அத்தியாயம் – 4

Advertisement

dhanuja senthilkumar

Well-Known Member
வம்பு நாட்டான்

அத்தியாயம் – 4
பகலவன் தனது வேலையைத் தொடங்க இத்தகைய விடியலை கனவிலும் கண்டு இருக்க மாட்டார் நடனதேவர்.விடிய விடிய மகளும் பேத்திகளும் ஆடியெடுத்து அடங்கிய பொதுப் பொழுது விடிந்து விட்டது.

செல்லம்மாள் அழுது அழுது ஓய்ந்து நடனதேவர் காலடியிலே படுத்து விட்டார். சற்று முன் தான் உறங்கினார் போலும் ஆவுடையம்மாள் வீட்டில் உள்ள அனைவரையும் ஒரு கண் பார்த்தவர் இனி தானும் அமர்ந்திருந்தாள் சரி வராது என்று எண்ணி.

வீட்டின் மூத்த தலைமுறையாக செயல் பட்டார் அலங்கோலமாக இருந்த முந்தியை அள்ளியெடுத்து சொருகி கொண்டு அனைவருக்கும் தேனீர் தயாரிக்கச் சென்று விட்டார்.

சற்று முன் விடியும் பொழுதில் தான் மூன்று பெண்களும் வெளிநடப்பு செய்தனர் எண்ணி பத்தே உடுப்புகள் எடுத்துக் கொண்டு இத்தனை வருடம் தங்களைப் பாதுகாப்பாகப் பார்த்து கொண்டதற்கு நன்றி சொல்லி கிளம்பி விட்டனர்.

தடுக்கப் போன சடையப்பனை அடக்கி விட்டார் நடனதேவர் போகட்டும் விடு என்பது போல் ஓர் பார்வை தந்தையின் பார்வைக்குக் கட்டுப்பட்டு அடங்கிப் போனான். அவனது பார்வை மட்டும் நங்கையை முறைத்துக் கொண்டு இருந்தது.

*

நேற்றைய தினம் இத்தனை வருடம் பேசாத மனைவியின் பேச்சை கேட்டு நன்றாக வாங்கிக் கட்டி கொண்டு சோமதேவன் கிளம்பி இருக்க அவரைச் சிறப்பாகக் கவனித்த அறிவழகி ஓய்ந்து போய் அமர்ந்து கொண்டார் இப்பொழுது தாயின் பொறுப்பை நங்கை ஏற்றால் போலும்.

பொதுவாகப் படப் படவெனப் பேசும் ரகம் மலர் தான் ஆனால் இன்றோ பேச்சே வரவில்லை அவளுக்கு. சிறியவள் பேசுவது அபூர்வம் ஆனால் இன்று பேசாத அத்தனையும் சேர்த்து வைத்து பேசியது...

நடனதேவர் தனது பசுவிடம் கேட்ட கேள்விக்குக் குதித்து வந்து முன் நின்றது கண்ணு குட்டி தனது முன் வரிந்து கொண்டு நிற்கும் பேத்தியை பார்க்க தாத்தானுக்கு வெகு ஆர்வம் போலும் புருவம் உயர்த்திப் பார்த்து வைத்தார்.

“அம்மாக்குப் பதில் நான் சொல்லுதேன் ஐயா தாத்தா”

“சொல்லும்மா கேக்கேன்” கிழட்டு காளை என்றாலும் காளை காளை தான்.... அதன் மிடுக்கு குறையாமல் பதில் நடனதேவரிடம்

“பல கேள்வி இருக்குங்க ஐயா தாத்தா”

“பேசிப்புடலாம் சாமி கேளுக”

“அம்மா இங்கன வந்து எம்புட்டு வருஷம் ஆகுது”

“உனக்கு மூணு வயசு சாமி அப்பா எத்தினி வருஷம்னு பார்த்துக்கிடுக”

“தோராயம்மா இருபது வருஷம் வச்சுக்கிடலாம் ஐயா தாத்தா”

“நீக சொன்னா சரித்தேன்” தாத்தனும் பேத்தியும் வெகு தீவிரமான உரையாடையில் இருக்கச் செல்வம் முத்தரசன் காதை கடித்தான்

“அரசு என்னாலே இவ தாத்தா முன்னாடி நின்னு இம்புட்டு தைரியமா கேள்வி கேக்கா இதே நம்பப் பேசி இருந்தா”

“ராசியாப்பாவும், முத்துப்பாவும், நம்பச் சித்தப்பும் சேர்ந்து மேல் தோளை உரிச்சு உப்புத் தடவி உத்தரத்துல தொங்க விட்டுருப்பாக”

“அதைச் சொல்லு எம்புட்டுச் சலுகை பார் இந்தப் பொம்பள புள்ளைங்களுக்கு ஓர வஞ்சனை ஓவரு டா”

“இருடா” என்னதான் பேசுறானு கேப்போம் அண்ணன் தம்பி இருவரும் நங்கையை நோக்கி பார்வையைத் திருப்ப அவளோ தாத்தன் முகம் பார்த்து நின்றாள்.

“சொல்லுக ஐயா தாத்தா நீக ஏன் அம்மாகிட்ட ஏன் வந்த? என்ன செய்தின்னு கேட்கல?”

“அவளும் என் மவதேன் சாமி விட்டுருவேனா உங்க அம்மாயிகாரி கிட்ட சொல்லி கேட்டேன் அவுக அழுதே சாதிச்சுபுட்டாக”

“சரி அம்மாதேன் சொல்லல அப்பா கிட்ட கேட்டு இருக்கலாமே”

“பேசி இருக்கலாம் தான் சாமி புள்ள தேறி வரட்டும் யோசுச்சேன்”

“ரொம்ப யோசுச்சு புட்டீங்க ஐயா தாத்தா எனக்கே இருபதுக்கு மேல போச்சு வயசு”

“................”என்ன பதில் சொல்வது மௌனம் கொண்டார் பெரியவர்...... மீண்டும் சாட்டை கொண்டு சுழட்டியது சின்ன குட்டி.

“சரி அம்மா வந்துட்டாக உங்களை நம்பி வந்தவுகள நல்லாவே பார்த்துக்கிட்டீக ஆனா உங்க இரண்டு பொண்ணுகளைப் பார்த்ததை விடக் கொஞ்சம் குறைவுத்தேன் போல”

நங்கையின் பேச்சில் எகுறி கொண்டு வந்தார் வள்ளி “ஏய்! என்ன பேசுற எல்லாத்துக்கும் ஒரே மாதிரித்தேன் அய்யன் சீர் செஞ்சாரு ஆருக்கும் ஒசத்தி செய்யல நீயே எங்களைப் பிரிச்சுப் புடுவா போல”

வள்ளியின் பாய்ச்சலுக்குச் சிறு புன்னகை சிந்திய நங்கை அவரிடம் சென்று “இதுக்கு பதில் சொல்லுக......... ஏன் பெரியம்மா மதியழகி,அன்னம்,சரசு மாதிரி தானே நானும்?”

ஆமா!..

“அப்புறம் ஏன் அவுங்கள உங்க வூட்டுக்கு கூட்டிட்டு போயி சீராடுறீக எங்களைக் கூட்டிட்டு போகல? இத்தினி வருசத்துல ஒரு நாள் கூடக் கூப்பிட்டதில்ல உண்மையா சொல்ல போனா உங்க வீடு எந்தத் திசைனு கூடத் தெரியாது” என்றவள் அதே புன்னகையுடன் அங்கே நின்ற சொக்கனை பார்த்தாள்

ஓர் நொடி பார்வை தான் மனிதனுக்கு முகமே விழுந்து விட்டது ஏனென்றால் அவர்தான் அனைத்து பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு போவார்.

அது!.. அது! .. வள்ளி பதில் வராமல் தடுமாற

அது தான் ஏன்?....... தடுமாறுறீக?..... கை நீட்டி கேலி போல் ஆனால் கண்ணில் வலியுடன் நங்கை.

“நான் ஏன் தடுமாறுறேன்.. உங்க ஆத்தா எங்கனையும் வுட மாட்ட அவளைத்தேன் கேட்கணும்” மழுப்பினார் வள்ளி

“அது சரி எத்தினி முறை நீக கேட்டு எங்க அம்மா விடல?....... சரி அதை வுடுக என்ன துணிமணி எடுத்தாலும், பூ வாங்குன கூட உங்க தம்பி மக, அக்கா, தங்கை மகனு கூப்டு குடுக்கிறீக எங்களுக்கும் வாங்கிக் கொடுத்தீக இல்லனு சொல்லல ஆனா அதை எங்களைப் பார்த்து எங்க கைல கொடுத்தீகளா?”

இதற்கு என்ன பதில் சொல்வது எது வாங்கினாலும் ஒன்று போல் தான் என்றாலும் மலருக்கும் நங்கைக்கும் வாங்கினால் மட்டும் அது செல்லம்மாளிடம் கொடுக்க பட்டு அவர் மூலம் அறிவழகி கைக்கு வந்து அதன் பின்னே மலருக்கும் நங்கைக்கும் கிட்டும்.

ஒரே வயது பிள்ளைகள் இருக்கும் போது இது போல் செயல்கள் மலரையும் நங்கையையும் மிகவும் பதித்து விட்டது பசு மரத்தாணி என்பது இது தான் போலும்.

பிள்ளைகள் களி மண்ணாக இருக்கும் பருவம் மிகவும் முக்கியமான பருவம் அதனைப் பொறுமையாகக் கையாண்டால் மட்டுமே அது வெகு சிறப்பான சிற்பமாக வரும் இல்லையென்றால் ஒன்னும் சொல்வதற்கில்லை.

“சொல்லுக பெரியம்மா” வள்ளியை மீண்டும் கொடைய குமாரி பொங்கிவிட்டார்

“இப்போ என்னங்குற நங்கை? உங்கள கொடுமை படுத்தின மாதிரி நிக்க வச்சு கேக்க”

“கொடுமை எல்லாம் இல்ல பெரியம்மா எங்க சுயத்தைத் தொலைச்சுப்புட்டு ஒரு வேலைக்காரிகளாக இங்கன வாழ முடியல அதேன் விட்டுப்புடுக படிச்ச படிப்பை வச்சு பொழச்சுக்கிடுறோம்” அவளும் ஆவேசமாக ஒரே போடாகப் போட்டாள் யாருக்கும் பேச தோன்றவில்லை பார்வை மட்டுமே.

“என்ன புள்ள பேசுற” செல்வம் கோவமாக வந்தான் இளவட்டம் அல்லவா பெரியவர்களை பேசியதும் கோபம் வந்து விட்டது இந்த இடத்தில் நடனதேவர் வளர்ப்புக்கு ஓர் சபாஷ் போட வேண்டும்

“வாக மாமே மகன் மரிக்கொழுந்து என்கிட்ட பேசி புட்டீக இத்தினி வருஷம் நான் யாருனு தெரியலையா?”

“நீ எங்கன வந்து பேசுன நீ பேசுனாத்தேன் நான் பேச முடியும்”

“ஓ!... அப்போ அன்னம்,சரசு எல்லாம் அவுகளா வந்து பேசுனாத்தேன் பேசுவீகளா” என்ற கேள்விக்குச் செல்வத்திடம் பதில்லை

முத்தரசன், “நங்கை நீ தப்பா புரிஞ்சு கிட்டு பேசுத எங்களுக்கு எல்லாரும் ஒன்னுதேன் இதுவரை நம்பக் குடும்பத்துல யாருமே இந்த மாதிரி எண்ணத்தோட இல்ல”

“எண்ணமில்லதேன் ஏன்னா நம்பக் குடும்பம்னு சொல்லுத பாரு அந்த இடத்துல நாங்க மூணு பெரும் இல்லண்ணே உனக்குப் புரியுற மாதிரி சொல்லுவா”

“பெரிய ஆத்தா வூட்டு கண்ணாலம்னு மதுரைக்குப் போனோம் நியாபகம் இருக்கா”

“ஆமா” யோசனையாகப் புருவம் சுழித்துப் பதில் அளித்தான் முத்தரசன்

“அன்னைக்கு எங்களை வுட்டுப்புட்டு இளவட்டம் அம்புட்டு பெரும் எங்கன போனீக”

“அது!.. அது!... மீனாட்சி அம்மன் கோவிலுக்கு”

“ஏண்ணே திக்குற.....எங்களை ஏன் கூட்டிட்டு போகல” நக்கல் குரலில்

பதில்லை அவனிடம் அன்று திருமணத்திற்குப் போய்விட்டு அனைவரும் கோவிலுக்குச் சென்றனர் இளவட்டம் அனைத்தும் ஊரை சுற்றிவிட்டு ஒரே கும்மாளம் தான் இரவு தான் வீடு திரும்பினர்.

“ஏன்னு நான் சொல்லிப்புடுவேன் அப்புறம் நீதேன் பதில் பேச முடியாம நிப்ப இது போல நெறைய இருக்கு நீனு இல்ல அன்னம், சரசு, மதியழகி, அழகர், ரெங்கன், அம்புட்டு பேரும்தேன் ஒதுங்கி நின்னீக”

“நீங்க அம்புட்டு பேரும் எங்க கிட்ட பேசுற வார்த்தை மூணே மூணுதேன் சோறு, காப்பி, துணி இதைத் தவிற இத்தினி வருசத்துல வேற பேசி நான் கேட்டதில்ல சரிதானே”

அன்னம், சரசு ,மதியழகி, அழகர், முத்தரசன் ,செல்வம் என அனைவரும் தலையை குனிந்து வாயடைத்து நின்றனர் சித்தி பெண் அத்தை மகள் என்ற பாசம் நிரம்ப உண்டு தான் ஆனால் அதைக் காட்ட தவிறிய இடத்தைச் சுட்டி காட்டும் பொதுப் பேச முடியவில்லை.

பெரியவர்கள் பழக்கத்தை கொண்டே அவர்களது செயல் பாவம் அவர்கள் என்ன செய்வார்கள் அதுவும் பெரியவர்களே தடுமாறி நிற்க சிறுசுகள் என்ன செய்யும் அவனது மௌனத்தைக் கணக்கில் கொள்ளாமல் கொண்டு மீண்டும் தொடர்ந்தால்.

அல்லி மலர் மென்மை கொண்ட கை விரல்களைக் குவித்துக் காட்டி கண் சுருக்கி கண்ணில் நீருடன் உதட்டில் சிறு சிரிப்புடன் பேசினாள் பெண் எத்தனை வலி அவளிடம் “இம்புட்டு காண்டு வயசுல இருந்து மனசுல வச்சு வச்சு முடியலண்ணே!....

அம்மா ராவுல தூங்கி எம்புட்டு நாள் ஆகுது தெரியுமா வேலை பார்த்து பார்த்து கால் நோகும் எங்களுக்கு கோபமா வரும் சரி அம்மாயி கிட்ட சொல்லுறேன்னு சொன்னா எங்களையும் சொல்ல விடாது”

“அது கஷ்ட படுதேன்னு நாங்க உதவுறது... அது கால்லை பார்த்து இருக்கியா?” என்றவள் அமர்ந்திருக்கும் தனது தாயிடம் நெருங்கி காலை எடுத்து நீட்டி சேலையை விளக்கி காட்டினாள் சலம் கோர்த்து ரெத்தம் வழிய அகோரமாக இருந்தது கால் விரல்கள்.

கையையும் காட்டினாள் காய்ப்புக் காய்ச்சி போயிருந்தது “பொம்பளைங்களுக்கு வூட்டு வேலை சுமை இல்லண்ணே ஆனா அதுக்குன்னு ஒரு அளவு இருக்குல்ல வேலை மட்டுமே செஞ்சுகிட்டு இருந்தா என்னத்துக்கு ஆகும்”

“அதுக்கு ஒரு ஓய்வே இல்லண்ணே பொது இடத்துக்குப் போயி பார்த்து இருக்கியா? சரி யாரும் வேணாம் எங்க கூட வாம்மானா அதுக்கும் ஊர் பேச்சுக்கு பயந்து சாகுது புருஷன் கூட வாழாதவ, வாழ வெட்டி, ரெண்டடைந்தாராம் அது இதுனு சாக்கு வைக்குது” என்றவள் யோசனையாக தனது தாத்தனிடம் திரும்பி

“ஐயா! தாத்தா உங்க காலத்துல ஒத்துமையா இருந்தீக உங்களுக்கு இரண்டு கண்ணாலம் பெருசா தெரியல பார்க்க போனா நீங்க மூணு பேருமே ஒத்த உசுருதேன்,

ஆனா அந்தப் பக்குவம் எங்க அம்மாக்கு இல்ல தாத்தா எனக்குச் சுத்தமா இல்ல” என்றவள் பார்வை ஓர் நொடிக்கு குறைவாகச் சடையைத் தீண்டி செல்ல சிறு வளைவு உதட்டில் நடனதேவருக்கு.

“என் மாமா, என் பெரியப்பா, என் தாத்தான்னு, இயல்பா பேசி பழகாத உங்ககிட்ட நாங்க என்னத்த பேச.வாழ வெட்டிய வந்து பெண்ணோடு பொண்ணுதானே னு யோசனை போலன்னு நாங்களும் ஒதுங்கிடோம்”

ஐயோ! பாப்பா!... என்று ராசியப்பன் வர தனது மாமன் கை படா தூரம் நகர்ந்தவள்.

“உனக்கு நான் யாரு மாமா உனக்கு அக்கா புள்ளங்கனா அது அன்னம் சரசுத்தேன்”

“என்ன பாப்பா பேச்சு” சுந்தரியும் பேசினார்

“நீயும் பேசாத ஐத்த உனக்கும் அவுளுக மூணு பேருந்தேன் பொம்பள புள்ளைங்க பூசைக்கு எம்புட்டு நேரம் முணுத்துக்கும் சீலை கட்டிவிட்ட அதுவும் உன் சீலை எங்க யோசனை ஏன் வரல?..

இதற்கு என்ன பதில் சொல்வது முழித்து நின்றார். அறிவழகி பிள்ளைகள் அவளுக்கு உதவி என்ற நிலை ஒருபுறம் மறுபுறம் அவர்களது ஒட்டா தன்மை சரி அவர்கள் இயல்பு போலும் என்று எண்ணி கொண்டவர்களுக்கு அவர்களது இத்தகைய மனக் காயம் அதிர்ச்சி தான்.

“இப்படி இந்தக் குடும்பத்துல உள்ள அம்புட்டு போரையும் கேள்வி கேட்க முடியும் ஐயா தாத்தா ஆனா வேணாம் எதுக்கு? இங்கன மூச்சு முட்டுது பக்கத்து தெருவுல இருக்கு அப்பத்தா வூடு ஆனா உறவில்லை அம்மாயி வூடு சதமில்லை அப்புறம் எதுக்கு இங்கன பாரமா சொல்லுக”

“நெஞ்சு வெடிக்குது ஐயா தாத்தா அம்மா பாவம் ஒவ்வொரு நாளும் அப்பாவை நெனைச்சு நெனைச்சு அழுகும் பாதி நேரம் உறக்கந்தேன் அதுக்குள்ள விடிஞ்சு புடும் வேலை செய்யப் போயிடுவாக என்ன வாழ்க்கை இது?”

“பேச கேட்க இன்னும் எத்தனையோ இருக்கு ஆனா வேணாம் ஐயா தாத்தா எங்களை விட்டுப்புடுக இந்தத் தங்க கூண்டு வேண்டாம் கிளியாட்டம் இருக்குறதுக்கு வெளில காக்கையா சுத்தலாம்” என்றவள் தனது தாயையும் தமக்கையையும் பார்த்து “ம்மா! போலாம் வா அக்கா! என்க” தங்களது அறைக்குள் சென்று துணியை அள்ளி திணித்துக் கொண்டு வந்தனர்

“பேசுனது சங்கடமத்தேன் எல்லாரும் மனுச்சுகிடுக...... வாரேன் ஐயா தாத்தா” என்றவளது கையை இறுக்கி பிடித்துக் கொண்டான் சடை

“கைய வுடு மாமா”

“எங்கனடி போற”

“சடை கைய வுடு” நடனதேவர் கோபமாகச் சொல்ல கையை எடுத்து விட்டான்

“நீ போ” சாமி என்றவர் அமைதியாக இருந்து கொண்டார் ஐயா!... என்றவனைப் பேசாதே என்று செய்கை செய்தவர் அதே போல் பேத்தியை இரு கரம் கூப்பி அனுப்பி வைத்தார் போதும்டா சாமி என்ற நிலையில் மூன்று பெண்களுமே தலையைக் குனிந்து கொண்டு வெளி ஏறினர்.

செல்லம்மாள் போகும் மகளையும் பேத்தியையும் தடுக்க முடியாமல் இயலாமையில் அழுது கரைய அனைவரும் அதிர்ந்து நின்றனர் இதோ தற்போது வரை நின்ற இடத்திலே அமர்ந்த வாக்கிலே உறைந்திருந்தனர்.

தேனீர் எடுத்து வந்த ஆவுடையம்மாள் நடனதேவரிடம் கொடுக்க அமைதியாக வாங்கிக் கொண்டவர் தனது காலடியில் படுத்துரங்கம் செல்லம்மாளை பார்த்தார் அவரது பார்வை உணர்ந்து

“நல்ல தூங்கட்டும்...ங்க தூக்கிட்டு போயி படுக்க வைக”

ஹ்ம்ம் என்றவர் தேனீரை ஒரே மூச்சில் குடித்துவிட்டு எழுந்து நின்று தனது வேட்டியை மடித்துக் கட்டி கொண்டு தனது மனைவியைத் தூக்கி கொண்டு சென்றார் தோய்வு மனதில் மட்டுமே உடம்பில் இல்ல என்பது போல் கம்பீரமாக நடந்து சென்றார் மனிதர்.

அனைவரும் அவரவர் வேலையைப் பார்க்க செல்ல இளவட்டம் அனைத்தும் ஓர் இடத்தில் கையில் தேனீருடன் கூடியது அன்னம் தான் தொடங்கினாள்

“என்னப்பா நடக்குது? எங்கன போயிருக்கும் சித்தியும் அவளுங்களும்?

“யாருக்கு தெரியும் ஆனா ரொம்பப் பேசிட்டா” சரசு சலித்துக் கொள்ள

“சரியாதேன் கேட்டுச்சு அதுங்களை என்னைக்கு நம்பக் கூட்டத்து குள்ள சேர்த்து இருக்கோம்” முத்தரசன் சொல்ல

“அண்ணே! அவ சித்திக்கு ஒத்தாசை பண்ணிகிட்டே இருப்பா”

“அவதேன் அதுக்குக் காரணம் சொன்னாலே நீ கூப்புட்டு பேசி இருக்க வேண்டியது தானே ..”

“தோணல அவ கேக்குற எதுவும் செய்யத் தோணல தப்பு நம்ப மேலதானே” செல்வம் சொல்ல அனைவரும் அமைதியாக இருந்தனர் அந்நேரம் அங்கு சடையப்பன் வர இளைய சித்தப்பனை அமுக்கி கொண்டனர் செல்வமும் அழகரும்

“சித்தப்பு!.. சித்தப்பு!... நில்லு நில்லு” என்ற அழகர் கையைப் பிடித்து இழுத்து தங்களது கூட்டத்துக்குள் நடுவில் விட்டான்.

“என்னடே”

“உண்மையா சொல்லு உன் புள்ளகுட்டிங்க எங்கன படிக்குது” முகத்தை உர் என வைத்துக் கொண்டு அழகு கேட்க அவனது கேள்வி பிடிபடச் சில நொடிகள் ஆனது புரிந்த பின்

அடேய்!.... சிறு புன்னகை சடையிடம் என்ன சாத்தப்பா”

“பின் என்ன ஹீரோ கணக்கா தூக்கிட்டு போயி கட்டி இருக்க அதுவும் மூணு வருசத்துக்கு முன்ன” அன்னம் நீட்டி முழக்க

“அடியேண்டி என் வவுத்தெறிச்சலை கொட்டிக்கீறீக அந்தச் சண்டாளி அன்னைக்கு மல்லுக்கட்டி பேசி வெறி ஏத்திதேன் நான் தொழில் செய்ய அசலூர் போனேன் இதுல எங்கன புள்ள வரும்” என்றதும் கிளுக்கி சிரித்தனர் இளவட்டம்.

சட்டென ஓர் அமைதி “மாமா வாரியா போயி சித்திய கூட்டியாந்திருளாம்” அன்னம் கண்ணில் நீர் கோர்க்க கேட்க அக்காள் மகளைத் தோளோடு அனைத்துக் கொண்ட சடையப்பன்.

“வுடு அன்னம் ஆரும் வேணுமுண்டு செய்யல அம்புட்டு பேருக்கும் உறுத்து இருக்கு விட்டு புடிப்போம் ரொம்ப பயந்துக்கிட வேணாம் என்ன... அப்புறம் அவ மதுரைக்குப் போகல மூணு தெரு தள்ளித்தேன் இருக்கா பார்த்துக்கிடலாம் வுடு,

பாவம் அம்மாயி தாத்தா எல்லாம் போயி பேசுக நான் ஒரு எட்டு வெளில போய்ட்டு வாரேன்” என்றவன் செல்ல இளவட்டம் அனைத்தும் தங்களுக்குள் பேசி கொண்டே மாமன் சொன்னதை செய்ய சென்றனர்.

இயல்பு கொண்ட மனிதர்கள் மனிதில் எந்தக் கள்ளமும் இல்ல சூதும் இல்ல சொல்ல போனால் பிள்ளைகள் ஒரு வயது வளர்ந்து வரும் வரை எது ஆவுடையம்மாள் பிள்ளை எது செல்லம்மாள் பிள்ளைகள் என்றே அதுங்களுக்கே தெரியாது இருவருமே ஆத்தா என்ற நிலை தான்.

ஆனால் இன்று என்னத்தான் ஒரே குடும்பம் ஒரே ரெத்தம் என்றாலும் வயறு என்பது தனித் தான் என்ற அனுபவம் கொண்டது இந்தப் பிரிவு.
 
MAR

Active Member
Super .Nicely said during thatha paati second marriage was very common.They completely forgot about next generation.Not everybody get a warm welcome.Lets see what happens.How easily a woman's life was put into throttle.As Aruvi said why she wants to get married as second wife.Somadevar can take care of his sick wife.But why did u allowed ur second wife todo all things.Some times elderly person in the house also men in the house missed to see the whole picture of house politics.Thats the reason many problems arises.
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top