அன்பின் இனியா 1

Advertisement

achuma

Well-Known Member
ஹரே கிருஷ்ணா


வணக்கம் ,
முதலில் மல்லி மேடம்க்கு எனது நன்றி,:)

இந்த கதையிலும் உங்களின் ஆதரவு வேண்டும்,
ப்ளீஸ் உங்களின் குறை நிறை, எனக்கு தெரிய படுத்துங்கள் ..(y)


hi friends
all be safe
wear mask:):love:

please give all your comments




அன்பின் இனியா

பிள்ளையார் அப்பா

"இந்த முறை எப்படியாவது என் தங்கச்சி கல்யாணத்துக்கு சம்மதிக்குனும், கல்யாணம் நடந்த உடனேயே, உனக்கு எப்பவும் போல நூற்றி ஒன்று கொழுகட்டை வச்சி படைக்கிறேன்," என்று அந்த தெருவில் சிறிதாக வீற்று இருந்த பிள்ளையார் சன்னதியின் முன்பு மனமுருக வேண்டிக்கொண்டிருந்தாள் , இலக்கியா ..
"எது, திரும்பவும் கொழுகட்டையா ," அலறிய படி அவளின் அருகினில் வேகவேகமாக ஓடி வந்தான், செழியன், அவளின் கணவன்..

அவனின் பதறலில் அங்கு அவன் மெக்கானிக் ஷெட்டில் வேலை பார்க்கும், மூன்று பேரும், சிரித்தனர்..
"டேய் என்ன டா உங்களுக்கு சிரிப்பு, அதுல பாதி கொழுகட்டை , உங்களுக்கு தான் சொல்லிட்டேன்," என்று அவர்களை மிரட்டினான் ..

"அண்ணே , தங்கச்சி கல்யாணம் எப்போன்னு சொல்லிடுங்க, அண்ணி அடுத்த நாளே, சாமிக்கு படைச்சிடுவாங்க, நாங்க அண்ணைக்கு கடைக்கே வரலே," என்று அவர்களும் சிரிப்புடன் பதில் சொல்லிக்கொண்டிருந்தனர்.

ஆனாலும், செழியனை கிண்டல் செய்வதை மட்டும் நிறுத்தாமல் சிரித்துக்கொண்டே வேலை பார்த்த கொண்டிருந்தனர் ..

இவர்கள் பேசுவது எதுவும் கண்டு கொல்லாமல், கணபதி சுலோகம் அவள் பாட்டிற்கு, முணுமுணுத்து கொண்டிருந்தாள் இலக்கியா ..

வீட்டில் எந்த ஒரு விசேஷம் என்றாலும் இலக்கியாவிற்கு, முதல் வேண்டுதல் அவள் இஷ்ட தெய்வமான பிள்ளையாருக்கு தான் ..
அதுவும் அவருக்கு பிடித்த கொழுக்கட்டையை நூற்றி ஒன்று என்ற கணக்கில் செய்து படைத்து விடுவாள் , வீட்டில் அவள் மாமியார், மாமனார், இரு பிள்ளைகள் என்று கொடுத்தாலும், இந்த பத்து வருட திருமண வாழ்க்கையில் அடிக்கடி இவ்வாறு வேண்டுதல், கொழுக்கட்டை என்று பிரசாதம் அதிகம், செழியனுக்கே ..
அதற்கே அவனின் இவ்வாறான புலம்பல்கள் ..


"மகனே , எப்படி இருந்தாலும், பிரசாதம் , உனக்கு தான், இப்படி வாய் கொடுக்காம இருந்தா எந்த சேதாரம் இல்லாமாயாவது இருப்பே, ஏன் இப்போ நான் இல்லை அமைதியா," என்று அங்கு வீற்று இருந்த விநாயக பெருமான் , இவனை பார்த்து சிரிப்பது போன்று காட்சி அளித்தது, செழியனுக்கு ..
"நீ ஏன் சிரிக்க மாட்ட , உனக்கு படைக்குறேன் பேருல எல்லாத்தையும், எனக்கு தானே கொடுப்பா , நான் தாலி கட்டுன மகராசி ," என்று அவரிடம் நின்று கேள்வி கேட்டுக்கொண்டிருந்தான் , செழியன் ..

அதற்கும், அங்கு வேலை செய்யும், அவனின் ஆட்கள் அடக்கமாட்டாமல் சிரித்தனர் ..
"டேய் , அண்ணன் இப்படி சாமிகிட்ட சண்டை போடுற அளவுக்கு ஏதோ அவருக்கு ஆயிடுச்சு டா," என்று சிரித்தனர் ..


வேண்டுதல் முடிந்ததும், கணவரின் பக்கம் திரும்பி நின்று, "என்ன சவுண்ட் ரொம்ப ஓவரா போகுது, சாமி கும்பிடறேனு தெரியாது, எல்லாரோடையும் கூட்டு சேர்ந்துட்டு கலாட்டா பண்றீங்க"..
"அங்கு வேலை செய்பவர்களையும் விடவில்லை, "என்னடா சாமி விஷயத்துல உங்களுக்கு கிண்டல் , இவர் தான் பேசுறார்னா நீங்களுமா," என்று பொரிந்தாள் ..

"ஆண்டவன் இல்லைனா நம்ம எல்லாம் ஒன்னும் இல்லை , அது தெரிஞ்சிக்கோங்க , ஐயோ அண்ணி நாங்க எதுவுமே பண்ணல , அண்ணி சமையல் என்ன உங்களுக்கு அவ்வளோ இளக்காரமா போச்சான்னு நாங்க அண்ணனை தான் கேட்டுட்டு இருந்தோம்," என்று அந்தர் பல்டி இலக்கியாவிடம் ..

"டேய் டேய்! உங்களுக்கே அடுக்காது டா , நான் எப்போ சொன்னேன், ஏன் குடும்பத்துல கும்மி அடிக்காதீங்க டா , கொஞ்சம் அடங்குங்க, இவள என்னனு கேட்டுட்டு, உங்க கிட்ட வரேன்," என்று செழியன் அவர்களிடம் சண்டை போட்டான் ..

"அண்ணா அது கேட்டுட்டு இல்ல , பம்மிட்டு, நீங்க அண்ணி வந்தாலே பம்ம தானே செய்விங்க ," என்று அதற்கும் ஒரு கிண்டல் அவர்களிடம் ..
இலக்கியாவும், செழியனின் முறைப்பில் பக்கென்று சிரித்து விட்டாள்.

"எப்பா , சிரிச்சிட்டா என்று ஆசுவாச பட்டு , என்ன இங்க இந்த நேரத்தில அதுவும் வேண்டுதல் ஏதாவது பிரச்னையா," என்றான் செழியன்..

"ஹ்ம்ம் எல்லாம் நீங்க என் தங்கச்சிக்கு மாப்பிள்ளை பார்த்ததை பற்றி வீட்டுல சொன்னீங்களே , அது பற்றி தான் , கோச்சிட்டு இன்னும் வேலையில இருந்து வராம ஆஃபீஸ்லயே இருக்கானு அம்மா இப்போ தான் போன் பண்ணாங்க ,அதான் அவளை பார்க்க போலாம்னு இங்க வந்தேன்."

" என்னால எங்க கோவிலுக்கு போக முடியுது , இங்க ரோடு பக்கம் வந்த தான் சாமியை பார்க்கவே முடியுது," என்று அவள் பாட்டுக்கு பேசிக்கொண்டே செல்ல, செழியனின் முக மாறுதல் கவனிக்க தவிரனாள் ..

பிறகு,வேலு என்று வேலை செய்பவன், "அண்ணி" என்று அழைத்து, கண்ணசைத்து செழியன் பக்கம் காட்டவே இலக்கியாவும் சுதாரித்து ,

"இல்லை, வேலை எல்லாம் முடிஞ்சிது, அதான் நம்ம ஆபீஸ்க்கு போய் பார்க்கலாம்னு," என்று தயங்கி தயங்கி கூறினாள் கணவனின் வருத்தமான சகிக்காமல் ..


"அம்மா, காலையில பக்கத்துல இருக்கிற அத்தை வந்து எதுவோ, வம்பு பண்ணி இருக்காங்க, அந்த நேரத்து கோவம் அம்மாக்கு, இவளையும் ஏதோ பேசி இருக்காங்க, இவளுக்கு தான் ஒரு சொல் பொறுக்காதே, அதான் , காலைல , எதுவும் சாப்பிடல , லஞ்சுக்கும் எடுத்துக்காம வேளைக்கு போயிட்டு இருக்கா, இப்போவும் அஞ்சு மணிக்கு கிளம்பிடுவா , இன்னும் வராமயே இருக்கானு, அம்மா எனக்கு சொன்னாங்க "..

"குட்டி மாவ ஏதாவது சொலறதே அத்தைக்கு வேலை," என்று செழியனும் சலித்து கொண்டு, மனைவியுடன் வண்டியில் புறப்பட்டான் ..

"இப்படி எல்லாரும் அவளுக்கு செல்லம் கொடுத்தா , அவ இன்னும் தலையில ஏறி தான் உட்கருவா," இலக்கியா செழியனிடம்.

ஒரு சொல்லு கூட தாங்க மாட்டுறாளே , கல்யாண வாழ்க்கை, பிறந்த வீட்டில் இருப்பது போன்று இருக்காதே என்று அன்னையாக வளர்த்த அக்காவிற்கு ஒரு பயம் ..
"அது நீ சொல்றியா , நாங்க கொடுக்குற செல்லம் எல்லாம் ஒன்னுமே இல்லை, உன்னால தான் அவ உச்சாணி கொம்பு மேல ஏறி நிக்கிறா , இவ்வாறு ஒருவருக்கு ஒருவர் , அடுத்தவர் மீது பழியை போட்டு வேளச்சேரியில் இருக்கும் புகழ் பெற்ற ஒரு ******** கம்பெனி நோக்கி வண்டியில் சென்று கொண்டு, இருந்தனர் ..

"நல்ல புரிதல் டா அண்ணாக்கும், அண்ணிக்கும் , என்று வேலு கந்தனிடம் சொல்லி கொண்டிருந்தான் ..
ஹம்ம் இந்த புரிதல் தான் டா , இவங்க படும் எல்லா கஷ்டத்துக்கும், ஒரு ஆறுதல் ..
நம்ம அண்ணனும் உடையாம இந்த அளவுக்கு வந்து இருக்காருன்னு, இவங்க ஒருத்தருக்கு ஒருத்தர் வெச்சி இருக்கிற அன்பு தான் டா காரணம் ," என்று ஆதம்பாக்கத்தில் உள்ள முக்கியமான தெருவில் உள்ள செழியன் கடையில் வேலை பார்த்து கொண்டிருந்த அந்த மூன்று பேரும் பேசி கொண்டிருந்தனர் ..


தங்கையின் வேலை ஐந்து மணிக்கு எல்லாம் முடிந்து விடும் என்று தெரியும், கம்பெனியின் உள்ளேயே கான்டீன் இருப்பதால் , இருவரும் அங்கு சென்றனர் ..
இலக்கியாவிற்கு தப்பாமல் காட்சி கொடுத்தாள் நம் நாயகி இனியா ( இவர்களின் குட்டி மா )..

இனி, குட்டி மா என்றே பார்போம் நாயகன் வந்து அவளை அழைக்கும் வரை ..

மாநிறம், அழகான வட்ட முகம், துறுதுறுப்பான கண்கள் , கொஞ்சம் பூசினார் போன்று தேகம், அதற்கேற்ற உயரம் , என்று பார்க்க மிகவும் கலையாக இருப்பாள் நம் நாயகி ..
அவளின் முகத்தை கண்டதும், அழுது இருக்கிறாள் என்று கண்டு கொண்டாள் இலக்கியா ..
யாருக்கும் அவ அழுவது தெரிய படுத்தவும் மாட்டாள் , அவ்வளவு அழுத்தம் ..
அங்கு இருந்த மேஜையில் , கை பை மீது சோகமே உருவாக கன்னத்திற்கு கையினை முட்டு கொடுத்து அமர்ந்து இருந்த தங்கையை கண்டதும், குட்டிமா என்று அழைத்து கொண்டே, அவள் கைகளை எடுத்து அக்கா, அவள் கன்னங்களை தாங்கினாள்..

"அக்கா என்று கண்களை விரித்து ,ம்ப்ச் அம்மா உன் கிட்ட புலம்பிட்டாங்களா, இந்த ஆபீஸ் ஏழு மணிக்கு மேல லேடிஸ் வேலை பார்க்க விட மாட்டாங்கன்னு உனக்கு தெரியாதா , அதற்கு அப்பறம் வரும் ஷிபிட் எல்லாம் ஜென்ஸ் தான், இன்னும் கொஞ்ச நேரத்துல நானே போய் இருப்பேன், நீ மாமாக்கும், அவர் வேலைய கெடுத்து , டென்ஷன் கொடுத்து கூட்டிட்டு வந்துட்டியா," என்று அவளின் கோவம் எல்லா மறைக்க என்று, அவள் ஏதேதோ பேசி கொண்டே சென்றாள்..

"ஹ்ம்ம் , நீ என்னை பேச விடாம இவ்வளவு கேள்வி கேட்கிறதே எனக்கு தெரியுது, சரி நான் எதுவும் அம்மாக்காகனு பேசல, நீ ஏன் சாப்பிடாம உன் உடம்ப பட்டினியா போட்டுட்டு வேலை பார்க்கிற, அப்பா வேலையில இருந்து வந்ததும், நான் அப்பாவுக்கு போன் போட்டு சொல்லிடுவேன்," என்று தங்கையை மிரட்டினாள் ..

அப்பா என்றதும், தங்கைக்கும், பதற்றம், ஏனென்றால், உணவிற்கு மதிப்பு தர வேண்டும் என்று எப்பொழுதும் கூறுவார், இவர்கள் சிறுவயதில் உணவை வீணாக்கும் நேரங்களில் எல்லாம் ..

நமது கோவத்தை உணவு மீது காட்ட கூடாது என்று கண்டிப்பாக இருப்பார் ..
அக்கா, கேட்கவில்லை என்றாலும் , அவளின் அன்னையாக தோழியாக இருக்கும் அக்காவிடம் மறைக்க முயன்றாலும், அவளே கூற ஆரம்பித்தாள் ..

அக்கா, இன்னைக்கு ஆழாக்கு(சகோதரிகளின் தந்தை மோகனின் இரண்டாவது அக்கா, வீட்டின் பக்கத்திலே இருப்பவர்) வீட்டுக்கு வந்து இருந்துச்சா , எப்பவும் போல என்ன டிஃபனு கேட்டு, அத அபேஸ் பண்ண வந்துச்சு, வந்த வேலைய பார்க்க வேண்டி தானே..

"இன்னும் நான் சொன்ன தரகர் கிட்ட பேசலையானு கேட்டாங்க"...
"உனக்கே தெரியுமே அவங்க எந்த மாதிரி இடம் பார்ப்பாங்கனு , மட்டமா தான் பார்த்து இருப்பாங்க,. அம்மாக்கு அந்த கோவம்,நான் வேற வேண்டாம்னு சொல்றதால, அதுவும் அவங்க கோவத்துக்கு இன்னும் அதிகம் ஆச்சு .

"எதனால அம்மாக்கு கோவம் வரைக்கும்னு, உனக்கு புரிஞ்சி இருக்கு ஆனாலும் வீம்பா இருக்க நீ"..என்று கூறினால் அக்கா

"ஆழாக்கு சும்மா இல்லாம, அது சொல்ற எந்த சம்மந்ததுக்கும் நம்ம வேண்டாம்னு சொல்றோமா, அந்த கோவத்தை உன் பொண்ணு யாரையாவது லவ் பண்றாளானு எதுக்கும் கேட்டுக்கோ, அதான் எல்லா தட்டி கழிக்கிறானு அது கோவத்தை என் மேல ஏத்தி விட்டுச்சு "..
அதுக்கு அம்மா என்ன சொல்லணும், "என் பொண்ணு அப்படி இல்லனு தானே சொல்லணும் , ஆனா , அப்படி இருந்தாலாவது எனக்கு சொல்லி தொலைய மாட்றாளே , நான் கல்யாண் செய்து வெச்சிடுவேன்னு, அது மேல இருக்கிற கோவத்துல என்னை அசிங்க படுத்திட்டங்கா" ..

"நான் எப்படினு அவங்களுக்கு தெரியாதா" ..
"எனக்கு லவ் இருந்துச்சுன்னா , நானும் நம்ம சித்தி பொண்ணு மாதிரி, இருவது வயசுலயே, கல்யாணம் செய்துக்க மாட்டேனா ..அவ எவ்வளவு நல்லா படிச்சு நல்ல கம்பெனியில இருந்தா , குடும்பத்துக்குனு ஒரு ரெண்டு வருஷம் வேலை பார்த்துட்டு கல்யாணம் செய்ய சொல்லி எவ்வளவு சொன்னோம்..எதாவது கேட்டாளா , இப்போ அவ சம்பளம் எல்லாம் மாமியார் வீட்டுக்கு கொடுத்துட்டு இருக்கா , இன்னும் நம்ம சித்தி வீடு எந்த முன்னேற்றம் இல்லாமையே இருக்கு .."


"அப்பா கடன், வீட்டு லோன் எடுத்து இருக்கு , தம்பிக்கு மேல படிக்க , இப்படி தானே என் கனவு இருக்கு, என்று அக்காவிடம் ஒரு ஆதங்கம் ..
அவங்க வளர்ப்பு, தப்புமானு அவங்களுக்கு தெரிய வேண்டாமா, கோவத்துலனாலும்,அப்படி சொல்லலாமா, இது தான் என் கேள்வி" ..
இவர்கள் இருவரையும் மாறி மாறி பார்த்து கொண்டிருந்தான் , செழியன்,

இங்கு தங்கை புலம்ப, அக்கா அவள் வீட்டில் இருந்து தங்கைக்காக சமைத்து எடுத்து வந்திருந்த உணவை ஊட்டி விட்டு கொண்டிருந்தாள் ..
அங்கங்கு கேன்டீனில் அமர்ந்திருந்தவர் இவர்களை பார்த்தும் ஆச்சர்யமே, வேலையில் விறைப்பாக சுற்றும் அவர்களின் டீம் லீடர் இப்படி குழந்தை போன்று எதை பற்றியும் கவலை இல்லாமல் ஒருவர் ஊட்ட உண்ணுகிறாளே என்று சிரித்து கொண்டிருந்தனர்..

இருவருக்கும் அதை பற்றிய கவலை இல்லை , பசியை போக்கும் நோக்கத்துடன் அக்கா, பசிக்கு வேக வேகமாக உணவு உண்ணும் தங்கை ..


"குட்டி மா , உங்க அக்கா கூடவே தான் நானும் வந்தேன், ஹ்ம்ம் , பேக்ல இப்படி ஒரு டப்பா இருக்குனு இவ சொல்லலியே, என் வயித்துக்கு , நான் தான் தீனி போட்டுக்கணும்," என்று அங்கலாய்த்து கொண்டே, மூவருக்கும்,தேநீர் வாங்க சென்றான் ..


அம்மா பேசினது தப்பு தான், நான் என்னனு கேட்குறேன், என் பொண்ணோட விருப்பம் தான் முக்கியம் , அத்தைங்க இதுல தலையிட வேண்டாம்னு இப்படி மறை முகமா சொல்றாங்க, ஆனா சொன்ன விதம் உன்ன வருத்திடிச்சி ..


"ஆனா இன்னைக்கு காலையில மாமா கொண்டு வந்த சம்மந்தத்தை பற்றி உன் கிட்ட பேசலாம்னு அம்மா இருந்தாங்க, அதுக்குள்ள நம்ம அத்தை சொதப்பிடிச்சு , அவரோட சித்தி பையன்.
உனக்கு பார்க்கலாம்னு இருங்காங்க ..

"இப்போ உன்னோட லோனும் நாலு மாசத்துல முடிய போகுது, இனி எதுவும் உனக்கு டென்ஷன் இல்லை தானே , இப்போ கல்யாணத்துக்கு நீ சம்மதம் சொல்லு டா," என்று கேட்டாள் அக்கா ..

"நம்ம மாமா பார்த்த சம்மந்தம் , அவளின் லோனும் முடியும் தருவாயில் உள்ளது , வீட்டில் அனைவருக்கும் சம்மதமும் கூட, என்றதும் தங்கையும் சரி என்றாள் ..

மனைவியின் மலர்ந்த முகம் பார்த்து கொண்டே, ஒரு தட்டில் தேநீர் எடுத்து வந்த , செழியனுக்கு,
"ரைட்டு , நமக்கு கொழுக்கட்டை கன்போர்ம் ," என்று அங்கு வந்து அமர்ந்தான் ..

என்னங்க, நம்ம குட்டி மா கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டா ,என்று சந்தோஷித்தாள் ..

"குட்டி மா பையன், எங்க அம்மாவோட தூரத்து சொந்தம், அவங்களுக்கு தங்கை முறை சொந்தமாம் , எங்கயோ ஒரு விசேஷத்துல உன்னை பார்த்து உன் ஜாதகம் கேட்டு பொருந்தி இருக்கு ," என்று அவன் பேசி கொண்டே செல்ல ,

"மாமா வெய்ட்டு , நீங்க பார்த்த சம்மந்தம்னு அக்கா சொன்னா , அது போதும், நீங்க அம்மா அப்பா, என் தம்பிய தவிர நான் நல்ல இருக்கணும்னு யாரு நினைப்பாங்க ,அதுனால ,எனக்கு யாரு பற்றியும் டீடெய்ல் வேண்டாம், எனக்கு ஓகே," என்றாள் ..


செழியனுக்கு, கண்கள் பணித்தது, அவன் மச்சினிச்சியின் நம்பிக்கையில், இலக்கியவும் கவனித்து விட்டாள் , அவளுக்கும் அவள் தங்கையின் பதிலில் இவ்வளவு நம்பிக்கையா என்று கணவனை பெருமையாக தான் பார்த்தாள் ..


"என்ன மாமா , கண்ணு வேர்க்குது," என்று அவள் மாமனின் கண்ணீர் பொறுக்காமல் , கிண்டல் அடித்தாள் ..


செழியன் கண்களை துடைத்து கொண்டு , அவள் தலையை செல்லமாக ஆட்டி, பையன் பேராவது தெரிஞ்சிக்கோ, எனக்கு தம்பி முறை வருது,



அவன் பெயர் அன்பு ..:)
 

Saroja

Well-Known Member
நல்லா இருக்கு பதிவு
அன்பு பேரே அன்பா இருக்கே
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top