Search results

Advertisement

  1. Rajesh Lingadurai

    எண்ணென்ப ஏனை எழுத்தென்ப - நான்கு

    வரலாறு மற்றும் இலக்கியங்கள் தேடலில், நான்கு என்ற எண் தொடர்பான தகவல்கள் அடங்கிய கட்டுரை இது. நான்கு தொடர்பான தகவல்கள் நிரம்பி வழிவதால், கட்டுரையின் நீளம் கருதி பல தகவல்களை விட்டுவிட வேண்டியதாயிற்று. கட்டுரையைப் படிக்க, கீழ்க்கண்ட இணையதள இணைப்பை அழுத்தவும் எண்ணென்ப ஏனை எழுத்தென்ப – நான்கு
  2. Rajesh Lingadurai

    தமிழை மறந்த தமிழர்களுக்கு ஒரு கடிதம்

    ஒருவர் அல்லது ஒரு குறிப்பிட்ட மக்களின் மீது விமர்சனம் என்ற எண்ணம் வந்துவிட்ட பிறகு அதை நாகரிகமான முறையில் வெளிப்படுத்தி விடுவது சாலச்சிறந்தது என்பது எனது எண்ணம். அந்த விமர்சனங்களைக் கிடப்பில் போட்டால், காலப்போக்கில் விமர்சனங்கள் வெறுப்பாக மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது. அந்த வகையில் தமிழ் நாட்டில்...
  3. Rajesh Lingadurai

    தமிழர்களின் அடிமை வரலாறு - பாகம் 1

    நீர்க்குமிழிகள் நீருக்குள் அதிக நேரம் மறைந்திருக்காது, அதுபோல் மறைக்கப்பட்ட வரலாறுகளும் ஒருநாள் வெளிவந்தே தீரும். ஒடுக்கப்பட்ட, மறைக்கப்பட்ட தமிழர்களின் வரலாறு வெளிவரும் காலம் இது. இந்நேரத்தில், வரலாற்றில் தமிழர்கள் எவ்வாறு வீழ்த்தப்பட்டார்கள், அவர்களின் வரலாறு ஏன் மறைக்கப்படுகிறது என்பதன்...
  4. Rajesh Lingadurai

    வாக்குத் தவறானால்?

    நம் வாக்குத் தவறானால் என்னவாகும்? இலக்கியச் சான்றோடு ஒரு பயணம். கட்டுரையைப் படிக்க கீழ்க்கண்ட இணையதள இணைப்பை அழுத்தவும். வாக்குத் தவறானால்?
  5. Rajesh Lingadurai

    உணர்வுகளின் நுண்ணறிவு (Emotional Intelligence)

    உணர்ச்சிகளின்றி மனிதனில்லை. மனிதன் உணர்ச்சிகளுக்கு அடிமை என்று சொன்னால் கூட பிழையாகாது. தோல்வி, பயம், கவலை போன்ற எதிர்மறை எண்ணங்கள் நம்மை மிக எளிதாக ஆட்கொண்டுவிடுவது ஏன்? அந்த உணர்வுகளின் அடிவேரை ஆராய்வதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம். உணர்வுகளைக் குறித்த ஒரு சிறு எண்ணத்தைப் படிப்பவர் நெஞ்சில்...
  6. Rajesh Lingadurai

    வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு ஓர் வேண்டுகோள்

    தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் தமிழை வளர்க்கும் முயற்சியில் நாங்கள் ஒரு குழுவாக செயல்பட இருக்கிறோம். அதன் துவக்கமாக, சில தரவுகளைத் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம். நீங்கள் வசிக்கும் நாட்டில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகள் எவை? அந்தப் பகுதிகளில் இருக்கும் கல்லூரிகள்...
  7. Rajesh Lingadurai

    தமிழர்களின் ஒற்றுமை

    உலக வரலாற்றில், யூதர்களைப் போல உலகெங்கும் சுற்றித் திரிந்த ஒரு இனமென்று சுட்டிக்காட்ட வேண்டுமானால், அது நிச்சயம் தமிழினமாகத்தான் இருக்கும். உலகில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் ஒரு யூதன் தன்னை யூதனாகவே உணர்கிறான். ஒரு மலையாளி தன்னை மலையாளியாகவே உணர்கிறான். தமிழனுக்கு மட்டும் வந்த சாபம், மொழியால்...
  8. Rajesh Lingadurai

    பதில் சொல்ல முடியாத பாடல்

    இரண்டு நாட்களுக்கு முன்பு தொலைக்காட்சிப்பெட்டியில் "மீசையை முறுக்கு" படத்திலிருந்து "மாட்டிக்கிச்சே மாட்டிக்கிச்சே" என்ற பாடல் ஒலித்தது. அந்த பாடலைக் குறித்து நான் எதிர்கொண்ட கேள்விகள் இவை. எனது மகன் இளமாறன் (5 வயது): அப்பா என்னது மாட்டிக்கிச்சி? எனது மகள் யாழினி (இரண்டரை வயது): அப்பா ஏன்...
  9. Rajesh Lingadurai

    எண்ணென்ப ஏனை எழுத்தென்ப - மூன்று

    எண்ணென்ப ஏனை எழுத்தென்ப என்ற வரிசையில் இது மூன்று தொடர்பான தகவல்களைத் திரட்டித் தரும் கட்டுரை. கட்டுரையின் நீளம் கருதி பல தகவல்களைத் தவிர்த்தேன் என்று சொல்லலாம், ஏனென்றால் மூன்றைக் குறித்து எழுதுவதற்கு அவ்வளவு தகவல்கள் உண்டு, அவற்றில் ஒரு சிறு துளிதான் இந்தக் கட்டுரை. கட்டுரை மீதான விமர்சனங்களை...
  10. Rajesh Lingadurai

    சம்பிரதாயங்களும் சினிமாப் பாடல்களும்

    நல்ல நாட்கள், கெட்ட நாட்கள் என்று அனைத்துக்குமே நாம் சில சடங்குகள், சம்பிரதாயங்களைப் பின்பற்றுவோம். அந்த சடங்குகள் வரிசையில் காலப்போக்கில் பல புதிய பழக்கங்கள் இணைந்துகொள்வது இயல்பு. அந்த வகையில் திருமணம், கோவில் திருவிழாக்கள் போன்றவற்றில், சில குறிப்பிட்ட திரைப்படப் பாடல்கள் இடம்பெறுவதுண்டு...
  11. Rajesh Lingadurai

    எண்ணென்ப ஏனை எழுத்தென்ப - இரண்டு

    எண்ணென்ப ஏனை எழுத்தென்ப என்ற வரிசையில் இது இரண்டாம் பதிவு, எண் இரண்டைப் பற்றிய பதிவு. வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்ற சொற்களைப் போல், எங்கெல்லாம் இரண்டு தொடர்பான தகவல்கள் கிடைக்கிறதோ, அவற்றையெல்லாம் திரட்டித்தரும் முயற்சிதான் இந்த கட்டுரை. கட்டுரை மீதான விமர்சனங்களை வரவேற்கிறேன். கட்டுரையைப்...
  12. Rajesh Lingadurai

    தூத்துக்குடிக்காரன் காதல் கவிதை

    தூத்துக்குடியில் பிறந்த ஒருவன் காதல் கவிதை எழுதினால் எப்படியிருக்கும் இருக்கும் என்ற கற்பனைதான் இந்த கவிதை. தூத்துக்குடியில் புழக்கத்தில் இருக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்தி எழுதப்பட்ட கவிதை. தூத்துக்குடி, திருநெல்வேலி தவிர பிற ஊரைச் சேர்ந்தவர்களுக்கு சில வார்த்தைகள் சற்று கடினமாக இருக்குமென்று...
  13. Rajesh Lingadurai

    எண்ணென்ப ஏனை எழுத்தென்ப – ஒன்று

    கணக்குகளிலிருந்துதான் தமிழ் பிறந்ததென்று சொல்வார்கள். அதனாலேயே தமிழ் மொழி, தமிழ் நெடுங்கணக்கு என்று அழைக்கப்படுகிறது. எண்களுக்கும், அது தொடர்பான வார்த்தைகளுக்கும் இடையில் மறைந்து கிடைக்கும் சில தகவல்களைக் திரட்டும் புதுவிதமான முயற்சி இது. அந்த வகையில், எண் ஒன்றுக்கும், அது தொடர்பான...
  14. Rajesh Lingadurai

    பழமொழிகளும் அதன் உண்மை அர்த்தங்களும்

    பழமொழி என்பது ஒரு கலாச்சாரத்தின் வாசல் என்று சொல்லலாம். பழமொழிகள் ஒரு சமூகத்தின் வாழ்வியலை படமெடுத்துக்காட்டும் கண்ணாடிகள். பழமொழிகளையும் அதன் அர்த்தங்களையும் சரியாகப் புரிந்து கொள்வது நம் கடமை. நாம் எப்போதும் கேட்கும் சில பழமொழிகளும், அவற்றின் உண்மை அர்த்தங்களும் அடங்கிய தொகுப்பு இது. சிலருக்கு...
  15. Rajesh Lingadurai

    யார் கடவுள்?

    கடவுள் என்ற வார்த்தை ஆன்மீகம் சார்ந்தது. ஆனால் யார் கடவுள்? என்ற கேள்வி எழும்போது அந்த ஆன்மீகத்துக்குள் அறிவியல் நுழைந்து விடுகிறது. அறிவியல் சிந்தனை வளர்கிறதென்றால் அங்கு ஆனமீகத்தின் தேவை குறைகிறது என்று அர்த்தம். ஆன்மீகம் கட்டிக்காத்த பல சூட்சும முடிச்சுகளை அவிழ்ப்பதற்கு அறிவியல்...
  16. Rajesh Lingadurai

    முப்பாட்டன் வள்ளுவனின் கருத்தியல் தொகுப்பு

    நீச்சல் தெரியவேண்டுமென்றால் குளத்துக்குள் குதித்துதான் ஆகவேண்டும். அதேபோல், வள்ளுவரைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், குறள் என்ற கடலுக்குள் குதித்து விட வேண்டும். நம் தமிழ் இனம் உலகுக்குத் தந்த மிகப்பெரும் கொடை நமது முப்பாட்டன் வள்ளுவப் பெருந்தகை. அந்த வள்ளுவன் நமக்கு அளித்த வற்றாதக் கொடை...
  17. Rajesh Lingadurai

    ஓர் இனத்தின் அடையாளம்

    மனிதர்களை நிறம், குணம், நாடு என்று ஆயிரம் காரணிகளைக் கொண்டு பகுத்தாலும், நம்மை விலங்குகளிடமிருந்து எது முதலில் பிரித்துக் காட்டியதோ, அதுதான் நம் முழுமுதல் அடையாளமாக இருக்க முடியும். எதை இழந்து விட்டால் நாம் மீண்டும் விலங்குகள் போல மாறி விடுவோமோ அந்த ஒற்றை அடையாளம்தான் ஓர் இனத்தின் ஒட்டுமொத்த...
  18. Rajesh Lingadurai

    தண்ணீருக்குள் கரைந்திருக்கும் அரசியல்

    சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, நாம் பிற்காலத்தில் தண்ணீரை விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கும் என்று சொன்னால் மக்கள் சிரித்திருப்பார்கள். இத்தனைக்கும் நம்மை விட கொடூரமான தண்ணீர் பஞ்சத்தை எல்லாம் பார்த்த தலைமுறை அது. ஆனால் இன்று விலையில்லாத தண்ணீர் என்பது கனவு. நாளை என்னவாகும். நாம்...
  19. Rajesh Lingadurai

    தாவாங்கட்டையைத் தொங்க விடும் தகவல்கள்

    நாம் அறிந்திராத சில தகவல்களை முதன்முறை அறிந்துகொள்ள நேரும்போது, மயிர்க்கூச்செறிதல், தாடை நம்மையறியாமல் கீழிறங்குதல் போன்றவை நாம் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தோம் என்பதற்கான அறிகுறிகள். அப்படி சில தகவல்களின் தொகுப்புதான் இந்த கட்டுரை. சிலருக்கு மேற்சொன்ன ஆச்சர்யத்தின் அறிகுறிகள் தென்படலாம், ஒருசிலர்...
  20. Rajesh Lingadurai

    இந்து மதமும் தமிழர் சமயமும்

    இந்தியாவில் சரித்திர காலத்துக்கும் முன்பிருந்தே பரவிக்கிடந்தது தமிழர்கள் உருவாக்கிய சைவ சமயம்தான். சைவ சமயம் கூறும் கடவுள் என்பது என்ன? அதுவும் இந்து மதம் கூறும் கடவுளும் ஒன்றா? சைவ சமயம் எப்படி இந்து மதத்தால் ஆட்கொள்ளப்பட்டது? இந்த கேள்விகளுக்கான விடைதான் இந்தக் கட்டுரை. கட்டுரையைப் படிக்க...

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top