அனலும் மழையும் 6

Advertisement

Lakshmi N

Writers Team
Tamil Novel Writer
Hi every one thanks for your patients.........thanks for your love and care ........last epi ku likes and comment post panna ellarukkum thanks thanks thanks alot........next ud poten kindly share your valuable comments with me......am waiting:cool::cool:.



அத்தியாயம் 6:



விடிந்தும் விடியாத காலை பொழுதில், சேவல் கூவ, கதிரவன் புலர, பறவைகள் இரை தேடி கிளம்பொழுது…..ஒரு சத்தம்( யாருப்பா அது……அட அது நம்ம சுபா தான்)….



அம்மா என்ன ஏன் இப்படி நடு ராத்திரில எழுப்புர……



6 மணி உனக்கு நடுராத்திரியா? எழுந்திரி கண்ணு….நீ வூட்ட பாத்துக்குவியாம

நானு கெழக்கால(கிழக்கில்) உள்ள நம்ம தோப்ப ஒருக்கா பாத்துட்டு வாரேன்.(



நீ ஏன் அலையுர நம்ம கணக்கு கிட்ட சொன்னா பாத்துக்குவாரில்ல…



காய் எறக்குராங்கல்ல அத வுட்டு பொட்டு பொட்டாடம் வூட்ல இருக்க நானென்ன உன்ன மாதிரி கொமரியா அதில்லாம அத நானு பாக்காம ஆறு(யாரு) பாப்பா……நீ பாப்பியாக்கும்



தாயே அறியாம சொல்லிபொட்டேன்….நீ போமா…நா இருக்கேன்.

மாலதி" காப்பித்தண்ணி வச்சுருக்கேன் எடுத்து குடிச்சுரு ….பொரகால(பின்புறம்) போய் நேரம் கடத்தாத சரியா…..



வீட்டின் பின்புறம் பூந்தோட்டம் உள்ளது. அது தான் சுபாவின் பொழுதுபோக்கும் இடம். அவளுக்கு மன அமைதி தரும் இடம், சந்தோஷம் தரும் இடம். அதனால் தான் மாலதி அவ்வாறு கூறினார்.



சுபா " உன் காப்பியே தண்ணீ மாரித்தான் இருக்கும் அத நா குடிச்சுட்டாலும்….

மாலதி " என்ன சத்தம்……

சும்மா சரினு சொன்னேன் மா…..நீ போமா…ஆளுங்க வந்துருப்பாங்க….

சரி என்று கிளம்பினார்.

சுபாவின் சொந்த ஊர் பொள்ளாச்சியை அடுத்துள்ள கிராமம். சுபாவின் தந்தை மூர்த்தி அந்த ஊரில் தென்னந்தோப்பும், வயலும் வைத்து விவசாயம் செய்தவர். மாலதியை திருமணம் செய்து சுபா பிறக்கும் முன்பே அவருடைய தோப்பில் மேற்பார்வை செய்யும் போது பாம்பு தீண்டியதால் இறந்து விட , மாலதி தான் ஒற்றை ஆளாய் அணைத்தையும் பார்த்தார். இன்று வரை பார்த்துக்கொண்டிருப்பவர். அவருக்கு சுபாவிற்கு அடுத்தபடியாய் எல்லாமுமாய் இருப்பது தோப்பும் வயலும் தான். அதனாலயே அவரில்லாமல் எதையும் செய்ய அனுமதிப்பதில்லை.



10.30 மணி இருக்கயில் தலை தெறிக்க ஓடி வரும் மகளை பார்த்து பயந்து என்ன பாப்பா…..என்னாச்சு ..எதுக்கு ஓடியார….

அம்மா நானு அமெரிக்கா போரதுக்கு பரிச்சை எழுதுனேனில்லை …..அதுல பாஸ் பண்ணிட்டேன்.

சந்தோசம் கண்ணு இனி கண்ணு முழிச்சு படிக்க வேணாமில்ல…இத சொல்லத்தான் ஒடியாந்தியாக்கும்…..ஆமா எப்ப கெளம்போனும்..

இன்னும் 1 மாசம் இருக்கு மா…



சுபா அமெரிக்கா சிக்காகோவில் இருக்கும் பல்கலைகழகத்தில் MS படிக்க நுழைவு தேர்வு எழுதீருந்தால் அதில் தான் தேர்வாகியிருந்தாள்.



மாலதிக்கு நிறைய படிக்க வேண்டும் என்பது கனவாக போய்விட்டது. அதனால் சுபாவை படிக்கவைத்து தன் கனவை நினைவாக்கிக்கொண்டார். சுபாவிற்கு விருப்பம் இல்லாமல் இருந்திருந்தால் கண்டிப்பாக எதுவும் சொல்லி இருக்க மாட்டார். சுபாவும் படிப்பதென்றால் அலாதி பிரியம் அதனாலயே இந்த வெற்றி.



மாலதி 1 மாதமும் சுபாவை அழைத்துக்கொண்டு கண்ணில் பட்டதெல்லாம் வாங்கிகொடுத்தார். சுபாவும் தாயை பிரியும் வேதனையில் அவரிடம் செல்லம் கொஞ்சிககொண்டிருந்தாள்.



கிளம்பும் நேரமும் நெருங்க நெருங்க ஒருவித பயம் சுபவின் மனதை அறிக்க தொடங்க என்ன ஏதென்று புரியாமல் குழம்பினாள். பின்...... வருவதை பார்த்துகொள்வோம் என்று விடைபெற்று கிளம்பினாள்.



முதல் விமான பயணம் ஒரு வித பயமும் பதட்டமும் கலந்து இருந்தது. தன்னை சுற்றி இருந்தவகளை பார்த்தவள். அவர்கள் செய்வதை போல் செய்து ஒருவழியாக சிக்காகொ வந்தடைந்தாள்.



வரும் போதே தங்குவதற்கு எல்லா ஏற்பாடும் செய்துவிட்டுதான் வந்தால். அவள் பெயர் பூரணி சென்னையை சேர்ந்தவள். அவளுடைய ஆசிரியரின் அண்ணன் மகள். மாலதி கேட்டுகொண்டதால் இதை செய்தார் அவர். அவருக்கும் மாலதியை பற்றியும் சுபாவின் ஆசை பற்றியும் நன்கு தெரிந்தவர். அது மட்டுமில்லாமல் சுபா தான் கல்லூரியில் அவள் துறையில் முதல் மாணவி.( அட கொஞ்சம் படிப்ஸ் பா…………………..)



இப்பொழுது பூரணியைத்தான் தேடிக்கொண்டிருந்தாள். தூரத்தில் அவளின் பெயர் பலகையை தாங்கியவாறு ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள். பார்பதற்கு பூசினார்போல் உடல் வாகு. நல்ல நிறம். அளவான உயரம். அவளாகதான் இருக்கும் என்று எண்ணிக்கொண்டே அருகில் சென்றால். சுபா பூரணியை பார்த்தில்லை போனில் பேசியதோடு சரி. அதனால் அவளுக்கு தெரியவில்லை.



அப்பெண்ணை நெருங்கி “ பூரணி……..”

ஆமா…நீங்க சுபத்ரா தானே……..

ஆமா….தாங்க்ஸ் பூரணி நீங்க வந்ததுக்கு.

அட விடுபா…வாங்க போகலாம்…இப்பவே கொஞ்சம் லேட் இல்லைனா நா கூட்டிடு வந்த டிரைவர் திட்டுவான் " என்று பின் வருவதை அறியாதவளாய் அவளிடம் கூறி அழைத்து சென்றால்.



டிரைவர்க்கு கூட பயப்படனும் போல இருக்கே….பாத்து சுபா இனி வாய விட்டுடாத பாதி வழில இறக்கி விட்டுடுவான். என்று தனக்குள்ளே பேசிக்கொண்டு தன்னுடைய பெட்டிகளை தள்ளிகொண்டு வந்தாள்.



கார் நிறுத்தும் இடம் வரவும் தான் பூரணியை கவனித்தால் யாருடமோ போனில் பேசிய படி காரின் டிக்கியை திறந்து விட்டாள். சுபா உடமைகளை வைத்துவிட்டு காருக்குள் அமர்ந்துவிட்டால். பூரணியும் வந்து அமர்ந்தவுடன் கார் கிளம்பியது. அமைதியான பயணம். சுபா தன் சிந்தனையில் இருந்ததால் பேசவில்லை, பூரணி நேரமே எழுந்ததால் உறங்கி கொண்டு வந்தால்.



பூரணி தங்கியிருக்கும் வீடு 2 படுக்கை அறை கொண்டது. கல்லூரிக்கு அருகில் உள்ளது அதனால் தான் சுபா பூரணியுடன் தங்குவதற்கு சரி என்றது.



சுற்றுபுறம் எதையும் கவனிக்கும் நிலையில் சுபா இல்லை. தாயிடம் பேசிய பின்பு தான் எல்லாம் என்ற நிலையில் இருந்தால். வீடு வந்தது கூட தெரியாமல் இருந்தவளை பூரணி உலுக்கிய பின் தான் நினைவு வந்து கீழே இறங்கி உடமைகளை எடுத்துகொண்டிருக்கும் போது……



“ ஹாய் ஹலோ கூட இந்த உலகத்தில் பஞ்சமா போச்சா?” என்ற குரலில் பெட்டியை குரலுக்கு சொந்தமானவர் காலிலேயே போட்டால்.(விட்டா நம்ம ஆளு தலையிலேயே போடும் பாவம் ……..யாரு பெத்த புள்ளயோ காலுல அடி வாங்கியிருக்கு.)



ஐயோ………..என்ற அலரலில், கதவை திறந்து கொண்டிருந்த பூரணி எட்டி பார்த்து சிரித்துக்கொண்டிருந்தால்.



சாரி சாரி டிரைவர் சார்…..தெரியாம பண்ணிட்டென் …..இனிமே இப்படி நடக்காது டிரைவர் சார். என்று சுபா விடாது கூறிக்கொண்டிருந்தால்.



டிரைவர் என்றதுமே அவன் பல்லைக்கடிக்க பூரணி இன்னும் அதிகம் சிரிக்க ஆரம்பித்தால்,



கொவப்படாமல், இனி என்ன நடக்காது அதுதான் என்ன நடக்க விடாம பண்ணிட்டியே….அது சரி நா டிரைவர்னு யாரு சொன்னா என்றான். அது வரை சிரித்து கொண்டிருந்த பூரணி இப்பொழுது திருதிரு என விழித்தால்.



அதுவா….பூரணிதான் ஏர்போட்ல , சீக்கிரம் வா இல்லைனா நா கூட்டிடு வந்த டிரைவர் திட்டுவானு சொன்னா…..ஏன் டிரைவர் சார் நீங்க தமிழா…….எந்த ஊரு..என்றால்..பூரணியின் எந்த சைகையும் கவனிக்காமல் முழுவதையும் கூறி அவனிடம் கேள்வி வேறு கேட்டாள் .( சுபா பாரு மா அங்க உன்ன வெட்டவா குத்தவானு பூரணி பாக்குரா)



அவன் சுபாவிற்கு பதில் சொல்லாமல் பூரணியைத்தான் முறைத்துக்கொண்டிருந்தான். ஆனால் பூரணியோ “ பத்தவச்சிடியே பறட்ட “ என்பது போல் சுபாவை பார்த்துகொண்டிருந்தால்….



சுபாவோ என்ன இவர் டிரைவதானே ….ஒருவேள டிரைவர் இல்லையோ? அப்ப இவர் யாரு …பூரணி ஒன்னும் சொல்லாம நம்மள ஏன் இப்படி பாக்குரா? ( அப்பா இப்பத்தான் தெளிஞ்சுருக்கா போல .....)

வந்த அன்னைக்கே இவ்வளவு குழப்பமா? கடவுளே காப்பாத்து…..என்று எண்ணிய படி அவனை தான் பார்த்துக்கொண்டிருந்தாள். (அம்மா சுபா நாங்க தான் கடவுள கூப்பிடனும் உன்ன வச்சு அவங்க ரெண்டு பேரு என்ன பாடுபடபோராங்கலோ.......)





மழை வரும்………..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top