அத்தியாயம் - 1

Advertisement

dhanuja senthilkumar

Well-Known Member
களவு கொண்டானடி தில்லைலே......
கதையின் மாந்தர்கள்:

சுந்தர் பட்டர் - கண்ணாம்பாள்
மகள் - சிவகாம சுந்தரி
பெரிய நாச்சி - கந்தன்
மகன் அம்பலவாணன்
இளைய மகன் சுப்ரமணியன்
மகள்கள்:
மீனம்மாள்
அன்புச்செல்வி
சிவசங்கரி
சரசு
சக்தி
உலகம்மை

1967 ..........

தில்லை என்ற தொன்மையான பெயர் கொண்ட சிதம்பரம் தில்லை மரங்கள் அதிகம் காணப் பட்டதால் இவ்வூருக்கு தில்லை என்ற பெயர் பெற்றது.மேலும் இவ்வூருக்குச் சிறப்பு என்னவென்றால், நமது தில்லை அம்பலவானார் தான்.

தில்லை அம்பல நடராஜரை அறியாதவர் பாரிலே உண்டோ! சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதற்கேற்ப சிதம்பரத்திலும் ஆட்சி புரிந்தார் சிவ பெருமான்.
பல அதிசயங்களையும் ரகசியங்களையும் கொண்ட அவர் இருப்பிடத்தில் மகான்களான திருநாவுக்கரசர்,சம்பந்தர்,சுந்தரர் மாணிக்கவாசகர் பாடிய தேவாரம் சோழன் காலத்தில் கண்டு எடுக்கப்பட்டது.

மேலும் இக்கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில், இது ஆகாயத் திருத்தலம். அதாவது (CENTER POINT OF WORLD’S MAGNETIC) அறிவியலும் ஆன்மீகமும் பின்னிப் பிணையப்பட்டது என்பதை ஆன்றோர்கள் சான்றாக உணர்த்தி உள்ளார்கள்.

மூலவராக திருச்சிற்றபலமுடையார் அம்பலவானர் மற்றும் தாயார் சிவகாமசுந்தரி. மனமொத்த தம்பதிகளாக நெறி கொண்டு ஆட்சி செய்யும் இவ்வூரில் இருந்து, நாமும் நம் கதை பயணத்தைத் தொடர்வோம், சிதம்பரம்- சிவகாமியுடன்...!

1967 புதன் கிழமை, தில்லை கோவிலில்...........

தேவாரம் தேவகானமாகச் செவியில் மோத, திருநீறு மனம் கமழ, கோவில் மணியோசை சலங்கையாக ஒலிக்க, நடராஜரின் தீப ஆர்த்தியைக் காண கண் கோடி வேண்டும் போலும், அத்தனை அழகாகக் காட்சி அளித்தார், நமது சாம்பல் பித்தன், பிறை சூடி நின்றவன், முகத்தில் தான் எத்தனை தீட்சண்யம்!

பக்தமார்கள் ஓர் இருவர் மட்டுமே அய்யனை தரிசித்து நிற்க, அதில் ஒருவர் கண்கள் கலங்க அந்த அம்பலத்தானைப் பார்த்து நின்றார். அவர் தான் சுந்தர் பட்டர். அக்கோவிலின் தலைமை அர்ச்சகர். நெறி கொண்டு வாழும் மனிதன். வறுமையின் பிடியில் இருந்தாலும், முகத்தில் அத்தனை களையும் கர்வமும் போட்டி போட்டது. சிவ பக்தன் என்பதினால் வந்த கர்வமோ?

பக்தனாக இருந்து என்ன செய்ய, அவர் குறைகளைத் தீர்க்க வேண்டியவர், மூன்று வேளையும் பூசைகளையும் வயிறு நிறைய நைவேத்தியங்களையும் வாங்கிக் கொண்டு, காதே கேளாதவர் போல் திவ்வியமாக அல்லவா இருக்கிறார்.

சிறுது நேரம் மூலவரை முறைத்துப் பார்த்துக் கொண்டு இருந்த சுந்தர் பட்டர், இனி ஒரு பலனும் உன்னிடம் கிட்டாது என்று எண்ணினாரோ என்னமோ, இடுப்பில் உள்ள வஸ்திரத்தை எடுத்து தோள் மீது போர்த்திக் கொண்டு, தனது வீட்டை நோக்கி நடந்தார்.

கோவிலை விட்டு வெளியில் வரும் போது, சிவாச்சாரி அவரை வழிமறித்து நின்று கொண்டார். சுந்தரத்திற்கு அவர் தமக்கை கணவர். அவருக்கு மரியாதையைச் செய்யும் பொருட்டு நின்றவர் தணிந்த குரலில்,

"சொல்லுங்கோ மாமா!" என்றவரைப் பார்த்து கோபம் கொண்ட சிவாச்சாரி,

“என்னத்த நான் சொல்றது. நோக்கு என்னடா ஆச்சு, புத்தி கித்தி பெசாகிடுத்தா?”
அவரது பேச்சுக்கு, வறண்ட புன்னகையை பரிசாகக் கொடுத்தவர், இரு கரங்களையும் கூப்பி,

“என்னாண்ட எதுவும் கேட்காதேள் மாமா. பதில் சொல்லற நிலையில் நான் இல்லை.”
சுந்தரத்தின் தளர்ந்த பேச்சைக் கண்டவர், உள்ளத்துக் கொதிப்பை அடக்கிக் கொண்டு, அவருக்கு வழி விட்டார்.

சோர்ந்த நடையுடன் செல்லும் சுந்தரத்தைப் பார்த்தவாறு நின்றவர், சிறு ஒவ்வாமை கொண்ட தலை அசைப்புடன் தனது பணிக்குச் சென்றார்.
இனி என்ன ஆகுமோ அந்த அரிவையின் நிலை என்ற எண்ணம், அவருக்குச் சற்று பயத்தைக் கொடுத்தது.

*
சுந்தர் பட்டர் வீட்டை நெருங்கும் சமயம், அவரை நோக்கி விரைந்து வந்தார், அவரது பத்தினி திருமதி கண்ணாம்பாள்.சுந்தர் பட்டர் கண்ணில் நீர் திரள, கணவனுக்குக் கால் கழுவ தண்ணீர் கொடுத்தவர், அதற்கு மேல் தன்னைக் கட்டுப் படுத்த முடியாமல் கதறி விட்டாள்

“ஏன்னா இப்படிப் பண்ணேள், பாவம்னா குழந்தை பயந்துக்குவா! நீங்க போயி அழைச்சுட்டு வாங்கோ! உங்களைக் கெஞ்சி கேக்குறேன்னா!”

“என்ன பேசுற கண்ணாம்பா. கன்னிகா ஸ்னானம் பண்ண குழந்தையை, எப்படி நம்மாத்துக்கு அழைச்சுண்டு வரது”

“ஐயோ! அப்படிச் சொல்லாதேள்! நேக்கு என் பொண்ணு வேணும்..... உங்களுக்கு ஏன்னா புத்தி இப்படிப் போறது”

“என் புத்தி சரியாத்தான் போறது”

“சரியாப் போனா, இப்படி ஓர் காரியத்தைச் செய்துட்டு வருவேளா?”

“என்ன செய்துட்டேன், அப்படி? என் பொண்ணுக்கு மூனு வேலையும் சத்தான ஜீவனமும், உடுத்த நல்ல உடுப்பும், முக்கியமா அவளைப் பாதுகாப்பா வச்சுக்க நல்ல ஆம்படையானையும் கிடைக்க வழி செய்துட்டு வந்து இருக்கேன். இனி நிம்மதியா இருப்பேன்."அவரது பதிலில் சினம் பொங்க

“என்ன பேச்சு பேசுறேள் பட்டினி கிடந்தாலும் அவ நம்ம பொண்ணா இருந்துட்டுப் போகட்டும். அதுக்காக அவளைத் தார வார்த்துக் கொடுப்பேளா!”

“காரணம் ஜீவனம் மட்டும் இல்லனு உனக்கே தெரியும். கண்னுக்கு அழகா இருக்க பெண் மேல், சில பொல்லாக் கண்ணும் படுதே, அதான்.”

“நம்ப இந்த ஊரை விட்டு போயிருக்கலாமே”

“அங்கேயும் இதே நிலை தொடர்ந்தா, ஓடிண்டே இருப்பியா நீ?”

“ஐயோ! வழியே இல்லனா, செத்த போயிருக்கலாமே!”

மனைவியின் பேச்சில் பதறிய சுந்தர், “அசடே, என்ன பேச்சு இது? நம்ப ஜீவன் போனாலும், நமக்குக் குழந்தையா பிறந்த பாவத்துக்கு, சிவகாமி ஏன்டி போகணும்?”

“கடவுளே இவருக்குப் புரிய மாட்டேனுதே. நான் என்ன செய்ய” தலையில் அடித்துக் கொண்டு அழுதவரை சமாதானம் செய்யும் பொருட்டு, அவரது கைகளைப் பற்றி,

“அந்த அம்பலத்தானுக்கு ஏத்த சிவகாமசுந்தரி நம்ம பொண்ணு தான் கண்ணாம்பா. நேக்கும் மனசில்லை. ஆனா, இரண்டு பெரும் சேர்ந்து நின்னு என்னாண்ட ஆசீர்வாதம் வாங்கும் போது, சிலிர்த்துப் போயி நின்னுட்டேன்.”

கணவனது பூரிப்பை கண்டு சினம் தணிந்தவராக, “எல்லாம் சரிதான். ஆனா, நம்மாத்து மனுஷாளுக்கும், உங்க தமக்கைக்கும் என்ன சொல்லப் போறேள்.”

“அவாளுக்கு என்னவாம், நம்ம நிலை தெரியும் தானே...! நீ நம்ம பெண்ணை மட்டும் பார்.”
என்ன சமாதானம் சொன்னாலும் மனம் முரண்டு பிடிக்க,

“அவா ஆத்துல மொத்தம் ஏழு உருப்படி. நம்ம பொண்ணும் சின்னப் பிள்ளை. எப்படின்னா அவ சமாளிப்பா! அவளுக்குச் சமத்து பத்தாதுன்னா.”

ஒரு தாயாக பெண்ணை எண்ணி கலக்கம் கொண்டாள், கண்ணாம்பாள்.
“அதெல்லாம் என் பொண்ணு பார்த்துப்பா. அவளை நம் ஆத்து மாப்பிள்ளை பார்த்துப்பார். நீ வேலையைப் பார்” என்றவர், தனது அறைக்குள் சென்றுவிட்டார்.

உள்ளமும் உடலும் அது போகாதென்று மனைவியின் கேள்வியும் அவரை களைப்படையச் செய்ய, சோர்த்து போனார் மனிதர்.

அது மட்டுமா, இனிவரும் நாட்கள் பல கேள்விகளையும் பரிகாசங்களையும் அவர் எதிர் கொள்ள வேண்டும் அல்லவா? அதனால், அவருக்கு ஓய்வு தேவைப் பட்டதோ என்னவோ...!

கண்ணாம்பா கணவனது பேச்சில் அமைதி கொள்ளாமல், காலையில் பூஜைக்குச் சென்ற மகளை எண்ணி, அதன் பின் அவளுக்கு நடந்த திருமணத்தை எண்ணி கண்ணீர் மல்க தூணில் சாய்ந்து கொண்டார்.

சிதம்பரத்தை பூர்வீகமாகக் கொண்டு வாழ்ந்து வரும் சுந்தர் பட்டர் மற்றும் கண்ணாம்பாள் தம்பதியருக்கு, பிறந்த ஒரே மகள் தான் சிவகாம சுந்தரி.
பெயருக்கு ஏற்றார் போல் தெய்வீக அழகைக் கொண்ட பெண்.

தலைமுறை தலைமுறையாக, சிவனுக்கு சேவை செய்வதால், பெருமாள் நம்பிக்கு அடுத்து, அவரது மகனான சுந்தர் பட்டர் சேவைக்கு வந்தார்.பதின் வயதில் அம்பாள் சிலையாக நின்ற மகளை, தினமும் கோவிலுக்கு அழைத்துச் செல்வார், சுந்தர் பட்டர்.

அசலூரில் செல்வந்தரான மாயனூர் குடும்பத்துச் சின்னப் பண்ணை கண்ணில் சிவகாமி பட, அவர் சுந்தரத்தை நேரடியாகச் சில காலங்களாக மிரட்டி வர, பதறி விட்டார் மனிதர்.

தனது பெண்ணைக் காக்கும் பொருட்டு, பெரிய நாச்சியிடம் தஞ்சம் கொண்டார்.சிதம்பரத்தை பிறப்பிடமாகக் கொண்ட கந்தனுக்கும், பெரிய நாச்சிக்கும் பிறந்த பிள்ளைகளின் எண்ணிக்கை எட்டு. இரு மகன்கள் ஆறு பெண் பிள்ளைகள். அதில் மூத்தவன் அம்பலத்தான் தான் இருபதில் இருப்பவர். மற்ற பிள்ளைகள் அனைத்தும் சிறு பிள்ளைகள்.

கடல் தாண்டி வாணிபம் செய்யும் குடும்பம். தொழில் முறைக்குச் சென்ற அவரது கணவர், அங்கே உடல் உபாதையால் இறந்து விட, குடும்பத்தைத் தன் கையில் ஏந்தி நின்றார் பெரிய நாச்சி. அக்காலத்திலே தைரியமாக நின்ற பெண் மணி. மகன் தலையெடுக்கவும் தான் சற்று ஓய்ந்து நின்றார்.

அக்காலத்தில் பெண்ணுக்கு படிப்பு என்பது எட்டாக்கனி தான். அதிலும் படித்து வரும் பெண்கள் சிறு எண்ணிக்கையில் உண்டு. அது அவர்களது பெற்றோரின் எண்ணத்தைக் கொண்டது. அதில் ஒருவள் தான் பெரிய நாச்சி. பெண் பிள்ளைகள் அனைத்தையும் படிக்கச் செய்தார். அதில் தான் சுந்தர் பட்டர் வீழ்ந்தாரோ, தனது பெண்ணை தாரைவார்க்கும் அளவிற்கு...!

அவர்கள் குடும்பம் வம்ச வழியாக, தில்லை கோவிலுக்கு செய்முறை செய்வார்கள். ஊரில் முக்கியச் செல்வந்தரும் கூட. நீதி நெறி கொண்டவர்கள்.
சிவகாமியைக் கண்ட பெரிய நாச்சி, கண்கள் மின்ன சிறிதும் தயக்கமின்றி தனது கோரிக்கையை வைக்க, முதலில் அதிர்ந்த சுந்தர் பட்டர், இரு நாட்கள் நன்கு யோசித்து, மூன்றாம் நாள் ஓர் முடிவுடன் தன் மகளை வழமை போல் கோவிலுக்கு அழைத்துச் சென்றவர், கண்ணில் நீர் மல்க தனது பெண்ணை அம்பலத்தானுக்கு மணம் முடித்து வைத்து விட்டார்.இதோ அம்பலத்தான் மனைவியாக சிவகாம சுந்தரி, பெரிய நாச்சி இல்லத்தில் சிறுமியோடு சிறுமியாக விளையாடிக் கொண்டு இருக்கிறாள்.

பத்து வருட மூப்பு கொண்ட தன்னை மணமுடித்த சிறுமியை எண்ணி, துக்கம் கொண்டு அமர்ந்திருந்தார், அம்பலத்தார்.கோவில் செல்வது போலச் சென்றவர் கையில், திருமாங்கல்யம் கொடுத்து அம்பலத்தானை கட்டச் சொல்ல, அதிர்ந்து போனார் மனிதர்.மறுப்பு சொல்ல வழியின்றி, தாய் சொல்லைத் தட்டாமல் திருமணம் செய்தாலும், தனது தங்கைகள் வயதே கொண்ட பெண்ணை, மனைவியாகப் பார்க்க முடியாமல் தவித்துப் போனார்.

முற்போக்கு சிந்தனை கொண்டவர், நன்கு படித்தவர் என்பதால், இத்திருமணத்தை ஏற்க முடியவில்லை. அதிலும், தனது அத்தை மகள் உமையாள் வேறு தனக்காக காத்து நிற்க, இத்திருமணம் மனதை நெருடியது.

அதனால் மனதில் தெளிவு கொண்டு, ஒரு முடிவுடன் செயல் பட்டார். ஆனால், பிற்காலத்தில் அச்செயல் அவர் வாழ்க்கையை திசை மாற்றிச் செல்லப் போவதை அறியாமல் போனார், மனிதர்.

மணம் முடித்து மானம் காத்துவிட்டோம் என்ற நிலையில் பெற்றோர் சற்று நிம்மதி கொள்ள, மணம் முடித்த மனைவியை பேணி பெரும் பட்டம் பெற வைத்த நிம்மதியில் அம்பலத்தான் நிம்மதி கொள்ள, வாழ்க்கை புரியும் வயதில், இருவரையும் விட்டு தனித்து நிம்மதியற்று நின்றாள், சிவகாம சுந்தரி.

இனி களவு கொள்வாள்........
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu :love::rolleyes::love:
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top