கொலுசொலி 4

Advertisement

achuma

Well-Known Member
அருண் அவனின் விருப்பத்தை கூறியதும் வீட்டினருக்கு மகிழச்சியே, பிரியாவை தவிர்த்து.
அருணிற்க்கு ஏற்றது போல் பார்க்க வேண்டும், எங்கு இருப்பாளோ, எப்படி பார்க்க வேண்டும், என்று எப்படி எல்லாமோ கற்பனை செய்து வைத்திருந்தனர்.

ஆனால் அவனின் நெருங்கிய உறவுகளிலே, அதிலும் பிரியாவின் தங்கையே என்றதும், யாரும் யோசிக்க கூட நேரம் எடுக்கவில்லை .
உடனே அவள் தான் இந்த வீட்டின் இரண்டாவது மருமகள் என்று முடிவு செய்து விட்டனர்.


உடனே பிரியாவிடம் அவள் வீட்டினரிடம் பேச சொல்லுமாறு, அப்பொழுது தான் அவள் முகத்தை பார்த்தனர்.
அதில் மருந்துக்கும் புன்னகை இல்லை அவள் முகத்தினில் .
"என்ன ரியா, நீ எதுவும் சொல்லவே இல்லை."
"இப்படி அமைதியா இருந்தா நாங்க எப்படின்னு எடுத்துக்குறது" விக்ரம் தான் அவளிடம் கேட்டான்.


மனைவியின் தங்கையே, வருவதில் அவள் இன்னும் மகிழ்வாள் என்று நினைத்தால், அவளின் புன்னகை இழந்த முகம் விக்ரமிற்கு, குழப்பத்தையே கொடுத்தது."

அவள் என்னவென்று கூறுவாள், அவளின் அன்னை, காமாட்சிக்கு, அருண் மீது எப்பொழுதும் நல்ல எண்ணம் உருவானது இல்லை.
அருண் பொறுப்பற்றவன், குடி பழக்கம் உள்ளவன், அவன் விருப்பம் போல் சுற்றுபவன் என்று அவன் மீது ஒரு எண்ணம், உண்டு அவளின் அன்னைக்கு .
பல முறை, அருணை பற்றியும் புலம்புவார், அனைத்து பொறுப்புகளும் விக்ரமே செய்கிறான் என்று அவளிடமே கூறி இருக்கிறார்.

பிரியா அவள் அன்னையை அந்நேரங்களில் அடக்கி இருக்கிறாள் .
அதனை புகுந்த வீட்டில் சொல்லவா முடியும்.
கண்டிப்பாக இவ்விஷயத்தை வீட்டினில் கொண்டு செல்ல முடியாது, என்று நினைத்து கொண்டாள் .


கணவன் கேட்டும் வாயே திறக்கவில்லை.
"பதில் சொல்லு ரியா, எங்க எல்லாருக்கும் எவ்வளவு சந்தோஷம் தெரியுமா, கவி அருணுக்கு பொருத்தமா இருப்பா."
"உன் தங்கச்சி தான் உன் கூடயே இருக்க போறா, நீ என்ன மா எந்த ரியாக்ஷனும் இல்லாம அமைதியா இருக்க ."
"உன் மனசுல இருக்குறது என்னனு சொல்லு."
"இல்லங்க, நாம அருணுக்கு வெளிய பார்க்கலாமே," ஒரு வழியாக கூறி விட்டாள் .


நெற்றியை சுருக்கி மனைவியை பார்த்தான்.
"உன் மனசுல என்ன ஓடுது அது சொல்லு முதல்ல."
அவளால் என்ன கூற முடியும், அவள் மனதில் பல எண்ணங்கள், அலைமோத அப்படியே அமைதியாக இருந்தாள்.
அதில் விக்ரமிற்கு கோவம் வந்து விட்டது.
"என்ன யோசிக்கிற, உன் தங்கச்சி அருணுக்கு கல்யாணம் செய்றதுல உனக்கு என்ன பிரச்னை" இம்முறை கொஞ்சம் கோவமாகவே கேட்டான்.


"இருப்பா ஏன் அவசர படுற விக்ரம், கொஞ்சம் பொறுமையா கேளு," ரங்கநாதன் தான் தடுத்தார் மகனை.
"என்ன மா சொல்லு, பிரியா, உன்னை போலவே உன் தங்கையும் எங்களுக்கு ரொம்ப பிடிக்கும், உன்னை பார்த்துக்குறது போலவே நல்லா பார்த்துப்போம்."
"அருண் பெருசா எதுவும் ஆசை பட்டது இல்ல மா, அவனுக்கு பிடிச்ச படிப்பு கூட பாதிலேயே விட்டுட்டான்."


"அவனுக்கு நம்ம காவ்யா சரியான ஜோடி."
"நீ சம்மதம் சொல்லு மா, நீ சரின்னு சொன்னா தானே உங்க வீட்டுலயும் பேசுவாங்க."
"அருண் உண்மையா இனி சந்தோஷமா இருப்பான்" என்று மருமகளின் கை பிடித்து, ரமா பேசி கொண்டிருந்தார்.
வீட்டில் அன்னை தந்தை என்று அனைவரும் கெஞ்சியும் அவள் அமைதியாக இருப்பது, விக்ரமிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
யார் யாரோ தம்பியின் திருமணத்திற்கு, தடையாக இருக்கிறார்கள் என்று நினைத்தால், தன் மனைவியே என்று தம்பி பக்கம் மட்டுமே யோசித்து மனைவி மீது கோவம் கொண்டான், விக்ரம்.


முதல் முறையாக மனைவி மீது ஒரு கோவம், கோவம் என்பதை விட வருத்தம்.
"இங்க பாரு, நீயே உன் வீட்டுல பேசுனா, நல்லதுன்னு தான் நான் யோசிச்சு, உன்ன பேச சொல்றேன்."
"உன்னை மீறி நாங்களே உன் அப்பா அம்மாக்கு பேசுனா, அது உனக்கு மரியாதையா இருக்காது."
"முதல்ல நீ வீட்டுல பேசிட்டு சொல்லு, அப்பறம் நாங்க மேற்கொண்டு பேசலாம் என்று கூறினான்."
அப்பொழுதும் அவளின் அமைதி, அவனிற்கு கோவத்தை மேலும் கிளப்ப தன்னை இழந்து வார்த்தை விட, ஆரம்பித்தான்.

"என் தம்பி ஒன்னு கேட்டு அது இந்த வீட்டு கிடைக்ம போச்சுன்னா, நான் அண்ணனா இருந்து என்ன பிரயோஜனம் ."
"இந்த வீட்டுல உனக்கு என்ன குறை ரியா, நல்லா தானே இருக்க, நீயே உன் தங்கச்சிய கொடுக்க யோசிச்சா, எப்படி."
"இல்லை, உனக்கே கவி எங்க அருணுக்கு கல்யாணம் செய்து தரதுல விருப்பமில்லையா," என்றான்.


"நீயே அவனுக்கு சப்போர்ட் பண்ணாம, தடையா இருப்பேன் நான் நினைக்கவேயில்லை, அப்போ உனக்கும் அந்த ஷினிக்கும் என்ன வித்யாசம்," என்று கோவத்தில் சீறினான்.
பெற்றோர் தடுத்தனர், பிறகே என்னவெல்லாம் பேசிவிட்டோம் என்று தன்னையே நொந்து கொண்டு, மனைவியின் வலி சுமந்த முகத்தை பார்த்தான்.


"டேய், என்ன பேசுறோம்ன்னு யோசிக்க மாட்டியா, நம்ம ப்ரியாவா அப்படி," என்று ரமா மகனை திட்டினார்.
வருத்தம் கொண்ட விக்ரம், மனைவியின் முகத்தை பார்க்க மிகவும் தயங்கி, அவளிடம் மன்னிப்பு கேட்க நினைத்தான்.


அவனுக்கு தெரியாதா, அவன் மனைவி பற்றி, என்று தன்னையே நொந்து கொண்டு ,"சாரி, ரியா நா," என்று அவனை முழுதும் முடிக்க விடாமல்,
"நிறைய பேசிட்டீங்க, இனியும் வேண்டாங்க," என்று தழுதழுத்த குரலில் கூறி,
"அத்தை, நான் வீட்டுல பேசிட்டு சொல்றேன், நான் அப்பா அம்மா கிட்ட பேசுனாலும், அண்ணா தான் அங்க எல்லாம்."
"அவர் முடிவு சொல்லாம, அப்பா அம்மா கூட அங்க எதுவும் செய்ய முடியாது."


"நான் வீட்டுல பேசுறேன் மாமா."
"நம்ம வீட்டுல, நடக்குற, கல்யாண விஷயம், நமக்குள்ள, இந்த வருத்தம் வேணாமே," என்று அவளும் தேற்றி கொண்டு, குற்ற உணர்வோடு, நிற்கும் மாமியார் மாமனாரையும் தேற்றி, அவர்களை அறைக்கு அழைத்து சென்றாள் .


விக்ரம் தான், "ச்சே என்ன எல்லாம் பேசிட்டேன்," என்று தன்னையே சாடி கொண்டிருந்தான்.
சென்னையில் உள்ள அன்னை வீட்டிற்கு சென்று வருமாறு கூறினால் கூட, மாமியார், மாமனாரை விட்டு, எப்படி செல்வது, வீட்டினருக்கு, உணவுக்கு என்ன செய்வது, என்று பலதும் இக்குடும்பத்திற்க்கு என்று யோசித்து, அவளின் விருப்பத்தை எல்லாம் மறைத்து, இக்குடும்பத்திற்காகவே, வாழ்ந்து கொண்டிருக்கும் மனைவியை பேசி விட்டோமே என்று வருந்தினான்.


இவனின் வேலையில் குடும்பத்தை மனைவி இன்றி யார் சிறப்பாக கொண்டு செல்ல முடியும்.
அவள் தானே, தன் பெற்றோரை பார்த்து கொண்டிருக்கிறது.
அவள் மட்டும் இல்லையென்றால், தன் வாழ்வு என்னாகி இருக்கும், என்று வேலைக்கு செல்லும் வழியில் யோசித்துக்கொண்டே, வந்தான்.
கண்டிப்பா, என் மேல கோவப்பட மாட்டா, அதையும் வேலைக்கு போயிட்டு வரவன்கிட்ட, நம்ம அனுசரணையை நடந்துக்கணும்ன்னு, அவள் சோகத்தை எல்லாம் மறைப்பா."


"டேய் லூசு, உன் பொண்டாட்டியை போய் என்ன எல்லாம் பேசிட்டே, உனக்கு அறிவே இல்லை டா," அவனுக்கு அவனே புலம்பினான்.
இங்கு வீட்டினில் பெரியவர்களுக்கு, உணவு எடுத்து கொண்டு அறைக்கு சென்றாள் பிரியா .
அவள் முகம் எப்பவும் போல் தான் சாதாரணாமாக இருந்தது.
அனால் அவள் மனதில் இருக்கும் எரிமலை யாருக்கும் தெரியாது.


"பிரியா மா, அவன் ஏதோ பேசிட்டான் மா, நீ மனசுல வெச்சிக்காத டா ,"என்று மாமியாரும்,
"எங்க வீட்டு மகாலக்ஷ்மி மா, நீ வருத்தப்படாத மா, தம்பி மேல உள்ள பாசத்துல உணர்ச்சிவச பட்டுட்டான் ," என்று மாமனாரும் அவளை தேற்றினர் .
அவர்களுக்கு புன்னகையே பதிலாக கொடுத்த பிரியா, "அத்தை கல்யாண விஷயம் பேசுறோம், எதுக்கும், நான் நேரா அம்மா வீட்டுக்கே போய் பேசிட்டு வரேன்னே ."
"எதுக்கும் நேருல பேசுறது போல இருக்காதுல்ல."


"இப்போ, மூணு மணிக்கு மேல ஒரு பிளைட் இருக்கு, நான் அதுல போயிட்டு, என்ன தகவல்ன்னு கேட்டுகிட்டு, நாளை மறுநாள், காலையில இங்க வரேன்னே ."


இதுவரை கேட்டதில்லை, இப்பொழுது அவளே சென்று வருகிறேன் என்று கூறினால், அவள் மனது எந்த அளவிற்கு வேதனை பட்டிருக்கும் என்று ஒரு பெண்ணாக புரிந்து கொண்டார் ரமா .
"சரி மா, போய்ட்டு வா ." என்று பெரியவர்கள் இருவரும் அனுப்பி வைத்தனர்.
பள்ளியில் இருந்து குழந்தைகளையும் அழைத்து கொண்டு, அவளே பயண நிறுவனத்திற்கு அழைத்து அவளுக்கும் குழந்தைகளுக்கும், டிக்கெட் பதிவு செய்து, புறப்பட்டு விட்டாள் .
கணவருக்கும் கூறவில்லை.


கிளம்புவதற்கு முன், அவள் அன்னைக்கு அழைத்து மாலை போல், வீட்டிற்கு வருவதாக தகவல் கூறினாள்
இங்கு ரமா தான் புலம்பி கொண்டிருந்தார்.
"அந்த பொண்ணுக்கு மூஞ்சே சரியில்லை."
"எல்லா ஆம்பளைகளும் இப்படி தான், என்ன தான் பொண்டாட்டியா நல்லா பார்த்துக்கிட்டாலும், அவங்க வீட்டு விஷயம்ன்னு வரும் போது, பொண்டாட்டிய விட்டு கொடுத்துறது."


"அவ ப்பன்னாலும் வேற வீட்டு பொண்ணு தானே அப்படிங்குற எண்ணம், இந்த புருஷனுகளுக்கு இருக்கும்."
"பாவம் இந்த பொண்ணுக என்ன செய்றது," என்று அவரும் உலகத்தில் உள்ள எல்லா ஆண்களையும் சேர்த்து, பழித்தார்.


"இப்போ, நீ ஏன் கத்திகிட்டே இருக்க, சண்டை போட்ட அவனே வேலைக்கு போய்ட்டான், மருமகளும் அடுத்த கல்யாண பேச்சிற்கு, தாவிட்டா , நீ இப்போ எல்லாரையும் சேர்த்து திட்டிகிட்டு இருக்க, ரமா,"என்று அப்பாவியாக கேட்டு அவரும் நன்றாக மனைவியிடம் வாங்கி கட்டி கொண்டார்.

"நீங்க ன் பேச மாடீங்க, உங்க தங்கச்சின்னு சொல்லிக்கிட்டு, இங்க வராளே, அவள எனக்கும் தான் பிடிக்காத, அவ நம்ம வீட்டுக்கு கல்யாணம் பற்றி பேசும் போதே, முடியாதுன்னு, தெளிவா உங்க மறுப்ப சொல்ல முடிஞ்சிதா."
"அவளால வந்த வினை தான் இவ்வளவும்."

"அவ வந்தா, உங்க சொந்தம் ஒன்னு இங்க இருக்குன்னு, அப்படி குதிப்பீங்க, என்று நாத்தனார் மீது இருந்த இத்தனை வருட, கோவத்தையும் கொட்டி தீர்த்தார்.


அதற்குள், இரண்டு மணி நேர விமான பயணத்திற்கு பிறகு, அங்கிருந்து கேப் புக் செய்து, புதூரில் உள்ள அவள் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள் .
வாசலில் வண்டியின் ஒலி கேட்டதும், வாசல் வரை சென்று அழைத்து வந்தார் காமாட்சி.
அதற்குள், லேசான மழையில் மாலை பொழுதே இரவு போல் இருந்தது.
"வா டி , நீ வரது அதிசயம்ன்னு தான், மழை கூட வருது போல," என்று கூறி கொண்டே,
அவள் சுமந்து வந்த தோள் பையை வாங்கி கொண்டு அறையில் சென்று வைத்தார்.
"வாங்க என் கண்ணுகளா," என்று இரண்டு பேரனுக்கும் முத்தம் வைத்து, அவர்களை அருகில் அமர வைத்து கொண்டார்.
பிரியா அனைத்தும் புன்னகையுடன் பார்த்து அமர்ந்தாள் .


"என்ன பிரியா, சாப்பிடுற, டீ போடட்டா, மணி இப்போ தான் ஆறு ஆகுது."
"பசங்க வருவாங்கன்னு, மாவு மட்டும் பெசஞ்சி வெச்சேன்."
"இரு சூடா பஜ்ஜி போட்டு எடுக்கிட்டு வரேன், சாவகாசமா பேசலாம்."
அவருக்கு வராத மகள் வந்த சந்தோஷம், என்ன செய்வது என்று புரியவில்லை.
அவர் பஜ்ஜி போட்டு வருவதற்குள், நாம் ப்ரியாவின் பிறந்த வீட்டினரை பற்றி கொஞ்சம் பார்க்கலாம்.


ப்ரியாவின் அன்னை, காமாட்சி, தந்தை புண்ணியகோடி.
பெயருக்கு ஏற்றது போல், நம்மிடம் இருப்பதை மற்றவர்களுக்கு கொடுக்கும் எண்ணம் உடையவர்.
சிறந்த உழைப்பாளி .
அவர் உடன் பிறந்த இரண்டு அண்ணங்கள் அந்த அளவிற்கு பொறுப்பானவர்கள் இல்லை.
காமாட்சியை, காதலித்து கை பிடித்த பிறகு, புண்ணியகோடியின் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரை ஒதுக்கி வைத்தனர்.


காதல் தம்பதியினர், நன்றாகவே அவர்கள் காலத்தை கழித்தனர்.
முதலில் கோயம்பேடு மார்க்கெட்டில், உள்ள ஒரு காய்கறி கடையில் வேலை செய்து, பிறகு, அவரே அங்கு சொந்தமாக ஒரு கடை வைக்கும் அளவிற்கு, உழைத்தார்.
காமாட்சியும், அவருக்கு ஏற்ற மனைவியாக, பணத்தை வீணாக செலவு செய்யாமல், சிக்கனமாக வாழ்ந்து சிறுக சிறுக பணம் சேர்த்து, புதூரில் ஒரு இடம் வாங்கி, கட்டினர்.
அந்த வீடு வந்த நேரம், அவர்களுக்கு வாரிசாக, முதலில் வந்து பிறந்தான், கார்த்திக்.
அடுத்த இரண்டு வருடத்தில் பிறந்தவள் தான் பிரியா .
பிள்ளைகளின் வளர்ச்சி போலவே, அவர்களின் வருமானமும் பெருகியது.
பிறகு, மேலும் பணம் சேரவே, அருகிலே உள்ள இடமும் வாங்கி, இரண்டு ஒட்டு வீடு கட்டினர் .
இரண்டு வீட்டையும் வாடகை விட்டு, அதில் வந்த வருமானத்தை, குழந்தைகளுக்கு சேர்த்தனர்.
நாட்கள் இப்படியே சென்று இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்.


வசதி பெருக, பெருக, காமாட்சியின் கணவருக்கு, குடி பழக்கமும் அதிகமாகிற்று.
விளைவு, தங்களை விட இளையவனான, தங்களின் தம்பியின் முன்னேற்றம் பொறுக்காத அண்ணன்கள், அவரை வீழ்த்த சந்தர்ப்பம் பார்த்து இருந்தனர்.
அதில் முதலில் அவர்களுடன் உறவாடி கெடுக்க முயற்சி செய்தனர்.
முதலில் அவர்கள் வீட்டிற்கு சென்று, அவர்களுடன், நன்றாக பழக ஆரம்பித்தனர்.
அந்நேரம் தான் காமாட்சி மூன்றாவது கருவுற்றார்.
கார்த்திக், பிரியா இவர்களை விட, இளையவள் தான் நம் காவ்யா .
கார்த்திக் விட எட்டு வருடமும், ப்ரியாவை விட ஆறு வருடமும் இளையவள் .
காமாட்சி முதலில் யார் வந்தாலும், அவர்களிடம் இன்முகமாக பழகுபவராக தான் இருந்தார்.
வந்தவர்களை உபசரித்து, அனைவரிடமும் இன்முகமாக பேச கூடியவர்.
அது அவர்களுக்கு மேலும் வசதியாக போனது.
இப்படி அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்று கொண்டிருந்ததில், குடும்ப பொருளாதாரம் வரை அனைத்தும் கரைத்து குடித்து இருந்தனர்.


ஒரு நாள், புண்ணியகோடிக்கு, அதிகம் குடிக்க வைத்து, அவரிடம் வீட்டு பத்திரத்தை அவர்கள் பெயருக்கு ஏமாற்றி வாங்கி கொண்டனர்.
கெட்ட காலத்திலும் ஒரு நல்லதாக, அவர் முதலில் கட்டிய வீடு, மனைவி பெயரில் இருந்தது.
எப்படியோ, காமாட்சி போராடி, ஒரு வழியாக, அந்த வீட்டை, அவரின் பெயரில் இருப்பதை காட்டி, அங்கு தங்கி விட்டார்.
இல்லை என்றால், அவர்கள் பாடு திண்டாட்டம் தான்.


அன்றில் இருந்து, காமாட்சியின் செயல் எண்ணம், எல்லாம் வேறு மாதிரி தான்.
அவருள் எப்பொழுதும் ஒரு இறுக்கம் இருக்கும்.
காலம் தான் ஒரு மனிதனை மாற்றுவது என்பது எத்தனை உண்மை.
அங்கு பக்கத்தில் உள்ள இரண்டு வீட்டிலும் புண்ணியகோடியின் இரண்டு அண்ணன் குடும்பம் வந்து சேர்ந்தது.
இவர்கள் முன்பு இன்னும் நன்றாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற எண்ணமே காமாட்சி பிள்ளைகளை மிகவும் கண்டிப்பாக வளர்த்தார்.
அவரின் பாசம் கூட, வெளியே தெரியாது.
தான் பெரிதும் தோற்ற உணர்வு, புண்ணியகோடிக்கு.


அதிலும் பக்கத்திலேயே, அவரின் அண்ணன் குடும்பம், இருப்பதில், காலத்திற்கும் அழியா வடுவாக மாறியது.
குடிக்கு இன்னும் அடிமையானார்.
இதில் அவரின் தொழில் முடங்கியது.
காமாட்சிக்கு எந்த அளவிற்கு, இவர்கள் முன் வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற என்னமோ, அதற்கு நேர்மாறாக, புண்ணியகோடி, தான் ஏமாற்றப்பட்டதில் துவண்டு போனார்.
பிள்ளைகளை, அரசு பல்லயில் சேர்த்து, வீட்டு வேளைக்கு சென்று, என்று காலம் எப்படியோ சென்றது.


கார்த்திக், அவனின் பள்ளி படிப்பை முடித்ததும், அன்னையை வீட்டில் இருக்க வைத்தான்.
இனி தான் குடும்பத்தை பார்த்து கொளவதாகவும், அன்னை இனி வேலைக்கு செல்ல வேண்டாம், என்று அன்னைக்கு ஓய்வு கொடுத்த, பொறுப்பான மகன்.


அவன் ஒரு தொழிற்சாலையில் வேலையில் சேர்ந்தான்.
சொற்ப வருமானவே, இரண்டு பிரிவாக அந்த வேலையில் சேர்ந்து, குடும்ப செலவிற்கு ஒரு தொகை, என்றும், தங்கைகளுக்கு ஒரு தொகை என்றும், சேர்த்தான்.
பிறகு தந்தை தெளிவாக இருக்கும் நேரம், அவருக்கு, அறிவுரை கூறினான்.
மகன் புத்தி சொல்லி இனி இப்படியே சுற்றினால், நன்றாகவா இருக்கும் என்று நினைத்த, புண்ணியகோடி, அதன் பிறகு, கிடைக்கும் சிறு சிறு வேலைக்கு சென்றார்.
ஆனாலும், குடியை விடவில்லை.
இன்னும் அவர்கள் அதே ஓட்டு வீட்டில் தான் இருக்கின்றனர்.
பக்கத்தில் இருக்கும் இரு அண்ணன்கள் வீடு, காலத்திற்கு ஏற்ப, பிள்ளைகளின் தலையீட்டால், இரண்டு அடுக்கு மாடியாக இப்பொழுது இருக்கிறது.
இன்னும் அக்குடும்பத்துடன் பேச்சு வார்த்தையில்லை.
எப்பொழுதும் அவர்களை பார்த்தல், காமாட்சியின் வாய், தன்னால் சபிக்க ஆரம்பித்து விடும்.


பிரியா பள்ளி படிப்பு முடிந்ததும், அவளுக்கு பெரிதும் படிப்பில் ஆர்வமில்லாத காரணத்தால் , வீட்டிலேயே இருந்து கொண்டாள் .
அந்நேரம் வந்த சம்மந்தம் தான் விக்ரம் வீட்டில் இருந்து.
சரி மேற்கொண்டு, படிக்கவும் விருப்பமில்லை, அதற்கு வீட்டினில் வேண்டாம் நல்ல சம்மந்தம், என்று முடிவு செய்த, காமாட்சி, பிரியாவிற்கு, திருமணம் செய்து வைத்தார்.
மும்பை, நகரம், அதிலும் வசதியான இடம், விசாரித்ததில் நல்லவர்களே என்ற தகவல் வேறு என்றதும், காமாட்சிக்கு பெருமை தான், மகளை நல்ல இடத்தில கொடுத்ததில்.
அதுவும் அவர்கள் எதிரி முன்பு பார் என் மகளின் நல் வாழ்வை, என்று கர்வாமாகவே நினைத்தார்.
ஏன் என்றால், அந்த அளவிற்கு, பிரியா அங்கு நன்றாக இருக்கிறாள் .


ஏன், அவர்கள் அண்ணன் வீட்டினருக்கும் பொறாமை தான்.
அந்த பழி வெறுப்பு, அப்படியே தலைமுறை தலை முறையாக தொடர்கிறது.
காமாட்சியின் பிள்ளைகள் மூவர் மட்டுமே அவர்களை கண்டு கொள்ள மாட்டார்கள்.
அந்த வீட்டில் இருபவர்கள், இவர்களின் படிப்பு, வேலை என்று அதிலே தான் அவர்களின் சிந்தனை.


இப்பொழுது முதல் மகளுக்கு நல்ல இடத்தில திருமணம் அதில் கோவம் தான் அவர்களுக்கு.
அவளும் இங்கு சாயம் போன உடையில் சுற்றி கொண்டு வந்தவள், திருமணம் முடிந்து மருவீட்டிற்கு வந்த நேரம், பட்டும் நகையும் என்று வந்ததில், இவர்களின் வயிறு எரிந்தது தான் மிச்சம்.

அடுத்து காவியாவிற்கு எப்படி என்று தான் எதிர்பார்க்கின்றனர்.

காவியாவிற்கு படிப்பில் மிகவும் ஆர்வம்.
பள்ளி படிப்பு முடிந்ததும் காமாட்சி போதும் என்று கூறியதற்கு இப்பொழுது வீட்டிற்கு ஆலமரமகா நிற்கும் அண்ணன் கார்த்திக், தான் படிக்க வைப்பதாக கூறினான்.
தங்கை பி.காம் முடித்ததும், வேலைக்கு செல்வததற்கு, காமாட்சி அனுமதிக்கவில்லை.
அவருக்கு சொந்தங்களின் நடுவில் மகளுக்கு எந்த கெட்ட பெயரும் வர கூடாது என்பதில் தெளிவாக இருந்தார்.


மகள் மீது நம்பிக்கை என்றாலும், காதல் என்று எந்த பெயரிலும் மகள் சிக்க கூடாது என்று தெளிவாக இருந்தார்.
அவருக்கு பட்ட அடி என்று மகனும் உணர்ந்து, அன்னை தங்கை இருவருக்கும் வருத்தம் ஏற்பாடாதவாறு, அருகில் உள்ள ஜெராக்ஸ் கடையில் வேலைக்கு அனுப்பி வைத்தான்.
அது கார்த்திக் தெரிந்தவர் என்பதாலும், பல வருடம் அந்த பகுதியில் உள்ள கடை என்பாதாலும் அனுப்பி வைத்தான்.
காவ்யா வர தாமதமானால், காமாட்சியே போய் பார்த்து விட்டு வரும் தூரம் தான்.


தங்கையும் அவளுக்கு கொடுத்திருக்கும் சுதந்திரத்தை விருப்பத்துடன் ஏற்ற கொண்டு, வேலைக்கு சென்று வந்தாள் .
மிகவும் அடக்கம், பிரியா அளவிற்கு கூட காவ்யா பேச மாட்டாள் .
அமைதி, அவளை பார்ப்போர் அனைவரும், பூமா தேவிக்கு நிகர் என்பர்.
குரல் கூட அதிகம் ஒலிக்காது.
காமாட்சியின் வளர்ப்பு அப்படி.


அதற்குள் பஜ்ஜி, போட்டு கொண்டு காமாட்சி எடுத்து வந்து மகளின் முன் ஒரு தட்டில் வைத்து கொடுத்தார்.
இந்த மழைக்கு, சூடான, பஜ்ஜியுடன் டீயும் அவ்வளவு நன்றாக இருந்தது, பிரியாவிற்கு.
பிள்ளைகளும் விரும்பியே உண்டனர்.
"என்ன நீ மட்டும் வந்து இருக்கே, திடீர்னு, போன் போட்டு மத்தியானம் சொல்ற ."
"உங்க அண்ணா வர, நைட் ஆகிடும், இப்போ எல்லாம் ரெண்டு ஷிபிட் எடுக்குறான் ."
"சீக்கிரம் தங்கச்சிக்கு பாக்கணுமே அடிக்கடி சொல்றான்."


ப்ரியா வருவதற்கு முன்பே கார்த்திக்கிடம் போனில் தகவல் கூறி இருந்தாள் .
காமாட்சிக்கு தான் என்ன விஷயம் என்று தெரியாது,
மகளை கேள்விகளால் கேட்டு படுத்தினார்,
"கவி ஒன்பது மணிக்கு தான் வருவா."
"நீ போய் கொஞ்ச நேரம் ஓய்வு எடு, நான் சமைக்குறேன்," என்று கூறி அடுக்கலைக்குள் நுழைந்தார்.


நேரம் விரைந்தோடி, காவ்யா வரும் நேரமும் வந்தது.

ப்ரியாவை போலவே நல்ல நிறம், என்ன ப்ரியா பார்ப்பதற்கு உடலிற்கு ஏற்ற உயரம் என்று உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பாள்.
காவியா கொஞ்சம் பூசினார் போல் இருப்பாள், வட்ட முகம் பெரிய கண்கள் என்று கலையான முகம்


பல முறை உடுத்தி, நிறம் மாறிய ஒரு சுடிதார்.
"என்ன விடேன்" என்று வாய் இருந்தால் கதறி அழுது இருக்கும், அந்த உடை.
உடை எடுப்பது கூட தேவையில்லாத செலவு என்று நினைக்கும் ரகம் கார்த்திக்.


வீட்டினர் அனைவரிடமும் எண்ணி வைத்தார் போன்று தான் உடைகள் கூட இருக்கும்.
அந்த மழையில் வெளி திண்ணையில் உள்ள வாளியில் இருந்த தண்ணீர் எடுத்து முகத்தில் தெளித்து கொண்டு, கூடத்தில் கொடியில் இருந்த, துண்டு வைத்து முகத்தை துடைத்து கொண்டே, அமர்ந்தாள்.


அக்கா வந்த இருப்பதாக, மாலையே அன்னை தகவல் கூறி இருந்தார்.
ஆகையால், வரும் வழியில் பிள்ளைகளுக்கு, என்று, இனிப்பு வாங்கி வந்திருந்தாள் .
வீட்டிற்குள், அக்காவை பார்த்ததும் ஒரு புன்னகை.

அவளின் ஆர்பாட்டம் எல்லாம் அவ்வளவு தான்.
அதிகம் வெளி படுத்த தெரியாது.

அனைத்தும் அவள் மனதிற்குள்ளே.


"எப்படி இருக்க அக்கா," என்று கேட்டு கொண்டே, அவள் கை பிடித்து கொண்டாள் .
ப்ரியாவும் தங்கையின் கன்னம் வருடி, "நீ எப்படி இருக்க, இரு உனக்கு டிரஸ் வாங்கிட்டு வந்தேன்," என்று அறைக்குள் அன்னை வைத்த அவளின் பையை திறந்து, அன்னைக்கும் தங்கைக்கும் முன்பே வாங்கி வைத்திருந்த சேலையை எடுத்து காட்டினாள்.


"நான் கடைக்கு போய் இருந்த போது வாங்கினேன் மா, இப்போ ஊருக்கு வரும் போது எடுத்துட்டு வந்தேன்."
"நிறம் நல்லா இருக்கு, எனக்கு எதுக்கு, இவ வேலைக்கு போறாளே, இவளுக்காவது இரண்டு உடுப்பு எடுத்து கொடுடான்னா அப்படி கணக்கா பார்குறான் உன் அண்ணன்."


"விடு மா, அண்ணா இப்படி எல்லாம் சேர்த்தா தான், கொஞ்சமாவது, சேர்க்க முடியும்," அண்ணனுக்கு வக்காலத்து வாங்கினாள் காவ்யா .
"இங்க ஏதோ பூனை குட்டி கத்துச்சே, பார்த்தியா மா," என்று தங்கையின் மெலிதாக ஒலித்த குரலை கிண்டலடித்தாள் பிரியா .
அதில், அவளின் சிணுங்கலும் சத்தமில்லாமல்.


காமாட்சியும் சிரித்து விட்டு, "அவனை ஒன்னு சொல்லிட்டா மட்டும் இந்த பூனை வாய் திறக்கும் டீ. "

"அண்ணா மேல உசுரு," கூறிய அன்னைக்கும் மூன்று பிள்ளைகளை நினைத்து பெருமையே.


"தண்ணீர் தொட்டி, தேடி வந்த," என்ற பாட்டு சாதத்தில்

"ம்க்கும் இதோ வந்தாச்சு, உங்கள பெத்த மகராசன்," நொடித்து கொண்டார் காமாட்சி.

"சாராயத்தை ஊத்து," என்று பாடி கொண்டே, வேட்டியை இருக்க பிடித்து கொண்டே, கீழே விழ இருந்தார்.
அதற்குள் காவ்யா அவரை பிடித்து கொண்டு, வந்து வீட்டு வாசலில் அமர வைத்தாள்


"கவி கண்ணு, நான் ஸ்டடி கண்ணு, இந்த உனக்கு பிடிக்குமே பக்கோடா ."
"இன்னைக்கு, லோட் ஏத்துற வேலைக்கு போனேன்."
"அங்க இருந்த டீ கடையில சூடா பக்கோடா போட்டுக்கிட்டு இருந்தானா ."
"உனக்கு பிடிக்குமே, இந்தா கண்ணு" என்று வாசலில் வைத்தே ஆசை மகளுக்கு கொடுத்தார்.


அவள் வாங்கி கொண்டு, தந்தைக்கு துண்டு எடுத்து தலை துவட்டி,

"அப்பா, அக்கா வந்து இருக்கு ."




 

achuma

Well-Known Member
hi friends
thanks for all your suppot
no space
please read and give comments
all take care
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top