அட்சய திரிதியை (மே 14-5-2021)

SahiMahi

Well-Known Member
#1
அட்சய திரிதியை (மே 14-5-2021)1. பரசுராமர் அவதரித்த திருநாள்

2. கங்கை நதி இவ்வுலகிற்கு வந்த நாள்

3. பக்தன் சுதாமர் துவாரகாவில் உள்ள பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இல்லத்திற்கு சென்ற நாள்.

4. பாண்டவர்கள் சூரியதேவனிடம் இருந்து அட்சய பாத்திரம் பெற்ற நாள்,

5. வியாச தேவரால் மஹாபாரதம் இன்று தான் எழுதப்பட்டது.

6. திரேதாயுகம் தொடங்கிய நாள்

7. “கனகதரஸ்தோத்ரம்” ஆதிசங்கராச்சாரியரால் இன்று இயற்றப்பட்டது.

8. குபேரருக்கு இன்று செல்வத்தின் பொறுப்பு வழங்கப்பட்டது,

9. அன்னபூரனிதேவி தோன்றிய நாளாகக் கருதப்படுகிறது.

10. இந்நன்னாளில் ரதயாத்திரைக்கான ரதம் செய்யும் பணி தொடங்கும்.

11. கீர்ஷோர் கோபிநாத் (ரெமுன, ஒரிஸா), மதன மோகன், கோவிந்தா மற்றும் கோபிநாத் விக்ரகங்களுக்கு சந்தன் யாத்திரை தொடங்கும் நாள்

12. இன்றிலிருந்து 21 நாட்களுக்கு, வைசாக மாதத்தின் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக மேற்கு வங்கம் மாயாபூரில் பகவான் ஸ்ரீ ராதா மாதவர் , பகவான் ஶ்ரீ நரசிம்ம தேவர், பகவான் ஶ்ரீ ஜெகந்தார் பலதேவர் சுபத்ர தேவி விக்ரகங்களுக்கு சந்தன காப்பு அலங்காரம் நடைபெறும்.

13. இன்றிலிருந்து 21 நாட்களுக்கு, வைசாக மாதத்தின் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக விருந்தாவனத்தில் பகவான் ஸ்ரீ ராதா கிருஷ்ணருக்கு சந்தன காப்பு அலங்காரம் நடைபெறும்.

14. பார்லி தோன்றிய நாள் (யாகத்திற்கு உபயோகப்படுத்தும் பொருள்)

15. பத்திரிநாத்திலுள்ள கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி கோயில் குளிர் காலங்களில் நடையடைத்து அட்சய திரிதியை சுபதினத்தில் மீண்டும் பக்தர்கள் தரிசிப்பதற்காக கோவில் நடை திறக்கபடும்.
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes