அத்தியாயம் - 1

Advertisement

dhanuja senthilkumar

Well-Known Member
கதம்பவனம் -1
1980…

புதுக்கோட்டை மாவட்டம் கிழக்கு வீதி மூன்றாம் தெருவில் உள்ள வீட்டின் திண்ணையில் அமர்ந்து இருந்தார் சோம சுந்தரம். அவரைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் அறுபதை தாண்டிய முதிர் குசும்பு காளை என்று செல்லமாகச் சொல்லலாம்.அன்று அரசு வருவாய் துறையில் கிளெர்க் பணியில் வேலை இன்றோ ஓய்வு பெற்ற சாதாரணத் தகப்பன் சாமி.

இவருடன் மல்லுக்கட்டி அவரை அனுசரித்து தனது பாச கயிற்றில் கட்டி போட்டு இருக்கும் அன்பு மனையாட்டி தான் பங்கஜம். ஆறு பிள்ளைகளைப் பெற்ற புண்ணியவான் தனது வாழ்க்கை சக்கரத்தை எப்படி ஓட்டுகிறார் என்று பார்க்கலாம் வாங்க " கதம்பவனம்"

நந்த வனத்தில் ஓர் அண்டி அவன் நாள் ஆறு மாதமாய்க் குயவனை வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி அதைக் கூத்தாடி கூத்தாடி போட்டு உடைத்தாண்டி தனது கட்டை குரலில் பாடியவர் தொண்டை வரண்டதோ?

“அடிபங்கஜம்! ..............பங்கு! ................கஜம்! ..................ஜம்!..............” அடுக்கலைக்குள் வேலை செய்து கொண்டு இருந்தவரை குறும்பாக அழைக்க அங்கு இருந்தே குரல் கொடுத்தார் அவரது மனையாட்டி “ஏங்க இப்படி ஏலம் விடுறீங்க காபி தானே இதோ வரேன்” என்று தனது கணவனுக்கு மணக்க மணக்க பில்டர் காபி தயாரித்து வந்தார்.

நமது சுந்தரத்திற்கு ஆறு வேலை காபி குடிக்க வில்லை என்றால் தெய்வ குத்தமாகி விடும்.மனைவிக்குப் பிறகு அவர் மயங்கியது இந்தக் காபியிடம் தான் சிரித்த முகமாகக் காபியை கையில் கொடுத்த பங்கஜத்தை ஆசையாகப் பார்த்தார் சுந்தரம் முதிர் தோற்றம் கொண்டாலும் மஞ்சள் பூசிய முகம் இன்னும் மயக்கத்தைக் கொடுத்தது அன்று போல.

அவரது பார்வையில் வெட்கம் கொண்டவர் “என்னங்க அப்படி பார்க்கிறீங்க” மனைவியின் கேள்வியில் ஒரு பெருமூச்சுடன்

“பார்க்க தானடி முடியும் பங்கு” என்று அலுத்து கொண்டவரை முறைத்து பார்த்தவர்

“பிள்ளை இல்லாத வீட்டுல கிழவன் துள்ளி விளையாண்டானாம் பேரன் பேத்தி எடுத்தாச்சு பேச்சை பார்.முதல போய்ப் பிள்ளைகங்கள பள்ளி கூடத்துல இருந்து கூட்டிட்டு வாங்க இல்ல உங்க பெரிய மருமக பரதம் ஆடிடுவா”

மனைவி சொல்லுக்கு அடி பணிந்தாலும் குசும்பு குறையாமல் “ஆடும் வரைக்கும் ஆடலாம் இடமா இல்லை வீட்டினில்” என்று பாட பங்கஜம் பக்கென சிரித்து விட்டார் "நீங்க இருக்கீங்களே” என்று செல்லமாகத் தலையில் தட்டி கொண்டு சென்றார் அவரது ஆசை மனைவி.

இது தான் சுந்தரம் எத்தனை துன்பம் வந்தாலும் சிரித்து கொண்டே சமாளிப்பவர் மனைவியைத் தவிர்த்து யாரிடமும் மண்டியிடாத மாணிக்கம் மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் அல்லவா.

எதற்கும் ஆசை படாத, கணவன்,மகன் மட்டுமே உலகம் என்று வாழும் பங்கஜமும் சுந்தரத்திற்குக் கிடைத்த வரமே.அவர் குழந்தைகள் கூட்டிவர செல்லட்டும் நாம் அதற்குள் இந்த வீட்டையும் வீட்டில் வசிப்பவர்களையும் பார்த்து விடலாம்.

அந்தக் காலத்து ஓட்டு வீடு அவர்கள் வசதிக்கேற்ப சிறு மாற்றம் செய்திருந்தனர் நேற்று தான் மழை பெய்திருக்கும் போலும் சீமை ஓட்டில் ஈரப்பதம் சேர்கையில் எழும் ஒருவித மண்வாசனை சுண்டி இழுத்தது அதனை நுகர்க்கையிலே அதனை புத்துணர்வு.

சரி வீட்டுக்குள் செல்வோம்…
திண்ணையைத் தாண்டி நுழைந்தால் ஒரு சிறு பாதை கூடத்திற்குச் செல்ல அதனைக் கடந்தால் முற்றம் வைத்த கூடம்.பக்கத்தில் பித்தளை அண்டா அதில் சிறுதளவு தண்ணீருடன்..........

அவற்றைக் கடந்து சென்றால் ஒன்று போல ஐந்து அறைகள் தனது ஐந்து மக்களுக்கும் ஒன்று போலக் கட்டி வைத்திருந்தார்.இன்னும் மூன்று அறைகள் இருந்தது அதில் ஒன்று பழைய சாமான்கள் போடும் அறை. தங்கள் அறை போக இருப்பது தனது தவப் புதல்வியின் அறை ஐந்து மகன்களுக்குப் பின் பிறந்த கடை குட்டி செல்லம்.

அந்த அறைகளைத் தாண்டி அடுக்கலைக்குள் நுழைந்தாள் மூத்த மகன் கண்ணனின் மனைவி ராஜ மாதங்கி மசாலா அரைத்துக் கொண்டு இருந்தாள்.பங்கஜம் குழம்பை கூட்ட இரண்டாம் மகன் ரங்கனின் மனைவி காய் ஆய்ந்து கொண்டு இருந்தாள் (இவர்கள் சமைக்கட்டும் பின்கட்டுக்குச் செல்லலாம் வாருங்கள்)

துணியைத் துவைத்துக் கொண்டு இருக்கும் சீதை சுந்தரத்தின் மூன்றாம் மகன் கல்யாண ராமனுடைய மனைவி. அவருக்கு அடுத்து பார்த்தால் கேணியில் தண்ணீரை இறைத்துக் கொண்டு இருந்தார் நான்காம் மகன் செல்வனின் மனைவி தாமரை இவர்களைக் கடந்தால் ஒரு குட்டி தோட்டம் அதில் உள்ள மல்லிகை பந்தலின் அடியில் அண்ணனும் தங்கையும் அமர்ந்து படித்துக் கொண்டு இருந்தனர் அதாவது ஐந்தாவது புதல்வன் ராஜனும்,கடை குட்டி விஜியும் (அப்படி என்றால் இவர்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று அர்த்தம்)

மாலை நேர குளுமையும் சிறுது வெயிலின் வெட்பமும் சேர்ந்து ஒரு வித இதத்தைத் தர காபி வேளைக்கு அனைவரும் கூடினர் கூட்டுக் குடும்பம் என்பதால் அனைவருக்கும் உணவும் சிற்றுண்டியும் சரியான நேரத்திற்கு வந்து விடும்.

பங்கஜம் காப்பியை கலக்க அவரைச் சுற்றி ஒரு சிறு வட்டம்.அதில் நான்கு மகன் பெற்ற மகவுகள் அவர்களைச் சுற்றி ஒரு வட்டம் அதில் மருமகள்கள்.அவர்களைத் தாண்டி ராஜனும், விஜியும் அனைவரையும் தாண்டி நாற்காலியில் சுந்தரம்.

பங்கஜம் காபியை ஊற்ற அனைவரும் வாங்கிப் பருகினர் சுந்தரம் மட்டும் பங்கஜத்தையும் சேர்த்து பருகினார் அறுபதில் தான் ஆசை கூடுமோ!... மாலை தாண்டி இரவு வேலையில் பெண்கள் அனைவரும் வேலையில் ஈடுபட ஆண்கள் நால்வரும் வேலையில் இருந்து வந்தனர்.

இன்று தேதி ஒன்று பட்ஜெட் போடும் நாள் அதனால் அனைவரும் கொஞ்சம் ஆர்வமாகத் தான் இருந்தனர்.இந்நாளில் மட்டும் தான் தங்களின் தேவைகளை கேட்க முடியும் அதனை வைத்து தான் மாத முழுமையும் கொண்டு செலுத்த முடியும் ஒவ்வொரு மக்களின் பட்டியலும் அனுமார் வால் போன்றது என்பது குறிப்பிட தக்கது.

சுந்தரம் பட்டியலை பார்வையிட ஒரு சில நிமிடங்களில் அவரது புருவம் சுருங்கி விரிந்தது பின்பு கையில் உள்ள பட்டியலை மடித்து வைத்தவர் பெரிய மருமகளின் மீது சில நொடி தனது பார்வை வீசினார் பின்பு தாமரையிடம் திரும்பி “என்னம்மா நீ ஒன்னுமே எழுதி கொடுக்கல உனக்கும் உன் புருஷனுக்கும் ஒன்னும் வேண்டாமா”

“இல்லைங்க மாமா எல்லாமே இருக்கு” என்ற இளையவளை கூர்ந்து பார்க்க மாமனாரின் பார்வை வீச்சை தாங்காமல் குனிந்து கொண்டாள் அவருக்குத் தெரியும் தனது மக்களைப் பற்றி தலையை உலுக்கியவர் தனது கணீர் குரலில் பெரிய மருமகளிடம் தனது கேள்வியை தொடங்கினார்.

“சொல்லும்மா மாதங்கி அது என்ன சிட்டையில புதுசா ஒன்னு சேர்த்திருக்க”

“புதுசு இல்லைங்க மாமா எங்களுக்குக் கல்யாண நாள் வருது அதான் ஒரு ஜோடி தங்க வளைவி வாங்கலாமுனு இருக்கேன்"

"சந்தோஷமான விஷயம் தான் உங்களுக்குனு தனியா சேமிப்பு இருக்குமே மா அதுல வாங்கலாமே இது பொதுக் குடும்பச் செலவு அவசியமான பொருட்கள் மட்டுமே வாங்கனும் எல்லாத்துக்கும் மேல நம்ம ஜீவனம் பண்ணனும் உனக்குத் தெரியாதது இல்ல”அத்துடன் பேச்சை முடித்துக் கொண்டார்

மாதங்கி கண்ணனை பார்த்த பார்வையில் கண்ணனுக்குத் தான் கிலி பிடித்தது இருக்காதா பின்னே தகப்பன் என்ன பேசினாலும் சேதாரம் என்னவோ தனக்குத் தானே.

யாரு இரவு முழுவதும் அவள் பாடும் பாட்டைக் கேட்பது ‘நான் கல்யாணம் பண்ணி வந்த நாளில இருந்து’ என்று ஆரம்பம் ஆகும் பேச்சு அவள் இரண்டு பிள்ளை பெற்று அதைப் பள்ளி கூடம் அனுப்பிய வரையில் தொடரும் சில நாட்கள் விடிந்து கூட அவளது பேச்சு ஓயாது அது என்னவோ இப்படியும் சிலர்.

கடை குட்டி ராஜனுக்கு தான் அப்படி ஒரு கோபம் கல்லூரி இறுதி ஆண்டில் இருந்தாலும் குடும்பத்தை நன்கு அறிந்து கொண்டவன்.அவனுக்கு மாதங்கி மேல் கோபம் உண்டு.வீட்டுக்கு மூத்த மருமகள் என்றால் எப்படி இருக்க வேண்டும் அனைவரையும் அனுசரித்து அன்பாக நடக்க வேண்டும்.ஆனால் மாதங்கியின் நடவடிக்கை நான்,என் கணவன்,என் பிள்ளைகள் என்று தான் இருக்கும். நாம் என்று ஒரு நாளும் எண்ணியதில்லை (அது சரி ஐந்து விரல்களும் ஒன்றாக இருக்கிறதா என்ன)

சுந்தரத்தின் பேச்சில் கோபம் வர “சேமிப்பு எங்க இருக்கு எல்லாத்தையும் கொடுத்துடுறாரு நானும் பொண்ணு வச்சு இருக்கேன் இப்போ இருந்து சேர்த்தா தானே பின்னாடி உதவும்” விடாமல் மாதங்கி பேச

ராஜனுக்கு ஏகக்கடுப்பு எதுவோ அவன் பேச போக விஜி அவனது கையை பிடித்துத் தடுத்து நிறுத்தினாள் மெல்ல குனிந்து அவன் காதில் “அப்பா இருக்கும் போது நீ பேசத்தண்ணே அப்பா பார்த்துக்குவார்”அவனிடம் சொன்னவள் அவனது கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்

அந்த வீட்டில் கடை குட்டிகள் இரண்டும் புத்திசாலிகள் ராஜன் முரடன் என்றாலும் புத்திசாலி.விஜி அமைதி என்றாலும் அறிவாளி இருக்காதா பின்ன இவர்கள் இருவரும் தந்தையின் வளர்ப்புக்கள் ஆயிற்றே.

சரிம்மா மருமகள் கேட்ட கேள்விக்கு உடனே ஒப்புதல் அளித்த மாமனாரை அதிசயமாகப் பார்த்தாள் மாதங்கி. மருமகளிடம் கூறியவர் கண்ணனை நோக்கி “கண்ணா உன் பிள்ளைகளுக்குக் ஆர். டி கட்டுறேன் இந்த மாசம் விட்டு செலவுக்குப் பணம் குறையும்.அதுனால அதை நீயே கட்டிடு என்ன” என்றவர் சிட்டையைத் தனது வேட்டி மடிப்பில் வைத்து ஒரு சுத்து சுத்தி மடக்கினார்.

இது தான் சுந்தரம் யாருக்கும் வலிக்காமல் அதே சமயம் மருமகளுக்கும் குட்டு வைத்து விட்டார் அவர் சொல்லவே “இது எப்போ” என்று மாதங்கி முழித்து கொண்டே கையைப் பிசைந்தாள் மறுத்துப் பேசினால் நன்றாக இருக்காது பேசவும் முடியாது அதே எண்ணத்துடன் தனது கணவனைப் பார்க்க அவன் பார்வையோ உனக்குத் தேவை தான் என்றது.

சுந்தரம் சென்றவுடன் சபை கலைந்தது அதன் பின் இரவு உணவு என பெண்கள் வேலைகளை கையில் எடுக்க நேரம் சென்றது அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு பங்கஜத்துடன் தோட்டத்தில் கதை அளப்பது அவரது வழக்கம் எத்தனை வேலைகள் இருந்தாலும் இருவரும் தங்களது தனிமைக்கு இடையூர் இல்லாமல் பார்த்துகொள்ளவர்கள்.

பங்கஜம் நடந்து வருவதைப் பார்த்தவரது வாய் தானாகவே பாடியது “காலங்களில் அவள் வசந்தம்,கலைகளிலே அவள் ஓவியம்,மாதங்களில் அவள் மார்கழி,மலர்களிலே அவள் மல்லிகை........... காலங்களில் அவள் வசந்தம்...................”சிறு வெட்கம் எட்டி பார்க்க

“என்ன சோம சுந்தரரே என்றும் பதினாரோ”
“ஆமாடி பங்கு என்ன பார்த்தா கூடவா தெரியல” அவர் மீசையை முறுக்க குலுங்கி சிரித்தார் பங்கஜம்

“என்னடி சிரிப்பு”

“ஒண்ணுமில்ல” சிரித்து ஓய்ந்தவர் தயங்கிய வாரே “என்னங்க நமக்கு தான் மாதங்கிய பத்தி தெரியுமே அப்புறம் என்ன அவ கேட்டத கொடுத்துட்டா வீட்டுல சத்தம் இருக்காது”

“என்ன பேசுற பங்கஜம் அவளை மாதிரி தானே மத்த மூணு பொண்ணுங்களும் எல்லாருக்கும் இங்க ஒரே மாதிரி தான் இன்னக்கி இவ கேட்பா நாளைக்கி மத்த பொண்ணுக பேச ஆரம்பிக்கும் அப்புறம் தனி குடுத்தனத்துல வந்து நிக்கும்”

“நீங்க ஏன் அப்படியெல்லாம் யோசிக்கிறீங்க சீதாவும் சரி,அமுதாவும் சரி எதுவும் பேசமாட்டாங்க தாமரை கேட்கவே வேணாம் தேவை இல்லாம பயப்படாதீங்க"

"யாரையும் குறைச்சு இட போடாத பங்கஜம் ஒவ்வொருத்தர் மனசுக்குள்ள என்ன எண்ணம் இருக்குனு படிக்க முடியாது.இந்த தாமரை பொண்ணு அவ புருஷன் கம்மியா காசு கொடுக்கரானு அத்தியாவசிய தேவைகளைக் கூடக் கேட்க மாட்டேங்குது.சீதாவும்,அமுதாவும் அவ கூடத்தானே இருக்காங்க ஒரு வார்த்தை ஏன் தாமரை வேண்டாமுன்னு சொல்லுற கேட்கலாமா? கூடாதா? ஏன் கேட்கல?அவுங்க அவுங்க தேவைகள் மட்டும் தீர்ந்தா போதும் யாரு எக்கேடு கெட்ட என்ன இதுக்குப் பெயர் குடும்பமா?” பேசியவர் வார்த்தையில் மட்டும் அல்லாது கண்களிலும் வலி.

இதற்கு என்ன பதில் சொல்லுவது "நீங்க சொல்லுறது புரியுதுங்க மாதங்கி குணம் தெருஞ்சும்மா அவ தங்கச்சிய நம்ம ராஜனுக்கு எடுக்க வாக்கு கொடுத்தீங்க.ஒவ்வொரு முறை மாதங்கி பிரச்சனை பண்ணும் போது எனக்கு இதான் நியாபக வருது அதுவும் ராஜனுக்கும் மாதங்கிக்கும் ஏழாம் பொருத்தம் இதுல எங்கிருந்து அவன் அந்தப் பொண்ண கட்டுவான்".

தனது மனைவியைப் பார்த்து மெண்மையாகச் சிரித்தவர் “அந்த பொண்ணு தங்கம் பங்கஜம் அவளை மாதங்கியோடு ஒப்பிடாத.அவ தான் நம்ம முரட்டு காளைக்குச் சரியான மூக்குனாங் கயிறு.

லேசு பட்ட ஆள் இல்ல அந்த மாதிரி ஒரு பொண்ணு தான் ராஜனுக்குச் சரி.அவன் ஒத்துக்க மாட்டான் அதே சமயம் என் பேச்சையும் தட்ட மாட்டான்"சொல்லியவர் மனைவியை இழுத்து அனைத்துக் கொண்டு “நமக்கான நேரம் பங்கு” என்று கட்டிலில் சரிந்தார்.

இதே தான் அங்கு விஜியும் தனது அண்ணனிடம் சொல்லி கொண்டு இருந்தாள் “இன்னும் இரண்டு வருஷம் தான் அண்ணா நீ அந்த வீட்டுல தான் பொண்ணு கட்ட போற அண்ணிகிட்ட வார்த்தையை விடாதே" அவளை முறைத்தவன்.

“ஏன் வீட்டுக்கு ஒன்னு போதலையமா எனக்கு அந்த நினைப்பே புடிக்கல பாப்பா இதைப் பத்தி பேசாத”அவன் குரலில் இருந்த இறுக்கம் விஜிக்கு கவலையைக் கொடுத்தது

இங்கு தங்களைப் பற்றி அனைவரும் எண்ண அங்கே மாதங்கி தன்னை மட்டுமே கொண்டு வழமை போலக் கண்ணனை காச்சி கொண்டு இருந்தாள் “உங்க அப்பாரு பேசுனதை கேட்கிங்களா நான் அப்படி என்ன கேட்டேன் இல்ல என்ன கேட்டேன்” அவள் குரல் உயரவே

ஏய்! பக்கத்துல எல்லாரும் இருக்காங்க கேட்டுற போகுது மெதுவா பேசு தங்கள் அறையும் பக்கத்தில் தனது தம்பிகள் அறையும் ஒரே தடுப்புச் சுவர்கள் கொண்டவை இங்கு என்ன பேசினாலும் அச்சுப் பிசகாமல் அங்குக் கேட்கும் அதற்காக கண்ணன் சொல்ல அவள் காதில் விழுந்தால் தானே.

இங்க பாருங்க அடுத்த மாசத்துல இருந்து எனக்கு நூறுவா தனிச் சேமிப்பு கூடுதலா வேணும் சொல்லிட்டேன் கண்களை அவள் உருட்டிய உருட்டில் மயங்கினானா இல்லை மிரண்டான என்பது அந்த அப்பனுக்கே வெளிச்சம்.
"சரிம்மா தரேன்" அவனது ஒப்புதல் தந்த ஆறுதல் அவளைத் தூங்க வைத்தது

கண்ணன் எப்போதும் பேச்சை வளர்க்க மாட்டான் அதற்காக எல்லா விடயத்திலும் அவளிடம் பணிந்து போகவும் மாட்டான்.அவனது எதிர்ப்பு மௌனம் அவன் ஒரு நாள் மௌன யுத்தம் புரிந்தால் கூட மாதங்கி தாங்க மாட்டாள்.எனவே கை மீறி போகும் விடயங்களுக்கு அவனது மௌனமே தண்டனை அதனால் மாதங்கி கொஞ்சம் அடக்கியே வாசிப்பாள்.

"விட்டு கொடுப்பார் கெட்டு போவதில்லை" தனது தாயின் கூற்றைக் கொண்டு குடும்பம் நடத்தும் பிள்ளை நம் கண்ணன் கருணை உடையவன்

இவன் பிச்சிப்பூ வகையோ……….

Last edited:

Nirmala senthilkumar

இன்று தேதி ஒன்று பட்ஜெட் போடும் நாள் அதனால் அனைவரும் கொஞ்சம் ஆர்வமாகத் தான் இருந்தனர்.இந்நாளில் மட்டும் தான் தங்களின் தேவைகளை கேட்க முடியும் அதனை வைத்து தான் மாத முழுமையும் கொண்டு செலுத்த முடியும் அதனை வைத்து தான் மாத முழுமையும் கொண்டு செலுத்த முடியும் ஒவ்வொரு மக்களின் பட்டியலும் அனுமார் வால் போன்றது என்பது குறிப்பிட தக்கது.

"விட்டு கொடுப்பார் கேட்டு போவதில்லை" தனது தாயின் கூற்றைக் கொண்டு குடும்பம் நடத்தும் பிள்ளை நம் கண்ணன் கருணை உடையவன்

இவன் பிச்சிப்பூ வகையோ……….

Nirmala vandhachu
Best wishes for your new story ma
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top