அத்தியாயம் - 4

Advertisement

dhanuja senthilkumar

Well-Known Member

கதம்பவனம் – 4
இன்று விடுமுறை என்பதால் அவ்வீட்டுப் பெண்கள் ராஜனிடம் தனித்துப் பேச தருணம் பார்த்துத் தனிமை கிடைக்கவும் அவனைக் கோழியாக அமுக்க அவனோ அவர்களைத் திண்டாட செய்தான்.அவனும் தான் நேரம் பார்த்தான் போலும் இத்திருமணத்தைப் பற்றிப் பேச வசமாகச் சீக்கினர் அரிவை பெண்கள்.

தனது அண்ணிகளிடம் குதித்துக் கொண்டு இருந்தான் “நீங்க பேச மாட்டீங்களா அண்ணி எனக்கு இந்த கல்யாணம் பிடிக்கலை…… அவ கிட்ட கொஞ்சம் தள்ளியே இருங்க அண்ணி இல்ல அவங்க அக்கா மாதிரி உங்கள தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விட்டுட்டு போய்கிட்டே இருப்பா எமகாதகி” அவனது பேச்சை ரசிக்காத சீதா.

“தம்பி அவ அவங்க அக்கா மாதிரி இல்ல சின்ன வயசுல இருந்து பார்க்கிறோம் எங்களுக்குத் தெரியாதா உங்களுக்கும் தெரியும் ஆனா நீங்க மாதங்கி அக்கா மேல உள்ள கோபத்தை இவ கிட்ட காட்டுறீங்க அவ இருக்கிற இடம் எப்போதும் கல கலப்பா இருக்கும்”

"ஆமா ஆமா கலக்கலப்பா தான் இருக்கும்" அவன் எதை நினைத்துச் சொல்லுகிறான் என்பதை அறிந்தவர்கள் அவனுக்கு எப்படிப் புரிய வைப்பது என்று தவித்துப் போனார்கள்

என்ன விடுங்க இவங்கள கவனிங்க என்றவன் தாமரையிடம் திரும்பியவன் “என்ன தான் நெனச்சுக்கிட்டு இருக்காரு உங்க வீட்டுக்காரு வீடுனு ஒன்னு இருக்குறது தெரியுமா? தெரியாத? நீங்களும் ஒன்னு கேட்கிறது இல்ல என்னதான் நடக்குது இந்த வீட்டுல வர வர வீட்டுக்கு வரவே புடிக்க மாட்டேங்குது"அவன் திருமணம் ஒரு புறம் அவனது அண்ணன் ஒருபுறம் என எரிச்சலில் இருந்தான் ராஜன்.

செல்வத்தை எண்ணி உள்ளம் குமுறியது அதுவும் நேற்று நடந்ததை எண்ணி அவன் தடை இறுகியது “அண்ணி போய் உங்களுக்கு அவசிய தேவைகள் என்னவோ அதைச் சிட்டை போட்டுக் கொண்டு வாங்க” ராஜன் சொல்லவே ஒரு நிமிடம் அதிர்ந்து தயங்கி நின்ற தாமரையை பார்த்து,

“அண்ணினா அம்மாக்கு சமம் அம்மாக்கு வாங்கிக் கொடுக்கிறது மகனுடைய கடமை நான் இப்போ உங்களுக்கு மகன் என்னோட கடமையை செய்றேன்" அவன் அழுத்தி சொன்ன விதத்தில் அதற்கு மேல் யோசிக்காமல் உதடு துடிக்க அழுதுக் கொண்டே உள்ளே சென்றாள் தாமரை இதற்கு மேலும் மறுக்க முடியுமா என்ன.
.
ராஜனின் கோபத்திற்குக் காரணம் புரியாமல் அமுதா பதறியவரே “என்ன ஆச்சு தம்பி ஏன் தாமரை..?” பதற்றம் அதற்கு மேல் பேச முடியவில்லை.

என்ன? ஏன்? என்ன கேளுங்க அண்ணி நீங்களும் வீட்டுல தானே இருக்கீங்க அதுவும் எங்க அப்பா அம்மாவை நெனச்சா இன்னும் கோபம் வருது எங்க அவங்க? இவனது கூச்சலில் அங்கே வந்தனர் பெரியவர்கள் இருவரும். என்ன என்பது போல் சுந்தரம் பார்க்க அவரது பார்வையை அலட்சியம் செய்தவன்.

“வீட்டுல என்ன நடக்குதுன்னு பார்க்காம திண்ணையில உட்காந்து ஊர் வம்பு இழுக்கிறது என்றவன் தனது அண்ணிகளிடம் திரும்பியவன் எங்க அம்மாவும்,நீங்களும் சமையல் கட்டுலையே குடி இருங்க அப்புறம் எப்படி வீட்டுல நடக்குறது தெரியும்” சுந்தரமும்,பங்கஜமும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

பின்பு மெல்லிய குரலில் “என்னடி உன் பையன் வேலைக்கி போறாங்கிற மேதப்பா... என்ன கேள்வி கேட்கிறான் இன்னும் அவனுக பின்னாடியே சுத்த முடியுமா? துரை ரொம்பத் துள்ளறாரு"

“அதை கொஞ்சம் சத்தமா பேசுறது” பங்கஜம் ஒற்றைப் புருவத்தைத் தூக்கி சொல்ல என்ன அதிசயம் சுந்தரம் வாய் பசை போட்டது போல ஒட்டி கொண்டது.வீரமெல்லாம் மூன்று மகன்களிடம் மட்டும் தான் செல்வத்திடமும்,ராஜனிடத்திலும் செல்லாது தனது இயலாமையை எண்ணி மனைவியை முறைத்தார்.

தனது தாயிடம் தந்தை குனிந்து பேசுவதைப் கோபமாக பார்த்தவன் இவரை பல்லை கடித்தவன் “இத்தனை ஆம்புளைங்க இருக்கிற வீட்டுல ஒரு பொண்ணுக்கு தேவையான பொருளை வாங்கித் தர முடியல. ஒரு 20 காசு தலை வலி மாத்திரைக்கும், ஒரு ரூபா சோப்புக்கும் அண்ணி கடை வாசலை பார்த்துட்டு நிற்கிறாங்க கடன் கேட்க" அவன் சொல்லவே சுந்தரம் அதிர்ந்து பார்க்க பங்கஜம் பதறி போனார்.

அனைவரது பார்வையும் தாமரையின் மீது விழ கண்ணீர் மல்க குனிந்து நின்றாள் பெண் பங்கஜம் பதறி கொண்டு "என்னடா சொல்லுற" என்க தாயின் கலக்கத்தைப் பார்த்தவன் சற்று கோபம் தணிந்து “ஆமாம்மா நேத்து அண்ணிக்கு ரொம்பத் தலைவலி போல நம்ம கிட்ட கேட்க சங்கட பட்டுக்கிட்டு கடையில நின்னுட்டு இருந்துருக்காங்க.

நம்ம விஜி பார்த்துட்டான்னு பயந்து வந்துட்டாங்க .அவ போய் என்னனு கேட்க சொல்ல சங்கடப்பட்டுச் சொல்லாம இருந்திருக்காங்க அவ நேர போய்க் கடையில கேட்டுட்டா.என்ன வயசும்மா அவங்களுக்கு எங்களை விட ஒரு வயசு தான் கூட அண்ணா என்னதான் பண்ணுறான்" கோபத்தில் தொடங்கிய உரையாடல் ஆதங்கத்தில் முடிந்தது.

யார் என்ன சொல்லுவது அனைவருக்கும் தர்ம சங்கடமான நிலை “அம்மா பெரிய அண்ணி காசுல தானே வாங்க கூடாது.நான் சம்பாரிக்கிறேன் நான் வாங்கித் தருவேன் அண்ணிக்கு யார் என்ன கேட்க முடியும். நான் அவங்களுக்கு பார்த்து பார்த்து செஞ்சாலும் அண்ணா செய்யுற மாதிரி வராது நீங்க அண்ணாகிட்ட பேசுங்க” சொல்லியவன் அவனது அறைக்கு விரைந்தான்.

அவன் பொறிந்துவிட்டு செல்லவே “என்னடி நடக்குது இந்த வீட்டுல" சுந்தரம் எகிற பங்கஜம் கலக்கமாக பார்த்தார் அதனைப் பொருட்படுத்தாமல் சீதாவை அழைத்தவர் “தாமரை அப்பாவ போன் போட்டு வர சொல்லு அந்த புள்ள அவங்க அப்பனோட போய் நிம்மதியா இருந்துட்டு வரட்டும் இது உன் மகனுக்கு தெரிய வேண்டாம் பங்கஜம் "

அவரது பேச்சில் பதறிய பங்கஜம் “என்னங்க இது”

“சொன்னதை செய் பங்கு" அந்த நிலையிலும் மனைவியை ஆறுதலாக பார்த்தவர் மென்மையாகச் சொல்ல மறுப்பேது அந்த மங்கையிடம் அவரும் தலையை ஆட்டினார் சொக்கனின் மீனாட்சியாக.

செல்வத்திற்கு நடப்பது எதுவும் தெரியாது அவனது குறிக்கோள் எல்லாம் வருவாய் முன்னேற்றம் மட்டுமே வாழ்க்கையில் வருவாய் என்பது ஒர் அங்கம்,பசி, தூக்கம் என்பது போல்.அதுவே வாழ்க்கை இல்லையே அதனை அறியாது அவன் ஓடி கொண்டு இருந்தான் யாருக்காக இந்த ஓட்டமோ?

ஆனால் யாரும் அறியாது ஒன்று என்றால் தாமரையின் மேல் இருக்கும் முரட்டு தனமான காதல் தான் மனைவிக்கு செய்ய வேண்டும் அதற்கு முன்னேற வேண்டும்.அதை அவளே அறியவில்லை அவனும் அறியவிடவில்லை.அவன் இத்தனை வெறியாக உழைப்பதற்குக் காரணம் அதுவே.

சோர்ந்து போய்த் திண்ணையில் அமர்ந்தார் சுந்தரம் அவர் மனதில் அவரது தந்தை சொன்னது தான் நியாபகம் வந்தது. இரண்டு கை தட்டினால் தான் ஓசை குடும்பத்தில் இருக்கும் அனைவரும் அரவணைத்தால் தான் வாழ்க்கை.அது அறியாது பிள்ளைகள் அடிக்கும் கூத்தில் மனம் உடைந்து போனார்.

காலம் என்ன கோலம் செய்யும் என்பதைப் பார்ப்போம்……
**************************************
ஒரு வாரம் கழித்து வீட்டுக்கு வந்த செல்வம் முதலில் தேடியது தனது மனைவியைத் தான் அனைவரும் அவன் கண்கள் அலைபாய்வதைப் பார்த்தாலும்.அவனைக் கண்டுகொள்ளவில்லை சுந்தரம் அவன் அடிக்கும் கூத்தை பார்த்து தான் இருந்தார் வீட்டை சுற்றி சுற்றி வந்தவன் ஒரு நிலைக்கு மேல் பொறுக்க முடியாமல் தனது தாயிடம் போய் நின்றான்.

மூன்று அண்ணிகளும் இருப்பதைப் பார்த்து சற்று தயங்கியவன் பின்பு அதனை விடுத்து அம்மா! தாமரை எங்க? கடைக்கு எதுவும் போயிருக்களா? அவன் கேட்கவே கோபமாக அவனைப் பார்த்தவர் பதில் சொல்லாமல் தனது வேலையைப் பார்க்க தொடங்கி விட்டார்.

அதில் கடுப்பான செல்வம் திண்ணையில் போய் அமர்ந்து கொண்டான் தந்தையின் முகத்தைப் பார்ப்பதும் பின்பு வேடிக்கை பார்ப்பதுமாக இருந்தவனை பார்த்தும் பார்க்காதது போல் இருந்து கொண்டார் சுந்தரம்.

“காதுல எதையுமே வாங்காத மாதிரி உட்காந்து இருக்கார் பார் இவ எங்க போய்த் தொலைஞ்சா” தனது தந்தையை கடிந்தவன் சற்று சத்தமாவே புலம்ப அவனை தாக்க தக்க தரணும் பார்த்துக் கொண்டிருந்த மனிதர் பொங்கிவிட்டார் நெடு நாள் கோபத்தைச் சேர்த்து வைத்து கொட்ட தொடங்கி விட்டார்.

"ஓ…..ஐயாவுக்கு இப்போ தான் பொண்டாட்டிய கண்ணனுக்குத் தெரியுதோ அந்த புள்ள இருக்கா?இல்லையா? எதாவது அதுக்கு வேணுமா? உடம்பு எதுவும் சரியில்லையா? மூணு வேலையும் ஒழுங்கா சாப்புடுதா? இது எல்லாம் தெரியுமாடா உனக்கு,

நீ ஆடிக்கு ஒரு தரம் அம்மாவாசைக்கு ஒரு தரம் வருவ அந்த புள்ள உனக்குப் பணிவிடை பண்ணனுமா எதுக்கு அந்த புள்ளைக்கு இப்படி ஒரு வாழ்க்கை அவங்க அப்பன் என்ன சோத்துக்கு வழி இல்லாமையே கட்டி கொடுத்தான். அந்தப் புள்ள அதான் அவன் அப்பன் கூட இருக்கட்டும் வீட்டுக்கு அனுப்பிட்டேன்” அலுங்காமல் குண்டை தூக்கி போட

தந்தையின் கோபம் அதிர்ச்சியென்றால் அடுத்து அவர் சொன்னவை அதிர்ச்சியின் உச்சம் அவரது செயலில் கோபம் பொங்க சண்டைக்கு நின்றான் “யாரைக்கேட்டு என் பொண்டாட்டிய அனுப்புனீங்க” வரிந்து கட்டி கொண்டு வந்த மகனை பொறுமையாக ஏறிட்டவர்.

“யாரை கேட்கணும் இல்ல அவளுக்குனு பேச இங்க யாரு இருக்கா? நீ அவ புருஷன்னு எனக்கு அப்போ அப்போ மறந்துடுது செல்வம்" இதை விட அவனது தப்பை சுட்டி காட்ட முடியுமா என்ன துடித்துப் போனான் செல்வம்

அப்பா!..அவனது அழைப்பை புறக்கணித்தவர் “நேத்து என்ன நடந்தது தெரியுமா உனக்கு " என்று அனைத்தையும் சொல்லி முடித்தவர்,
“அசிங்கமா இருக்குடா இத்தனை தடி பசங்க இருந்தும் இந்த வீட்டுக்கு வாழ வந்த பொண்ணோட நிலைமையைப் பார்த்தியா? ஆமா நீ ஓடி ஓடி யாருக்கு உழைக்குற? வேற ஏதும்…”

அவர் முடிபதற்குள் அப்…பா! என்று அலறியவன் அவளை தவிர்த்து எனக்கு எதுவுமில்ல கல்யாணம் முடிச்சதுமே மாதங்கி அண்ணி என்ன ரொம்பப் பேசிட்டாங்க.என் பொண்டாட்டிக்கும் இந்த வீட்டுல மரியாதை இருக்கணும். அதுக்கு நான் நிறையச் சம்பாரிக்கணும் அதான் ஓடுறேன்.ஆனா அவளைத் தொலைச்சுட்டு தான் இந்தக் காசு எனக்கு கிடைக்கும்னா அந்தக் காசே வேணாம்ப்பா”

செல்வத்தின் பேச்சில் தனது வளர்ப்புச் சோடை போகுமா என்ன பெருமையாக மீசையை நீவிவிட்ட சுந்தரம் “அப்போ நீயே போய்க் கூட்டிடுவா இனி அந்த பொண்ண பத்திரமா பாத்துக்க முடியுமான மட்டும் அங்க போ" என்று சொல்லியவர் துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு நடந்தார் என்ன நினைத்தாரோ பின்பு மீண்டும் வந்து “அந்த புள்ள உன்கிட்ட சொல்லிக்காம போகமாட்டேனு அடம் புடுச்சுது நாந்தான் தீட்டி அனுப்பி வச்சேன் அவளை திட்டி புடாத பாவம் புள்ள உன்ன மேல பயந்து கெடக்கு"

அவனுக்கு அவள் சொல்லாமல் போனது கோபத்தைக் கொடுத்தது அவளை பார்த்தவுடன் சண்டை பிடிக்க தான் எண்ணினான் ஆனால் தன்னை அறிந்து கொண்டு பேசிய தந்தையை எண்ணி சிரிப்பு தான் வந்தது.அது சரி இத்தனை வருட குடும்ப வாழ்க்கையில் எத்தனை விதமான சம்பவங்களைச் சந்தித்திருப்பார் அது கற்று கொடுத்த பாடம் அதுமட்டுமா தனது குடும்பம் என்று வாழ்பவர் அல்லவா அதான் எல்லோர் மனதையும் படித்து வைத்திருந்தார்.

அதன் பின் சிறிதும் தாமதிக்காமல் குளித்துக் கெளம்பி விட்டான் உணவு கூட உண்ணவில்லை அவனது வேகத்தைப் பார்த்து அமுதாவும்,சீதாவும் சிரித்துக் கொண்டனர்.

மாதங்கி தான் ஓர் உதட்டு சுளிப்போடு நகர்ந்து கொண்டாள் பங்கஜத்திற்கு இப்போது தான் நிம்மதியாக இருந்தது தனது கணவனின் கணிப்பை எண்ணி அவர்க்கு அத்தனைக் காதல் தனது கணவன் எப்போதுடா நகர்வலம் முடிந்து வருவார் என்று காத்துக் கிடந்தார் அந்த சொக்கனின் மீனாட்சி.
*****************************************************
அந்தி சாயும் வேளையில் தான் செல்வம் தாமரையின் பிறந்தகம் வந்தான் அவனைத் தூரத்தில் இருந்தே பார்த்துவிட்டார் தாமரையின் தந்தை தனது வயதையும் மீறி ஓடி வந்து வரவேற்றார் அவருக்கும் தனது மாப்பிள்ளையின் மேல் தனிப் பிரியம் போலும்.

அவர் அழைக்கவே இரவு உணவை தயார் செய்து கொண்டு இருந்த தாமரை அடித்துப் பிடித்து ஓடி வந்தாள்.அவளது வரவை உணர்ந்து அவன் அவளைப் பார்க்க அந்தப் பார்வையில் பயந்து தான் போனாள் பெண்.அந்த முரட்டு காளை காதலாகப் பார்க்க மென்மையான தாமரையோ கண்ணில் நீருடன் தன்னை மறைத்து கொண்டது.

அவளது செய்கை சிரிப்பை தான் கொடுத்தது திருமணம் ஆகி வருடங்கள் ஆனாலும் தன்னைப் பார்த்து பயம் கொள்ளும் மனைவி மீது மயக்கம் அதிகம் அந்தக் கள்வனுக்கு.

பாப்பா! மாப்பிள்ளை வந்து இருக்கார் பார் தனது தந்தையின் குரலை கேட்டு வெளியில் வந்தவள் “வாங்க” என்று அழைத்துத் தண்ணீர் கொடுத்தாள் நடுக்கம் கொண்ட அவளது கையை இறுக்கப் பற்றி வாங்கிக் கொண்டான் கையை இறுக்கப் பற்றி வாங்கியவன் நிதானமாகக் குடித்தான்.

பின்பு அவளது தந்தை கூடப் பேச ஆரம்பித்து விட்டான் அவள் தான் குழம்பி போனால் "இவரு பேசுறது பார்த்தா இன்னக்கி ஊருக்கு போற மாதிரி தெரியலையே செம கோபமா இருக்கார் போல போச்சுடி தாமரை மாமா சொன்னதைக் கேட்டு வந்ததுக்கு நல்ல வாங்கப் போற.இதுவரைக்கும் கை நீட்டுனது இல்ல அது இன்னைக்கு நடந்துடும் போல" தனக்குள் பேசுவதாக எண்ணி சத்தமாகவே புலம்பி கொண்டு சமையலை முடித்தாள்.

இரவு உணவை தந்தைக்கும்,கணவனுக்கும் பரிமாறியவள் அவளும் உண்டு திண்ணையில் தனது தந்தைக்குப் பாய் விரித்து உள் அறைக்குள் செல்ல பயந்து கொண்டே வெளியில் நின்றாள்.திட்டினாலும் தாங்க முடியாது அடித்தாலும் தாங்க முடியாது வெளியில் படுத்தால் தனது தந்தைக்குப் பதில் சொல்ல வேண்டும் என்னடா கொடுமை இது.

சுந்தரம் வெறும் ஓய்வுக்கு மட்டுமே தன்னை அனுப்பி வைத்திருக்கிறார் என்று தான் தாமரையின் தந்தையின் நினைப்பு அதை வெளிக்காட்டாது நடந்து கொள்ள வேண்டும்.

ஊரில் உள்ள அத்தனை தெய்வங்களையும் வேண்டி கொண்டு உள்ளே சென்றாள் அவளை பார்த்த வாறே கட்டிலில் படுத்தவன் ஒரு கையை நீட்டி வா என்று அழைக்க முழித்துக் கொண்டே வந்தாள்

வந்தவளை அன்று போல் இன்றும் வலிக்க அனைத்து அவன் காதில் இவன் அந்தரங்கமாக எதுவோ சொல்ல அதிரிச்சியில் கை கால்கள் எல்லாம் சில்லிட்டது புரியாத மொழி பேசியது போல் முழித்த மனைவியை ஆசையாக அனைத்து உறங்கி போனான் செல்வம்.

அவள் தூக்கத்தை பறித்து விட்டு சுகமாக அவளது மார்பில் துயில் கொண்டான் அந்த தூயவன். ஐயோ என்ன இப்படிப் பேசுறார் கலக்கம் கொண்டு விடிய விடிய முழித்திருந்தால் அவனது வருகை அதிரிச்சி என்றல் அவன் இருப்பு இன்னும் அதிர்ச்சி அதை விட அதிர்ச்சி அவன் பேசிய அந்தரங்கம் ஒரே நாளில் அனைத்து அதிர்ச்சியும் தாக்க என்ன செய்யும் இந்தப் பேதை.

மறுநாளே அவளது தந்தையிடம் விடை பெற்று அவளை அழைத்துச் சென்று விட்டான்.அவளுக்குத் தான் பயமாக இருந்தது இன்னும் அவன் சொன்னதை நம்ப முடியவில்லை வீட்டிக்கு வரும் வரை ஒரு வார்த்தை அவளிடம் பேசவில்லை திண்ணையில் வழக்கம் போல் கால் நீட்டி தினசரி படித்துக் கொண்டு இருக்கும் மாமனாரை பார்த்தவள் அவரிடம் வந்து நின்றாள் செல்வம் உள்ளே சென்றுவிட்டான்.

அவன் சென்றதை உறுதி செய்து கொண்டவள் தனது மாமனாரை முறைத்து வைத்தாள் முதல் முதலில் தன்னை நேர் கொண்டு பார்த்து முறைக்கும் மருமகளைப் பார்த்துச் சுந்தரத்திற்கு ஏக குஷி (நல்ல மாமனார் ) “என்னம்மா ஒரு நாள் தானே என்ன பார்க்கல அதுக்கு இப்படிய பார்ப்ப" அவரது கேலியில் இன்னும் கோபம் ஆனவள்,

"விளையாடாதீங்க மாமா நான் அப்பவே சொன்னேன் போக மாட்டேன்னு பாருங்க அவரு கோபமா இருக்காரு"

“கோபமா இருந்தா அதுக்கெல்லாம் என்னால பயந்துக்க முடியுமா போமா” அசால்ட்டாக அவர் திரும்பப் பேப்பர் படிக்க அதற்கு மேல் அவளுக்குக் கோபத்தைக் காட்ட தெரியவில்லை பாவம்.

அவரைத் திரும்பி திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றாள் அவள் பார்ப்பதை உணர்ந்தாலும் அவர் பார்க்கவில்லை இனி செல்வம் பார்த்து கொள்வான் என்ற நம்பிக்கை அவர்க்கு வலுத்தது அதில் நிம்மதி பெருமூச்சை விட,

அவரது மனசாட்சியோ “அடேய் சுந்தரா இன்னும் இளைய காளை ஒன்னு இருக்கு நினைவில் கொள் செல்வமாவது யோசிப்பான் ராஜன் ஹ்ம்ம்..... ஆனால் என் மருமகள் சமாளித்து விடுவாள் விமலாவின் மேல் உள்ள நம்பிக்கையில் சற்றுத் தணிந்தார்”

வீட்டில் இருக்கும் சின்னச் சின்னப் பூசல்கள் பெரிய விரிசலாக விடாமல் இருக்க அவ்வீட்டை கட்டியவன் பார்த்து பார்த்து செய்யும் ஏற்பாட்டைத் தான் சுந்தரமும் செய்து கொண்டு இருந்தார் பார்ப்போம் அவரது நம்பிக்கை பொய்க்குமா வலுப்பெறுமா என்று…
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top