அத்தியாயம் – 3

Advertisement

dhanuja senthilkumar

Well-Known Member
வம்பு நாட்டான்

அத்தியாயம் – 3

மாலை மங்கி இரவு தொடங்கும் வேலை வரை நடனதேவர் வந்த பாடில்லை நேரம் செல்ல செல்ல போன ஆண்கள் யாரும் வீடு திரும்பாததால் பெண்களுக்குப் பயம் வந்தது அதுவும் செல்லம்மாள் பெருங்குரல் எடுத்து அழுகவே ஆரம்பித்து விட்டார்.

அமைதியான சூழலில் தீடீரென அவர் குரல் ஓங்கி ஒலிக்க அறைக்குள் முடங்கி இருந்த அத்தனை பெண்களும் அடித்துப் பிடித்து ஓடி வந்தனர் இதில் இளவட்ட கூட்டமும் அடக்கம்.

தாயின் குரலில் அதிர்ந்து ஓடி வந்தான் சடையப்பன் வந்தவன் தனது தாயை நெருங்கி ஆத்தா!... என்று அனைத்துக் கொள்ள அவனை அனைத்துக் கொண்டு கதற ஆரம்பித்து விட்டார் செல்லம்மாள்.

“எனக்குப் பயந்து வருது சாமி அவுக இது போல ஒரு நாளும் வாய் அடைச்சு இருந்தது கிடையாது என்னால தாங்க முடியல அப்பு நாந்தேன் தப்பு என்னாலதேன் எல்லாம்,

நான் மலடியா இருந்து இருந்தா இவ பொறந்து இருக்க மாட்ட இவ பிறக்காட்டி அவ புள்ளைங்க இருந்து இருக்காது வூடும் இரண்டு பட்டு போகாது” பேத்தியின் ஒதுக்கமும் அறிவழகியின் வாழ்க்கையும் அவரை அப்படி பேச வைத்து விட்டது அதுவும் பல வருடங்கள் சென்று.

அவரது பேச்சில் கண்ணில் நீர் பெறுக தாயை பார்த்தனர் இரு பெண்களும் அதில் பார்த்தியா பேச்சை என்ற செய்தி தொக்கி நிற்க பெண்களது பார்வையை தவிர்த்து ஆவேசமாகத் தனது தாயை நெருங்கிய அறிவழகி

“யமோய் என்ன சொன்ன.... உன் பேச்சுல குளிர்ந்து போய் நிக்கேன்.......... நேத்து வரைக்கும் கூட என் பிள்ளைகளைத் தான் அமட்டிக்கிட்டுக் கிடைந்தேன் ஆனா இனி முடியாது போல”

“என்ன சொன்ன திரும்பச் சொல்லு தப்பு என் பொறப்பு இல்ல நீ தேன் தப்பு அக்கா வுட்டுக்கார கண்ணாலம் பண்ண நீதேன் தப்பு” என்றதும் அவளை இழுத்து வைத்து ஓங்கி அறைந்து விட்டார் ஆவுடையம்மாள் சுற்றி இருந்த யாருக்கும் எதுவுமே புரியவில்லை.

நடப்பது அனைத்தும் கற்பனைக்கு அப்பால் என்பது மட்டுமே விளங்கியது உரம் வாய்ந்த கையில் அடி வாங்கிய அறிவு சுருண்டு விழ சுந்தரி வீட்டின் மருமகளாக நாத்தியை தாங்கி நின்றார் “என்ன ஐத்த இது பேரன் பேத்தி எடுக்கப் போறாக அவுங்கள போயி கை நீட்டி அடிச்சு கிட்டு இளவரசி தண்ணி கொண்டு வா புள்ள”

“இதோ வாரேன்” என்றவர் ஓடி போயி தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க அதைப் புகட்டினாள் சுந்தரி இதையெல்லாம் மரத்த தன்மையுடன் பார்த்துக் கொண்டு இருந்தனர் மலர் மற்றும் நங்கை அப்பெண்களுக்கு எதுவும் மனதில் பதியவில்லை போலும்.

அறிவழகி அழுது கொண்டே இருக்க அவரது அருகில் சென்ற சடையப்பன் அவளது கைகளைப் பற்றி தூக்கி “உன் மனசுக்குள் என்னத்தேன் இருக்கு நீ எதையோ மனசுல வச்சுக்கிட்டுதேன் இருக்க இரு நான் அய்யனை கூட்டியாரேன் பேசிக்கிடலாம்” என்றவன் நடனதேவரை நோக்கி தனது வடியை பறக்க விட்டான்.

அனைவரும் கூடத்தில் கூடி நிற்க சுந்தரி கையிலுருந்து தன்னை விடுவித்துக் கொண்ட அறிவழகி தனது இரு மகள்களுடன் சென்று அமர்ந்து கொண்டாள்.

முகத்தில் அத்தனை பிடிவாதம் நெடு நாள் புதைத்து வைத்த ஆற்றாமை, கோபம், இயலாமை, ஏமாற்றம், இழப்பு என அனைத்தும் சேர்ந்து முட்டி மோதி வெடித்துச் சிதற காத்துக் கொண்டு இருந்தது.

*

அங்கே தங்களுக்குச் சொந்தமான தோப்பில் அரசமரத்தடி சிறு கொட்டகையில் ஆண்கள் அனைவரும் கூடி இருந்தனர் அதில் சோமதேவரூம்... அடக்கம்.

நடனதேவர் என்ன எண்ணினாரோ சொக்கனிடம் சோமனை அழைத்து வரும் படி சொல்ல சகலை இருவரும் சின்னச் சகலையைப் பேசி அழைத்து வந்தனர்.

நடனதேவர் முன் வீட்டின் ஆண்கள் அனைவரும் நின்றனர் ராசியப்பன்,சிங்கமுத்து,சொக்கன் மூக்கையன்,சோமதேவன் என தர்ம சங்கடமான நிலை பல ஆண்டுகள் கழித்து மாமனும் மச்சானும் சந்தித்து கொண்டனர் ஓர் வணக்கத்துடன்.

யார் என்ன பேசுவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு நிற்கும் தருணம்.இரண்டு கிலோமீட்டர் இடைவெளியில் புல்லட் சத்தம் கேட்க அனைவரது பார்வையும் அங்கே சென்றது சடையப்பன் வேட்டியை மடித்துக் கொண்டே வேக நடையுடன் வந்து கொண்டு இருந்தான்.

வரும் வழியில் சுப்பு என்று குரல் கொடுக்கத் தோட்டத்தில் வேலை செய்து அங்கே தங்கி கொள்ளும் சுப்பு என்றவன் ஓடி வந்தான் “சொல்லுங்க அண்ணே”

“கருப்பன் கிட்ட போயி மாட்டுத்தாவணில உரம் கடை வச்சு இருக்க ராமலிங்கத்தைக் கையோட கூட்டியார சொல்லு வெரசா ஓடுலே டிவிஎஸ் எடுத்துட்டு போ”

“சரிண்ணே” என்றவன் வண்டியை எடுத்துக் கொண்டு புயல் வேகத்தில் சென்றான் அதற்குள் தனது தந்தையை நெருங்கிய சடையப்பன்.

“ஐயா! வாக வூட்டுக்குப் போகலாம் அங்கன நிலைமை சரியில்ல” நடந்ததை மறைத்து பொதுவாகச் சொன்ன மகனை தலையை உயர்த்தி பார்த்தாரே ஒழிய எதுவும் பேசவில்லை.

அவரது நிலை புரிய அவரிடம் சென்று தனது உயரத்தை குறைத்து மண்டியிட்டவன் “நீக யோசிக்கிற கேள்வி அம்புட்டுக்கும் விடை சொல்லுதேன் அதுக்கு முன்னாடி உங்க பொண்ணு பஞ்சாயத்தை முடிச்சுப் புடலாம் ஆத்தாவ அறிவுக்கா வஞ்சு புடுச்சு.......”

“நீ பண்ண கொதிப்புல அவ ஆத்தகாரிகிட்ட காட்டி இருப்பா அதுக்கு வேற ஏது போக்கிடம்” என்றவர் பார்வை சோமதேவனை தொலைக்க இன்று வரை தன் மனைவி ஏன் பிரிந்தால் என்ற காரணம் தெரியாது இருக்கும் மனிதன் மடியில் கணம் இல்லை போலும். அவரும் தனது மாமனார் பார்வையை சலிக்காமல் எதிர் கொண்டார்.

“ஐயா! நான் அன்னைக்கு அவளைக் கண்ணாலம் பண்ணலனா நடனதேவர் மானமும் சோமதேவன் மானமும் காத்துல வாக்குல கந்தல் ஆகி இருக்கும்...” மகனது பேச்சில் சோமதேவனிடம் இருந்து தனது பார்வையை விலக்கி கொண்டவர்

“என்னால சொல்லுத”

“செத்த நாழி பொறுங்க விளாங்குடி காரி எம்புட்டு விவரமானவனு தெரியும் அதுக்கு அப்புறம் என் மேல பிராது சொல்லுக கை கட்டி நிக்கேன்” மண்டியிட்டு அமர்ந்திருந்தவன் எழுந்து அவருடன் அமர்ந்து கொண்டான்.

அவனது பேச்சு மேலும் குழப்பத்தை கொடுக்க ராசியப்பன் “என்னடா சொல்லுத”

“இருண்ணே செத்த பொறு” என்றதும் மேலும் சற்று நேரம் மௌனம் கொள்ளக் கருப்பன் ராமலிங்கத்தை அழைத்து கொண்டு இவர்கள் நோக்கி வந்தான்.

அவர்களது வருகையை பார்த்த சிங்கமுத்து “ராமலிங்கம் எதுகுவே இங்கன வாறான்” தம்பியிடம் கேட்க

“பொறுண்ணே...”

“வாக ராமலிங்கம் அண்ணே” என்ற சடை எழுந்து நின்று இரு கரம் கூப்ப அவரும் அவசரமாக அனைவருக்கும் ஒரு வணக்கத்தை வைத்தவர்

“என்ன சடை ராவு நேரத்துல..... கூட்டியார சொன்னியாமே? என்ன செய்தி?” என்று பதறியவரை

“ஒன்னுமில்ல ண்ணே பதட்ட படாத உங்கிட்ட மூணு வருஷம் முன்னாடி எங்க வூட்டு புள்ள எம்புட்டு சவரன் நகை கொடுத்து விக்கச் சொல்லுச்சு” என்றதும் அங்கிருந்த ஆண்களுக்குத் தூக்கி வாரி போட்டது.

எதுக்கு? ஏன்? யார் வூட்டு நகை? எந்த புள்ள டா ? என்று நடனதேவர் பதற

“ஐயா! இப்பவே பதறி புடாதீக இன்னும் நெஞ்சை வெடிக்கிற அளவு செய்தி இருக்கு” என்றதும் கலங்கி போயி நின்றார் மனிதர்

ராசியப்பன் “சடை என்னனு சட்டுனு சொல்லு பதற வைக்காத”

“என்னத்தண்ணே சொல்ல நம்ப எல்லாம் மீசையை எடுத்து புட்டு சீலை கட்டிட்டு சுத்த சொல்லுறா உன் அக்கா மவ”

“மச்சான்.. என்ன மச்சான்... “ சடையின் பேச்சில் பதறினார் சொக்கன்

“மாமா சின்னச் சிறுக்கியும் பெரிய சிறுக்கியும் அவ ஆத்தா காரிய கூட்டிட்டுத் தனிக் குடித்தனம் போக மூணு வருசத்துக்கு முன்னாடி ராமலிங்கம் அண்ணே கிட்ட நகை கொடுத்து வைக்கச் சொல்லி இருக்கு..”

“எதுக்கு? எதுக்குத் தனியா போகணும்?” பதறினார் நடனதேவர் உச்ச கட்ட பதற்றம்

“தெரியல அந்தக் கோவத்துலதேன் தூக்கிட்டு போனேன் கேட்க கேட்க கல்லாட்டம் நிக்குறா மாமா கிட்ட மட்டும் செய்தி சொல்லி அன்னைக்கே தாலி கட்டி அராட்டி வூட்டுல வச்சுப் புட்டேன் எப்படியும் அக்கா மக்கள் ஒருத்தியதேன் கண்ணாலம் முடிக்கனும் சொல்லி புட் டீக எனக்கு இவளை புடிக்கும் அதேன் யோசிக்காம கட்டிகிட்டேன்”

“பெரியவுக கிட்ட சொல்லி இருக்கலாம் தானே மச்சான் அப்பவே பேசி முடிச்சு விட்டுருக்கலாம்” மூக்கையன் ஆதங்கமாக சொன்னார்

“மாமா இது சொல்லுற செய்தி இல்ல மாமா விவரம் முழுசா புரியாம நான் என்னனு சொல்ல இன்ன தேதி வரை அவ வாய் திறந்து நான் கேட்ட கேள்விக்கு விடை சொல்லல சத்தாப்பா ஒரு சிரிப்பு சிரிச்சுப்புட்டுப் போறா தெரியுமா” ஆதங்கத்தைக் கொட்ட பேத்தியின் சிரிப்புக்கு பின் எதோ என்று தற்போது தான் உரைத்தது பெரியவருக்கு.

“ப்ச்... அப்பப்போ சின்ன குட்டி என்ன பார்த்து அப்படித்தேன் சிரிக்கும் ஒன்னுமே விளங்கள எனக்கு.... என்ன சோணக்கமா இருக்கும்” புலம்ப ஆரம்பித்து விட்டார் நடனதேவர்.

“ஐயா பேசி இன்னைக்கே முடிச்சுப் புடலாம் ஏன்னா அடுத்த வாரம் குடும்பத்தோட உம்ம பேத்தி மதுரைக்குப் போயிடவா” என்று அடுத்த குண்டை வீச

“என்ன டா சொல்லுற” அதுவரை அமைதியாக இருந்த கருப்பன்

“ஆமா தாத்தா மலரு வீடு பார்த்து வச்சு இருக்கு வேலையும் வாங்கிடுச்சு இன்னும் நாள் கடத்துனா சரிவராது”

தளர்ந்து அமர்ந்து விட்டார் மனிதர் கம்பீரமாக இருக்கும் தனது மாமன் தளர்ந்து அமர்ந்ததைப் பார்க்க முடியாமல் அவரை நெருங்கிய சோமதேவன்

“மாமா பேசிப்புடலாம் இது வரைக்கும் என் சட்டையைப் புடிச்சு என் மக கூட வாழலைனு ஒரு வார்த்தை கேட்கல நானும் போனவளை எதுக்குப் போனானு விளக்கம் கேட்கல,

போனவ அவளே வரட்டும்னு கோபத்துல முறுக்கிட்டு பல வருசத்தைத் தொலைச்சுப் புட்டேன் இனி முடியாது மாமா எனக்கும் வயசு போகப் போக எண்ணம் தறி கெட்டு ஓடுது” என்றவர் கலங்கி நிற்க

ஆண்கள் அனைவரும் மௌனமாக நின்றனர் விடயம் இத்தனை பெருசு என்பதை யாரும் எண்ணவில்லை போலும் சிறு பொறியான எண்ண அது வீட்டை எரிக்க முனைந்தது.

ராமலிங்கம், ஐயா” நீக பெரியவுக தெரியாதது ஒண்ணுமில்லங்க தப்பான புரிதல்தேன் பேசி சரி பண்ணி புடலாம் பாப்பா என்கிட்ட வந்து போன உடனே நாந்தேன் சடைய கூப்பிட்டுச் செய்தி சொன்னேன்”

“ஐயா! யோசிக்காதீக வாக பேசிக்கிடலாம்” என்ற சடையப்பன் ராசியப்பனுக்குக் கண்ணைக் காட்ட அவனும் கண் மூடி திறந்தான்.

ராமலிங்கத்திடம் நன்றி சொல்லி சுப்புடன் அனுப்பி வைத்தான் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் விரைந்தனர் மூன்று இரு சக்கர வாகனத்தில் மூன்று பேராகச் சென்று வீட்டில் சேர்த்தனர்.கருப்பன் வாசலோடு விடைபெற அவனை நிறுத்திய சடையப்பன்.

“பேச்சோடு பேச்சா உன் சங்கதிய முடுச்சு புடுடா உள்ளர வா”

“வேணாமுண்ணே இந்த கொதிப்பு அடங்கட்டும் முறையா மலர பொண்ணு கேட்டு வாரேன்”

“அதுவும் சரித்தேன் பார்த்து போ” என்று அவனை வழி அனுப்பியவன் வீட்டுக்குள் நுழைந்தான் மணி இரவு எட்டு.

வீட்டுக்குள் அடியெடுத்து வைத்த சோமதேவனைப் பார்த்துப் பெண்களுக்கு அதிர்ச்சி அவரை எதிர் பார்க்கவில்லை போலும் பல வருடம் சென்று கணவனைப் பார்த்த அறிவழகியும் பெண்களும் தலையை குனிந்து கொண்டு நின்றனர்.

தனது ஆஸ்தான மர நாற்காலியில் அமர்ந்த நடனதேவர் அறிவழகியை பார்த்து அறிவு சாமி!..... தந்தையின் அழைப்பில் மெல்ல தலை உயர்த்தி அவரை பார்க்க “பெரியவுக கூடப் பேசனுமே முன்னால வாக” என்றதும் மூன்று பெண்களும் தயங்கி நின்றனர்.

அறிவழகி ஒரு வேகத்தில் பேசி வைத்தாலும் தந்தையை எண்ணி பயம் தான் மலருக்கும் நங்கைக்கும் கூட பயம் உண்டு என்றாலும் சந்தர்ப்பத்தை விட மனதில்லை போலும் மூன்று பெண்களுக்கும்.

“அறிவு உனக்கு என்ன சோணக்கம் அய்யன் கிட்ட சொல்லு பேசிக்கிடலாம் மனசுல வச்சுப்புட்டு மருகி தப்பு தப்பா முடிவெடுக்காத பொட்ட புள்ள வச்சு இருக்க நினைவு வச்சுக்கோ” ராசியப்பன் சற்றுக் கடுமையான குரலில் தான் பேசினார்

முத்துவும் “அறிவு பேசு இன்னும் என்ன தயங்கி நிக்க”

“என்னத்தண்ணே பேச நான் பிறந்ததே பாவம் அதுவும் இரண்டாந்தாரத்துக்குப் பொறந்தது இன்னும் பாவம்” எடுத்த எடுப்பிலே பேச்சு தாறுமாறாக வந்தது.

அதிர்ந்தனர் என்ன பேச்சு இது? யார் இவளை சொன்னது? இது போல் யாரும் எண்ணியது இல்லை இருவருமே தாய் தான் இதில் ஒன்று இரண்டு என்ற தாரம் என்ன?

“ஏய்! என்ன பேச்சு இது” ராசியப்பன் எகிறினான்

“அண்ணே அதுதேன் உண்மை எனக்குப் பிறந்து வீடும் சரியில்லை புகுந்த வீடும் சரியில்லை என்றதும் செல்லம்மாள் அவளை அடிக்கப் பாய இரு பெண்களும் அறிவை மறைத்துக் கொண்டு நின்றனர்.

“என்னங்கடி மூனு சிறுக்கியும் ஆட்டம் கட்டிட்டு ஆடுறீக” ஆவேசமாக நின்றவரை சடையப்பன் இழுத்து தன்னுடன் நிறுத்தி கொண்டான் “ஆத்தா வுடு அக்கா பேசட்டும்”

“நீ வுடு சடை என்ன அடிக்கட்டும்” என்ற அறிவு தனது பெண்களை விலக்கி கொண்டு முன்னாள் நிற்க பார்த்து கொண்டு இருந்தவர்களுக்கு என்னடா இது என்றானது

சுந்தரி, “அறிவு என்ன நீ...........” பேச வந்தவரை முழுதாக முடிக்க விடாமல்

“மதனி மனசுல அம்புட்டு இருக்கு மதனி இருந்தும் நேத்து வரை நீக எல்லாந்தேன் உறவுன்னு நெனச்சு இருந்தேன் ஆனா என் புள்ளைங்க சொல்லுறது போல நாங்க தனித்தேன் போல”

“என்ன புள்ள பேச்சு இது” முத்து எகிறிக் கொண்டு வர

“வுடு முத்து உன் தங்கச்சி கொட்டிப்புடட்டும்” என்ற ஆவுடையம்மாள் “கொட்டி புடு அறிவு ஆனா கொட்டுனது அள்ள முடியாது பார்த்து கொட்டு”

தாயின் பேச்சை கண்டு கொள்ளாமல் “ஐயா! என்ன எதுக்கு இரண்டாந்தாரமா மாமனுக்குக் கட்டி வச்சீக செல்லம்மாள் வழியே அவ பொண்ணுக்கும் வழி அப்படித்தானே”

அறிவின் கேள்வி கோபத்தைக் கொடுக்க “அக்கா !...........” சடை குரலை உயர்த்த அவனது கைகளைப் பற்றிக் கொண்டது நடனதேவரின் கை

“பொறு சாமி பேசட்டும் நீதேன் சொன்னியே நெஞ்சு வெடிக்கச் செய்தி இருக்குனு பெறவு ஏன் கோப படுற இரு கேட்போம் உங்க அக்காரி பேசட்டும் பேசாத புள்ள பேசுது காது குளிர கேட்டுக்கிடுறேன்” என்றவர் அவரை சுற்றி இருக்கும் ஆட்களை பார்த்து அவ பேசி முடிக்கும் வரை ஆரும் பேச கூடாது கட்டளையிட்டு

“ நீ சொல்லு சாமி”

“என்ன எதுக்கு மாமனுக்குக் கொடுத்தீக அதேன் குமாரி அக்கா இருந்துச்சே அதைக் கண்ணாலம் கட்டிக்க வேண்டியது தானே” அவளது பேச்சில் வெங்குண்ட குமாரி

“இந்தாரு அறிவு விவரம் தெரியாம பேசாத மாமா உன்னத்தேன் ஆசையா கேட்டு கட்டிகிடுச்சு”

“அது சரி ஆசையா கட்டி ஆண்டு வாழ்ந்தாரமா?.....படிக்க போன புள்ளய கட்டி வச்சீக மறுப்பில்லாம கட்டிகிட்டேன் சரி இனி இவர் தான் எல்லாம்னு ஆசையா மனுஷன் முகம் பார்த்தா சீக்காளி பொஞ்சாதிய பார்க்கவே அந்த மனுசனுக்கு நேரம் சரியா போச்சு

“அவுக ஐயா வழி சொந்தத்துக்கு நியாயம் பண்ண போயி சீக்காளி பொண்ண கண்ணாலம் பண்ணாரு சரி அது சாக கடக்கும் போது என்னத்துக்கு என்ன கண்ணாலம் பண்ணனும்?........ அவருக்கு வேலை செய்ய ஒரு ஆளு வேணும் அதுக்குச் செல்லம்மா பொண்ணுத்தேன் சரி அதேன்” என்றதும்

பல்லை கடித்தார் சோமதேவன் இருந்தும் தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டார். இன்றே அனைத்தும் கொட்டிவிடும் எண்ணம் போலும் அறிவுக்கு மீண்டும் தொடுத்தார் கேள்வி கணைகளை.

“என் அம்மாயிகாரி தானே மாமியா அதுகிட்ட போயி கண்ண கசக்கி நியாயம் கேட்டேன் நீ சின்ன புள்ள இப்படி பேசாதனு சொல்லி புடுச்சு.அந்த அம்மாக்கு புருஷன் சொந்தந்தேன் உசத்தி அந்தப் புள்ளைய அந்தத் தாங்கு தாங்குச்சு”

“புரியாம பேசாத புள்ள சாவ போரவளை தாங்குனா என்ன தப்பு” அறிவின் குற்றச்சாட்டை அதற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியவில்லை போலும் பொங்கி விட்டார் சோமதேவன்

“வேணாம் மாமா பேசாத நல்ல கேட்டுப்புடுவேன் சாவ போறவளுக்கு ராவுல புருஷன் மட்டும் கேட்குதோ எம்புட்டு நாள் தனியா கிடந்தேன் குளிக்கக் கழுவ மட்டும் நான் வேணும் உன் சீக்காளி பொஞ்சாதிக்கு உறக்கத்துக்கு நீ வேணுமோ”

இதற்கு என்ன பதில் சொல்லுவது சுற்றி அத்தனை பெண்கள் பிள்ளைகள் வேறு “என்ன புள்ள பார்களை உன்ன”

“என்ன பார்த்தீக உங்க ஐத்த மக எங்க பார்க்க வுட்டா என்கிட்ட நீங்க தண்ணி கேட்டா கூட அந்த மவராசிக்கு பொறுக்காதே அவ அப்படி இல்லனு வக்காலத்து வாங்காதீக புரியுற வயசு இல்லனாலும் ஒதுக்கம் புரியும்”

“ப்ச் அது.....”

“ஒன்னும் சொல்லாதீக எந்த சமாதானமும் இனி தேவையில்ல அந்த மவ ராசி சாவுற வரை என் பக்கம் இந்த மவராசன் வரல இரண்டு முறை நானே தேடி போனதால மலரும் நங்கையும் இல்லனா என் வாழ்க்கையில அந்த வரமும் இல்லாம வறட்டு சிறுக்கியா இருந்து இருப்பேன்”

“ஏய்! புள்ள உன் மேல உசுர வச்சு இருக்கேண்டி” சோமதேவன் ஆதங்கமாகச் சொல்ல

“பொய் சொல்லாத மாமா உனக்கும் எனக்கும் கண்ணாலம்னு சொன்ன உடனே கனவுதேன்.... கதர் சட்டை போட்டு மைனரா சுத்தி வம்பு பண்ணுற மாமன் மேல மயக்கம் உண்டுதேன் ஆனா நீயே கட்டிக்கிடுவனு யோசிக்கல உனக்குத்தேன் கண்ணாலம் ஆகிடுச்சே,

ஆத்தா வந்து செய்தி சொல்லும் போது கூட இரண்டாந்தரம் உறுத்தல கண்ணாலம் பண்ணி உன்ன மாதிரி மகனை பெத்து வாழனுமுண்டு எம்புட்டுக் கனா தெரியுமா எல்லாம் போச்சு”

“சோறு பொங்கி வூட்ட பெறுக்கி பாதிக் காலம் போச்சு அப்புறம் மலர் பிறந்து அவளை பங்குடு பண்ண பாதிக் காலம். அது வளர்ந்து வரும் போதே அடுத்து புள்ள அதைச் சரிக்கட்டி எடுத்து வந்து உன்ன பார்த்தா உன் சீக்காளி பொஞ்சாதி கூடவே உன் காலம் போச்சு”

“அதேன் எங்க ஐயா கிட்ட சொல்லி இங்கன தங்கிட்டேன். அப்படியும் வந்து ஏன்னு கேட்டியா நீ? உன் முதல் பொஞ்சாதி சாகுற வரை அப்படித்தேன் இருந்த...... இத்தினி வருசம் போச்சு

இனி நான் எதுக்கு இளமை போயி கனவு போயி வாழ்க்கை போயி இதோ வாழா வெட்டியா எல்லாத்துக்கும் பாரமா நிக்கேன்” என்றவர் முகத்தை மூடி கொண்டு அமர்ந்து அழுக

சோமதேவன் எழுந்தே விட்டார் “ஊமையாட்டம் இருந்து புட்டு என்ன போச்சுடி பேசுற நீ கேட்குற அம்புட்டுக்கும் என்கிட்ட பதில் இருக்குடி ஆனா அதைக் கூடத்துல வச்சு சொல்ல முடியாது” என்றவர் தனது மாமனை பார்த்து இரு கரம் கூப்பிச் செல்ல போகச் சடை ஓடி வந்து தடுத்தான்

“மாமா இரு பேசிக்கிடலாம்”

“அட போடா நடுதெருல நிறுத்தி வெட்டிய உருவி புட்டா உன் அக்காரி இன்னும் என்ன பேச அம்புட்டு பெரும் முன்னாடி அம்மணமா நிக்கேன் வுட்டுரு” என்றவர் அவனைத் தாண்டி சில அடிகள் கடந்து சென்று திரும்பி பார்த்தவர்அறிவை நோக்கி விரல் நீட்டி

“நியாயத்துக்கு இரண்டு பக்கம் இருக்குடி நீ பேசுனது அம்புட்டு ஜீரணம் ஆகட்டும் அப்புறம் வாரேன்..... காலம் கனியட்டும் மூட்டா சிறுக்கி என்ன பேச்சு பேசி புட்டா” புலம்பி கொண்டே சென்றார்.

போகும் தனது மச்சானான மருமகனை பார்த்துக் கொண்டு இருந்தவர் ஒரு பெருமூச்சுடன் மகளிடம் திரும்பி “சரி புகுந்து வூட்டு பஞ்சாயத் என்னானு தெரிஞ்சு போச்சு இப்போ பிறந்த வூட்டுக்கு வாக” என்றதும் நங்கை முந்தி கொண்டு முன் வர மீண்டும் ஓர் கசப்பான அத்தியாயம் தொடங்கியது.

பெண்கள் தான் மாய்ந்து போனார்கள் எதில் தொடங்கிய பேச்சு சொல் அம்பாக மாறி எங்கெங்கோ செல்கிறது... எதிர்பாரா நேரத்தில் எதிர்பாரா இடத்தை குத்தி கிழித்துக் காயம் செய்து கொண்டு இருக்கிறதே இன்னும் என்ன என்ற நிலையில் பயந்து கொண்டு இருந்தனர்.
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Saroja

Well-Known Member
அறிவு கேட்ட கேள்விக்கு
நியாயமான பதில்
கிடைக்கல
இன்னும் வேற பிரச்சினை என்ன
இருக்கோ
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top