'நெஞ்சமெல்லாம் அலரே..!!' - பொங்கல் ஸ்பெஷல் டீசர் !!!

Advertisement

Rudraprarthana

Well-Known Member
நாதன் பேச்சை ஆரம்பித்த போதே அங்கிருந்து அகல முற்பட்ட அகனெழிலனை அடுத்தடுத்து அவரிடம் இருந்து வந்து விழுந்த வார்த்தைகள் இழுத்து பிடித்திருக்க..,உண்பதை நிறுத்தி இத்தனை நேரமாக பேசிக்கொண்டிருந்தவரின் முகத்தை சலனமற்று பார்த்து கொண்டிருந்தவனின் முகம் மெல்ல கறுக்க தொடங்கியது..,

கட்டுக்கடங்காத சீற்றத்தை கட்டுக்குள் கொண்டு வர அரும்பாடு பட்டுகொண்டிருந்தவனின் விழிகள் அவனின் வழக்கத்திற்கு மாறான முயற்சியில் ரத்தமென சிவக்க தொடங்கி அவரை கூறு போட தொடங்கியிருக்க..,

நாதனோ அதையெல்லாம் உணரும் நிலையில் இல்லாது மேலும் தொடர அவரின் இறுதி வாக்கியத்தை நிறைவு செய்யுமுன் கொதிநிலை அடைந்திருந்த அகனெழிலன்..,

"மாமாஆஆஆஆஆஅ" என்ற உரத்த கர்ஜனையோடு வலக்கர முஷ்டியை மடக்கி ஓங்கி மேஜையில் குற்றியவாறு நாற்காலியை விட்டு விருட்டென எழ அவன் சீற்றத்தை தாங்காத உணவு மேஜையோ ஒருமுறை பலமாக அதிர்ந்து சிறு குலுக்கலுடன் மீண்டும் தன்னிலை திரும்ப.., அதன் விளைவாக மேஜை மீதிருந்த அவரின் உணவுத்தட்டும் தண்ணீரும் போட்டி போட்டுக்கொண்டு நாதன் மீது கவிழ்ந்திருந்தது.

எழிலின் கர்ஜனையான விளிப்பிலும் அவன் முகத்தில் தாண்டவமாடிய சீற்றத்திலும் தன்னை மீட்ட நாதனுக்கு அப்போதுதான் தான் உதிர்க்க இருந்த வார்த்தையின் வீரியம் உணர்ந்து அதிர்ந்து போனார். இத்தனை நேரம் தன் உணர்வில் எதையுமே கருத்தில் கொள்ளாது பேசிக்கொண்டிருந்தவருக்கு எழிலின் கர்ஜனையில் தான் சமரன் பெற்றார்.

அங்கு தன் எதிரே இருந்தவனது முகத்தில் எல்லையில்லாத ரௌத்திரத்தை காணவும் ஒரு நொடி அதிர்ந்தவரது முதுகு தண்டுவடம் சில்லிட்டு போக இதயமோ எக்குதப்பாக படபடத்து துடிக்க தொடங்கியிருந்தது. அதிலும் அவர் முகம் மெல்ல நிறமிழக்க தொடங்கி அவரையும் அறியாமலே அவர் கண்களில் மெல்லிய அச்சம் படர்ந்திருந்தது.

அலர் முதற்கொண்டு குழுமி இருந்த அனைவரின் முகமும் அச்சத்தில் அமிழ்ந்து போனது நாதனுக்கான எழிலின் மறுமொழி எத்தகையதாக இருக்கும் என்பதில்..!! என்ன முயன்றும் நாதனை கட்டுபடுத்த முடியாமல் போனவர்களுக்கும் இப்போது என்ன செய்வது என்று புரியாமல் போக கைகளை பிசைந்து கொண்டிருந்தவகளுக்கு தங்கள் முன் சிம்மமாய் சிலிர்த்து நின்றிந்தவனின் விழிகளில் நிறைந்திருந்த கனலே அவர்களை அவனை நெருங்க விடாமல் செய்திருந்தது.

நடக்கும் எதையும் எதிர்பாராத அதிர்ச்சியில் உறைந்து போயிருந்த அலர்விழி சில நொடிகளில் தன்னை மீட்டெடுத்து தைரியம் வர பெற்றவளாக கலங்கிய விழிகளுடன் ‘மாமா’ என்று அவன் முன் வர பாறையென இறுகி போயிருந்த அவன் முகத்தை கண்டவளுக்கு உள்ளுக்குள் குளிர் பரவதொடங்கிய நேரம் எழிலின் கரம் இடியென அவள் இடது கன்னத்தில் இறங்கிய வேகத்தில் உதடு கிழிபட சுழன்று நாதன் மீது விழுந்தாள்.

அவரும் தன்னிச்சையாக மகளை பிடித்திருந்தாலும் ஸ்தம்பித்திருந்தவரின் விழிகளில் மெல்லிய நீர்படலம் தோன்றியிருக்க பேச்சிழந்து எழிலை பார்த்திருந்தார்.

இதழின் ஓரம் கசிந்திருந்த குருதியை துடைக்கவும் முனையாதவளாக எழிலின் பின்னே ஓடியவள் ஒரு கட்டத்தில் விழிகளில் நிறைந்திருந்த நீர் அவன் முகம் மறைக்க அதை துடைத்துக்கொண்டே "மாமா ப்ளீஸ்" என்று அவன் கரத்தை பிடிக்க.., ஒரு நொடி அவன் நடை தடைபட்டாலும் தன்னை தடுத்திருந்த அவள் கரத்தை உதறி விட்டு மீண்டும் முன்னேறி இருந்தான்.

ஆனால் அவன் உதறிய வேகத்தில் நிலைதடுமாறி விழுந்தவள் அங்கிருந்த டீபாயில் இடித்துக்கொண்டு கீழே விழுந்திருக்க அலரின் நெற்றியில் இருந்து உடைபெடுத்த செங்குருதி அவள் கன்னம் தாண்டி வழிந்து கொண்டிருந்தது ஆனால் அவளோ அதை உணராதவளாக உயிர்ப்பற்று அமர்ந்திருந்தாள்.

அவள் உயிரின் ஒரு பாதி அவள் நிலை அறியாது, அவளை திரும்பியும் பாராது துடித்து கொண்டிருந்தவளை நீங்கி சென்று கொண்டிருந்தது.

இருநாள் பிரிவை கூட தாங்க இயலாதவளுக்கு தெரியவில்லை இனி அவர்களின் பிரிவு நாட்களை தாண்டி மாதங்களை தொட்டு நீளும் என்பது..!!!

தோழமைகள் அனைவருக்கும் தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்...
படிச்சிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top