அத்தியாயம் – 6

Advertisement

dhanuja senthilkumar

Well-Known Member
வம்பு நாட்டான்

அத்தியாயம் – 6

பொன் காலை வேளை என்பது இது தான் போலும் இரவெல்லாம் உல்லாசம் குளியல் கொண்ட நெற் கதிர்கள் இதழில் தாங்கி நின்ற பணி துளியை எடுப்பாக காட்டி நிற்க கதிரவன் தனது இதழ் கொண்டு உறிஞ்சி காதல் செய்தான்.

அவனது சேட்டையில் சிலிர்த்த மேகம் அவனது காதல் போதையை தன்னை கொண்டு மறைத்தாலும் சிணுங்கி வெறியேற்றி அவனது கதிர்களை வெளி கொண்டு வந்தது இந்த அழகான விடியல்.

கதிரவனே இப்படியென்றால் நம் கதாநாயகர்கள் எப்படியோ? ஆக மொத்தம் ஒருமார்கமாகத் தான் விடிந்தது இந்த விடியல்.

சடையனும் சோமனும் அடித்த கூத்தில் இரவெல்லாம் சரியான உறக்கமில்லாமல் சற்று பயத்துடன் கூடத்தில் நின்று இருந்தனர் குடும்ப உறுப்பினர்கள்.

அனைவருக்கும் சிறு எரிச்சலுடன் கூடிய சலிப்பு இருக்கத் தான் செய்தது வள்ளி ,சொக்கன், மூக்கையன் ,குமாரி என்று பெரியவர்கள் பட்டாளம் வேலை வெட்டியை விட்டுவிட்டு கடந்த இரு வாரங்களாகப் பஞ்சாயம் என்ற பெயரில் இங்கு இருக்க எரிச்சல் வரத்தானே செய்யும்.

இதில் ஒன்று சேர்ந்தார் போல் அனைவருக்கும் வெள்ளை கட்டு மூட்டிலும் கால்களிலும் நேற்று நடந்த களேபரத்தை நடனதேவரிடன் சொல்லி பொருமி விட்டனர் ஆண்கள் குழு.

மாப்பிள்ளைகள் முன் பேசவே முடியவில்லை நடனதேவருக்கு “என்ன டா இது வம்பு நாட்டானுக” என்று கடிந்தவர் இனி தாங்காது என்பது போல் தனது அக்காளுடன் கலந்து கொண்டு ஒரு முடிவுடன் தனது குடும்பத்தில் பெரிய தலைக்கட்டும் பெரியவருமான மூப்பனை அழைத்து விட்டார்.

இவர் நடனதேவருக்குத் தந்தை வழி சொந்தம் எண்பதுகளில் உள்ளவர் அளவாக பேசி காரியம் சாதிக்கும் மனிதர் அவரை வைத்து பேசி இன்றே முடிவெடுத்து விடுவோம் எண்ணி இதோ அவர் முன்னையில் அனைவரும்.

மூப்பன் என்று அழைக்கப்படும் முத்துராம தேவன் தனது தொண்டையைக் கனைத்து தனது இருப்பைக் காட்டி பேச்சை தொடங்கினார் “என்ன நல்லம் என்ன கூட்டியாந்து உட்கார வச்சு புட்டு பேசாம இருந்தா என்ன செய்தி”

“அண்ணே வூட்டு நிலை வாசல் தாண்டி போயாச்சு மேற் கொண்டு அது சந்திக்கு வந்துபுடாம இருக்கத்தேன் உங்கள கூட்டியாந்தேன்”

ஹ்ம்ம்..... என்றவர் நடனதேவரை பார்த்து “சொல்லு தேவா” என்க அவர் சொல்லுக்காக காத்திருந்தவர் போல் ஒரு பெருமூச்சுடன் தொடங்கினார்.

“அண்ணே மக்களுக்கு நான் இரண்டு தாரம் கண்ணாலம் பண்ணது ரொம்பப் பிரச்சனையா போச்சு போல என் பொண்ணு அறிவு பிராது சொல்லுது”

“அது சரி” படு தீவிர பாவனையுடன் பெரியவர்

“அம்புட்டுக்கும் காரணம் நாந்தேன்.... அப்பன், புருஷன் இல்லாம தஞ்சம் வந்த பிள்ளைகளை வேலைக்காரியா நடத்தி புட்டேன் என் பொஞ்சாதிங்க ,அண்ணே அண்ணி, பேத்திங்க பேரனுகன்னு யாருமே நியாயம் செய்யாம அவுங்கள ஒதுக்கி புட்டோம்னு பிராது”

“அது சரி அடுத்து” மெல்லிய புன்னகை கொண்டு இடமும் வளமும் தலையை ஆட்டி கொண்டார் பெரியவர்.

“ஆக மொத்தம் பிறந்தகமும் புகுந்தகமும் நியாயம் செயல்னு பிராது இதுல என் மவேன் மூணு வருசத்துக்கு முன்னாடியே ஆருக்கும் தெரியாம அறிவு பொண்ண கண்ணாலம் பண்ணிபுட்டான் அது அடுத்தப் பிராது”

“இது என்னடே ஒன்னுக்கு ஒன்னு உரசலே இல்லையே!.... ஆனா நீ முன்னாடியே நாந்தேன் காரணம்னு காலுல விழுந்து புட்ட” என்று சிரித்தார் பெரியவர்

“அப்பத்தானுக சேதாரம் குறைவா போகும்” என நடனதேவரும் சிரித்து வைத்தார்.

பேச்சோடு சிரிப்பு இருந்தாலும் காரியத்தில் கண்ணாக “அம்மாடி அறிவு பிள்ளைகளோடு முன்னுக்கு வா அது என்ன ஆரோ (யாரோ) போல ஒதுங்கி கிட்டு” என்று தனித்து நின்ற மூன்று பெண்களையும் அழைத்தார் மூப்பன்.

சுற்றி பெரியவர்கள் ஆண்கள் பெண்கள் இளவட்டம் கூடி நிற்க இவர்கள் மற்றும் எதிரில் நின்றனர் தனது முன் நின்ற அறிவை பார்த்தவர் “என்ன பாரு சாமி” என்க

தலையை உயர்த்திப் பார்த்தார் அறிவு கண்கள் சேவப்பேறி போய் இருந்தது ஒரே பேச்சாக “அம்மாடி முதல புகுந்த வூட்டு சங்கந்திய பார்ப்போம் சொல்லு எதுக்குச் சோமே கூட வாழலை” பதில் இல்லை மௌனம் மட்டுமே பெண்ணிடம்.

“சரி சாமி அது புருஷன் பொஞ்சாதி பஞ்சாயம் பொதுவுல வேணாம் நீங்களே பேசிக்கிடுக.இரண்டு பொண்ணுக கண்ணாலத்துக்கு நிக்குது அதுங்கள வச்சுக்கிட்டு இத்தினி சொந்தம் இருக்கும் பொதுத் தனுச்சுக் கிடக்குறது சரியில்லை சாமி”

“இல்லங்கையா தனியா இருந்தாதேன் தன்னம்பிக்கை வரும் இல்லனா யாரையாவது அண்டியே இருக்கனும் என் தலையெழுத்து என்னோட போகட்டும் என் மவளுகளுக்கு வேணாம்”

அறிவு இதனைச் சொன்னதும் நடனதேவர், சோமன், ராசியப்பன், முத்து, சடையனுக்கு அத்தனை வலி அக்கா, தங்கை மனைவி, மகள் என்ற நிலையில் அறிவை எங்குத் தவற விட்டோம் தவித்து நின்றனர் ஆண்கள் குழு.

“இந்தக் காலத்துல பொண்ணுங்க தன்னம்பிக்கையோடு இருக்கனும்தேன் அதுக்குத் தனியா இருக்கனும்னு அவசியமில்ல சாமி உன் பிரச்சணை என்ன? நான் கேட்டது வரை உனக்கு விளக்கம் சொல்லுதேன் ஏத்துக்கிட முடியுமான்னு பார்த்துகிடு” பணிவு கொண்ட கட்டளையுடன் பெரியவர்.

“அந்தக் காலத்துல அக்காள தங்கச்சிய கட்டிக்கிறது அம்புட்டு பெரிய விஷயம் இல்லை அது உறுத்தல் தெரியல ஏன்னா பாகுபாடு இல்லாம வாழ்ந்தாய்ங்க. இப்ப காலம் மாறி போச்சு உன் எண்ணமும் எனக்குப் பிடிபடுத்தேன் அதுக்கு உங்க ஐய்யனை பொனகி போனா என்ன சாமி நியாயம்”

“உங்க அய்யனுக்குச் செல்லம்மாளை கண்ணாலம் பண்ணுற செய்தி முதல் நாள்தேன் தெரியும் அவனும் சின்னப் புள்ளன்னு மறுத்து புட்டான்,ஆனா உங்க மாமனார் அதாவது உன் அம்மா வழி தாத்தேன் சாகக் கிடந்து சாதுச்சுபுட்டான் பழி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கமா உங்க அய்யன் நிக்கான் சாமி”

ஐயா!...

“இருங்க பேசி முடிச்சு புடுறேன் உங்க கேள்வி என்ன? உங்க காலம் சரி எனக்கு ஏன்? அதானே” என்று பெரியவர் சரியாக நாடி பிடிக்கச் சங்கடமாகத் தலையாட்டினாள் அறிவு

“உங்க கண்ணாலம் தப்புதேன் ஒத்துக்கிடுறேன் ஆனா செல்லம்மா மவ ரெண்டாந்தாரத்து பொண்ணு அது நாளா இந்தக் கண்ணாலம்னு பிராது சொல்லுறது சரியில்லை சாமி எனக்கே வலிக்குது உங்க அய்யனுக்கு எம்புட்டு வலிக்கும்” இதைச் சொன்னதும் அறிவு கண்ணில் இருந்து நீர்.

“நல்லா கேட்டுக்கிடுங்க உம்ம கண்ணாலம் முடிவு பண்ணும் போது இரண்டு பக்கமும் நாந்தேன் ஆளா இருந்து முடிவு கொடுத்தேன்.சோமே ஆசை பட்டது உங்களத்தேன் அவுக ஐத்த சாவ போற பிள்ளைக்கு வாழ்க்கை பேச்சை கேட்டும் மறுத்து புட்டான்”

“அது நோக கெடக்கு இன்னும் ரெண்டே மாசம்னு சொல்லி அது சோமே காலுல விழுந்து காரியம் முடிச்சு புடுச்சு அப்பவும் அவன் சரினு சொல்லி அறிவுத்தேன் என் பொண்டாட்டின்னு எங்க கிட்ட உறுதி வாங்கிட்டுதேன் கண்ணாலம் பண்ணுனான் அதுக்கு நான் சாட்சி”

“ அவன் கெட்ட நேரமோ இல்ல அந்தப் பொண்ணுக்கு நல்ல நேரமோ ரெண்டே மாசத்துல போக வேண்டிய உசுரு மூணு வருஷம் செண்டு போயிருக்கு என்னத்த சொல்ல விதி ஆசான் தேன்”

“இது நெசமான உண்மை சாமி குமாரி ய ஏன் கொடுக்கலண்டா உன் புருஷனை விட மூப்பு எப்படி உங்க அய்யன் கொடுப்பான் சொல்லு”

“இதெல்லாம் எனக்குத் தெரியாதுங்க ஐயா”

“மனுசுல மருகிக்கிடக்காம பேசி இருக்கலாம்.... அவுங்களும் சொல்லி இருக்கனும்.... சரி வுடு காலம் போச்சு.... இனி ஒன்னு தொட்டு ஒன்னு பேசி சங்கடந்தேன்.... ஐயா யாசகம் கேட்கேன் செய்வீகளா?” பெரியவர் அறிவை பார்த்து கேட்க பதறி போனவள்

“என்னங்க ஐயா சொல்லுக செய்யுதேன்”

“வாய்ப்பு கொடுக சோமனுக்கு” என்றவர்

“சோமா!”

“சொல்லுங்க ஐயா”

“போன காலத்தை வுடு இருக்குற காலத்தை வுட்டுப்புடாத பொஞ்சாதி கூடப் பேசி வாழ பாரு போதும் அது தனுச்சுக் கிடந்தது இம்பூட்டுச் சொந்தம் இருந்தும் அப்பவே பேசி முடிக்க வேண்டிய விஷியத்தை இம்புட்டு நாள் இழுத்ததே தப்புதேன்”

“நான் தேவனைப் பார்க்கும் போதெல்லாம் இதைப் பத்தி பேசுனேன் அவன் வுடுக என் பொண்ணு அழுகுது அது இதுனு காலத்தை வீணாக்கி புட்டான்”

நல்லம்மாளை சுட்டி காட்டி “தங்கச்சி அதுக்கு மேல இரத்த வாடையுல எங்கன ரோசம் வந்துன்னு தெரியல அதுவும் இறங்கி வரல காலம் போனது போனதுதேன்..... நாதி இல்லாத புள்ளன்னா தலையெழுத்துனு வுட்டுப் புடலாம் ஆனா மக்கா மனுஷல்னு இம்புட்டு உறவு இருக்கும் போது தனுச்சு இருக்குறது ரொம்பத் தப்பு”

“எங்க காலத்தை வுடு இனி உங்க காலந்தேன் கெட்டியா புடிச்சு கிடுக உரிமை இருக்கு உறுத்து இருக்குச் சண்டை போடு சாமி அதை விட்டுபுட்டு விலகி நிக்காதே” என்றவர் பொதுவாக அனைவரையும் பார்த்து

இதுக்கு மேல நான் உள்ளார போய்ப் பேச முடியாது என்ன இருந்தாலும் நான் இந்தக் குடும்பத்துக்கு அந்நியம் தேன் இதுக்கு மேல நான் பேசுனா பேச்சு கோடு தாண்டும் நீங்களே பேசிக்கிடுங்க” என்றவர் எழுந்து நின்று கரம் கூப்பி நிற்க

பெரியவர் பெரியவர் தான் என்று மெச்சியது இளவட்டம் ஜவ்வாக இழுக்காமல் முக்கிய இடத்தை மற்றும் அவர் தீண்டிய பாங்கு அமோகம் “கோடு தாண்டா எல்லையில்” என்ற கூற்றில் மயங்கி தான் போனார்கள் பழமை என்றுமே பெருமை தானோ?

அனைவரும் எழுந்து நின்றனர் போகும் போது “தேவா நல்ல நாள் பார்த்து சோமு கூடப் பொண்ணை அனுப்பி வை பிறவு வூட்டுக்கு வா சடை கண்ணாலத்தைப் பேசி புடலாம்” என்றவர் வாரேன் என்று பொதுவாகச் சொல்லி கிளம்ப

“ராசி அண்ணனை வுட்டுபுட்டு வா” என்றார் நடனதேவர்

“சரிங்க ஐயா!...” என்றவன் தனது வாகனத்தை இயக்கி மூப்பனை கூட்டி சென்றான். அவர்கள் சென்றதும் சடையன் மேலே சென்று விட்டான்.

*

மெதுவாக அறிவை நெருங்கிய சுந்தரி “அறிவு என்னல்லாம் பேசி புட்ட நாங்க உங்கிட்ட நெருங்கி பேசினது இல்லாதேன் ஒரு சின்னத் துளைவு உண்டு,

ஆனா உன்ன வேலைக்காரியா எல்லாம் நினைக்கல அறிவு நீயும் பேச மாட்ட உன் பிள்ளைகளும் கல கலனு இருகாதுக அதேன் என்னவோ ஒரு ஒதுக்கம் மத்தபடி கங்கணம் இல்ல அறிவு”

“நீ அழுதா நம்ம வம்சம் தலைக்காது சாமி வூட்டுல பொறந்த பிள்ளைய அழுக வச்சா அந்த வூடு விளங்குமா சாமி நாங்க நல்ல.......”. சொல்ல வந்தவரது வாய்யை கை கொண்டு அடைத்தார் அறிவு

“மதனி ஒரு காலமும் நான் அப்படி நினைக்கல மதனி தனிமை,புள்ளைங்க வந்த சாடும் போது என்னால தாங்கிக்க முடியல மதனி சொல்ல போனா ஒன்னுமே அம்புடல”

“ப்ச்.... நீ எங்க சாமி அறிவு” முத்து உருக கலங்கி தான் போனாள் தவறு கொண்டவர்கள் தான் இல்லை என்பதற்கில்லை ஆனால் இங்குப் புரிதல் பொய்த்து போனதே அதைத் தான் தாங்க முடியவில்லை ஒன்று அவர்கள் புரிய வைத்திருக்க வேண்டும் இல்லை செயலை கொண்டு அறிவு சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

இருபுறமும் இல்லாத புரிதல் தான் பிரிவுக்கு வழியாகச் சென்றது மேலும் சில நிமிடம் மௌனம் கொள்ள அதற்குள் ராசியப்பனும் வந்த விட்டான் அவனது வரவை அறிந்த நடனதேவர் பேச தொடங்கினர்.

“மாப்புள” சோமதேவனை அழைக்க

“மாமா”

“உங்க பொஞ்சாதி கூடப் பேசி நல்ல செய்தி சொல்லுக பிறவு பார்ப்போம்”

“சரிங்க மாமா”

“அறிவு தெளிவு பண்ணட்டும் பிறவு அது எடுக்குற முடிவை கொண்டு பேசலாம்”

“சரிதாங்க மாமா”

“அது வரைக்கும் கொஞ்சம் அடங்கி இருங்க உங்கள மாதிரி இவங்களும் மாப்பிள்ளைங்கதேன் என்ன அசலு.... உங்கள மாதிரி உறுத்து இல்ல நட்ட நடு ராத்திரி களவாணி வேலை பார்த்து கால்லை உடைச்சு புட்டீக நான் ஆருக்கு பதில் சொல்ல” என்றதும் இளவட்டம் கிளுகி சிரிக்க அவர்களை முறைத்து வைத்தார் சோமன் இதற்காக தான் சடை ஓடியது.

மருமகனை வாரியதும் இல்லாமல் “வந்த விருந்தாளிகளுக்குக் காபி தண்ணி கொடுடி செல்லம்” என்று படு நக்கலாக நடனதேவர் மலரையும் நங்கையும் பார்த்துக் கொண்டே சொல்லி செல்ல தனது தாத்தனை முறைத்தனர் பேத்திகள்.

***

நடனதேவர் வீட்டுக்குள் செல்ல கூடத்தில் இருக்கும் யாரையும் பார்க்கவும் பேசவும் பயந்தவர்களாக நின்றனர் மூன்று பெண்களும் அதுவும் நல்லம்மாள் பார்வை தங்களைத் துளைக்கச் சற்று நடுங்கி தான் போனார்கள்.

“ஆத்தா நான் என் பொஞ்சாதி கூடப் பேசனும்”

“அதுக்கு ஏன்டா என்கிட்ட கேக்குற”

“அது வராது அப்படி வந்தாலும் என் பொண்ணுங்க தனியா விடாது” சிறு பிள்ளை போல் மூன்று பெண்களையும் மாட்டி வைக்க கூட்டம் அனைத்தும் படு உற்சாகமாக வேடிக்கை பார்க்க அறிவு நெளிந்தார்

“எந்தச் சிறுக்கி விட மாட்டேன்னு சொல்லுவா” என்றவர் எழுந்து நிற்க அறிவு தன் பெண்களுடன் ஒண்டி கொண்டார்

“அறிவு இங்கன வா” நல்லம்மாள் உரத்த குரலில் அழைக்க

“மகள்கள் தடுத்தும் கால்கள் மாமியாருக்கு மரியாதை செய்தது சோமே கூடப் போயி பேசிகிட்டு வா நான் உன் பொண்ணுக கூட உம்ம வூட்டுல இருக்கேன்” என்றவர் இரு பேத்திகளையும் கைக்கு ஒன்றாக பற்றிக் கொண்டு கிட்டத்தட்ட இழுத்துக் கொண்டு அவர்கள் தங்கி இருக்கும் இடத்தை நோக்கி செல்ல

சோமதேவன் உரிமையாக அறிவின் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு தனது வீட்டை நோக்கி சென்றார் பார்த்திருந்த கூட்டம் வாய் பிளந்து நிற்க பெரியவர்கள் சிறு புன்னகையுடன் கடந்தனர்.

இன்னும் தீர்க்க படாத கேள்விகள் உண்டு என்றாலும் உறவுகளை மாய்த்துக் கொள்ள விரும்பவில்லை தவறை சரி செய்ய முயற்சித்தனர் இதில் நடனதேவரும் அடக்கம்.

அவர்களை பார்த்து வாய் பிளந்து நின்ற கூட்டத்தைக் கண்டு ஏக எரிச்சலில் சொக்கன் வள்ளியிடம் “என்னடி வாய பொளந்து கிட்டு நிக்க உன் குடும்ப படம் ஜோரா இருக்குதா? இன்னும் எம்புட்டு நாள் பஞ்சாயம் பண்ணி ஆத்தா வூட்டுல டேரா போடுறதா இருக்க”

“ப்ச் நாளை மக்கா நாள் போயிடலாம்”

“என்னது நாளை மக்கா நாளா அதுக்குள்ள என் உசுரு போயிடும் மூட்டு வலுவுண்டு நடக்க முடியல உம்ம குடும்பத்துல வாக்க பட்டுக் காயம் கண்டத்துதேன் பலன்” பொரிந்து தள்ளினார்

“காயம் கண்டாலும் சுபம் தானே பாருங்க எம்புட்டு வருஷம் செண்டு மாமாவும் அறிவும் ஒன்னு சேர்ந்துக்கிச்சு அதுவே போதும் அதுக்குக் காயம் கண்டா ஒன்னும் தப்பில்லை”

“ஆமா மாமா” குமாரியும் கோரஸ் பாட ஏக கடுப்பில் சகலை பாடிகள்

“எம்புட்டு ஏத்தம் பார்த்தியா சகலை”

“ஆத்தா வூட்டுக்கு வந்தா மட்டும் வாய் வாசை படி வரைக்கும் போகுதுடே”

“சத்துப் பானம் போல ஆத்தா வூடு சகல அதேன் சுருதி ஏறுது இவுகள வுடு சகலை... பகலுக்குத் தள்ளி கிட்டுப் போறான் பாருய்யா அவனை என்ன செய்ய”

“எனக்கு என்னமோ மாமனும் மருமவனும் ஒட்டுக்கா புள்ள பேக்க போறாய்ங்கனு தோணுது”

“வாய்ப்புகள் உண்டுதேன் சகல”

“எது எப்படியோ இதுங்கள நாளை மக்கா நாள் மதுரைக்கு ஏத்தி புடனும் இன்னும் நாள் போச்சு எங்க அய்யனும் ஆத்தாளும் அடுத்தப் பஞ்சாயம் பண்ண வந்துடுங்க”

“இங்கனையும் அதே கதைத்தேன் பேசாம மாமனார் கிட்ட பேசிப்புடலாம் இவளுங்க கிட்ட பேசுனா வேலைக்கு ஆகாது”

“அதுவும் சரித்தேன் வா” என்றவர்கள் நடக்க முடியாமல் நடந்து தங்களது மாமனாரை பார்க்க சென்றனர்.

அங்கு...

“மாமா!.. என்ன... பேசவுடு என்ன பண்ணுற மாமா!... மா!...................”

“என்ன பேச வுட்டியாடி நீ!.... இல்லல எம்புட்டு பழி போட்ட அம்புட்டுக்கும் சேர்த்து வச்சுக் கொடுக்கேன் வாங்கிக்கிடு பெறவு பேசுவோம் பஞ்சாயம்” என்றவர் அடுத்து செய்த வேலைகள் யாவும்.............................

முதுமையில் காதல் வரம் பெற்ற முதுமகன் அதனைக் கொண்டாடி இத்தனை வருட குறைகளைத் தீர்த்தான்.

கொண்டாடிய எப்...பி அடுத்த வாரம் கண்ணை மூடி கொண்டு படிக்கவும்
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
MAR

Active Member
Nice episode.That old man made a justice.Nallammal u have not treated ur Dil Nicely .Somadevan what have u done for ur married life to sustain.U have not taken a single step to it.Only Arivu did all the things .Because of her u had kids.What kind of husband u are.Always thinking about ur desires.If u are really good person u must have talked about ur first marriage how it happened.You took alot of time.Arivu now that u can stay with ur husband but don't forgive him easily. Keep him at a distance.Make him realise his mistake.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top