அத்தியாயம் - 6

Advertisement

dhanuja senthilkumar

Well-Known Member
சீமை சீயான் -6

சுகமான தூக்கத்தில் இருந்தவனைக் கலைத்தது சீயானின் போன் சோம்பலாக அதற்குச் செவி மடுத்தவன் “என்னடா” என்க சீயான் சொன்ன செய்தியில் தூக்கம் தொலை தூரம் செல்ல கைக்குக் கிடைத்த துணியை எடுத்து மாட்டி கொண்டு அடித்துப் பிடித்துக் பிச்சியின் வீட்டுக்கு ஓடினான் எசக்கி முத்து.

வாசலில் மூச்சு வாங்க வந்து நின்ற மகனை கொலை வெறியில் முறைத்துக் கொண்டு நின்றார் வீராயி தாயின் பார்வையை அலட்சியம் செய்தவன் “எங்க ஆத்தா அவ” அதற்கும் அவரிடம் முறைப்பே பதிலாகக் கிடைக்க

“உங்கிட்ட கேட்டேன் பார் தள்ளு அந்தாண்ட” குறுக்கில் நின்றவரை தள்ளி விட்டுச் உள்ளே செல்ல.தள்ளிய வேகத்தில் தடுமாறி நின்றவர் “கொட்டி பையலே” வசை பாடிய படியே அவரும் அவனைத் தொடர்ந்தார்

முத்துவின் வரவை உணர்ந்த முனியாண்டி “வா எசக்கி இந்தப் பிச்சி புள்ள என்ன பண்ணி வச்சு இருக்கு பார் புள்ளகிட்ட பேசு அது ஏன் இப்படி ஒரு முடிவெடுத்துச்சுனு எனக்குத் தெரியனும்.உள்ளர அவனுங்கெல்லாம் நாட்டாமை பண்ணிக்கிட்டு இருக்கானுக வா நீ வந்து என்னனு கேளு டா”அவசரமாக அவனை இழுத்து சென்றார்.

எதிலும் சீயான் தலையிடவில்லை முத்துவே பார்த்துக் கொள்ள வேண்டுமென்று வேடிக்கை பார்த்தான்.

பெண் பிள்ளை இல்லாத வீட்டில் பிச்சி வந்த பிறகு அவளைத் தான் பிள்ளையாக எண்ணி வளர்த்தனர் அங்காயி மற்றும் முனியாண்டி தம்பதியினர்.

முனியாண்டி அரவணைக்க வில்லையென்றால் தங்களின் நிலை கவலைக்கிடம் அதை மனதில் கொண்டு சிறு விடயமென்றாலும் முனியாண்டி ஆலோசனை இல்லாமல் பிச்சியின் தந்தை நடந்தது இல்லை ஆனால் இன்று காலை பிச்சியின் தந்தை தன்னைத் தேடி வந்து விடயத்தைச் சொல்லவும் மனிதன் பதறி விட்டார்.

கூடத்தில் பிச்சி தந்தையின் தூரத்து சொந்தமென்று ஒரு நான்கு பேர் இருந்தார்கள்.இரு சொட்டை ஒரு குட்டை என இரு வயதான ஆட்களும் ஒரு பெண்மணியும் இருந்தனர் அவர்களுக்கு அருகில் காண்டாமிருகத்திற்குச் சட்டை பேண்ட் போட்டது போல் ஒருவன்.

அவன் தான் பிச்சியைப் பெண் கேட்டு வந்துள்ளான் அதுவும் மறுமணம்.வீட்டினில் நுழையும் அந்த ஐந்து நிமிடத்தில் தனது மகனுக்குத் தகவல் சொல்லி கொண்டே வந்தார் முனியாண்டி.

முனியாண்டியின் பதட்டத்தைப் பார்த்த முத்துவிற்குப் பிச்சியின் மேல் கோபமாக வந்தது ஏற்கனவே வேம்புவை வெளியில் கொடுத்து அவள் வாழ்ந்த கதை தான் தெரியுமே சொல்ல முடியாத ரணம் அது இவர்கள் மூவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

பிச்சியும் அதே போல் கொடுக்கப் பயம் கொண்டு தன்னுடனே வைத்து கொள்ள முத்துவிற்குப் வைக்க யோசிக்க அதற்குள் பிச்சி இப்படி ஒரு பஞ்சாயத்தை இழுத்து வைத்து விட்டாள்.

“யார் செய்தி சொல்லி வந்தாங்க பெரியப்பா” நடந்து கொண்டே முத்து கேட்க அவரும் அவன் பின்னே சென்று கொண்டே பதில் அளித்தார்

“எல்லாம் பிச்சி பண்ண வேலை தான் …. அவ தான் வந்து பொண்ணு கேளுங்கன்னு அந்தப் பையனுக்குப் போன் போட்டு செய்தி சொல்லி இருக்கு என்ன கேட்டாலும் வாயே திறக்க மாட்டேங்குது அங்க உன் பெரியாத்தா ஒப்பாரி வச்சுக்கிட்டு இருக்கா என்னனு பாரு வெரசா முடி எசக்கி அவனுகள பார்த்தா பத்திகிட்டு வருது”

“சரி பெரியப்பா நான் முதல அவகிட்ட பேசிட்டு வரேன்” தனது பெரியப்பனிடம் சொன்னவன் வேகமாகப் பின் கட்டுக்கு சென்றான் அங்கே ஓங்கி உயர்ந்து நின்று இருக்கும் தென்னை மரத்தை வெறித்துக் கொண்டு இருந்தாள் பிச்சி.

நினைவு நேற்றைய இரவில் தொக்கி நின்றது வெகு நேரம் அவளிடம் சண்டை பிடித்தவன் இறுதியில் திருமணம் செய்ய முடியாது என்ற முத்துவின் பேச்சில் கோபம் கொண்டவள் நீண்ட நாளாக இரண்டாம் தரமாகத் தன்னைத் திருமணம் செய்யக் கேட்ட அந்த உறவை அழைத்து விட்டாள் அவர்களும் தட்டை தூக்கி கொண்டு வந்துவிட்டார்கள்.

கோபமாக அவளைத் திருப்பிய முத்து "ஏய் எம்புட்டு திமிரு இருந்தா இந்த வேலை பார்த்து இருப்ப நீ”

முத்துவை பார்த்து ஆத்திரம் பொங்க “என்னதான் வேணான்னு சொல்லிப்புட்டீங்கள அப்புறம் என்ன.... நான் எங்க அப்பன் ஆத்தாளுக்காகக் கண்ணாலம் பண்ணித் தானே ஆகணும் எங்க வசதிக்கு…….” மேற் கொண்டு பேச போனவளது கைகளை இறுக்கமாகப் பற்றியவன்.

“ஏற்கனவே புத்தி கெட்ட சிறுக்கி ஒருத்தி பண்ண காரியத்துல அவ வாழ்க்கையைத் தொலைச்சுப்புட்டு நிக்கிறா இப்போ நீயுமா?அவளைப் பார்த்தும் உனக்குப் புத்தி வரல ஹ்ம்ம்…..மரியாதையா நீயே போய் அவனுங்கள பத்திவிற்று இல்ல அம்புட்டுதான்” முடியாது என்பது போல் அழுத்தமாக நிற்க.

பொறுத்து பொறுத்து பார்த்தவன் அவள் அசைவது போல் தெரியவில்லை என்றதும் ‘திமிரு திமிரு உடம்பு முழுக்கத் திமிரு ஒரு பொம்பள புள்ளயாவது சொன்னதைக் கேட்குதானு பார் அம்புட்டும் விஷச் செடி ….’ அவளிடம் தனது ஜம்பம் பழிக்காதென்று சென்று விட்டான் (வேற வழி)

*******************************************

பிச்சியிடம் சண்டையிட்டவன் நேராக முற்றத்தில் போட பட்ட நாற்காலியில் கொஞ்சம் அமத்தலாக அமர்ந்து கொண்டு “அப்புறம் பெரியவங்க எதுக்கு வந்து இருக்கீங்க” ஒன்றும் அறியாதவன் போல் கேட்டு வைக்க அவனது தோரணையைப் பார்த்த நால்வரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

அதில் ஒருவர் “தம்பி பிச்சி தான் கண்ணாலம் பேச வர சொல்லுச்சு”

“ஒரு சின்னப் பொண்ணு வார்த்தைய நம்பி வந்து இருக்கீங்க எங்க மாமனோ இல்ல ஐத்தயோ கூப்புட்டதேன் மறுவாத” அந்த கண்டா மிருகத்திற்குக் கோபம் வந்து விட்டது

“என்ன விளையாட்டு இது? வர சொல்லுங்க உங்க பொண்ண என்றவன் பொறுமையற்று பிச்சி… ஏ! புள்ள பிச்சி கோபமாகப் பின்கட்டை நோக்கி குரல் கொடுக்க”

என்ன பெரு வச்சவன் மாதிரி கூப்பிடுறேன் கோபம் கண்ணை மறைக்க “என்ன மாப்புள்ள சவுண்ட் ஓவரால இருக்கு அவ வரமாட்டா வர வைகாசி மாசம் எனக்கும் பிச்சிக்கும் கண்ணாலம் முடிவு பண்ணியாச்சு பூவும் வச்சாச்சு”

“அப்புறம் என்ன தேவைக்கு எங்களுக்குப் போனை போட்டுச்சு உங்க பொண்ணு” எகிறி கொண்டு வர அதன் பின் கார சாரமாகக் கோப வார்த்தைகள் உச்சத்தைத் தொட வந்தவர்கள் கோபமாகக் கத்தினார்கள்

“என்ன முனிசாமி என்கிட்ட எதிர்த்து பேசுற அளவுக்குப் பயம் விட்டு போச்சா” அவர்களது மிரட்டல் கண்டு முனியாண்டி மீசையை முறுக்கியவாறு கேட்க

ஐயா! பிச்சி புள்ள மேல தானுங்க தப்பு... நாங்க என்ன பண்ணுனோம் அதான் பையன் கோபப் படுறான்.

“சரிதான் தப்பு எங்க மேல தான் புள்ள தெரியாம பண்ணிடுச்சு கிளம்புங்க” அவரை எதிர்த்து பேச முடியாமல் சிறு முணு முணுப்புடன் சென்றனர் அந்த கண்டாமிருகம் கொஞ்சம் உறுமிவிட்டு தான் சென்றது.

அங்கு ஓர் அசாத்திய மௌனம் பின் கட்டில் சீயான் பிச்சியின் கை பற்றி அவளுக்கு ஆறுதல் சொல்லி கொண்டு இருந்தான்.

“அண்ணே நீ தேதியை குறி என்ன அஞ்சு புள்ள” (பிச்சியின் தாயை அப்படித்தான் கூப்பிடுவார் வீராயி) “சொல்லுங்க மதனி”

“உன் பொண்ண குடுப்பியா மாட்டியா”

ஐயோ! என்ன மதனி நீங்க முத்து தான் எங்க மாப்பிள்ள ஏங்க சொல்லுங்க கணவனையும் துணைக்கு அழைத்தார் அவரும்,

“உனக்கு இல்லாததா வீராயி மச்சான் தேதியை குறீங்க கண்ணாலம் வேலைய பார்க்கலாம்” அவசரமாகத் தனது வீட்டுக்கு சென்ற முனியாண்டி அங்காயி அழைத்துக் கொண்டு வந்தார் முகம் முழுக்கப் புன்னகையுடன் அனைவரும் சேர்ந்து முத்து-பிச்சி மற்றும் சீயான்-வேம்பு திருமணத்தை உறுதி செய்தனர்.

இனியும் காலம் கடந்தால் ஒன்று மாற்றி ஒன்று அணி வகுத்து தாக்கும்.இனி ஓர் இழப்பை அவர்களால் தாங்க முடியாது ஒருவாராக அனைவரும் திருமண நாள் முடிவு செய்து, பொன்னுரங்கத்திடமும் சொல்லி, எத்தனை விரைவாக முடியுமோ இத்திருமணத்தை நடத்திட வேண்டும் என்று செயல் பட்டனர் சூடு கண்ட பூனையின் நிலையில் அவர்கள்.

*********************************************

சீயானின் தோட்டத்து வீடு……

இரவில் தோட்டத்து வீட்டில் முத்து சீயானிடம் சண்டை போட்டுக் கொண்டு இருந்தான்.

“எம்புட்டுத் தைரியம் பார்த்தியாடா எல்லாம் நீ கொடுக்கிற இடம் அதான் இரண்டு பேரும் இந்த ஆட்டம் போடறாளுக”

“டேய் முத்து விடுடா பாவம் பாப்பா பயந்து போய்டுச்சு”

“எந்த பாப்பா சாமி பயந்துச்சு…… அந்தப் பாப்பாக்கு ஒரு இருபது வயசு இருக்குமா........ டேய் அவ பாப்பாவா ராட்சசி டா”

“திட்டதடா பாப்பாவ உன் மேல உசுரையே வச்சு இருக்காடா நீ இல்லனா அம்புட்டு தான் உன்ன ரொம்பப் புடிக்கும்”

“இது என்னடா புது கதை சொல்லுற” நெஞ்சை பிடித்துக் கொண்டான் முத்து உண்மையில் அவனுக்கு அதிர்ச்சி தான் நினைவு தெரிந்த நாளில் இருந்து தன்னுடன் மல்லுக்கு நிற்கும் அவள் காதல் கொண்டாள் என்றால் யார் நம்புவது.

ஒரு நாள் கூடப் பாசமான பார்வையோ மென்மையான நடத்தையோ இருவரிடமும் இருந்ததில்லை பார்க்கும் போதெல்லாம் அடிதடி வெட்டு குத்து என்று ரணகளம் தான்.இப்போது காதல் என்றால் அவனும் என்ன தான் செய்வான்

முத்து மீண்டும் நம்ப முடியாமல் “என்னடா சொல்லுற”

“ஆமாடா பங்காளி டீச்சர் உங்கிட்ட வந்து லவ் சொன்னுச்சாமே அன்னைக்கே பாப்பா வந்து என்கிட்ட சொல்லிடுச்சு எனக்கே அதிர்ச்சி தான்”

“டேய் நீயாவது சொல்லி இருக்கலாமே பாவம்டா அந்த டீச்சர் ரவுடி மிரட்டி ஓட விட்டுட்டா”

முத்துவை முறைத்தவன் “ நான் பாப்பாவை பத்தி பேசிகிட்டு இருக்கேன்”

“சரி!... சரி!..... கோவப்படாதடா ஓர் நாளும் என்கிட்ட அந்த மாதிரி பேசினது இல்லடா செத்த இரு அந்த சண்டி ராணிக்கிட்ட பேசிட்டு வரேன்” என்றவன் போனை தூக்கி கொண்டு ஓட சீயானும் சிரித்தவாறே தனது கிளியை தேடி பிடிக்கப் போனான்.

அங்கு முத்துவின் அழைப்பை ஏற்ற பிச்சி பேசாமல் அமைதியாக இருந்தாள் ஹலோ!.

ஹ்ம்ம்…

ஹலோ...ஹலோ....

ஹ்ம்ம்… ஹ்ம்ம்……..

“ஏய் என்னடி லந்தா போனை எடுத்துப்புட்டு ஹ்ம்ம் சொல்லுற ஊமச்சிய நீ என்ன கோபப்படுத்தாத பிச்சி பேசு புள்ள”

அழுது கொண்டே ‘சொல்லுங்க’

“எதுக்குடி அழுது சாவுற எனக்கு எப்படி தெரியும் உனக்கு என்ன புடிக்குமுன்னு.எப்பப்பாரு வறுஞ்சு கட்டிக்கிட்டுச் சண்டைக்கு வரது அதான் கண்ணாலம் வேணான்னு சொன்னேன்”

“இப்ப மட்டும் என்ன பாசம் பொத்துக்கிட்டு வருது”

ஹாஹா.... முத்துவின் சிரிப்பிற்கு.

“சிரிச்சு மழுப்பாதீங்க மாமா”

மாமா வா! அடேய்! சீயான் சீக்கரம் வாடா நெஞ்சு வலிக்குது சொல்லி கொண்டே திரும்பிய முத்துக் கண்டது. ஒரு வித போதையில் போனை பார்த்துச் சிரித்துக் கொண்டு இருந்த சீயானை தான்.

“ஏன் மாமா கத்துறீங்க சீயான் மாமா தூங்கிடுச்சா”

“நல்ல தூங்குவனே உன் மாமே பைத்தியம் முத்தி போய் போனை பார்த்து பல்ல காட்டிக்கிட்டு இருக்கான்.வேம்பு புள்ள பேசிகிட்டு இருக்கும் போல.அதுங்கள விடுடி நீ சொல்லு மாமாவ எம்புட்டு புடிக்கும் என்னால இன்னும் நம்ப முடியல புள்ள”

“நேருல வாங்க மாமா நம்ப வைக்கிறேன் இறுக்கக் கட்டிக்கிட்டு”

ஆ!... என்று வாய் பிளந்தவன் அடியேய்! கண்ணாலத்துக்கு முன்னாடி என்ன புள்ள பேச்சு.அந்த புறம் உதட்டை சுளித்தவள் நீங்க என்ன எங்க அப்புச்சி காலத்துல இருக்கிற மாதிரி பேசுறீங்க காதல் பண்ணும் மாமா எத்தனை சினிமா பார்த்திருக்க நீ”

“அடி கழுதை தோள உரிச்சிபுடுவேன் உரிச்சு அடக்கமா இருடி”

“அவனா நீ”

“அடிங்க .....” அவன் சீற போனை அணைத்துவிட்டு சிரித்தாள் பல நாள் கனவு இன்று பளித்த சந்தோசம் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது. அவன் முகத்திலும் வெட்க சிரிப்பு தான் ராங்கி ரொம்ப ராங்கள பேசுறா கண்ணாலம் முடியட்டும் அப்புறம் இருக்கு.

இங்கு வேம்பு கோபமாகச் சீயானை திட்டி மெசேஜ் அனுப்பிக் கொண்டு இருந்தாள்.

‘என்னடி என்ன ஆச்சு’ ஆரம்பமே இப்படி தான் அனுப்பிவைத்தான் மொட்டையாக ஓர் செய்தி அதனை குழம்பி போன வேம்பு ‘என்ன மாமா ?என்ன ஆச்சு? ஒன்னுமில்லையே’

‘நான் பார்த்தேனே’

‘என்ன பார்த்தீங்க எப்போ பார்த்தீங்க’

‘எப்படி டி நடந்துச்சு பொண்டாட்டி’

‘எரிச்சலின் உச்சத்துக்குச் சென்றவள் நல்லாத்தானே இருக்கீங்க இல்ல சரக்கு எதுவும் போட்டு இருக்கீங்களா என்னனு புரியுற மாதிரி பேசமாட்டீங்களா’

‘அப்போ தெளி.....வா பேச சொல்லுற’ தெளிவில் அழுத்தம் கூடியதை அவள் கவனிக்கவில்லை போலும்

‘தயவு செஞ்சு தூங்குங்க காலைல பேசிக்கலாம் எனக்கு தலை வலி வந்துரும் போல’

‘சரி சரி தெளிவா பேசுறேன் உனக்கு எப்படி அங்கன தழும்பு” என்று குறிப்பிட்டு கேட்க

தனது அந்தரங்கத்தை பார்த்ததும் இல்லாமல் அவன் கேட்கவும் மரியாதை காற்றில் பறக்க “டேய்! பாண்டி உன்ன கொன்னுடுவேன் இனி மெசேஜ் போட்ட மவனே சங்கு தான்”

ஹா…. ஹா …..என்று சிரிக்கும் பொம்மையைப் பார்சல் பண்ணியவன்.பின்பு அந்தரங்கமான கேள்வி கேட்டு அதற்குப் பதிலும் அவனே அனுப்பினான்.உறைந்து நின்றாள் வேம்பு கண்ணில் இருந்து குருதி தான் வடிந்தது கடந்த காலத்தை மறக்க முடியாமல் அல்லாடினாள்.பெற்றவளுக்கே தெரியாத ரகசியம் உற்றவனுக்கு எப்படித் தெரியும் என்று அதிர்ந்து நின்றாள் பேதை

Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top