அத்தியாயம் -15 இறுதி

Advertisement

dhanuja senthilkumar

Well-Known Member
கதம்பவனம் -15
ஒன்பது மாதங்கள் கடந்த நிலையில்……….

“மாதங்கி அக்கா எல்லாரும் வந்துட்டாங்க அத்தைய வந்து வளையல் போட சொல்லுங்க”

“இதோ” என்ற மாதங்கி பங்கஜத்தை அழைக்கச் செல்ல அதற்குள் கையில் வளையல் தட்டுடன் வந்தார் பங்கஜம்”

“நீங்களே வந்துடீங்களா சீக்கரம் வாங்க அத்தை நல்ல நேரம் தொடங்கியாச்சு”

“வரேன் நீ தான் மூத்த மருமக வளையல் நீ போடு மாதங்கி” என்றவர் கையில் அழகான தங்க வளையில்

மகிழ்ச்சி பொங்க அதனை வாங்கிய மாதங்கி “என்ன அத்தை எனக்குப் போட்ட மாதிரியே இருக்கு”

“எல்லாம் மருமகளுக்கும் ஒரே மாதிரி தான் செஞ்சு இருக்கேன் விஜிக்கும் தான்” என்றவர்கள் பேசி கொண்டே நடுக் கூடத்திற்கு வர அங்கே ஒரே நிறத்தில் சேலை கட்டி விமலாவும் தாமரையும் அமர்ந்திருந்தனர் ஆம் இன்று இருவருக்கும் வளைகாப்பு இரு பெண்களும் ஜொலிக்கக் கணவன் மார்கள் கண்களால் அவர்களை விழுங்கி கொண்டு இருந்தனர்.

“என்ன கொழுந்து முகமெல்லாம் ஜொலிக்குது என்ன சங்கதி” சீதா ராஜனை வழமை போல் வம்பு செய்ய

“அண்ணி உங்களுக்கு எதுவும் வேலை இல்லையா”

“இல்ல இல்ல இது தான் முக்கியமான வேலை சொல்லுங்க என்ன பவுடர் போடீங்க”

“அதை ஏன் கொழுந்து கிட்ட கேக்குற சீதா என்கிட்ட கேளு” என்றவாறே வந்த அமுதா ஜோதியில் கலக்க

“உங்களுக்குத் தெரியுமா அமுதாக்கா”

ஓ!......... தெரியுமே ராஜன் தம்பி விமலா ‘னு’ ஒரு பிராண்ட் போடுறாரு”

“அப்போ செல்வம் தம்பி தாமரை பிராண்…. டா”

“சரியா புடுச்சா சீதா” இரு பெண்களும் கல கலத்து சிரிக்க”

ராஜன் தோரணையாக நிற்க செல்வம் சற்று நெளிந்து கொண்டே “அதெல்லாம் இல்லங்க அண்ணி” என்றவன் கண் இமைக்கும் நேரத்தில கம்பியை நீட்டினான் அவனது ஓட்டத்தைப் பார்த்துப் பெண்கள் மேலும் சிரிக்க

ராஜன் “அப்….பா… சுந்தரம் வீட்டு பொண்ணுக ஒன்னு சேர்ந்தா ஒரே கலாட்டானு ஊரே பேசும் பொது நம்பல ஆனா இப்போ புரியுது அது உண்மைன்னு”

ஏய்!.......... என்ற கூவலோடு அமுதா அடிப்பது போல் வர ஓடியே விட்டான் ராஜன். இவர்களது கூத்தை கண்டும் காணாமல் ரசித்துக் கொண்டு இருந்தார் சுந்தரம்.மனிதர் முகத்தில் என்றும் இல்லாத நிறைவு புது வரவின் குதூகலம் ஒரு புறம் என்றால் மாதங்கி அனைவருடன் ஒன்றி நடப்பது மறு புறம்.
அது மட்டுமா அனைத்திலும் கணக்கு பார்க்கும் பெரிய மருமகள் தன்னுடைய ஒரே நாத்தனார் திருமணத்தை இரு மாதங்களுக்கு முன் ஊரே வியக்கும் அளவிற்குப் பெரும் பங்கு வகுத்து நடத்தி முடித்தது ஆச்சிரியத்தின் உச்சம் தான்.

இனி தனக்குப் பின் மாதங்கியும்,கண்ணனும் இக்குடும்பத்தின் நல்லவை அல்லவை தாங்கி நிற்பார்கள் என்ற நம்பிக்கை எழ அவரது மகிழ்ச்சியின் எல்லையை சொல்லவா வேண்டும்.

முழுதாக மாதங்கியின் குணம் மாறவில்லை என்றாலும் முன்னிருந்த விலகல் இல்லை அதுவே போதுமே அவர்களுக்கு.அவ்வப்போது துடுக்குப் பேச்சுக்கள் வந்தாலும் அதனை யாரும் பெரியதாகக் கண்டு கொள்ளவதில்லை அந்நேரம் விமலா அழகாக அவளைத் திசை திருப்பி விடுவாள் இதைத் தான் சுந்தரம் சொன்னாரோ அன்று?................ அவ்வப்போது பெண்கள் எண்ணுவது உண்டு.

வளைகாப்பு முடிந்து சொந்தங்கள் அனைவரும் விடை பெற தாமரை - செல்வம் மற்றும் ராஜன் - விமலா ஜோடிகள் பெண்களின் பிறந்தகம் சென்றனர் முதல் குழந்தை என்றதால் பிள்ளைகள் தடுமாறி நிற்பதை கண்டு நல்ல தந்தையாக அவர்களுக்குக் கை கொடுத்தார் சுந்தரம்.சிறுது நேரம் பேசிவிட்டு அனைவருக்கும் விடை கொடுத்து மாதங்கி,சீதா மற்றும் அமுதா உண்ண அமர பரிமாறினார் பங்கஜம்.

அனைவரும் உண்டு மீண்டும் ஒரு முறை அனைத்தையும் கழுவி சுத்தம் செய்து சிறிது நேரம் பேசி கொண்டு இருக்க மாலை நேரம் தொடங்கியது.

வாடிக்கையாளர் பூ கொண்டு வர பங்கஜம் மருமகளுக்குப் பூ வாங்கி வந்தார் இது வழமை தான் ஆனால் ஒவ்வொரு நாளும் பெண்களுக்குப் பூரிப்பு. இருக்காதா பின்னே பிறந்தகம் விடப் புகுந்தகம் சலுகை தந்தால் கேட்கவா வேண்டும்.
***
இரவு……..
ஏகாந்த இரவு குளுமையை அள்ளி தெளிக்கத் தோட்டத்தில் நிலவை ரசித்துக் கொண்டே தனது நிலாவை எதிர் நோக்கி காத்திருந்தார் சுந்தரம்.கடவுளின் கால் தடம் பதித்த வீட்டில் தெய்வங்களின் ஆட்சி எண்ணும் போதே உள்ளம் கொள்ளை கொண்டு தான் போனது.

ரசித்து ருசித்து இன்பம் கொண்டவரை கலைத்தது மனைவியின் மெல்லிய கொலுசின் ஒலி அவரது வருகை உணர்ந்து சிறு புன்னகை அவரிடம்.ஏனோ இன்று தான் திருமண ஆன பெண் போல் வெட்கம் வந்து தொலைத்தது பங்கஜத்திற்கு.

அவரை நெருங்க நெருங்க உள்ளுக்குள் ஏதோ ஒன்று மனைவியின் தயக்கத்தைக் கொலுசின் ஒலி மூலம் அறிந்த சுந்தரம் சட்டன வாய் விட்டு சிரித்து விட்டார் அவரது சிரிப்பில் சிறு கோபம் எட்டி பார்க்க.

“என்ன சோமசுந்தரரே சிரிப்பு வர வர கொழுப்பு கூடி போச்சு”

“இது என்னடி வம்பு நானே காலம் போன கடைசில சித்தன் போக்கு சிவன் போக்குன்னு இருக்கேன்”

“யாரு நீங்க நம்பிட்டேன் நீங்க மதியம் பண்ண வேலைல மருமவ பொண்ணுக பார்த்துட்டு ஒரே கேலி என்னால சமாளிக்க முடியல”

“ஏது நான் என்னடி செஞ்சேன்” என்றவர் மேல் கோபம் பொங்க அவரிடம் நெருங்கி அமர்ந்தவர் அவர் சட்டை கலரை பிடித்து இழுத்து “என்ன செஞ்சீங்களா? பேரன் பேத்தி எடுத்தவர் பண்ணுற வேலையா செஞ்சீங்க நீங்க. இடுப்ப கிள்ளுற நேரமா அத்தனை பெரும் பார்க்கணும் ஆண்டவா” என்று பங்கஜம் புலம்பப் பக்கெனச் சிரித்து விட்டார்.

“சிரிக்காதீங்க சோமசுந்தரரே”

“ரொம்பச் சந்தோசமா இருந்தேண்டி உன்ன கட்டிக்கனும் தோணுச்சு அது முடியாது வீடு முழுக்கச் சனம் அதான் கிள்ளி வச்சேன்” என்றவரை என்ன செய்தால் தகும் என்பது போல் பார்த்து வைத்தார் பங்கஜம்.

அவரது பார்வை உணர்ந்து விளையாட்டைக் கை விட்டவர் அமர்ந்திருக்கும் பங்கஜத்தை தனது மேல் சரித்துப் “பங்கு உண்மையா நிறைவா இருக்குடி நான் கோடீஸ்வரன் கிடையாது, சொந்தமா சொல்லிக்குற அளவு இந்த வீட்டை தவிர்த்து எதுவுமே இல்லை ஆனாலும் நான் சந்தோசமா இருக்கேன் பங்கு”

“நானும் தானுங்க”

“இதுக்கெல்லாம் காரணம் நீதான் பங்கு”

“நான் இல்ல நீங்க, உங்க உழைப்பு, உங்க பொறுமை”

“அது சரி…….. நீ தான் பங்கு பொறுமைசாலி என் இயல்பு மாறாம என் பாதையில வர ஒரே உறவு.மரணம் என்பது நிதர்சனமா இருந்தாலும் அங்கையும் உன்னோடு நான் கை கோர்க்கனும் ‘ ங்கிற’ பேராசை உண்டு.

எனக்கும் அந்த ஆசை இருக்கு கண்ணுக்கு நிறைவா பிள்ளைகளைக் கல்யாணம் பண்ணி பேரன் பேத்தின்னு பார்த்தாச்சு இனி எப்ப வேணாலும் கிளம்ப வேண்டியது தான்”

“அவசர படாதடி விசா வரட்டும்” என்றவர் முகம் நோக்கி கண்ணில் நீர் நிறைய “பயமா இருக்கு சுந்தரரே என்ன விளையாட்ட பேசினாலும் நீங்க இல்லாத இடம் எனக்கு நரகம் என்ன விட்டு போய்டாதீங்க” என்று கண்ணீர் கொண்டு அவர் நெஞ்சம் நிறைக்க

“லூசு பங்கு” முதுமையின் இயலாமை வர தானே செய்யும் பிள்ளைகளைக் கொண்டு மகிழிச்சி தான் இல்லை என்பதிற்கில்லை இருந்தாலும் வயதின் தூரம் கடக்கச் சற்றுச் சிரமம் தான் மனைவியின் கலக்கம் போக்கும் விதமாகப் “பங்கு எனக்கு ஒரு ஆசைடி”

‘என்ன’ என்பது போல் பார்த்தவரை

“நேத்து ஒரு சினமா பார்த்தேன் அதுல அந்த அம்மா ஒரு உடுப்பு போட்டுட்டு வந்துச்சு அது மாதிரி உனக்கு எடுக்கனும்” மனிதன் முகத்தில் அத்தனை திவிரம்.

கணவனது இதழ் ஓர சிரிப்பு ஏதோ வில்லங்கம் என்பதைக் கண்டு கொண்டவர் “என்ன உடுப்பு அதைச் சொல்லுங்க” என்றவர் காதில் அந்த உடை பற்றிய புள்ளி விவரம் சொல்ல.வயதை தாண்டிய செயலாக அவர் கையைப் பலம் கொண்டு கிள்ளி வைத்தார் பங்கஜம்

“ஐயோ!...... ஐயோ!.......... பேச்சை பாரு கருமம்…… கருமம்…… நீங்க மோசம் சோமா சுந்தரரே......... “என்றவர் முகத்தில் வெட்கத்தின் சாயல் அப்பி இருக்க சிரித்துவிட்டாள் இருவரது சிரிப்பொலியும் தோட்டத்தை நிறைத்தது

அழகிய பூந்தோட்டத்தில் ரோஜா, மல்லி, முல்லையென்று பல விதமான பூக்கள் பூத்த குலுக்கினால் எப்படி இருக்கும் அவ்விடம் பல பூக்களின் வசம் வீச சொர்க்கம் இது தானோ இன்று எண்ண வைக்கும்.

இன்றைய காலத்தில் நாம் இழந்த சொர்க்கமென்றால் அது கூட்டுக் குடும்பம் தான்.அன்றைய மனிதர்கள் மனதில் கள்ளமில்லை பெற்றால் தான் பிள்ளையா என்ன அண்ணன்,தங்கை,அக்கா,தம்பி,சித்தி.சித்தப்பா மாமா அத்தை என்று யாருடைய குழந்தை யாரென்று தெரியாமல் ஒன்றாக உண்டு உறங்கி விட்டு கொடுத்து கை கோர்த்து தாங்கி நிற்கும் பலம் கூட்டுக் குடுமபத்திற்கு மட்டுமே உண்டு.

தனித்து நான் என் மனைவி பிள்ளையென்று வாழ்ந்து கொண்டு இருக்கும் மனிதர்கள் ஒரு கணம் நோவு கொண்டு படுக்கும் போதும் சரி இக்கட்டான சூழ்நிலையிலும் சரி தாங்கி நிற்க உறவில்லை எண்ணும் பொது ஓர் நொடியாவது உறவுகளின் உன்னதம் நம்மைத் தாக்காத என்ன? தாக்கும் இதைக் கடந்தவர் எண்ணிக்கை கூடுதல் தான்

சோமசுந்தரர் போலக் குடும்பத்தைத் தாங்கி நின்று,பங்கஜம் போலக் குடும்பத்தை வழி நடத்தி, பெற்றோர்கள் வாக்கே தெய்விகம் என்பது போல் பிள்ளைகள் கொண்டு எனது குடும்பம் என்ற சுமை தாங்கி நிற்கும் மருமகள் கள் அமைந்தால் அவ்வீடு சொர்கமே.

பல குணங்களைக் கொண்ட இந்தப் பூக்கள் ஒன்றாகச் சேர்ந்து இந்தக் கதம்பவனத்தில் மனம் வீசி பல்லாண்டு இதே போல் கை கோர்த்து வாழ வாழ்த்தி நாமும் விடை பெறுவோம்

***சுபம்****
 
Nirmala senthilkumar

சுபம்*
Nirmala vandhachu
Tomorrow pesaren ma
Typing mudiyalai konjam work athigham
:love::love::love:
 
Nirmala senthilkumar

Well-Known Member
Sundara kandam ramayanam
Sundharar kandam kadhambha vanatthil
Nalla story nnu sonna pothathu ma
Athan time kettan
Mamanar mamiyar nna ippadi taan irrukka num
Marumagal nnu pirichu parkkama irrukka nalla manitharhal
Kannan taan mathanghi ya purinchurukkanum sari pannama sughavasiya irrukku re nnu sonna pothe sundharar hero aghittar
Avangalukkum love irrukkum nnu purichukkara
son, daughter in law .
Anniyum venum nnu sollura thambi yum
Akka va kootikittu vantha sister's m
Mathanghi ya sari pannittangha
Vimala purinchukittu rajan
Thamaraiya nalla vachukkanum nnu selva
Seetha amutha pair avanga panghalippu family members ahh correct ahh and ponnu kku marriage mudinchurichi
Kootukudumbham thanikudithanam
Rendu layum irrukku ra plus minas ahh correct ahh mention pannittu sirappa story complete panniteengha dhanu ma
Intha story kku Congratulations :love::love::love:
Next story kku
Best wishes ma
Seekirama vanga
Unghaloda writing m positive approach m
Nalla story ya ungha kitta irrundhu kondhu varum nnu nenaikkaran
All the best ma
@dhanuja senthilkumar
And last one rendu matham nna timing la 7 month latter podanum taane neenga 9 month latter nnu pottachu
Naan sollurathu correct ahh check pannunga
Vimala marriage panni 60 days
Thamarai 50 days sonneengha
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top