எங்கே எனது கவிதை ?-சிறுகதை பாகம் 1

Advertisement

எங்கே எனது கவிதை?
பாகம் 1

கார்த்திக் தூக்கத்தில் மெல்ல அசைந்தான் ,அவன் படுத்திருந்த அசௌகரியமான நிலையால் உடல் முழுவதும் வலி வாட்டியெடுத்தது ...முதுகுப்புறம் சாய்ந்து படுத்தால் கொஞ்சம் வலி குறையும் போல தோன்றியதால் ...மெல்ல திரும்பும் போதே அன்றாட வழக்கமாக ஒரு கை தன்னிச்சையாக அருகில் தன் விருப்பமானவளை தேடியது ...ஆனால் அவன் தேடியது கைக்கு கிடைக்காததால் புருவங்கள் லேசாக ஏமாற்றத்தில் நெரிய கையால் மேலும் காற்றில் துழாவி கொண்டே ..அப்புறமாக முழுவதும் திரும்பிய அடுத்த கணம் ,
"தொப் " என்ற சத்தத்துடன் கடினமான டைல்ஸ் தரையில் கிடந்தான்..
வலியில் முகம் சுளிக்கும் போதே ,அவனது தூக்கக் கண்கள் விழித்தன ,
என்ன நடந்தது என்று அவனது மூளை ஒரு கணம் குழம்பியது ,அவன் தன் சொகுசான பஞ்சணையில் இல்லை,லிவிங் ரூம் இன் சோபாவில் தன்னுடைய ஆறடி உயரத்தையும் சுருக்கிக்கொண்டு சுருண்டு படுத்திருகிறான்...
"நான் ஏன் பெட் இல் தூங்காமல் இங்கு சோபா வில் தூங்கினேன் ?"என்ற கேள்வியில் அவன் மூளை விழித்தது ..
சட்டென முன்னிரவு நிகழ்வுகள் ஒரு படம் போல மனக்கண் முன் விரிய அவனது கண்கள் அனிச்சையாக பெட் ரூம் கதவை நோக்கி திரும்பின....
நேற்று அவன் முகத்துக்கு நேரே அறைந்து சாத்தப்பட்ட கதவு இப்போது முழுதாக திறந்து கிடந்தது ...
யாரோ ஒரு பக்கெட் தண்ணீரை முகத்தில் கொட்டியது போல தூக்கிவாரி போட்டுகொண்டு எழுந்தான்.."ராஜி எங்கே ..?"என்ற கேள்வி அவன் மனதில் தோன்றி அவனை மிரட்டியது..பதை பதைப்புடன் தங்களுடைய டூ பெட் ரூம் அப்ரட்மென்ட் முழுக்க தேடினான்...பெரிதாக தேட ஒன்றும் இல்லை..இரண்டு பெட் ரூம் ,டாய்லெட்,பலகணி கிச்சன் அவ்வளவு தான்...ஒரே நிமிடத்திற்குள் அவள் வீட்டில் இல்லை என்பதை அறிந்தான்...
"ஒரு வேளை ஆபீஸ்க்கு போய் இருப்பாளோ ?"அவனது அறிவு விடை தேட முயன்றது .
"மடையா ..இன்னிக்கு சண்டே .." என்று மனம் அவனை கடிந்தது..
ஏதோ ஒரு அல்ப ஆசையில் அபார்ட்மெண்டின் நான்கு மாடி வரை ஏறிச்சென்று மாடியிலும் பார்த்தான் ..அங்கும் அவளை காணாமல் சோர்ந்து வீடு திரும்பினான்...
மொபைலை எடுத்து அவளது எண்ணுக்கு தொடர்பு கொள்ள முயன்றான் ..சுவிட்ச் ஆப் என்று ஒரு கணினி குரல் பதிலளித்தது ..கையாலாகாத கோபத்தில் மொபைலைத் தூக்கி தூர எறிந்தான்...அடுத்து என்ன செய்வது என்ற கேள்வி பூதாகரமாக எழ ..இனம் புரியாத பயம் அவனை கவ்வியது...
"கடவுளே ...என் ராஜி எங்கே போனா ..?"
தொடரும் ...
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "எங்கே
எனது கவிதை"-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி சிறுகதைக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
கலா பாஸ்கர் டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top