அத்தியாயம் 12 - சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே

Advertisement

Yaazhini madhumitha

Well-Known Member
அத்தியாயம்-12

அன்று காலை விரைவாகவே எழுந்து
விட்டக் கார்த்திக், போனை எடுத்துக்
கொண்டு பால்கனிப் பக்கம் சென்று,
தான் போன் செய்ய வேண்டிய
நபருக்கு ஒரு போன்காலைப்
போட்டான். குளித்து முடித்து வந்த மது
'இந்த காலை நேரத்தில் யாருடன்
பேசுகிறான்" என்று யோசித்தபடியே
பால்கனி கதவைத் திறந்தாள். அவள்
பால்கனி கதவைத் திறந்தவுடன் "சரி
நான் வைக்கிறேன்' என்று மதுவைப்
பார்த்து எதிர் முனையில்
இருந்தவரிடம் சொல்லிவிட்டு போனை
கட் செய்து விட்டான் அந்தக் கள்ளன்.

மதுவிற்கு போனில் யார் என்று
கேட்கவும் மனதில்லை.. ஆனால்
யோசித்தபடி பார்த்த மதுவிடம்
"குட்மார்னிங் மது.. என்ன சீக்கிரம்
எழுந்து விட்டாயா" என்று பேச்சை
மாற்றியபடிக் கேட்டான்.

"அதை நான் கேட்க வேண்டும்... நீங்க
தான் இன்னிக்கு ஏதோ வேலையா
எந்திருச்ச மாதிரி இருக்கு" என்று
ட்ரெஸிங் டேபிள் முன்னாடி வந்து
நின்றபடிக் கேட்டாள்.

'எப்படி இன்டைரக்டா... யார் கிட்ட
போன் பேசிட்டு இருக்க-ன்னு
கேக்கறா பாரு.. இதுல மட்டும்
விவரமா இருக்கா' என்று
நினைத்தவன் "அது ஒன்றுமில்லை
மது.. மூர்த்தி சார் இன்று மதியம் தான்
வருவேன் என்று போன் செய்து
சொன்னார்.. அவர் போன்
பண்ணியதால் தூக்கம்
கலைந்துவிட்டது" என்றான். ரெடி ஆகி
கீழே வந்தும் கார்த்திக் தன் அன்னை
ஜானகியிடம் ஏதோ கிசுகிசுத்ததைக்
கண்டாள் மது. யோசித்தவள்.. அவனே
சொல்லுவான் என்று விட்டுவிட்டாள்.
அவள் எதையும் பெரிதாகவும் எடுத்துக்
கொள்ளவில்லை.

மாலை ஆனதும் இருவரும் வீடு
திரும்ப..வழக்கம் போல பொள்ளாச்சி
ரோட்டில் கார் சென்றது.
கார்த்திக்கிடம் ஏதோ பேசியபடி வந்த
மது.. டக்கென்று தலையைத் திருப்பி
வெளியே பார்த்து மறுபடியும் திரும்பி
விட்டாள். அவளின் செய்கையைக்
கவனித்தவன் காரை யூடர்ன்
செய்தான்.

"ஏன் காரை திருப்பறீங்க?" என்று
வினவிய மதுவிடம் தோளை மட்டும்
குலுக்கினான்.

காரை அந்த ரோட்டில் ஓரமாக
அமைத்திருந்த பொம்மைக் கடையின்
முன்பு நிறுத்தினான். "இறங்கு மது..
இதைத் தானே ஆஆஆ..ன்னு
திரும்பிப் பாத்த.. நானே வாங்கித்
தரேன் வா" என்று அழைத்தான்.

மதுவும் காரை விட்டு இறங்க "எந்த
கலர் டெட்டி வேணும் மது" என்று கேட்க,
அந்தக் கடைப் பையன் டெட்டியை
எடுக்க ஆரம்பித்தான்.

"இல்லை இல்லை... டெட்டி வேணாம்..
நான் டெட்டி பொம்மையைப் பாக்கல"
என்றாள் கார்த்திக்கைப் பார்த்து.

"பின்னே எதைப் பார்த்த?" என்று
புருவத்தை நெறித்தபடிக் கேட்டான்.

"அதை...." என்று இரு புருவத்தையும்
தூக்கி சிரித்தபடி 'அவன் என்ன
நினைப்பானோ' என்று
யோசித்தபடியே கை நீட்டிச்
சொன்னாள்.

அவள் கையைக் காட்டிய பக்கம்
தலையைத் திருப்பிப் பார்த்தக்
கார்த்திக் "இதுவா" என்று தன்
வியப்பைக் காட்டியவாறு சிரித்தபடிக்
கேட்டான்.

'அய்யோ சிரிக்கிறானே' என்று
நினைத்துக்கொண்டே "ஆமாம்"
என்றாள் மது.

"சரி அந்தக் குரங்கு பொம்மையை எடு
தம்பி" என்று அந்தக் கடைப்
பையனிடம் சொல்ல மதுவிற்கு
வாயெல்லாம் பல்லாகி விட்டது.

வாங்கிக் கொண்டு இருவரும் காரில்
ஏறினர். பொம்மையை மடியில்
வைத்தபடி கையில் இறுகப் பிடித்துக்
கொண்டே உட்கார்ந்து இருந்தபடி
வந்தாள். "ஏன் மது இப்படி..."
வாய்விட்டுச் சிரித்தான்.

"எப்படி?" என்று கேட்டாள் புரியாமல்.

"எல்லாப் பொண்ணுகளுக்கும் டெட்டி
தான் பிடிக்கும் என்று கேள்விப்பட்டு
இருக்கிறேன்... ஆனால் நீ
என்னடானா.." என்று அந்த குரங்கு
பொம்மையைப் பார்த்தான். அவள்
மடியில் வைத்திருந்த குரங்கைப்
பார்க்க அவனுக்கு
பொறாமையாகத்தான் இருந்தது

"எனக்கு இதான் பிடிக்கும். குரங்கு
எல்லாம் செம க்யூட் தெரியுமா?..
எங்காச்சு உயிருள்ள குரங்க பாத்தாக்
கூட அப்படியே பாத்துட்டே நிப்பேன்"
என்று ஆர்வாகக் கூறினாள்.

"என்னதான் டேஸ்டோ உனக்கு" என்று
நக்கலடித்தவனிடம் "என் டேஸ்ட்
எல்லாம் அப்படித்தான் இருக்கும்..
க்யூட்டா அமைதியா இருக்கறத விட
மங்கி மாதிரி இருந்தாத்தான்
பிடிக்கும்.. அப்படித் தான் எல்லாமே
சூஸ் பண்ணுவேன்" என்றவள்
டக்கென்று நாக்கைக் கடித்துக்
கொண்டாள்.

'அய்யய்யோ இவன் ஏதாவது
இவனைச் சொல்கிறோம் என்று
நினைத்துக் கொண்டாள்' என்று
நினைத்தவள் அவனை
ஓரக்கண்ணால் பார்த்தாள்.
கார்த்திக்கோ மதுவைப் பார்த்து
"ஏய்ய்ய உனக்கு இதை வாங்கித் தந்த
பாவத்துக்கு என்னை ஏதோ சொல்ற
போல" என்று தன் தாடையை
நிமிர்த்தியபடிக் கேட்டான்.

"இல்லை இல்லை... நான் அப்படி
நினைத்து சொல்லவில்லை" என்று
தான் எதனால் அப்படிச் சொன்னேன்
என்று விளக்கினாள். "ம்ம்" என்று
பொய்யாய் முறைத்தான் கார்த்திக்.

பின்பு வீடு வந்து சேர தன் கையில்
இருந்த பொம்மையை வேலுமணியும்
ஜானகியும் வித்தியாசமாகப்
பார்ப்பதை உணர்ந்தாள் மது...
கார்த்திக் அவர்களிடம் பொம்மை
வாங்கிய கதையைக் கூறினான்.

"அப்படியா மது" என்று ஜானகி
மதுவைப் பார்த்துக் கேட்க மதுவோ
நெளிந்தபடி நின்றாள். பிறகு எப்பவும்
போல எல்லாவற்றையும் முடித்து
விட்டு இரவு அவரவர் அறைக்குள்
புகுந்து விட்டனர்.

நன்றாக உறக்கத்தில் இருந்தவளின்
காதருகில் சென்று குனிந்த கார்த்திக்
"மது" என்று அழைத்தான்.


"ம்ம்" என்றாவாறு மது
தூக்கத்திலேயே அவனுக்கு
ரேஸ்பான்ஸ் செய்ய அவனுக்குச்
சிரிப்பு வந்தது.

"மது எழுந்திரு மது" என்று அவளை
எழுப்பினான். அப்போது தான் அது
கனவில்லை.. உண்மையிலேயே
அவன் அழைக்கிறான் என்று
கண்ணைத் திறந்தாள்.

எழுந்து கண்களைத் தேய்த்தவள்
"என்ன?" கொட்டாவி விட்டபடியே
கேட்டாள்.

"ஹாப்பி பர்த்டே மது" என்று சரியாக
பண்ணிரெண்டு மணிக்கு மதுவின்
கழுத்தில் ஒரு தங்கச் செயினை
அணிவித்தான் கார்த்திக்.
அந்தச் செயினின் டாலரில் Kவும் Mமும்
சேர்ந்தார் போல இருக்க அந்த இரு
எழுத்துகளுக்கும் நடுவே சிறியதான
ஒரு இதயம் அந்த இரு
எழுத்துகளையும் இணைத்து
இருந்தன.

ஒரு கணம் அதன் வேலைப்பாடை
ரசித்தவள் "தேங்கஸ் பார் த விஷ்ஸஸ் அன்ட் கிப்ட்" (thanks for the wishes and
gift) என்று நன்றி கூறினாள். பிறகு
இன்னோரு கிப்டைக் அவள் கையில்
வைத்தான்.. அதைப் பிரித்தவள் "இது
எப்படி... " என்று வியப்பால் கண்களை
விரித்துக் கேட்டாள். அந்த கிப்டில் மது
தன் அன்னை கையில் இருந்த
போட்டோ இருந்தது.. அவள் மட்டும்
இருப்பது போன்ற ஒரு ப்ளாக் அன்
வைட் போட்டோ ப்ரேம். மிகவும்
அழகாக இருந்ததைத் தன் கை
விரல்களால் வருடினாள் மது.

"வருணிடம் கேட்டு வாங்கினேன் மது" என்று அவள் மூக்கைப் பிடித்து
ஆட்டினான் கார்த்திக். "தேங்க்யூ...
ரொம்ப அழகா இருக்கு" என்று
கண்கள் மின்ன சொல்லினாள் மது.
கட்டிப்பிடித்து தாங்க்ஸ் சொல்லுவாள்
என்று எதிர்ப்பார்த்தவனுக்கு
கொஞ்சம் வருத்தம் தான். ஆனால்
அவள் நிலை அறிந்து எதுவும் அவன்
தன் முகத்தில் காட்டவில்லை.

"இன்னும் முடியவில்லை மது" என்று
அவள் கண்களை ஒரு வெள்ளை
துப்பட்டாவால் கட்டினான்.

"எழுந்திரு மது, இன்னும் இருக்கு"
என்று அவளை எழுப்பி மெதுவாகக்
கீழே கூட்டிச் சென்றான்.

"மது கட்டை அவிழ்க்கப் போகிறேன்.
ஆனால் நான் சொன்ன பிறகு தான்
கண்ணைத் திறக்க வேண்டும்" என்று
கூற "சரி" என்று ஒரு கையை
இடுப்பில் வைத்தபடி புன்னகை
செய்தாள் மது.

கார்த்திக் சொன்ன பிறகு கண்ணைத்
திறந்தவள் தன் முழுக் குடும்பமும், தன்
தோழிகளும் நிற்பதைக் கண்டு
ஆச்சரியத்தில் இரு கைகளால் வாயைப் பொத்தி..கணவனை விழி
விரித்து நோக்கினாள். அத்தை
மாமாவோடு கேக் வெட்டத்தான் கூட்டி
வருகிறான் என்று நினைத்தவள் இந்த
நள்ளிரவில் தன் குடும்பத்தையும்
தோழிகளையும் எதிர்ப்பார்க்கவில்லை.
பின் அனைவரும் வந்து வாழ்த்து
சொல்ல மது கேக்கை வெட்டி
கார்த்திக்கிற்கு முதலில் ஊட்டினாள்.
பின் அனைவருக்கும் கேக்கை
கொடுத்தனர்.

ஸ்வேதா தன் ஹஸ்பன்ட்டோடு
வந்திருந்தாள். அவளது கணவனிடம்
நலம் விசாரித்தவள் "எப்படி டி இங்க?
அதுவும் நைட் 12க்கு?" என்று கேட்டாள்.

"ஏய் மறந்துட்டயா.. என் சொந்த ஊரும்
இதான.. கார்த்திக் அண்ணா
எங்களிடம் நேற்று காலை போன்
செய்து சொன்னார்...அதான்
இன்னிக்கு ஈவ்னிங் என் அம்மா
வீட்டுக்கு வந்துட்டோம். குழந்தையை
அம்மாவிடம் கொடுத்துவிட்டு
வந்தோம்" என்றாள்.

"ஓஓ.. ஓகே டி... தாங்க்ஸ் பார் கம்மிங்"
என்று தோழியை அணைத்துக்
கொண்டாள்.

"சரி நாங்க கிளம்பறோம்" என்று
ஸ்வேதா சொல்ல "இருந்துவிட்டு
காலையில் போங்களேன்" என்றபடி
வந்தான் கார்த்திக்.

"இல்ல அண்ணா. பாப்பா முழிச்சுட்டா
ரிஸ்க். நாங்க கிளம்பறோம்" என்று
கூற இருவருக்கும் நன்றி கூறி
அனுப்பி வைத்தனர் கார்த்திக்கும்
மதுவும்.

பின் மிதுனாவும் சிவாவும் சிவாவின்
மனைவியும் கிளம்பினர். பின்
மதுவின் குடும்பத்தினரும் கிளம்ப
அவர்களைப் பார்த்து அனுப்பி வைத்து விட்டு வந்தான்.

கார்த்திக் உள்ளே வர மதுவும் ஜானகி
அம்மாவும் கேக் தட்டுகளை எடுத்துப்
போட்டபடியே பேசிக் கொண்டு
இருந்தனர். பின்பு தானும்
அவர்களுடன் பேசியபடி உதவி
செய்தான். வேலையை முடித்துக்
கொண்டு இருவரும் மேலே தங்கள்
அறைக்குச் வந்தனர்.

அறைக்கதவை சாத்திய மது
கார்த்திக்கை பின்னால் இருந்து
கட்டிப்பிடித்து, தன் முகத்தை அவன்
முதுகில் சாய்த்தபடியே நின்று
விட்டாள். கார்த்திக் திரும்ப முயற்சிக்க
"ப்ளீஸ் திரும்பாதிங்க" என்றாள்
மெதுவான குரலில்.

"தாங்க்ஸ் பார் எவ்ரிதிங்.
சொல்லப்போனா நானே என்
பர்த்டேவ மறந்துட்டேன். எ..எனக்கு
என்ன சொல்றதுனே தெரியல. ஏதோ
ட்ரீம்ல இருக்க மாதிரி இருக்கு. இந்ந
வீட்டுக்கு வந்ததுல இருந்து நீங்க
மட்டும் இல்ல அத்தை மாமா கூட
சின்னதா ஒரு குறை கூட
சொன்னதில்லை. என்னோட
பீலிங்ஸிற்கு மதிப்பு கொடுத்து
இதுவரைக்கு ஒரு நல்ல.... இல்ல...
ஒரு பெஸ்ட் ஹஸ்பன்டா இருக்கீங்க.
ஆனா என்னால தான் ஒரு நல்ல
மனைவியா இருக்க முடியல
கார்த்திக் .. உங்க கூட இருக்க
ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு
நிம்மதியா... பாதுகாப்பா தான்
இருக்கு.. ஆனா இன்னும் ஏதோ உள்ள
தடுக்கற மாதிரி.. ஏதோ.. என்ன
என்றே தெரியவில்லை. ஸாரி
என்னால உங்களுக்கு ரொம்பக்
கஷ்டம் கார்த்திக்" என்று சொல்லி
அவன் முதுகில் சாய்ந்தபடி கலங்கிய
குரலில் கூறினாள்.

அதுவரை அவள் பேசப்பேச தன்
மார்பின் மேல் இருந்த அவள்
கையைத் தட்டிக் கொடுத்தவன், அவள்
கலங்குவது தெரிந்ததும் அவளது
கையைப் பிடித்து மெதுவாய்
முன்னால் இழுத்தான். தன் முன்னாள்
நின்ற மதுவின் இரு கைகளையும்
மென்மையாய்ப் பிடித்தவன் "மது
என்னைப் பாரு" என்றான்.

மது அவனைப் பார்க்க "மது நல்லாக்
கேட்டுக்க..நீ என் மனைவி.. உன்னால
எனக்கு எந்த கஷ்டமும் இல்ல மது.
நான் சொன்னதுக்காக நம்ம
ஃபேமிலிஸ்காக நீ எட்டு வருஷமா
தாங்கிட்ட கஷ்டதிற்கு முன்னாடி இது
ஒன்னுமே இல்ல மது" என்று மதுவின்
கண்களைப் பார்த்துச் சொன்னவன்
"பர்த்டே அதுவுமா அழுதுவிடாதே மக்கு
மது" என்று அவளது நனி மூக்கின்
மச்சத்தை தொட்டுக் காட்டி சிரிக்க
மதுவும் சிரித்துவிட்டாள்.

"ஆனால்..." என்று மது வாய் திறக்க,
கார்த்திக் மதுவின் இதழின் மீது தன்
ஒற்றை விரலை வைத்து "நோ மது..
எதுவும் பேசமா போய்த் தூங்கலாம்"
என்றான் கார்த்திக்.

மது முகத்தை கழுவிக் கொண்டு வர
"மது நாளை மாலை நம்ம இரண்டு
பேரும் என் பாட்டி தாத்தா வீட்டுக்கு
போறோம். பாட்டி உன்ன கூட்டிட்டு வர
சொல்றாங்க. சிறுமுகை தான ஸோ(so)
லீவ் போட அவசியம் இருக்காது. இந்த
வீக் என்ட் வரைக்கும் அங்க
இருந்துட்டு வரலாம். மூனு நாலு செட்
ட்ரெஸ் எடுத்துக்க மது" என்றான்
கார்த்திக்.

"ம்ம் ஓகே" என்றாள் மது.
 

Yaazhini madhumitha

Well-Known Member
அடுத்த நாள் காலை மது எழ கார்த்திக்
பெல்டை கட்டிய படி நின்றிருந்தான்.

"அய்யோ டைம் என்ன? எவ்வளவு
நேரம் தூங்கினேன்? என்று
பதறியவளை "மது ஒரு அரைமணி
அதிகமா தூங்கிட்ட..அவ்வளவு தான்..
போய் குளித்து விட்டு வா.. நான்
உன்னை டைம்க்கு ஹாஸ்பிடல் ல
விட்டுவிடுகிறேன்" என்றான் கார்த்திக்.

மது குளித்து விட்டு வெளியே வர "மது
ஒன்ஸ் அகெய்ன் ஹாப்பி பர்த்டே"
என்று ஒரு துணிக் கவரை நீட்டினான்.

மேலும் "நான் கீழே இருக்கேன் மது..
ட்ரெஸ் மாத்திவிட்டு வா" என்று
கதவை சாத்தி விட்டு சென்றான்.

அதைப் பிரித்த மது அதில் அழகாக
குங்குமக் கலரில் லாங் சல்வார் கமீஸ்
இருந்ததைப் பார்த்தாள்.அதில்
ஆங்காங்கே இருந்த டிசைன் அழகாக
இருந்தது. அந்த ட்ரெஸை அணிந்து
அதற்குரிய மேக்கப் செய்து ஒரு கேட்ச்
கிளிப்பை மட்டும் குத்தி முடியை
ப்ரீயாக விட்டவள், கார்த்திக்
சொன்னபடியே மூன்று நாட்களுக்குத்
தேவையான துணிகளையும் எடுத்து
வைத்துக் கொண்டாள்.

கீழே வந்த மது, ஜானகி-வேலுமணி
தம்பதியரிடம் காலில் விழுந்து
ஆசிர்வாதம் பெற, அவர்களும்
வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

"சரி வாங்க எல்லாரும் சாப்பிடலாம்"
ஜானகி அழைக்க அனைவரும் உண்டு
முடித்தனர்.

"அத்தை நாங்க மூன்று நாட்களுக்கு
பாட்டி வீட்டில் இருக்கப் போகிறோம்..
அவர் சொன்னாரா?" என்று
கைகளைக் கழுவி விட்டு கேட்டாள்.

"நேற்றே சொன்னான்மா.. போய்விட்டு
வாருங்கள்..அவர்களுக்கு கார்த்திக்
என்றால் ரொம்பச் செல்லம்.
உன்னையும் ரொம்ப பிடிக்கும். போய்
ஜாலியா இருந்துட்டு வாங்க" என்று
சொல்லிக் கொண்டு இருந்தார்.

கார்த்திக் கிளம்பலாம் என்று சொல்ல
இருவரிடமும் சொல்லி விட்டு
கிளம்பினார்கள். போகும் வழியில்
நிலாவும் அரவிந்த்தும் கால் செய்து
விஷ் செய்தனர். பின் தன்
குடும்பத்தினருடனும் பேசிவிட்டு
வைத்தவள் கார்த்திக்கை திரும்பிப்
பார்த்தாள். அவன் ஏதோ
யோசனையிலேயே காரை ஓட்டிக்
கொண்டிருந்தான்.

"ட்ரெஸ் நல்லா இருக்கு. எப்போ
எடுத்தீங்க?" என்று பேச்சுக்
கொடுத்தாள்.

"........"

"ஹலோ.." என்று மது அவனை
மீண்டும் கூப்பிட "என்ன மது? என்னக்
கேட்டாய்?" என்று வேறு ஏதோ
யோசனையில் இருந்தவன் அவளைப்
பார்த்துக் கேட்டான்.

"என்ன யோசனை?" எனக் கேட்டாள்
மது.

"மது இன்று 3 மணிக்கே உன்னால் வர
முடியுமா?" எனக் கேட்டான் கார்த்திக்.

"ம்ம் ஓகே.. இதை சொல்லவா இப்படி
யோசித்துக் கொண்டு இருந்தீர்கள்"
எனக் கேட்டாள்.

"ஈவ்னிங் என்னன்னு சொல்றேன்"
என்று கார்த்திக் சொல்ல மதுவும்
தலை ஆட்டிவிட்டாள்.

மாலை வந்து அவளை காரில் ஏற்றிக்
கொண்டவன், அவளிடம் பேச்சுக்
கொடுத்தப் படியே காரை அவினாசி
ரோட்டில் இருந்து சிங்கநல்லூர்
ரோட்டிற்கு திருப்பினாள். அதை
கவனித்த மது "பாட்டி வீட்டிற்கு
மேட்டுப்பாளையம் ரோட்டின் வழியில்
தானே போக வேண்டும் " என்று
கேட்டாள்.

"ஒரு முக்கியமான வேலை இருக்கு
மது சிங்காநல்லூர்ல..முடித்து விட்டுப்
போவோம்" என்றவன் அதன் பின்
எதுவும் பேசவில்லை.

அவன் காரை நிறுத்திய இடத்தைக்
கவனித்த மதுவிற்கு உடல் கூசி
நடுங்கிவிட்டது. "இங்கே ஏன்
நிறுத்தினீங்க?" என்று எரிச்சலை
அடக்கியபடி கேட்டாள்.

"காரணம் இருக்கு மது... நம்ம லைஃப்
நல்லா இருக்கனும்னா நீ இத
ஃபேஸ்(face) பண்ணித் தான் ஆகனும்" என்று அமைதியான குரலில்
கூறியவன் "இறங்கு மது" என்று கார்
கதவைத் திறந்து இறங்கினான்.

மது இறங்காமல் இருக்க அவளது
பக்கம் சென்று கதவைத் திறந்து
"இறங்கு மது" என்றான்.

"என்னால முடியாது...ப்ளீஸ்..
புரிஞ்சிக்கோங்க..." என்று
மன்றாடினாள் மது.

"மது... என்மேல நம்பிக்கை இருக்கா
இல்லையா? நான்தான் உன் கூட
இருக்கேன்ல. இறங்கு" என்றான்
அவன்.

"......" எதுவும் பேசாமல் மது
இறங்கினாள். ஆனால் இறங்கிய
மதுவால் குமட்டலை அடக்க
முடியவில்லை. திடீரென அங்கு
இருந்த ஒரு மரத்திற்குப்பின்
சென்று வாந்தி எடுத்தாள்.

அதைப் பார்த்த கார்த்திக் காரில்
இருந்த வாட்டர் பாட்டிலை எடுத்துக்
கொண்டு மதுவிடம் சென்று அவளைப்
பிடித்து நின்றான். தண்ணீர் குடுத்து
அவளை ஆசுவாசப் படுத்தியவன்
"மது இந்த அளவுக்கா உனக்கு
அருவெறுப்பா இருக்கு?" என்று
கேட்டான்.

"ம்ம்" என்றாள் மது.

"சரி இங்க பாரு மது.. உன்ன இந்த
அளவுக்கு அருவெறுப்பு பட வெச்சவன
நீ சும்மா விடலாமா? உன் வாழ்க்கைல
நடந்த முக்கால்வாசி ப்ராப்ளமிற்கு
இந்தச் சம்பவம் தானே காரணம்".

ஏதோ சொல்ல வந்தவளைத் தடுத்து
"எத்தனை கஷ்டம் மது அதனால்
உனக்கு.. நீ மட்டும் இல்லாமல் உன்
குடும்பமும் கஷ்டப்பட்டதே.. அதான்
என்னைப் பிடித்து இருந்தும் கூட
விலகி இருக்க மது நீ... அதுவும்
இல்லாம கோவைல சீட் கெடச்சும்
சொந்த ஊர விட்டு கோழை மாரி
இன்னொரு ஊருக்கு போயிட்ட...
உன்ன இந்த மாதிரி சூழ்நிலைக்கு
தள்ளிற்கான் அந்த மிருகம். உன்ன
மாதிரி எத்தனை பொண்ணுகளோ
மது" என்று மதுவின் உள் இருந்த
கோவத்தை கார்த்திக்
தூண்டிவிட்டான்.

சிறிது நேரம் நின்ற "நான் இப்போது
என்ன செய்ய வேண்டும் மது" என்று
சிறு தைரியத்துடன் கார்த்திக்கை
பார்த்துக் கேட்டாள்.

"நாம இப்போ மேல போலாம் மது வா"
என்று அவன் சொல்ல இருவரும்
அங்கே சென்றனர். அங்கே இருவரும்
உள்ளே செல்ல "யாரு?" என்றபடி
உள்ளிருந்து வந்தான் அவன் அந்த
ஆசிரியர்.

முதலில் என்ன செய்வது என்று
தெரியாமல் சென்ற மதுவிற்கு,
அவனைப் பார்த்ததும் உடல்
முழுவதும் எரிந்தது. அவன்
கழுத்தை நெறிக்க வேண்டும் என்று
தோன்றிய எண்ணத்தை
அடக்கினாள். அவன் செய்தது
எல்லாம் கண் முன் வர மதுவின்
உடம்பு கோபத்தில் இறுகியது.

முதலில் யார் என்று தெரியாமல்
விழித்த அந்த ஆள் "மது..
மதுமதியா? என்றான்.

"மதுமிதா... எப்படி நியாபகம்
இருக்கும் எத்தனை பெண்களை
எந்த மாதிரி நிலைமைகளுக்கு
ஆளாக்கினாயோ?" என்று ஒரு
எட்டு முன்னாடி எடுத்து வைத்தபடி
கைகளை முன்னால் கட்டிக்
கொண்டு ஏளனமாகக் கேட்டாள்
மதுமிதா. மதுவின் குரலில் கோபமும்
நக்கலும் மிதமிஞ்சி இருந்தது.

அவனும் மறக்கவில்லை.
மதுமிதாவையும் அவள் கொடுத்த
அடியையும்.

"மாதா பிதா குரு தெய்வம் என்று
சொல்லுவார்கள்.. தெரியுமா?
குருவிற்கு அடுத்து தான்
தெய்வத்தை வைத்திருக்கிறார்கள்.
அந்த வார்த்தைக்கு நீ அர்த்தம்
உணர்ந்தது உண்டா?
தெரியவில்லை என்றால்
சொல்கிறேன் கேட்டுக்கொள்,
அம்மா அப்பா சொல்றத நம்பறமோ
இல்லையோ ஒரு குரு சொல்றத
எல்லாரும் நம்புவாங்க..
மற்றவர்களைப் போல அல்லாமல்
தன் குருதட்சனைத் தவிர எந்த ஒரு
எதிர்ப்பார்ப்பையும் பார்க்காமல்
இருப்பது குரு மட்டும் தான்" என்று
சொல்லி மது அவனை வெறித்துப்
பார்க்க அவனது முகம்
கன்றிவிட்டது.

"ஆனால் நீ...... ச்சை நினைச்சாவே
உடம்பெல்லாம் எரிகிறது. எப்படி டா
உன் மகள் வயதில் இருக்கும்
என்னிடம் உன்னால் தவறாக நடக்க
முடிந்தது" குரலை உயர்த்தி
அவனிடம் கையை ஓங்கிய மது "ச்சை
நான் அடிக்கக் கூட நீ தகுதி
இல்லாதவன்... முடிந்தால் திருந்து..
இப்படி இருந்து கொண்டு இந்தப்
பணியைக் கேவலப்படுத்தாதே"
என்றுவிட்டு மது விறுவிறுவென
வெளியே சென்று விட்டாள்.

மது போன திசையைப் பிரமித்து
ஒரு நிமிடம் பார்த்தான் கார்த்திக்.
தன்னவளுக்கு இவ்வளவு கோபம்
வருமா என்று நினைத்து அசந்து தான்
போனான். அவள் முன்னால் அவனை
அடித்து நொறுக்க வேண்டும் என்று
தான் அவன் வந்தது. ஆனால்
நடந்ததோ வேறு. தன்னிடம் பெட்டிப்
பாம்பாக இருப்பவள் இவனிடம்
சீறியவதைக் கண்டு அவனுக்கே
பேச்சு வரவில்லை. அவளை மனதில் மெச்சாமலும் இருக்க முடியவில்லை.

எத்தனை வேதனை இருந்திருந்தால்
இப்பவும் அவனிடம் அதை
வெளிப்படுத்தி இருபபாள் என்று
நினைத்த கார்த்திக் அந்த ஆளிடம்
திரும்பி, "உன்னை அடித்து நொறுக்க
வேண்டும் என்று தான் வந்தேன்.
ஆனால் ஒரு பெண்ணே அடிக்காமல்
சென்ற உன்னை அடித்தால் எனக்கு
தான் அவமானம். வாழ்வதற்கே
உன்னைப் போன்றவனுக்குத் தகுதி
இல்லை.. ஆனால் ஒன்று.. இன்னும்
ஒரு வாரத்தில் நீ இந்த க்ளாஸை மூடி
விட வேண்டும்... இல்லை என்றால்
காலி செய்ய வைத்து விடுவேன்."
என்று கார்த்திக்கும் அவனை
மிரட்டிவிட்டுத் திரும்பிவிட்டான்.
உண்மையிலேயே மது பேசிய
வார்த்தைகளைக் கேட்ட பிறகு
அவனைத் தொட்டு அடிப்பதற்கு
கார்த்திக்கிற்கு அருவருப்பாகத் தான்
இருந்தது.

திரும்பி வந்து காரை எடுத்தவன்
மதுவைப் பார்த்து புன்னகை செய்ய
மதுவும் புன்னகைத்தாள். அங்கு புயல்
போல பேசிவிட்டு வந்தவள் இங்கு
தன்னிடம் பூவைப் போல
புன்னகையைப் பூக்க அவனுக்கு
என்ன நினைப்பது என்றே
தெரியவில்லை.

கார் மேட்டுப்பாளையம் ரோட்டில்
சிறுமுகையை நோக்கிச் சென்றது.
மதுவிற்கு ஏதோ சுமையை இறக்கி
வைத்த நிம்மதி உணர்வு. அதே
நேரம் கார்த்திக் ஒரு டீ கடையில்
வண்டியை நிறுத்திவிட்டு "ஏதாவது
வேணுமா மது? சொல்லு இங்கேயே
கொண்டு வரச் சொல்கிறேன் " என்று
கார்த்திக்.

"உஹும்..எதுவும் வேணாம்" என்றாள்.

"பசிக்கலையா உனக்கு?" என
யோசனையாகக் கேட்டான்.

"இல்லையே" என்றாள். எப்படிப்
பசிக்கும் அவளுக்குத் தான் மனம்
எல்லாம் நிறைந்திருந்ததே.

பிறகு சென்று ஒரு டீயைக் குடித்து
விட்டு சிகரெட்டை ஊதியபடி
நின்றிருந்தான்.. கடைக்கு கொஞ்சம்
முன்னால் காரை நிறுத்தி இருந்ததால் ஸைட் மிரரிலும் ரியர் மிரரிலும்
அவனைப் பார்த்துக் கொண்டு
இருந்தாள் மது. மதுவிற்கு அவனது
அருகாமை மிகவும் நிம்மதியாக
இருந்தது.

'தாயின் கருவறையின் நிம்மதி..
தந்தையின் தோள் சாயும் நிம்மதி..
தோழியின் மடி சாயும் நிம்மதி..
என்னவனே!
உன்னை சரணடைந்தேன்!
தாய், தந்தை, தோழனாய் என
அனைத்துமாய் நீ இருக்க...
பூமித்தாயின் மடியில்
துயில்வது போல நிம்மதி!'
என்பதை உணர்ந்தாள் மது.

"சிகரெட் குடிக்கும் போது கூட அழகன்
தான்டா நீ" என்று நினைத்தவள்
அவன் தன்புறம் திரும்ப முகத்தைத்
திருப்பிக் கொண்டாள். அவள் பார்த்து
விட்டு திரும்பியதைப் பார்த்தவன்
"இன்னும் எத்தனை நாள் தான் டி..
இப்படி மறஞ்சு மறஞ்சு சைட் அடிக்கப்
போற" என்று மௌனமாய்ச்
சிரித்தான்.

சிகரெட்டை கீழே போட்டு அணைத்து
விட்டு வந்து காரில் ஏறி, காரை
சிறுமுகை நோக்கி கார்த்திக் செலுத்த
மது நேற்று சரியாக உறங்காத
அலுப்பிலும், நிம்மதியிலும் உறங்கி
விட்டாள்.

பயம், நிம்மதியின்மை என்று
எல்லாவற்றையும் இன்று மதுவின்
முகம் தொலைத்து இருந்ததைக்
கண்டான். அவளது முகத்தைக்
காதலும் மையலுமாக நோக்கியவன்
காரை நிறுத்தி அவள் புறம் சாய்ந்து
அவள் நன்றாக தூங்கட்டும் என்று
அவளது சீட்டை அட்ஜஸ்ட் செய்துவிட்டான். ஒரு நிமிடம்
அவளைப் பார்த்தவன் அவளின்
கற்றைக் கூந்தல் அவளின் முகத்தில்
விளையாடுவதைக் கண்டு பொறாமை
கொண்டவனாக "உனக்கு
இடமில்லை" என்று மனதினில்
சொல்லி அவளின் கூந்தலை ஓரமாக
விலக்கினான்.

அவளைத் தன் கைகளால் கொஞ்ச
வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றி
கன்னத்தை பிடிக்க நினைத்த கையை
ஸ்டியரிங்கில் வைத்துக் காரை
எடுத்தான்.
 

Janavi

Well-Known Member
நல்ல செயல் செய்வித்தார் கார்த்திக்....இனி மது மனம் மாறுமா....Nice ud sis
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top