அத்தியாயம் 10

Advertisement

dhanuja senthilkumar

Well-Known Member
கதம்பவனம் - 10

ராஜன் தனனுடைய கையைப் பிடிக்கவும் நடுக்கம் கொண்டது அரிவை பெண்.ராஜனிடம் பேசி கொண்டே இருந்தவள் அவன் தன்னை நெருங்கி அமர்ந்ததைக் கவனிக்க வில்லைப் பாவம்.கள்ளன் அந்த அளவிற்கு அவளைப் பேச்சால் திசை திருப்பிக் கொண்டு இருந்தான்.

அவனையும் ஒன்றும் சொல்வதற்கில்லை முதல் முறை தன் மனைவியுடன் அதுவும் மனம் தெளிந்து பேசுகிறான்.இதில் புது மணமகன் என்ற பதவி வேறு…….. அவனது நிலையைச் சொல்லவா வேண்டும்.

மூச்சு காற்று முகத்தில் பட அவனிடம் பேசி கொண்டு இருந்தவள் அப்போது தான் பார்த்தாள் தங்களது நெருக்கத்தை அதுவும் கையை இறுக்கப் பற்றிக் கொண்டதை.அவனது நெருக்கத்தில் பதறியவள் "என்னது இது தள்ளி உட்காருங்க"

அவளது பேச்சில் ஏக எரிச்சல் நமது காளைக்கு “நான் ஏன் தள்ளனும் இப்படி உட்கார தானடி காலம் முழுக்கச் சாசனம் எழுதி கொடுத்து இருக்கேன்”

இப்பொது அவனது பேச்சில் எரிச்சல் கொள்வது இவள் முறையிற்று “உங்களுக்கு நல்ல விதமாவே பேச தெரியாத”

“நானும் நல்லதான்டி பேசிட்டு இருந்தேன் ஒரு ஆறு வருஷத்துக்கு முன்னாடி வரை” என்றதும் இன்னும் கோவம் பெண்ணுக்கு.இருக்காதா பின்னே அவளது தமக்கை ராஜமாதங்கி திருமணம் முடிந்து வந்து ஆறு வருடம் ஆகிறது அதனைத் தான் பொடி வைத்துச் சொல்கிறான் இந்த எமகாதகன்.

“உங்கள!!!! எப்போ பாரு என்ன எங்க அக்காவ இழுத்து பேசுறது இப்போ நமக்குள்ள பேசும் போது அவ எதுக்கு வரா ? நான் உங்க மனைவி நீங்க என் கணவன் பேச்சு நம்பள பத்தி தான் இருக்கனும் சொல்லிட்டேன்.இனி இது போலப் பேச்சு வந்தா நான் பொட்டிய கட்டிட்டு எங்க அம்மா வீட்டுக்கு வந்துடுவேன்”

அவளது பேச்சில் நியாயம் இருந்தாலும் தன்னை விட்டு எப்படிப் போவேன் என்று சொல்லுவாள் கோபம் வர.

“ஒய்!..... என்ன சொன்ன திரும்பச் சொல்லு பார்ப்போம்" என்றவன் இன்னும் நெருங்கி வர அவனது தோரணையில் பயந்தவள் பின்னே சென்றாள்.

சும்மாவே அவன் உயரம் அதற்கேற்ற உடம்பு என்று அவளை விட பலமாக தெரிந்தான் அவளோ அரைக்காப்படி அவன் நெருங்கினால் என்ன செய்ய.அதிலும் இன்று வேட்டியில் இன்னும் உயரம் கூடி நின்றான் சொல்லவா வேண்டும்.

அவன் நெருங்க நெருங்க அவளது குரலின் அளவும் குறைந்து கொண்டே தான் போனது எங்கே தன்னை அடித்து விடுவானோ என்ற பயம் வேறு பெண்ணுக்கு.

"என்னங்க" பயத்தில் மரியாதை தானாக வந்தது இப்போ எதுக்கு இப்படி.

"எப்படி"|

ஐய்யோ! வெளில எல்லாரும் இருக்காங்க நீங்க என்னடானா வம்பு பண்ணிக்கிட்டு இருக்கீங்க அதே பல்லவியைப் பாட

"முத்தம் வேணும் கொடுத்துட்டு போ"

என்னது !.............. என்று அதிர்ந்து நிற்க அந்த இடைவேளை அவனுக்குப் போதுமானதாக இருக்க நெருங்கி அவளது தாடை பற்றிக் குனிந்து இதழ் உரசும் நேரம் கதவு தட்டப்பட்டது.அந்த கரடி வேறு யாராக இருக்கக் கூடும் நமது மாதங்கியே தான்.

இப்பொது ராஜனின் முகத்தைப் பார்க்க வேண்டுமே பயம் போய்ச் சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது விமலாவிற்கு

"என்னடி பண்ணுற விமலா வெளில வா. நலுங்கு வச்சு சாப்பாடு போட வேணாமா என்னமோ யாருக்கோ வந்த விருந்துனு கதவ அடச்சுகிட்டு இருக்க” என்று கத்த.

ராஜனுக்கு ஏக கடுப்பு பொதுவாக இது போல் சமயங்களில் ஆண்களின் உணர்வு மட்டு படுவது என்பது முடியாத காரியம்.பெண்கள் தங்களின் உணர்வை மறைப்பது போல அவர்களால் அத்தனை எளிதில் முடியாது.

ராஜன் படும் அவஸ்தையைப் பார்க்க சிரிப்பு வந்தது விமலாவிற்கு.அவனது நெஞ்சில் கை வைத்து நக்கலாகச் சிரித்துக் கொண்டே தள்ளினாள்.சும்மாவே நமது காளைக்கு மூக்கின் மேல் நிற்கும் கோபம் இப்பொது அவளது சிரிப்பு அவனுக்கு இன்னும் கோபத்தை தர.

கதவு உடைந்தாலும் சரியென்று எண்ணியவன் இன்னும் அவளது தாடையை இறுக்கப் பற்றித் தன்னை நோக்கி இழுத்து அடித்தானே பார்க்கலாம் தனது முதல் முத்தத்தை.எதிர்பாரா சமயம் அவனது அதிரடி அதிர்ச்சி கொடுக்கத் துள்ளி தள்ளி தனது எதிர்ப்பை தெரிவித்தாள்.

ஹ்ம்ம்........ விடுவானா அவன் அதுவும் புது மாப்பிள்ளை.இலை மறை காய் மறையாக அவ்வப்போது தொட்டு பார்த்த கண்கள் இதோ தனது கைகளில்…..அனைத்தும் கன கச்சிதம் என்ற சான்று வழங்கி அவளைத் துள்ள துடிக்கச் செய்தான்.மூச்சு முட்டி சாகத் தான் போகிறோம் அவனது முத்த வேட்கை அத்தனை பயத்தைக் கொடுத்தது அவளுக்கு.

வெளியில் கதவு உடைபட இதற்கு மேல் முடியாது என்று எண்ணியவள் அவனைப் பிடித்துத் தள்ளி தன்னை விடுவித்துக் கொண்டு ஓடி போய்க் கதவை திறக்க அங்கே காளியாக நின்றாள் மாதங்கி.

அவள் எதுவோ சொல்ல போக விமலாவின் பின்னிருந்து கொழுந்தன் வர நமது மாதங்கி ஆ..... என்று நின்றாள்.விமலாவிற்கு வழக்கமே இல்லாத பழக்கமான வெட்கம் வேறு.இந்த சூழ்நிலையைச் சமாளிக்க முடியாமல் இரு பெண்களும் தவிக்க.ராஜன் ஒன்றுமே நடவாதது போல் ஆண்கள் கூட்டத்தில் கலந்து கொண்டான்.

அவன் சென்ற பிறகு தங்கையை நோக்கி பாம்பை போல் படம் எடுத்த மாதங்கி “ஏண்டி தம்பி உள்ர இருகார்னு சொல்ல வேண்டியது தானே எவ்வுளவு நேரம் கதவை உடைக்கச் சொல்லு”

தமக்கையின் கேள்விக்குப் பதில் சொல்லும் நிலையில் விமலா இல்லை போலும் நடக்கும் கூத்தை பார்த்து கொண்டு இருந்த ஓரகத்திகள் அவளைக் காக்கும் பொருட்டு.

“அக்கா இவள விடுங்க நேரம் ஆகுது நீங்க சாப்பாடு எடுத்து வைங்க.மாமா முறை உள்ளவங்களுக்குப் பணம் பாக்கு வைக்கணும் எடுத்து வைங்க அத்தை உங்களைத் தேடிட்டு இருக்காங்க” என்க

“அட ஆமா சீதா அதை மறந்துட்டேன் பாரு நீ இவள பாரு நான் அத்தை கிட்ட கேட்டு எடுத்து வைக்கிறேன்” என்றவள் செல்ல மாதங்கியின் தலை மறையும் வரை அமைதியாக இருந்த தாமரையும்,அமுதவும் சீதவுடன் சேர்ந்து கொண்டனர் வசமாகச் சிக்கினால் விமலா

"என்ன சீதாக்கா ரொம்ப நேரம் நம்பக் கொழுந்து கண்ணுலயே படல நீங்க பார்த்தீங்களா என்ன"

"இல்லையே அமுதா நான் பார்கலையே ஏ! விமலா நீ உன் புருஷனை பார்த்த" போச்சு போச்சு இரண்டு பேரும் தனியா இருந்தது தெரிஞ்சுது கேலி பண்ணியே கொன்னுடுவாங்க மனதுக்குள் அலறியவள் வெளியில் ஒன்றும் இல்லை என்பது போல்,

"இல்லையேக்கா" என்றாள் முகத்தில் அத்தனை தவிப்பு அவள் சொன்னதை நம்பி விடுவார்களா என்ன

அப்படியா போலியாக வியந்தார்கள் அது மட்டுமா தாமரை சீதாவிடம் திரும்பி “அக்கா காலையில நீங்க விமலாவுக்கு ஒரு பொட்டு வச்சுவிட்டிங்கள அதே மாதிரி ராஜன் தம்பிக்கும் வச்சிங்களா என்ன"

ச்ச... ச்ச.... எந்த ஆம்பள டி ஸ்டிக்கர் பொட்டு வைக்குறான்

“அப்போ இல்லங்கிறிங்க”

“ஆமா”

“உங்களுக்கு வெளி விவரம் தெரியலக்கா இப்போ காலம் மாறி போச்சுப் பொண்ணுகளுக்குப் பதில பசங்க தான் பொட்டு வச்சுக்குறாங்க"

"இது என்னடி கூத்து எந்தக் குடும்பத்துல இப்படி இருகான் ஆம்பள"

"எல்லாம் நம்பக் குடும்பத்துல தான் அதுவும் நம்ம சின்னக் காளை அங்க பாருங்க கொழுந்து கன்னத்துல" தாமரை சீதாவின் தாடையை திருப்பி ராஜனை காண செய்ய
ஐய்யோ! ஐய்யோ! என்று வெளிப்படையாகத் தலையில் அடித்துக் கொண்டால் விமலா

ஓரகத்திகள் அனைவரும் கிளுக்கி சிரிக்க அவர்களது சிரிபொலியில் ராஜன் திரும்பி பார்க்க விமலா அவனை முறைத்துக் கொண்டு இருந்தாள் "என்னடி" வாய் ஆசைவில் அவன்

இவளோ ஏக கடுப்பில் நெற்றியை தொட்டு காட்டி அவன் கன்னத்தைப் பார்க்குமாறு செய்கை செய்ய அவளது செய்கை புரியாமல் குழம்பியவன் எழுந்ததே வந்துவிட்டான்.

இவர்களது மௌன பாஷை இன்னும் அவர்களைக் கேலி பேச தூண்ட அவனோ அதற்கு மேலும் தூபம் போடும் படியாக எழுந்து வர ஐயோ!... என்று ஆகிப்போனது விமலாவின் நிலை இனி இவர்களைச் சமாளிப்பது அத்தனை எளிதல்ல எண்ணியவள் பிடித்தால் ஒரு ஓட்டம்.

அவள் ஓடுவதையும் அண்ணிகள் சிரிப்பதையும் பார்த்தவன் “என்ன அண்ணி என்னமோ சொன்னா எனக்குப் புரியல என்னான்னு கேட்க வந்தா ஓடுறா” படும் அக்கறையாக ராஜன் கேள்வி கேட்க இது போதுமே அவர்களுக்கு.
அதுவா தம்பி சில சில ஆம்பளைங்க கன்னத்துல பொட்டு வச்சு கிட்டு சுத்துறாங்களாம்”

"இது என்ன அண்ணி கிறுக்கு தனமா இருக்கு யாரு அவனுங்க"

இதோ என்றவள் முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்து நீட்ட முதலில் புரியாமல் பார்த்தவன் பிறகு தனது கன்னத்தில் உள்ள பொட்டு அனைத்தையும் சொல்ல அசடு வழிந்தான் இதுக்குத் தான் ஒடுனாள ஐய்யோ! .....சமாளிக்கனுமே என்று பதறியவன் வெளியில் என்ன சொல்லி சமாளிக்க யோசித்தவன்

"என்ன இப்போ என் பொண்டாட்டி பொட்டு தானே"

“ஆமா ஆமா உங்க பொண்டாட்டி பொட்டு தான்” சீதா பின் பாட்டு பாட

ஐய்யோ!!!! மறந்துட்டேன் பாருங்க அப்பா ஒரு வேலை சொன்னாரு நான் போய் என்னான்னு பார்த்துட்டு வரேன் அவர்களிடம் தப்பிக்கச் சொல்ல அவன் முடிக்கும் முன்னே

“ஆமா!... ஆமா!.... வேலை தானே முக்கியம்” அனைவரும் அதே போல் கோர்ஸ் பாட ராஜனும் ஓடியே விட்டேன்.இனி எந்த வித சாமாளிப்பும் இங்கு எடுபடாது அல்லவா அதான் இந்த ஓட்டம்.அவனது வேகத்தைப் பார்த்த பெண்களுக்கு அப்படி ஒரு சிரிப்பு சிரிப்பொலி கொலுசின் கீதமாக.

ஒரு வழியாகப் பேச்சும் கேலியுமாக நல்ல படியாக விருந்து முடிய. சிறியவர்களின் இணக்கம் கண்டு அவர்களை முன்னே செல்ல விட்டு சிறிது நேரம் சென்று பெரியவர்கள் கிளம்பினர்.

மாதங்கியும் கண்ணனும் சுற்றுலா செல்வதால் அவர்களும் ராஜனுடன் சென்று விட்டனர்.விடை பெறும் நிமித்தமாகப் பங்கஜம் சென்று மாதங்கி அன்னையிடம் பேசிவிட்டு வர அவரைத் தொடர்ந்து பெண்களும்.

ஏனோ அமுதா, சீதா,தாமரையைப் பார்க்கும் போது ஒரு அலச்சியம் விமலாவின் தாய்க்கு அது சரி அப்போ அவரின் வழி தான் மாதங்கி இருப்பாள் வேரே இங்கு சரியில்லை போலும்.

சொல்லி கொடுக்கும் நிலையில் இருக்கும் தாயே இப்படி என்றால் மகளைச் சொல்லி என்ன பயன் அனைத்தையும் கண்டு கானதது போல் பார்த்துக் கொண்டு தான் இருந்தார் சுந்தரம்.
சுந்தரம் விமலா தந்தையிடம் கை கூப்பி நல்ல படியா “எல்லாம் முடிஞ்சுது சம்மந்தி ரொம்பச் சந்தோசம் அப்போ நாங்க வரோம் என்றவர்” செல்ல போக.

ஒரு நிமிசம் என்றவர் உள்ளே சென்று சில காகிதங்களை எடுத்து வந்து சுந்தரம் மற்றும் பங்கஜம் கையில் கொடுத்து விமலாவுக்கு நான் சேர்த்து வச்சது அது கிட்ட கொடுத்தா மாப்பிள்ள கிட்ட கேட்கனும் சொல்லுது,

மாப்பிள்ளை வேலை வாங்கிக் கொடுத்துக்கே தப்பா எடுத்து கிட்டார் போலச் செவி வழி தீண்டல் தான் வேற யாரும் சொல்லல அதான் உங்ககிட்ட கொடுக்கிறேன்”

ஒரு தகப்பனாக அவர் யோசித்துச் செய்தது சரிதான்.ஆனால் ஒரு மாமனராகச் சுந்தரம் யோசிக்கும் நிலையில் உள்ளரே என்ன செய்ய. மிக தன்மையாக பேசினார் மனிதர் “உங்க பொண்ணுக்கு நீங்க செய்றீங்க இதுல என்னங்க சம்மந்தி இருக்கு.அவனுக்குச் சுயமா செய்யணும் தன் திறமைய காட்டி வேலை வாங்கணும் அதான் ஆசை வேற ஒன்னுமில்லை”

“நீங்க செய்யுறதை உங்க பேரப் புள்ளைக்குச் செய்யுங்க என் காலம் வரை எல்லாரும் சமம் நான் எதுக்குச் சொல்லுறேன மத்த பொண்ணுகளும் வேசன படக் கூடாதுல அதுக்குத் தான்.நான் சொல்ல வரது புரியுதுங்களா”

அதனால் தான் இன்று வரை இக்குடும்பத்தின் சக்கரத்தை இழுத்து பிடித்து ஓட்டுகிறார் அவரது பிடி சற்று விலகினாலும் வண்டி குடை சாய்ந்து விடும் அல்லவா.

புரியுதுங்க சம்மந்தி எங்க பொண்ணுங்க உங்க வீட்டுல வாழ கொடுத்து வச்சு இருக்கணும்” என்றவர் பெரும் நிகழ்ச்சியாக விடை கொடுத்தார். சொல்லாமல் சொல்லிவிட்டார் அவர்களது மகளின் இடத்தை இதை விட என்ன வேண்டும் பெற்றவனுக்கு.

யாருக்கு கிட்டும் இத்தகைய குடும்பம் மற்றும் அன்பான மனிதர்கள்.ஒருவரை ஒருவர் அடித்துத் தள்ளி முன்னேறும் காலத்தில் அன்பை மட்டுமே மையமாகக் கொண்டு நேர்த்தியாக வழி நடத்தினார் சோமசுந்தரம்.

காலமும் நேரமும் ஒரே போல் உள்ளதா என்ன? இரண்டும் கூட்டு சேர்ந்தால் வஞ்சம் தான்.மனித மனம் குரங்கு என்பதற் கேற்ப வஞ்சம் கொண்ட காலத்திலும் நெறித் தவறாமல் காப்பரா இக்குடும்பதை என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்

Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top