அத்தியாயம் -13

Advertisement

dhanuja senthilkumar

Well-Known Member
கதம்பவனம் – 13

இன்றோடு ராஜமாதங்கி பிறந்தகம் சென்று ஒரு மாதம் ஆகிவிட்டது.அன்று கண்ணன் ‘போ’ என்று சொன்னதும் சென்றது தான் கண்ணனும் போய்ப் பார்க்கவில்லை அவளும் இங்கு வரவில்லை

கண்ணன் மனம் அறிந்து தம்பிகள் பொறுமை காக்க யோசிக்கச் சிறிது கால அவகாசம் கொடுத்தார் சோமசுந்தரம்.ஆனால் அவகாசம் சற்று கூடி போகக் கண்ணனிடம் பேச வேண்டும் என்று முடிவு கொண்டார் மனிதர் அவருக்கு மாதங்கியின் செயல் தவறு என்பதை உணர வேண்டும் என்று தான் எண்ணினாரே தவிர மருமகள் வேண்டுமென்ற எண்ணம் ஒருபோதும் இல்லை

“தம்பிகளும் இன்று தனது அண்ணனிடம் பேசிவிட வேண்டும் அண்ணியும் குழந்தைகளும் இல்லாமல் வீடே வீடாக இல்லை” என்று என்று முதலில் புலம்பியது வேறு யாருமில்லை நமது ராஜன் தான் விமலா கூட அவனது புலம்பலில் அதிர்ந்து தான் போனாள்

அவளது பார்வை உணர்ந்து “என்னடி நான் பேசிக்கிட்டே இருக்கேன் நீ அப்படி முழிக்கிற”

“இல்ல எங்க அக்காவ தான் உங்களுக்குப் பிடிக்காதே அவ இல்லனு கவலை படுறீங்க அதான்” ஒருமாதிரி குரலில் விமலா கேட்க

“இது என்ன பேச்சு யாரு சொன்னா உங்க அக்காவ பிடிக்காதுன்னு?அவங்க செயல் பிடிக்காது, தான் என்ற அகபாவம் பிடிக்காது, தனக்கு மட்டுமே என்ற சுயநலம் பிடிக்காது………. ஆனா ஒரு அண்ணியா பிடிக்கும்” அவனது பதிலில் முற்றிலும் குழம்பி போய் முழித்தவளை எட்டி பிடித்துத் தனது கை வளைவில் வைத்து கொண்டவன்.

அவங்களும் நம்பக் குடும்பம்டி அதுவும் எங்க முதல் அண்ணன் மனைவி எங்க அப்பா அம்மாக்கு அடுத்து அவங்க தான் எல்லாம்.கொஞ்சம் பொறுப்பு வேணும் தானே அதான் சொல்லுறோம் வேற ஒண்ணுமில்ல. அண்ணி தான் இனி இந்தக் குடும்ப வண்டியை கட்டி இழுக்கனும்.அப்பாக்கு வயசாயிடுச்சு அந்தப் பயத்துல தான் அவரும் கொஞ்சம் கோபமா பேசிட்டார்.

‘ஆம்’ என்பது போல் தலை அசைத்தவள் கன்னத்தில் கன்னம் பதித்தவன் “என் கணிப்பு சரினா இந்நேரம் அப்பா அண்ணாகிட்ட பேசியிருப்பார் நேத்தே அம்மாகிட்ட கேட்க சொன்னார் 'உன் பெரிய மகன் எப்போ மருமவள பார்க்க போறான் கேளுனு' இதுக்கு மேல தாமதிக்க மாட்டார்”

“எனக்கு மாமாவ பத்தி தெரியாத என்ன…. நேத்துக் கோவில் போனப்ப அம்மாவும் வந்து இருந்தாங்க.அக்கா ஒரே அழுகையாம் சரியா சாப்புடுறதே இல்லையாம் குழந்தைகளைக் கூடக் கவனிக்குறது இல்லனு அம்மா சொல்லி வருத்தப்பட்டாங்க”

“என்னடி சொல்லுற” அதிர்ந்து போனான் ராஜன் ஏனென்றால் என்ன நடந்தாலும் மாதங்கி தனது பிள்ளைகளைப் பார்க்காமல் இருக்க மாட்டாள் சொல்ல போனால் கணவன் குழந்தைகள் மட்டுமே அவளது உலகம்.

“ஆமாங்க சீதா அக்காவும், அமுதா அக்காவும் குழந்தைங்களைப் பள்ளி கூடத்துல விட்டுட்டு ஒரு எட்டுப் போய்ப் பார்த்துட்டு வரலாம்னு சொன்னாங்க”

“முதல அதை செய்யுங்க நானும் அண்ணன் கிட்ட பேசுறேன்” என்றவன் தாமதம் உணர்ந்து வேலைக்குச் செல்ல ஆயுத்தமானான்

அதன்பின் காலை வேலைகள் அவ்வீட்டின் பெண்களைச் சுருட்டி கொள்ள ஆண்களுக்கும் உணவு கொடுத்து மதிய உணவை டப்பாவில் அடைத்து கொடுத்து அவர்களை வழி அனுப்பி.சிறு வாண்டுகளைப் பள்ளி அனுப்பி வைத்தனர் அது வரை அனைவரும் பம்பரமாக ஒவ்வொரு வேலை செய்ய சுளுவாக முடிந்தது.

அசந்து எடுத்து அமர அனைவருக்கும் தேநீர் கொண்டு வந்த சீதா ஒவ்வொருக்கும் கொடுத்து விட்டு தானும் எடுத்துக் கொண்டு தோட்டத்தில் அமர்ந்தாள்.தேநீரை பருகி கொண்டே "தாமரை தம்பி கிட்ட சொன்னியா ஆஸ்பத்திரிக்கு போகனும் தானே"

மெதுவாக இல்லையெனத் தலையை ஆட்டியவளை கண்டு கோபம் பொங்க “என்ன விளையாட்டு பண்ணிக்கிட்டு இருக்க நாள் தள்ளி ஐம்பது நாள் நெருங்க போகுது குழந்தை வளர்ச்சி தெரிய வேண்டாமா....”

“செல்வத்துக்கிட்ட சொன்னியா இல்லையா”

“இல்ல முதல அத்தை மாமாகிட்ட சொல்லிட்டு சொல்லனும்”

“சரி சொல்லிடு நாங்க மாதங்கி அக்காவ பார்த்துட்டு வரோம்”

“ஹ்ம்ம் சரிகா” அவளது சோர்வான பதிலில்

“நேரம் கடத்தாத தாமரை உங்க அப்பாக்கும் செய்தி சொல்லு சந்தோச படுவார் பாவம் அந்த மனுஷன் ஒண்டிக்கட்ட”

“கண்டிப்பாக்கா” என்றவளிடம் தெளிவேயில்லை அதனைப் பெண்கள் கண்டு கொண்டாலும் மாதங்கியை பார்க்க வேண்டும் என்ற கடமை முதலில் இடிக்க அவளைப் பங்கஜமிடம் ஒப்படைத்து விட்டு மாதங்கியை பார்த்துவருவதாகச் சொல்லிட்டு வாசல் வர.

வழமை போல் திண்ணையில் அமர்ந்திருந்தார் சோமசுந்தரம் இருவரும் வருவதை பார்த்தவர் "என்ன மருமக பொண்ணுக எல்லாரும் எங்க கிளம்பிடீங்க ஒரு ஆள் குறையுதே”

“மாதங்கி அக்காவ பார்க்க போறோம் மாமா தாமரைக்குக் கொஞ்சம் முடியல அதான்” அமுதாவின் பதிலில் பதறியவர்

“என்னாச்சும்மா”

“எல்லாம் நல்ல செய்தி தான் மாமா பயந்துக்காதீங்க நாங்க போயிட்டு வரோம்” என்று செல்ல பார்த்தவர்களை தடுத்தவர்

“கொஞ்சம் இருங்கம்மா” தனது வெட்டி பட்டையில் மடித்து வைத்திருக்கும் சில்லரை காசை எடுத்து அவர்களிடம் கொடுத்துப் புள்ளைங்களுக்குத் திண்பண்டம் எதாவது வாங்கிட்டு மருமவளுக்குப் பூ வாங்கிகிட்டு போங்க என்ன” அவரது அன்பில் அனைவரும் நெகிழ்ந்து போய்த் தலை அசைத்தாள் சீதா என்ன மனிதர் இவர்….

இது தான் சோமசுந்தரம் தவறு என்பதால் தான் அன்று மாதங்கியை திட்டினரே தவிர மாதங்கியின் மீது எந்தக் கோபமுமில்லை.ராஜன் சொன்னது போல் மூத்த மருமகளாக அனைவரையும் அரவணைத்துத் தங்களுக்குப் பின் இந்தக் குடும்பத்தைக் கட்டி காக்க வேண்டும் என்பது தான் அவரது எண்ணம்.

மாதங்கியின் இயல்பு மாறாமல் அனைவரையும் அரவணைத்தால் போதும் என்பதே அவர் எண்ணம்.நான் என்று சொன்னால் உதடுகள் ஒட்டுமா என்ன நாம் என்று சொல்லு உதடுகள் கூட ஒட்டிக்கொள்ளும் அந்தப் பிணைப்பை தான் எதிர் பார்த்தார் மனிதர்.

இறந்தப் பின் கண் விழித்து இவர்களது வாழ்வை பார்க்க போவதில்லை.தான் இருக்கும் வரை குடும்பம் சிதறாமல் இருக்க வேண்டும் அதுவே அவரது எண்ணம்

தான் பெற்ற பிள்ளைகள் மீது நம்பிக்கை அதிகமுண்டு என்றாலும் மனித மனம் குரங்கல்லவா அதனால் தான் அவரவர் இடம்,கடமை,பொறுப்பு எது என்று உணர்த்துகிறார்.உணர்த்தும் பொது சற்று வலிக்கத் தான் செய்யும் என்ன செய்யக் குடும்பம் சுகம் பெற வேண்டுமே.

அவர்கள் அந்தப் பக்கம் விரைய சோமசுந்தரம் வேகமாகத் தாமரையிடம் சென்று “என்னம்மா மேலுக்குச் சுகமில்லன்னு சொல்லுச்சு அமுதா பொண்ணு என்ன ஆச்சு”

மாமனாரின் கனிவு கண் கலங்க வைக்க அவளது கலக்கத்தைக் கண்டவர் “அடுக்கலைக்குள் இருக்கும் தனது மனைவியை அழைத்தார் பங்கஜம் இங்க வா மருமவ பொண்ணுக்கு முடியலையாம்” அவர் சொன்னதும் விரைந்து வந்த பங்கஜம்.

“என்னாச்சு தாமரை அமுதாவும் பார்த்துக்கச் சொல்லிட்டு போனா” இரு பெரியவர்களும் பதறுவதைத் தாங்காமல் "அதெல்லாம் ஒண்ணுமில்லை அத்தை நாள் தள்ளி போயிருக்கு” தலையை குனிந்து கொண்டே சொல்ல

அவளது பதிலில் எல்லையற்ற மகிழ்ச்சி இருவருக்கும் எத்தனை பிள்ளைகள் பெற்றாலும் பேர பிள்ளைகள் இருந்தாலும் ஒவ்வொரு பிள்ளையின் பிள்ளையும் வரம் தானே பெற்றவர்களுக்கு நிறம், குணம், மனம், எண்ணம் செயல் என்று வேறுபட்டாலும் உயிர் ஒன்றே அதுவும் அவர்களது உதிரம் அல்லவா

“என்ன சாமி சொல்லுற ராசாத்தி செல்வத்து கிட்ட சொன்னியா” பங்கஜம் நெகிழ்ந்து கேட்க

“இல்ல அத்தை”

அவளது பதிலில் புருவம் சுருக்கி பார்த்தவர் “ஏன்?” என்றார் பங்கஜம்

“புருசனுக்குச் செலவு வைக்காம புள்ள பெக்க யோசுச்சு இருக்கும்” ஆற்றமையாக சொன்னார் சுந்தரம்

“ஏன்மா நீ சொல் பேச்சு கேட்கவே மாட்டியா?அப்போ நாங்க யாரு உனக்கு” சுந்தரத்திற்குக் கோபம் இருக்காதா பின்னே பெற்ற மகள் போல் தாங்கி நிற்பவரிடன் தள்ளி நின்றால்.அவரது கோபம் தாமரையை பதம் பார்க்க வேகமாக அதனை மறுத்தவள் “அப்படில்ல மாமா”

“பின்ன என்ன”

“நான் தான் கொஞ்சம் நாள் ஆகட்டும் யோசுச்சேன் அதான் சொல்லல இப்போ போனா சரியா வரும் அவர்கிட்ட சொல்லிடுறேன் மாமா”

“அது சரி அவன் வர இரண்டு நாள் ஆகும் அது வரை ஆஸ்பத்திரிக்கு போகாம இருப்பியா நீ நல்ல பொண்ணும்மா.பங்கஜம் புள்ளய கூட்டிட்டு கிளம்பு” என்றவர் தனது அறைக்குச் சென்று பணத்தை எடுத்து வந்து மனைவியிடம் கொடுக்க மருமகளை அழைத்து கொண்டு மருத்துவமனை விரைந்தார் பங்கஜம்.

அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு செல்வத்தைப் பார்க்க சென்றார் சுந்தரம்.....

***

இங்கு ஓரகத்திகளைப் பார்த்தவுடன் கதறி தீர்த்து விட்டாள் மாதங்கி “அவருக்கும் உங்களுக்கும் வேணான்னு என்ன விட்டுடீங்களா” என்று கதறியவளை பார்க்க உருகிற்று பெண்களுக்கு

“அக்கா என்ன பேச்சு இது நீங்களும் குழந்தைகளும் இல்லாம வீடே வீடா இல்ல”

“ஆமாக்கா என் வீட்டுக்காரு கூடப் புலம்பி தவிக்கிறாரு நீ முதல கிளம்பி வா” என்றவளை ஆச்சிரியமாகப் பார்த்த மாதங்கி “பொய் சொல்லாத உன் புருசனுக்கு என்ன கண்டாலே ஆகாது”

“நீ வேற நானும் இதையே தான் கேட்டேன் அதுக்கு” அவன் சொன்னதைச் சொன்னவள் “தப்பு உன் மேல தான் நீ தான் நம்ப வீட்டு சனத்தை விட்டு கொடுக்காம இருக்கனுக்கா யோசுச்சு பாரு,

பாப்பாக்கு இப்போ பத்து வயசு இன்னும் இரண்டு வருஷம் போனா பெரியவளா ஆயிடுவா பிள்ளைகள் வளர வளர அதுங்களுக்குத் துணை வேண்டாமா சொல்லு.என்னதான் நீ வீட்டுல இருந்தாலும் பெரியவங்க பார்த்துக்குற மாதிரி வராது.வீட்டுல பெரியவங்க இருக்குறது நல்லதுக்கா உனக்கு மேலுக்கு முடியலன்னு அன்னைக்கு முழு நாள் கண்ணு திறக்காம படுத்து கடந்த என்ன ஆச்சு,

அமுதக்கா இல்லனா பிள்ளைங்க பட்டினியா கிடந்து இருக்கும்.உனக்கு ஒன்னுனா நாங்க இருக்கோம் எங்களுக்கு ஒன்னுனா நீ இருக்க.நல்லது கெட்டது பார்த்து எடுத்து தர அத்தை மாமா இருக்காங்க.

கால் வயறு கஞ்சினாலும் பங்கு போட்டு திங்களாம்.உனக்கு ஓர் வீழ்ச்சின்னா கை கொடுத்து தூக்கி விடலாம்.எத்தனை நல்லது இருக்கு கூட்டு குடும்பத்துல இத்தனை நல்லதுக்கு நீ செய்ய வேண்டியது ஒன்னே ஒண்ணுதான் விட்டு கொடு.நீ ஒரு படி விட்டு கொடு நாலு மடங்கு உனக்கு நல்லது கிடைக்கும்” என்ற தங்கையின் பேச்சில் அசந்து போனாள் மாதங்கி.

சிறு பெண் வாழ்க்கையைப் பற்றி என்னமா பேசுகிறாள் இவளுக்கு இருக்கும் தெளிவு ஏன் நமக்கில்லை தன்னையே நொந்து கொண்டவள் ஒருவராகத் தெளிந்து “சரி இருங்க நான் பிள்ளைகளைக் கூட்டிட்டு வரேன் விமலா குடிக்க எடுத்து கொடுடி”

“சரிக்கா”

“ஏன் தாமரை வரல என் முகத்தைக் கூடப் பார்க்க பிடிக்கலையாக்கும்” மாதங்கியின் துடுக்குத் தனம் தெரிந்தது தான் என்பதால் “அதெல்லாம் இல்லக்கா அவ முழுகாம இருக்கா”

“பார்த்தியா அதைக் கூடச் சொல்லல” என்று அடுத்தச் சண்டைக்கு அடித்தளமிட்டவளை சமாளித்து

“ஐயோ! அக்கா அவ யாருக்குமே சொல்லல மாமா அத்தைகிட்ட சொல்லுன்னு இப்போதான் திட்டிட்டு வந்து இருக்கோம்”

“என்னதுடி இது அவ என்ன பைத்தியமா”

“இல்லக்கா பயம் செல்வம் தம்பிக்கு பாரம்னு யோசிக்குது லூசு” இப்போது மாதங்கியிடம் மௌனம் அவளும் அவர்களது வறுமையைத் தூற்றியவள் தானே

“ஏன்! சீதா என்ன பார்த்தா ராட்சசி மாதிரியா இருக்கு எனக்கு என் பிள்ளைகள் வசதியா வாழனும் அதுக்குத் தனியா இருக்கனும் யோசிச்சேன் இவர் சம்பாத்தியம் எல்லாத்துக்கும் போனா நானும் என் பிள்ளைகளும்?...... அது தான் என் யோசனையே ஒழிய கொடுமைகாரி இல்லைடி நான். அதுவும் முழுகாம இருக்குற புள்ளய கொடுமை படுத்துற அளவுக்கு” என்று கலங்கியவளை மூவரும் அனைத்து கொண்டனர்

“அக்கா நீங்க நினைக்குற மாதிரி எதுவுமில்லை அவ பயந்த சுபாவம் எதையும் வாய் விட்டு பேசாது தனக்குத் தேவைகளைக் கூடக் கேட்டு வாங்கிக்கத் தெரியாது”

“இப்படி இருந்தா எப்படி..டி பிழைப்பா” அழுகை மறந்து ஆற்றாமையாக பேசிய மாதங்கியை எண்ணி சிரித்தவர்கள்

“அதுக்குத் தான் நீங்க வேணும் கிளம்புங்க போய் அவள என்னன்னு கேட்போம்” என்றவர்கள் மாதங்கியை அழைத்து கொண்டு செல்ல மாதங்கியின் பெற்றோர்கள் மனம் நிறைந்து போனது இது தானே குடும்பம் அங்கனம் மாதங்கியின் தாய் கூடத் தனது தவறை உணர்ந்து வருந்தினார்.

சும்மாவா சொன்னார்கள் சான்றோர்கள் ‘விட்டு கொடுத்தால் கெட்டு போவதில்லை….
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top