அத்தியாயம் – 8

Advertisement

dhanuja senthilkumar

Well-Known Member
கதம்பவனம் – 8
அழகு சோலையில் இன்று நானும் ஓர் அங்கம் என்பது போல் அந்தக் காலை வேளையில் தலைக்குக் குளித்துப் புத்தம் புது மலராக வந்தாள் விமலா.

பங்கஜத்தின் கண்கள் எதிர்பார்ப்பில் மின்னுவதைப் அறிந்தாலும் கண்டு கொள்ளாமல் பூஜை அறை சென்று வணங்கியவள் அடுக்கலைக்குள் புகுந்து கொண்டாள்.

அவள் வருகைக்காகவே காத்திருந்த நால்வரும் அவளைச் சூழ்ந்து கொண்டனர் அதில் மாதங்கியும் அடக்கம் “ஏய்! விமலா நல்ல தூங்கினியாடி ஆவலுடன் கேட்ட தன் என்ன கேள்வி இது என்பது போல் தமக்கையை பார்த்து வைத்த விமலா “நல்லாத்தான் தூங்குனேன் இதெல்லாம் ஒரு கேள்வியா”

“என்னடி லூசு மாதிரி பேசுற”

“யாரு நான் லூசா நீ தான் லூசு மாதிரி கேள்வி கேட்கிற” என்று விமலா எகிற இவர்கள் சண்டையை பார்த்து தலையில் அடித்துக் கொண்டனர் மற்ற மூன்று பெண்களும்.
மாதங்கியிடம் சீதா“அக்கா நீங்க போங்க நான் கேட்டு சொல்லுறேன் சின்னப் பொண்ணுல அதான் வெட்க படுது” என்ற சீதா மாதங்கியை சமாளித்து அனுப்பிவிட்டு பெருமூச்சு விட

“சீதா அக்கா எங்க அக்கா தான் லூசுன்னு நெனைச்சா நீங்க அதுக்கு மேல இருக்கீங்க தூங்க எதுக்கு வெட்க படனும்”

அவளது பேச்சில் “கிழுஞ்சுது” சீதா முனக. அமுதா நெஞ்சை பிடித்து விட்டாள் தாமரையோ நம்ப தேவலாம் போல மனதுக்குள் எண்ணி கொண்டாள் பாவம் அந்தப் பெண்களால் முடியவில்லை அக்காவும் தங்கையும் அடிக்கும் கூத்தை தாங்க.

விமலாவின் பேச்சு எரிச்சலை கொடுக்க “இங்க வா” என்ற சீதா விமலாவின் காதில் விளக்கம் சொல்லி “இப்போ வெட்க படமா சொல்லு” என்க

சீதாவை நோக்கி இதுக்கு எதுக்கு வெட்கம் அதுவும் நானு சும்மா விளையாட்டு பண்ணிக்கிட்டு போங்க அக்கா என்க

சீதாவோ “இவ அக்கா கிட்ட இருந்து இவள காப்பாத்த நாம சொன்னா என்ன எகத்தாளம்மா பேசுற பாருங்க” விமலாவை பார்த்து முறைக்க கண் சிமிட்டி சிரித்தாள் விமலா.

நடப்பதை அறியாமல் இவர்கள் கூடி இருப்பதை ரசனையாகப் பார்த்துக் கொண்டு வந்தார் சுந்தரம் “ஏம்மா மாட்டு பொண்ணுங்களா இந்த மாமனாருக்குக் கொஞ்சம் காப்பிக் கிடைக்குமா” பேச்சு அவர்களிடம் இருந்தாலும் பார்வை சின்ன மருமகளிடம் இருந்தது.

அடுக்கலைக்குள் வந்த மாமனாரை எட்டாவது அதிசயம் போல் பார்த்து வைத்தனர் மற்ற பெண்கள் விமலாவின் கையில் காப்பிக் குடிக்கத் தான் அவள் எழும் வரை அமைதி காத்தார் என்பதை அப்பெண்கள் அறியவில்லை போலும்.

விமலாவோ அவரைக் கண்டு கொள்ளாது காப்பியை கலந்து அவரிடம் செல்லுவது போலச் சென்று அவர் வாய்க் கொள்ளப் புன்னகையுடன் கையை நீட்ட அவரை தாண்டி தனது கணவனுக்கு எடுத்துச் சென்றாள் கையில் உள்ள மிட்டாயை களவாடி சென்றது போல முகத்தை வைத்துக் கொண்டு அமுதாவை பார்க்க சிரித்தவாறே அவர் கையில் காப்பியை திணித்தவள்.

“என்னதான் இருந்தாலும் உங்களுக்கு இம்புட்டு ஆகாது மாமா” அமுதாவின் கூற்றில் நிமிர்ந்து பார்த்தவர் ஏதும் அறியா பிள்ளை போல “ஏன்ம்மா அப்படி சொல்லுற”

"கல்யாணம் ஆகி இத்தனை வருசத்துல நீங்க அடுப்பாங்கரைக்கு வந்து நான் பார்த்ததே இல்லை என்று கூறியவள் சீதாவிடம் திரும்பி “ஏன் சீதாக்கா உங்களுக்குப் பார்த்த மாதிரி நியாபகம் இருக்கு”

“இல்லையே அமுதா திண்ணையும் கொல்லையும் தான் மாமாக்கு தெரியும் நெனச்சேன் ஏன் தாமரை உனக்கு?

ஹ்ம்ம்.............இடமும் வலமுமாக மண்டையை ஆட்டிய தாமரை “மாமாக்கு ஆறு மணிக்குக் காப்பிக் குடிக்காட்டி தெய்வ குத்தம் ஆகிடுமுன்னு நெனச்சேன் ஆனா பாருங்க விடிஞ்சு எட்டு மணி ஆகியும் மாமா காப்பிக் குடிக்காம இருக்கார் ஆச்சிரியம் தான்” தாமரையின் பங்குக்கு அவளும் சுந்தரத்தை வார,

நீயுமா! என்பது போல் தாமரையைப் பார்த்தார் சுந்தரம் தனது கணவனைக் கேலி செய்யும் மருமகளையும் அவர்களிடம் வசமாக மாட்டி கொண்டு முழிக்கும் தனது கணவனையும் புன்னகையை வாய்க்குள் அதக்கி பார்த்துக் கொண்டே வேலையைத் தொடர்ந்தார் பங்கஜம்
இவர்கள் பேசுவதைக் காதில் வாங்காது தனி உலகில் சஞ்சரிப்பது போலக் கணவனுக்கும்,குழந்தைகளுக்கும் தேவையான காப்பியை கலந்து கொண்டு இருந்தாள் மாதங்கி.

அவளுக்கு மனதுக்குள் அத்தனை மகிழ்ச்சி தனது தங்கையும் தன்னைப் போலத் தான் என்று எண்ணி கொண்டாள்.சுந்தரத்திடம் அவள் அலட்சியம் காட்டுவது போல் தனது தங்கையும் நடந்து கொண்டது காபியை தனது அறைக்கே எடுத்துச் சென்றது எல்லாவற்றையும் எண்ணி அவள் மனது வேகமாகத் தப்பு கணக்கு போட்டது.

அது சரி……
***
அங்கு ராஜாவின் அறையில் அவனையே பார்த்தவாறு நின்று கொண்டு இருந்தாள் விமலா.அவன் தன்னை அனைத்துக் கொண்டு உரிமையாகத் தூங்கியது பிடித்தம் என்றாலும் அதற்கு முன் அவன் பேசியதெல்லாம் அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை அதுவும் தன் மீது நம்பிக்கை இல்லை நம்பிக்கை வந்தவுடன் உன்னுடன் என் வாழ்க்கையின் தொடக்கம் என்று பேசியதை எண்ணி இப்போதும் கோபம் உச்சம் தொட்டது.

‘நம்பிக்கை இல்லாதவர் பின் எந்த நம்பிக்கையில் தன்னைத் திருமணம் செய்து கொண்டாராம்’ மனம் முரண்டியது நேரம் செல்வதை உணர்ந்தவள் கடமையை எண்ணி ராஜனை எழுப்பினாள் "என்னங்க எழுந்திரிங்க காப்பி"
தூக்கம் கலைந்து எழுந்தவன் தன் முன் நிற்கும் விமலாவை ஒரு நிமிடம் பார்த்துவிட்டு பின்பு தான் அந்தக் கோப்பையை வாங்கினான் பொறுமையாக அதனை குடித்தவன் “இனிமே ரூமுக்கு எடுத்துட்டு வராத வெளில எல்லாரும் ஒன்னா தான் உட்காந்து குடிப்போம்" அடுத்து அவன் பேசுவதற்குள்.

"ஐயாவுக்கு ரொம்ப ஆசை தான் முதல் நாளே வெளில வர சங்கடமா இருக்கும் கொண்டு வந்தேன் நாளைல இருந்து அங்க தான்" அவளது துடுக்குத் தனமான பேச்சில் சிரித்தவன்

"சங்கட படுற அளவுக்கு எதுவும் நடக்கலையே" குறும்பாக அவள் முகம் பார்த்து வினவ அவனைப் பார்த்து பல்லை கடித்தாள் அதற்கெல்லாம் அசரூபவனா என்ன அவளது கோபத்தை கிளறி விட்டு அவளைத் தனது தோளால் இடித்து விட்டு குளிக்கச் சென்றான்.

அவன் இடித்த இடம் வலி கொடுக்க ஹா!........ என கத்தியவள் எரும மாடு!.. எரும மாடு!.... தீட்டி கொண்டே வெளியில் வந்தாள்.

அதன் பின் இருவருக்கும் சண்டை போட கூட நேரம் கிட்டவில்லை பாவம் திருமணத்திற்கு வர முடியாத சொந்தங்கள் சிலர் வீட்டில் வந்து பார்த்துவிட்டு சென்றனர்.ராஜன் அலுவலகத்தில் இருந்தும் ஆண்கள் பெண்கள் எனச் சுமார் பத்து பேருக்கு மேல் இருந்தனர் அதில் மேனகா என்னும் பெண்ணின் பார்வை அவ்வப்போது ராஜனை ஏக்கமாகத் தொட்டு மீண்டது.

பெண்களின் கண்கள் ஸ்கேனர் போன்றது அல்லவா அவர்கள் ஊடுருவும் பார்வை யாரும் அறியாத வண்ணம் கவனித்துக் கொண்டு தான் இருந்தது.

விமலா,யாரையோ முறைத்து பார்ப்பதை கண்ட ராஜன் புருவ முடுச்சுடன் அவள் பார்வை சென்ற தீக்கை பார்க்க அங்கே மேனாக அவனைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

இவ வேற என்று மனதுக்குள் சலித்தாலும் விமலாவை சீண்டும் பொருட்டு அவளிடம் கொஞ்சம் அதிகமாகத் தான் பேசினான்.

இவர்கள் விளையாடும் நீயா நானா போட்டியில் பயந்து சாவது என்னமோ சீதா,அமுதா,தாமரை தான்,எங்கே மாதங்கிக்கு தெரிந்தாள் ஈரை பேனாக்கி பேனை பெருச்சாளி ஆகிவிடுவாள் என்ற பயம்.

தாமரை மெதுவாகச் சீதாவின் காதில் “அக்கா இதுங்க இரண்டும் பண்ணுறதா பார்த்த சரியா படல”

“எனக்கும் அதாண்டி தோணுது கல்யாணத்துக்கு முன்னாடி கரடியா கத்துனோம் மண்டைய மண்டைய இரண்டும் நல்ல புள்ள மாதிரி உருட்டிட்டு இப்போ என்னடானா மல்லுக்கு நிக்குதுங்க”

“அக்கா வந்துவுங்க போகட்டும் விமலாவை தனியா கூப்பிட்டு பேசிடுவோம் விளையாட்டு விஷியம் இல்லை”அமுதா கலவரமாகச் சொல்ல

"நல்ல கதையை கெடுத்த போ அமுதா மாதங்கி அக்கா கண் கொத்தி பாம்பாட்டம் பார்த்துகிட்டே இருக்காங்க அவங்களுக்கு தெரியாம பேசுறது ரொம்ப கஷ்டம்”

“நீங்க சொல்லுறதும் சரிதான் இப்போ என்ன அக்கா பண்ணுறது”

“மறு வீட்டு விருந்து முடியட்டும் கண்ணா அத்தானும்,மாதங்கி அக்காவும் ஊருக்கு போறாங்க அப்போ பேசலாம்.அக்காவா வச்சுக்கிட்டு விமலா கிட்ட பேச முடியாது”

அதுவும் சரிதான் மூவர் குழுவும் ஒன்றாகச் சேர்ந்து முடிவு செய்தனர். திருமணம் உறுதி செய்த நாள் முதல் படப் படப்பாக இருப்பது இவர்கள் மூவரும் தான் இன்னும் இரு ஜீவன்களும் உண்டு ஆனால் வெளிப்படுத்தாமல் மனதுக்குள் போட்டுக் கொண்டு மருகினர்.

வெளியில் மூவரும் தங்கள் வாழ்க்கைக்காகப் போராட அதன் பாதிப்பு எதுவும் இல்லாதது போல விமலா ஒரு புறம் புத்தகத்தை வைத்துக் கொண்டு படிக்க ராஜன் ஒரு புறம் நோட்டை வைத்து எழுதி கொண்டு இருந்தான்.

அவன் வேலை முடியும் வரை அந்த அறையின் விளக்கு எரிந்தது அவன் வேலை முடிந்தவுடன் அனைத்து விட்டான் வேண்டுமென்றே அவன் சீண்டுவதை அறிந்தவள் “படிச்சுக்கிட்டு இருக்கேன்ல கண்ணு தெரியல" கோபமாகக் கத்த.

அமைதியாக விடி விளக்கை போட்டவன் “என்ன தேர்வுக்கு அம்மையார் படிக்கிறிங்க” எகத்தாளமாகக் கேட்க வாய்யை இறுக்க மூடிக்கொண்டாள் என்னத்த சொல்ல அவள் படித்தது மாத இதழ் புத்தகம் அல்லவா அவனை முறைத்த வாரே இருந்தவளை பார்த்தவன் “தூங்குடி” என்க அவனை முறைத்தவாறே படுத்தவள் அவனை மனதுக்குள் திட்டி கொண்டே தூங்கி போனாள்.
**
அங்குச் சுந்தரம் வழமையான இடத்தில் கையில் தனது சுந்தரியை அணைத்தவாறு ஏகாந்த இரவை ரசிக்க அவரது முகம் பார்த்த பங்கஜம் “என்னங்க பசு மேட்டுக்கு இழுத்தா காளை பள்ளத்துக்கு இழுக்குது இதுங்க வண்டி எங்கன நேர போக எனக்குப் பயமா இருக்கு” அவர் யாரை பற்றிப் பேசுகிறார் என்று தெரியாதவரா என்ன

“விடு பங்கஜம் முட்டி மோதி வரட்டும் நம்ம வேடிக்கை மட்டும் பார்ப்போம் இப்போ நமக்கான நேரம்”

“ப்ச் போங்க சுந்தரரே மனசு பயந்து வருது பிடிக்காத பிள்ளைகளைக் கட்டி வச்சுத் தப்பு பண்ணிட்டோமோ”

அவரது கலங்கிய மதி முகத்தைக் கண்டவர் அவரது பேச்சை மற்றும் பொருட்டு“என்னடி பங்கு நீயே போன நான் எங்க போறது பின்பு யோசனை வந்தவராக ஏண்டி காலையில நம்ப மருமக புள்ளைங்க கிட்ட மாட்டிட்டு முழிக்கிறேன் என்ன பார்த்து அம்மையாருக்கு என்ன அப்படி ஒரு சிரிப்பு”

அவரது பேச்சில் சற்று தெளிந்தவர் குறும்பு மின்ன “இருக்காதா பின்ன நான் செய்ய முடியாததை என் மருமகள்கள் செய்றாங்களே அடி பாவி! உன்ன என்றவர் அவரை இறுக்கி அனைத்து கொள்ள முதிர் காதல் உச்சம் தொட்டது.

பருவ வயது தொடங்கி அதன் பின் தொடங்கும் தேடல் மனிதனை விரட்டி கொண்டே தான் இருக்கும்,கல்வி,பொருள்,வாழ்க்கை துணை,குழந்தை என்று தமது நாட்கள் நீண்டு அதன் உச்சம் முதுமையின் காதல் தேடலே.நீ விதைக்கும் காதல் கனியாவது உன் முதுமையில் மறுக்கப் படாத கூற்று இதில் அறிந்து ருசித்தவர்களும் உண்டு அறியாத பிழைகளும் உண்டு இதில் சுந்தரம் முதல் ரகம்.

பங்கஜம் துணையுடன் வாழ்க்கையின் உணர்வுகளையும் கடமைகளையும் சரி விகிதம் சமநிலை படுத்தி வாழ்ந்து கொண்டு வருபவர் அதனால் தான் எந்த ஊடல் வந்தாலும் கலங்காமல் கடந்து விடுகிறார்.

ராஜன் விமலா விடயமும் அதே போல் தான் சரி ஆகிவிடும் ஆனால் அவரை போல் திடம் கொண்டவர் இல்லையே பங்கஜம் அவர் மட்டுமா அவ்வீட்டு பெண்களும் தான் துயில் கொண்டு இருக்கும் இருவரின் வாழ்வை எண்ணி தூக்கம் கெட்டு தவித்தவர் அங்கு ஐவர்.

Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top