அத்தியாயம் - 12

Advertisement

dhanuja senthilkumar

Well-Known Member
சீமை சீயான் - 12
அந்தச் சம்பவம் நடந்து சரியாக ஒரு வாரம் கடந்த நிலையில் அந்த மாலை பொழுதில் வயல் வரப்பில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த சீயானிடம் வந்து அமர்ந்தான் முத்து.

"ஏன் சீயான்? எங்க உன் அருமை பாப்பா? நானும் அவ போற இடமெல்லாம் போய்த் தேடுறேன் கண்ணுல அம்புட மாட்டேங்கறாளே ஆட்டம் காட்டுறா" என்ற முத்துவை என்ன செய்தால் தகுமென்று என்பதை போல் பார்த்தான் சீயான்.

அவனது பார்வை உணர்ந்தாலும் ஒன்றும் அறியாதவனை போல் “ஏண்டா வெறிக்க வெறிக்கப் பார்த்து வைக்கிற”

“பார்க்க அழகா இருக்கனு தான்...... மூஞ்சிய பார் அடி வாங்கிச் சாகமா அந்தாண்ட ஓடி போயிடு”

“இப்போ இதுக்கு சீயான் இம்புட்டு கோவம்”

"பேசாதடா எல்லாம் உன்னால என்ன... இதுக்கு....?அவ மேல கைய வச்ச பாவம் அவ.அத்தை அடி வெளுத்துட்டாங்க போல அடி தாங்காம அம்மா கிட்ட வந்து ஒரே அழுகை என்கிட்ட கூட சரியா பேசல வீட்டுக்கும் சரியா வர மாட்டேங்கறா அழுது அழுது முகமெல்லாம் வீங்கி போய் இருக்கு தெரியுமா” ஆதங்கமாக பேசிய சீயானிடம் எகிறினான்

"அவங்க என்னத்துக்கு என் பொண்டாட்டிய அடிக்கிறாங்க. ஏன் நீ என்கிட்ட சொல்லல இரு ஒரு கை பார்க்கிறேன்” வெறிக் கொண்ட சிங்கம் சிலிர்த்துக் கொண்டு செல்ல பார்க்க.

“போ போ எங்க ஐயா அதான் உன் பெரியப்பா அங்கன தாண்டி இருக்காரு” என்று ஒரு குண்டை தூக்கி போடா சிங்கம் அபௌட் டர்ன் அவனது வேகமும் அதே நொடியில் தனது தந்தையின் இருப்பைச் சொல்லவும் அவன் அடங்கிய விதமும் சிரிப்பை தர நக்கலாக

“என்னடா சிங்கமா சிலிர்த்து கிட்டு போனீங்க இப்போ என்ன அசிங்கமா பின் வாங்குறீங்க” சீயான் முத்துவை முடிந்த மட்டும் கிழித்துத் தோரணம் கட்ட தனது நிலையை எண்ணி பல்லை கடித்தான் முத்து.

அன்று முனியாண்டி மூவரையும் அழைத்துத் திருமணம் விடயம் பேசி இருவரையும் கண்டித்து அனுப்பி வைத்தார் அதன் படி திருமணம் முடியும் வரை இரு ஆண்களும் பெண்களின் நிழலை கூடத் தொட கூடாது என்பது அவரது கடுமையான உத்தரவு.
அதனைத் தாண்ட இரு ஆண்களுக்குமே துணிவில்லை என்பதால் இருவரும் சமத்தாகச் சுற்றி திரிந்தனர் அவ்வப்போது தூரம் சென்றாவது அவர்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் வரத்தான் செய்கிறது என்ன பண்ண. திருமணத்திற்கு முன்னே ஓவர் ஆட்டம் என்பதால் இப்பொது அடக்கி வாசிக்க வேண்டிய நிலை இரு ஆண்களுக்கும்.

இங்கு சும்மாவே வீராயி முத்துவை விரட்டி அடிப்பாள் அந்தச் சம்பவத்திற்குப் பிறகு தினமும் அவனுக்கு வசை மழை தான் படுத்தி எடுத்து விட்டார்.

தவறு தன்னுடையது என்று முத்து பொறுத்து போனாலும் அவனது பொறுமை எல்லை கடக்கும் பொது அவனும் கத்திவிட்டே செல்வான். பிச்சி வேறு அன்று நடந்த கூடல் ஊடல் பின் தலைமறைவாக இருப்பவளை எண்ணி இன்னும் அவள் மேல் காதல் வஞ்சம் கூடி கொண்டே தான் போனது.

இன்று எப்படியாவது அவளைப் பார்த்தே ஆக வேண்டும் என்ற நிலை அவளிடம் பேச வேண்டும் அதற்காகச் செய்ததற்கு மண்ணிப்பெல்லாம் கேட்க முடியாது எனக்கு உரிமை இருக்கு என்ற இறுமாப்பு வேறு அவனைச் சுண்டி இழுக்க இரு தலை நிலை தான் பாவம். இருவரும் ஊரை சுற்றி விட்டு வீட்டுக்கு வர வாசலில் அவர்களைக் கோபம் முகம் கொண்டு எதிர் கொண்டார் முனியாண்டி.

அவரது முகத்தில் தெரிந்த கடுமையைப் பார்த்த முத்து நம்பத் தான் ஒன்னுமே பண்ணலையே எதுக்குப் பெரியப்பா இந்த முறை முறைக்கிறாரு என்று எண்ணியவாறே அவரைத் தாண்டி இருவரும் நல்ல பிள்ளையாக உள்ளே செல்ல பார்க்க

போட்டாரே ஒரு அதட்டு “டேய் எரும முத்து வாடா இங்க”

அவர் போட்ட சத்தத்தில் உடல் அதிர முத்து அவர் முன் நிற்க சீயான் தலையைக் குனிந்தவாறே அவனுக்கு பக்கத்தில் நின்றான்.

இருவரையும் பார்த்தவர் "என்ன தான் நெனச்சுக்கிட்டு இருக்கீங்க இரண்டு பேரும் அதான் பொறுமையா இருக்கச் சொன்னேன் தானே அதுக்குள்ள துரைகளுக்கு என்ன அவசரம்"

அவர் எதைப் பற்றிச் சொல்கிறார் என்று இருவருக்கும் தெரியும் இருந்தும் இருவரும் ஒன்றும் தெரியாதவர்கள் போல “என்ன ஐயா சொல்லுறீங்க எனக்கு ஒன்னும் விளங்கள” அறியபிள்ளை போல் சீயான் சொல்ல

“அது எப்படி சாமி விளங்கும் வேட்டிய கட்டிக்கிட்டு மீசையை முறுக்கிட்டு சண்டியரா சுத்திரிங்க உங்களுக்கு விளங்குமா சொல்லுங்க. ஏன்டா முத்து உனக்கும் நான் எத பத்தி பேசுரேனு விளங்குல தானுங்க"
அவனும் தெரியவில்லை என்று நான்கு திசையும் பார்த்து தலையை ஆட்டி வைத்தான் அவனது செயலில் படாரென எழுந்தவர் "அங்காயி அந்த இரும்பு கம்பிய பழுக்கக் காச்சி இங்கன கொண்டு வாடி நாக்குல அந்தக் கம்பிய வச்சு இழுத்தா புரியாதது எல்லாம் நல்ல புரியுமாம்”

அவர் சொன்னது தான் தாமதம் முத்து பயந்து “ஐயோ பெரியப்பா எனக்கு நல்லாவே புரியுது” என்றவனை முதுகில் இரண்டு வைத்தவர் சீயானிடம் திரும்பி “கண்ணாலம் வரை பொறுமை வேணும் சாமி எதுக்கு அவனுக கிட்ட வம்புக்கு போனீங்க” குரலில் அத்தனை கடுமை.

“ஐயா இந்த விஷியத்துல எனக்குப் பொறுமை ரொம்பக் கம்மிங்க” அவரைப் பார்க்க முடியாமல் எங்கோ பார்த்துக் கொண்டு சொல்ல

"நானும் உங்கள மாதிரிதேன் வயசுல சலம்பிகிட்டு இருந்தேன் நீங்க அப்படியே என்க அப்பாரு கொண்டு வந்து இருக்கீங்க.இது பொம்பள புள்ள சமாச்சாரம் என்னதான் நீங்க கட்டிக்கப் போறவளா இருந்தாலும் ஊருக்குள்ள மறுவாத வேணாமா அந்த புள்ள மானம் போகணுமா சொல்லுங்க"

“ஐயா அதுக்குன்னு அவனுகள அப்படியே விட முடியாதுங்க இன்னக்கி வேம்பு நாளைக்கி வேறு ஒரு பொண்ணு பாதிக்கப் படாதுனு என்னங்க உத்தரவாதம்”அவனது செயலில் நியாயம் இருந்தாலும்

“அதுக்குன்னு கோர்ட் வாய்தானு புள்ளைய கூட்டிட்டு அலைய போறிங்களா” அவருக்கு மனம் ஆறவில்லை அதை விட வேம்புவின் விடயம் வெளிச்சத்துக்கு வருவதை அவர் விரும்பவில்லை.

“இல்லங்க ஐயா இத வேற மாதிரி தானுங்க எடுத்துட்டு போகணும் நம்ப ஊருக்குள்ள வச்சே முடுச்சுக்கிடலாம் என்ன நம்பி என் போக்குல விடுங்க ஐயா யாருக்கும் எந்தச் சேதாரமும் வராம பார்த்துக்குவேன்”

“அதுவரை அமைதியாக இருந்த முத்து ஆமாங்க பெரியப்பா இனி நம்பப் பக்கம் எந்தச் சரிவும் இருக்காதுங்க”

இதற்கு மேல் என்ன பேச என்று எண்ணியவர் "எதா இருந்தாலும் பெரியவங்க என்க கிட்ட ஒரு வார்த்தை கேட்டு செய்யுங்க" என்றவர் அவர்களது பதிலை எதிர் பார்க்காமல் சென்று விட்டார்.அவர் சென்றவுடன் ஆசுவாசமாக அமர்ந்த முத்து எப்படி சீயான் பெரியப்பாக்கு தெரிஞ்சுது

"அவருக்குத் தெரியும் படி தான் காரியம் பண்ணுனேன் ஐயா கிட்ட சொன்னா வேணான்னு சொல்லுவாரு அவருக்குத் தெரியாம செய்யவும் மனசு வரல அதான் பஞ்சியத்துல உள்ள பெரிய மூக்கன் தாத்தா காதுல போட்டு வச்சேன் அவர் எப்படியும் ஐயா கிட்ட சொல்லுவார்”

"நீ சொல்லுறதும் சரிதான் அப்…பா இந்தக் கொஞ்ச நாளு என்ன கிரகமோ செத்து சுண்ணாம்பா ஆகியாச்சு போ" கடந்து வந்த பாதையை எண்ணி முத்து பெருமூச்சுவிட

"எல்லாம் மாறும் முத்து மாறனும்" உறுதியாகச் சொன்னவனை பிரமிப்பாகப் பார்த்தான்.

சீயான் வயதில் செய்யாத சேட்டை இல்லை அத்தனை சேட்டை செய்தாலும் பொறுப்பாக இருப்பான்.கூட்டாளிகளுக்கு என்ன பிரச்சனை என்றாலும் முதலில் பொறுமையாகப் பேசிப் பார்ப்பான் பேச்சு வார்த்தை சுபம் போட வில்லை என்றால் அடி தடி தான் எந்த வித தயவு தாட்சணையும் கிடையது அப்படி இருப்பவன்.

வேம்புவின் விடயத்தில் பொறுமை எடுத்தான் அவன் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் அத்தனை கவனம் பொறுமை.சீயான் என்றால் பண்ணாத வேலையே இல்லை பருவ வயதில்.எத்தனை கலிப்பாகச் சுற்றி திரிந்தோமோ அத்தனைக்கும் சேர்த்து வைத்து அனுபவம் எடுத்தாச்சு என்று எண்ணியவாறே அங்காயிடம் சென்றான் (வேறு எதற்குக் காபி வேண்டும்).

அவனது வருகை அறிந்த அங்காயி அவனிடம் முகம் காட்டாமல் வேலை செய்து கொண்டு இருக்க .அவரது முந்தியை பிடித்துக் கொண்டே சுற்றினான் சீயானுக்கு அவனது தந்தை தான் முதலிடம் அவர் பின் சுற்றி திரிய. முத்து தான் அங்காயிடம் இருப்பான் அதனால் அவனிடம் தனிப் பாசமுண்டு.

தான் வளர்த்த பிள்ளை தவறு செய்தது அவருக்குச் சற்றுக் கலக்கத்தைக் கொடுத்தது. உருத்து உள்ளவன் தான் என்றாலும் கிராமத்து பெண்ணின் மனது பெண்ணியம் பேசியது

“பெரியம்மா காபி”

“சொன்ன பேச்சு கேட்காத நாய்களுக்கு இங்கன என்ன வேலை காபி தர முடியாது இடத்தைக் காலி பண்ணலாம்”

"ப்ச்.. எங்க ஆத்தா திட்டியே கொல்லுதுன்னு தான் இங்கன வந்தேன் நீங்க அதுக்கு மேல இருக்கீங்க சோறு திங்காமலே செத்து போறேன் போங்க"
“எடுபட்ட நாயே என்ன பேச்சு பேசுற ஏன் சோறு திங்கல இரு காபி தண்ணி தரேன்" என்றவர் அவனது பசியை உணர்ந்து தாயாக செயல் பட்டார்.

கை அதன் வேலையைச் செய்ய “டேய் பிச்சி புள்ள வீட்டுக்கு ஒரு எட்டு போயிட்டு வா புள்ளைய போட்டு அந்த அடி அடிச்சு வச்சு இருக்கா உன் ஐத்த காரி ராட்சசி கணக்கா.பழி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கமா நீ போயி உன் மாமான் கிட்ட சண்டைய கூட்டு உங்க பெரியப்புக்கு தெரியாம போ” நேற்றைய தினம் பிச்சி வந்து அழுது கொண்டே தனது தாய் அடித்ததைச் சொல்ல அங்காயி பொங்கி விட்டார்.

"என்னத்துக்குப் பொம்பள புள்ள மேல கை வைக்கிறா நீ போதாயி நான் பார்த்துக்கிறேன் அவளை" ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தார் இன்று முத்து வரவும் சொல்லி விட்டார் "சரி பெரியம்மா" என்றவன் மனதில் பாரம் ஏறிக் கொண்டது தவறு செய்த தன்னை விட்டு அவளைத் தண்டிப்பது என்ன நியாயம்.

அங்கோ பிச்சியின் தாய் நின்றால், நடந்தால் கூடப் பிச்சியைப் பேசியே கொன்றார் பெண்ணால் நடந்த தவறை ஏற்க முடியவில்லை.அது என்னவோ பெண்களுக்கே உண்டான சாபம் ஆண்கள் தவறு செய்தாலும் பெண்களின் தலையில். அவள் தவறு செய்தாலும் அவளுக்கே இது என்னடா நியாயம்.

“ஏண்டி இப்போ எதுக்கு அழுது கறையுற உன்ன புள்ளையா பேதத்துக்கு நான் தான் அழுது சாகனும்” நித்தம் நித்தம் பெண்ணை வார்த்தையால் வதைக்கும் மனைவியின் மீது இன்று கோபம் எல்லை கடந்தது.

“ஏண்டி அதான் உன் ஆத்திரம் தீருமட்டும் புள்ளைய போட்டு அடிச்சு புட்டில இன்னும் ஏன் அவள கருச்சு கொட்டற”

“ஏன் பேச மாட்டிங்க புள்ளைய வளர்த்து விட்டுருக்காப் பார்னு ஊரு சனம் என்னல பழி பேசும் உங்களுக்கு என்ன வந்துட்டாரு மகளுக்கு வரஞ்சு கட்டிக்கிட்டு”

கணவனிடம் கொண்ட கோபமும் பிச்சியிடம் பாயச் “செய்யுறத செஞ்சுபுட்டுக் குத்துக்கல்லாட்டம் இருக்கிறத பார்” என்று மீண்டும் கையை ஓங்கி கொண்டு போக வீடே அதிரும் படி கத்தினான் முத்து “நிறுத்துங்க அத்தை”

விரைந்து பிச்சியிடம் சென்று அவளை இழுத்து தனது தோள் வளைவில் அனைத்துக் கொண்டான் அவனது இறுக்கமே அவனது கோபத்தைச் சொல்ல பெரியவர்கள் இருவரும் செய்வதிறது திகைத்து நின்றனர்.
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top