அத்தியாயம் - 13

Advertisement

dhanuja senthilkumar

Well-Known Member
சீமை சீயான் – 13

முத்துவின் குரலில் அதிர்ந்து நின்ற பெரியர்வர்கள் தெளியவே சில நிமிடங்கள் பிடித்தது தெளிந்த பின் பிச்சியின் தாய் மரியாதை நிமித்தம் “வாங்க தம்பி” மென் குரலில் அழைத்தவர் தூண் பின் சென்று மறைந்து கொண்டார்.

பிச்சியின் தந்தை தான் "வாங்க மாப்பிள்ள" என்றவர் என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாக நின்றார் தர்மசங்கடமான நிலை மௌனம் நீடிக்க இப்படியே நின்றால் வேலைக்கு ஆகாது என்று எண்ணிய முத்து சற்று கோபமாகவே பேச்சை தொடங்கினான்

“என்னங்க மாமா இதெல்லாம் தப்பு பண்ணது நான் அடிக்கிறதா இருந்தா என்ன அடிங்க” என்றவன் அவரை நெருங்கி நிற்க பயந்து தான் போனார் மனிதர்

“என்ன மாப்பிள்ள நீங்க எனக்கு இருக்கிறதே ஒத்த புள்ள நான் அடிப்பேனுங்களா அவ தான் அடிச்சுப் புட்டா” தனது ஆதங்கத்தைச் சொன்னவர் தனது மனைவியையும் விட்டு கொடுக்காமல் "எந்த தாய்க்கும் ஒவ்வாது செய்தி நடந்து போச்சு அதான் அவளால தாங்க முடியல கை நீட்டிட்டா அவளும் என்ன செய்ய ஊர் பேசுமே அந்த பயம் தான்"
தனது தோளில் முகம் புதைந்து அழுது கொண்டு இருக்கும் பிச்சியை நிமிர்த்தி “அழுகாத புள்ள நான் பார்த்துக்கிறேன் ஐத்த இனி உன்ன அடிக்க மாட்டாங்க உள்ளுர போய் முகம் கழுவிட்டு தண்ணிய எடுத்துக்கிட்டு வா” என்று அவளை அனுப்பி வைக்க அவளும் அவனது பேச்சுக்குச் செவி சாய்த்து சென்றாள்.

போகும் பொதுத் தூண் மறைவில் நிற்கும் தாயை பார்த்து தனது முத்துப் பற்கள் தெரிய சிரித்துக் கண் அடித்ததும் இல்லாமல் எங்க தைரியம் இருந்தா இப்போ அடி பார்ப்போம் வம்பு செய்ய

"ஆளா பார்த்த உடனே ஏகதளத்த பார்த்தியா இவளுக்கு சிறுக்கி இருடி வரேன் கோபமாக மூணு முனுத்துக் கொண்டார் கொண்டவன் கொடுத்த திணவு கோபமாக எண்ணியும் கொண்டார் மேலும் அவள் என்ன பயந்து முழிக்கிற சீண்ட

“அங்கனயே நில்லுடி ராங்கி வரேன்” அவர் ஓர் எட்டு எடுத்து வைக்கக் குரலை உயர்த்தி முத்து மாமா என்று ஒரே கூச்சல் அவனோ அவளுக்கு மேல் “என்ன பிச்சி” கூச்சல் போட

“அடிபாவி பயந்தவர் அவளைப் பார்த்து இருடி தம்பி போகட்டும் இங்கன தானே நீ இருக்கணும் பார்த்துகிறேன்”

“என்ன மிரட்டரியா ஒரு போன் போட்டா போதும் என் மாமன் ஓடி வந்திருவார்” என்றவள் சிலுப்பிக் கொண்டு செல்ல மனம் நிறைந்தது அந்தத் தாய்க்கு அதனை காட்டி கொள்ளாமல் வெளியில் முறைத்து அவளுக்கு எதிர்புறம் திரும்பி சென்றார்.

செல்லும் இருவர் முகத்திலும் புன்னகை மகளின் வாழ்க்கை என்ன ஆகுமோ என்று பதைத்தவருக்கு முத்துவின் செயல் ஆறுதலே.எந்நேரம் பார்த்தாலும் சண்டை புடிக்கும் இருவருக்கும் திருமணம் பேசும் போதே ஒரு நெருடல் தான் அவருக்கு. அதனால் தான் அன்று வீராயி பெண் கேட்கும் பொது யோசித்து நின்றார்.

பிடிக்காத பெண்ணை எப்படித் தொட்டார்? எப்படித் திருமணம் செய்து வைப்பது என்று தான் பிச்சியைக் கண்டித்தார் ஆனால் இப்போது முத்துவின் உரிமை பேச்சு அவருக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுத்தது.பிச்சிக்குமே அதே எண்ணம் தான் அன்று நடந்தது என்ன என்று உணரும் முன்னே தன் வாய்க் கொண்டே வம்பை வாங்கிக் கட்டி கொண்டாயிற்று அல்லவா.
***
கூடத்தில் அமர்ந்து இருந்தவர்கள் மௌனமாக இருக்க அதனை முதலில் கலைத்தது முத்து தான் “மனுச்சுக்கிடுங்க மாமா” என்றவன் மேலும் என்ன பேச என்று தெரியாமல் முழிக்க. அவனை ஆட்டி படைக்கவென்றே கேட்டது ஒரு குரல் “என்னடா திருட்டு முழி முழிக்கிற” பின் பக்கம் கேட்ட முனியாண்டியின் குரலில் தூக்கி வாரி சுருட்டி எழுந்தவன்.

“ஒண்ணுமில்லங்க பெரியப்பா பிச்சிய பார்க்க வந்தேன் அத்தை அடிச்சுப்புட்டாங்கனு கேள்வி பட்டேன்”

“பின்ன கொஞ்சுவாங்களா ஐயா செஞ்ச வேலைக்கு..... எங்க உன் கூட்டாளி? என்ன சொன்னேன் பங்காளி இரண்டு பேருக்கும் கண்ணாலம் முடியுற வரை இந்தப் பக்கம் தலை வைக்கக் கூடாதுனு சொன்னேன் தானே”

“அதுங்க”

“எதுங்க” அவனே போலே அவரும் கேட்க தலையைக் குனிந்து கொண்டவன் ஏன் சீயானை கேட்க வேண்டியது தானே எப்போ பார் நம்மளையே ஏசுறது என்று மூணு முணுக்க

"அது முடியாம தானே உன்ன கேட்குறேன். சாமி முன்னாடி பேச முடியுமா சொல்லுங்க எங்க ஐயனை கொண்டு பிறந்து என்ன வதைக்கிறாரு அடங்கா காளையா இரண்டு பையலும் சிலுப்பிக் கிட்டு தெரிஞ்சா வயசான காலத்துல உங்க பின்னாடி ஓடியடா வர முடியும்"ஆதங்கமாக கேட்டவரை

“பெரியப்பா”

“பேசாதாடா எரும உங்கள அப்புறம் வச்சுக்கிறேன் இப்போ என்ன இங்க வந்து மிரட்டிக்கிட்டு இருக்க உன் பெரிய ஆத்தா அனுப்பி வச்சாளாக்கும்” ஆம் இல்லை என்று தலையை நாளா பக்கமும் ஆட்டி வைத்தான் முத்து.

“மச்சான் முதல நீங்க உட்காருங்க மாப்புள்ள எதுவும் தப்பா பேசல” முனியாண்டியின் வேகம் கண்டு பிச்சியின் தந்தை வர

"நீங்க என்ன மச்சான் இப்பவே மாப்பிள்ளைக்கு வருஞ்சுகிட்டு வாரீங்க பார்த்து சுதானமா இருங்க இரண்டு பையலுமே களவாணி பையலுங்க கொஞ்ச அசத்தோம் சோழிய முடுச்சுடுவானுக" முடித்த மட்டும் இருவரையும் அக்குவேறு ஆணிவேராகப் பிய்த்து எரிந்து விட்டார் மனிதர்.பெரிய தந்தையை எதிர்த்து பேச துணிவில்லாமல் மனதினுள் வசை படி கொண்டு இருந்தான் முத்து.

எனக்கு வெளில இருந்து எந்த வில்லனும் வேணாம் அம்புட்டு வில்லனும் வூட்டுக்குள்ள தான் என்ன பேச்சு ?என்ன பேச்சு தலையை இடமும் வளமும் ஆட்டி கொண்டான்.அவனது செய்கையைப் பார்த்த முனியாண்டி என்னடா பூம் பூம் மாடு கணக்கா தலைய ஆட்டிகிட்டு திரியுற.

“அதெல்லாம் ஒண்ணுமில்லங்க பெரியப்பா கழுத்து சுழுக்கு அதானுக ஆட்டிப்பார்த்தேன்”

ஏது? சுழுக்கு? உனக்கு ? நம்பிட்டேன் என்றவர் பிச்சியின் தந்தையிடம் திருமணம் குறித்துப் பேச தொடங்கி விட்டார் இது தான் சமயமென்று தலை தெறிக்க அடுக்கலைக்குள் ஓடி வந்து விட்டான்.

மூச்சுவாங்க ஓடி வந்தவன் பிச்சியின் அருகே நிற்க அவளோ பதறி இரண்டடி பின் சென்றாள்.அவள் செய்கையில் முறைத்தவன் பொழுது சாயும் வேளையில கிளம்பி இரு பேச்சியம்மா கோவிலுக்குப் போயிட்டு வரலாம் என்ன.

அவனது முகம் பார்க்காமல் வேறெங்கோ பார்த்துக் கொண்டே “அம்மா உடாது மாமா”

நான் அத்தை கிட்ட சொல்லிட்டு போறேன் விடுவாங்க வேம்பு புள்ளையும் வருது நீ வந்து சேறு முக்கியமான செய்தி சொல்லணும்.இந்த வார வெள்ளி கல்யாணம் தெரியுமுள்ள" என்க
“ஹ்ம்ம் அப்பா சொன்னாரு”

"எல்லாம் சுமுகமா முடியட்டும் அப்புறம் நம்பக் கதைய பேசிக்கலாம் அதுவரைக்கும் உனக்கு எந்தக் குழம்பமும் வேணாம் நான் விரும்பி தான் உன்ன கல்யாணம் பண்ணுறேன்" அவன் சொன்னது தான் தாமதம் சூரியன் கண்ட செந்தாமரை போல மலர்ந்து பார்த்தவளை நெருங்கி நின்று.

"உன்ன ரொம்பப் புடிக்கும் பிச்சி எதுவும் யோசிக்காத" மெல்லிய குரலில் சொன்னவன் இன்னும் நெருங்கி நிற்க.பயந்து பின் வாங்கியவளை கை பிடித்து இழுத்து நெருங்கி நின்றவன் அன்னைக்குச் சுயத்தோட தாண்டி தொட்டேன் மெல்ல காதரோம் சொன்னவனை வெட்கம் தாண்டி அவள் அதிர்ந்து பார்க்க.

"என்ன பார்வை குடுச்சா தராதரம் தெரியாதாடி அந்த அளவுக்கு நான் என்ன மொடா குடிகரானா.பொம்பளைங்க பேசி புலம்பி தீர்த்திக்கிறீங்க நாங்க எங்க போக”

அதுவரை மயங்கி நின்றவள் முத்து வைத்த குற்றச்சாட்டில் பொங்கி எழுந்தாள். மயக்கம் தெளிந்து இது எல்லாக் குடிகாரனும் சொல்லுற சாக்கு தான் ஏன் எங்க சீயான் மாமா எப்படி கன்னா நின்னு சமளிக்குது.

“போடி சிலுப்பி உங்க மாமனுக்கு மாது போதை இருக்கே அப்புறம் எதுக்கு மதுவை தேட போறான்”

“தப்ப பேசாதீங்க மாமா”

“பார்ரா கோபத்தை”

பேச்ச மத்தாதிங்க அன்னக்கி நீங்க குடுச்சதும் தப்பு தான் அப்படி போனதும் தப்பு தான்.மாமனாக இருந்தாலும் பிச்சியால் முடிந்த கூடலை ஏற்றுக் கொள்ள முடியவில்லை அவளுக்கென்று சில கோட்பாடுகள் உள்ளது அல்லவா.

“சரி தப்புத்தாண்டி குடிச்சதுக்குத் தொட்டதுக்கு இல்ல”

முத்துவை முறைத்தவள் "உங்கள எல்லாம் ஒன்னும் சொல்லுறதுக்கு இல்ல நகருங்க முனியாண்டி மாமாக்குக் காப்பித் தண்ணி கொடுக்கணும்" தன்னை தாண்டி சென்றவளது கையை பற்றியவன் “முதல முத்து மாமனை கவனிடி"

"கவனிக்க வேண்டியது தான் கொட்டி பையலே" முனியாண்டி குரல் கேட்க அடித்துப் பிடித்து ஓடி சென்றான் முத்து.அவனது ஓட்டம் கண்டு பிச்சி கலகலத்து சிரிக்க பெரியவர்கள் பார்வை அவளிடமே.

வம்சத்துக்கே இரு பெண் பிள்ளைகள் தான் வேம்புவின் குடும்பத்தினருக்கும் பிச்சியின் குடும்பத்தினருக்கும். இருவரின் வாழ்வும் செழித்துப் பூத்து குலுங்க வேண்டும் என்பதே அவர்களது விருப்பம்.

பெண் பிள்ளைகள் என்றால் வரமென்று பலருக்கு தெரியவில்லை அதன் அருமை புரிந்து போற்றும் நேரம் மீண்டும் ஒரு சறுக்கல். இன்றைய நிலையில் பெண் பிள்ளைகளை எண்ணி பெற்றவர்களுக்குக் கலக்கம் தான்.அருமை பெருமையாகப் போற்றி வளர்த்து தான் வேம்புவை திருமணம் செய்து வைத்தார்கள்.

அவளும் பெற்றவர்கள் பேச்சுக்குச் செவி சாய்த்து உறவுகளைத் தாங்கி தான் நின்றாள் ஆனால் அப்பெண்ணின் வாழ்க்கை?

என்ன மனிதர்கள் இவர்கள் தங்கள் பிள்ளை ரெத்தம்,சதை உள்ள உயிர் மற்றவர்கள் பிள்ளைகள் என்றால் பிண்டமா என்ன.எத்தனை பெரிய தீங்கை பெண்ணுக்கு செய்து விட்டு நான் என்ற இறுமாப்போடு சுற்றி திரிவது.ஒரு பெண்ணை குலைப்பது ஒரு தலை முறையை அழிப்பதற்கு சமம் என்பதை யாரு அவர்களுக்கு சொல்வது.

காலம் காலமாகப் பெண்களின் சாபம் போலும் இவைகள் யார் சொன்னால் உணர்வார்கள்? காளியின் அவதாரம் கண்டு ஆனால பட்ட சிவ பெருமானே ஆடி நின்றது மறந்து விட்டொதோ என்னவோ.மீண்டும் ஒவ்வொரு பெண்ணும் காளியாக அவதரித்தாள் இவ்வுலகின் நிலை என்ன?

இவ்வாறு எண்ணி கொண்டே முனியாண்டி பிச்சியின் தாய் மற்றும் தந்தையிடம் விடை பெற்று செல்ல.அங்கே இளையவர்கள் மாலை நேரத்தை எதிர் நோக்கி காத்துக் கொண்டு இருந்தனர்.சீயானுக்கு வேம்புவை திருமணம் செய்வதற்கு முன்பு அவளது பழைய கரையைத் துடைக்க வேண்டும் நியாயம் கிட்ட வேண்டும்.

என்னதான் அவன் திருமணம் செய்து என் மனைவி என்று ஊர் வாய் அடைத்தாலும் அவளது பழைய வாழ்க்கையின் எச்சம் தொடர தானே செய்யும் பேசும் அத்தனை சனத்துக்கும் உண்மையை விலக்கி விட முடியுமா? இன்றைய நிலையில் அது சாத்தியமா?

அது மட்டுமா இனி வேம்புவை போல் எந்தப் பெண்ணும் பாதிக்கப் படக்கூடாது.இனியாவது பெண்ணைப் பெற்ற மக்கள் மாப்பிள்ளை தேடும் பொதுச் சுதாரிப்பாக இருக்கட்டுமே.அந்த எண்ணத்தில் தான் பின் விளைவுகளை யோசிக்காமல் இந்த முடிவினை எடுத்தது.

அந்தி வானம் வெட்கம் கொண்டு நிற்க ஊடல் கொண்ட தென்றலோ அதனை உரசி உரசி மேலும் சிவக்க வைக்க அன்பு கொண்ட இரு ஜோடிகளின் சங்கமம்.இந்த அழகான மாலை வேளையில் ஆண்கள் இருவரும் அதே பேச்சியம்மன் கோவிலில் பெண்களுக்காக காத்து கொண்டு இருந்தனர்.

சீயானை சரியாகப் புரிந்து கொண்டு வேம்பு செயல் படுவாளா என்ற கலக்கத்துடன் முத்து யோசித்துக் கொண்டு இருக்க இரு பெண்களும் கை கோர்த்து எதிர் திசையில் வந்து கொண்டு இருந்தனர் சிரிப்பு இரு ஆண்களுக்கும் சங்கீதமாக ஒலித்தது நீண்ட நாள் கனவு அல்லவா

சீயான் செய்து வைத்திருக்கும் செயல் அச்சிரிப்பை நிலைக்க வைக்குமா என்பது காலத்தின் கையில்.
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top