கொலுசொலி 3

Advertisement

achuma

Well-Known Member
சென்ற பதிவிற்கு உங்களின் விருப்பங்கள் மற்றும் கருத்துக்களை கூறிய அனைவருக்கும் நன்றி பிரெண்ட்ஸ்.
இந்த பதிவையும் படித்து விட்டு, உங்களின் கருத்துக்களை தெரியப்படுத்துங்கள்

All Take Care

அருணிடம் கேட்டு விட்டாலும் அவளின் பதட்டம் அதற்குமேல் அவனை நேர் கொண்டு பார்க்க பயம்.
அருணுக்கு, இதனை ஒரு முடிவுக்கு கொண்டு வருவதே நல்லது.

அவளும் இந்த பக்கம் வருவது, அவனுக்கு சிறிதும் விருப்பமில்லை.
அவளிடம் நேரடியாக கூறிவிட்டாள், இனியாவது, அவனை தொந்தரவு செய்யாமல் இருப்பாள், என்று நினைத்து கொண்டான்.

"இங்க பாரு ஷாக்ஷி, உன் பேச்சு உன் பார்வை, இது எல்லாம் கவனிக்க எனக்கு நேரமில்லை, என்னை பொறுத்த வரைக்கும், நீ எங்க சொந்தகார பொண்ணு, காலேஜ் படிக்கிற,."

"இந்த வயசுல என் மேல, உனக்கு ஜஸ்ட் ஒரு கிரஷா, இருக்கலாம்."
"இதை பற்றி, இதுக்கு மேல சொல்றதுக்கு எதுவும் இல்லை, எனக்கு எந்த வித எண்ணமும் உன் மேல இல்லை."

"நீ சின்ன பொண்ணு, எனக்கு ஜஸ்ட் நீ பண்றது எல்லாம், சின்ன பிள்ளை தனமா தான் தெரியுது."
"உனக்கு சரியான கைட் இல்லை, நீ யாரு தூண்டி, இப்படி இருக்கன்னு எனக்கு நல்லாவே தெரியும்."

"நீயே டிரெக்டா, இப்படி லூசு தனமா பிஹேவ் செய்து இருந்தா, இந்நேரம் நான் சும்மா இருக்க மாட்டான்."

"நீ இன்னொருத்தர் கைட்ல இது எல்லாம் பண்றதால, நானும் உன்னை எதுவும் கேட்காம சும்மா இருந்தேன்."
"இப்போ எல்லாம் ஒரு முடிவுக்கு வரதுல, எனக்கும் நிம்மதி."

"இந்த கடைக்கு அடிக்கடி வராதன்னு, நானே உனக்கு பல முறை வார்ன், பண்ணி இருக்கேன்."

"நீ ஏதாவது ஒரு சாக்கு சொல்லிட்டு, ரிப்பேர், அது இதுன்னு, உன் போன் தூக்கிட்டு வரதால, பப்ளிக்ல என்னாலயும் எதுவும் உன்னை சொல்ல முடியலை."
"இனியாவது, உன் படிப்பு, பாரு."

"வாழ்க்கையில யாருக்கு எந்த சூழ்நிலை எப்படி மாறும்ன்னு சொல்ல முடியாது."
"படிப்பு ரொம்ப முக்கியம், ஒழுங்கா உன் கேரியர் இம்ப்ரூவ் பண்ற வழிய பாரு."

"எனக்கானவ நீ எப்பவும் இல்லை."
கூறி விட்டான், இது தான் என்று அவள் எதிர்பார்த்தாலும், அவன் கூறி கேட்க, அவளுக்கு ஏமாற்றம்.

"ஏன், அருண், நான் நல்லா இல்லையா," என்று கண்ணீர் நிறைந்த கண்களுடன் கேட்டதும், அவனுக்கு வருத்தமாக தான் இருந்தது.
முன்பே இது பற்றி பேசி இருக்க வேண்டுமோ, என் ஒரு நிமிடம் தான் நினைத்தான்.

பிறகு, இவங்க நினைப்பிற்கெல்லாம் தான் பதில் சொல்ல வேண்டுமா, என்று நினைத்து,
"சாக்ஷி, காதல் என்பது வெறும் அழகு, தகுதி இது பார்த்து தான் வரும்ன்னா, உலகத்துல யாருமே காதலிக்க முடியாது."

"இப்படி இருக்குறவங்கள தான் காதலிக்கணும்ன்னு உனக்கு யாரு சொன்னா, இதுல இருந்தே தெரியுது, உனக்கு தெளிவான மைன்ட் இல்லைனு."

அவனின் நக்கல், அவளை கோபமடைய செய்தது.
"அப்போ, என் மேல என்ன குறை, அப்போ, என்னை காதலிக்குறதுல, உனக்கு என்ன பிரச்சனை," என்று கண்ணீரை துடைத்து கொண்டு கேட்டாள் .

அவனும் அவனின் பொறுமையை கை விட்டு இத்தனை நேரம் நாசூக்காக கூறிய விஷயத்தை, இனி, உடைத்து கூறுவதே மேல், என்று அவள் வருந்தினாலும் பரவாயில்லை என்று கூறிவிட்டான்.

"எங்க வீட்டுல ஏற்கனவே என் பேரெண்ட்ஸ் நிம்மதியா இல்லை."
"ஏதாவது ஒரு பிரச்சனை, எங்க வீட்டுல இருந்துகிட்டு தான் இருக்கு."
"எங்க அப்பா, அம்மா, அண்ணா , அவங்க பேமிலி, இவங்க எல்லாருக்கும் செட் ஆகுற, முக்கியமா எனக்கு என் மனசுக்கு பிடிச்சவளா தான் எனக்கு மனைவியா வரணும்."
"எங்க வீட்டுக்கு நிம்மதிய தர மருமக, தான் வேணும்."

"அது நிச்சயமா நீ இல்லை."
"என் கையில பணம் இல்லைனா, எங்க வீட்டுல சூழ்நிலை சரி இல்லைனா, அப்போ, ஆறுதல் தர பெண்ணா நீ இருக்க மாட்ட."

"குடும்பத்த, டேக்கில் பண்ற பொண்ணு தான் எனக்கு வேணும்."
"உனக்கு உன் குடும்பத்துக்கு பணம் தான் பிரதானம்."
"சோ யு நெவெர் சூட்டபில் ஃபார் மீ ."
இந்த நேரடி பதிலை அவள் முற்றிலும் எதிர்பார்க்கவில்லை.

"அருண் நீ இப்படி ஞானி போல பேசிகிட்டு இருக்கே ."
"உனக்கு தான் எல்லாம் இருக்கே, அப்பறம் ஏன் எதுவும் இல்லைனா, அந்த லெவெலுக்கு யோசிக்குற."

"நான் யோசிக்கிறதே உன்னால சகிச்சிக்க முடியல, இந்த வாழ்க்கை, எப்பவும் நமக்கு ஒரே போல இருக்காது சாக்ஷி."
"இப்போ, இருக்க பணம் பிற்காலத்துல இல்லைனா, ஏன் நாங்களே எதுவும் தெரியாம தான இருந்தோம்."
"நடுவுல என் அப்பாவுக்கு ஆக்சிடென்ட் ஆனதும், எல்லாமே தெரிஞ்சுது."

"அப்போ, உன் குடும்பம் கூட எங்க கிட்ட எப்படி பிஹேவ் பண்ணீங்கன்னு நல்லா நினைப்புல இருக்கு."
"அதுக்கு தான் சொல்றேன், நீ எப்வவும் செட்டாக மாட்டே ."

அருண் மீண்டும் மீண்டும் இதையே கூறுவதில், அவளுக்கு பெரும் அவமானமாக இருந்தது.
அவளின் எண்ணம் தான் இது, ஆனால், அதனை அருண் கூற கேட்க, அவளுக்கு ஏற்க முடியவில்லை.

"ஹ்ம்ம் சரியான சாமியார் போல பேசாத அருண்."
"ஒரு வேல, என்னோட பழகி பார்த்து அப்பறம் வேணா உனக்கு என்னை பிடிக்கலாம் இல்லையா."
" என் கூட டேட்டிங் வேணா " என்று இழுத்ததும், அவனின் முறைப்பில் அடங்கினாள்.

அவளுக்கு அருணை விட மனதே இல்லை, ஆகையால் எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருந்தாள்.
"நீ சின்ன பொண்ணுன்னு உன்கிட்ட பேசிகிட்டு, இருக்கேன், இதே வேற யாரவது இருந்தா, கன்னம் பழுத்து இருக்கும், பார்த்து பேசு," என்று எச்சரித்தான்.
அவன் மிரட்டியதும் அவளுக்கும் கோவம் வந்து விட்டது.

"சும்மா நடிக்காத அருண், இப்போ நான் தானே கேட்டேன், ஒரு வேலை ஆசை இருந்தா டிரெக்ட்டா சொல்லேன், இப்போ யாருக்கு தெரிய போது, நான் ஒன்னும் உன்னை எதுவும் நினைக்க மாட்டேன்."

"அதுவும் இந்த ஊருல இருந்துகிட்டு," அவளை அதற்கு மேல் பேசவிடவில்லை.
"ஷட் அப், இடியட் "
அதிர்ந்து பார்த்தாள், அவன் கர்ஜனையில் .

அருணிற்கு அவன் பிறந்த வளர்ந்த, அவன் மும்பை நகரம் எப்பொழுதும் அவனிற்கு பிடிக்கும்.
ஏன் அவன் பார்த்து பழகிய வரை, அவன் பகுதியில் உள்ள அனைவரும் நல்லவரே.

கூட பிறந்த சகோதரி இல்லையே தவிர, அவன் பகுதியில் இருக்கும் இளம் பெண்களுக்கு விக்ரம் மற்றும் அருண் சகோதர்கள் போல தான்.

அவர்கள் பையா என்று அழைத்தாலே அவனுக்கு அப்படி ஒரு சந்தோஷம்.
யாரும் போலி, முகத்துடன் அவனிடம் பழகியதில்லை.

சாக்ஷி போன்ற சிலர் இருப்பதற்கு, ஊரின் மீது பழி சுமத்துவதில் அவனுக்கு பிடிக்கவே பிடிக்காது.

இவை எல்லாம் நினைத்து பார்த்து, அவள் மீது மேலும் கோவம் வந்தது.
"நீ உன் இஷ்ட படி சுத்துறதுக்கும், நம்ம கலாச்சாரத்தை அழிக்குறதுக்கும், இந்த ஊரை காரணம் சொல்லாத."
"ஒழுங்கா இருக்கனும் நினைக்குறதுக்கு எந்த ஊர்லயும் இருக்கலாம்."

"அதே போல, கெட்டு அழிஞ்சி போறதுக்கு நீ எந்த ஊருல இருந்தாலும் அழியலாம்."
"உன் எண்ணம் உன் செயல் சரியா இருந்தா, எந்த ஊர்ல, வேணாலும் மதிப்போடு இருக்கலாம்."

"இந்த ஊருல, அப்படின்னு இன்னொரு முறை ஏதாவது சொன்ன வகுந்துடுவேன்," என்று அவனின் புதிய அவதாரத்தில் இவள் மிரண்டாள் .

"ஹ்ம்ம் நம்ம ஏரியால, ராக்கி, எடுத்துக்கிட்டு, நம்ம ஸ்ட்ரீட் பொண்ணுங்க வரும், நானும் அண்ணனும், அவங்க எங்க கையில கட்டினதும், பாக்கிட்ல இருக்க, காசு எவ்வளவுன்னு கூட பார்க்க மாட்டோம்."

"அப்படியே தூக்கி குடுப்போம், அவங்க அது எல்லாம் வேண்டாம்ன்னு மறுத்து, உண்மையான சகோதர பாசத்தோட பழகுவாங்க."
"இப்படியும் இருக்காங்க, உனக்கு என்ன தெரியும் இந்த ஊரை பற்றி, நீ நம்ம கலாச்சாரத்தை காக்கணும் நினைச்சா நீ முதல்ல ஒழுங்கா இரு."

"மற்றதை குறை சொல்றத அப்பறம் பார்க்கலாம், இது தான் லாஸ்ட் இனி இந்த பக்கம் வராத,"
என்று எச்சரித்து விட்டே, அவன் கடைக்குள், சென்று விட்டான்.
அவளுக்கு தான் இந்த அவமானத்தை தாங்கவே முடியவில்லை.
தன்னை, மீறி அவன் வாழ்க்கையில் யார் வந்து விடுவார் என்று பார்க்கலாம் என்று அந்நேரத்தில் உருவான வெறியோடு, வீட்டிற்கு சென்றாள்.

அதற்குள் விஷயம், ரங்கநாதன் குடும்பத்திற்கு சென்றது, அங்கு மகள் அழுது வீட்டினில் செய்த ரகளை, அன்னை, மகள் இருவருக்கும், ஏற்பட்ட அவமானம், ரங்கநாதன் வீட்டினில் வந்து ஆர்பாட்டம் செய்ய ஆரம்பித்தார் ஷினி.

"நான் என்ன சொல்லி என் பொண்ணு மனச சமாதான படுத்துவேன், இப்படி ஏமாத்திட்டானே," என்றதும், ரமாவிற்கு கோவம் வந்து விட்டது.

"என் பையன் எப்போ, உன் பொண்ணுக்கு சம்மதம் சொன்னான், இல்லை நாங்களும் எப்பவாவது உன் கிட்ட அப்படி ஒரு எண்ணத்திலே பேசினோமா."

"நீ பசங்க சின்னவங்களா இருக்கும் போதே, கேட்ட, யாருக்கு யாருன்னு நம்ம கையில இருக்கு, பார்க்கலாம்ன்னு அப்போ உன் அண்ணன் சொன்னார்."
"நாங்களும் எதுவும் உறுதியா சொல்லல நீ என்னடான்ன, அந்த பொண்ண கடைக்கே அனுப்பி இருக்க."

"ஹ்ம்ம், பாய்ண்டா பேசுறாளே," என்று ஷினி நினைத்து, மீண்டும் பெருங்குரல் எடுத்து அழுதார்.
"அண்ணா, கூட பிறக்கலானாலும் என் பிறப்பா தான் பார்க்குறேன் சொல்வியே, இப்போ அது எல்லாம் பொய்யா ."

"இப்படி என் பொண்ணுக்கு இந்த வீட்டுல இடம் இல்லையா ," கையை விரித்து கொண்டு, சட்டமாக நாற்காலியில் அமர்ந்து, ஒப்பாரி வைத்தால், அவரால் தான் என்ன கூற முடியும்.
ரங்கநாதனுக்கு மிகவும் சங்கடமாக போனது, ஏதோ அவரே தவறு செய்தது போல் வருந்தினார்.

ரமாவின் ஒரு கண்ணசைவில் பிரியா புரிந்து கொண்டாள்.
அவள் உடனே விக்ரமிற்கு அழைத்து, நடந்தை கூறி விட்டாள் .

"நான் தான் அவன் கிட்ட பேசுறேன்னு சொன்னேன் இல்லை, அதுக்குள் அவங்களுக்கு என்ன அவசரம்."
"நல்லா தேவை தான் அவங்களுக்கு," என்று மனைவியிடம் கூறி விட்டு , உடனே வீட்டிற்கு புறப்பட்டு விட்டான்.

"இந்த பையனுக்கு பொறுமையே இல்லை, வீட்டுல பேசுலாம்ன்னு அனுப்பி இருக்க வேண்டியது தானே, இந்த அம்மா அப்படியே, எல்லா சொந்தகாரங்க கிட்டயும் விஷயத்தை பரப்ப போறாங்க."

"ஏற்கனவே இவன எல்லாரும் ஏதாவது ஒரு குறை சொல்லராங்க, இவனும் அதுக்கு எற்றது போல, பிரச்சனைய இழுத்துட்டு வாரான்."
அவன் புலம்பினாலும் வண்டி நேராக இல்லம் நோக்கி சென்றது.

"வாங்க அத்தை, பிரியா டீ கொடுத்தியா," என்று கேட்டு விட்டு, சாவகாசமாக அமர்ந்தான்.
"நான் அழுதுகிட்டு இருக்கேன், ஏதாவது கேட்குறானா பாரு, எல்லாம் குசும்பு பிடிச்சவங்க."

பொருமி கொண்டு, மீண்டும் விட்ட அழுகையை தொடர்ந்தார்.
" இந்த ட்ராமா எப்போ முடியும் தெரியலையே" என்று அலுத்து கொண்ட விக்ரம், சட்டையின் முதல் பட்டனை, கழட்டி, தொலைபேசி, மடிக்கணினி அனைத்தும், அங்கு மேசையில் வைத்து விட்டு, இன்னும் நன்றாக சாய்ந்து, நாற்காலியில் அமர்ந்தான்.

அதில் ஷினிக்கு இன்னும் கோவம் வந்து விட்டது.
"டேய் இங்க ஒருத்தி அழுறாளே , என்ன எதுன்னு கேட்கமாட்டியா, இந்த நேரத்துக்கு வீட்டுக்கு எல்லாம் வர மாட்ட, காரணம் தெரியாமையா வந்து இருப்ப,எல்லாம் சொல்லி இருப்பாங்களே," என்று ப்ரியாவை ஒரு பார்வை பார்த்து கொண்டே கூறினார்.

"ஆமா அத்தை, சாக்ஷி, அங்க அருண் கடைக்கு போனதா ப்ரியா சொன்னா,"
"இல்ல, அவ கல்யாணத்தை அவளே போய் பேசுற அளவுக்கு இப்போ என்ன அவசரம்."
"நீங்க தான் வீட்டுல அப்பா அம்மா காதுல, விஷயம் போட்டாச்சு இல்ல, அப்பறம் என்ன இது அதிக பிரசங்கி தனம்" .

"அதுவும் இல்லாம, அருணுக்கு ஷாக்ஷி தான் பொண்ணுன்னு எப்பயாச்சு அம்மா இல்ல அப்பா வாக்கு ஏதாவது கொடுத்தாங்களா " என்று தாய் தந்தையை பார்த்து கொண்டே கேள்வி எழுப்பினான்.
"அதில், ரங்கநாதன், அப்படி என்னைக்கும் சொன்னது இல்லை பா, உன் அத்தை அப்படி ஒரு விருப்பம் இருக்குன்னு சொன்னா, நம்ம எண்ணம் என்ன இருக்கு, அப்பறமா பார்க்கலாம்ன்னு இருந்தேன்."

"இவ கேட்டாளாண்ணு, சரி இப்போ அருணுக்கு கல்யாணம் பேசும் போது, ஒரு வார்த்தை அவன் கிட்ட சாக்ஷி பற்றி கேட்டு பார்க்கலாம், அவனுக்கு விருப்பம் இருந்தா மேற்கொண்டு பேசலாம்னு தான் இருந்தோம்."
"அதுக்குள்ள, அந்த பொன்னும் அவசர பட்டுச்சு."

வீட்டினரும் அருணுக்கு இதில் சாக்ஷி மீது விருப்பம் இல்லை, என்று தெரிந்து கொண்டனர்.
"அப்பறம் என்ன அத்தை, உங்களுக்கு வருத்தம் இதுல, உங்க மனசுக்கு இது இப்போ வேணா, பெரிய விஷயமா இருக்கலாம், "
"கொஞ்ச நாள்ல, இது எல்லாம் மறந்து போய்டும்."

"பேசுனா இடத்துலயே, கல்யாணம் அமைஞ்சிடணும்ன்னு எந்த அவசியமும் இல்லையே ."
"ஆமா பா ஆமா, உங்க வீட்டுக்கு இது எல்லாம் சாதாரணம் தான், என் பெரிய பொண்ணுக்கு உன்னை பார்க்கலாம்ன்னு இருந்தேன், நீ எங்கேயோ இருந்து மகாராணிய இழுத்துட்டு வந்தே ."

"நாங்க உடனே அவ மனசை தேற்றி, வேற இடம் கல்யாணம் பண்ணி வெச்சோம், இப்போ, உன் தம்பி என் சின்ன பொண்ணு கிட்ட விளையாட்டை ஆரம்பிச்சுட்டான்."
அவரின் நக்கலில் விக்ரமிற்கு கோவம் வந்து விட்டது.

ஏதோ இருவரும், அவர் வீட்டு பெண்களை, காதல் கூறி ஏமாற்றி விட்டது போன்று இருந்தது அவரின் பேச்சு.
அதிலும் பிரியாவை வேறு பேசியது, அவனுக்கு மேலும் கோவம் வந்து விட்டது.

"இதோட உங்க பேச்சை நிறுத்துங்க அத்தை, பசங்க சின்னவங்களா இருக்கும் போதே, அவங்க மனசுல தேவையில்லாத எண்ணங்களை வளர்த்து விட்டது உங்க தப்பு."
"இப்போ, அதுக்கு எங்கள காரணம் சொல்வீங்களா ."

"நானோ இல்லை என் தம்பியோ, யார் வாழ்க்கையும் கெடுக்கணும் எந்த எண்ணமும் இல்லை ."
"ஏன், எங்க அப்பா அம்மா இது வரைக்கும், இப்படி எதுவும் எங்க கிட்ட பேசுனதும் இல்லை, அதே போல, எங்க விருப்பத்திற்கு குறுக்க நின்றதும் இல்லை."
"எங்களுக்கு முழு சுதந்தரிமும் குடுத்து இருக்காங்க, அதே நேரத்தில நம்பிக்கையும் வெச்சி இருக்காங்க."
"நாங்களும் எங்க மேல வெச்ச நம்பிக்கையை எப்பவும் காப்போம் ."

"இப்படி பிள்ளைங்க முன்னேற்றத்திற்கு துணையா இருக்கவங்க தான் நல்ல அப்பா அம்மா."
"நீங்க உங்க பசங்களுக்கு தப்பான எடுத்துக்காட்டா இருந்திட்டு, எங்க மேல பழி போடுறீங்க ."

"இவர் ஏன் இப்படி பேசுறாரு, அத்தை, அவங்க என்னையே வேற முறைக்குறாங்க," என்று பிரியா ரமாவிடம் புலம்பினாள் .
"நீ சும்மா இரு மா, இவளுக்கு இது தேவை தான், ரொம்ப வாய் துடுக்கு."

விக்ரமிடம் எப்படி பேசுவது என்று திண்டாடினார், ஷினி.
"இப்போ, என் மேலயே தவறு இருக்கட்டும் பா, ஆனா, அங்க அருண் மேல பைத்தியமா இருக்க என் பொண்ணு மனசு என்ன பாடு படும், அதுக்கு பதில் சொல்லு, இப்போ, இந்த வீட்டுக்கு என் பொண்ணு மருமகளா வரணும் நான் நினைக்குறேன், அதுக்கு பதில் சொல்லுங்க ."

இதில் விக்ரம் கொஞ்சம் அமைதியானான்.
"இவங்களா இழுத்துட்டு வந்து, முதல்ல செய்த தப்பையே, இப்போ ரெண்டாவது பொண்ணுக்கு செய்றாங்க."
"அப்படி என்ன அவங்களுக்கு இந்த வீட்டுலயே கொடுக்கணும்ன்னு " என்று நினைத்து கொண்டே, மனைவியின் பக்கம் பார்வையை செலுத்தி, அவளை பார்த்து சிரித்தான்.

"என் அருமை எப்படின்னு தெரிஞ்சிக்கோ டீ, ஐயா கெத்து ."
"அதான், அத்தை இந்த வீட்டுலயே பொண்ணு கொடுக்கணும்ன்னு நினைக்குறாங்க," என்று கூறி கண் சிமிட்டினான்.
"ஐயோ சும்மா இருங்க ரொம்ப தான்," என்று யாரும் தெரிய வண்ணம், அவன் தொடையில் கிள்ளி வைத்தாள் .
எனக்கு பதில் சொல்லாம, அங்க பொண்டாட்டி கிட்ட பேச்சை பாரு இவனுக்கு.

"அத்தை, அருணுக்கு இதுல விருப்பம் இல்லைன்னு, தெளிவா எங்களுக்கு தெரிஞ்சிடுச்சு."
"திருமண வாழ்க்கையில் சேருற இரண்டு பேருல யாரவது ஒருத்தருக்கு விருப்பம் இல்லைனாலும், அந்த வாழ்க்கை நல்ல இருக்காது அத்தை .
"எங்க தம்பி முடிவு தான் எங்களுக்கும்."
"இதுல எங்க பக்கம் தவறு இல்லை, ஆனாலும் நீங்க தவறு இருக்கிறதா நினைக்கறீங்க, அதுனால, எங்களை மன்னிச்சிடுங்க," என்று கூறி, பேச்சு முடிந்தது, என்று எழுந்து விட்டான் .
குடும்பத்தினர் மற்றவரும் எழுந்து கொண்டனர்.
ஷினியின் உண்மை முகம் தெரிய வந்தது.
இத்தனை நாள், அவரின் அலட்டல் பந்தா, எல்லாம் தெரிந்தாலும், அவருக்கு இவ்வீட்டில் பெண் கொடுக்கும் ஆசை உள்ளது, சொந்தம் விட்டு போகாமல் இருக்க, இவர்களும் கண்டும் காணாமலும் இருந்து கொண்டனர்.

ஆனால் இப்பொழுது எதிரி போல் பேசும் ஷினி அவர்களுக்கு புதிது.
"நானும் பார்க்குறேன், இப்போ தானே, அருணுக்கு கல்யாணம் பண்ணனும் நினைக்கறீங்க, எப்படி என் பொண்ணு மீறி இந்த வீட்டுக்கு மருமக வரான்னு பார்க்குறேன்."

"அப்போ விட்டுட்டேன், இனி விட மாட்டேன், நம்ம சொந்தத்துல என்னை மீறி யாரு அருணுக்கு பொண்ணு கொடுக்குறான்னு பார்க்குறேன்."
இதில் விக்ரமிற்கு ரொம்பவே கோவம் வந்து விட்டது.

அவனின் கோவம் கண்டு, ரமா தடுத்து விட்டார். ரங்கநாதன் மகனை ஒற்ற பார்வையில் அடக்கி, "நல்லது ஷினி, நீ கிளம்பு ," என்று கை எடுத்து கும்பிட்டு, தங்கையை அனுப்பி வைத்தார்.

"இத்தனை பிரச்சனைக்கும் காரணமான நம் ஹீரோ, கடையில் ரொம்ப பிசி .
எதுவும் நடக்காதது போன்றே, அவன் வேலையில் கவனமாக இருந்தான்.

"டேய், ஒழுங்கா இப்போ வீட்டுக்கு வா." விக்ரம் அழைத்தான் .
"என்னங்க, ஆபீஸ் கிளம்பல" என்று பிரியா கேட்டதும், அதே கேள்வியை பார்வையால் தாங்கி அன்னை, தந்தை மகனை பார்த்தனர்.

"இப்போ, என்ன, திருப்பியும், இந்த விஷயத்தை வெச்சி எந்த பிரச்னையும் வேண்டாம், அதான் பாதி வேலையில வந்துட்டேன்ல, இதுக்கு இப்போவே, ஒரு முடிவு எடுத்துட்டு போறேன்."
"நீங்களும், அவன் கிட்ட பேசுனீங்களான்னு என்னை கேட்க மாடீங்கல்ல ."

"ஐயா எங்க வீட்டுல இருக்காரு, பத்து நிமிஷம் உட்காந்து பேசுற மாதிரி எங்க வீட்டுல இருக்கான், ."
"இந்த அம்மா வேற, அவனை பழி வாங்குற மாதிரியே பேசிட்டு போறாங்க," என்று விக்ரம் பொரிந்து தள்ளினான்.
அதற்குள், அருண் வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.

"என்ன ப்ரோ, வீட்டுல இருக்க, என்னையும் கூப்பிட்டு இருக்க, என்ன அவசரம்," என்று அண்ணனின் தோளில் தட்டி சாவகாசமாக அமர்ந்ததும்,

"நீ கிளப்பி வெச்ச பிரச்னை தான் ராசா."
"ஒரு பொண்ணு, உன்னை பிடிச்சி இருக்கு சொன்னா, அத பக்குவமா வேண்டாம்ன்னு மறுக்க தெரியாதா."

"அங்க நீ அவளை என்ன எல்லாம் சொல்லி வெச்சி இருக்க ."
"நீ அவள அவமான படுத்தன போல, அவ அம்மா சொல்லிட்டு போறாங்க ."
அவன் பெற்றோரை பார்த்தான்.

"உங்களுக்கு ஏதாவது இதுல வருத்தமா பா," என்று கேட்டான்.
"உனக்கு விருப்பம் இல்லாம எதுவும் இல்லை டா, பக்கத்துலையே சொந்தம் இருக்கறதுனால, முதல்ல இங்க பார்க்கலாம்ன்னு பேச்சை எடுத்தோம்."
"அதுக்குள்ள அவ எதோ பேசிட்டா ," என்று தங்கை மேல் உள்ள வருத்தத்தையும் கூறினார்."

"சாரி பா ."
"நீ எதுக்கு அருண் சாரி கேட்குற, இதோ ஒரு மாசமாவே வீட்டுல இது பற்றி பேசிகிட்டு தான் இருக்கோம்."
"உன்கிட்ட, சொல்லிட்டு, மேற்கொண்டு பேசலாம் இருந்தோம்."

"சொல்லு, இப்போ கல்யாணத்துக்கு பார்க்கலாமா, உனக்கு எப்படி பொண்ணு வேணும், இல்லை உன் மனசுல ஏதாவது விருப்பம் இருக்கா" என்று வரிசையாக அண்ணன் மற்றும் அவன் தந்தையிடம் இருந்து கேள்விகள்.
இதற்கு தான் காத்திருந்தான்.

"ஹ்ம்ம் என் மனசுல ஒரு பொண்ணு இருக்கா பா, உங்களுக்கு பிடிச்சி இருந்தா பாருங்க," முகத்தில் புன்னகை, மறைக்க முயன்றும் முடியாமல், அத்தனை மகிழ்ச்சியுடன் கூறினான்.

தம்பியின் புன்னகை அண்ணனுக்கும் தொற்றி கொண்டது,

"ஓஹ் துறை எங்களுக்கு வேலையே வைக்கல போல, யாருன்னு சொல்லு டா, பேசுறோம்,"
அண்ணனுக்கும் மகிழ்ச்சியே.
"சே சே, உங்க எல்லார் சம்மதத்தோட தான் அண்ணா, நம்ம வீட்டுக்கு ஏத்தவ ."
"பில்டப் பயங்கரமா இருக்கு, யாருன்னு சீக்கிரம் சொல்லு டா ."

" நம்ம கவி தான் அண்ணா."
"யாரு பிரியா தங்கச்சி நம்ம காவ்யாவா அருண் " ரமாவிற்கு அத்தனை சந்தோஷம்.
"ஏன் மா உங்களுக்கு எத்தனை காவ்யா தெரியும்."
"அண்ணியோட தங்கை, காவ்யா தான் மா," என்று கூறி விட்டு, மீண்டும் உல்லாசமாக கடைக்கு சென்றான்.
 
Saroja

Well-Known Member
அட இந்த அத்தை மக
ரெண்டு பேரும்
எதுக்கு இப்படி டிராமா பண்ணிட்டு
இருக்காங்க
அருணு அண்ணி தங்கச்சிய
பாத்து வச்சுட்டானா
 
தம்பியின் புன்னகை அண்ணனுக்கும்
அட இந்த அத்தை மக
ரெண்டு பேரும்
எதுக்கு இப்படி டிராமா பண்ணிட்டு
இருக்காங்க
அருணு அண்ணி தங்கச்சிய
பாத்து வச்சுட்டானா
Thanks sis
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top