அத்தியாயம் -8

Advertisement

dhanuja senthilkumar

Well-Known Member
வம்பு நாட்டான்

அத்தியாயம் – 8

இரவின் இருள் தரும் ஏகாந்தம் இருக்கே அப்பப்பா வார்த்தையில் அதனை வடிக்க முடியா சுகம்.அதனை இன்று தான் முழுதாக அனுபவித்தனர் சோமதேவன் அறிவழகி தமபதியினர்.

இளமை காலம் அனைத்தும் இறுக்கத்தில் கழிய நடுத்தர வயதில் மீண்டும் தங்களது இளமையைத் தேடி பிடித்துக் கொண்டு இருந்தனர்.

கேட்க, பேச, சண்டை பிடிக்கச் சமாதானம் செய்யவெனக் கோடி விடயங்கள் வரிசை கட்டி நிற்க. அதனை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு இந்தத் தருணத்தைத் தங்களுக்காகச் சேமிக்க எண்ணினர். இனியாவது மற்றவர்கள் சுயத்திற்காக அல்லாமல் தங்கள் சுயத்தை எண்ணட்டும்.

அங்கே மலர் நங்கையுடன் அமைதியாகப் பொழுதை தள்ளிய நல்லம்மாள் உணவுக்குப் பின் இருவரையும் தன்னுடன் அழைத்து அமர வைத்துக் கொண்டார்.

வீட்டினுள் வந்ததில் இருந்து பொதுவான பேச்சுக்கள் மட்டுமே. அப்பத்தா என்ன செய்வார், என்ன பேசுவார் என்று பயந்திருந்த பேத்திகளுக்கு அவரது மௌனம் சற்று ஆறுதல் தான்.

பகல் பொழுதையெல்லாம் மௌனமாகக் கொண்டு மாலை துணை கொண்டு பேச்சுத் தொடர்ந்தது எந்த வித பூச்சு பேச்சுகளும் அல்லாமல் யோசனையாகப் பேசினார் நல்லம்மாள்.

எடுத்த எடுப்பிலே கண்ணில் வலியுடன் “உங்க ஆத்தா வூட்ட வுட்டு வரும் பொது இரண்டு பேரும் இம்புட்டு காண்டு இருப்பீக. உங்க தாத்தேன் செண்பகத்தை பார்க்க வூட்டுக்கு வந்தப்போ நான் அவுங்களோட வூட்டுக்கு போறேன்னு உங்க ஆத்தா ஒப்பாரி”

“இங்கனையும் நிலை ஒன்னும் சுமுகமில்ல அதேன் உங்க அப்பாரு கூட அனுப்பி வச்சேன் ஆனா போனவ போனவதேன் திரும்பி வர வழியே காணோம்”

“வரலனா நீக கேட்க மாட்டீகளா அப்பத்தா” மலர் பட்டென கேட்க

“ஆத்தி!... அப்பத்தாவா? நானா?” என்று போலியாக ஆச்சிரியம் கொண்டவரை இருவருமே முறைத்து நின்றனர்

“என்னடி முறைக்கிறவ இப்பத்தேன் நான் அப்பத்தான்னு தெரியுதா? அடைகாக்குற கோழி மாதிரி வூட்டுக்குள்ளையே வச்சு புட்ட உங்க ஆத்தா இல்லனா அங்கன இங்கன போகும் பொதுப் பார்த்து இருப்பேன் அதுக்குக் கூடக் கொடுத்து வைக்கல எனக்கு” அவர் குரலில் அத்தனை ஆதங்கம்.

“தாளடி அன்னநடையிட்டு பார்க்கல, கொஞ்சி பேசி கேக்கல ஒவ்வொரு பருவமும் தொட்டு உணர்ந்து உச்சி முகர்ந்து நிற்கல ஆசை தீர கண் கொண்டு உங்க அழகை ரசிக்கல இதோ இப்போ கண்ணாலத்துக்கு நீக்கீக இதெல்லாம் திரும்ப வருமா நானும் என் மவனும் எம்புட்டு இழந்து நிக்கோம்”

“அப்பத்தா நாங்களும் சுகப்படல” மலர் சொல்ல

“அம்மாவும் பாவம் அப்பத்தா” இது நங்கை.

“யாரு? உங்க ஆத்தா பாவமா அது சரி அவளும் பாவந்தேன் ஆனா என் மகன் அளவுக்கு இல்ல கண்ணுக்கு நிறைவா இரண்டு பொம்பள பிள்ளைங்க,

ஆத்தா, அப்பா ,அக்கா, மாமா, தம்பி, தம்பி மனைவினு எம்புட்டுச் சொந்தம் சும்மாவா கூட இருந்தாங்களா இல்லையா? ஆனா இங்கன நானும் என் மவனுந்தேன்”

“அப்பாரு மேலையும் தப்பு உண்டு தானே” நங்கை பயந்து பயந்து சொல்ல

“அது சரி என்ன தப்ப கண்டீக உங்க ஆத்தா சொன்னாலாக்கும்” கோபமாக நல்லம்மாள் கேட்க இடை புகுந்த மலர் அவசரமாக “இல்ல இல்ல மேலோட்டமா பிரிவு எதுக்குன்னு மட்டுந்தேன் அம்மா சொன்னாக.... அதுவும் அப்பாரை எண்ணி எம்புட்டு வருஷம் அழுதே கெடந்தாகத் தெரியுமா”

“அதுக்குக் குறைவில்லாடி என் மவேன் பாடு..... என்ன உங்க ஆத்தா அழுது சொல்லி ஆத்திகிட்டா அவன் சொல்லமா மனசுக்குள்ள மருகிக்கிடக்கான்” என்றவர் சிறுது நேரம் மௌனம் கொண்டார் கடந்து வந்த வாழ்க்கையை எண்ணினால் விரக்தி புன்னகை தான் வந்தது

சுயநலம் மிக்க மனிதர்கள் இடையில் சுக பட முடியுமா என்ன? அது தான் நல்லம்மாள் வாழ்விலும் . பழுத்த பழம் போலும் அவரது தோற்றமே அவரது வயது எடுத்து கூற அனுபவத்தின் அனுபவ வாழ்க்கை அவரது வயது அடித்துக் கூறியது நான் ஐம்பது ஆண்டுகள் கடந்தவள் என்று.

நான் சொல்றதை காது கொடுத்து கேட்டுக்கிடுக புரியுதானு பிறவு சொல்லுக நியாயத்தைக் கேட்டுக்கிடுதேன்... “உங்க அம்மாளுக்குக் கண்ணாலம் ஆகும் போது வயசு குறைவுத்தேன் பள்ளிக்கூடத்துக்குப் போற புள்ளைய நிறுத்தி அவசரமா கண்ணாலம் பண்ணியாச்சு,

பக்குவம் எடுக்க நாளாகும் அதையும் ஓசனை (யோசனை) பண்ணித்தேன் கண்ணாலம் பண்ணுச்சு” என்றவர் கண்களை மூடி கொண்டு நடந்தவையைக் கண் முன் நிறுத்தி பேச ஆரம்பித்தார்.

“நான் என் புகுந்த வூட்டுக்கு நியாயம் செய்யப் போயி நானும் என் மவனும் பழி வாங்கி நிக்கோம்.உங்க தாத்தா கூடப் பொறந்த பொறுப்பு எம்புட்டு பேருனு தெரியுமா?” கேள்வி போல் பெரியவர்

நங்கை, அம்மா சொல்லி இருக்காக அப்பத்தா ஒரு டஜன்

“அதேதேன் இவரு மட்டுந்தேன் ஆணு மத்த பதினோரு பேரும்பொம்பள பிள்ளைங்க .கண்ணாலம் கட்டி நான் வூட்டுக்கு வந்தப்போ எனக்குச் சிறு வயசுதேன் என் நிலை புரியுதா...? மேல் போல் இதனை ஆவுடையம்மாள் சொன்னதுண்டு அதனால் இரு பெண்களும் தலையை ஆட்டினர்.

“அதுங்க எல்லாம் பள்ளிக்கூடம், விளையாட்டு னு இருக்கும் போது அதே வயசுதேன் எனக்கு ஆனா நானு குடும்ப, குழந்தைனு நின்னேன்”

“அம்புட்டுக்கும் கண்ணாலம் பண்ணி கரையேத்தி அனுப்புறத்துக்குள்ள நான் பட்ட பாடு ஆத்தாடி ஆத்தா சொல்லி மாளாது சாமி என் மாமியார் இரண்டு பிள்ளைகளைக் கரையேத்தி புட்டு கண்ணா மூடிபுடுச்சு,

மாமனார் அடுத்த வருஷமே போயி சேர்ந்துட்டார் கண்ணு இருட்டி போச்சு சாமி....,

எனக்கு ஒன்னுமே புரியல ஆவுடை தருச்சு நிக்க ராவு முழுக்க அழுதே கரையுவேன் அதுவும் அவுங்களுக்குத் தெரியாம அந்த மனுஷனும் என்ன பண்ணுவாரு பாவம் அம்புட்டு பேர் வயித்துப் பாடும் அவர் ஒருத்தர் தானே பாக்கனும்”

“காடு, மேடு, தோட்டம், தொரவுனு அம்புட்டையும் கட்டி காக்கனும். அவர் அங்கன பலியா கிடக்க நான் இங்கன நொந்தேன் ஒருத்தி கண்ணாலம் பண்ணி போவா, ஒருத்தி தல பிரசவத்துக்கு வருவா அவளைப் பார்த்து எடுத்து அனுப்பி வைப்பேன் இன்னொருத்தி கண்ணாலத்துக்கு நிப்பா” அப்பப்பா....” அப்போது ஓடிய ஓட்டம் இன்று களைப்பை தந்தது போலும்.

“என்னாத்தேன் ஆளுக இருந்தாலும் முன் நின்னுதானே ஆகனும்.இப்படியெல்லாம் பண்ண எனக்கு விசுவாசம் செஞ்சுபுட்டா கடைசி நாத்தி நான் கண்ணாலம் கட்டி வரும் போது இம்புட்டுதேன் இருக்கும்” கையைச் சுருக்கி காட்டினார் பெரியவர்.

“அதும் எனக்குப் பிள்ளை மாதிரித்தேன் அது பொண்ணு நோவு கண்டு நிற்கும் போது மனசு கேக்கல உங்க அம்மாலைத்தேன் கட்டுவேன்னு நிண்டவனை நானும் கட்டாயப்படுத்தித்தேன் கண்ணாலம் பண்ணுனேன்”

“உங்க அம்மாவ கண்ணாலம் பண்ணிப்பேன் சொல்லிதேன் கட்டுனா இருந்தும் உங்க அம்மா அப்பா கண்ணாலம் நடக்கக் கூடாதுனு ரொம்பப் பிரச்சனை பண்ணிபுட்டா நாத்தி நானும் அமைதியா வேடிக்கை பார்த்தேன் எம்புட்டு தூரம்னு”

“ஏன் அப்பத்தா தப்புத்தானே பெரியவுக கேட்க உறுத்து இருக்கு பிறவு என்ன”

“இருக்குதேன் ஆனா உறவு கண்ணாடி சாமி பொசுக்குன்னு உடைச்சு புட்டா காலத்துக்கும் சேராது. இல்லனா இம்புட்டு போரையும் கட்டி இழுக்க முடியுமா அதேன் பொறுத்து கிடந்தேன் அதுவும் போக சாவ கிடக்கப் பிள்ளைக்கிட்ட என்ன சண்டைனு பொறுமை பழகுனேன்”

“ஆனா என் பொறுமைக்கு எல்லை உண்டு தானே ஒரு மனுசி எம்புட்டு பார்ப்பா சொல்லு.... மலர் பொறந்த உடனே அவுக சேட்டையைக் காட்ட தொடங்கிட்டா”

“உங்க அம்மா வந்து சொல்லும் போது எனக்கு அம்புட்டு கஷ்டமா இருக்கும் அதுக்குச் சமாதானம் சொல்லி அனுப்பிவைப்பேன்”

“ரெண்டே வருசத்துல நங்கையும் கையில அதுக்கு அப்புறம்தேன் என்னால பொறுக்க முடியல ராவு முழுக்கப் பிள்ளையைப் பார்த்துகிட்டு சென்பத்துக்கும் எல்லாம் செஞ்சு புள்ள பாடா பட்டு போச்சு ஆரு சுமைய ஆரு சுமக்க”

“என் மவேன் அவ பேண்டது, மொண்டது அள்ளி குளிக்க வச்சு அவளே சதம்னு சேவை பண்ணி என்னத்துக்கு ஆச்சு இதுக்குத்தேன் அவ கண்ணாலம் பண்ணி அனுப்பினாலா”

“தெரிஞ்சு தானே அப்பத்தா கல்யாணம் பண்ண அப்புறம் என்ன” மலர் துடுக்காகக் கேட்க

கேட்டவளை கூர்மையாக பார்த்து கொண்டே “கண்ணாலத்தப்ப அவ நட உடையாதேன் இருந்தா பக்க வாதமில்ல அது வரும்னு சொல்லியும் எங்களுக்குத் தகவல் சொல்லல நோவு முத்தி போச்சு வாழற வரை வாழட்டும் காலப் புடுச்சுக் காரியம் சாத்துச்சு புட்டா இந்த விவரமே ஒரு வருஷம் செண்டுதேன் தெரியும்”

“எம்புட்டு முட்டாள் பார்த்தியா நானும் உங்க அப்பனும் வாழ்ந்திருக்கோம் நாத்தின்னு பார்க்காம பிள்ளைன்னு பார்த்ததுக்கு நல்ல படிப்பினை எனக்கு.... இன்னும் கேளு சொல்லுதேன்”

“அப்படி இப்படின்னு அவ போயி சேர உங்க அம்மா முறுக்கிட்டு வந்துபுட்டா”

“ஏன்? எதுக்குன்னு ? ஒரு விவரமில்ல என்ன? எதுன்னு கேட்டா உங்க தாத்தேன் முகத்தை வெட்டுறான் நான் பெத்த இரண்டும் ஊமையா நிக்க என்னானானு புரிஞ்சுகிட”

“அவ செத்து ஒரு வருசத்துல உங்க அம்மாவை கூட்டியார முடிவு பண்ணி ரவைக்குத் தூங்கி பொழுது விடிய நம்பச் சாதி சனம் அம்புட்டையும் கூட்டிட்டு வந்து பஞ்சாயம் வச்சு புட்டா என் நாத்தி”

இன்னும் என்னவாம்? கேட்டுக் கொண்டு இருந்த பெண்களுக்கு அத்தனை கடுப்பு தாய் தந்தை பிரிந்தது சூழ்நிலை என்றாலும் அதிகம் இழந்தது தாங்கள் தான் என்ற கோபம் நிரம்ப உண்டு அல்லவா அது நியாயம் கூட

“ஹ்ம்ம் அவ இரண்டாவது பொண்ணைச் சோமனுக்கு எடுக்கனுமா”

என்னது!.... அதிர்ந்தனர் இரு பெண்களும் என்னடா இது? என்ன மாதிரி மனிதர்கள் இவர்கள் நல்ல வேலை நாம் அவர்கள் காலத்தில் பிறக்க வில்லை இப்படித்தான் எண்ண தோன்றியது

பழமை பெருமை தான் ஆனால் அதிலும் இது போல் அபத்தம் உண்டு கோட்பாடுகள் இருந்தாலும் அவர்களுக்கு ஏற்ப வளைப்பது என்ன விதமான நியாயம். ஒருவனுக்கு ஒருத்தி என்பது நிலை நெறி அதிலும் தளர்வுகள் கொண்டு இருந்தாலும் இது ?...........தலையை ஆட்டி கொண்டனர் பெண்கள்

“உங்க அப்பன் முடிவா சொல்லிப்புட்டான் எனக்குப் பொஞ்சாதி அவதேன் நீக தேன் இடையில புகுந்து ஆட்டைய களைச்சு புட்டீகனு நியாயம் கேட்டான்”

“அவதேன் வாழல இனியும் அவ வர மாட்டான்னு அவுக பக்கம் ஆளுக பேச ஐயோ!.... ஐயோ!..... முடியல சாமி செண்பகத்துக்குக் கொடுத்தச் சீதனம் அம்புட்டையும் சின்னவளுக்குக் கொடுத்து மேற் கொண்டு போட்டு நல்ல வரன் பார்த்து அவனே கட்டி வச்ச பிறவுத்தேன் ஒஞ்சானுக அதுக்குப் பல வருஷம் போராட்டம்”

“ஆரு வாழ்க்கையை ஆரு வாழுறது சொல்லு? என்ன சுகம் கண்டான் என் பேச்சு கேட்டது ஒன்னுதேன் தப்பு இன்னும் இருக்கு செய்தி அதெல்லாம் உங்களுக்கு வேணாம் சுதானம் இல்லனா வாழ்க்கை போச்சு சாமி அதுக்கு நாந்தேன் உதாரணம்” இது அவுக பங்கு

“என் தம்பி நான் எண்ணி இருந்தேன் ஆனா உன் தாத்தேன் எனக்கு மருமவேன் சொல்லாம சொல்லிப்புட்டான் உங்க ஆத்தாளையும் உங்களையும் கண்ணுல காட்டாம வச்சு புட்டானே

ஒரு நல்லது செஞ்சு பார்க்கலை காது குத்து, வயசுக்கு சடங்கு ஒன்னும் கண் குளிர காணல யாருக்கோ பாவம் பார்த்து இதோ அம்புட்டையும் இழந்து நிக்கோம்” என்றவர் மனம் நடந்தவையை எண்ணி அசதி கொள்ள ஒரு நோடி தான் அப்படியே அமர்ந்த வாக்கிலே சரிந்து விட்டார்.

நன்றாகப் பேசி கொண்டு இருந்தவர் அப்படியே சரிய பயந்து இரு பெண்களும் ஆளுக்கு ஒருபுறம் அமர்ந்து அவரைத் தாங்கி கொண்டனர் உடல் எல்லாம் குளிர்ந்து கிடந்தது.

“நங்கை சடை மாமாவ கூட்டியா ஓடு” என்றதும் மறுப்பில்லாமல் நடனதேவர் வீட்டுக்கு ஓடினாள் நங்கை

**

அங்கே சற்று முன் தான் அறிவும் சோமதேவனும் வந்திருந்தனர் இருவரும் ஜோடியாக உள்ள நுழைவதை பார்த்த மூக்கன் அவர்கள் வந்த களிப்பில் சற்று உறக்க தான் பேசினார்

“யோவ் சகலை நீ சொன்னது நடந்துடும் போலையா” அவர்கள் மேல் பார்வையைப் பதித்துச் சொல்ல அனைவர் கவனமும் அங்கே சென்றது நடனதேவர் அக்காட்சியை கண்டு எழுந்தே நின்று விட்டார் எத்தனை ஆண்டுகள் சென்று கண்ணை நிறைத்து நின்றது.

அக்களிப்பை முழுமை பெற முடியாமல் தடுத்தது நங்கையின் பதட்ட குரல் மூச்சு வாங்க ஓடி வந்தவள் தாத்தா!... தாத்தா!.... என்று மட்டும் சொன்னாலே ஒழிய செய்தி சொன்ன பாடில்லை அவளது தோற்றம் கண்டு அருகில் வேகமாக நெருங்கியவர் “என்ன சாமி என்ன ஆச்சுச் செல்லம் வெரசா தண்ணி கொண்டு வா”

“இல்ல இல்ல தாத்தா அப்பத்தா பேசிக்கிட்டே மயங்கிடுச்சு” என்றதும் ஒரு நோடி அதிர்ந்த நின்றவர் வேட்டியை மடித்துக் கொண்டு ஓட பின்னால் அனைவரும் சென்றனர்.

இத்தனை நடக்க இதில் சடையப்பன் அரவமே இல்லை என்பது குறிப்பிட தக்கது.
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top