அன்பின் இனியா 17 2

Advertisement

achuma

Well-Known Member
வீட்டினில் சுற்றத்தாரின் கலகலப்பு, என்று இருந்தாலும், மண்டபத்திற்கு செல்வதற்கு முன் ஒரு முறை அவள் வீட்டை சுற்றி பார்த்துக்கொண்டாள் .
பிறந்து, அக்கா தம்பி, அத்தை குடும்பம், பக்கத்திலேயே, தோழி, என்றுவளர்ந்து, அவளின் பிடித்தம் போல் மகிழ்ச்சியாக இருந்து விட்டு இப்பொழுது, திருமணம் முடிந்து, புது உறவு, குடும்பம், என்று வேறு உலகத்திற்கு செல்வது, என்பது, ஏதோ, திடீரென்று, தன்னுடன் இருந்தவர்கள், எல்லாம் , தன்னை தள்ளி நிறுத்துவதாக தோன்றியது.
"நான் மட்டும் வேறையா, என்னை வேற வீட்டிற்கு அனுப்புறாங்க, அக்காக்கும் இப்படி தோன்றி இருக்குமா," என்று கேள்வி .
திருமணம் முடிந்து நேராக, மாமியாரின் இல்லத்திற்கு தான் செல்ல வேண்டும் என்பதால், புது இடம், எல்லாம் எப்படி, என்ற பயம், மன பெண்ணிற்கே உரித்தான கவலை,இப்படி பல வகை, எண்ணங்கள் போட்டி போட இனியாவின் மனதையும் பதம் பார்த்தது.
அவளையும் மீறி கண்கள் கலங்கியது, சிந்தையில் நடக்கும் போராட்டத்தில்.
அவள் தந்தையின் தோள் சாய்ந்து, கண்ணீர் விட்டாள் .
"அப்பா," என்ற அலறலுடன், மகள் ஓடி சென்று, மோகனின் தோள் சாய்ந்ததும், அவரும் இருக்கும் முக்கிய வேலைகள் எல்லாம் மறந்து விட்டு, அவளை கட்டி கொண்டு, அழுக ஆரம்பித்தார்.
அவர் மனத்திலும் இந்த போராட்டம், தான் .
தன்னை காட்டி கொள்ளாமல், மகள் பக்கம் செல்ல துடித்த, மனதை, திருமண வேளைகளில், திசை திருப்பி இருத்தி கொண்டார் .
இப்பொழுது, மகள் உடைந்து அழுகவே, அவரும் தன்னை வெளி காட்டி விட்டார்.
மூன்று பிள்ளைகள் மீதும் ஒரே போல் பாசம் என்றாலும், இலக்கியா மற்றும் இங்கோவிற்கு, இருக்கும் மன திடம் இவளிடம் இல்லை .
அவள் எதற்கொன்றும், குடும்பத்தை சார்ந்தே இருப்பாள் .
வெளியே தைரியமாக காட்டி கொண்டாலும், மனதளவில், இனியா இன்னும் குழந்தையே.
மோகன் எந்நேரம் கழித்து, வீட்டிற்கு வந்தாலும், அவரிடம் ஒரு வாய் உணவாவது வாங்கினால் தான் அவளுக்கு உறக்கம் வரும் .
அவர் வரும் வரை, காத்திருந்து அவரை கண்ட பிறகு தான் உறக்கமே.
சரியான, அப்பா கொண்டு, என்று மற்றவர்கள் கூறும் அளவிற்கு இருக்கும், இருவரின் பிணைப்பு .
"மோகன் இப்படி இருக்காதா, அவளுக்கு எல்லாம் பார்த்து பார்த்து செய்றேன்னு, எதுவும் பழக்க படுத்தாம இருக்காதா, இப்போ, நாங்க எல்லாரும் பாரு, எங்க பொண்ணுகளுக்கு கல்யாணம் செய்து, அனுப்பிட்டு அவங்க நினைப்போடு இருக்கோம்".
"நீ இப்படி செல்லம் கொடுத்தா, உனக்கு தான் அப்பறம், கஷ்டமா போகும்," என்று அவரின் நலன் கருதியே, அவரின் அக்காக்களும் கூறுவார்கள் .
"அக்கா, இங்க இருக்க வரைக்கும், அவ விருப்ப படுறத, நான் செய்துட்டு போறேன், ஒரு வாய் சாப்பாடு தானே, நான் ஊட்டுறேன், எனக்கும் குட்டிமாக்கு சாப்பாடு ஊட்டினா தான் அந்த நாளே முழுமையா இருக்கு ".
"அதுல என்ன இருக்கு, இதுல எல்லாம் குட்டிமாக்கு செல்லம் கொடுத்து கெடுக்குறதா ஆகிடுமா," என்று பதில் கொடுப்பார் .
இப்பொழுது இதை எல்லாம் நினைத்து, மனதில் கவலை பிறந்தது, மனிதருக்கு .
பிள்ளை பிறந்த அன்று, மீண்டும் புதிதாக பிறந்ததாக, ஒரு உணர்வு, பெற்றவர்களுக்கு வரும் .
குழந்தைகளுக்கு, என்று அனைத்தும் நன்றாக கொடுப்பதாக, நினைத்து, ஒவ்வொன்றும், பார்த்து பார்த்து செய்வார்கள் .
அவர்களுடன், நடந்து அவர்களுக்கு நடை பழக்கி,
அவர்களுக்கு வார்த்தை சொல்லி கொடுத்து, குழந்தைகளின் மழலையில், பெற்றோரின், சுமை மறந்து, பிள்ளைகளின் படிப்புக்கு, எதிர்காலத்துக்கு, என்று பெற்றவரின் நிகழ் காலம் எல்லாம் உழைப்பில் கரைந்து, இப்பொழுது, பிள்ளைகளின் திருமணம், அதிலும் பெண் பிள்ளைகளை திருமணம் செய்து, அவள் கணவரிடம் ஒப்படைப்பது, என்பது, பெற்றோரின், இதயத்தை அப்படியே உருவி கொடுக்கும் வலிக்கு சமமான உணர்வு அது.
இந்த உணர்வு, பெண்ணை பெற்றவருக்கு மட்டுமே, உரித்தான உணர்வு, வார்த்தைகளால் வடிவமைக்க முடியா உணர்வு.
எந்த ஒரு செயலுக்கும், முட்டு நிலை(dead point) என்று உண்டு.
உறவுகளிளும் கூட உண்டு.
"மகனின் விருப்பத்திற்கேற்றப படிக்க வைத்தாயிற்று, இனி அவன் விருப்பம்," என்று, அல்லது , "அவன் கேட்ட பணத்தை கொடுத்தாகிற்று, இத்துடன், எனது வேலை முடிந்தது," என்றும் இப்படியும் குடும்பத்தாரின் பங்கேற்பு ஒரு தேவை வரை மட்டுமே, என்று அவர்களின் தலையீட்டுடன் இருக்கும் உறவுகளும் உண்டு .
உண்மையில் திருமணம் முடிந்ததும், பெண்ணை பெற்றவருக்கு கடமை முடிந்த என்றால், இல்லை, என்று தான் கூற வேண்டும் .
ஆண்களுக்கு, திருமணம் முடிந்தால், அவனை பார்த்துக்க ஒரு பொண்ணு வந்துட்டா , என்ற நிம்மதி அந்த மகனை பெற்றவர்களுக்கு இருக்கலாம் .
ஆனால், பெண்களை பெற்றவர்களுக்கு, அவளை பற்றியே சிந்தனை இருக்கும், அங்கு மகள், நிம்மதியாக இருக்கிறாளா, மாப்பிளை நன்றாக பார்த்துகொள்கிறாரா, அங்குள்ள சொந்தங்கள், தன் மகளை மதிக்கிறார்களா.
இப்படி, பெண் பிள்ளைகளை பெற்றவர்க்கு, அவர்களின் இறுதி மூச்சு வரை, அவர்களின் கடமை ஓயாது .
இருவரின் அழுகையம் பார்ப்போரை உருக்க செய்யும் . இதனை கண்ட அத்தைகளின் மனமும், நெகிழிச்சி கொண்டு கண்ணீருக்கு தயாரானது , இலக்கியாவும், அவள் தந்தையையும் இனியாவையும் தேற்றினாள்.
"அப்பா, நீங்களே இப்படி அழுதா, குட்டிமாவ, பாருங்க, கிளம்பும் போது சந்தோஷமா போக வேண்டாமா, அப்பறம், மண்டபம் போய் , இந்த சூழலோடு, இறுக்கமே இருக்கும் , இது எல்லாருக்கும் நடக்குற ஒன்னு தானே"
"நீங்க சாதிச்சிட்டிங்க பா, எங்களை இத்தனை கஷ்டத்துலயும், நல்லா படிக்க வைச்சீங்க, எனக்கும் ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சு கொடுத்தீங்க, இப்போ வரை எனக்கு துணையா, அம்மா வீட்டு சொந்தம் இருக்கு, அடுத்து நம்ம குட்டிமா, அவளையும், ஒரு நல்ல வாழ்க்கையில, புகுத்துறீங்க, இந்த மாதிரி பெஸ்ட் அப்பா கிடைச்சதுக்கு, நாங்க ரொம்ப பெருமையா இருக்கோம்".
"உங்க பேரை, எந்த விதத்துலயும் கெடுக்கமா, புகுந்த வீட்டுலயும் நல்ல பேர் எடுக்குறது தான், நாங்க உங்களுக்கு செய்யற, மரியாதை".
"இங்க இருந்து போறதை நினைத்து அழுகமா, இனி புகுந்த வீட்டுல, நல்ல பேர் எடுக்கணும், அப்பா அம்மா நம்ம, வளர்த்த வளர்ப்போட பெருமை அதுல தான் இருக்கு, அதை யோசி குட்டிமா," என்று அவள் அப்பா இனி அழுகை நிறுத்த மாட்டார், என்று உணர்ந்து, இலக்கியா இனியாவை திசை திருப்பினாள் .
"நீ இப்படி அழுதுட்டே இருந்தா, அப்பா இதையே பீல் பண்ணுவார் , இப்போ வீட்டுல இருந்து, நீ சந்தோஷமா கிளம்புனா தானே, இந்த சந்தோஷமான, முகம் தான் அப்பாவுக்கு நினைப்புல இருக்கனும் குட்டிமா, " என்று இலக்கியா தங்கைக்கு எடுத்துரைத்தாள் .
உண்மையில் அக்கா கூறிய வார்த்தை இனியாவின் அழுகையை கொஞ்சம் அடக்கியது.
கண்களை துடைத்து கொண்டு, தன்னை கட்டுக்குள் கொண்டு வந்து, அவள் தந்தையை ஏறெடுத்து பார்த்தாள் .
"நீங்க எங்களோட பெஸ்ட் அப்பா, உங்க பொண்ணு, ரொம்ப நல்ல மருமகனு பேரு வாங்குவா, பாருங்க," (சுமதி கிட்ட தானே ரைட்டு என்று விதி சிரித்தது ) என்று புன்னகை செய்து, மோகனின் கண்ணீரையும் துடைத்து வைத்தாள் .
இதனை பார்த்து அழுது கொண்டிருந்த, இந்திராவும், தன்னை சுதாரித்துக்கொண்டு, இயல்பாக காட்டி கொண்டார் .
"ஹ்ம்ம், இரண்டு பேரும் பண்றது நல்லா தான் இருக்கு, எல்லாம் எடுத்து வைச்சி, வேன்ல, காத்துட்டு இருந்தா, இங்க அப்பாவும் மகளும் வித்தை காட்டிட்டு இருக்கீங்க, வேலை எல்லாம் நடந்தா மாதிரி தான் ".
"இவளை கூட்டிட்டு வர, உங்களை அனுப்பினா, தம்பியோட சேர்ந்து, நீங்களும் அழுகாச்சியா இருக்கீங்க," என்று நாத்தனாருக்கும் ஒரு அதட்டல் போட்டார், இந்திரா.
அவரின் அதட்டல், வேலை செய்தது.
பிறகு, மீண்டும் ஒரு முறை எல்லாம் எடுத்து வைத்தாகிற்றா, என்று ஒவ்வொருவரும், அவரவர் நினைவுக்கு வந்தது, கேட்டு உறுதி படுத்தி கொண்டனர் .
செழியனும், இளங்கோவும் ஏற்கனவே மண்டபத்தில், மாலை வரவேற்புக்கிற்கான, அலங்காரங்கள், பார்த்து கொண்டு இருந்தனர் .
மோகனின் அண்ணன் மகன்கள், அங்கு வெளியூரில் இருந்து வரும் சொந்தங்களுக்கு, ஹோட்டலில் தங்க ஏற்பாடு, என்று சிலரும், பெண்கள் சிலர், நிச்சயத்திற்கு, வேண்டிய வேலைகளும் என்று இருந்தனர் .
இந்திராவின் சொந்தங்கள், எல்லாம், அவளுக்கு கொடுத்து அனுப்ப வேண்டிய சீர்களை ஒரு அறையில் பத்திரப்படுத்தி வைத்தனர் .
மதிய உணவும் பெண் வீட்டாருக்கு அங்கு மண்டபத்தில் தான், என்பதால், ஒரு பக்கம் அந்த வேலைகளும் நடந்து கொண்டு இருந்தது .
அங்கு மண்டபத்தில்," தம்பி,இப்போ எழுத்து எல்லாம் கரெக்டா, இருக்கா பாருங்க," பெண் வீட்டு கல்யாணம், அதுனால், முதலில், மோகன் அண்ட் இந்திரா பேமிலி வெல்கமஸ் யு, என்று ஆர்ச் வடிவில் பொறிக்க பட்ட மலரால் ஆனா எழுத்துக்களை, அங்கு அலங்கார வேலையில் இருப்போர், இளங்கோவிடம் கேட்டு கொண்டு இருந்தார் .
"அண்ணா, "பிளாக் அண்ட் வைட் பேமிலி வெல்கம்ஸ் யு) அப்படினு போட்டா, எப்படி இருக்கும்" என்று அவரிடமே ஆலோசனை கேட்டான் .
"மச்சான், அது உன் கல்யாணத்துக்கு வேணும்னா போட்டுக்கோ, மாமா, இன்னைக்கு தான் உன்ன எதுவும் திட்டாம இருக்காரு, தேவை இல்லாம எல்லார் முன்னயும் திட்டு வாங்காத," என்று செழியன் அவனை கிண்டலடித்து, "இதுவே சரியா இருக்கு, சீக்கிரம், வெளிய எல்லாம் முடிச்சிடுங்க அண்ணா, இன்னும் ஒரு மணி நேரத்தில, போட்டோ கிராபர் வரேன்னு சொல்லி இருக்காங்க," என்று அவரை அனுப்பி வைத்தான் .
"நோ நோ மாம்ஸ் , நான் என் கல்யாணத்துக்கு பொண்ணு, என்னை போல, வெள்ளையா தான் செலக்ட் பண்ணுவேன்," என்று சபதத்துடன் கூறினான், பாவம், (கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலர் )என்று லூசுத்தனமாக பாடி திரியா போவது தெரியாமல் .
இவர்கள் இங்கு வார்த்தியாடி கொண்டிருக்கும் நேரம், வேன் மண்டபத்தின் முன் வந்து நின்றது.
அதிலிருந்து, மோகன் உடன் பிறப்புகள், இனியா, இலக்கியா, மேலும், மோகனின் அக்கா வீட்டு சொந்தங்கள் அனைவரும் இறங்கினர் .
இறுதியாக, மோகன் இறங்கியதும் முதல் வேளையாக, "தடி மாடு, எல்லாரும் இறங்குறோமே, வந்து இந்த பேக் எல்லாம் எடுக்கணும்னு தெரியவேண்டாம் ," என்று கடிந்து கொண்டார், இளங்கோவை கண்டதும் .
"பார்த்தீங்களா, நீங்க சொல்லி ஒரு நிமிஷம் ஆச்சா, மனுஷன் இப்போ தான் காலையில இருந்து என்னை பார்த்தாரு, அதான் விடாது என்னை விடாது கருப்பு திட்ட ஆரம்பிச்சிடுச்சு," என்று செழியனிடம் புலம்பி, மோகன் இட்ட வேலைகளை, சில பல ஏச்சுகளுடன், முடித்து வைத்தான் .
"குட்டிமா, நீ ரூமுக்கு போ, சாப்பிடும் போது வெளிய வந்தா போதும், சாப்பிட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு.
அப்பறம் பார்லர்ல, இருந்து வந்தாங்கன்னா சரியா இருக்கும் " என்று அங்கு சிலர் அவளிடம் கூறி அவளை அறைக்கு அனுப்பி வைத்தனர் .
"எப்போ அத்தை மாமா வருவாங்க," என்று செழியனிடம் இலக்கியா கேட்டாள், அவளும் பல முறை அவள், மாமியாரை அழைத்து வருமாறு கூறி விட்டாள் .
செழியன் முன்பே மனைவியை அனுப்பி வைத்தது, அவருக்கு விருப்பம் இல்லை. ஆகையால், அவரின் கோவத்தை இது போன்று காட்டி கொண்டு இலக்கியாவை தவிக்க விட்டார் .
பிள்ளைகளுக்கு தேர்வு இருப்பதாக, காரணம் கூறி, அங்கு வந்தால், அவர்கள் படிக்க மாட்டார்கள், என்று பேரன் பேத்தியை தன்னுடனே நிறுத்தி கொண்டார்.
செழியன் அங்கு இந்திராவுக்கு உதவியா இருக்கட்டும், என்ற எண்ணத்தில் பிள்ளைகளை தான் பார்த்துக்கொள்வதாக கூறி அவளை மட்டுமே அனுப்பி வைத்தான் .
இப்பொழுது, பிள்ளைகளை வரவை எதிர்பார்த்து காத்திருந்த இலக்கியா, மனது ஏமாற்றம் கொண்டது, இன்னும் பிள்ளைகள் வந்து சேரவில்லை என்பதில், அவள் சோர்வடைந்தாள் .
"ஈவினிங், எல்லாரும் கூட்டிட்டு வரேன் சரியா,நீ ரிலாக்ஸ் இன்னைக்கு தான் லாஸ்ட் எக்ஸாம் தர்ஷனுக்கு முடிஞ்சது, அவங்களும் உன்ன பார்க்க தான் ஆவலா இருக்காங்க " என்று மனைவியை தேற்றினான் .
அவனின் மெக்கானி ஷெட்டில், பணிபுரிவோரும், அன்று செழியனுக்காக, அவனுடன் இருந்து கொண்டனர், அவன் இடும் வேலைகளை மனதார செய்து கொண்டிருந்தனர் .
மோகன் அவர்களுக்கும் , உடைகள் பரிசளித்து, மதிப்புடன், பத்திரிக்கை வைத்து, அவர்கள் குடும்பத்தாரை அழைத்திருந்தார், இனியா திருமணத்திற்கு.
மாலை நான்கு மணி போல், இனியா அலங்காரங்கள் ஆரம்பித்தது, பார்லரில் இருந்து வந்தோர், அவளுக்கு ஏற்றது போல் சிகை அலங்காரம் புடவை, என்று வேலைகள் ஒரு பக்கம் .
அன்பு அவன் இல்லத்தில், பெரியண்ணன் ஆலோசனை கேட்டு பூஜை அறையில், இறைவனை வணங்கி, பிறகு அன்னையின் பாதம் தொட்டு ஆசி வாங்கினான் .
சுமதி மகன் , திடீர் என்று காலில் விழுவான் என்று எதிர்பார்க்காமல், முதலில் கண்கள் விரிந்தாலும் "நல்லா இருப்பா" என்று ஆசிர்வதித்தார்.
அதிதி தான், இவங்க செய்யற வேலைக்கு அண்ணா, மதிக்க மாட்டான்னு நெனச்சிட்டாங்க போல, என்று மனதிலே, அவள் அன்னையை நக்கலடித்து, அவள் பெரியன்னை, அத்தை, அவர்கள் பிள்ளைகள் என்று நின்று கொண்டாள் .
பிறகு அங்குள்ள பெரியவர்களிடமும் பாதம் தொட்டு ஆசி பெற்றான் .
நாளை அனைவரும் ஊருக்கு சென்று விடுவார்கள், மீண்டும் வீட்டில் தனிமை வாசம் என்று நினைத்து,ஆனால் அண்ணி தான் வராங்களே என்று உள்ளம் துள்ள, தன்னையே தேற்றி கொண்டாள் .
வினோது எல்லாரும் ஒன்றாகவே செல்லலாம் என்று அவன் தந்தையிடம் கண்டிப்புடன் கூறியாதால், அன்பு ஏற்பாடு செய்திருந்த வேனில், வேண்டாவெறுப்பாக நாதன் அமர்ந்து வந்தார் .
தேவகிக்கு முகம் எல்லாம் பல்லாக, அனைவருடனும், சிரித்து பேசி கொண்டு வந்தார், சொந்தங்கள் அனைவரும் ஒரே வண்டியில்,இளையராஜா இசையில் பாடல் வேறு ஒலிக்க, அங்கு இருக்கும் உற்சாகத்தை கேட்கவா வேண்டும்.
"உன் கூட ஒருத்தன் வாறானேன்னு, ஏதாவது இருக்கா, தேவா, உனக்கு, சொந்தத்தை பார்த்ததும் , நான் மறந்துடுவேன் போல, இதுக்கு தான், நான் நம்ம வண்டியில நேரத்துக்கு வரேன்னு சொன்னேன்," என்று தேவகியிடம் அடிக்குரலில் சீறி கொண்டு வந்தார்.
"எல்லாரும் ஒரே, இடத்துக்கு போறோம், எதுக்கு தனி தனியா, அது தான், ஒரே வண்டியில போறோம், பாருங்க, எல்லாரும் ஒண்ணா சேர்ந்து வரது, குட்டி பசங்க நம்ம பேரன் பேத்தியோடு விளையாடுறது, பாட்டு வேற சூப்பரா செலக்ட் செய்தி போட்டு இருக்காங்க, இது எல்லாத்தையும் பீல் பண்ணிட்டு வாங்க," என்று, தேவகி, கணவருக்கு அறிவுரை அளித்து, மீண்டும் பேச்சில் இறங்கி விட்டார் .
தேவகியின் தங்கை சந்திரா , நேராக மண்டபத்திற்கு வந்து விடுவதாக, அன்புவிடம் அழுத்தமாக கூறியதால், அவனாலும் ஒரு அளவிற்கு மேல், அவரை வற்புறுத்த முடியவில்லை.
மாப்பிளை வந்தார் மாப்பிளை வந்தார் மாட்டு வண்டியிலே, என்பது போன்று, அன்பு அவன் கூட்டத்தோடு வந்து இறங்கியதும் , நண்டு சிண்டில், இருந்து, பெரியவர்கள் வரை, அனைவரும் வந்து, இனியாவின் அறையில், மாப்பிள்ளை வந்து விட்ட செய்தி கடத்தி சென்றனர்.
மோகன் மற்றும் இந்திரா, அவர்கள் அனைவரையும் முறையே அழைத்து, மண்டபத்திற்குள் அழைத்து சென்றனர்.
விஷா, கையில் ஒரு போனுடன், விறைப்பாக, அழகு தேவதையாக, அனைவர் கண்களுக்கு தெரிந்தாள் .
அவள் மனதில் இருக்கும் கனல் அவளுக்கு மட்டுமே தெரியும். தன் கை மீறி நடக்கும் ஒன்று, என்று அவள் தம்பியின் திருமணம், அவள் விருப்பம் இல்லாமல் அவள் போட்ட திட்டத்தின் பேரில் நடக்காமல் இருக்கிறதே, என்று அதே நினைப்பு, நேரத்திற்கு நேரம் அக்கனியாக கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது .
சுமதியோ, எதில் குறை கூறலாம், என்ன என்று அதிலேயே அவரின் கண்கள் அலைபாய்ந்தது.
நாதன் வேண்டா வெறுப்பாக,வந்தார் , தேவகி முகம் சோர்வடையும் என்று, ஓட்ட வாய்த்த சிரிப்புடன் வந்தார்.
உண்மையில் அவருக்கு தேவகியை தவிர வேறு யாரும் அந்த வீட்டில் பிடிக்காது .
மகனின் விருப்பத்திற்கு விஷாகா மருமகள் ஆனாள் .
நாதனின் குடும்பத்தில் பெரியவர் என்று இப்பொழுது இருக்கும் ஒரே மூத்த தலைமுறையை சேர்ந்தவர், நாதன் தந்தையின் உடன் பிறப்பு சகோதரி, நாதனிற்கு அத்தை முறை .
அவர் நேராக மண்டபத்திற்கு வந்து இருந்தார், அவர் குடும்பத்துடன் .
அவரை கண்டதும் சிறு பிள்ளை போல் சென்று, "அத்தை" என்று, அவர் பாதம் பணிந்தார் நாதன் குழுமத்தின் முதலாளி .
"நல்ல இரு நாதா, வீட்டுக்கு வந்தா, நேரம் ஆகிடும், முதுகு வலிக்கும் இன்னும் பயன் செய்தா, அதான் நேரா மண்டபத்துக்கே வந்துட்டேன், எப்படி இருக்கே," என்று அந்த வயதிலும் அவர் பிறந்து வீட்டு பாசம் அண்ணனின் மகனை, வாஞ்சையாக கேட்டு வைத்தார் .
"இங்க உங்களுக்கு எந்த மரியாதை குறைச்சல் இல்லையே, நல்லா கவனிச்சிங்களா என்று அங்கு இனியா சொந்தத்தில் வேலையில் இருப்போரை முறைப்புடன் பார்த்து கேட்டார் .
உடனே, அவர் நாதனின் கை பிடித்து தடுத்து, "நாதா, எல்லாரும் ரொம்ப நல்ல கவனிச்சாங்க, ஐயா, நீ எதுவும் யாரையும் மிரட்ட கூடாது," கண்டிப்புடன், ஒலித்தது மருமகனிடம் .
"நான் நேர இங்க வந்துட்டேன், அன்பு கிட்ட, என் பையன் தகவல் சொல்லிட்டான் போல, அன்பு இங்க இருக்க அவன் மாமனாருக்கு சொல்லவே, அவரே முன்ன வந்து, எங்களை உள்ள அழைச்சிட்டு போனாரு".
"இப்போ தான் பலகாரம் சாப்பிட்டு முடிச்சோம், இவ்வளவு நேரம் ரூம்ல தான் இருந்தோம், எவ்வளவு நேரம் அங்கேயே இருக்க, மனவரை வேலை எல்லாம் நடக்குது, அதை பார்த்துட்டு இருக்கலாம்னு நான் மட்டும் வந்து இங்க உட்காந்துட்டேன்" .
"நீயும் போ, உன் மச்சான் எல்லாம் அறைல தான் இருக்காங்க," என்று, தேவகி வந்ததும், அவரிடமும் பேசி கொண்டிருந்தார் .
பிறகு, இளங்கோ , அவரவர் அறைக்கு என்று அழைத்து சென்று, தங்க செய்தான் .
வினோத்து அவன் மனைவி, நாதன் தம்பதி, சுமதி, அதிதி, மற்றும் அன்பு வீட்டு பெண்கள், ஒரு ஒரு அறையில் தங்க வைக்க பட்டனர்.
அன்பு, அவன் அண்ணன் உறவுகளுடன், மன மகன் அறையில் சென்று, நிச்சியத்திற்கான உடையில் தயாரானான் .
அவன் மனம் சரணை நாடியது .
இங்கு அவனுக்கு உதவிக்கு என்று, அவன் அண்ணன்கள் மற்றும் வினோத், அவன் ட்ராவல்ஸ் பணிபுரியும், அருண், என்று துணைக்கு உதவியாக இருந்தாலும், அவ்வளவு உரிமையுடன் ஒரு வேலையை மற்றவரிடம் பகிர முடியவில்லை அவனால்.
இதே சரண் என்றால், அன்பு நினைப்பதை ,சரண் செய்து முடிப்பான் .
ஒரு பையில் பத்து சோப்புக்கள் , ஷாம்பு மற்றும் டூத்பேஸ்ட் என்று அனைத்தும் ,அடங்கிய பொருட்களை, இளங்கோ கையில் கொடுத்து, சுமத்தியிடம் கொடுக்க சொன்னார் இந்திரா.
"அம்மா, பேஸ்ட் சோப்பு கூடவா, நம்ம கொடுக்கணும்" என்று அவன்பல்லை கடித்து கேட்டதில், "டேய் சிலர் இது எல்லாம் எடுத்துத்துட்டு வந்து இருக்க மாட்டாங்க டா, இதுவும் கொடுக்கணும் தான், போ, பதிலுக்கு பதில் பேசாம போ," என்று விரட்டினார் .
அவன் சுமதியின் முன் சென்று, அந்த பையை அப்படியே கொடுத்தான் , "என்ன உங்க அம்மா வந்து இது எல்லாம் கொடுக்க முடியாது," என்று அவனிடம் பாய்ந்தார் சுமதி .
"விட்டா எங்க அம்மாவையே வந்து சோப்பு போட சொல்லுவாங்க போல, சோப்பு கூட எடுத்துட்டு வரல, இதுல சீன பாரு, இந்த கிழவிக்கு," என்று மனதில் கருவி.
"வெளியே புன்னகை செய்து, "அத்தை, இன்னும் இது போல, கொடுத்துட்டே இருக்க போறாங்க, நீங்களும் வாங்கிட்டே இருக்க போறீங்க, அவங்க எதனை முறை தான் வர முடியும் சொல்லுங்க என்று அப்பாவியாக கேட்டதில், இவன் கிண்டலடிக்கிறானா, என்று சுமதிக்கு குழப்பம் .
அதிதி சிரித்தாள், அவனின் கிண்டலில், இளங்கோ எப்படி இருக்க, தேங்க்ஸ், என்று கூறி அவள் வாங்கி கொண்டாள் .
இலக்கியா, ஒரு தட்டு முழுதும் மல்லி பூக்கள் கட்டி வைத்ததும், ரோஜா மலர்களும் இருந்தது, அவரவர் விருப்பத்தில் மாப்பிளை வீட்டு பெண்கள் வைத்து கொள்ளட்டும் என்று.
அதிதியின் கையில் கொடுத்து, தேவையான உங்க வீட்டு லேடிஸ்க்கு கொடு மா, நீயும் வெச்சிக்கோ , மீறி இருக்கும் பூக்களை, பிரிட்ஜ்ல வெச்சிட்டு.
நாளைக்கு யூஸ் பண்லாம் . பதலாயினாலும் கேளு மா, என்று கூறி பூக்கள் அடங்கிய தட்டை கொடுத்தாள் .
"ஹேர் பின், யாருக்காவது வேணும்னாலும் வந்து ரூம்ல, கேளுமா , நான் கொடுக்குறேன்," என்றதும், இளங்கோ கிண்டலுடன் சுமதியை பார்த்தான் .
"என்ன மா, அப்படியே நிற்கிறீங்க, எல்லாமே ஓசில வாங்குறது நல்லா இருக்குல்ல , என்று அன்னையை கிண்டல் செய்தாள் .
அவரின் முறைப்புக்கு அடங்கி அவளும் உடை எடுத்து தயாரானாள் .
மீண்டும், சுமதி, மற்றும் அன்பு வீட்டாரை, மோகன் அழைத்து, மாலை பலகாரம் நடந்தது.
மேடையில், இந்திரா, ஐயரிடம், "இங்க பாருங்க சாமி, இவங்க எங்க வீட்டோட மூத்த மருமக, இவங்க சொல்வது போல் எல்லாம் செய்ங்க," என்று அவரிடம் கூறி, ஒரு நாத்தனாரையும் யமுனாவுடன் நிறுத்தி, அங்கிருந்து அடுத்த வேலைக்கு தாவினார்.
எப்போது பிரச்னை என்று காத்திருந்த விஷாகா, அங்கு விபூதி மட்டும், நெற்றியில் இட்டு கொண்டு, ஐயரிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்த , யமுனாவை பார்த்தது, வேகமாக அங்கு சென்றாள், அவரை வார்த்தையால் குத்தி கிழிக்க.
எங்கிருந்து தான் இந்திரா அவளுக்கு முன் வந்தாரோ.
"என்ன வேணும் மா," என்று அவளிடம் கோவத்தை அடக்கி தன்மையாக கேட்டார் .
"பொண்ணுக்கே கல்யாணம் செய்யறீங்க , இவங்கள , போய் முன்ன நிக்க வைக்கலாமா, உங்களுக்கு தெரிய வேண்டாம்."
உண்மையில், அவளை அடிக்க தான் தோன்றியது அங்கிருப்போருக்கு.
இனியா அறையில் தயாராகிட்டாளா என்று பார்க்க சென்றார் .
அங்கிருந்து அவர் கண்ணில் பட்டது மனமேடையையே வெறித்து கொண்டிருந்த,விஷாகா தான் .
என்னவோ என்று தான் அவரும் அவளின் வேக நடையில் முன் வந்து கேட்டது .
நம்ம பொறந்த உடனே, இந்த பூவும் போட்டு எல்லாம் ஒரு பொண்ணுக்கு வெச்சி விடுறாங்க.
புருஷன் என்ற உறவு நடுவில் வந்தது, அவங்க போனதும், பொண்ணுக்கு இது எல்லாம் போகணும்னு இருக்கு, அதுனால , அந்த பொண்ண ஒதுக்கணுமா என்ன, உண்மையா ஒவ்வொவரு, பெண்ணுமே அம்மனுக்கு சமம்.
நான் உனக்கு இல்லை, பொதுவா சொல்றேன், கணவனை இழந்த பெண்களை, சகுன தடயா பார்குறவங்க, எல்லாம் மனுஷன் இல்லை தெரியுமா.
"எங்க வீட்டுல, இவங்க தலைமயில தான் எங்க வீட்டு பசங்க எல்லாரு கல்யாணமும் நடந்தது, எல்லாருமே நல்ல தான் இருக்காங்க, அதுனால், நீ எங்க அண்ணி மனசை வறுத்த பட வைக்கணும்னு நினைக்காத," என்று மோகனின் அக்கா ஒருவரும் அவளிடம் பாய்ந்தார்.
"நாங்க தானே கன்னிகாதானம் பண்றோம், எங்க முறையில தானே தாராவார்த்து கொடுக்குறோம், அதுனால் மனவரை வேலை எல்லாம் எங்க போக்குல விடு மா," என்று இந்திரா கூறிவிட்டார் .
அவள் நின்ற தோரணையில் வினோத் அங்கு வந்து, அவனும் அவளின் சூடு சொல்ல கேட்க நேர்ந்தது.
"நீங்க எல்லாரும் போய் நடக்க வேண்டியதை பாருங்க, அவ பேசினது மனசுல வெச்சிக்காதீங்க," தன்மையுடன், கூறினான் வினோத் .
"நீ அவங்களை அசிங்க படுத்தலை, என்ன அசிங்க படுத்துற, இருந்து ஒழுங்கா கல்யாணம் பார்க்க முடிஞ்சா பாரு, இல்லையா நடையை கட்டு," என்று திட்டவே, அவமானமாக போனது விஷாகாவிற்கு .
கோவமாக, அவள் அறையில் சென்று முடங்கி கொண்டாள் .
முதலில், மன மகன் வந்து அமர வைக்க பட்டு, இளங்கோ முதல் நலங்கு ஆரம்பித்து வைத்தான் .
சந்தனம் குங்குமம், அவன் மாமனுக்கு இட்டு மாலை அணிவித்தான் .
 

achuma

Well-Known Member
hi friends update fulla kodukka muidyala
no space
i give this another part by today
evening
 

Ramshwetha

Active Member
Super oru ponnu marge agmpothu irukura feelingsa azhaga sollirukinga..... Penunkku pen thaaan first ethiri.... Oru ponnu husb illana abasagunama dam. Very nice ud
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top