அனைவரின் கவனத்திற்கும்

ShanviSaran

Well-Known Member
Tamil Novel Writer
#1
தோழமைகளே தற்போதைய உண்மை நிலவரம் சென்னையில் எந்த மருத்துவமனையிலும் இடம் இல்லை என்பது தான்.என் உறவினருக்கு ஆக்ஸிஜன் அளவு 90க்கு கீழ் என்றதும் இரவு 9 மணிக்கு ஆம்புலன்ஸில் சென்றவரை அதிகாலை நான்கு மணிக்குத் தான் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்க முடிந்தது. தனியார் மருத்துவமனைகள் ஒன்றிலும் இடமில்லை..

மற்றொரு அனுபவபூர்வமான செய்தி தான் .... (அறிவியல்பூர்வமான செய்தியா என்பது தெரியாது…)

எனது உறவினர் இருவர் நண்பர் ஒருவர் என அடுத்தடுத்து சென்ற வாரத்தில் மூன்று இழப்புகள் . மூவரும் ஐ சி யு விலிருந்து வந்து விட்டோம் என எங்களுக்கு நிம்மதியைக் கொடுத்த இரண்டாம் மூன்றாம் நாட்களிலேயே ஒருவர் பாலில் Bun தொட்டு சாப்பிடுகையில் மூச்சு திணறி விட்டது … மற்றவர்கள் பொங்கல் உண்ணுகையில் , இட்லி உண்ணுகையில் மூச்சுக்குழாயில் அடைத்து விட்டது என்பதாக தகவல் … நம்பவே இயலவில்லை… நன்றாகிவிட்டோம் என்றவர்கள் இப்படி காரணங்களால் இல்லாமல் போனது … எங்களுக்கு கொடுத்த அறிவுரை தொடர் இருமலோ மூச்சுத் திணறலோ… ஆக்ஸிஜன் கொடுத்து மீண்டு வந்தாலோ இரண்டு மூன்று நாட்களுக்கு திரவ உணவு எடுத்துக் கொள்ளுங்கள் என்பதே … தொற்றில் பாதித்து மீண்டவள் என்பதாலயே இந்த பதிவை பகிர்கிறேன் …. பாதுகாப்புடன் இருங்கள்…

 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes