத்தில் நிலைத்திருக்கும் பூரிப்பு கண்டு, மகிழ்ச்சி கொண்டார் .
மற்ற சொந்தங்கள் அவளை சூழ்ந்து கொண்டதில், ஒரு நாளிலே அவளின் பிரிவை நினைத்து ஏங்கும் சொந்தங்களை நினைத்து அன்பு மெச்சி கொண்டான்.
கொடுத்து வைத்தவள் தன் மனைவி என்று நினைத்து கொண்டான், இது போன்ற பாசமான குடும்பம் அவளுக்கு கிடைத்ததில் .
அவன் இன்னும் மனைவியை தாங்க வேண்டும் என்று நினைத்து கொண்டான், இங்கு வந்து பார்த்த பிறகு.
இளங்கோ, மற்றும் செழியன் அன்புவிடம் சிறிது நேரம் பேசி கொண்டிருந்தனர்.
அப்படியும் அங்கு ஒரு நாளிலே, வீட்டினில் யார் எப்படி, என்று இனியாவை கேள்விகளால் துளைத்தெடுத்துனர், அவள் குடும்பத்தார்.
இன்னும் உள்ளே சென்ற மகள் வரவில்லையே, என்று மகன் மற்றும் இரு மாப்பிளைகளுடன் இருந்த மோகன், அன்பு என்ன நினைப்பார் என்று ஒரு பக்கம் தயக்கமாகவும் இருந்தது.
"மாப்பிளை, தப்பா நினைக்காதீங்க, எல்லாரையும் பார்த்ததும் அவங்களோடு உள்ளே போய்ட்டா," என்று தயக்கத்துடன் அன்புவிடம் கூறி விட்டு, இனியாவை அழைக்க சென்றார்.
அன்பு மறுத்தும் அவர் நேராக இனியாவிடம் சென்றார்.
"குட்டிமா , இப்போ நீ சின்ன பொண்ணு இல்லை, மா, மாப்பிளையை அங்க விட்டுட்டு, நீ இங்க எவ்வளவு நேரம் தான் இவங்களோட பேசிட்டு இருப்ப, அவரை தான் முதல கவனிக்கணும்".
"போய் அவருக்கு என்ன வேணும்னு கேளு, மாத்துறதுக்கு உடை எடுத்து கொடு, அவர் கூடையே இரு," என்று முதல் முறையாக மாப்பிளைக்காக, மகளை கண்டித்தார்.
"இங்க தானே எல்லாரோடும் இருப்ப , அப்பறமா பேசிப்ப," என்றதும் மகளின் முகம் வாடி, அவள் தந்தை தோள் சாய்ந்தாள் .
"அப்பா, ஈவினிங் கிளம்புறோம், அங்க எல்லாரும் ஊருக்கு போறாங்க," என்றதும், மோகனின் முகம் வாடியது.
தந்தையின் முகம் வாட்டமும் பொறுக்காமல், தவிக்க ஆரம்பித்தாள்.
கணவனுக்காக பார்க்கிறதா, இல்லை அப்பாவுக்காக இங்க இருக்கிறதா, என்று தவித்தாள் .
மோகன் தன்னை தேற்றி, மகள் திருமணம் ஆன பின்பு எதிர்கொள்ள வேண்டிய விஷயங்கள் தான், என்று ஒரு வாறாக மனதை தேற்றி கொண்டார்.
மகளையும் தேற்றினார், "புரியது குட்டிமா, நீயும் இருந்து எல்லாரையும் வழி அனுப்பனும் இல்லை, நம்ம வீடு இங்க ஒரு மனை நேரத்தில தானே இருக்கு, அப்பறமா கூட வரலாம், சரியா," என்று மகளையும் தன்னையும் ஒரு சேர தேற்றி கொண்டார்.
(அப்படி ஒரு நாள் தான் வருமா, விஷாகா சுமதி தான் எளிதில் அனுப்பி விடுவார்களா ).
மதிய விருந்து தட புடலாக முடிந்து, மாலை கிளம்பும் நேரமும் வந்தது.
அந்த கூட்டத்தில், இருவருக்கும் தனிமை என்றதே கிடைக்காமல் போனது.
யாரேனும் ஒருவர், அன்புவை சூழுந்து கொண்டு அவனை கேள்விகளால் சுழற்றினர்.
அவனும் பொறுமையாக அனைவருக்கு இன்முகத்தோடு பதிலளித்து கொண்டிருந்தான்.
கிளம்பும் நேரம் துக்கம் தொண்டையை அடைக்க, அவள் கண்கள் தவிக்க ஆரம்பித்தது.
அன்பு மற்றவரிடம் பேசி கொண்டாலும், மனைவியை அவ்வப்போது பார்த்து கொண்டே இருந்ததில் அவன் கண்களுக்கு தப்பாமல் மனைவியின் சோகம் காட்சியளித்தது.
அவளின் அருகில் சென்று அவள் கைகளை அழுத்தி கொண்டான்.
அவனுக்கும் வருத்தமாக இருந்தது.
"மாமா, எல்லாருமே அடிக்கடி வரவும் மாட்டாங்க மாமா அதுனால் தான், இன்னைக்கே போகணும்னு நினைத்தேன்" என்று அவன் பக்கம் எடுத்து கூறினான்.
"இருக்கட்டும் மாப்பிளை, நீங்க அங்க இப்போ இருக்குறது தான் முறை, பரவாயில்லை, இன்னொரு நாள் இங்க தகுவது போல, வாங்க," என்று மகளை நெற்றியில் முத்தம் கொடுத்து, வழி அனுப்பி வைத்தார்.
ஆளுக்கு ஒருவர் என்று அவளுக்கு அறிவுரை வழங்கினார்கள் .
அன்புவுக்கே மலைப்பாகவும், வேடிக்கையாகவும் இருந்தது, அவர்களை நினைத்து.
"காலையிலே சீக்கிரம் எழுந்துக்கோ,
வீடு எல்லாம் சுத்தமா வெச்சுக்கணும்,
வீட்டுக்கு வர விருந்தாளிக்கு மறக்காம, அவங்களுக்கு பூவும் குங்குமமும் கொடுத்து வழி அனுப்பு,
பெரியவங்கள எதிர்த்து பேசாதே, எது சொன்னாலும் சரின்னு போ
மாப்பிளை மனசு கோணாம நடந்துக்கோ,
அவரை முன்னாடி விட்டு நீ அவருக்கு பின்ன போ "
"ஏன் இல்லைனா இவளுக்கு வழி தெரியாதா ," என்று அங்கு வந்து நின்றான் இளங்கோ .
அது வரை பாவமே என்று அனைவரும் கூறுவதற்கு தலையை ஆட்டி கொண்டிருந்தாள் இனியா.
"இவளுக்கு நம்ம கிட்ட மட்டும் தான் வாய், அங்க எல்லார்கிட்டயும் கிண்டலடிச்சிட்டு இங்க அமைதியா இருக்கறதை பாரு " என்று அவளை மனதினில் நினைத்து சிரித்து கொண்டான், அன்பு.
"காக்கா, அங்க உன் வேலை என்னவோ அது பாரு, எப்பவும் போல இரு, நீ எல்லாம் பொறுப்பா இருப்ப, இவங்க சொல்றதை எல்லாம் நினைச்சிட்டே இருக்காதா, ஏதோ தனியா காட்டுக்கு போற பீல் கொடுக்குறாங்க".
என்று இளங்கோ இனியாவை சமாளித்து அவர்களிடம் இருந்து, அன்புவின் அருகில் அழைத்து சென்றான் .
கணவன் கண்களில் இருக்கும் சிரிப்பு, அவளை கிண்டலடிக்கிறானென்று புரிந்து கொண்டு, அவனை முறைத்தாள்.
இப்பொழுது அவளை பார்த்து கண்ணடிக்கும் முறையானது அன்புவினது .
அவளின் கூடை விட்டு, கணவன் இல்லத்திற்கு சென்றாள், அவள் சொந்தங்களின் நினைவை, சுமந்த மனதுடன்.
அன்று இரவு, அன்புவின் சொந்தங்கள் மணமக்கள் வருதற்குள், சுமதியை அவ்வீட்டு பெண்கள், நிறையவே, அறிவுரை செய்திருந்தனர்.
அதில் சுமதி, ஒரு வாறாக, மகன் தான் இறுதி வரை, தன்னை பார்த்து கொள்வான், என்ற உண்மை உரைக்க, அமைதியானார்.
இருந்தும் விஷாகா அன்றி அவருக்கு ஒன்றும் இல்லை என்ற எண்ணம் தான் எப்பொழுதும் .
அதனை மாற்ற முடியாது.
சொந்தங்களும் ஊருக்கு புறப்பட்டனர்.
அதிதி அவளின் உறவினர்கள் சென்றதும் சோர்வடைந்தாள் .
தங்கையை தேற்றி, பிறகு அவரவர் உறங்க சென்றனர்.
இனியாவின் ஏக்கங்கள் எல்லாம், அன்பு, மறைக்க மறக்க செய்தான்.
அவர்களின் காதல் உலகில் அவர்களின் ரகசிய பாஷைகள் பரிமாறி கொள்ள பட்டது, விடியல் வரை.
காலையில் இனியா எழுந்ததும் குளித்து, கீழே வந்து பூஜை செய்தாள் .
சுமதி, மற்றும் அதிதி அறை இன்னும் திறக்க படாமல் இருந்ததால், மாமியாரிடம் கேட்டு என்ன சமைக்க என்று தெரியாமல் முழித்து கொண்டிருந்தாள் .
இது வரை யாரையும் எதிர்பார்த்து, அவளின் வேலைகளை செய்தது இல்லை, ஆனால் இந்த அனுபவம் அவளுக்கு உவப்பானதாகவும் இல்லை, அதே நேரத்தில் மாமியார் ஏதேனும் நினைத்து கொள்வாரோ என்று அது வேர் அவளை எரிச்சல் மூட்டியது.
எப்பொழுது அடுத்தவரை என்ன நினைப்பார்கள் என்று தான் பார்க்க ஆரம்பித்தோம் என்று அவளுக்கே விந்தையாக இருந்தது.
சமயலறை சென்று பார்த்தாள், மளிகை பொருட்கள் எல்லாம் ஒன்றும் அந்த அளவிற்கு இல்லை, எது எது இருக்கிறது, என்று பார்த்து, தேவயானவற்றை, எழுதினாள் .
பிறகு, வெளியே சென்று வாயில் அருகே சென்று அங்கு வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள் .
அப்பொழுது, அங்கிருக்கும் அக்கம் பக்கத்தினர், அவரவர் வாசலை பெருக்கி கோலம் போடுவதை பார்த்து, தலையில் தட்டி கொண்டு, மறந்துட்டேன், என்று நினைத்து அவளும் வாசல் பெருக்கி தண்ணீர் தெளிர்த்தாள் .
கோலம் பொடி இல்லாதாதல், திரு திரு என்று முழித்து கொண்டதில், அவள் வீட்டின் பக்கத்து வீட்டு பெண்மணி, என்ன என்று கேட்டதும், "இல்லை இங்க வீடு சுத்தி, எங்கேயும் கோலா மாவு இல்லை, அது தான்," என்று அவள் தயங்கியதில் அவரே அவளின் கையில் கோல பொடி கொடுத்தார்.
பெரிதும் அல்லாமல் சிறிதும் அன்றி அழகாக ஒரு கோலம் போட்டாள்
மீண்டும் அவரிடம் கொடுத்து நன்றி உரைத்து, அவரிடம் நட்பாகினாள் இனியா.
அவருக்கும் அன்பு குடும்பம் வந்ததில் இருந்து, யாரும் இது வரை வெளியே வந்து பேசியது இல்லை, அதிதி மட்டுமே, எப்பொழுதேனும் எதிரில் பார்க்க நேர்ந்தால், ஒரு புன்னகை.
இன்று இனியாவுடன் பேசியதில் அவருக்கும் இனியாவை பிடித்து விட்டது.
இனியா அந்த தெருவில் யார் யார் என்று கேட்டது வரை அங்கு ஏதேனும் அருகில் கடை இருக்கிறதா என்பது வரை அறிந்து கொண்டே, அந்த பெண்மணியை விட்டாள் .
இதில் வார்த்தைக்கு வார்த்தை அக்கா போட்டதில் அவரும் அவளின் கேள்விக்கு, மகிழ்வுடன் பதிலளித்தார்.
மீண்டும் சமயலறை வந்து, இட்லி ஊற்றி, சாம்பார் வைத்தாள் .
முதல் நாள், அன்புவின் பெரியன்னை, மாவு மட்டும் அரைத்து வைத்திருப்பதாக, கூறியதால், இனியாவுக்கு காலை வேலை சுலபமாக முடிந்தது.
அதிதியும் சுமதியும் ஒரு வழியாக வெளியே தயாராகி வந்தனர்.
மருமகளின் கை ருசியில், அவளை மனதில் மட்டுமே மெச்சி கொண்டார், சுமதி.
அதிதி மட்டுமே அவள் அண்ணியை பாராட்டி தள்ளினாள்.
அன்புவும் மனைவியை கண்களால் பாராட்டி, அதில் அவள் வெட்கம் கொண்டு, பிறகு, இனியா அமரும் நேரம், அன்பு சம்யலறையில் தோசை ஊற்ற சென்றான் .
இனியா எழுந்து வந்ததற்கும் மறுத்து, "அதிதி, தோசை என்றால் பிடிக்கும் நான் வீட்டுல இருக்கும் போது அவளுக்கு செய்யறது தான்," என்று அவளை டைனிங் ஹால் அனுப்பி விட்டான்.
இனியாவாள் அவள் பெற்றோரை நினைக்காமல் இருக்க முடியவில்லை.
இனியா இட்லியை விட தோசையே அதிகம் விரும்புவாள்.
"அவ பிடிச்சி சாப்பிடறது அது ஒன்னு தான், இட்லி செய்யும் போது நீ அவளுக்கு தோசையும் சேர்த்தே கொடு", என்று மோகன் இந்திராவிடம் பாய்வார்.
"இங்க நான் கொடுக்குறேன், போற இடத்தில யார் சுட்டு கொடுப்பா," என்று இந்திராவும் பதிலுக்கு திருப்பி கொடுத்து, மகளுக்கு அவள் விரும்பும் தோசை செய்து கொடுப்பார்.
அதை நினைத்து இனியா அமைதியாக தட்டில் இருக்கும் உணவை அளந்து கொண்டிருந்தாள்.
அன்பு இனியாவின் தட்டில், தோசை வைத்தான்.
கணவன் இவ்வாறு செய்வான் என்று நினைக்காத அதிர்ச்சியில், இனியாவின் கண்கள் புன்னகையில் விரிந்தது.
அதிலே அன்புவும் மனைவியின் எண்ணம் புரிந்து, சாப்பிடுமாறு கண்களால் சைகை செய்தான்.
இது அனைத்தும் சுமதியின் கண்களுக்கு தப்பாமல் விழுந்து தொலைத்தது தான் கொடுமை.
அதிதிக்கும் மகன் எப்பொழுதும் செய்து தருவது தான், அது தவறாக படாத சுமதிக்கு, இன்று மகன் அவன் மனைவிக்கு தோசை ஊற்றியது மட்டும் ஏதோ பெரும் குற்றம் போல், நினைத்து எள்ளும் கொள்ளும் வெடித்தது.
சுமதிக்கும் தான் செய்து கொடுத்தான்.
அன்பு, அவன் டிராவெல்ஸ், வரை சென்று வருவதாக கூறி சென்று விட்டான், அதிதியும் மாலை போல், அவளும் இனியாவும், இருவரும் வெளியே சென்று வருவதாக அவள் அண்ணியிடம் கூறி, கல்லூரிக்கு சென்று விட்டால்.
கணவன் சென்றதும் ஏதோ போல் இருந்தாலும் இனி இப்படி தானே என்று தன்னை தேற்றி கொண்டு, சமயலறறை சுத்தம் செய்ய சென்றாள் .
ஏற்கனவே மகன் இனியா மீது வைத்திருக்கும் காதல், சுமதிக்கு உவப்பானதாக இல்லை, இதில் அவன் இது போல் மனைவியை பார்த்து கொள்வதில் எங்கு, தனக்கு மதிப்பளிக்க மாட்டானோ, தன்னை விட்டு விடுவானோ என்று ஒரு பயம், தந்து மகன் என்று ஒரு பொறாமை, என்று அவர் மனதில், கேட்டேன்ங்கள் பேயாட்டம் ஆதி கொண்டிருந்தது.
கூடத்தில் தனியாக அமர்ந்திருந்த மாமியாரிடம் "அத்தை, ஏதாவது குடிக்க எடுத்து வரவா," என்று இனியா கேட்டதும்
"என் பையனை உனக்கு தோசை சுட்டு கொடுக்க தான் நான் பெத்து இருக்கேனா," என்று அவள் மீது பாய்ந்தார்.
முதலில் அவர் எதற்கு தன மீது கோவமாக பேசினார் என்று முதலில் ஒன்றும் புரியாமல் தவித்த இனியா, அவர் கூறிய வார்த்தைகள் மூளையில் உரைக்கவே, அவளுக்கு ஏகபோகமாக கோவம் வந்து விட்டது.
மனதினில் ஒன்று வைத்து மறுகும் பெண்ணும் அல்ல அவள்.
துடுக்காக பேச கூடியவள், கண்ணாடி போன்று, எதிரில் இருப்போர் எப்படியோ, தானும் அப்படியே என்பவள்.
"ஏன், இவ்வளவு நேரம் உங்க பையன் இங்கே தானே இருந்தாரு, நானா கேட்டேன், எனக்கு செய்து கொடுங்கன்னு, அவர் போனதும் என் கிட்ட கோவ படுறீங்க, என் புருஷன் உங்களுக்கு ஏன் செய்தாருனு, நான் ஏதாவது உங்களை கேட்டேனா, " என்று அதையும் கேட்டு விட்டாள் .
அவளுக்கு போயும் போயும் ஒரு தோசைக்கா இந்த அலப்பறை என்று இருந்தது.
அதுவும் சுமதி அமைதியாக இருப்பதில், அவர் இப்படியெல்லாம் பேசுவாரா, முதல் நாளே இப்படி என்றால், என்று வாழ்க்கை மீது ஒரு பயம் இனியாவுக்கு .
சுமதி இப்படி ஒரு எதிர்வினை இனியாவிடம் இருந்து பாயும் என்று துளியும் எதிர்பார்க்கவில்லை, என்பது அவர் அதிர்ந்த முகத்தில் இருந்தே தெரிந்தது.
இனி
லெட் ஸ்டார்ட் மாமியார் மருமகள் பைட்டிங், என்று விதியும் ஆவலுடன் எதிர்பார்த்தது .
 

achuma

Well-Known Member
ஹாய் நடுப்புக்களே,
அடுத்த பதிவு இதோ,
சென்ற பதிவிற்கு உங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி.
இந்த பதிவிற்கும் உங்களின் கருத்துக்களை தெரியப்படுத்துங்கள் .
கதை மிகவும் பொறுமையாக செல்கின்றதா என்பதை தெரிய படுத்துங்கள்.
குடும்பத்தில் நிறைய கதாபாத்திரங்கள் உள்ளதால் , நிறைய எபிசோட் தேவை படும் .
all take care friends
:love:
 

Saroja

Well-Known Member
அருமையா இருக்கு
சுமதி இது எல்லாம் சரியா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top