அன்பின் இனியா-4

Advertisement

achuma

Well-Known Member
Hai friends thanks for ur replies

please keep on supporting

take care dear friends



அன்னை சொல்வதை அமைதியாக கேட்டு கொண்ட , அன்பு, "நான் பேசுறேன், அம்மா," என்று சொன்னதுடன், வேளைக்கு கிளம்பி விட்டான் ..
மோகனிடன் மேற்கொண்டு பேசுவதாக கூறினானே தவிர , இனி எப்படி எல்லோரையும் சரி கட்டி , திருமணம் செய்வது..


அதிலும், விஷாகா இனி என்ன செய்வாள் என்று தெரியாத குழப்பத்துடன் , தவிக்க ஆரம்பித்தான்

இப்போ சொந்த வீடும் இல்லை , இராஜ் டெக்ஸ்டைல்ஸ் , என்ற அடையாளம் இன்றி, டிராவெல்ஸ் மற்றும் வாடகை வீட்டில் இருப்பதை பற்றியும் சொல்லி விட வேண்டும் என்று நினைத்தான் ..


இதற்கு மேல், அவர்கள் கையில், விருப்பம் இருந்தால் பேசட்டும் என்று விட்டு விட்டான் ..


ஒரு பக்கம் இனியா தனக்கு கிடைக்கவில்லை என்றால், சிந்தனையே கசந்தது , அனால் ஒரு தகப்பனாக அவருக்கும் பல ஆசைகள் உண்டு தானே ..

காலையில அவங்க வீட்டுல அவனின் தகவல்கள் பற்றி சொல்லி விடுவது என்று முடிவெடுத்து விட்டான் ..

எப்பொழுதும் போல் , நான்கு மணி ஷிபிட் முடிந்ததும், ஐந்து மணி போல் வீட்டிக்கு வந்து, தங்கை கொடுத்த தேநீர் பருகி, உறங்க சென்றான் ..
அலாரம் வைத்து கதவு திறந்து விட்டு, அண்ணனுக்கு , குடிப்பதற்கு ஏதேனும் கொடுத்து விட்டு உறங்க சென்று விடுவாள் ..

பிறகு, நன்றாக விடிந்ததும், எட்டு மணியளவில் கல்லூரிக்கு , புறப்பட்டு கொண்டிருந்தாள் , அந்நேரம் , அறையில் இருந்து வெளி வந்த சுமதி ,மகன் விஷாகாவிற்கு அழைப்பு விடுத்தானா என்று காரியத்தில் கண்ணாக இருந்தார் ..

ஏன்னென்றால், எப்பொழுதும் அமைதியாக இருப்பவன், திடீர் என்று வீட்டை காலி செய்ய வைத்து , அழைத்து வந்து விட்டானே, இனி அக்கா தம்பி உறவில் ஏதேனும் விரிசல் ஏற்படுமோ, அதனால் விஷாகாவிற்கு பூகுந்த வீட்டு மதிப்பு சரியில்லை, என்றால் என்னாவது என்பது போன்ற யோசனை ..

மகனை, நேரம் கூட பார்க்காமல், எழுப்புவதற்கு அவன் அறைக்கு சென்றார் ..
அன்புவை எழுப்பியும் விட்டார் ,காலையில் அன்னையின் கேள்வி, எரிச்சலை தந்தது ..

அதிலும் அவனே அலாரம் வைத்து ஒன்பது மணிக்கு எழுந்து விடுவான் அதற்க்கு முன்பு இவருக்கு என்ன அவசரம் என்று தான் அவனின் கோவம் ..

நாள் ஆரம்பமே கோவம் வேண்டாம் என்று, ஐந்து நிமிடம் எழுந்து சம்மணம் இட்டு அமர்ந்து கண்கள் மூடி கொண்டான் ..

ஐந்து நிமிட தியானம் முடிந்ததும் , "அதிதி என்ன சாப்பாட்டுக்கு, எடுத்துட்டு போனா , மெஸ்ஸுக்கு அட்ரஸ் சொல்ல மறந்துட்டேன், என்ற கேள்வி அன்னையிடம் ..

சுமதிக்கு எப்பொழுதும் சரியாக சமைக்க வராது
வீட்டுக்கு வேலையாட்கள் இருந்தனர் , அதனால் உணவுக்கு கவலை இன்றி சென்றது ..

இராஜ கோபாலின் மறைவுக்கு பிறகு , விஷாகாவின் வருகையால் , அவளின் தொந்தரவால் எந்த சமயல்காரனும் நிரந்தரமாக இல்லை ..

முன்பும் அவளின் அதிகம் தான், ஆனால் தம்பி தங்கை தன்னை மீறி விட கூடாது என்னும் எண்ணம் வந்ததில் இருந்து , அவளின் அதிகாரங்களும் அதிகமானது ..


இவனும் வேலைக்கு செல்ல வேண்டும், அதிதிக்கு படிப்பில் நேரம் சென்று விடும்..
அதனால் மெஸ்ஸுக்கு ஏற்பாடு செய்து விட்டான் ..


காலையில் அம்மா வீட்டிற்கு வந்து விட்டால் , அதிதி, அன்பு அவர்கள் பணிக்கு செல்லும் வரை அவர்களுக்கு ஏதேனும் ஏவல் இட்டு கொண்டே இருப்பது, அவர்கள் சென்றதும் தான், அவள் கடை நோக்கி செல்வது ..


கடையை திறம்பட நடத்துவதிலும், அவளின் ஆளுமையும் ஒரு தனி கலை தான் ..
ஆனால் , திறமை இருப்பவனிடம் "தான்" என்ற ஆணவம் இருந்தால் அது வீழ்ச்சிக்கே வழி வகுக்கும்..

அவளுக்கு மாமியார் வீட்டில் இருந்து நேரத்திற்கு உணவு, கடைக்கே வந்து விடும் ..


மாலையும் அதிதி என்ன செய்கிறாள் ஏது என்று அவளையே நோட்டம் இட்டு கொண்டு , ஏழு மணிக்கு மேல் தான் அவள் வீட்டுக்கு செல்வாள் ..
அதிலும் அவள் இரு பிள்ளைக்கள் ஒன்பது வயது மகள், மற்றும் ஆறு வயது மகன் இருவரையும் கண்டு கொள்ள மாட்டாள் ..

மாமியாரையும், பெரிதாக கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டாள் ..
அவர் குடும்பத்தை திறம்பட நடத்தி செல்லும் பெண்மணி ..
பேர பிள்ளைகள், முதல் மகன், மகள் மற்றும் கனவர் என்று அவரின்றி அந்த வீட்டில் ஒன்றும் நடக்காது ..


ரேஷ்மி, பெங்களூரில் உள்ள கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறாள் ..
அண்ணியை நம்பி, அன்பு மீதான காதலால் அவள் மனது ரணமாக போகும் என்று தெரியாத, பெண் .


விடுமுறை தினங்களில் மட்டுமே வீட்டுக்கு வந்து செல்வாள் ..

அவள் வந்து விட்டால் , வீடே அவளை தாங்கும் அதற்கே விஷாகாவுக்கு, இவ்வாறான எண்ணங்கள் ..

வீட்டில் இருப்பவர்கள் எதுவும் சொல்லாமல், விஷாகா வேலையாட்களை ஏதேனும் குறை கூறி கொண்டே இருந்தால் அவர்களும் தான் என்ன
செய்வார்கள், அதிலும் ஒரு விஷயத்தை சொல்லும் முறை ஒன்று இருக்கிறது..

வீட்டு வேலைக்கு வருபவர்களை மட்டமாக ஏதேனும் சொல்லி கொண்டே இருந்தால் , அவர்களும் ஒரு கட்டத்தில் வேலையை விட்டு சென்று விட்டனர்

ஏதேனும் விசாகவால் சமையல் செய்பவர்களிடம் ஒரு பஞ்சாயத்து, இருக்கும் வேலையில் இது வேலைக்காகாது என்று, மெஸ்ஸுக்கு ஏற்பாடு செய்து விட்டான் ..


"நான் என்ன கேட்கிறேன் , நீ என்ன சொல்ற ?அவ நான் கதவு திறந்து வெளிய வரும்போது, போயிட்டு இருந்தா , சரியா கவனிக்கல , நான் கேட்டதுக்கு பதில் சொல்லு" ..


புது வீட்டுக்கு வந்ததில் அவர்களிடம் தகவல் கூற மறந்ததால், முதலில் அவர்களுக்கு அழைத்து, புது வீட்டின் முகவரி கூறி வைத்து வயிற்று பாட்டுக்கு ஏற்பாடு செய்தான் ..

பிறகு தங்கைக்கு அழைத்து, கேட்டதற்கு, கையில் பணம் இருப்பதாக தான் கேன்டீனில் பார்த்து கொள்வதாக சொன்னாள் ..

மோகனிற்கு அழைத்ததும் , அவர் போன் எடுத்து பேசினார் ..
இது என்ன எனக்கு எதுவும் பதில் சொல்லாம , என்று சுமதிக்கு மீண்டும் கோவம்..

"வணக்கம் சார்,"

"வேளைக்கு கிளம்புற நேரம் டிஸ்டர்ப் செய்துட்டேன் சாரி ,"

"பரவா இல்லை சொல்லுங்க"

"செழியன் அண்ணண் எங்க குடும்ப தகவல் , என்னை பற்றி என்ன சொல்லி இருப்பாங்கன்னு எனக்கு தெரியல, அதான் நானே உங்களுக்கு, என் டீடெய்ல் சொல்லிடறேன்,"

"இராஜ் டெக்ஸ்டைல்ஸ்," அப்படிங்கற எங்க தாத்தா இராஜவேலு அடையாளம் மட்டும் தான் எங்களிடம் இருக்கு , வீடு கடை எல்லாம் அக்கா பெயரில் தான் இருக்கு ..

"என்னோட உழைப்புல உருவான டிராவெல்ஸ் மட்டும் தான் என்னிடம் இருக்கிற ஒரே சொத்து , வீடும் இப்போ வாடகை வீடு தான், பட் வீடு வாங்குற ஐடியாவும் இருக்கு, சீக்கிரம் அதுக்கான ஏற்பாடு செய்வேன்" ..

"என் தங்கை படிச்சிட்டு இருக்கா , இன்னும் இரண்டு வருஷம் இருக்கு அவ படிப்பு முடிய , அவ எதிர்காலமும் என் கடமை தான்" ..

எனக்குனு , அம்மா தங்கை , அக்காக்கு கல்யாணம் ஆனாலும், அவளுக்கு செய்ய வேண்டியது எல்லாமும் நான் தான் ..

இனி நீங்க தான் மேற்கொண்டான் முடிவு சோல்லனும், உங்களுக்கும் மகள் கல்யாண வாழ்க்கை பற்றி ஒரு கனவு இருக்கும்..

"சோ இது எல்லாம் செட் ஆகுமா? உங்களுக்கும் ஓகேவா ? வீட்டுலயும் கேட்டுட்டு சொல்லுங்க ," என்று அவரின் கையிலேயே முடிவையும் விட்டு விட்டான் ..

"பையன் பளிச்சுனு பேசுறான்," என்று மனதில் மெச்சி கொண்டு , சிறிது நேரத்தில் கூறுவதாக சொன்னார் மோகன் ..

சுமதிக்கு, அக்காவை விட்டு கொடுக்காமல் மகன் இருக்கிறான் என்றதும், அவ்வளவு மகிழ்ச்சி ..

ஆனா, அவங்க மிடில் கிளாஸ் தானே , எவ்வளவு சம்பாதிக்கிறான் என் பையன் , இவனுக்கு கொடுக்க கசக்குமா , அவர் கிட்ட போய் ஏதோ கெஞ்சிட்டு இருக்கான் , என்று சம்மந்தி வீட்டின் மீதே பழி போட்டார், மகன் பேசியதற்கு கூட ..

நான்கு அக்கா, திருமணம் முடிந்ததும் தனி குடித்தனம் சென்று விட்ட, இரண்டு அண்ணங்களுடன் பிறந்த மோகனிற்கா தெரியாது , குடும்ப சூட்சுமம் ..

"ஹ்ம்ம், வசதிக்கு ஏற்ற சொரண்டல் , திருமண சீர் என்ற பெயரில் எல்லா இடத்திலும் தான் நடக்கிறது , என்று தெரிந்து வைத்தவர், மோகன் ..

எல்லாமே பெரிய மகளுக்கு கொடுத்து இருகங்கனா , அந்த பெண் எந்த அளவுக்கு முக்கியமானவளா அந்த வீட்டுக்கு இருக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டார் ..


பாசத்தால், பண்பால் முக்கிமானவர்களாக இருந்தால் அது வேறு ..
பயத்தில், வெறுப்பில், என்றால் இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு ..
இது யார் மோகனுக்கு கூறுவது ..


செழியனுக்கு அழைத்து தகவல் கூறினார்..

"மாமா , பையன் ரொம்ப நல்லவன் , எப்படியோ மேல ஏறி வந்துட்டான் .
அந்த பொண்ணு வீட்டுல ரொம்ப செல்லம், அதான், அவளுக்கே எல்லாம் கொடுத்து இருக்கார் சித்தப்பா .."

"நீங்க அன்புவை நம்பி கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லலாம்" ..

சரி மாப்பிளை ..

வீட்டில் இந்திராவுடனும் அதே கூறினார் ..

பையன் உழைக்கிறான் , அவன் பொண்டாட்டிய அவன் பார்த்துப்பான், அது போதும் ..

நம்ம பொண்ணு நல்ல பக்குவத்தோடும், இத்தனை சொந்தங்களோடுது தானே வளர்ந்து இருக்கா, அது எல்லாம் குடும்பத்தை நல்லா பார்த்துப்பா , நீங்க கவலை படமா சம்மதம் சொல்லுங்க ,என்று இந்திராவும் தைரியம் அளித்தாள் ..

வீட்டுல பொறந்த பொண்ணுக்கு, அம்மா வீட்டுல செய்றது சாதாரணம் தானே ..

அவரும் ஒரு மணி நேரத்தில் ஒரு வழியாக குடும்பத்துடன் கலந்தாலோசித்து , அன்புவிடம் சம்மதம் தெரிவித்தார் ..

விஷாகாவல் இரண்டு நாட்களாக , எங்கோ பறந்து சென்று இருந்த இதம் மீண்டும் அவன் மனதில் வந்து ஒட்டி கொண்டது..


"அவங்களுக்கு பையன் வீடு பற்றி கரெக்டான தகவல் தெரியறது நல்லது, அவங்களுக்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கும் இல்லை , அதுக்கு ஓகே வா தெரிஞ்சதுக்கு மேல தான் அடுத்து ஸ்டேப் எடுத்து வைக்க முடியும்" ..

"இப்போ தான் ஓகே சொன்னாங்க இனி நம்ம இரண்டு அத்தை வீட்டுக்கும் சொல்ல வேண்டியது தான்" ..

மோகனிடம் இருந்து அடுத்த தகவல் வருவதற்குள் அவன் குளித்து , மெஸ்ஸில் இருந்து வந்த உணவை அன்னைக்கும் கொடுத்து தனக்கும் போட்டு கொண்டு உண்டு முடித்தான் ..

மகன் எதுவும் பேசாமலே வேலைக்கு செல்கிறான் என்று நினைத்து கொண்டிருந்த சுமதிக்கு, அவன் கூறிய பிறகு தான், மனம் சமன் பட்டது ..

"அவங்க வேண்டாம்னு சொல்லி இருந்தா , நீ ரேஷ்மிய கல்யாணம் செய்து இருப்பியா?" என்று அடுத்த கேள்விக்கு சென்றார் ..

"அம்மா அவங்க, இந்த இடம் வேண்டாம்னு சொல்லி இருந்தா, நான் அப்படியே தான் விட்டு இருப்பானே தவிர, நான் ஏன் ரேஷ்மிய கல்யாணம் செய்துக்க போறேன்" ..

"அப்படி என்ன அவள தான் கல்யாணம் செய்துப்பேனு, விடாது கேட்டார்" ..

"அம்மா ப்ளீஸ் , நீங்க அக்காவை வினோத் மாமா கல்யாணம் செய்துகிறது பற்றி சொல்லும் பொது ஏதாவது சொன்னீங்களா " ..

"என்ன, யாரோட யார இணை கட்டுற , அந்த மிடில் கிளாஸ் குடும்பமும், நம்மளும் ஒன்னா," அவனிடம் சண்டைக்கு நின்றார் ..


"போதும் மா, என்னது இது, மிடில் கிளாஸ் அது இதுனு, இன்னும் சொல்ல போனா , அவங்களுக்காவது சொந்த வீடு இருக்கு, நம்ம தான் வாடகை வீட்டுல இருக்கோம்,(தாயும் தன்னிடம் மறைத்தார் என்ற ஆதங்கம் இன்னும் அவன் மனதில் )
"இந்த வீட்டுக்கு மருமகளா வர போறவ பற்றி பார்த்து பேசுங்க "..
என்று வேலைக்கு புறப்பட்டான் ..


மகனின் புது அவதாரம், சுமதிக்கு அதிர்ச்சி ..


அவன் எப்பொழுதும் போல் தான் இருக்கிறான், ஆனால் அக்காவுடன் சேர்ந்து அன்னை வீட்டை பற்றி மறைத்தது, ரேஷ்மியுடன் திருமண என்று கூறி , அந்த பெண்ணின் மனதை கலைத்தது , எல்லாம் சேர்ந்து அவனின் பொறுமை சோதிக்க வைத்தது..


அம்மாவும் பொன்னும் சேர்ந்து அவனுக்கு உள்ள தூங்கிட்டு இருந்த புலியை கிள்ளி விட்டுட்டாங்க


வேறு வழி இல்லமால் , அவள் இல்லனா வேற கல்யாணம் செய்துக்க மாட்டான் , என்று நடு மண்டையில் உரைக்கவே, தன்னை தேற்றி கொண்டார் ..


மீண்டும், காலை அக்கா வீட்டிற்கு சென்று தகவல் அளிக்குமாறு கூறினார் ..
ஹ்ம்ம் சரி மா , இப்போ சின்ன அத்தை (சந்திரா ) பார்த்துட்டு , அப்பறம் நேரா அங்கே போறேன் ..

சந்திராவை சந்திக்க, என்ற உடனே முகம் சுளித்து அவர் விருப்பமின்மையை காட்டினார் சுமதி ..

வனும் கண்டு கொண்டான், "பணத்துக்கு தான் மரியாதை இல்லை மா," என்று கேட்டு, "இங்க பக்கத்துல தான் அத்தை வீடு இருக்கு" ..


முதலில் அவங்களுக்கு சொல்லிட்டு, இங்க இருந்து அக்கா வீட்டுல சொல்லிட்டு நான் நேரா வேலைக்கு போறேன் ..


நீங்க பத்திரமா இருங்க, என்று நிற்காமல், காலையில எழுந்ததிலிருந்து எவ்வளவு சமாளிக்க வேண்டி இருக்கு என்று விதியே என்று கிளம்பினான் ..
பத்து நிமிட தூரத்தில் இருக்கும் இரண்டாம் அத்தை சந்திரா வீட்டிற்கு சென்றான் ..


"வா வா , எவ்வளவு நாள் ஆச்சு , சரண் இங்க இருக்கும் பொது வருவே இப்போ சுத்தம்."


"அண்ணி எப்படி இருக்காங்க , அதிதி எப்படி இருக்கா?" என்று அடுக்கடுக்கான கேள்வி, அவனின் பாசமான அத்தையிடம் இருந்து ..


எல்லாரும் நல்ல இருக்கோம் அத்தை, நீங்க தான் வரதில்லை, என்ன சொல்றீங்க . .
மலர்ந்திருந்த முகம் உடனே வாடியது..
எப்படி வருவா ..

அக்கா தேவகி கணவர் போல் , சந்திராவின் கணவர் , வசதி படைத்தவர் இல்லை ..

அரசு துறையில் வேலை செய்யும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் ..

அண்ணனும், பணத்திற்கு மதிப்பு தருபவர் ..

பிழைக்க தெரியாதவன் என்று எப்பொழுதும் ஒரு பேச்சு சந்திரா கணவன் ஜெகனை பற்றி ..

அண்ணனுக்கும் பெரிய தங்கையின் கணவர் நாதனுக்கு ஒற்று போகும் அளவு, சின்ன தங்கை குடும்பத்துடன் ஓட்டுதல் இருக்காது ..

சுமதியும் அவ்வாறே அந்தஸ்து பார்த்து பழகுபவர் ..

தேவகி தங்கையிடம் நன்றாக பழகினாலும், திருமணத்திற்கு பிறகு, பெண்களின் விருப்பங்கள் எண்ணங்கள் எல்லாம் கணவனின் முடிவில் ..
சந்திராவே ஒதுங்கி கொண்டார் , ஆனால் உடல் நல குறைவால் திடீர் என்று கணவர் இறந்ததும் , சொந்தகளிடம் இருந்து முழுதாக விலகி விட்டார் ..


அதிலும், மகன் சரணுக்கு அடுத்து கல்லூரிக்கு என்று தங்கை வந்து நின்று விட்டால், பெற்ற பிள்ளைக்கே கொடுக்காதவர் தங்கை மகனுக்கு கொடுப்பார் ..


கணவனின் வேலை மனைவிக்கு என்றானது ..

அப்பொழுதும், பள்ளி படிப்பில் இருந்த அன்பு அவனால் முடிந்த உதவியை அத்தைக்கு செய்தான் ..

அன்புவும் சந்திரா மகன் சரனும் ஒரு வயது , ஒரு வகுப்பு , நல்ல நண்பர்கள்,
சந்திராவும், மகனை கல்லூரி சேர்த்து, ஒரு வழியாக அவனும் இப்பொழுது வெளிநாட்டில் நல்ல சம்பளத்தில் வேலையில் இருக்கிறான் ..

அதிலும், விஷாகாவின் திருமணத்தின் போது, அவர் பட்ட அவமானம், சரண் சந்திராவின் மகன் , அன்னையை இந்த குடும்பத்துடன் சேர கூடாது என்று சொல்லி விட்டான் ..

விஷாகா திருமணத்தில் , சுமதிக்கு திடீர் என்று, ஏதோ படபடப்பாக இருந்தது , திருமணத்திற்கே உரிய டென்ஷன் பெற்றவர்களுக்கு, அவள் முகத்தில் வியர்வை வழிந்து கொண்டே இருந்ததில், அவரை கவனித்த சந்திரா, சுமதிக்கு தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தார் ..

அந்நேரம் சரியாக, விஷாகா மணமகள் அறையில் இருந்து, அழைக்க பட்டு வந்தாள் ..


"அறிவில்லை, எதிர்க்க வந்து நிற்கிறா பாரு, இம்சை, "என்று கோவத்தில், சந்திராவை திட்டி, மீண்டும், விஷாகாவை அறைக்குள் அழைத்து சென்று, இரு நிமிடம் கழித்து அழைத்து வந்தனர் மணவறைக்கு ..
இதை செய்தது அனைத்தும் கூட பிறந்த அண்ணன் ..


சுமதியும், சந்திராவை, "உன்கிட்ட தண்ணி கேட்டேனா , நல்ல இடத்துக்கு எல்லாம் இப்படி ஏன் வர , மூலைல இருக்க வேண்டியது தானே," என்று திட்டி முகம் சுழித்தார் ..

அங்கு சரனும், அன்புவும் தான் சந்திராவை சமாதானம் செய்தது ..

அவர்கள் அன்னையை திட்டியது பொறுக்காது, அங்கு நிற்காமல் அன்னையை அழைத்து கொண்டு வந்து விட்டான் ..

தேவகிக்கு தான் மனதே இல்லை.


சந்திரா ,அன்று ஒரேடியாக தலை முழிகிய சொந்தம் ..


அன்பு மட்டும் அடிக்கடி வந்து சரணையும், சந்திராவையும் பார்த்து விட்டு செல்வான் ..


இது எல்லாம் நினைத்து பார்த்து எனக்கு இங்கயே சரியாய் போகுது டா.
நீயே வந்துட்டு போ.


அத்தைக்கு வயசாகிடுகிச்சு , நீயே அக்கறை இருந்ததுனா வந்து பார்த்துட்டு போ , என்றார் ..


அவர் பழைய விஷயங்கள் நினைத்து, தன்னை சமன் செய்ய முயற்சிக்கிறார் என்று தெரிந்து கொண்ட அன்புவும், வந்த விஷயத்தை கூறினான் ..

அத்தை, நான் இங்க பக்கத்துல தான் வந்துட்டேன், அடிக்கடி நான் வரேன், சரியா .


அவனை கேள்வியாக ஒரு பார்வை பார்த்தார் ..
என்ன என்று அவனிடம் கேட்பது , அவனே சொல்லட்டும் என்று அமைதி காத்தார் ..

அவனும் தொடர்ந்தான் ..

வேறு ஏதும் விஷாகாவின் சில்மிஷங்களை கூறாமல், திருமண தகவலை கூறி அழைப்பு விடுத்தான் ..

பாசம் கொண்ட அண்ணன் மகனின் ஆசையை நிறைவேற்ற ஆசை இருந்தாலும், சுமதி, விஷாகா எல்லோரும் என்ன சொல்வார்களோ, என்று , "நான் கல்யாணத்துக்கு வரேன் பா , அதுவும் உனக்காக மட்டும் தான் ..
என்னை புரிஞ்சிக்கோ அன்பு"


..,
நான் சரண் கிட்ட பேசுறேன் , அவன் சொன்னா நீ வருவே தானே, யாரும் எதுவும் சொல்லாம நான் பார்த்துகிறேன்..


ஒரு வழியாக அத்தையை, சரி கட்டி சம்மதம் பெற்று, பெரிய அத்தை மற்றும் அக்காவின் பூகுந்த வீடு நோக்கி சென்றான் ..

அன்புவின் வருகை தெரிந்தும், அவனை கண்டு கொள்ளாமல், பேப்பர் படித்து கொண்டிருந்தார், நாதன் ..
அன்புவுக்கும் தெரிந்து இருந்தது தான், சிலரை மாற்ற முடியாது ..
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை ..


"ஹே வாடா , பக்கத்துல தான் இருக்கேனு பேரு , வரியா பாரு," அண்ணன் மகனை ஆரவாரத்துடன் அழைத்தார் தேவகி ..


அன்பு நேராக நாதனின் முன் சென்று நின்றான் , அவன் வந்த வேகத்திற்கு, நாதன் தானாக பேப்பரை விட்டு விட்டு, எழுந்து நின்றார் ..


"வணக்கம் மாமா
ஹ்ம் வணக்கம்", என்று கூறி, "அடிக்கிறே மாதிரியே வாரான் பாரு ..
கண்டுக்கலனா விடுரான," மனதில் கருவி கொண்டே அமர்ந்தார் ..
"எல்லாரும் கண்ணால பாப்பாங்க..
இவன் அந்த கண்ணாலேயே ஆளுங்கள பொசிக்கிடுவான்"..


அங்கு நடந்தை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த வினோத், "இவருக்கு இது தேவையா,அப்போவே வணக்கம் சொல்லி இருக்க வேண்டியது தானே" ..

"அவன் மேல அவ்வளவு பயம், உள்ளுக்குள்ள, வெளிய கெத்தா சுத்த வேண்டியது ," என்று தனுக்குள்ளே சிரித்துக்கொண்டு, அன்புவை வரவேற்றான் ..

அங்கு, நேராக வந்த விஷயத்தை , கூறி பெண் பார்ப்பதற்கு அனைவரையும் அழைத்தான் ..

அப்பொழுது தான் கீழே புறப்பட்டு வந்த விஷாகா , "மாமா , கிட்ட தட்ட கல்யாணம், முடிவானது தான், வெறும் கண் தொடைப்புக்கு நம்மள அழைக்க வந்து இருக்கான்" ..
இவள் பேச்சை யார் கேட்பாரோ அவரிடம் கூறினாள் ..

அவனின் முகத்தில் எதையும் கண்டு பிடிக்க முடியாமல்,வினோத் குழம்பி கொண்டான்..

"இவங்களுக்குள்ள சண்டையா இருக்குமோ, இவன் ஏதாவது லவ் பண்ணான, விஷாக்கு பிடிக்கலையா," என்று மெதுவாக தேவகி மகனிடம் கேட்டார் ..

"பெண் கொடுத்து இருக்க வீட்டுல, நீயே எல்லாம், பேசிட்டு வந்து, எங்களுக்கு சொல்லுவியா , அதுலயம், உன் அக்காக்கு புகுந்த வீடு வேற , இப்படி மரியாதை இல்லாத அழைப்புக்கு எல்லாம் எங்களால் வர முடியாது," நாதன் அவனிடம் கூறியதற்கு, எந்த முகம் மாற்றமும் இல்லாமல் , அமைதியாக இருந்தான் ..

"மாமா , இவன் கிட்ட என்ன பேச்சு , விடுங்க, இங்கயே நின்னுட்டு போகட்டும்" ..

"விஷா என்ன பேசுற நீ, அவன் உன் தம்பி, அது என்ன எப்போ பாரு, அன்பு மேல உனக்கு இளக்காரம்" ..


"மதிச்சு அழைக்கிறான் இல்லை, உன்னையும் எங்க அப்பாவையும், அது தான் இவன் தப்பு" ..


"இங்க பாருங்க நீங்க நடுவுல வராதீங்க, எப்போ பாரு சப்போர்ட்" ..
அக்காவாக முன் நின்று தான் வரவில்லை என்றால், என்ன செய்யலாம் என்று பார்க்கவே நினைத்தாள் ..


அவன் அமைதியாக நின்று கொண்டிருப்பது தான் அவளுக்கு கோவமே.
ஏதாவது சண்டை போட்டால் பரவாயில்லை , நீ எல்லாம் எனக்கு ஒரு கணக்கா என்ற தெனாவட்டு விஷாக்கு மேலும் கோவத்தை தூண்டியது ..


அத்தை, அக்கா சொன்னது போல கல்யாணம் முடிவானது மாதிரி தான், நீங்க, அம்மா, சின்னத்தை ,அப்பறம் அதிதி ,வினோத் மாமா அவங்க வீட்டுல வந்து பேசுனா போதும் ..

"அக்கா சொன்னது போல, எல்லாருக்கும் வேலை இருக்கும்".
"பெரிய மாமாவும், அக்காவும் கடை வேலை பார்க்கட்டும் , நம்ம வரை போலாம்"..

"எல்லாரும் கல்யாணத்துல பார்த்துக்கட்டும்," என்று விட்டான்..



"விஷா , என்கிட்டே கெஞ்ச மாட்டானா, இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டான்," என்று ஆத்திரம் கோவம்.
"ரேஷிமியோடு கல்யாணம் முடியாதுனு போனான், வீடும் காலி பண்ணிட்டான் "..


"சாரி கேட்டு கெஞ்சணும்னு அறிவு இல்லாத ஜென்மம்," அன்புவை திட்டி கொண்டிருந்தாள் ..
கணவனின் முன் ஒன்று சொல்ல முடியாத நிலை..

தம்பியை முறைத்து, "மாமா நான் கிளம்புறேன்," என்று கிளப்பி விட்டாள் ..

வீடு எப்படி பார்த்தார்கள், அன்னை தங்கை பற்றிய நல விசாரிப்பு, எதுவுமே இல்லையே, என்று அக்காவை நினைத்து அன்பு வருந்தினான் ..
மச்சான் நீ கவலை படாத , எப்போன்னு சொல்லு, நானும் அம்மாவும் கண்டிப்பா வரும் ..

"ஹ்ம்ம், அவசரப்பட்டு முடியாது என்று கூறி, இப்பொழுது போக முடியாமல் போனதே என்று நொந்து கொண்டு, "மீண்டும் விட்ட இடத்தில இருந்து செய்தியை தொடர்ந்தார் நாதன் ..

அவரை பார்த்து வினோத்தும், தேவகியும் சிரித்து கொண்டனர் ..
ஒரு வழியாக சொந்தங்களை ஒன்று திரட்டி , பெண் பார்க்கும் படலத்திற்கு புறப்பட்டனர் அன்புவின் குடும்பம்..

அங்கு இனியாவின் வீட்டில், வீடு சுத்தம் செய்கிறேன் என்ற பெயரில் வீடு அல்லோல பட்டு கொண்டிருந்தது, இளங்கோவின் அளப்பறையில் ..


 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top