அத்தியாயம் - 14

Advertisement

dhanuja senthilkumar

Well-Known Member

சீமை சீயான் – 14
பேச வேண்டும் என்று அழைத்து வந்து விட்டு மௌனமாக அமர்ந்து இருக்கும் சீயானையும் முத்துவையும் பார்த்த பெண்கள் பதறி போனார்கள் அவர்களது அழுத்தமான மௌனம் அடுத்து என்னவோ என்ற கலக்கத்தை கொடுக்கத் தவித்துப் போனார்கள்.

கோவில் மணி ஓசையில் கலைந்த சீயான் தன் எதிர் புரத்தில் கலக்கத்துடன் அமர்ந்திருக்கும் பெண்களைப் பார்த்து ஆழ மூச்சிழுத்துத் தன்னைச் சமன் செய்து கொண்டவன் வேம்புவின் கண்களை கூர்ந்து கொண்டே விடயத்தைச் சொல்லலானான்.

“நான் எது பண்ணாலும் உன் நலத்துக்குனு உனக்கு நம்பிக்கை இருக்கா வேம்பு” பேச்சை ஆரம்பிக்கும் போதே அவன் இதனைப் பேச குழம்பிய போதிலும் அவனது கேள்விக்கு ஆம் என்று தலை அசைத்து பதில் அளித்தாள்.

“கண்டிப்பா மாமா ஏன் கேட்குற எதுவும் பிரச்சனையா”

“அதெல்லாம் இல்ல நான் சொல்லுறத கவனமா கேளு நான் நாளைக்கி பஞ்சாயத்து கூட்ட போறேன் அங்க உனக்கு என்ன நடந்துன்னு நீ சொல்லணும்” இதனைக் கேட்ட வேம்புவிற்கு எப்படி இருக்குமாம்.

அம்பாக வந்தது பதில் “என்னால முடியாது மாமா{“

ஏன் முடியாது?

முடியாதுனா முடியாது என்ன இந்த விசியத்துல விட்டுருங்க எனக்கு நடந்தது என்னோட போகட்டும்.ஏன் ஊர் முழுக்கத் தெரிஞ்சு அவங்க வாய்க்கு நான் வெத்தலையா இடி படணுமா? அதான் உங்க ஆசையா? இருக்கும் இடத்தை மறந்து கத்தியவளை இழுத்து பிடித்து நிறுத்தினால் பிச்சி

“எதுக்குடி இந்தக் கத்து கத்துற மாமா என்ன சொல்ல வருதுன்னு கேளு புள்ள அப்புறம் நீ ஆடு” பிச்சி வேம்புவை அடக்க இது சரி வராது என்று எண்ணிய முத்துப் பிச்சியிடம்

“பிச்சி வா அவங்க பேசி முடிவெடுக்கட்டும் நம்ப அப்புறம் வரலாம்” முத்து சொல்லவே மனமே இல்லாமல் முத்துவின் சொல்லுக்குச் செவி சாய்த்து அவனுடன் சென்று விட்டாள் பிச்சி தனித்து விடப்பட்ட வேம்புவும் சீயானும் எதிர் எதிர்புறம் இப்போது.

“உனக்குப் பொறுமையே இல்லையாடி”

“இந்த விசியத்துல இல்ல மாமா பொறுமையா இருந்த வரைக்கும் நான் என்னத்த கண்டேன்”

“பிடிவாதம் பிடிக்காத வேம்பு நான் என்ன சொல்ல வரேன்னு கேளு”

“முடியாது என்ன பண்ணுவீங்க” என்றவள் எழுந்து அவனிடம் சண்டைக்குச் செல்வது போல் செல்ல கோவிலில் வைத்து இவளிடம் பேச எண்ணிய தனது மட தனத்தை நொந்து கொண்டவன் அவளைத் திசை திருப்பும் பொருட்டுக் கேலியாக,

“என்னடி எகிறிட்டு வர புருஷன அடிக்க வரியா”

“ப்ச்… பேச்ச மாத்தாதீங்க மாமா யாரை கேட்டுப் பஞ்சாயத்தைக் கூட்டினீங்க”

“யாரை கேட்கணும்”

“சமந்த பட்ட என்ன கேட்கணும் எனக்கும் மானம்,ரோசம்,தன் மானம் எல்லாம் இருக்கு.நான் என்ன பாவம் பண்ணுனேன் என்ன போட்டு வதைக்கிறீங்க” ஆற்றாமையில் முகத்தை மூடி கொண்டு அழுதாள் இப்போது தான் அவள் சிரிப்பை ஆசை தீர பார்த்து அதனை நிலைக்கச் செய்ய வேண்டும் என்று உறுதி கொண்டான் ஆனால் இப்போது?

ப்ச்.. ஏய்! அழுகாதடி என் பொண்டாட்டிய நான் பேச விட்டுருவேனா ஊருக்குள்ள என்ன பேச்சு தெரியுமா நீயும் நானும் காதல் பண்ணி அது மாமாக்கு பிடிக்காம கல்யாணம் கட்டி வச்சு தான் நீ வந்த மாதிரி பேச்சு இருக்கு இது தேவையா?

“ஊர் பேச தான் செய்யும் எருது புண்ணு காக்கைக்குத் தெரியாது மாமா நீ என்ன சொல்ல நெனைக்குற எனக்குப் புரியல தப்பு என் மேல இல்லனு அம்புட்டு சனத்தையும் கூட்டி சொல்ல போறியா? அப்படினா அவங்களுக்கு என்ன நிரூபிக்க என்ன அவசியம் இப்போ? என்ன கட்டிக்க உறுத்துதா என்ன” அதுவரை பொறுமையாக இருந்தவனது பொறுமை அவளது பேச்சில் காற்றில் பறக்க.

அவளது கையைப் பிடித்து இழுத்து சென்று விட்டான் தோட்டத்து வீட்டுக்கு பற்றிய கைகள் வலி கொடுக்கக் கண்ணில் குருதி பெறுக அவன் இழுப்புக்கு சென்றாள் கோவில் வெளியில் நின்று கொண்டு இருந்த முத்துவும் பிச்சியும் இவர்களது நிலையைப் பார்த்துப் பதறிக் கொண்டு வர.

“முத்து ஐயா கிட்ட சொல்லிடு நாளைக்கி நானும் வேம்புவும் நேர பஞ்சாயத்துக்கு வந்துறோம் இப்போ தோட்டத்து வீட்டுக்கு போறேன் என்றவன் அவனது பதிலை எதிர்பார்க்காமல் வேம்புவை இழுத்துச் சென்றான்.

அவனது கோபம் புரிய பிச்சியிடம் “நீ போய்ப் பொன்னுரங்கத்து மாமாகிட்ட செய்திய சொல்லு பிச்சி.நான் பெரியப்பா கிட்ட பேசிகிறேன்” என்றவன் பிச்சியைப் பொன்னுரங்கத்தின் வீட்டில் விட்டுட்டு முனியாண்டி வீட்டை நோக்கி சென்றான் மனம் நாளைய விடியலில் தொக்கி நின்றது.

***
இப்படியே அவளை இழுத்து சென்றதை யாரும் பார்த்தால் இன்னும் கண், காது வைத்து பேச கூடும் என்று எண்ணியவன் முழு மூச்சாக நடந்தே ஆள் அரவமற்ற குறுக்கு வழியில் அவளை இழுத்து வந்தான் தோட்டத்து வீட்டில் அவளைத் தள்ளி தானும் உள்ளே சென்று தாழ் போட்டுக் கொண்டான்.

அவனது செயலில் கோபம் வர “நீர் என்ன சண்டியரோ”

“ஆமாண்டி சண்டியர் தான் சண்டி தனம் பண்ண தங்குவியா நீ என்ன பேச்சு பேசுற இந்த வாய் தானடி பேசுது”என்றவன் வலிக்க அவளுது உதடு பற்றி அழுத்த வலி தாங்காமல் கண்ணில் இருந்து தாரை தாரையாக நீர் பெண்ணுக்கு.

ஷ்! .... மாமா வலிக்குது விடு

அப்போதும் கோபம் குறையாமல் இருந்தவன் அவளது கண்ணீர் கண்டு கையைச் சற்று தளர்த்தினான் வலி எடுத்த உதட்டை வாய்க்குள் மடித்துத் தன்னைச் சமாளித்தவள் தளர்ந்து அமர

அவளுடன் அமர்ந்தவன் அவள் முகத்தைத் தன்னை நோக்கி திருப்பி “நான் பேசி முடிகிற வரைக்கும் பேசுன என்ன பண்ணுவேன்னு தெரியாது சொல்ல வரதக் காது கொடுத்து கேளு” என்றவன் சிறு மௌனம் கொண்டு தன்னைச் சமாளித்துப் பேசினான்.

“இங்க பாரு வேம்பு இந்த ஊர்லையே பெரிய தலை கட்டு நம்பக் குடும்பந் தான் பட்டன்,பூட்டன் காலத்துல இருந்து மவுசு இருக்கு.இவளோ ஏன் எங்க ஐயாவுக்கும், உன் அப்பாருக்கும் கூட நல்ல பெயர் அது மட்டுமில்ல முண்டியாண்டினா கட்ட பஞ்சாயத்து முரட்டு ஆளுன்னு கொஞ்சம் பயம் இருக்கும்,

இத்தினி இருந்தும் நம்பச் சனத்துக்காரனுகளே நம்பள ஏமாத்திட்டானுக அவனுகள சும்மா விடச் சொல்லுறிய நீ.அப்படியே நீ ஒதுங்கி போனாலும் இதே மாதிரி வேற பொண்ணுக்கு நடக்காதுனு என்ன நிச்சியம்.அந்த பையன பெத்தவளும் பொம்பள தானே அதுக்குக் கூறு வேணாம்.யோசுச்சு பாரு உனக்கு நான் இருக்கேன்” அவன் வாக்கியத்தை முடிக்கவில்லை

“யாரும் எனக்கு வாழ்கை தர தேவை இல்லை” என்றவள் கதவை நோக்கி செல்ல

“முட்டா சிறுக்கி நான் என்ன சொல்ல வரேன் நீ என்ன எடுத்துக்குற பொண்ணாடி நீ ராட்சசி” அவளது இடையை வளைத்து வன்மையாக அனைத்துக் கொண்டு கேட்க அவனது முரட்டுத் தனத்தைத் தாங்க முடியாமல்

அஹ்ஹா!.. மாமா வலிக்குது விடு ரொம்ப முரடு பண்ணுற நீ விடு நீ வேணா போ என்றவள் அவனது மார்பு,கன்னம்,புஜங்கள் என்று அடித்து வைக்க அடிக்கும் அவளது கைகளையும் பற்றியவன் ஏய்!.... ஒரே சத்தம் தன் உடல் அதிர தனது திமிறலை நிறுத்தியவள் பயந்து பார்க்க.

அவனும் அவளைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தான் “உங்கிட்ட பேசி புண்ணியம் இல்லடி நான் என்ன சொல்லுறேனோ அத கேட்டு தான் ஆகணும் என்ன கேட்பியா” மீண்டும் ஒரு அரட்டு பேச்சே இல்லை வேம்புவிடம் தலையை மட்டும் ஆட்டி கேட்பேன் என்பது போல் செய்கை செய்ய அதன் பின் அவளை விடிவித்தவன்.

வீட்டுக்குள் அவளை வைத்து பூட்டி சென்றுவிட்டான் அழுகை முட்டி கொண்டு வர முதல் முதல் தங்கள் கூடல் கொண்ட அறையில் தஞ்சம் அடைந்தாள்

அவளைச் சாடி விட்டு வெளியில் வந்தவனுக்குக் கோபம் குறையச் சற்று நேரம் ஆனது என்ன பேச்சு பேசுறா இப்போ மல்லுக்கு நிக்கிறவ அன்னக்கி அவ அப்பாருகிட்ட பேசி இருக்க வேண்டியது தானே. ஆள கண்டு இழப்பம் ராட்சசி இருடி வரேன் எல்லாம் நல்ல படியா முடியட்டும் செத்த நீ” அவளைக் கருவியவன் தனது வீட்டை நோக்கி சென்றான்.

இன்று இரவு இங்குத் தான் என்ற முடிவு அதனால் தனது ஐயாவிடம் சொல்லிவிட்டு இரவு உணவு எடுத்து வர வீட்டை நோக்கி சென்றான் அங்கோ முனியாண்டி அங்காயிடம் வானத்துக்கும் பூமிக்கும் குதித்துக் கொண்டு இருந்தார்.

“என்ன நெனவுல இருக்காரு உஞ்சாமி”

“ஏங்க” அவரது கோபத்தில் பதறிய அங்காயி கலங்கி போய்க் கேட்க

“என்னத்த ஏங்க”

கல்யாணம் முடியுற வர யாரு பார்வைக்கும் இடிபட வேணான்னு இந்தப் பையலுங்ககிட்ட சொன்னா எவன் கேக்குறான்.அவரது கோவத்தில் உள்ள நியாயம் புரிய அங்காயி அமைதி காத்தார் அவருக்கு மகன் செய்வது எதிலும் உடன்பாடில்லை அதிலும் நாளை நடக்கவிருக்கும் பஞ்சாயத்து எதுக்கு என்ற கேள்வி வேறு அவருக்கு உறுத்தியது.

முனியாண்டி,வேம்பு,முத்து,சீயான் மட்டுமே அறிந்த ரகசியம் நாளை ஊருக்கு தெரியும் பொது அதுவும் அங்காயி மற்றும் வேம்புவின் தாயின் நிலை கண் கொண்டு காண முடியாது முழுதாக இன்னும் விடயம் யாருக்கும் சொல்ல படவில்லை இதுவே முனியாண்டியின் கோபத்திற்கு முக்கியமான காரணம்.

இருவரும் பேசியதை கேட்டவாறே உள்ளே வந்த சீயான் “அம்மா அவளுக்கும் எனக்கு இரவைக்குச் சாப்பாடு எடுத்து வைங்க” என்றவன் தந்தையிடம் திரும்பி ஐயா!...... என்க

“நிறுத்துங்க சாமி நீங்களே தான் முடிவு எடுத்துப் பண்ணுறீங்களே பண்ணுங்க நாங்க வேடிக்கப் பாக்குறோம் ஆனா ஒன்னு என் வீட்டு பொண்ணுக நாளைக்கி எவன் முன்னும் கலக்கி நிக்கக் கூடாது அப்புறம் என் மவுச காட்ட வேண்டியது வரும் பார்த்துக்கோங்க” என்றவர் கையில் உள்ள துண்டை வீசி எரிந்து விட்டு சென்றார்.

அவரது கோபம் புரிந்தாலும் சீயான் பின்வாங்க விரும்பவில்லை.அவனுக்குத் தேவை நியாயம் தனது மாமன் மகள் என்றதால் அல்ல ஒரு பெண் என்றளவில் அவன் சொன்னது போல வேம்புவிற்கு இந்தச் சீயான் இருக்கான்.இதே துணை இல்லாத பெண்ணாக இருந்தால் அவளது நிலையை எண்ணி பார்க்கவே முடியவில்லை.

உணவு கொடுத்த தாயின் முகத்தைக் கூடப் பார்க்காமல் வாங்கிக் கொண்டவன் தோட்டத்து வீட்டுக்கு விரைந்தான்.
*
தோட்டத்து வீட்டுக்கு வந்தவன் அனைத்தையும் சரி பார்த்து பூட்டிவிட்டு விளக்கை அனைத்து தோட்டத்து நாய்களை அவிழ்த்து விட்டு வந்தான்.பூட்டிய வீட்டை திறந்தவன் மீண்டும் பூட்டிவிட்டு அதனைச் சரிபார்த்து தங்களது அறைக்குச் சென்றான்.

இன்னும் தேம்பி தேம்பி அழுது கொண்டு இருந்தவளை பார்த்தவன் தான் கொண்டு வந்த உணவை வைத்துவிட்டு அவளிடம் நெருங்கி அமர்ந்து “சாப்பிட வா” என்று அழைக்க

அவனது அரவம் தெரிந்தாலும் ஒன்றும் பேசாமல் இருந்தவள் அவன் சாப்பிட அழைக்கவே “எனக்கு வேணாம்”
“என்னடி வேணாம்”

“சாப்பாடு”

“சரி வா பாலிடாயில் குடிக்கலாம் ரொம்ப நாள் ஆச்சு” குறும்பு சிரிப்புடன் சொன்னவனை எதைச் சொல்கிறான் என்பதை அறிந்தவள் அவனை முடிந்த மட்டும் அடித்துக் கடித்து வைத்தாள்

“என்னடி இது கடிக்கிற நாயா நீ”

“பேசாதீங்க” என்றவள் மீண்டும் வீசும்ப

“ப்ச்… நான் எது செஞ்சாலும் உன் நல்லதுக்குத் தான் நாளைக்கி என்னால உனக்கு அவமானம் வந்தா நான் செத்ததுக்குச் சமம் என்ன நம்பு” என்க

வேகமாக அவனது முகத்தைப் பார்த்தவள் “என்ன பேச்சு இது ஏன் இப்படி பேசுறீங்க”

“அதான் நம்ப மாட்டேங்கிறியே வேற எப்படி பேசுறது நீயே சொல்லு”

“யாரு சொன்னா உங்கள நம்பலன்னு உங்கள மட்டும் தான் நம்பி இருக்கேன்”

“அப்புறம் எதுக்குடி பிடிவாதம்” என்க தனது மனதை புரிந்து கொள்ளாமல் பேசிக்கிறானே இன்னும் என்ன சொல்ல என்று எண்ணியவள் மௌனம் காக்க அவளை யோசிக்க விடாது இழுத்து அனைத்தவன்.முகம் துடைத்து மூடி ஒதுக்கி சீர் செய்து பெரு விரல் கொண்டு அவளது கன்னத்தில் கோலமிட்டு.

“வேம்பு” போதை ஏற்றும் குரலில் அழைக்க நடந்த அத்தனை பினுக்கும் பின்னே சென்றது இருந்தும் தன்னை ஒப்பு கொடுக்காது “விடு மாமா நேரம் ஆச்சு வீட்டுக்குப் போகலாம்” போலியாக மறுத்தவளை

வீட்டுக்கு போறதா? நானும் வீட்டுல சொல்லிட்டேன் இனி இங்க தான்”

“நான் போகணும்”

“போ”

“சாவி கொடு போறேன்”

“முடுஞ்சா எடுத்துக்கிட்டு போடி”

“ரொம்பப் பண்ற மாமா நீ”

“இனிமே தான் பண்ணனும்” என்றவனது பார்வை கண்ணியம் தொலைக்க

“நீ சரியில்ல நான் வீட்டுக்கு போறேன்”

ப்..ச் நான் சரிதான் நீ தான் தப்பு முட்டா சிறுக்கி

“நான் முட்டாள் தான் சாமி நீங்க அறிவாளியா பார்த்து கட்டிக்கோங்க இந்த முட்டா சிறுக்கி வேண்டாம்”

“எதிர்த்தா பேசுற நீ?என் மேல உள்ள பயம் போச்சு ஹ்ம்ம்…” என்றவன் அன்று போல் இன்றும் அவள் மீது பாய

அய்யோ!.... அம்மா விடு மாமா நீ ரொம்ப அநியாயம் பண்ணுற

“அடி பாவி பண்ணுறது எல்லாம் நீ என்ன சொல்லுறியா” என்றவன் வன்மையாக மாறத் துவண்டு போனாள் பெண்.கோபம் கொண்டு கூடிய கூடல் அல்ல யாரோ செய்த தவறால் ஒன்றும் அறியாத இந்த ஜீவன்களின் வலிகளைக் கூடலின் மூலம் கரைத்துக் கொண்டு இருந்தனர்.

திருமணம் நிகழாத பந்தம் என்றாலும் இவர்கள் வரையில் இருவரும் கணவன் மனைவியே உற்றார்,ஊரார், உறவினர் எனப் பார்த்து வைத்து முறையாகச் செய்த திருமணம் என்ன ஆனது? அதன் தாக்கத்தில் உள்ள பெரியவர்களுக்கு இவர்களின் தனிமை உறுத்த வில்லை போலும் இருவரும் கடந்த காலத்தில் இருந்து பிழைத்து வந்து புது வாழ்வு வாழ்ந்தால் சரியென்ற நிலையில் அவர்கள்.

தங்களது மன உளைச்சலை களை எடுக்க ஒருவரை ஒருவர் நாடி தேடி களைத்து கலைந்து உறங்கும் வேளையில் இன்று அவர்களுக்கான விடியல் என்பது போல் சேவல் உரக்க கூவியது
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top