ஹனுமன் சாலிஸாவின் மஹிமை.

Advertisement

SahiMahi

Well-Known Member
ஶ்ரீ ஹனுமான் சாலிஸாவின் மகிமை..

தினமும் ஒரு முறையேனும் பாராயணம் செய் யூங்கள். துன்பங்கள் பறந்தோடும் இன்பங்கள் வீடு தேடி வரும்..இது உண்மை..

ஒருமுறை துளசிதாசரை தனது அரசவைக்கு வரவழைத்த முகலாயப் பேரரசர் அக்பர், ”நீர் பெரிய ராமபக்தர், பல அற்புதங்களைச் செய்கிறீர் என்கிறார்களே. எங்கே, ஏதாவது ஒரு அற்புதத்தைச் செய்து காட்டும் “என்று கிண்டலுடன் நக்கலாக கேட்டார்.

“ நான் மாயாஜாலக்காரன் அல்ல; ஸ்ரீராமரின் பக்தன் மட்டுமே!" என்று ஶ்ரீ துளசிதாசர் சொல்ல, கோபப்பட்ட அக்பர், மன்னனின் ஆணையை மதிக்கவில்லையென்று அவரை சிறையில் அடைத்தார்.

‘எல்லாம் ஸ்ரீராமனின் சித்தம்’ என்று கலங்கா மல் சிறை சென்ற ஶ்ரீ துளசிதாசர், தினமும்
ஶ்ரீ ஆஞ்சநேயர் மீது ஒரு போற்றிப் பாடல் இயற்றி வழி பட்டார்.

மிகவும் சக்திவாய்ந்த ஹனுமான் சாலீசாவின் 40 ஆவது பாடலை எழுதி முடித்ததும், திடீரென எங்கிருந்தோ வந்த லட்சக்கணக்கான குரங்கு கள் அரண்மனையில் புகுந்து தொல்லை செய் ய ஆரம்பித்தன. படை வீரர்கள் எவ்வளவோ முயன்றும் விரட்ட முடியவில்லை. ஆயுதங்க ளைப் பறித்து அவர்களை காயப்படுத்தின.

அக்பரிடம் சென்ற தளபதி “ராமபக்தரான துளசிதாசரைக் கொடுமைப்படுத்துவதால் ஆஞ்சநேயருக்குக் கோபம் வந்திருக்கிறது. துளசிதாசரை விடுவித்தால் பிரச்னை
நீங்கிவிடும் “என்று ஆலோசனை அளித்தார்.

அதைக் கேட்டவுடன் “போரில் வெற்றிபெறும் என் வீரர்கள் சாதாரண குரங்குகளுக்கு பயப்படுவதா?” என்ற ஆணவத்தால் போர் வீரர்களை மீண்டும் குரங்குகளை கொல்ல ஆணையிட்டார்.

ஆணையிட்ட அடுத்த நொடி வேறு புதிய குரங்கு கூட்டங்கள் அக்பரை நோக்கி ஆக்ரோ ஷத்துடன் வந்தன. உடனே அக்பர் தன்னைய றியாமல் கை கூப்பி, “துளசிதாசரே நான் தவறு செய்துவிட்டேன். மஹானே என்னை மன்னியுங்கள். குரங்குகளை வெளியே ஓடச் சொல்லுங்கள்” என்று கதறினார்.

உக்ரமாக வந்த குரங்குகள், அக்பர் துளசிதாச ரிடம் மன்னிப்பு கேட்டதால் அப்படியே கட்டுப் பட்டு நின்றன.. சிறிது நேரத்தில் அப்படியே மறைந்து விட்டன... அக்பருக்கு இது கனவா அல்லது நனவா என்று ஒரு நிமிடம் தடுமாறி விட்டார். எல்லோருக்கும் ஒரே ஆச்சர்யம்... அக்பர் இருக்கிறார் என்பதை மறந்து “ஜெய் ஶ்ரீ ராம்... ஜெய் ஹனுமான்!” என்று கோஷம் எழுப்பினார்கள்.

அதையடுத்து அக்பர் துளசிதாசரை விடுவித்து வருத்தம் தெரிவித்தார் மறுகணமே, சிறையி ன் வெளியே குவிந்து இருந்த குரங்குகள் ஶ்ரீ துளசிதாசர் சிறையை விட்டு வெளியே வரும் வரை காத்திருந்தன.

ஶ்ரீ துளசிதாசர் வானரப் படைகளைப் பார்த்து தனது கரங்களைக் கூப்பி “ஜெய் ஶ்ரீ ராம்.. ஜெய் ஹனுமான்” என்று கண்ணீர் மல்க வணங்கினார். உடனே குரங்குக் கூட்டங்கள் மாயமாய் மறைந்தன.

துளசிதாசர் சிறையில் இருந்தபோது பாடிய 40 போற்றிப் பாடல்கள்தான் ‘ஸ்ரீ ஹனுமான் சாலீஸா’...

ஜெய ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதாராம்...
 

Uma Ramesh

Well-Known Member
மிகவும் சரியானது. இதற்கு இணை ஏதுமில்லை. தகவல் பகிர்விற்கு நன்றி
 

Janavi

Well-Known Member
ஆமாம் ...சக்தி வாய்ந்த ஸ்லோகம்

ஜெய் ஸ்ரீ ராம் ....
 

Novel-reader

Well-Known Member
மிகவும் அருமையான பதிவு. ஹனுமான் சாலிசாவின் மகிமையை நான் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன்.
ஒருமுறை திரு சோ அவர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன். தொடர்ந்து 21 நாட்கள் தினமும் 7 முறை ஹனுமான் சாலிசாவை நாம் ஜபித்தால் நாம் நினைக்கும் நற்காரியம் நடக்கும் என்று.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top