அத்தியாயம் 1

Advertisement

Dharani dhara

Writers Team
Tamil Novel Writer

அத்தியாயம் 1

என்னை சிரிப்பால் சிதைத்தவளே தாரணி பாஸ்கரன்

"அம்மா.... இன்னும் பஸ் ல தான் இருக்கேன்..... காலேஜிற்கு போற பஸ்ல போய்ட்டிருக்கேன்" என்று தன் அன்னையிடம் மொபைலில் உரையாடி கொண்டிருந்தாள் வைதேகி.

அவள் பேச ஆரம்பித்தவுடன் பஸ்ஸில் இருந்த அனைவரும் அவளை திரும்பி பார்த்தனர். ஏனெனில் அவள் சத்தமாக போன் பேசிக்கொண்டிருந்தாள்.

சொல்லப்போனால் அவள் பேசுவது ஊரிலிருந்த அவள் அன்னைக்கே கேட்கும்படி கத்தி கொண்டிருந்தாள். அந்த செயல் பஸ்ஸில் இருந்த அனைவரின் முகத்தையும் சுழிக்க வைத்தது.

ஏனெனில் அவள் இருந்தது சென்னை மாநகரம். சத்யபாமா காலேஜ் போவதற்காக தாம்பரம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து கோவளம் போகும் பஸ்சினை பிடித்திருந்தாள்.

காலை நேரமாதலால் பஸ்ஸில் கூட்டம் அலைமோதி கொண்டிருந்தது. அதில் வைதேகி போனில் கத்தி கொண்டிருந்தாள் யார் தான் முகம் சுழிக்க மாட்டார்கள்.

இதை எதுவும் அறியாமல் தன் அன்னையுடன் பேசுவதில் மும்முரமாக இருந்தாள் வைதேகி.

அவள் அன்னை ஜெயந்தி, "வைதேகி.....எந்த ஸ்டாப்னு கண்டக்டர் கிட்ட கேட்டியா.... நீ பாட்டுக்கு வேற எங்கயும் இறங்கிட போறமா.... புது இடம் வேற... இதுக்கு தான் தம்பியையும் கூட அழைச்சிட்டு போன்னு சொன்னேன்....என் பேச்ச கேட்டா தான" என்று அவர் பாட்டுக்கு புலம்ப ஆரம்பித்து விட்டார்.

தன் அன்னையை சமாதான படுத்தி வீட்டில் இருந்து கிளம்புவதற்கே போதும் போதும் என்றாகி விட்டது அவளுக்கு.

இப்பொழுது திரும்பவும் ஜெயந்தி ஆரம்பிக்கவும், தன் அன்னையை சமாதான படுத்துவதே அவளுக்கு முதல் காரியமாக பட்டது. அதனால் அவள் தன்னை சுற்றி இருந்த எவரையும் கண்டு கொள்ளவில்லை.

"கேட்டேன்மா, ஸ்டாப் வந்ததும் கண்டக்டர் சொல்றேன்னு சொன்னாங்க". என்று அன்னையிடம் கூறிக்கொண்டிருந்த பொழுது.....

கண்டக்டர்," சத்யபாமா ஸ்டாப்பிங்....எறங்குறவங்களாம் முன்னாடி வாங்க" என்று கூறிக்கொண்டிருந்தார்.

வைதேகி, "அம்மா ஸ்டாப்பிங் வந்துருச்சு நான் உனக்கு அப்புறமா போன் பண்றேன்.... வச்சிடட்டுமா..."

"ஹ்ம்ம்... சரிம்மா" என்று கூறிவிட்டு மறுமுனையில் ஜெயந்தி போனை வைத்தவுடன், வைதேகி தன்னுடைய மொபைலையும் அனைத்து பையினில் (Bag) வைத்து பூட்டினாள்.

சத்யபாமா யூனிவர்சிட்டிக்கு நேர் எதிர் புறமாக பஸ் வந்து நின்றது.
வைதேகி தன்னுடைய பையினை எடுத்து கொண்டு பஸ்சினை விட்டு தன்னுடைய முதல் அடியிணை அந்த பெரிய பிரம்மாண்ட சென்னை மாநகரத்தில் வைத்தாள்.


பஸ்ஸில் இருந்து இறங்கிய வைதேகி, தான் நின்று கொண்டிருக்கும் இடத்தினை சுற்றி பார்த்தாள். ஏனென்று தெரியாத ஒரு பய உணர்வு வயிற்றில் இருந்து கிளம்பி நெஞ்சு கூட்டினை வந்து அடைந்தது.

அவளுடைய இதயம் படபட வென்று வேகமாக அடித்து கொள்ள ஆரம்பித்தது. அவளை கடந்து சென்று கொண்டிருந்த சிலர், வைதேகியை இரண்டு நிமிடம் பார்த்து வைத்தனர்.

வைதேகி பார்ப்பதற்கு மாநிறத்தில் இருந்தாள். நன்றாக எண்ணெய் வைத்து படிந்து வாரிய முடியுடனும், நெற்றியின் நடுவில் வட்டமாக சாந்து பொட்டும் (அதனுடைய அளவு நார்மல் சைஸ் விட கொஞ்சம் அதிகம்), தொழ தொழ வென்று சுடிதாரும், அதனுடன் ஷாலை வேறு ஸ்கூலிற்கு செல்வது போல் மடித்து வேற போட்டிருந்தாள், முகத்தில் எந்த வொரு மேக்கப்பும் இல்லை, அலைச்சலினால் முகம் வேறு சற்று வாடி இருந்தது.

அங்குள்ள சிலர் தன்னை வித்யாசமாக பார்ப்பது எதுவும் அவளுக்கு தோன்றவில்லை.

தன்னுடைய நான்கு வருடங்களையும் இனி இங்கு தான் கழிக்க போகிறோம் என்பதிலேயே அவளுடைய எண்ணங்கள் முழுவதும் இருந்தது.

அவளுடைய கண்கள் சத்யபாமா யூனிவர்சிட்டி என்ற பெயரினை பொருத்தி இருந்த கல்லூரியின் நுழைவு வாயிலை பார்த்தது.

அங்கு செல்வதற்கு தான் நின்று கொண்டிருக்கும் இடத்தில் இருந்து இரண்டு சாலைகளை கடந்து செல்லவேண்டி இருந்தது.

அங்கே சிலர் சாலையினை கடந்து கொண்டிருப்பதை பார்த்தாள். அவர்களுடன் இணைந்து சாலைகளை கடந்து ஒரு வழியாக சத்யபாமா யூனிவர்சிட்டியின் நுழைவு வாயிலை சென்றடைந்தாள்.
 

Dharani dhara

Writers Team
Tamil Novel Writer
வைதேகி தான் கொண்டு வந்திருந்த லெட்டரினை காலேஜ் நுழைவாயிலில் நின்று கொண்டிருந்த செக்யூரிட்டியிடம் காண்பித்தாள்.

"ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் (sports quota) அட்மிஸன்காக வந்துருக்கியாமா....kk.... உள்ள போங்க" என்று செக்கூரிட்டியிடம் அனுமதி பெற்று காலேஜினுள் நுழைந்தாள்.


காலேஜில் நுழைந்தவுடன் தன் அன்னைக்கு போன் செய்து, தான் வந்துவிட்ட செய்தியினையும் அதன்பிறகு மாலை மறுபிடியும் அவரை அழைப்பதாகவும் சொல்லி போனை வைத்துவிட்டு நடக்க தொடங்கினாள்.

காலேஜின் நுழைவாயிலிலிருந்து அலுவலகம் செல்வதற்கு சற்று தூரம் நடக்க வேண்டியிருந்தது. அவள் காலேஜ் வந்திருந்த நேரம் செமஸ்டர் லீவு ஆதலால் மாணவர்களின் நடமாட்டம் இல்லை.

ஏற்கனவே சென்னையை பார்த்து பயந்து போயிருந்த வைதேகிக்கு, ஆங்காங்கே பெரிய பெரிய கட்டிடங்களை கொண்டு அமைந்திருந்த யூனிவெர்சிட்டியை கண்டு இன்னும் அதிகம் பயம் ஏற்பட்டது.

"நாம இங்க வந்துருக்கவே கூடாதோ….. தப்பு பண்ணிட்டேன்.... இந்த கவிதாவோட பேச்ச கேட்ருக்கவே கூடாது”.

கவிதா....அவளுடைய பாஸ்கெட் பால் (basket ball) தோழி. வைதேகி தற்பொழுது சென்னைக்கு வந்திருப்பது பாஸ்கெட் பால் செலெக்ஷனிற்காக (selection) தான்.

வைதேகி அப்பொழுது 12 ஆம் வகுப்பிற்கான மார்க் மற்றும் TC செர்டிபிகட்டை வாங்குவதற்காக பள்ளிக்கு சென்றிருந்தாள். அங்கு தன்னுடைய வகுப்பு தோழிகளில் சிலர் தாங்கள் மேல படிக்கப்போவது பற்றி ஆசிரியர்களிடம் ஆலோசித்து கொண்டிருந்தனர்.

அவர்களை கண்டவளுக்கு அடுத்து தான் என்ன செய்யப்போகிறோம் என்று ஒன்றும் புரியவில்லை.
தன்னுடைய செர்டிபிகேட் அனைத்தும் வாங்கிவிட்டு தன்னுடைய விளையாட்டு ஆசிரியரை பார்க்க சென்றாள்.


அவள் சேலத்திலுள்ள கவெர்மென்ட் ஸ்கூலில் படித்தாள். அந்த பள்ளி கல்வியை காட்டிலும் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பள்ளியாதலால் அங்கு சேரும் மாணவர்கள் அனைவரும் தங்களுக்கென்று ஒரு விளையாட்டினை தேர்வு செய்ய வேண்டும்.

வைதேகி தனக்கென்று பாஸ்கெட்பால் கேமினை தேர்வு செய்திருந்தாள். அதில் நேஸ்னல் ப்லேயராகவும் (player) இருந்தாள். அதற்கான ஆசிரியரையே பார்க்க சென்றிருந்தாள்.

"Hi mam ..."

"ஹே வா வா... வைதேகி... என்ன செர்டிபிகேட் வாங்க வந்தியா..."

"Yes mam செர்டிபிகேட்லாம் வாங்கிட்டேன் mam ... அதான் உங்கள பாத்து சொல்லிட்டு போலாம்னு வந்தேன்".

"kk .... அடுத்து என்ன பன்றதா இருக்க..."

"எதுவும் தெரில mam .... இனி தான் யோசிக்கணும்"

"என்னோட friend சத்யபாமால ஒர்க் பன்ராமா.... அங்க நெஸ்ட் மந்த் (month) ஸ்போர்ட்ஸ் கோட்டால ஸ்டுடென்ட்ஸ் எடுக்குறாங்களாம். நீ வேணா அங்க ட்ரை பண்ணி பாரேன்".

அப்பொழுது அவளுடைய தோழி கவிதாவும் அங்கு வந்தாள். ஆசிரியர் அவளையும் ட்ரை பண்ண கூறினார்.
கவிதா, "mam… நான் சேலத்திலேயே B.Sc கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கலாம்னு இருக்கேன். அப்ளிகேஷன் பாரம் (Application form) கூட வாங்கிட்டேன்".


“Oh kk மா”

கவிதா, "hey வைதேகி... நீ அங்க ட்ரை பண்ணி பாரேன் டி..... சூப்பர் காலேஜ்ன்னு கேள்வி பட்டேன்".

ஆசிரியர், "சரி வைதேகி .... நீ யோசிச்சிட்டு ஒன் வீக்குள்ள சொல்லு".

அவர்கள் இருவரும் ஆசிரியர்க்கு நன்றி சொல்லிவிட்டு, இருவரின் வீடும் ஒரே தெருவில் இருந்ததால் தங்களது வீட்டினை நோக்கி சேர்ந்தே புறப்பட்டனர்.

வைதேகி போகும் வழியாவும் ஆசிரியர் கூறியதையே யோசித்து கொண்டு வந்தாள்.

"என்னடி யோசனை ரொம்ப பழமா இருக்கு...”

"நீ வேற.... நானே என்ன பண்றதுனு தெரியாம முளிச்சிட்டு இருக்கேன்....போடி"

"அதான் டீச்சர் சத்யபாமால ட்ரை பண்ண சொல்றாங்கள்ல.....அப்புறம் என்ன..."

"என்னது சென்னையா...நான் போக மாட்டேன் பா.... அதுவும் தனியா வேற....முடியவே முடியாது." என்று கவிதாவுக்கு மட்டும் கூறாமல் தனக்கும் சேர்த்து சொல்லிக்கொண்டாள்.

"ஹே இங்க பாரு உன்னைய இப்போ போய் ஜாயின் பண்ண சொல்லல...செலக்க்ஷன் தான அட்டென்ட் பண்ண சொன்னாங்க....சும்மா ட்ரை பண்ணி பாரேன்". என்று வித விதமாக பேசி வைதேகியை சென்னைக்கு அனுப்பி வைத்திருந்தாள் கவிதா.

எங்கு அவளை விட்டால் சென்னைக்கு போகமாட்டாள் என்று மறுநாளே ஆசிரியரிடம் வைதேகியை அழைத்து வந்து லெட்டரினையும் வாங்கி கொடுத்திருந்தாள்.

அதையெல்லாம் நினைத்து கொண்டு தான் சத்யபாமா காலேஜினுள் நடந்து கொண்டிருந்தாள் வைதேகி.

ஒருவழியாக ஆபீஸ் ரூம் எங்கு இருக்கின்றது என்று கேட்டு அங்கு சென்றடைந்தாள்.

"ஹப்பா... ஒரு ஆபீஸ் ரூமை கண்டுபிடிக்கவே இவ்ளோ கஷ்டமா இருக்கே" என்று மனதினில் நினைத்துக்கொண்டே ரிசெப்டினிஸ்டை (receptionist) அணுகினாள்.

“Yes….how may I help you”

அந்த பெண் சரளமாக இங்கிலீஷில் பேசவும் ....வைதேகிக்கு தான் என்ன பேச வந்தோம் என்பதே மறந்து விட்டிருந்தது. அவள் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் மீடியத்தில் படித்தாள். அதனால் அவர்கள் வேகமாக பேசியவுடன் ஒன்றும் புரியவில்லை.

அவள் அமைதியாக நிற்பதை பார்த்து, “what do you want mam” என்று திரும்பவும் அந்த பெண் கேட்டாள். ஆனால் இந்த முறை கொஞ்சம் பொறுமையாக.

வைதேகிக்கு இந்த முறை அவர்கள் கேட்டது புரிந்தது. அவள் தன்னிடம் உள்ள லெட்டரினை கொடுத்தாள்.
அந்த பெண் அதனை பார்த்து விட்டு.... “நீங்க வசந்தி மேம போய் பாருங்க....” என்று பதில் சொல்லிவிட்டு அவர்கள் இருக்கும் இடத்திற்கு வழி கூறினாள்.


“K thank you mam”.

அவள் வசந்தி மேமின் ரூமை கண்டு பிடித்து லெட்டரினை அவரிடம் கொடுத்தாள்.

"வைதேகியா.... வாவா.... உங்க மேம் ஏற்கனவே என்கிட்டே சொன்னாங்க. பாஸ்கெட்பால் செலக்க்ஷன் இரண்டு மணிக்கு ஸ்டார்ட் ஆகும்... நீ போய் அதுக்குள்ள சாப்பிட்டு இங்கேயே வந்துரு. நான் பாஸ்கெட்பால் கோர்ட்டுக்கு கூட்டிட்டு போறேன்". என்று கூறினார்.

வைதேகிக்கு கேன்டீன் போகவெல்லாம் பயமாக இருந்தது. "இல்ல வேண்டாம் மேம் நான் வரும்போதே சாப்பிட்டு தான் வந்தேன்." என்று பொய் கூறினாள்.

“அப்போ சரிமா... வெளில சேர் (chair) இருக்கு உட்காரு நான் போகும்போது கூப்புடறேன்”.

“அவள் பயம் மற்றும் எதிர்பார்ப்பு கலந்த கலவையாக அங்கு உட்காந்திருந்தாள்”.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top