அத்தியாயம் - 11

Advertisement

dhanuja senthilkumar

Well-Known Member
களவு கொண்டானடி தில்லையிலே

அத்தியாயம் – 11

“அடியேய் சிலுக்கு எழுந்திரிடி. பகலுக்கு என்ன உறக்கம்?” கிட்டத்தட்ட அரை மணி நேரமாக, போராடி கொண்டு இருந்தார் அம்பலம்.

இன்று வெளியூர் செல்ல வேண்டும். கடைகளுக்குச் சரக்கு வாங்க வேண்டும். நேரில் சென்றால் தான் வேலையாகும்.

காலையில் கடைக்குச் சென்றவர், மதிய உணவுக்கு வந்து தான் மனைவியிடம் மல்லுக்கட்டிக் கொண்டு இருக்கிறார் பாவம்.நேற்று இரவின் இனிமையை அள்ளித் தந்தது போலும்அரிவைக்கு, வேலைகளை முடித்து விட்டுப் படுத்தவள் தான் இதோ நல்ல உறக்கத்தில்.

அம்பலத்தான் சற்று பயந்து தான் போனார். கண்கள் கூட முழிக்க முடியாமல் ‘ம்’ கொட்டிக் கொண்டே தூங்கிக் கொண்டு இருந்தாள்.

"அடியேய் மாமி மேலுக்கு முடியலையா, சொல்லுக." என்று உலுக்க..

“மீசை...” என்று முனகியவள் மீண்டும் படுத்துக் கொண்டு அலும்பு பண்ண, எரிச்சல் ஆன அம்பலம் எதையோ யோசித்தவாறே,

“வா உமை..” என்று அழைக்க அடித்துப் பிடித்து எழுந்து அமர்ந்தாள் சிவகாமி, கண்ணைப் பிரிக்க முடியாமல் இரு கண்களையும் மாற்றி மாற்றித் திறக்க முயற்சிக்க.

வழமை போல் அப்படி ஓர் சிரிப்பு அம்பலத்தானுக்கு.

ஒரு வழியாக கண்ணை கசக்கிக் கொண்டு திறந்தவர், அறையின் வாசலை எட்டிப் பார்க்க, அங்கே யாருமில்லை என்பதை அறிந்தவள், அம்பலத்தானை முறைத்துப் பார்த்தாள்

“ஏன்டி அவ மேல இம்புட்டு வஞ்சம் பாவமுடி?”

“என்னைத் தவிர மத்த மனுசாள் எல்லாம் நோக்குப் பாவம் தான்யா!”

“என்னது யா வா?”

“ஆமா யா” என்றவள் கோபத்தில் அவரது மீசையைப் பிடித்து இழுத்து, கடித்து என்னன்னவோ செய்து விட்டுச் செல்ல,

போதை ஏறியது முதுமகனுக்கு.“சண்டாளி! சண்டை போட்டே சாச்சுப் புடுற மனுசன..” முனகிக் கொண்டவர், நேரம் போவதை அறிந்து வேகமாகத் தயார் ஆனார்.

அதன் பின் அவரது தேவைகளைக் கவனித்த சிவகாமி, அவருக்கு விடை கொடுக்க.

தனது தாயிடம் சென்றவர்,“வரேன் அம்மா” என்று நாச்சியின் காலை வணங்கிச் செல்ல,

“பத்திரமா போயிட்டு வா ராசா!” என்று திருநீறு பூசி விட்டார்.

ஒவ்வொரு முறை வாணிபம் செய்யப் போகும் போதும், அன்னையை வணங்கிச் செல்வது வழக்கம். இந்த முறை வைரம் கொள்முதல் என்பதால், மூன்று நாள் பயணம்.

அவர்கள் சமூகத்தில் உள்ள உறவுகள் அனைவரும் ஒன்றாகச் சென்று, அவரவர் கடைக்கு வாங்கி வருவர்.

“என்னடி என் புருஷன் ஊருக்குப் போரான்னு, சந்தோசமா குதிப்ப போல..?”

“ப்ச்.. வேலைன்னு வந்தா, போய்த் தானே ஆகணும். நான் என்ன சின்னப் பிள்ளையா?”

“அது சரி. எனக்குத் தான் வருத்தமா இருக்கு.”

“அடேயப்பா, ரொம்ப வருத்தம். என்னை விட்டு எத்தனை வருஷம் தள்ளி இருந்தீங்க. சும்மா போங்கோ!”

சிவகாமி கோபமாகச் சொல்ல, பாவமாகப் பார்த்து வைத்தார் அம்பலம்.

அவரது பார்வை மேலும் கோபத்தைத் தூண்ட,“என்ன பார்வை வேண்டிக்கிடக்கு? கிளம்புங்கோ!”

“பேசவே விடாதடி! நீயே பேசு!”

“எதுக்குச் சாமி நீங்க பேசி காரணம் சொல்லிறேன் சொல்லி நேக்கு வலியெடுக்க, பேசாம இருக்குறதே மேல்!”

போகும் போது தர்க்கம் எதற்கு என்ற ரீதியில், இவர்களது உரையாடலை கண்டும் காணாமல் பார்த்துக் கொண்டு இருந்தார், நாச்சி.

அதன் பின் அம்பலம் பேசாமல் படியில் இறங்க, அவரது கையைப் பிடித்துத் தடுத்தவள்,“பார்த்துப் பத்திரமா போயிட்டு வாங்கோ!” என்று சிரித்து முகமாகக் கண் அடித்துச் சொல்ல.

அவருக்கும் புன்னகை. சரியென்று தலை அசைத்து, விடை கொடுத்துச் சென்றார்.

அவர் சென்றதும் வழமை போல், தனது மாமியிடம் வந்து அமர்ந்து கொண்டாள், சிவகாமி.

அதன் பின் இருவரும் பேசிக் கொண்டே சில வேலைகளைச் செய்தார்கள். மாலையில் விளக்கேற்றி பூஜை செய்தவள், திண்ணையில் வந்து அமர, பொன்மொழி வந்து சேர்ந்தாள்.

“வாடி! வர நேரமா இது?”

“வீட்டுல வேலை. அம்மா தனியா செய்வாங்க, அதான்.” என்றவள் ஆவலுடன் அமரப் போக,

அவளது கைகளைப் பற்றித் தடுத்தவள்,“வா, மாமியப் பார்த்துட்டு மாடிக்குப் போகலாம். சிலு சில்லுனு காத்து வரும்.”

“சரிடி..” என்றவள் தயங்கியவாறே நாச்சியிடம் வந்தாள்.

“மாமி, பொன்மொழி வந்து இருக்கா, பாருங்கோ!”

“வா வா, வாத்தி பொண்ணா. வா சாமி.” என்றவர் கால் தொட்டு வணங்க, அவளை ஆசிர்வதித்தார்.

“கண்ணுக்கு நிறைவா நல்லா இருப்பீக சாமி.” என்றவர் கைகளைப் பிடித்துக் கொண்டு,

“எங்க குலசாமிக்குத் துணையா பார்த்துக்கிட்டிங்க. ரொம்ப நன்றி, ஆத்தா.” என்றவரது கண்ணில் நீர் வர, பதறிப் போனார்கள் அரிவை பெண்கள்.

“ஆச்சி என்ன ஆச்சி?”

“மாமி அழாதீங்கோ, நேக்கும் அழுகை வர்றது.” சிவகாமியும் கண்ணீர் விட,

பொன்மொழி இருவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டு இருந்தாள்.

பழமையான உறவு என்றாலும் இவர்களது உறவு சற்று விந்தையாக இருந்தது.

மாமியார் அனுசரணையாக இருக்கும் காட்சி பார்த்ததுண்டு என்றாலும், இவர்களது பிணைப்பு ஒரு படி மேல் என்று தான் தோன்றியது, பெண்ணுக்கு.

*

“மாமி, நாங்க மாடியில் பூ தொடுத்துண்டு இருக்கோம். எதுனாலும் குரல் கொடுங்கோ”

“போங்க, போங்க சாமி. நான் இங்கன பார்த்துக்கிடுவேன்.”

அவரிடம் விடைபெற்ற பெண்கள் இருவரும், மாடிக்குச் சென்று அங்குள்ள முல்லை மலர் கொடிக்குச் சென்று, அதன் நிழலில் அமர்ந்து கொண்டனர்.

“சொன்ன மாதிரியே வந்துட்டியே! அவுளோ ஆர்வமோ என்ன? கதையைக் கேட்க.”

“இருக்காதா பின்னே. என்ன நடந்துச்சுனு யாருக்குமே தெரியல. ஏன், உங்க அம்மா கிட்ட கூடக் கேட்டுப் பார்த்துட்டேன். பாவம் அவுங்களுக்கு ஒன்னுமே தெரியல.”

பொன்மொழியைப் பார்த்து இதழ் பிரியாமல் சிரித்தாள், சிவகாமி.

“என்ன மாமி சிரிப்பு? உண்மையா எனக்கு உன்னைப் பார்த்தா ஆச்சரியமா இருக்கு. கொடுத்து வச்ச மகராசினா நீ தான்டி!”

“கண்ணு வைக்காதே…”

“சரி சரி. நீ சொல்லு அப்புடி என்ன தான் நடந்துச்சு?”

“ப்ச்” என்றவள் தனது பதிமூன்று ஆண்டுகள், தன்னைச் செதுக்கிய பக்கத்தைச் சொல்லலானாள்.

“நேக்கும் அவருக்கும் திருமணம் முடிந்து, என் தோப்பனார் என்னை அவா கையில் பிடிச்சுக் கொடுத்துண்டு போய்ட்டா. அவரையும் அம்மாவையும் நான் அப்போ தான் பார்த்தேன். அதன் பிறகு பஞ்சாயத்துல பார்த்தது.”

“என்னடி சொல்லுற?”

“உன் வீடு மாதிரி இல்லை பொன்மொழி. இவா எல்லாம் ரொம்பப் பழமைவாதி. உன் தோப்பனார் உன்னை இன்னும் படிக்க வைத்துத் திருமணம் செய்ய நினைக்கறார். இருபது வயதுக்கு மேல் என்றாலும், பெண்ணுக்குப் படிப்புதான் முக்கியமா யோசிக்கிறார். நேக்கு அந்த வரம் பிரதகம் கொடுக்கலை... அவாலையும் ஒன்னும் சொல்லுறதுக்கு இல்லை, பாவம்!

அதை விடு! நான் இந்த வீட்டுல எப்புடி இருந்தேன் தெரியுமா? நோக்கு, மாமியைப் பத்தி தெரியாது.அவா மனுசி இல்லை. என்னை ரட்சிக்க வந்த தெய்வம். இன்னும் சொல்லப் போனா, பாரதி கண்ட புதுமை பெண்!”

சிவகாமி பழைய நினைவில் சொல்ல பொன்மொழிக்கு பேராவலாக இருத்தது.

…………………….

1967 அன்று, திருமணம் முடிந்து அம்பாஸிடர் காரில் வந்து இறங்க, மீனம்மாள் ஆரத்தித் தட்டுடன் தயாராக இருந்தாள்.

வீட்டில் பெரிய பெண் என்பதால் அவருக்கு நாச்சி முன் கூட்டியே சொல்லி வைத்திருந்தார். அடுத்தடுத்து பிள்ளைகளும் வந்து வரிசையாக நின்றது.

அம்பலத்தான் முகம், இறுகிப் போயி நின்ற தனது பக்கத்தில், நெஞ்சின் தூரம் மட்டுமே நின்ற பிள்ளையை ஒரு முறை திரும்பிப் பார்க்கும் போது, ஐயோவென்று இருந்தது மனிதனுக்கு.

ஆரத்தி எடுத்தவுடன் தோளில் இருந்த துண்டை வேகமாக உதறிக்கொண்டு அவர் உள்ளே செல்ல.

ஆர்வமாக அந்த வீட்டைப் பார்த்துக் கொண்டு உள்ளே சென்றாள், சிவகாமி.

பெண் பாவாடை சட்டையில் இருந்தது.கழுத்தில் உள்ள மாலையை அவளே கழட்டி கையில் வைத்துக் கொண்டு, நாச்சியைப் பார்த்து “மாமி, இதை எங்க வைக்கிறது?”

அம்பாள் சிலை போல் இருக்கும் அந்தப் பெண்ணைப் பார்த்து மயங்கிய நாச்சி,“அங்கன வைச்சுட்டு விளக்கு ஏத்துங்க பாப்பா. மீனம்மாள்,அன்பு,உலகு,சரசு,சக்தி” என்று அழைக்க,

அந்த வீட்டின் அத்தனைப் பெண்டுகளும் வருசையாக வந்தது.

“பாருங்க. இது தான் உங்க மதனி. நல்லாப் பேசி பழகிக்கிடுக. என்ன வேணுமோ பார்த்து செஞ்சுக்கிடுக. ஒருத்தருக்கு ஒருத்தர் ஒத்தாசையா இருக்கனும். என்ன..?”

“சரிங்க அம்மா.” என்று கோரஸ் பாடியது பெண்கள் குழு.

நாச்சி அவரது வேலையைப் பார்க்கச் செல்ல, அவருடன் மீனம்மாள் செல்ல, மற்ற பெண்கள் அனைவரும் சிவாவை சுற்றிக் கொண்டு, கையைப் பிடித்துக் கொண்டு, அவர்களுக்குத் தெரிந்த விதத்தில் நட்பு பாராட்டியது.

“ஏய் நீ பூசாரி சாமி பொண்ணு தானே! கோவில்ல பார்த்து இருக்கேன். என் வகுப்பு தானே! ஏன் பள்ளிக் கூடத்துக்கு வரலநீ?” சக்தி கேட்க

“நேக்கு வசதி இல்லை, ஜீவனமே இல்லை. இதுல எப்படி படிக்க? என் தோப்பனார் பாவம் தானே! அதான் வரலை.”

“ஓ! சரி விடு. அண்ணன் பார்த்துக்கும். எங்களை அவுக தான் பார்த்துக்குறாங்க.”

“ஹ்ம்ம் மாமி சொன்னா, ரொம்ப நல்லவர்.” என்றவள்,

“சரி விளையாடுங்கோ. நான் மாமிக்கு உதவி வேணுமான்னு கேட்டுண்டு வரேன்.” என்றவள் அடுக்களைக்குச் சென்று,

“மாமி, நான் ஏதாவது உதவி செய்யவா?” என்று கேட்க.

சமைத்துக் கொண்டு இருந்தவர், அவளது கேள்வியில் முகம் மலர..

“அதெல்லாம் வேணாம் சாமி. போயி விளையாடுக.” என்றவர், தனது வேலையைப் பார்க்க.

அவளும் சரியென்று நாத்திகளுடன் நொண்டி விளையாடச் சென்று விட்டாள்.

திருமண விஷயத்தை கேள்விப் பட்டு உமையாள் தாய் கிளம்பி இருக்க,

சிவநேசனும் கிளம்பி அடித்துப் பிடித்து ஓடி வந்தவர், அம்பலத்தானைப் பார்க்க விரைய, அவரோ கடைக்குச் செல்ல ஆயுதமாகிக் கொண்டு இருந்தார்.

“அம்பலம்..” என்றவரது கூச்சலில், அம்பலத்தான் வெளியில் வர.

சிவநேசன் “என்னடா மாப்புள்ள? நம்ம பூசாரி பொண்ண கட்டிகிட்டியாமே! என்ன செய்தி?” என்று படப் படத்தவரைப் பார்த்து,

“என்னை எதுவும் கேட்காத. எனக்கே தெரியாது. உங்க ஆச்சி கை காட்டி கட்டிக்கிட சொன்னாக. கட்டிகிட்டேன்!”

“அப்போ,உமையாள்..”

“தெரியலடா! ஐத்த வேற செய்தி கேட்டு வந்துக் கிட்டு இருக்காம். சிவா அண்ணே வந்து சொல்லிட்டுப் போச்சு.”

“உங்க வூட்டு மக்க மனுஷா உறவுக்கெல்லாம் தெரியுமா?”

“என்னைத் தவிர எல்லாத்துக்கும் தெரியும் போல. அப்புச்சி கிட்ட கேட்டுத் தான் நடத்தி இருக்காக. உமையாளுக்கு வேற மாப்புள்ள பார்க்கச் சொல்லி இருக்காக போல..”

“அது சரி... யோசுச்சு செய், மாப்புள்ள. ஆச்சி முடிவு இது.”

“ஹ்ம்ம்” என்றவர் ஒரு முடிவுடன் தான் இருந்தார்.

அவர் எடுத்த முடிவு, அவரையே பதம் பார்க்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை, பாவம் அவர் அறியவில்லை.

“சரி, பொண்ணு எங்கடா?”

“என்ன கேட்ட..?”

“உன் பொஞ்சாதி எங்க..?”

முடிந்த மட்டும் முறைத்த அம்பலத்தான்,“அங்கன பாரு..” என்று கை காட்ட.

பிள்ளைகளோடு பிள்ளைகளாக, பாவாடை சட்டையில் நொண்டி அடித்துக் கொண்டு இருந்தாள், சிவகாமி.

சிவநேசனுக்கு பக்கெனச் சிரிப்பு வந்து விட்டது. அடக்க மாட்டாமல் சிரித்து வைக்க. ஏக கடுப்பில் நின்ற அம்பலத்தான், சிவநேசன் செயலில் கொதித்துப் போனார்.

“சிரிச்சா, கொண்டே புடுவேன் பார்த்துக்கிடுக.”

“வேற என்ன மாப்புள்ள? இம்புட்டு குட்டியா பாப்பாவை புடுச்சு கையில கொடுத்து இருக்காக, ஆச்சி.”

“நானும் அவ கூடச் சேர்ந்து நொண்டி அடிக்கனும் போல. என்னால அந்தப் புள்ளய பொஞ்சாதியா கற்பனை கூடப் பண்ணிப் பார்க்க முடியல, மாப்புள்ள. சின்னச் சிட்டுக் குருவி போல இருக்கு. எங்க அம்மைய என்ன சொல்ல..?”

“ப்ச் ஆச்சி விசியம் இல்லாம பண்ணுற ஆள் இல்லை, மாப்புள்ள. பார்ப்போம். சரி அடுத்து என்ன செய்யப் போற?”

“ஐத்த வரட்டும். பேசி முடிவெடுப்போம்.”

“சரி பாரு. விசியம் கேள்விப் பட்டு கொஞ்சம் அதிர்ச்சி ஆகிப் போச்சு. அதேன் ஓடி வந்தேன். கடைக்குப் போறேன்.” என்றவர்

சிவகாமியிடம் சென்று “பாப்பா, உன் பெரு என்ன?” கேட்க.

போட்டாளே ஒரு போடு!

“சிவகாமி அம்பலத்தான்!” புருவத்தை ஏற்றி ஒரு தோரணையாகச் சொல்ல,

அம்பலத்தானுக்கே அதிர்ச்சி தான்.

நெஞ்சைப் பிடித்துக் கொண்டார் சிவநேசன்.“அடி ஆத்தி!”

சும்மாவா பின்னே, திருமணம் முடிந்து சில நொடிகளில் சிவகாமியின் கையைப் பற்றிய நாச்சி, தனது மருமகளை செதுக்கத் தொடங்கி விட்டார்.

அவளுக்கு விளங்கும் வகையில் சிலவற்றைசொல்லிக் கொடுக்க, அதில் முதலில் அம்பலத்தானின் உறவை அழுத்தமாகப் பதிய வைத்தது தான். அதைச் சரியாகப் பிடித்துக் கொண்டாள், சிவகாமி.

அக்காலத்தில், பால் வடியும் முகமென்றாலும் திருமணம் செய்து வைத்து விடுவார்கள். அது தொடர் என்றாலும், நன்கு படித்து படிப்பறிவு கொண்டு வாழும் அம்பலத்தானுக்கு, இது பெரும் குற்றமாகவே பட்டது.

அறுபதுகளில் இது வழமைச் செயல் என்றாலும், அதனை மாற்ற எண்ணினார், அம்பலத்தான்.

மகன் இப்படி யோசிக்க,

மகனுக்கு ஏற்றவாறு மருமகளை எவ்வாறு தேற்றலாம் என்று யோசித்தார், நாச்சி.

அவரது சிந்தனை முற்போக்கு என்றாலும், அவர் சறுக்கி விழுந்தது என்னவோ சிவகாமி அழகில் தான்.

தங்களது உறவில் இருந்து மாறு பட்ட தோற்றம்,நிறம்,சுறுசுறுப்பு இதையெல்லாம் பார்த்தவர், குலம் கோத்திரம் பார்க்க வில்லை.

அந்த அளவிற்கு அவரைச் செயல் பட வைத்து விட்டாள், குட்டி சிவகாமி..!

Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
n.palaniappan

Lively lovely
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top